நே – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேச 4
நேசம் 3
நேசமும் 1
நேத்திரத்தாள் 1
நேத்திரம் 2
நேத்ர 1
நேம 2
நேமங்கள் 1
நேமம் 1
நேமி 3
நேமித்த 1
நேமித்தான் 1
நேயத்துடன் 1
நேயமுடன் 1
நேயமுற்ற 1
நேயமுற்றது 1
நேயமுற 1
நேயமொடு 1
நேயமோடு 1
நேர் 13
நேர்க்கும் 1
நேர்கொண்ட 1
நேர்செய் 1
நேர்த்தி 1
நேர்த்திதன்னிலுமே 1
நேர்த்தியான 1
நேர்ந்த 3
நேர்ந்தது 3
நேர்ந்ததை 1
நேர்ந்தாலும் 1
நேர்ந்திடின் 1
நேர்ந்திடும் 2
நேர்ந்திலேன் 1
நேர்ந்து 2
நேர்பட 3
நேர்மை 8
நேர்மையர் 1
நேர்மையுடன் 1
நேர்மையும் 1
நேர்மையோ 2
நேர்வதே 1
நேர்வற்கே 1
நேர்வித்தான் 1
நேர 2
நேரங்களிலே 1
நேரத்தில் 2
நேரத்திலும் 1
நேரத்திலே 2
நேரத்து 1
நேரத்துள் 1
நேரத்தே 1
நேரம் 40
நேரமும் 6
நேரா 1
நேராக 4
நேராகவே 1
நேராகும் 2
நேராச்சு 1
நேரிட்டிருக்கிறது 2
நேரிட 1
நேரிடவே 1
நேரிடினும் 1
நேரில் 1
நேரிலா 1
நேரிலே 1
நேரிழை 1
நேரினும் 5
நேருக்கு 1
நேரும் 4
நேருமாறு 1
நேருற்றிடுவான் 1
நேருற 2
நேரெதிர் 1
நேரே 4
நேற்று 3
நேற்றைக்கு 1

நேச (4)

நேச மா மரியா மக்தலேநா நேரிலே இந்த செய்தியை கண்டாள் – தோத்திர:77 1/2
நேச கவிதை சொல்லும் பறவை அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு – கண்ணன்:12 3/2
நீண்ட சபைதனில் சூதிலே எங்கள் நேச சகுனியோடு ஆடி அங்கு உன்னை – பாஞ்சாலி:5 269/3
நேச உரை கூறி நெடிது உயிர்த்து பொய் குயிலி – குயில்:7 1/68
மேல்

நேசம் (3)

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ – கண்ணன்:14 1/2
நேசம் உள்ள வான் சுடரே நின் அழகை ஏது உரைப்பேன் – கண்ணன்:21 5/3
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே பேய் இரண்டும் – குயில்:9 1/203
மேல்

நேசமும் (1)

மகனே என்பால் வரம்பிலா நேசமும்
அன்பும் நீ உடையை அதனை யான் நம்பி – கண்ணன்:6 1/81,82
மேல்

நேத்திரத்தாள் (1)

நீல கடல் ஒத்த கோலத்தினாள் மூன்று நேத்திரத்தாள்
கால கடலுக்கு ஓர் பாலமிட்டாள் அன்னை கால் படினே –தேசீய:12 3/3,4
மேல்

நேத்திரம் (2)

நேத்திரம் கெட்டவன் காலன்தன் முன் நேர்ந்தது அனைத்தும் துடைத்து முடிப்பான் –தேசீய:21 4/2
நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது – பல்வகை:11 5/6
மேல்

நேத்ர (1)

நீல ரத்ன மய நேத்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே – தோத்திர:16 1/2
மேல்

நேம (2)

நேம தவறலும் உண்டு காண் நரர் நெஞ்சம் கொதித்திடு போழ்திலே – பாஞ்சாலி:1 136/4
நிச்சயமா முன் புரிந்த நேம தவங்களினால் – குயில்:5 1/50
மேல்

நேமங்கள் (1)

நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன் – பல்வகை:3 2/2
மேல்

நேமம் (1)

