நெ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்குருகிப்போய் 1
நெகுதலும் 1
நெஞ்ச 5
நெஞ்சக 4
நெஞ்சகத்து 4
நெஞ்சகத்தே 1
நெஞ்சகம் 1
நெஞ்சகமே 1
நெஞ்சத்தாலும் 1
நெஞ்சத்தில் 1
நெஞ்சத்து 1
நெஞ்சத்தே 1
நெஞ்சம் 36
நெஞ்சன் 2
நெஞ்சிடை 2
நெஞ்சில் 40
நெஞ்சிலா 1
நெஞ்சிலே 7
நெஞ்சிற்கு 2
நெஞ்சின் 5
நெஞ்சினர் 1
நெஞ்சினள் 1
நெஞ்சினனாயினும் 1
நெஞ்சினாய் 2
நெஞ்சினாராய் 1
நெஞ்சினுளே 1
நெஞ்சினை 2
நெஞ்சினொடே 1
நெஞ்சினோர் 1
நெஞ்சு 19
நெஞ்சுக்கு 1
நெஞ்சுடன் 1
நெஞ்சுடையார் 2
நெஞ்சுடையோர் 1
நெஞ்சும் 2
நெஞ்சே 29
நெஞ்சை 6
நெஞ்சையும் 1
நெஞ்சொடு 1
நெட்டை 8
நெடிது 2
நெடிய 2
நெடு 9
நெடுக்குமாக 1
நெடுங்கால் 1
நெடுங்கால 1
நெடுங்காலத்தின் 1
நெடுங்காலம் 1
நெடுந்தொலை 1
நெடுநாள் 7
நெடுநேரம் 1
நெடும் 7
நெடும்பொழுது 1
நெடுவெளி 1
நெப்த்யூன் 1
நெய் 5
நெய்யாக 1
நெய்யும் 4
நெய்யையும் 1
நெரித்த 2
நெரித்துவிட்டார் 1
நெருக்கிடையில் 1
நெருங்கி 4
நெருங்கிய 1
நெருங்கின 1
நெருப்பாக்கி 1
நெருப்பாகி 1
நெருப்பாய் 1
நெருப்பில் 1
நெருப்பினில் 1
நெருப்பினுக்கு 1
நெருப்பு 4
நெருப்பை 1
நெல் 2
நெல்லாம் 1
நெல்லு 1
நெல்லையூர் 1
நெற்கள் 1
நெற்றி 4
நெற்றியில் 1
நெற்றியிலே 1
நெறி 33
நெறிகள் 3
நெறிகளிலே 1
நெறிகளும் 1
நெறிகளை 2
நெறிப்படி 1
நெறிப்படியே 2
நெறிப்படுத்தும் 1
நெறியறியார் 1
நெறியில் 2
நெறியிலா 1
நெறியிலே 2
நெறியினால் 2
நெறியினில் 1
நெறியினின்று 1
நெறியினுக்கு 1
நெறியுடைய 1
நெறியும் 4
நெறியுளோர்கள் 1
நெறியே 1

நெக்குருகிப்போய் (1)

நெஞ்சத்து உள் ஓர் பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்போய்
மஞ்சன் ஆண்மை மறம் திண்மை மானம் வன்மை யாவும் மறந்தனன் ஆகி – பாஞ்சாலி:1 39/1,2
மேல்

நெகுதலும் (1)

ஊனை சிதைத்திடும் போதினும் தனது உள்ளம் அருளின் நெகுதலும் – பாஞ்சாலி:1 82/4
மேல்

நெஞ்ச (5)

நெஞ்ச கமலத்து நிறைந்து அருள்புரிவாய் – தோத்திர:1 28/7
தாழ வரும் துன்பமதிலும் நெஞ்ச தளர்ச்சிகொள்ளாதவர்க்கு செல்வம் அளிப்பான் – கண்ணன்:3 5/2
துரியோதன பெயரான் நெஞ்ச துணிவுடையான் முடி பணிவறியான் – பாஞ்சாலி:1 16/1
திருகு நெஞ்ச சகுனி ஒருவன் செப்பும் மந்திரம் சொல்லுதல் நன்றே – பாஞ்சாலி:2 203/3
மானுடவர் நெஞ்ச வழக்கு எல்லாம் தேர்ந்திட்டேன் – குயில்:3 1/27
மேல்

நெஞ்சக (4)

கருதி நின் சேவடி அணிவதற்கு என்றே கனிவுறு நெஞ்சக மலர் கொடுவந்தோம் –தேசீய:11 3/2
நெஞ்சக குருதியை நிலத்திடை வடித்து –தேசீய:32 1/133
நெஞ்சக தருக்கு உடை நீசர்கள் இன்னோர் –தேசீய:32 1/165
நெஞ்சக சோதனை நிகழ்த்தினன் யானே –தேசீய:42 1/110
மேல்

நெஞ்சகத்து (4)

நின் எழில் விழி அருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ –தேசீய:11 4/1
தோளிடை வன்பு நீ நெஞ்சகத்து அன்பு நீ –தேசீய:19 4/3
நெஞ்சகத்து ஓர் கணத்திலும் நீங்கிலான் நீதமே ஓர் உரு என தோன்றினோன் –தேசீய:46 2/1
ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்று உள்ளதேல் அதனுடை பொருள் நாளை விளைந்திடும் – சுயசரிதை:1 12/2
மேல்

நெஞ்சகத்தே (1)

நெஞ்சகத்தே பொய் இன்றி நேர்ந்தது எலாம் நீ தருவாய் –தேசீய:27 11/1
மேல்

நெஞ்சகம் (1)

அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி –தேசீய:42 1/80
மேல்

நெஞ்சகமே (1)

நெஞ்சகமே தொல் விதியின் நீதியே பாழ் உலகே – குயில்:5 1/4
மேல்

நெஞ்சத்தாலும் (1)

நீறுபட்ட இ பாழ் செயல் மட்டினும் நெஞ்சத்தாலும் நினைப்பது ஒழிகவே – சுயசரிதை:1 33/4
மேல்

நெஞ்சத்தில் (1)

நெஞ்சத்தில் சூதை இகழ்ச்சியா கொள்ள நீதம் இல்லை முன்னை பார்த்திவர் தொகை – பாஞ்சாலி:1 55/3
மேல்

