தொ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 2
தொக்கன 2
தொகுத்து 2
தொகுதியும் 2
தொகுதியை 1
தொகுப்பதின் 1
தொகை 5
தொகைக்கு 1
தொகைதொகையா 1
தொகைப்படுமோ 1
தொகையில் 1
தொகையிலா 2
தொகையுடையார் 1
தொகையோடு 1
தொங்க 1
தொங்குகிறது 1
தொட்ட 1
தொட்டதை 1
தொட்டார் 1
தொட்டான் 1
தொட்டுநின்றால் 1
தொட்டுவிட்டான் 1
தொட்டே 1
தொடக்கமும் 1
தொடங்கலானார் 1
தொடங்கி 1
தொடங்கிய 2
தொடங்கியே 1
தொடங்கிவிட்டாய் 1
தொடங்கினான் 1
தொடங்குக 1
தொடங்குகின்றோம் 1
தொடங்குமேல் 1
தொடங்குறூஉம் 1
தொடர் 2
தொடர்க 1
தொடர்களில் 1
தொடர்ந்தார் 1
தொடர்ந்திடு 1
தொடர்ந்திடுமோ 1
தொடர்ந்திடுவேன் 1
தொடர்ந்து 3
தொடர்பா 1
தொடர்பினில் 1
தொடர்வதும் 1
தொடர 1
தொடரினிலும் 1
தொடரொணாத 1
தொடாமல் 1
தொடியார் 1
தொடுக்க 1
தொடுக்கிலேன் 1
தொடுத்ததும் 1
தொடுப்பேன் 1
தொடுவதில்லை 1
தொடுவது 1
தொடுவாய் 2
தொடை 2
தொடையலும் 1
தொடையை 1
தொண்டச்சி 1
தொண்டர் 9
தொண்டர்தங்கள் 1
தொண்டர்தம்முள்ளே 1
தொண்டர்தம்மை 1
தொண்டருக்கு 2
தொண்டினை 1
தொண்டு 14
தொண்டுகள் 1
தொண்டுபட்டு 1
தொண்டை 3
தொண்டையில் 1
தொப்பை 1
தொம்ப 3
தொல் 6
தொல்லறிவு 1
தொல்லை 15
தொல்லைகள் 5
தொல்லைப்படுத்தி 1
தொல்லைப்படும் 1
தொல்லையும் 1
தொல்வினை 1
தொலை 3
தொலைக்க 1
தொலைக்கும் 2
தொலைக்கே 1
தொலைக 1
தொலைகின்ற 1
தொலைத்த 1
தொலைத்தல் 1
தொலைத்தாய் 1
தொலைத்திட 2
தொலைத்து 1
தொலைத்துவிட்டாய் 1
தொலைத்துவிட்டாள் 1
தொலைந்தது 1
தொலைந்தன 1
தொலைந்தனவில்லை 1
தொலைந்திடுக 1
தொலையா 1
தொலையாத 1
தொலையில் 1
தொலையின் 1
தொலையுது 2
தொழில் 69
தொழில்கள் 8
தொழில்களிலும் 1
தொழில்களும் 1
தொழில்களை 1
தொழில்செய்கின்றன 1
தொழில்செய்து 1
தொழில்புரிந்து 1
தொழிலா 3
தொழிலாம் 1
தொழிலார் 1
தொழிலாளி 1
தொழிலில் 4
தொழிலிலும் 2
தொழிலிலே 1
தொழிலினை 1
தொழிலுக்கு 1
தொழிலுக்கும் 1
தொழிலுடன் 1
தொழிலும் 2
தொழிலுமே 1
தொழிலே 4
தொழிலை 2
தொழு 1
தொழுகின்றோம் 10
தொழுதவுடன் 1
தொழுதார் 1
தொழுதிடல் 2
தொழுதிடும் 2
தொழுதிடுவோம் 1
தொழுதிடுவோமடா 1
தொழுது 7
தொழுதேன் 4
தொழும் 3
தொழும்ப 1
தொழும்பர்காள் 1
தொழும்பராய் 1
தொழும்பாய் 1
தொழும்புகண்டாய் 1
தொழும்புகள் 2
தொழும்பை 1
தொழுமாடும் 1
தொழுவதென்னே 1
தொழுவர் 1
தொழுவாள் 1
தொழுவிலும் 1
தொழுவினில் 1
தொழுவேன் 1
தொளைத்திடலாயினேன் 1
தொளைத்து 1
தொளைப்பாய் 1
தொளையிலே 2
தொன் 1
தொன்மைக்கு 1
தொன்று 1
தொனி 2
தொனியுடை 1

தொக்க (2)

தொக்க பேர் அண்டங்கள் கொண்ட தொகைக்கு இல்லை இல்லை என்று சொல்லுகின்ற – தோத்திர:42 6/2
தொக்க பொருள் எல்லாம் தோன்றியது என் சிந்தைக்கே – குயில்:1 1/34
மேல்

தொக்கன (2)