நேமம் மிக்க நகுலன் ஐயோ நினைவு அயர்ந்துவிட்டான் – பாஞ்சாலி:3 227/3
மேல்

நேமி (3)

நீல விசும்பினிடை இரவில் சுடர் நேமி அனைத்தும் அவள் ஆட்சி – தோத்திர:23 3/2
நீண்ட மகிதலம் முற்றிலும் உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான் குலம் – பாஞ்சாலி:1 68/2
நேமி மன்னர் பகை சிறிது என்றே நினைவு அயர்ந்திருப்பார் எனில் நோய் போல் – பாஞ்சாலி:1 103/3
மேல்

நேமித்த (1)

நேமித்த நெறிப்படியே இந்த நெடுவெளி எங்கணும் நித்தம் உருண்டே – கண்ணன்:3 1/2
மேல்

நேமித்தான் (1)

நின்னை அழைத்துவர நேமித்தான் எம் அரசன் – பாஞ்சாலி:4 252/97
மேல்

நேயத்துடன் (1)

நேயத்துடன் பணிந்தால் கிளியே நெருங்கி துயர் வருமோ – தோத்திர:76 5/2
மேல்

நேயமுடன் (1)

நேயமுடன் இ நகரில் திருப்பாதம் சாத்தி அருள் நெஞ்சில் கொண்டு – தனி:18 4/2
மேல்

நேயமுற்ற (1)

நேயமுற்ற விதுரன் போலே நெறியுளோர்கள் எல்லாம் – பாஞ்சாலி:2 183/3
மேல்

நேயமுற்றது (1)

நேயமுற்றது வந்து மிகமிக நித்தலும் அதற்கு ஆசை வளருமால் – சுயசரிதை:1 41/3
மேல்

நேயமுற (1)

நிறம்தனில் கருமை கொண்டான் அவன் நேயமுற களிப்பது பொன் நிற பெண்கள் – கண்ணன்:3 4/3
மேல்

நேயமொடு (1)

நீடு புகழ் பெரு வேள்வியில் அ நாள் நேயமொடு ஏகி திரும்பிய பின்னர் – பாஞ்சாலி:1 112/2
மேல்

நேயமோடு (1)

நேயமோடு உரைத்தால் அங்கே நெஞ்சு இளக்கம் எய்தும் – தோத்திர:31 6/4
மேல்

நேர் (13)

நீட்டிய வேல்களை நேர் இருந்து எறி-மின் –தேசீய:32 1/118
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ – தோத்திர:18 1/2
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ – தோத்திர:18 1/2
நீ தரும் இன்பத்தை நேர் என்று கொள்வனோ மாயையே சிங்கம் –வேதாந்த:8 6/1
வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேர் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/1
இன் அமுதிற்கு அது நேர் ஆகும் நம்மை யோவான் விடுவிக்க வருமளவும் –வேதாந்த:25 5/1
கற்றறிந்த ஞானி கடவுளையே நேர் ஆவான் – தனி:1 18/2
தினத்தினிலே புதிதாக பூத்து நிற்கும் செய்ய மணி தாமரை நேர் முகத்தாள் காதல் – சுயசரிதை:2 1/3
அன்பு தருவதிலே உனை நேர் ஆகும் ஓர் தெய்வம் உண்டோ – கண்ணன்:8 9/2
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேர் ஆமோ – குயில்:7 1/98
நெட்டை குரங்கனுக்கு நேர் ஆன பெண் வேண்டி – குயில்:9 1/36
நேர் அறியா மக்கள் எலாம் நினை கண்டால் நீதி நெறி நேர்ந்து வாழ்வார் – பிற்சேர்க்கை:11 4/3
ஆல விழியாரவர் முலை நேர் தண் வரை சூழ் – பிற்சேர்க்கை:12 9/1
மேல்

நேர்க்கும் (1)

எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும் எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள் – தோத்திர:55 1/1
மேல்

நேர்கொண்ட (1)

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் – பல்வகை:4 7/1
மேல்

நேர்செய் (1)

நேர்செய் சூதினில் வென்று தருவான் நீதி தர்மனும் சூதில் அன்புள்ளோன் – பாஞ்சாலி:1 104/4
மேல்

நேர்த்தி (1)