நெஞ்சத்து (1)

நெஞ்சத்து உள் ஓர் பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்போய் – பாஞ்சாலி:1 39/1
மேல்

நெஞ்சத்தே (1)

நெஞ்சத்தே தைக்க நெடு நோக்கு நோக்கிடுவீர் – குயில்:3 1/47
மேல்

நெஞ்சம் (36)

அந்த அரசியலை இவர் அஞ்சுதரு பேய் என்று எண்ணி நெஞ்சம் அயர்வார் –தேசீய:15 2/4
இதயத்துள்ளே இலங்கு மஹா பக்தி ஏகுமோ நெஞ்சம் வேகுமோ –தேசீய:39 7/2
களித்தது என் நெஞ்சம் கழிந்தன கவலைகள் –தேசீய:42 1/115
நெஞ்சம் குமுறுகிறார் கற்பு நீங்கிட செய்யும் கொடுமையிலே அந்த –தேசீய:53 4/1
அசையா நெஞ்சம் அருள்வாய் உயிர் எலாம் – தோத்திர:1 8/17
பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை ஓரத்திலே அன்பு சூடி நெஞ்சம்
ஆர தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன் – தோத்திர:7 1/3,4
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் – தோத்திர:15 1/2
அவளே துணை என்று அனவரதம் நெஞ்சம்
துவளாது இருத்தல் சுகம் – தோத்திர:17 1/3,4
நெஞ்சம்
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 9/1,2
சக்தியுற நித்தம் விரிவாகும் நெஞ்சம்
சக்திதனக்கே கருவியாக்கு அதை – தோத்திர:24 9/3,4
மர்மமான பொருளாம் நின்றன் மலரடிக்கண் நெஞ்சம்
செம்மையுற்று நாளும் சேர்ந்தே தேசு கூட வேண்டும் – தோத்திர:31 3/3,4
ஒன்றை விட்டு மற்று ஓர் துயரில் உழலும் நெஞ்சம் வேண்டா – தோத்திர:31 4/4
காளி மீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும் – தோத்திர:31 7/1
அந்த தினம் முதலா நெஞ்சம் ஆர தழுவிட வேண்டுகின்றேன் அம்மா – தோத்திர:64 5/4
ஆரியன் நெஞ்சம் அயர்ந்தது என் விந்தை – தோத்திர:68 17/3
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்த பஞ்சம் – பல்வகை:9 8/2
சோதி என்னும் நிறைவு இஃது உலகை சூழ்ந்து நிற்ப ஒரு தனி நெஞ்சம்
கோது இயன்றதொர் சிற்றிருள் சேர குமைந்து சோரும் கொடுமை இது என்னே – தனி:10 2/3,4
தீமை கொண்ட புலை இருள் சேர்ந்தோர் சிறிய நெஞ்சம் தியங்குவது என்னே – தனி:10 3/4
சற்றும் நெஞ்சம் கவலுதல் இன்றி தரணி மீதில் மது உண்டு வாழ்வோம் – தனி:14 3/4
நினைக்க நெஞ்சம் உருகும் பிறர்க்கு இதை நிகழ்த்த நா நனி கூசும் அதன்றியே – சுயசரிதை:1 30/1
ஊனை வருத்திடும் நோய் வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான் நெஞ்சம்
ஈன கவலைகள் எய்திடும் போதில் இதம் சொல்லி மாற்றிடுவான் – கண்ணன்:1 2/3,4
நெற்றி சுருங்க கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடீ – கண்ணன்:8 6/2
நீண்ட பொழுதாக எனது நெஞ்சம் துடித்ததடீ – கண்ணன்:10 1/2
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ – கண்ணன்:14 1/2
என்று சுயோதனன் கூறியே நெஞ்சம் ஈர்ந்திட கண்ட சகுனிதான் அட – பாஞ்சாலி:1 53/1
செய்யலாவது செய்குதி என்றான் திரிதராட்டிரன் நெஞ்சம் உடைந்தான் – பாஞ்சாலி:1 106/4
நேம தவறலும் உண்டு காண் நரர் நெஞ்சம் கொதித்திடு போழ்திலே – பாஞ்சாலி:1 136/4
கங்கைமைந்தன் அங்கே நெஞ்சம் கனலுற துடித்தான் – பாஞ்சாலி:3 228/1
ஆதிபராசக்தி அவள் நெஞ்சம் வன்மையுற – பாஞ்சாலி:4 252/31
நெஞ்சம் சுட உரைத்தல் நேர்மை என கொண்டாயோ – பாஞ்சாலி:4 252/61
பாதகன் நெஞ்சம் இளகிடான் நின்ற பாண்டவர்தம் முகம் நோக்கினான் அவர் – பாஞ்சாலி:4 260/2
நின்று சற்றே கேட்பதற்கு என் நெஞ்சம் விரும்பிடவும் – குயில்:5 1/18
காதல் கதை உரைத்து நெஞ்சம் கரைத்ததையும் – குயில்:7 1/111
நெஞ்சம் இளகி நிறுத்திவிட்டேன் ஈங்கு இதற்குள் – குயில்:8 1/39
நெஞ்சம் கலக்கம் எய்தி நிற்கையிலே வேந்தன் மகன் – குயில்:9 1/92
பாவி என் நெஞ்சம் பகீரெனல் அரிதோ – பிற்சேர்க்கை:15 1/6
மேல்

நெஞ்சன் (2)

வன் திறத்து ஒரு கல் எனும் நெஞ்சன் வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான் – பாஞ்சாலி:1 38/2
இருள் நிறைந்த நெஞ்சன் களவே இன்பம் என்று கொண்டான் – பாஞ்சாலி:3 224/2
மேல்

நெஞ்சிடை (2)

வேர் சுடர் பர மாண் பொருள் கேட்டும் மெலிவு ஒர் நெஞ்சிடை மேவுதல் என்னே – தனி:10 4/4
ஆங்கு ஒர் கன்னியை பத்து பிராயத்தில் ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினன் – சுயசரிதை:1 35/1
மேல்

நெஞ்சில் (40)