தொக்கன அண்டங்கள் வளர் தொகை பல கோடி பல் கோடிகளாம் – தோத்திர:42 5/3
தொக்கன உலகங்கள் திசை தூ வெளியதனிடை விரைந்து ஓடும் – தோத்திர:42 7/2
மேல்

தொகுத்து (2)

சொற்றை நீதி தொகுத்து வைத்திருந்தார் –தேசீய:12 5/9
தோழியரும் நீயும் தொகுத்து நின்றே ஆடுவதை – குயில்:9 1/67
மேல்

தொகுதியும் (2)

புன்னகை புனைந்த புது மலர் தொகுதியும்
பைம் நிறம் விரிந்த பழன காட்சியும் –தேசீய:42 1/16,17
சுருதியும் அரிய உபநிடதத்தின் தொகுதியும் பழுதற உணர்ந்தோன் – தனி:18 1/1
மேல்

தொகுதியை (1)

சாத்திர தொகுதியை தாழ்த்துவைக்கின்றார் –தேசீய:32 1/51
மேல்

தொகுப்பதின் (1)

சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திட தொகுப்பதின் சுவை அறிவார் – பாஞ்சாலி:1 5/3
மேல்

தொகை (5)

தொக்கன அண்டங்கள் வளர் தொகை பல கோடி பல் கோடிகளாம் – தோத்திர:42 5/3
போர் தொகை அடங்கி என் ஏழை புத்திரர் – தனி:24 1/16
நெஞ்சத்தில் சூதை இகழ்ச்சியா கொள்ள நீதம் இல்லை முன்னை பார்த்திவர் தொகை
கொஞ்சம் இலை பெரு சூதினால் வெற்றி கொண்டு பகையை அழித்துளோர் – பாஞ்சாலி:1 55/3,4
ஓதலானும் உணர்த்துதலானும் உண்மை சான்ற கலை தொகை யாவும் – பாஞ்சாலி:2 173/3
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார் மூதுணர்வில் கலை தொகை மாய்ப்பார் – பாஞ்சாலி:2 174/2
மேல்

தொகைக்கு (1)

தொக்க பேர் அண்டங்கள் கொண்ட தொகைக்கு இல்லை இல்லை என்று சொல்லுகின்ற – தோத்திர:42 6/2
மேல்

தொகைதொகையா (1)

சோலை பறவை தொகைதொகையா தாம் ஒலிக்க – குயில்:5 1/77
மேல்

தொகைப்படுமோ (1)

தூ இழை ஆடைகளும் மணி தொடையலும் பொன்னும் ஒர் தொகைப்படுமோ
சே இழை மடவாரும் பரி தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ – பாஞ்சாலி:1 22/3,4
மேல்

தொகையில் (1)

துளக்கமுற்ற விண்மீனிடம் செல்லுவார் தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார் – பல்வகை:10 1/3
மேல்

தொகையிலா (2)

துணிவினால் வீழ்ந்துவிட்டாய் தொகையிலா படைகளோடும் –தேசீய:51 5/1
சுருள் அலை வெள்ளம் போல தொகையிலா படைகள் கொண்டே –தேசீய:51 6/2
மேல்

தொகையுடையார் (1)

எண்ணை பழிக்கும் தொகையுடையார் இளமஞ்சரை பலர் ஈந்தனர் மன்னர் இவர்தமக்கு தொண்டு இயற்றவே – பாஞ்சாலி:1 44/3
மேல்

தொகையோடு (1)

தொகையோடு அசுர பகை தீர்ப்பதையே – தோத்திர:50 5/2
மேல்

தொங்க (1)

துவளும் நெஞ்சினாராய் வதனம் தொங்க வீற்றிருந்தார் – பாஞ்சாலி:3 226/4
மேல்

தொங்குகிறது (1)

ஒரு மூங்கில் கழியிலே கொஞ்சம் மிச்ச கயிறு தொங்குகிறது
ஒரு சாண் கயிறு – வசனகவிதை:4 1/4,5
மேல்

தொட்ட (1)

பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/4
மேல்

தொட்டதை (1)

தொட்டதை மீளமீளவும் தொடுவாய் –வேதாந்த:22 1/6
மேல்

தொட்டார் (1)

பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் பின்வரவு அறியாமல் சுதந்திரம் தொட்டார் –தேசீய:36 2/2
மேல்

தொட்டான் (1)

பாசத்தை அறுத்துவிட்டான் பயத்தை சுட்டான் பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்
நாசத்தை அழித்துவிட்டான் யமனை கொன்றான் ஞானகங்கைதனை முடி மீது ஏந்திநின்றான் – சுயசரிதை:2 21/2,3
மேல்

தொட்டுநின்றால் (1)

தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டுநின்றால் போதுமடா –வேதாந்த:11 21/2
மேல்

தொட்டுவிட்டான் (1)

இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டுவிட்டான்
வினவ கண் விழித்தேன் சகியே மேனி மறைந்துவிட்டான் – கண்ணன்:10 5/2,3
மேல்