நேர்த்தி திகழும் அந்த ஒளியை எந்த நேரமும் போற்று சக்தி என்று – தோத்திர:23 7/2
மேல்

நேர்த்திதன்னிலுமே (1)

கூனி இருக்கும் கொலு நேர்த்திதன்னிலுமே
வானரர்தம் சாதிக்கு மாந்தர் நிகர் ஆவாரோ – குயில்:5 1/30,31
மேல்

நேர்த்தியான (1)

உடனே பாட்டு நேர்த்தியான துக்கடாக்கள் ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு – வசனகவிதை:4 1/47
மேல்

நேர்ந்த (3)

நிழலினும் வெயிலினும் நேர்ந்த நல் துணையாய் – தோத்திர:1 16/1
நேர்ந்த புதுமைகளை நீர் கேட்டு அறியீரோ – தனி:1 17/1
நின்ற ஒரு மின்கொடி போல் நேர்ந்த மணி பெண்ணரசின் – குயில்:9 1/238
மேல்

நேர்ந்தது (3)

நேத்திரம் கெட்டவன் காலன்தன் முன் நேர்ந்தது அனைத்தும் துடைத்து முடிப்பான் –தேசீய:21 4/2
நெஞ்சகத்தே பொய் இன்றி நேர்ந்தது எலாம் நீ தருவாய் –தேசீய:27 11/1
நீர் பிறக்கும் முன் பார் மிசை மூடர் நேர்ந்தது இல்லை என நினைந்தீரோ – பாஞ்சாலி:2 180/1
மேல்

நேர்ந்ததை (1)

என்று கதறிய யானையை காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட –வேதாந்த:7 1/2
மேல்

நேர்ந்தாலும் (1)

நெட்டை குரங்கனுக்கு பெண்டு ஆக நேர்ந்தாலும்
கட்டுப்படி அவர்தம் காவலில் போய் வாழ்ந்தாலும் – குயில்:9 1/49,50
மேல்

நேர்ந்திடின் (1)

தீது நேர்ந்திடின் அஞ்சுவதில்லை தேறு நெஞ்சினொடே சிவம் கண்டோர் – தனி:14 10/1
மேல்

நேர்ந்திடும் (2)

விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மையும் பெரும் திண்மையும் அறிவும் – தோத்திர:37 1/2
நேர்ந்திடும் வாட்போரில் குத்து நெறி அறிந்தவன் வெல பிறன் அழிவான் – பாஞ்சாலி:2 176/2
மேல்

நேர்ந்திலேன் (1)

நிலவியது ஒன்றினை நேர்ந்திலேன் குளிர் புனல் – தனி:13 1/11
மேல்

நேர்ந்து (2)

நீள் விட்ட பொன் மாளிகை கட்டி பேயினை நேர்ந்து குடியேற்றல் போல் – பாஞ்சாலி:4 245/2
நேர் அறியா மக்கள் எலாம் நினை கண்டால் நீதி நெறி நேர்ந்து வாழ்வார் – பிற்சேர்க்கை:11 4/3
மேல்

நேர்பட (3)

நேர்பட பேசு – பல்வகை:1 2/61
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்து ஆங்கே – தனி:3 1/1
நெறியினில் அவன் பணி நேர்பட செய்வோம் – வசனகவிதை:7 0/18
மேல்

நேர்மை (8)

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி –தேசீய:40 1/1
மானம் வீரியம் ஆண்மை நல் நேர்மை வண்மை யாவும் வழங்குற செய்வேன் – தோத்திர:37 2/3
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை கொண்டு உயர் தேவர்கள் ஆதற்கே – பல்வகை:4 3/2
நீதி அறிந்து இன்பம் எய்தியே ஒரு நேர்மை தொழிலில் இயங்குவார் – கண்ணன்:7 8/4
நெஞ்சம் சுட உரைத்தல் நேர்மை என கொண்டாயோ – பாஞ்சாலி:4 252/61
நீ இனி கவலாது அறப்போர்செய்தல் நேர்மை என்றதோர் செய்தியை கூறும் என் – பிற்சேர்க்கை:9 1/2
மேல்

நேர்மையர் (1)