தீரத்திலே படை வீரத்திலே நெஞ்சில்
ஈரத்திலே உபகாரத்திலே –தேசீய:4 2/1,2
பல திசையும் துஷ்டர் கூட்டங்கள் ஆச்சு பையல்கள் நெஞ்சில் பயம் என்பதே போச்சு –தேசீய:36 1/2
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி –தேசீய:40 1/1
மானுடர் நெஞ்சில் இவ் வாளினை பதிக்க –தேசீய:42 1/66
நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கி – தோத்திர:17 2/1
வான்கண் உள்ள வெளியை செய்தாள் வாழி நெஞ்சில் களியை செய்தாள் – தோத்திர:28 3/2
நீயே சரணம் என்று கூவி என்றன் நெஞ்சில் பேர் உறுதிகொண்டு அடி – தோத்திர:32 2/1
வன்கண்மை மறதியுடன் சோம்பர் முதல் பாவம் எலாம் மடிந்து நெஞ்சில்
புன்கண் போய் வாழ்ந்திடவே கோவிந்தா எனக்கு அமுதம் புகட்டுவாயே – தோத்திர:44 3/3,4
பண்ணை இசைப்பீர் நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர் இந்த பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை – தோத்திர:49 1/3
பயன் உண்டு பக்தியினாலே நெஞ்சில்
பதிவுற்ற குல சக்தி சரண் உண்டு பகை இல்லை – தோத்திர:67 0/3,4
நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
காணுவன நெஞ்சில் கருதுவன உட்கருத்தை –வேதாந்த:11 2/1
தத்துவம் உண்டாம் நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும் –வேதாந்த:15 1/4
கலியை பிளந்திட கை ஓங்கினோம் நெஞ்சில் கவலை இருள் அனைத்தும் நீங்கினோம் – தனி:11 9/2
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கு ஓர் கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமது உயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு – தனி:17 1/1,2
நேயமுடன் இ நகரில் திருப்பாதம் சாத்தி அருள் நெஞ்சில் கொண்டு – தனி:18 4/2
நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே நேர்வதே மானுடர்க்கு சின தீ நெஞ்சில் – சுயசரிதை:2 7/4
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு – சுயசரிதை:2 32/3
கானகத்தே சுற்றும் நாளிலும் நெஞ்சில் கலக்கம் இலாது செய்வான் பெரும் – கண்ணன்:1 2/1
உள்ளத்திலே கருவம்கொண்ட போதினில் ஓங்கி அடித்திடுவான் நெஞ்சில்
கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் சிறு – கண்ணன்:1 5/1,2
என்பு உடைபட்ட பொழுதும் நெஞ்சில் ஏக்கமுற பொறுப்பவர்தம்மை உகப்பான் – கண்ணன்:3 10/3
ஆதரித்தால் போதும் அடியேனை நெஞ்சில் உள்ள – கண்ணன்:4 1/37
கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மை கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் சக மாயம் உணர்ந்திடல் வேண்டுமே என்னும் – கண்ணன்:7 1/2,3
நன்று மருவுக மைந்தனே பரஞானம் உரைத்திட கேட்பை நீ நெஞ்சில்
ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்தி களிப்புற்றே தன்னை – கண்ணன்:7 6/2,3
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ – கண்ணன்:8 7/1
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எங்கும் நீள கிடக்கும் இலை கடல்கள் மதி – கண்ணன்:12 2/1
நீல கடல் அலையே உனது நெஞ்சில் அலைகளடீ – கண்ணன்:16 2/2
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமைபுகுந்தன கொன்று அவை போக்கு என்று – கண்ணன்:23 2/1,2
முன்னம் தான் நெஞ்சில் கூறிய எல்லாம் மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான் – பாஞ்சாலி:1 41/4
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் மன்னர் சாத்திரத்தே முதல் சூத்திரம் பின்னும் – பாஞ்சாலி:1 64/3
கொள்ளப்படாத பெரும்பழி அன்றி கொண்டதொர் நன்மை சிறிது உண்டோ நெஞ்சில்
எள்ள தகுந்த பகைமையோ அவர் யார்க்கும் இளைத்த வகை உண்டோ வெறும் – பாஞ்சாலி:1 73/2,3
கொல்லினும் வேறு எது செய்யினும் நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிலேன் அந்த – பாஞ்சாலி:1 90/3
மூன்றில் எது வருமாயினும் களி மூழ்கி நடத்தல் முறை கண்டீர் நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோ துன்பம் உற்றிடும் என்பதொர் அச்சத்தால் விதி – பாஞ்சாலி:1 140/2,3
நின்னை மிக்க பணிவொடு கேட்பேன் நெஞ்சில் கொள்கையை நீக்குதி என்றான் – பாஞ்சாலி:2 174/4
ஐயன் நெஞ்சில் அறம் என கொண்டான் ஐயகோ அந்த நாள் முதலாக – பாஞ்சாலி:2 178/3
மாயத்தையே உருவாக்கிய அந்த மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே கெட்ட – பாஞ்சாலி:3 234/1
கண்ணில் இனியவராம் என்றே இந்த காளையர்தம்மை இங்கு உந்தைதான் நெஞ்சில்
எண்ணியிருப்பது அறிகுவாய் இவர் யார் நின்றன் சோதரர் அல்லரோ களி – பாஞ்சாலி:3 240/2,3
பட்டார்தம் நெஞ்சில் பல நாள் அகலாது – பாஞ்சாலி:4 252/64
கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சில் அனல் – குயில்:7 1/9
கொன்றுவிட நெஞ்சில் குறித்தேன் மறுபடியும் – குயில்:8 1/38
மேல்

நெஞ்சிலா (1)

சோர நெஞ்சிலா தூயவர் இரு-மின் –தேசீய:32 1/100
மேல்

நெஞ்சிலே (7)

துச்சப்படு நெஞ்சிலே நின்றன் சோதி வளருதடீ – தனி:15 1/4
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம் – சுயசரிதை:1 49/1
நிலையும் வந்திட்டான் நெஞ்சிலே எனக்கு – கண்ணன்:6 1/50
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவான் ஆயினன் – கண்ணன்:6 1/144
நீச பிறப்பு ஒருவர் நெஞ்சிலே தோன்றி வரும் – குயில்:7 1/39
நமது நெஞ்சிலே மின்னல் விசிறி பாய்க – வசனகவிதை:2 13/14
கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள் – வசனகவிதை:3 3/13
மேல்