தொட்டே (1)

தென்திசை சாவகமாம் பெரும் தீவு தொட்டே வடதிசையதனில் – பாஞ்சாலி:1 34/1
மேல்

தொடக்கமும் (1)

தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திலே நிமிஷம்தோறும் அவளுக்கு புதிய கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/8
மேல்

தொடங்கலானார் (1)

காய் உருட்டலானார் சூது களி தொடங்கலானார்
மாயம் உள்ள சகுனி பின்னும் வார்த்தை சொல்லுகின்றான் – பாஞ்சாலி:3 218/1,2
மேல்

தொடங்கி (1)

முந்தை நாள் தொடங்கி மானுடர்தமக்கு – வசனகவிதை:7 0/47
மேல்

தொடங்கிய (2)

உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ் ஓங்கி நின்றார் இ தருமனை போல் எவர் மாமனே – பாஞ்சாலி:1 42/1
நண்ணி தொடங்கிய சூது அன்றோ இவர் நாணுற செய்வது நேர்மையோ – பாஞ்சாலி:3 240/4
மேல்

தொடங்கியே (1)

பிள்ளை பருவம் தொடங்கியே இந்த பிச்சன் அவர்க்கு பெரும்பகைசெய்து – பாஞ்சாலி:1 73/1
மேல்

தொடங்கிவிட்டாய் (1)

சதிசெய தொடங்கிவிட்டாய் நின்றன் சதியினில்தான் அது விளையும் என்றான் – பாஞ்சாலி:1 107/4
மேல்

தொடங்கினான் (1)

சின்னஞ்சிறிய வயதிலே இவன் தீமை அவர்க்கு தொடங்கினான் அவர் – பாஞ்சாலி:1 78/1
மேல்

தொடங்குக (1)

நிச்சயம் நீ வெல்வாய் பல நினைகுவது ஏன் களி தொடங்குக என்றான் – பாஞ்சாலி:2 170/4
மேல்

தொடங்குகின்றோம் (1)

பொழுது போக்குதற்கே சூது போர் தொடங்குகின்றோம்
அழுதல் ஏன் இதற்கே என்றே அங்கர் கோன் நகைத்தான் – பாஞ்சாலி:2 187/1,2
மேல்

தொடங்குமேல் (1)

சுதந்திரம் பெரும் போர் ஓர்கால் தொடங்குமேல்
பலமுறை தோற்கும் பான்மைத்து ஆயினும் – பிற்சேர்க்கை:28 1/3,4
மேல்

தொடங்குறூஉம் (1)

முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர் – தனி:24 1/9
மேல்

தொடர் (2)

பாருக்குள்ளே சமத்தன்மை தொடர் பற்றும் சகோதரத்தன்மை – பல்வகை:3 29/1
துன்ப கதையின் தொடர் உரைப்பேன் கேளீரோ – குயில்:6 1/46
மேல்

தொடர்க (1)

சொல்லிய குறிப்பு அறிந்தே நலம் தோன்றிய வழியினை தொடர்க என்றான் – பாஞ்சாலி:1 129/4
மேல்

தொடர்களில் (1)

வினை தொடர்களில் மானுட வாழ்க்கையுள் மேவும் இ மணம் போல் பிறிதின்று அரோ – சுயசரிதை:1 30/4
மேல்

தொடர்ந்தார் (1)

மாமனும் மருமகனுமா நமை அழித்திட கருதி இவ் வழி தொடர்ந்தார்
தாமதம்செய்வோமோ செல தகும் தகும் என இடியுற நகைத்தான் – பாஞ்சாலி:1 133/2,3
மேல்

தொடர்ந்திடு (1)

சோதர நட்பு தொடர்ந்திடு சாதி –தேசீய:42 1/193
மேல்

தொடர்ந்திடுமோ (1)

வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ
காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதி இல்லை –வேதாந்த:12 4/2,3
மேல்

தொடர்ந்திடுவேன் (1)

தொண்டு உனது அன்னை பராசக்திக்கு என்றும் தொடர்ந்திடுவேன்
பண்டை சிறுமைகள் போக்கி என் நாவில் பழுத்த சுவை – தோத்திர:1 30/2,3
மேல்

தொடர்ந்து (3)

துய்ய வெண்ணிறத்தாள்தனை கரியவளை துணை என தொடர்ந்து கொண்டே – தோத்திர:33 4/4
மன்னவன்தன் மைந்தன் ஒரு மானை தொடர்ந்து வர – குயில்:9 1/66
வடமேருவிலே பலவாக தொடர்ந்து வருவாள் – வசனகவிதை:2 3/12
மேல்

தொடர்பா (1)

தோன்றி மறையும் தொடர்பா பல அனந்தம் – குயில்:7 1/89
மேல்

தொடர்பினில் (1)

முன் தொடர்பினில் உண்மை இருந்ததால் மூண்ட பின் அது ஒர் கேளி என்று எண்ணினேன் – சுயசரிதை:1 36/3
மேல்