நீதி நெறியினின்று பிறர்க்கு உதவும் நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர் –தேசீய:5 13/2
மேல்

நேர்மையுடன் (1)

நெஞ்சே வாழி நேர்மையுடன் வாழி – தோத்திர:1 24/17
மேல்

நேர்மையும் (1)

வாலை குழைத்து வளைத்து அடிக்கு நேர்மையும் பல் – குயில்:7 1/27
மேல்

நேர்மையோ (2)

நண்ணி தொடங்கிய சூது அன்றோ இவர் நாணுற செய்வது நேர்மையோ – பாஞ்சாலி:3 240/4
வற்புறுத்தி கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கை அன்றோ – பாஞ்சாலி:5 271/83,84
மேல்

நேர்வதே (1)

நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே நேர்வதே மானுடர்க்கு சின தீ நெஞ்சில் – சுயசரிதை:2 7/4
மேல்

நேர்வற்கே (1)

ஆடி குதிக்கும் அழகில் உமை நேர்வற்கே
கூடி குடித்து குதித்தாலும் கோபுரத்தில் – குயில்:5 1/37,38
மேல்

நேர்வித்தான் (1)

நெற்றி மேல் மேகத்து மின் அடிகள் நேர்வித்தான்
எற்றி எமை வீழ்த்த பெரும் காற்று இயற்றினனே – பிற்சேர்க்கை:25 16/1,2
மேல்

நேர (2)

பொருத்தமுற நல் வேதம் ஓர்ந்து பொய்ம்மை தீர மெய்ம்மை நேர
வருத்தம் அழிய வறுமை ஒழிய வையம் முழுதும் வண்மை பொழிய –வேதாந்த:4 2/3,4
நேர முழுதிலும் அ பாவிதன்னையே உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/1
மேல்

நேரங்களிலே (1)

பகல் நேரங்களிலே அனல் பொறுக்கமுடியவில்லை – வசனகவிதை:5 2/10
மேல்

நேரத்தில் (2)

பெண்மை குணமுடையான் சில நேரத்தில் பித்தர் குணமுடையான் மிக – கண்ணன்:1 8/3
கொஞ்ச நேரத்தில் பாதகத்தொடு கூடியே உறவு எய்தி நின்றானால் – பாஞ்சாலி:1 39/4
மேல்

நேரத்திலும் (1)

நேரத்திலும் என்னை காக்குமே அனை நீலி பராசக்தி தண் அருள் கரை – தோத்திர:5 1/2
மேல்

நேரத்திலே (2)

நேரத்திலே மலை வாரத்திலே நதி ஓரத்திலே உனை கூடி நின்றன் – தோத்திர:7 1/1
மான் ஒத்த பெண்ணடி என்பான் சற்று மனம் மகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான் – கண்ணன்:9 3/2
மேல்

நேரத்து (1)

மழைக்கு குடை பசி நேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன் – கண்ணன்:1 3/4
மேல்

நேரத்துள் (1)

சற்று நேரத்துள் எம் உயிர் சாய்த்து அருள் – தோத்திர:45 8/2
மேல்

நேரத்தே (1)

நேரத்தே பகைவன்தன்னை நில் என முனைந்து நின்றாய் –தேசீய:51 4/4
மேல்

நேரம் (40)