நெஞ்சிற்கு (2)

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1
பெண்ணின் நெஞ்சிற்கு இதம் எனலாவது பெற்ற பிள்ளைகள் பீடுறவே அன்றோ – பிற்சேர்க்கை:2 3/3
மேல்

நெஞ்சின் (5)

பாவலர்க்கு இன் அருள்செய்குவான் இந்த பாரில் அறமழை பெய்குவான் நெஞ்சின்
ஆவல் அறிந்து அருள் கூட்டுவான் நித்தம் ஆண்மையும் வீரமும் ஊட்டுவான் – தோத்திர:5 3/3,4
மூடி கிடக்கும் நெஞ்சின் ஊடுற்றதை அமரர் – தோத்திர:54 1/6
துதி அறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்து அறிவாய் இறப்பின்றி துலங்குவாயே – தனி:21 3/4
மிக தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீர பிரான் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 43/2
அறிவு சான்ற விதுரன் சொல் கேட்டான் அழலும் நெஞ்சின் அரவை உயர்த்தான் – பாஞ்சாலி:3 207/1
மேல்

நெஞ்சினர் (1)

இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்கும் திகிரியும் – தோத்திர:68 12/3
மேல்

நெஞ்சினள் (1)

பூமியினும் பொறை மிக்கு உடையாள் பெறும் புண்ணிய நெஞ்சினள் தாய் எனில் –தேசீய:9 6/1
மேல்

நெஞ்சினனாயினும் (1)

தேசத்தார் புகழ் நுண்ணறிவோடுதான் திண்மை விஞ்சிய நெஞ்சினனாயினும்
நாச காசினில் ஆசையை நாட்டினன் நல்லன் எந்தை துயர் கடல் வீழ்ந்தனன் – சுயசரிதை:1 42/3,4
மேல்

நெஞ்சினாய் (2)

கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ –தேசீய:16 1/7
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா –தேசீய:16 5/2
மேல்

நெஞ்சினாராய் (1)

துவளும் நெஞ்சினாராய் வதனம் தொங்க வீற்றிருந்தார் – பாஞ்சாலி:3 226/4
மேல்

நெஞ்சினுளே (1)

பெருமையை நன்கு அறிந்தவனை தெய்வம் என நெஞ்சினுளே பெட்பில் பேணி –தேசீய:47 2/3
மேல்

நெஞ்சினை (2)

நெஞ்சினை கிழித்து நிலம் மிசை உதிரம் –தேசீய:42 1/46
நெஞ்சினை அறுத்தது நீதிகள் பலவும் – கண்ணன்:6 1/54
மேல்

நெஞ்சினொடே (1)

தீது நேர்ந்திடின் அஞ்சுவதில்லை தேறு நெஞ்சினொடே சிவம் கண்டோர் – தனி:14 10/1
மேல்

நெஞ்சினோர் (1)

பாவ நெஞ்சினோர் நிதம் பறித்தல் செய்வராயினும் –தேசீய:7 4/3
மேல்

நெஞ்சு (19)

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் –தேசீய:15 1/1
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் –தேசீய:15 4/1
நெஞ்சு பிரிந்திடுவார் பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார் –தேசீய:15 4/4
நெஞ்சு பொறுக்குதிலையே இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே –தேசீய:15 6/1
ஊரவர் துயரில் நெஞ்சு உருகுவீர் இரு-மின் –தேசீய:32 1/99
உருளையில் கண்டு நெஞ்சு உவப்புற வம்-மின் –தேசீய:32 1/122
ஆயவற்று என் நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும் பகை அதன் மிசை ஆணை –தேசீய:50 3/2
வருந்துகின்றனரே ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்து கொதித்து மெய் –தேசீய:53 1/2
தவமே புரியும் வகை அறியேன் சலியாது உற நெஞ்சு அறியாது – தோத்திர:1 11/1
நேயமோடு உரைத்தால் அங்கே நெஞ்சு இளக்கம் எய்தும் – தோத்திர:31 6/4
சிதையா நெஞ்சு கொள் – பல்வகை:1 2/27
வயிரமுடைய நெஞ்சு வேணும் இது வாழும் முறைமையடி பாப்பா – பல்வகை:2 16/2
அமைந்தது கண்டு நெஞ்சு அழன்றிடல் கொண்டும் – தனி:13 1/45
நெஞ்சு எலாம் புண்ணாய் நின்றனன் யாஅன் – தனி:24 1/10
அருமை மிக்க மயிலை பிரிந்தும் இவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ – சுயசரிதை:1 22/4
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே – கண்ணன்:17 1/3
இந்திரத்துவம் பெற்று இவர் வாழும் நெறி நன்றே இதை எண்ணியெண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே – பாஞ்சாலி:1 48/4
பாரததேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமும் பாதகர் ஓதினும் மேதகவு உற்றிடு பண்பு உயர் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/3
வாய் இனிக்க வரும் தமிழ் வார்த்தைகள் வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திட – பிற்சேர்க்கை:9 1/3
மேல்

நெஞ்சுக்கு (1)

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணி பூண் – தோத்திர:18 1/1
மேல்

நெஞ்சுடன் (1)

கண்ணிலா திரிதாட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர் – பாஞ்சாலி:1 19/4
மேல்

நெஞ்சுடையார் (2)

ஈரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் அருளை மனத்து இசைத்துக்கொள்வாய் – சுயசரிதை:2 64/2
வீரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் வீரம் மிக்க வினைகள் செய்வாய் – சுயசரிதை:2 64/3
மேல்

நெஞ்சுடையோர் (1)

ஈரம் இலா நெஞ்சுடையோர் நினை கண்டால் அருள் வடிவம் இசைந்துநிற்பார் – பிற்சேர்க்கை:11 4/2
மேல்

நெஞ்சும் (2)

ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மனைக்கு வயிறும் – பாஞ்சாலி:3 209/1
கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மை காதும் கருங்கல்லில் விடம் தோய்த்த நெஞ்சும் கொண்டோர் – பாஞ்சாலி:3 214/1
மேல்

நெஞ்சே (29)