தொடர்வதும் (1)

கும்பி மா நரகத்தினில் ஆழ்த்தும் கொடிய செய்கை தொடர்வதும் என்னே – பாஞ்சாலி:2 202/4
மேல்

தொடர (1)

தொல்லை தரும் அகப்பேயை தொலைக்க வேண்டும் துணை என்று நின் அருளை தொடர செய்தே – தோத்திர:27 4/3
மேல்

தொடரினிலும் (1)

நல் தவ நடையினிலும் நல்ல நாவலர் தேமொழி தொடரினிலும்
உற்ற செந்திரு தாயை நித்தம் உவகையில் போற்றி இங்கு உயர்ந்திடுவோம் – தோத்திர:59 7/2,3
மேல்

தொடரொணாத (1)

சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெரும் சோதி – தோத்திர:78 1/4
மேல்

தொடாமல் (1)

சற்று நேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே இருக்கும் – வசனகவிதை:4 1/50
மேல்

தொடியார் (1)

கோல் தொடியார் குக்குவென கொஞ்சும் ஒலியினிலும் – குயில்:3 1/36
மேல்

தொடுக்க (1)

கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும் கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும் – தோத்திர:27 4/2
மேல்

தொடுக்கிலேன் (1)

வாது நின்னோடு தொடுக்கிலேன் ஒரு வார்த்தை மட்டும் சொல கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 91/1
மேல்

தொடுத்ததும் (1)

பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும்
உற்றதோர் தம்பிக்கு தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும் – பாஞ்சாலி:1 50/1,2
மேல்

தொடுப்பேன் (1)

ஐயனே இவர் மீது அம்பையோ தொடுப்பேன்
வையகத்து அரசும் வானக ஆட்சியும் –தேசீய:32 1/143,144
மேல்

தொடுவதில்லை (1)

துயர் இல்லை மூப்பும் இல்லை என்றும் சோர்வு இல்லை நோய் ஒன்றும் தொடுவதில்லை
பயம் இல்லை பரிவு ஒன்று இல்லை எவர் பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை – கண்ணன்:3 9/2,3
மேல்

தொடுவது (1)

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று எண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார் – பல்வகை:6 2/1
மேல்

தொடுவாய் (2)

கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையை கொஞ்சி தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய் – தோத்திர:35 5/2
தொட்டதை மீளமீளவும் தொடுவாய்
புதியது காணில் புலன் அழிந்திடுவாய் –வேதாந்த:22 1/6,7
மேல்

தொடை (2)

மேலை போம் பரிதியினை தொழுது கண்டான் மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்ல சாய்ந்து – பாஞ்சாலி:1 147/3
பேணும் பெரும் கனல் ஒத்தாள் எங்கள் பெண்டு திரௌபதியை தொடை மீதில் – பாஞ்சாலி:5 304/2
மேல்

தொடையலும் (1)

தூ இழை ஆடைகளும் மணி தொடையலும் பொன்னும் ஒர் தொகைப்படுமோ – பாஞ்சாலி:1 22/3
மேல்

தொடையை (1)

தொடையை பிளந்து உயிர் மாய்ப்பேன் தம்பி சூர துச்சாதனன்தன்னையும் ஆங்கே – பாஞ்சாலி:5 305/1
மேல்

தொண்டச்சி (1)

சூதில் பணயம் என்றே அங்கு ஓர் தொண்டச்சி போவது இல்லை – பாஞ்சாலி:5 273/2
மேல்

தொண்டர் (9)

தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் –தேசீய:11 1/3
சொர்க்கம் உற்றார் என தொண்டர் கொண்டிருக்கும் –தேசீய:42 1/91
ஆர்த்தனர் தொண்டர் அரு வியப்பு எய்தினர் –தேசீய:42 1/94
சூழ்ந்திருந்தனர் உயிர் தொண்டர் தாம் ஐவரும் –தேசீய:42 1/147
சிறந்து ஆளும் நாதனை போற்றிடும் தொண்டர் செயும் தவமே – தோத்திர:1 10/4
தொண்டர் என்றோர் வகுப்பு இல்லை தொழில் சோம்பலை போல் இழிவு இல்லை – பல்வகை:3 3/2
தொண்டர் என செய்திடுவன் யான் என்றன் சூதின் வலிமை அறிவை நீ – பாஞ்சாலி:1 54/4
சிலங்கை பொன் கச்சு அணிந்த வேசை மாதர் சிறுமைக்கு தலைகொடுத்த தொண்டர் மற்றும் – பாஞ்சாலி:3 215/3
துக்கங்கள் அழித்திடுவாய் கண்ணா தொண்டர் கண்ணீர்களை துடைத்திடுவாய் – பாஞ்சாலி:5 294/3
மேல்

தொண்டர்தங்கள் (1)

அரும் கலைவாணர் மெய் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய் –தேசீய:41 5/2
மேல்