சக்தி என்று நேரம் எல்லாம் தமிழ் கவிதை பாடி – தோத்திர:41 4/1
எங்கள் வேள்வி கூடம் மீதில் ஏறுதே தீ தீ இ நேரம்
பங்கமுற்றே பேய்கள் ஓட பாயுதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 1/1,2
பங்கமுற்றே பேய்கள் ஓட பாயுதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 1/2
பொன்னை ஒத்து ஓர் வண்ணமுற்றான் போந்துவிட்டானே இ நேரம்
சின்னமாகி பொய் அரக்கர் சிந்தி வீழ்வாரே இ நேரம் – தோத்திர:75 3/1,2
சின்னமாகி பொய் அரக்கர் சிந்தி வீழ்வாரே இ நேரம் – தோத்திர:75 3/2
வானை நோக்கி கைகள் தூக்கி வளருதே தீ தீ இ நேரம்
ஞான மேனி உதய கன்னி நண்ணிவிட்டாளே இ நேரம் – தோத்திர:75 5/1,2
ஞான மேனி உதய கன்னி நண்ணிவிட்டாளே இ நேரம் – தோத்திர:75 5/2
காட்டில் மேயும் காளை போன்றான் காணுவீர் தீ தீ இ நேரம்
ஓட்டியோட்டி பகையை எல்லாம் வாட்டுகின்றானே இ நேரம் – தோத்திர:75 7/1,2
ஓட்டியோட்டி பகையை எல்லாம் வாட்டுகின்றானே இ நேரம் – தோத்திர:75 7/2
வலிமை மைந்தன் வேள்வி முன்னோன் வாய் திறந்தானே இ நேரம்
மலியும் நெய்யும் தேனும் உண்டு மகிழ வந்தானே இ நேரம் – தோத்திர:75 9/1,2
மலியும் நெய்யும் தேனும் உண்டு மகிழ வந்தானே இ நேரம் – தோத்திர:75 9/2
அமரர் தூதன் சமர நாதன் ஆர்த்து எழுந்தானே இ நேரம்
குமரி மைந்தன் எமது வாழ்வில் கோயில்கொண்டானே இ நேரம் – தோத்திர:75 11/1,2
குமரி மைந்தன் எமது வாழ்வில் கோயில்கொண்டானே இ நேரம் – தோத்திர:75 11/2
அமரர் எல்லாம் வந்து நம் முன் அவிகள் கொண்டாரே இ நேரம்
நமனும் இல்லை பகையும் இல்லை நன்மை கண்டோமே இ நேரம் – தோத்திர:75 13/1,2
நமனும் இல்லை பகையும் இல்லை நன்மை கண்டோமே இ நேரம் – தோத்திர:75 13/2
இளையும் வந்தாள் கவிதை தந்தாள் இரவி வந்தானே இ நேரம்
விளையும் எங்கள் தீயினாலே மேன்மையுற்றோமே இ நேரம் – தோத்திர:75 15/1,2
விளையும் எங்கள் தீயினாலே மேன்மையுற்றோமே இ நேரம் – தோத்திர:75 15/2
அன்னம் உண்பீர் பாலும் நெய்யும் அமுதும் உண்பீரே இ நேரம்
மின்னி நின்றீர் தேவர் எங்கள் வேள்வி கொள்வீரே இ நேரம் – தோத்திர:75 16/1,2
மின்னி நின்றீர் தேவர் எங்கள் வேள்வி கொள்வீரே இ நேரம் – தோத்திர:75 16/2
சோமம் உண்டு தேர்வு நல்கும் ஜோதி பெற்றோமே இ நேரம்
தீமை தீர்ந்தே வாழி இன்பம் சேர்ந்துவிட்டோமே இ நேரம் – தோத்திர:75 17/1,2
தீமை தீர்ந்தே வாழி இன்பம் சேர்ந்துவிட்டோமே இ நேரம் – தோத்திர:75 17/2
உடல் உயிர் மேல் உணர்விலும் தீ ஓங்கிவிட்டானே இ நேரம்
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி கைகொடுத்தாரே இ நேரம் – தோத்திர:75 18/1,2
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி கைகொடுத்தாரே இ நேரம் – தோத்திர:75 18/2
எங்கும் வேள்வி அமரர் எங்கும் யாங்கணும் தீ தீ இ நேரம்
தங்கும் இன்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்றோமே இ நேரம் – தோத்திர:75 19/1,2
தங்கும் இன்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்றோமே இ நேரம் – தோத்திர:75 19/2
வாழ்க தேவர் வாழ்க வேள்வி மாந்தர் வாழ்வாரே இ நேரம்
வாழ்க வையம் வாழ்க வேதம் வாழ்க தீ தீ தீ இ நேரம் – தோத்திர:75 20/1,2
வாழ்க வையம் வாழ்க வேதம் வாழ்க தீ தீ தீ இ நேரம் – தோத்திர:75 20/2
கன்னங்கரிய இருள் நேரம் அதில் காற்றும் பெரு மழையும் சேரும் – பல்வகை:9 3/1
நேற்று இருந்தோம் அந்த வீட்டினிலே இந்த நேரம் இருந்தால் என் படுவோம் – தனி:5 3/1
தண்மை குணமுடையான் சில நேரம் தழலின் குணமுடையான் – கண்ணன்:1 8/4
பாழிடத்தை நாடியிருப்பான் பல பாட்டினிலும் கதையிலும் நேரம் அழிப்பான் – கண்ணன்:3 5/4
பொருளினுக்கு அலையும் நேரம் போக – கண்ணன்:6 1/89
நேரம் மிகுந்தது இன்னும் நித்திரை இன்றி உங்கள் நினைப்பு தெரியவில்லை கூத்தடிக்கிறீர் – கண்ணன்:11 1/1
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே – கண்ணன்:17 1/3
எட்டி நிற்கும் செய்தி இவன் பார்க்க நேரம் இல்லை – குயில்:9 1/139
அட போடா வைதீகம் வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருக்கிறாய் இன்னும் சிறிது நேரம் நின்றுகொண்டிரு – வசனகவிதை:4 1/42
சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/46
சற்று நேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே இருக்கும் – வசனகவிதை:4 1/50
மாலை நேரம்
அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபார கூட்டத்தார் போகிறார்கள் – வசனகவிதை:4 4/3,4
மாலை நேரம்
குளிர்ந்த காற்று வருகிறது – வசனகவிதை:4 8/2,3
மேல்