முறையே நடப்பாய் முழு மூட நெஞ்சே
இறையேனும் வாடாய் இனிமேல் கறையுண்ட – தோத்திர:1 17/1,2
நெஞ்சே வாழி நேர்மையுடன் வாழி – தோத்திர:1 24/17
பைய தொழில் புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே – தோத்திர:1 26/4
பாவி நெஞ்சே பார் மிசை நின்னை – தோத்திர:1 36/3
அபயம் இங்கு அளித்தேன் நெஞ்சே
நினக்கு நான் உரைத்தன நிலைநிறுத்திடவே – தோத்திர:1 36/6,7
மூட நெஞ்சே முப்பது கோடி – தோத்திர:1 36/11
மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே
கவலைப்படுதலே கருநரகு அம்மா – தோத்திர:1 36/20,21
செய்க தவம் செய்க தவம் நெஞ்சே தவம் செய்தால் – தோத்திர:1 37/1
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை – தோத்திர:27 1/1
மனை வாழ்வு பொருள் எல்லாம் வகுக்கும் தேவி மலரடியே துணை என்று வாழ்த்தாய் நெஞ்சே – தோத்திர:27 2/4
உத்தம நல் நெறிகளிலே சேர்க்க சொல்லி உலகளந்தநாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே – தோத்திர:27 3/4
நல்ல வழி சேர்ப்பித்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 4/4
பாட்டினிலே சொல்வதும் அவள் சொல் ஆகும் பயன் இன்றி உரைப்பாளோ பாராய் நெஞ்சே
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு – தோத்திர:27 5/1,2
நாட்டினிலே சனகனை போல் நமையும் செய்தாள் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 5/4
பகைவனுக்கு அருள்வாய் நல் நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய் –வேதாந்த:23 0/1,2
புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே நல் நெஞ்சே பூமியில் கண்டோமே –வேதாந்த:23 1/1
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே பரமன் வாழ்கின்றான் –வேதாந்த:23 1/2
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ நல் நெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்தி கொடி வளராதோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/1,2
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்தி கொடி வளராதோ நல் நெஞ்சே –வேதாந்த:23 2/2
உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ நல் நெஞ்சே
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/1,2
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/2
வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேர் ஆமோ நல் நெஞ்சே
தாழ்வு பிறர்க்கு எண்ண தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/1,2
தாழ்வு பிறர்க்கு எண்ண தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/2
போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர் போல வந்தானும் அவன் நல் நெஞ்சே
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே –வேதாந்த:23 5/1,2
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே –வேதாந்த:23 5/2
தின்ன வரும் புலிதன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய் நல் நெஞ்சே
அன்னை பராசக்தி அவ் உரு ஆயினள் அவளை கும்பிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/1,2
அன்னை பராசக்தி அவ் உரு ஆயினள் அவளை கும்பிடுவாய் நல் நெஞ்சே –வேதாந்த:23 6/2
எப்போதும் குரு சரணம் நினைவாய் நெஞ்சே எம்பெருமான் சிதம்பரதேசிகன் தாள் எண்ணாய் – சுயசரிதை:2 20/1
சோதி என நெஞ்சே துணி – பிற்சேர்க்கை:12 5/4
மேல்

நெஞ்சை (6)

வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணியாரம் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 7/1,2
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடலை இருப்புக்கு இணையாக்கி – தோத்திர:1 39/2
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ என்பர் வெண்ணிலாவே நினை காதல் செய்வார் நெஞ்சிற்கு இன் அமுது ஆகுவை வெண்ணிலாவே – தோத்திர:73 4/1
வாளின் நின் நெஞ்சை வகுத்து நீ மடிக – தனி:13 1/69
நல் நயமே சிந்தைசெய்கின்றான் எனில் நன்கு மொழிவது அறிந்திலன் நெஞ்சை
தின்னும் கொடும் தழல் கொண்டவர் சொல்லும் செய்தி தெளிய உரைப்பரோ – பாஞ்சாலி:1 63/3,4
பாட்டினிலும் நெஞ்சை பறிகொடுத்தேன் பாவியேன் – குயில்:3 1/44
மேல்

நெஞ்சையும் (1)

சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே – தோத்திர:73 1/2
மேல்

நெஞ்சொடு (1)

நின்று துரியோதனன் அந்த மாமனை நெஞ்சொடு சேர கட்டி – பாஞ்சாலி:4 249/1
மேல்

நெட்டை (8)

நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார் – பாஞ்சாலி:5 271/21
நெட்டை கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான் – குயில்:1 1/24
நெட்டை குரங்கனுக்கு நேர் ஆன பெண் வேண்டி – குயில்:9 1/36
நெட்டை குரங்கனுக்கு பெண்டு ஆக நேர்ந்தாலும் – குயில்:9 1/49
நெட்டை குரங்கன் நெருங்கி வந்து பார்த்துவிட்டான் – குயில்:9 1/122
நின்று கலங்கினான் நெட்டை குரங்கன் அங்கே – குயில்:9 1/129
நெட்டை குரங்கன் அங்கு நீண்ட மரம் போலே – குயில்:9 1/138
ஓடி வந்தான் நெட்டை குரங்கனும் வாள் ஓங்கி வந்தான் – குயில்:9 1/151
மேல்

நெடிது (2)

நீல குயிலும் நெடிது உயிர்த்து ஆங்கு இஃது உரைக்கும் – குயில்:3 1/62
நேச உரை கூறி நெடிது உயிர்த்து பொய் குயிலி – குயில்:7 1/68
மேல்

நெடிய (2)

இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெரு நாடு –தேசீய:17 1/4
நீர் சுனை கணம் மின்னுற்று இலக நெடிய குன்றம் நகைத்து எழில்கொள்ள – தனி:10 4/1
மேல்

நெடு (9)

வீடுகளும் நெடு நிலமும் விரைவினிலே தருவாய் – தோத்திர:58 3/2
நின்றதோர் ஆல நெடு மரம் கண்டேன் – தோத்திர:68 3/3
சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே – தோத்திர:73 4/2
புனைந்த நின் நெடு வால் போவது என்கின்றார் – தனி:8 2/3
வேலையும் வாளினையும் நெடு வில்லையும் தண்டையும் விரும்பிடுவார் – பாஞ்சாலி:1 10/2
தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே தார் இசைந்த நெடு வரை தோளான் – பாஞ்சாலி:1 97/1
வீமன் உரைத்தது போலவே உளம் வெம்பி நெடு வில் விசயனும் அங்கு – பாஞ்சாலி:1 136/1
நெஞ்சத்தே தைக்க நெடு நோக்கு நோக்கிடுவீர் – குயில்:3 1/47
காட்டு நெடு வானம் கடல் எல்லாம் விந்தை எனில் – குயில்:7 1/95
மேல்