தொண்டர்தம்முள்ளே (1)

தோன்று நூறாயிரம் தொண்டர்தம்முள்ளே
அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே –தேசீய:42 1/83,84
மேல்

தொண்டர்தம்மை (1)

தூ இழை பொனாடை சுற்றும் தொண்டர்தம்மை வைத்தான் – பாஞ்சாலி:2 191/4
மேல்

தொண்டருக்கு (2)

சுடுதலும் குளிரும் உயிர்க்கு இல்லை சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை –தேசீய:12 8/3
தொண்டருக்கு உண்டு துணை – தோத்திர:1 17/4
மேல்

தொண்டினை (1)

செம்மை என்று இழி தொண்டினை சிந்திப்பார் –தேசீய:29 6/2
மேல்

தொண்டு (14)

தொல்லை இகழ்ச்சிகள் தீர இந்த தொண்டு நிலைமையை தூவென்று தள்ளி –தேசீய:1 6/2
துஞ்சும் பொழுதினும் தாயின் பத தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும் –தேசீய:14 9/2
இகழுறும் ஈன தொண்டு இயற்றியும் வாழ்வதற்கு இச்சையுற்றிருப்பாரோ –தேசீய:26 2/2
தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா –தேசீய:34 1/1
தொண்டு ஒன்றே தொழிலா கொண்டிருந்தோரை தூண்டினாய் புகழ் வேண்டினாய் –தேசீய:38 5/1
நாமகட்கு பெரும் தொண்டு இயற்றி பல் நாட்டினோர்தம் கலையிலும் அவ்வவர் –தேசீய:46 1/1
துஞ்சுமட்டும் இ பாரதநாட்டிற்கே தொண்டு இழைக்க துணிந்தவர் யாவரும் –தேசீய:46 2/3
தொண்டு உனது அன்னை பராசக்திக்கு என்றும் தொடர்ந்திடுவேன் – தோத்திர:1 30/2
நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம் நீச தொண்டு மடமையும் கொண்டதாய் – பல்வகை:4 5/1
நச்சிநச்சி உள தொண்டு கொண்டு நானிலத்து இன்பம் நாடுவதில்லை – தனி:14 9/2
வண்மையே குலதர்மம் என கொண்டார் தொண்டு ஒன்றே வழியா கண்டார் – தனி:23 6/2
எண்ணை பழிக்கும் தொகையுடையார் இளமஞ்சரை பலர் ஈந்தனர் மன்னர் இவர்தமக்கு தொண்டு இயற்றவே – பாஞ்சாலி:1 44/3
சாய புலை தொண்டு சார்ந்திட்டால் பின்பு தாரம் உடைமை அவர்க்கு உண்டோ – பாஞ்சாலி:4 256/4
சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிர் உண்டு – பாஞ்சாலி:5 273/1
மேல்

தொண்டுகள் (1)

சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமை சுருள் தீயில் இட்டு பொசுக்கிட வேண்டுமாம் – பல்வகை:4 3/3
மேல்

தொண்டுபட்டு (1)

தொண்டுபட்டு வாடும் என்றன் தூய பெரு நாட்டில் –தேசீய:48 19/1
மேல்

தொண்டை (3)

தொண்டை விக்குமோ ஏதும் சொல் அரியதாமோ –தேசீய:33 1/195
வாழி நின்றன் மன்னவனும் தொண்டை வள நாட்டில் – குயில்:9 1/172
தொண்டை வள நாட்டில் ஓர் சோலையிலே வேந்தன் மகன் – குயில்:9 1/201
மேல்

தொண்டையில் (1)

வீழ்ந்து இடை தொண்டையில் வேதனை செய்தன – தனி:13 1/18
மேல்

தொப்பை (1)

தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது – பல்வகை:11 5/3
மேல்

தொம்ப (3)

தொம்ப பிள்ளைகள் பிச்சைக்கு கத்துகின்றன – வசனகவிதை:3 7/10
பிடாரன் குழலையும் தொம்ப குழந்தைகளின் குரலையும் யார் சுருதிசேர்த்துவிட்டது சக்தி – வசனகவிதை:3 7/11
பிடாரன் உயிரிலும் தொம்ப குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது – வசனகவிதை:3 7/14
மேல்

தொல் (6)

தொல் புவியதனை துயர் கடல் ஆழ்த்தி நீ – தனி:8 5/3
தொல் இசை காவியங்கள் அரும் தொழில் உணர் சிற்பர் செய் ஓவியங்கள் – பாஞ்சாலி:1 12/2
தொல் உணர்வின் மருத்துவன்தன்னை சோர்வுறுத்துதல் போல் ஒரு தந்தை – பாஞ்சாலி:1 85/2
சோரம் முதல் புன்மை எதும் தோன்றா நாடு தொல் உலகின் முடி மணி போல் தோன்றும் நாடு – பாஞ்சாலி:1 118/3
சூதர் சபைதனிலே தொல் சீர் மறக்குலத்து – பாஞ்சாலி:4 252/99
நெஞ்சகமே தொல் விதியின் நீதியே பாழ் உலகே – குயில்:5 1/4
மேல்