நேரமும் (6)

எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ – தோத்திர:7 0/1
இதயமோ எனில் காலையும் மாலையும் எந்த நேரமும் வாணியை கூவுங்கால் – தோத்திர:19 1/3
நேர்த்தி திகழும் அந்த ஒளியை எந்த நேரமும் போற்று சக்தி என்று – தோத்திர:23 7/2
நீ எனது இன் உயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனை போற்றுவேன் துயர் – தோத்திர:52 2/1
என்றன் உள்ளம் கடலினை போலே எந்த நேரமும் நின் அடி கீழே – தோத்திர:70 2/1
கடுமையுடையதடீ எந்த நேரமும் காவல் உன் மாளிகையில் – கண்ணன்:20 3/1
மேல்

நேரா (1)

பைய சொல்லுவது இங்கு என்னே முன்னை பார்த்தன் கண்ணன் இவர் நேரா எனை – தோத்திர:32 10/2
மேல்

நேராக (4)

நேராக மோன மஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை அளித்து அமரத்தன்மை ஈவாள் – சுயசரிதை:2 2/4
நேராக மானுடர்தாம் பிறரை கொல்ல நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா – சுயசரிதை:2 61/2
நின்ற பறவையும்தான் நேராக போயினதால் – குயில்:8 1/20
நின் மேல் சுமை முழுதும் நேராக போட்டுவிட்டேன் – குயில்:8 1/60
மேல்

நேராகவே (1)

அந்த உறுப்புகள் எல்லாம் நேராகவே தொழில்செய்கின்றன – வசனகவிதை:4 7/5
மேல்

நேராகும் (2)

சக்தி சக்தி என்றே செய்தால் தானே செய்கை நேராகும்
சக்தி சக்தி என்றால் அஃது தானே முத்தி வேர் ஆகும் – தோத்திர:25 4/1,2
சக்தி சக்தி வாழீ என்றால் சம்பத்து எல்லாம் நேராகும்
சக்தி சக்தி என்றால் சக்திதாசன் என்றே பேர் ஆகும் – தோத்திர:25 9/1,2
மேல்

நேராச்சு (1)

உச்சி குளிர்ந்ததடீ சகியே உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடும் எல்லாம் முன்னை போல் மனத்துக்கு ஒத்ததடீ – கண்ணன்:10 6/1,2
மேல்

நேரிட்டிருக்கிறது (2)

அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது உயிர் நேரிட்டிருக்கிறது – வசனகவிதை:4 13/7
அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது உயிர் நேரிட்டிருக்கிறது
வண்டியை மாடு இழுத்து செல்கிறது அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது – வசனகவிதை:4 13/7,8
மேல்

நேரிட (1)

நேரிட வாழ்வு உண்டோ இரு நெருப்பினுக்கு இடையினில் ஒரு விறகோ – பாஞ்சாலி:1 135/4
மேல்