நெடுக்குமாக (1)

குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரண கயிற்றால் கட்டி – வசனகவிதை:4 1/2
மேல்

நெடுங்கால் (1)

புல் நிலை எய்திய போழ்து அதில் நெடுங்கால்
தெருமருகின்றிலர் சில பகல் கழிந்த பின் – தனி:13 1/74,75
மேல்

நெடுங்கால (1)

நீதம் எனக்கூடும் நெடுங்கால செய்தி அது – பாஞ்சாலி:5 271/58
மேல்

நெடுங்காலத்தின் (1)

சேய் நெடுங்காலத்தின் முன்னே சிறந்து ஒளிர் – பிற்சேர்க்கை:26 1/4
மேல்

நெடுங்காலம் (1)

மெதுவாக நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு – வசனகவிதை:4 6/8
மேல்

நெடுந்தொலை (1)

மன்ன பருந்து ஒர் இரண்டு மெல்ல வட்டமிட்டு பின் நெடுந்தொலை போகும் – தனி:2 2/3
மேல்

நெடுநாள் (7)

நெஞ்சு பிரிந்திடுவார் பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார் –தேசீய:15 4/4
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன் – தனி:13 1/15
பொறுமையினை அறக்கடவுள் புதல்வன் என்னும் யுதிட்டிரனும் நெடுநாள் இ புவி மேல் காத்தான் – சுயசரிதை:2 12/1
பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட பாசியை எற்றிவிடும் பெரு – கண்ணன்:1 5/3
நெடுநாள் பகை கண்டாய் இந்த நினைவினில் யான் கழித்தன பல நாள் – பாஞ்சாலி:1 134/1
நாசமடைந்ததடா நெடுநாள் பகை நாம் இனி வாழ்ந்தோமடா – பாஞ்சாலி:4 250/3
நின்னை மணக்க நெடுநாள் விரும்பியவன் – குயில்:9 1/25
மேல்

நெடுநேரம் (1)

எங்களுக்கு உடம்பு சிறிது ஆதலால் தீனி சொற்பம் அதை சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம் – வசனகவிதை:6 3/34
மேல்

நெடும் (7)

நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம் – கண்ணன்:19 4/2
சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது – பாஞ்சாலி:1 69/3
நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே – பாஞ்சாலி:1 145/4
மல்லுறு தடம் தோளார் இந்த மன்னவர் அனைவரும் நெடும் பொழுதா – பாஞ்சாலி:2 166/2
அச்சம் இங்கு இதில் வேண்டா விரைந்து ஆடுவம் நெடும் பொழுதாயினதால் – பாஞ்சாலி:2 170/1
நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய் நினக்கு எவரும் கூறியவர் இல்லை-கொல்லோ – பாஞ்சாலி:3 214/4
தெய்வம் முன்னே நின்று எதிர்ப்பினும் நின்று சீறி அடிக்கும் திறலனை நெடும்
கை வளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள் – பாஞ்சாலி:3 236/2,3
மேல்

நெடும்பொழுது (1)

இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்கு களி ஏறிவிட்டது – வசனகவிதை:4 1/53
மேல்

நெடுவெளி (1)

நேமித்த நெறிப்படியே இந்த நெடுவெளி எங்கணும் நித்தம் உருண்டே – கண்ணன்:3 1/2
மேல்

நெப்த்யூன் (1)

யுரேனஸ் நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள் – வசனகவிதை:2 10/3
மேல்

நெய் (5)

அன்னம் நறு நெய் பாலும் அதிசயமா தருவாய் – தோத்திர:58 2/5
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே இழையை நூற்று நல் ஆடை செய்வீரே – பல்வகை:8 2/3
நிலை விளக்கே நினை பிரிந்த இசைத்தேவி நெய் அகல நின்ற தட்டின் – தனி:20 3/3
நெய் குடம் கொண்டுவந்தார் மறை நியமம் கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே – பாஞ்சாலி:1 36/1
அதனிடத்தே நெய் பொழிகின்றோம் – வசனகவிதை:2 8/10
மேல்

நெய்யாக (1)

எண்ணம் எலாம் நெய்யாக எம் உயிரினுள் வளர்ந்த –தேசீய:27 2/1
மேல்

நெய்யும் (4)

மலியும் நெய்யும் தேனும் உண்டு மகிழ வந்தானே இ நேரம் – தோத்திர:75 9/2
அன்னம் உண்பீர் பாலும் நெய்யும் அமுதும் உண்பீரே இ நேரம் – தோத்திர:75 16/1
சாதமும் நெய்யும் எனக்கு என்றான் எங்கும் சாற்றிடும் கீர்த்தி அவர்க்கு என்றான் அட – பாஞ்சாலி:1 89/2
பாலடையும் நறு நெய்யும் தேனும் உண்டு பண்ணவர் போல் மக்கள் எலாம் பயிலும் நாடு – பாஞ்சாலி:1 116/4
மேல்

நெய்யையும் (1)

தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
மேல்

நெரித்த (2)

நெரித்த திரை கடலில் என்ன கண்டிட்டாய் நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய் – கண்ணன்:17 3/2
நெரித்த திரை கடலில் நின் முகம் கண்டேன் நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/1
மேல்

நெரித்துவிட்டார் (1)

நின்றது என்னே என்று நெரித்துவிட்டார் கேள்விகளை – குயில்:6 1/12
மேல்

நெருக்கிடையில் (1)

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே – கண்ணன்:17 1/3
மேல்

நெருங்கி (4)

நேயத்துடன் பணிந்தால் கிளியே நெருங்கி துயர் வருமோ – தோத்திர:76 5/2
நிறுத்து வண்டி என்றே கள்ளர் நெருங்கி கேட்கையிலே எங்கள் –வேதாந்த:17 2/1
துன்பம் நெருங்கி வந்த போதும் நாம் சோர்ந்துவிடலாகாது பாப்பா – பல்வகை:2 9/1
நெட்டை குரங்கன் நெருங்கி வந்து பார்த்துவிட்டான் – குயில்:9 1/122
மேல்