தொல்லறிவு (1)

சோதி பணாமுடி ஆயிரம் கொண்ட தொல்லறிவு என்னும் ஒர் பாம்பின் மேல் ஒரு – பாஞ்சாலி:1 81/2
மேல்

தொல்லை (15)

தொல்லை இகழ்ச்சிகள் தீர இந்த தொண்டு நிலைமையை தூவென்று தள்ளி –தேசீய:1 6/2
தொல்லை வினை தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே –தேசீய:23 3/2
தொல்லை வினை தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே –தேசீய:23 3/2
சூது இல்லை காணும் இந்த நாட்டீர் மற்ற தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம் – தோத்திர:23 1/2
தொல்லை தரும் அகப்பேயை தொலைக்க வேண்டும் துணை என்று நின் அருளை தொடர செய்தே – தோத்திர:27 4/3
துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய் – தோத்திர:30 2/4
தொல்லை தீர்த்து உயர்வு கல்வி வெற்றி சூழும் வீரம் அறிவு ஆண்மை – தோத்திர:32 8/4
தொல்லை தவிர்ப்பவளை நித்தம் தோத்திரம் பாடி தொழுதிடுவோமடா – தோத்திர:64 9/4
கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவனை எம்மை காவல்புரிபவனை தொல்லை காட்டை அழிப்பவனை திசை – தோத்திர:74 3/1
கொள்ளைக்கே சென்று ஒரு பொய் மூட்டி நம்மை கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி – பல்வகை:9 7/2
சொன்னபடி நடவாவிடிலோ மிக தொல்லை இழைத்திடுவான் கண்ணன்தன்னை – கண்ணன்:1 6/3
பட்டன தொல்லை பல பெரும் பாரதம் – கண்ணன்:6 1/13
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை – கண்ணன்:9 1/2
தொல்லை தீரும் வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/3
தொல்லை எலாம் தவிர்த்து எங்கள் கண் காண நொடிப்பொழுதில் துருக்கி மாந்தர் – பிற்சேர்க்கை:7 2/2
மேல்

தொல்லைகள் (5)

துச்சம் இங்கு இவர் படைகள் பல தொல்லைகள் கவலைகள் சாவுகளாம் – தோத்திர:11 5/2
தொல்லைகள் இன்னும் தொலைந்தனவில்லை – தனி:24 1/30
நல்குரவு ஆதி நவமாம் தொல்லைகள்
ஆயிரம் எனை வந்து அடைந்துள நுமரால் – தனி:24 1/31,32
ஆத்திரம் நின்றது அதனிடை நித்தம் ஆயிரம் தொல்லைகள் சூழ்ந்தன – கண்ணன்:7 1/4
ஓதி பொருளியல் கண்டதாம் பிறர் உற்றிடும் தொல்லைகள் மாற்றியே இன்பம் – கண்ணன்:7 10/3
மேல்

தொல்லைப்படுத்தி (1)

வலியிழந்தவற்றை தொல்லைப்படுத்தி வேடிக்கைபார்ப்பதிலே நீ மஹா ஸமர்த்தன் – வசனகவிதை:4 9/8
மேல்

தொல்லைப்படும் (1)

தொல்லைப்படும் என் மனம் தெளிவு எய்த சொல்லுதி நீ ஒரு சூழ்ச்சி இங்கு என்றான் – பாஞ்சாலி:1 127/4
மேல்

தொல்லையும் (1)

இனி ஒரு தொல்லையும் இல்லை பிரிவு – பிற்சேர்க்கை:8 0/1
மேல்

தொல்வினை (1)

தொல்வினை கட்டு எல்லாம் துறந்து – தோத்திர:1 9/4
மேல்

தொலை (3)

பிணிகளால் சாதலும் பெரும் தொலை உள்ள தம் –தேசீய:24 1/40
தொலை ஒட்டி கரையுற்று துயர் அற்று விடுபட்டு – தோத்திர:67 3/3
ஆற்றல் மிலேச்ச மன்னர் தொலை அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 33/4
மேல்

தொலைக்க (1)

தொல்லை தரும் அகப்பேயை தொலைக்க வேண்டும் துணை என்று நின் அருளை தொடர செய்தே – தோத்திர:27 4/3
மேல்

தொலைக்கும் (2)

பனி தொலைக்கும் வெயில் அது தேம் பாகு மதுரம் அன்றோ – தனி:6 5/2
மாயை தொலைக்கும் மஹாமாயை தான் ஆவாள் – பாஞ்சாலி:4 252/17
மேல்

தொலைக்கே (1)

என்று திகைத்தேன் இரும் தொலைக்கே நின்றதனால் – குயில்:8 1/11
மேல்

தொலைக (1)