நேரிடவே (1)

நீண்ட பெரும் சபைதன்னிலே அவள் நேரிடவே வந்த பின்பு தான் சிறு – பாஞ்சாலி:4 254/2
மேல்

நேரிடினும் (1)

அக்கணத்தே தீயில் அழிந்து விழ நேரிடினும்
எக்கதிக்கும் ஆளாவேன் என் செய்கேன் வெம் விதியே – குயில்:8 1/65,66
மேல்

நேரில் (1)

நேரில் அப்போதே எய்தி வழிபட நினைகிலேயோ – தனி:22 1/4
மேல்

நேரிலா (1)

நேரிலா பெரியோர் நிலவிய நாட்டில் – தனி:20 1/11
மேல்

நேரிலே (1)

நேச மா மரியா மக்தலேநா நேரிலே இந்த செய்தியை கண்டாள் – தோத்திர:77 1/2
மேல்

நேரிழை (1)

நீண்ட துயரில் குலைந்துபோய் நின்ற நேரிழை மாதினை கண்டனன் அவள் – பாஞ்சாலி:5 267/2
மேல்

நேரினும் (5)

ஏது நேரினும் இடர்ப்படமாட்டோம் – தோத்திர:1 24/4
சாதல் நேரினும் சத்தியம் பூணு-மின் – தோத்திர:45 1/2
துன்பு நேரினும் இன்பு என கொள்வார் துய்ப்பர் இன்பம் மிக சுவை கொண்டே – தனி:14 8/4
யாது நேரினும் எவ்வகையானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வை – பாஞ்சாலி:1 40/1
துஞ்ச நேரினும் தூய சொல் அன்றி சொல் மிலேச்சரை போல் என்றும் சொல்லார் – பாஞ்சாலி:2 172/3
மேல்

நேருக்கு (1)

நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே –வேதாந்த:23 5/2
மேல்

நேரும் (4)

சக்தி சக்தி என்றால் வெற்றி தானே நேரும் கண்டீரே – தோத்திர:25 3/2
தழல் நிறம் மேக நிறம் விண்ணில் சாரும் இந்திரவில்லை நேரும் நிறம் – பாஞ்சாலி:1 32/3
நெறி இழந்த பின் வாழ்வதில் இன்பம் நேரும் என்று நினைத்திடல் வேண்டா – பாஞ்சாலி:2 204/1
நின்னுடனே வாழ்வன் இனி நேரும் பிறப்பினிலே – குயில்:9 1/167
மேல்

நேருமாறு (1)

நெல்லையூர் சென்று அவ் ஊணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன் – சுயசரிதை:1 21/1
மேல்

நேருற்றிடுவான் (1)

நிறுத்துவோமாயின் நேருற்றிடுவான்
என்று உளத்து எண்ணி இசைந்திடும் சமயம் – கண்ணன்:6 1/77,78
மேல்

நேருற (2)

நின் அருள் வதனம் நான் நேருற கண்டே – தனி:13 1/3
கண்ணனை நேருற கண்டே தீர்ப்பேன் – கண்ணன்:6 1/73
மேல்

நேரெதிர் (1)

நெறியினுக்கு எல்லாம் நேரெதிர் நெறியே – கண்ணன்:6 1/36
மேல்

நேரே (4)

நின்னை சில வரங்கள் கேட்பேன் அவை நேரே இன்று எனக்கு தருவாய் என்றன் – தோத்திர:32 5/1
நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம் – தோத்திர:63 4/3
உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றி பிற ஒன்று இல்லை ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம் – சுயசரிதை:2 18/1
அவர்கள் காற்று தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை – வசனகவிதை:4 8/14
மேல்

நேற்று (3)

நேற்று இருந்தோம் அந்த வீட்டினிலே இந்த நேரம் இருந்தால் என் படுவோம் – தனி:5 3/1
நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம் – கண்ணன்:19 4/2
முன்பு என சொலின் நேற்று முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே – பாஞ்சாலி:2 179/3
மேல்

நேற்றைக்கு (1)

ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை என்றால் – கண்ணன்:4 1/3
மேல்