நெருங்கிய (1)

நெருங்கிய பயன் சேர் ஒத்துழையாமை நெறியினால் இந்தியாவிற்கு –தேசீய:41 5/3
மேல்

நெருங்கின (1)

நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் –வேதாந்த:5 1/2
மேல்

நெருப்பாக்கி (1)

காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி – வசனகவிதை:4 2/19
மேல்

நெருப்பாகி (1)

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையை தொழுது நிற்பேன் – தனி:17 1/4
மேல்

நெருப்பாய் (1)

கொன்றிடும் என இனிதாய் இன்ப கொடு நெருப்பாய் அனல் சுவை அமுதாய் – கண்ணன்:2 7/3
மேல்

நெருப்பில் (1)

நீரை பழைய நெருப்பில் குளிர்வித்தாய் – குயில்:7 1/78
மேல்

நெருப்பினில் (1)

வீசுறும் காற்றில் நெருப்பினில் வெளியில் விளங்குவாள்தனை சரண்புகுந்தேன் – தோத்திர:33 3/4
மேல்

நெருப்பினுக்கு (1)

நேரிட வாழ்வு உண்டோ இரு நெருப்பினுக்கு இடையினில் ஒரு விறகோ – பாஞ்சாலி:1 135/4
மேல்

நெருப்பு (4)

மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்பு தெய்வம் – தோத்திர:71 3/2
நீல கடல் ஓர் நெருப்பு எதிரே சேர் மணி போல் – குயில்:1 1/2
நீச குயிலும் நெருப்பு சுவை குரலில் – குயில்:5 1/55
நீர் ஓடு மேனி நெருப்பு ஓடும் கண்ணுடனே – குயில்:9 1/135
மேல்

நெருப்பை (1)

காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி – வசனகவிதை:4 2/19
மேல்

நெல் (2)

புல்லை நெல் என புரிதல் பன்றி போத்தை சிங்க ஏறு ஆக்கல் மண்ணை – தோத்திர:32 8/2
ஏற்ற நீர் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும் – குயில்:3 1/35
மேல்

நெல்லாம் (1)

இந்த பதர்களையே நெல்லாம் என எண்ணி இருப்பேனோ – தோத்திர:14 2/3
மேல்

நெல்லு (1)

வண்டி இழுக்கும் நல்ல குதிரை நெல்லு வயலில் உழுது வரும் மாடு – பல்வகை:2 5/1
மேல்

நெல்லையூர் (1)

நெல்லையூர் சென்று அவ் ஊணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன் – சுயசரிதை:1 21/1
மேல்

நெற்கள் (1)

வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே –வேதாந்த:19 2/2
மேல்

நெற்றி (4)

நெற்றி சுருக்கிடேல் – பல்வகை:1 2/60
நெற்றி ஒற்றைக்கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே – பல்வகை:3 0/2
நெற்றி சுருங்க கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடீ – கண்ணன்:8 6/2
நெற்றி மேல் மேகத்து மின் அடிகள் நேர்வித்தான் – பிற்சேர்க்கை:25 16/1
மேல்

நெற்றியில் (1)

சேதி நெற்றியில் பொட்டுவைப்பேன் என்றாள் திலகமிட்டனள் செய்கை அழிந்தனன் – சுயசரிதை:1 19/4
மேல்

நெற்றியிலே (1)

குனியும் வாள் முகத்தான் கண்ணன் குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே வண்ணம் இயன்ற சவ்வாதும் – கண்ணன்:15 1/3,4
மேல்

நெறி (33)

பாரதநாடு புது நெறி பழக்கல் –தேசீய:12 5/12
தீது சிறிதும் பயிலா செம்மணி மா நெறி கண்டோம் –தேசீய:12 6/3
நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும் –தேசீய:24 1/64
வேதாவாயினும் அவனுக்கு அஞ்சாமே உண்மை நெறி விரிப்போன் எங்கள் –தேசீய:43 4/3
செவ்விய நெறி அதில் சிவநிலை பெறலாம் – தோத்திர:1 28/4
சக்தி நெறி யாவினையும் வழங்கும் – தோத்திர:24 4/5
வெறி கொண்டால் ஆங்கு அதுவே வீடாம் நெறி கொண்ட – தோத்திர:66 2/2
மாறுதலை காட்டி வலிமை நெறி காட்டி – தோத்திர:66 5/3
நெறி உண்டு குறி உண்டு குல சக்தி வெறி உண்டு – தோத்திர:67 1/4
தீத்திறன் கொள் அறிவற்ற பொய் செயல் செய்து மற்றவை ஞான நெறி என்பர் – சுயசரிதை:1 38/3
இறுதியிலே பொறுமை நெறி தவறிவிட்டான் ஆதலால் போர்புரிந்தான் இளையாரோடே – சுயசரிதை:2 12/2
மை இலகு விழியாளின் காதல் ஒன்றே வையகத்தில் வாழும் நெறி என்று காட்டி – சுயசரிதை:2 29/2
நீதம் இல்லா கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 62/3
இந்திரத்துவம் பெற்று இவர் வாழும் நெறி நன்றே இதை எண்ணியெண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே – பாஞ்சாலி:1 48/4
ஆரியர் செல்வம் வளர்தற்கே நெறி ஆயிரம் நித்தம் புதியன கண்டு – பாஞ்சாலி:1 70/3
நொந்தது செயமாட்டோம் பழநூலினுக்கு இணங்கிய நெறி செல்வோம் – பாஞ்சாலி:1 131/4
நேர்ந்திடும் வாட்போரில் குத்து நெறி அறிந்தவன் வெல பிறன் அழிவான் – பாஞ்சாலி:2 176/2
நெறி இழந்த பின் வாழ்வதில் இன்பம் நேரும் என்று நினைத்திடல் வேண்டா – பாஞ்சாலி:2 204/1
நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீசரானவர் கொள்ளுவது உண்டோ – பாஞ்சாலி:3 207/2
நன்று ஆகும் நெறி அறியா மன்னன் அங்கு நான்கு திசை அரசர்சபை நடுவே தன்னை – பாஞ்சாலி:3 213/1
சென்றாலும் இருந்தாலும் இனி என்னேடா செய்கை நெறி அறியாத சிறியாய் நின்னை – பாஞ்சாலி:3 213/3
குற்றம் தவிர்க்கும் நெறி இதனை கொள்ளீரேல் – பாஞ்சாலி:4 252/76
வழி பற்றி நின்றவன் சிவசக்தி நெறி உணராதவன் இன்பம் – பாஞ்சாலி:5 265/3
சால நன்கு கூறினீர் ஐயா தரும நெறி
பண்டு ஓர் இராவணனும் சீதைதன்னை பாதகத்தால் – பாஞ்சாலி:5 271/74,75
வண்ணம் உயர் வேதநெறி மாறி பின் நாள் வழங்குவது இ நெறி என்றான் வழுவே சொன்னான் – பாஞ்சாலி:5 284/4
காவலின் நெறி பிழைத்தான் கொடி கடி அரவு உடையவன் தலைகவிழ்ந்தான் – பாஞ்சாலி:5 302/4
நின் சொல் மறுக்க நெறி இல்லை ஆயிடினும் – குயில்:8 1/58
நீ விலகி சென்றாய் நெறி ஏது காமியர்க்கே – குயில்:9 1/96
தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ – வசனகவிதை:4 15/7
உள் நிகழ்ந்திடும் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேல் நெறி உற்றனர் – பிற்சேர்க்கை:2 3/2
நேர் அறியா மக்கள் எலாம் நினை கண்டால் நீதி நெறி நேர்ந்து வாழ்வார் – பிற்சேர்க்கை:11 4/3
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகை பெரும் கலை நெறி அறம் அழிபடா மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே – பிற்சேர்க்கை:24 3/6
அதி ஆசை விஞ்சி நெறி ஏதும் இன்றி அவமான வஞ்சம் மிகவே – பிற்சேர்க்கை:24 4/1
மேல்