நவமுறு ஞானபாநு நண்ணுக தொலைக பேய்கள் – தோத்திர:71 2/4
மேல்

தொலைகின்ற (1)

ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே இனி –தேசீய:31 3/2
மேல்

தொலைத்த (1)

வன்மியை வேரற தொலைத்த பின் அன்றோ –தேசீய:32 1/124
மேல்

தொலைத்தல் (1)

துணித்து எனை கொன்று தொலைத்தல் உன் கடனாம் – தனி:13 1/39
மேல்

தொலைத்தாய் (1)

நாட்டை எல்லாம் தொலைத்தாய் அண்ணே நாங்கள் பொறுத்திருந்தோம் – பாஞ்சாலி:5 279/1
மேல்

தொலைத்திட (2)

துன்பப்படுத்துது மந்திரம்செய்து தொலைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 9/2
பகை யாவும் தொலைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 9/3
மேல்

தொலைத்து (1)

கடமை நினைவும் தொலைத்து இங்கு களியுற்று என்றும் வாழ்குவமே –வேதாந்த:18 1/4
மேல்

தொலைத்துவிட்டாய் (1)

பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போக தொலைத்துவிட்டாய் – பாஞ்சாலி:5 278/2
மேல்

தொலைத்துவிட்டாள் (1)

மண் ஆக்கிவிட்டாள் என் மானம் தொலைத்துவிட்டாள்
நிச்சியதாம்பூலம் நிலையா நடந்திருக்க – குயில்:9 1/125,126
மேல்

தொலைந்தது (1)

ஐயமும் திகைப்பும் தொலைந்தன ஆங்கே அச்சமும் தொலைந்தது சினமும் – தோத்திர:33 4/1
மேல்

தொலைந்தன (1)

ஐயமும் திகைப்பும் தொலைந்தன ஆங்கே அச்சமும் தொலைந்தது சினமும் – தோத்திர:33 4/1
மேல்

தொலைந்தனவில்லை (1)

தொல்லைகள் இன்னும் தொலைந்தனவில்லை
நல்குரவு ஆதி நவமாம் தொல்லைகள் – தனி:24 1/30,31
மேல்

தொலைந்திடுக (1)

சூழ்க துயர்கள் தொலைந்திடுக தொலையா இன்பம் விளைந்திடுக – தோத்திர:1 35/3
மேல்

தொலையா (1)

சூழ்க துயர்கள் தொலைந்திடுக தொலையா இன்பம் விளைந்திடுக – தோத்திர:1 35/3
மேல்

தொலையாத (1)

துதி மேவும் எங்கள் பழநாடு கொண்டு தொலையாத வண்மை அறம் நீள் – பிற்சேர்க்கை:24 4/2
மேல்

தொலையில் (1)

மேற்கே சிறு தொலையில் மேவும் ஒரு மாஞ்சோலை – குயில்:1 1/7
மேல்

தொலையின் (1)

வடமேற்றிசைக்கண் மாபெரும் தொலையின் ஓர் – தனி:24 1/2
மேல்

தொலையுது (2)

சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி சொல்லடி சக்தி மாகாளீ – பல்வகை:11 1/3,4
படிப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் – பல்வகை:11 2/2,3
மேல்

தொழில் (69)