நெறிகள் (3)

பாம்பு மடியும் மெய் பரம் வென்று நல்ல நெறிகள் உண்டாய்விடும் –வேதாந்த:15 6/4
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை கொண்டு உயர் தேவர்கள் ஆதற்கே – பல்வகை:4 3/2
ஆரியர் முன் நெறிகள் மேன்மை என்கிறாய் பண்டை ஆரிய பெண்களுக்கு திரைகள் உண்டோ – கண்ணன்:18 2/1
மேல்

நெறிகளிலே (1)

உத்தம நல் நெறிகளிலே சேர்க்க சொல்லி உலகளந்தநாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே – தோத்திர:27 3/4
மேல்

நெறிகளும் (1)

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞான செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் – பல்வகை:4 7/1,2
மேல்

நெறிகளை (2)

உள்ளுடைவு இன்றி உயர்த்திடு நெறிகளை
கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன் –தேசீய:24 1/29,30
உயிர் தரும் மேற்றிசை நெறிகளை உவந்து நீர் –தேசீய:24 1/87
மேல்

நெறிப்படி (1)

கருமம் ஒன்றே உளதாம் நங்கள் கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம் – பாஞ்சாலி:1 130/4
மேல்

நெறிப்படியே (2)

நேமித்த நெறிப்படியே இந்த நெடுவெளி எங்கணும் நித்தம் உருண்டே – கண்ணன்:3 1/2
தந்தை சொல் நெறிப்படியே இந்த தடம் தோள் மன்னவன் அரசிருந்தான் – பாஞ்சாலி:1 17/1
மேல்

நெறிப்படுத்தும் (1)

மேல் நெறிப்படுத்தும் விதத்தினை அருளினாய் – பிற்சேர்க்கை:26 1/38
மேல்

நெறியறியார் (1)

செல்லும் நெறியறியார் செய்கை இங்கு பார்த்திடிலோ – பாஞ்சாலி:5 271/67
மேல்

நெறியில் (2)

அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட – கண்ணன்:23 4/2
நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே – பாஞ்சாலி:1 145/4
மேல்

நெறியிலா (1)

நீசருக்கு இனிதாம் தனத்தினும் மாதர் நினைப்பினும் நெறியிலா மாக்கள் – தோத்திர:33 3/1
மேல்

நெறியிலே (2)

அத்தகை காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனா கொண்டு புவி மிசை தருமமே –தேசீய:12 5/20,21
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் நிலைத்திடல் என்று இவை அருளாய் – சுயசரிதை:1 49/3
மேல்

நெறியினால் (2)

நெருங்கிய பயன் சேர் ஒத்துழையாமை நெறியினால் இந்தியாவிற்கு –தேசீய:41 5/3
நிதி செய்தாரை பணிகுவர் மானிடர் மாமனே எந்த நெறியினால் அது செய்யினும் நாய் என நீள் புவி – பாஞ்சாலி:1 49/3
மேல்

நெறியினில் (1)

நெறியினில் அவன் பணி நேர்பட செய்வோம் – வசனகவிதை:7 0/18
மேல்

நெறியினின்று (1)

நீதி நெறியினின்று பிறர்க்கு உதவும் நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர் –தேசீய:5 13/2
மேல்

நெறியினுக்கு (1)

நெறியினுக்கு எல்லாம் நேரெதிர் நெறியே – கண்ணன்:6 1/36
மேல்

நெறியுடைய (1)

எந்த நெறியுடைய பிறர் எனினும் அவர் சூத்திரர் என்று இகழ்கின்றோமால் – பிற்சேர்க்கை:10 1/4
மேல்

நெறியும் (4)

தள்ளிவிடும் பொய் நெறியும் தீங்கும் – தோத்திர:24 33/5
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன் –வேதாந்த:22 1/32
வைகு நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால் – பாஞ்சாலி:5 271/70
மேல்

நெறியுளோர்கள் (1)

நேயமுற்ற விதுரன் போலே நெறியுளோர்கள் எல்லாம் – பாஞ்சாலி:2 183/3
மேல்

நெறியே (1)

நெறியினுக்கு எல்லாம் நேரெதிர் நெறியே
நடப்பான் ஆயினன் நானிலத்தவர்தம் – கண்ணன்:6 1/36,37
மேல்