புல் அடிமை தொழில் பேணி பண்டு போயின நாட்களுக்கு இனி மனம் நாணி –தேசீய:1 6/1
ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே புய –தேசீய:4 4/1
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் –தேசீய:5 12/2
தன்னலம் பேணி இழி தொழில் கற்போம் தாய்த்திருநாடு எனில் இனி கையை விரியோம் –தேசீய:6 3/2
ஞானம் படை தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு –தேசீய:20 10/2
திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் –தேசீய:30 2/3
தேசத்தில் எண்ணற்ற பேர்களும் கெட்டார் செய்யும் தொழில் முறை யாவரும் விட்டார் –தேசீய:36 2/1
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய் சோர்வை ஓட்டினாய் –தேசீய:38 5/2
வரும் கதி கண்டு பகை தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே –தேசீய:41 5/4
இவருடன் யானும் இணங்கியே என்றும் இது அலால் பிற தொழில் இலனாய் –தேசீய:50 11/1
பணிவதே தொழில் என கொண்டு – தோத்திர:1 8/19
நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் – தோத்திர:1 25/1
பைய தொழில் புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே – தோத்திர:1 26/4
சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறு இல்லை காண் – தோத்திர:18 4/3
சக்தி பெற்று நல்ல தொழில் செய்யும் மனம் – தோத்திர:24 21/3
சக்தி உள்ள தொழில் பல பண்ணு – தோத்திர:26 8/2
எண்ணும் காரியங்கள் எல்லாம் வெற்றி ஏற புரிந்து அருளல் வேண்டும் தொழில்
பண்ண பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் சுவை – தோத்திர:32 7/1,2
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம் – தோத்திர:41 5/2
கீழ்களின் அவமதிப்பும் தொழில் கெட்டவர் இணக்கமும் கிணற்றின் உள்ளே – தோத்திர:59 2/1
கோது அகன்ற தொழில் உடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில் – தோத்திர:62 2/3
வஞ்சமற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர் குலதெய்வம் ஆவாள் – தோத்திர:62 3/1
எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இ பெரும் தொழில் நாட்டுவம் வாரீர் – தோத்திர:62 10/4
அனைத்தையும் தேவர்க்கு ஆக்கி அற தொழில் செய்யும் மேலோர் – தோத்திர:71 3/1
வானகத்தை சென்று தீண்டுவன் இங்கு என்று மண்டி எழும் தழலை கவிவாணர்க்கு நல் அமுதை தொழில் வண்ணம் தெரிந்தவனை நல்ல – தோத்திர:74 6/1
கடமை அறிவோம் தொழில் அறியோம் கட்டு என்பதனை வெட்டு என்போம் –வேதாந்த:18 1/2
எந்த தொழில் செய்து வாழ்வனவோ –வேதாந்த:19 1/3
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர் –வேதாந்த:19 2/4
கூடி தொழில் செய் – பல்வகை:1 2/18
தொண்டர் என்றோர் வகுப்பு இல்லை தொழில் சோம்பலை போல் இழிவு இல்லை – பல்வகை:3 3/2
ஆதரவுற்று இங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம் மாண்புற செய்வோம் – பல்வகை:3 8/2
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே – பல்வகை:8 1/3
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான் – பல்வகை:11 3/2
நல்ல கீத தொழில் உணர் பாணர் நடனம் வல்ல நகை முக மாதர் – தனி:14 5/1
பெரும் சோதி மறைந்த பின் அவன் இழைத்த பெரும் தொழில் ஆற்றியே – தனி:18 3/3
மற்று உள பெரும் தொழில் வகைகளில் பலவும் – தனி:20 1/3
மாண்டன பழம் பெரு மாட்சியார் தொழில் எலாம் – தனி:20 1/8
தொழில் கணம் பலப்பல தோன்றின பின்னும் – தனி:24 1/20
வேர்ப்ப வேர்ப்ப பொருள்செய்வது ஒன்றையே மேன்மை கொண்ட தொழில் என கொண்டனன் – சுயசரிதை:1 40/2
அறிவுடைய சீடா நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமரன் ஆவாய் – சுயசரிதை:2 35/4
வேளையிலே நமது தொழில் முடித்துக்கொள்வோம் வெயில் உள்ள போதினிலே உலர்த்திக்கொள்வோம் – சுயசரிதை:2 57/4
யாண்டும் எக்காலத்தினும் அவள் இன் அருள் பாடும் நல் தொழில் புரிவேன் – கண்ணன்:2 10/3
தொழில் இலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது – கண்ணன்:6 1/101
இ தொழில் இங்கே இப்பொழுது எடுத்து – கண்ணன்:6 1/118
தொழில் பல புரிவேன் துன்பம் இங்கு என்றும் – கண்ணன்:6 1/140
வென்றாய் உலகினில் வேண்டிய தொழில் எலாம் – கண்ணன்:6 1/148
நீதி முறை வழுவாமலே எந்தநேரமும் பூமி தொழில் செய்து கலை – கண்ணன்:7 10/2
காலையும் மாலையிலும் பகை காய்ந்திடு தொழில் பல பழகி வெம் போர் – பாஞ்சாலி:1 10/3
ஆரிய வேல் மறவர் புவி ஆளும் ஒர் கடும் தொழில் இனிது உணர்ந்தோர் – பாஞ்சாலி:1 11/1
தொல் இசை காவியங்கள் அரும் தொழில் உணர் சிற்பர் செய் ஓவியங்கள் – பாஞ்சாலி:1 12/2
தவனுடை வணிகர்களும் பல தரனுடை தொழில் செயும் மா சனமும் – பாஞ்சாலி:1 14/3
சேலைகள் நூறு வன்னம் பல சித்திர தொழில் வகை சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 31/2
தந்தத்தின் பிடி வாளும் அந்த தந்தத்திலே சிற்ப தொழில் வகையும் – பாஞ்சாலி:1 37/2
தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ – பாஞ்சாலி:1 48/2
அவல மொழிகள் அளப்பது ஏன் தொழில் ஆயிரம் உண்டு அவை செய்குவீர் – பாஞ்சாலி:1 77/4
உற்ற துன்பத்தினால் பகை உண்டாம் ஓர் தொழில் பயில்வார்தமக்குள்ளே – பாஞ்சாலி:1 102/4
நல்ல தொழில் உணர்ந்தார் செயல் என்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூற – பாஞ்சாலி:1 110/2
அந்தியும் புகுந்ததுவால் பின்னர் ஐவரும் உடல் வலி தொழில் முடித்தே – பாஞ்சாலி:2 160/3
புன் தொழில் கவறதனில் இந்த புவி மிசை இணையிலை எனும் புகழான் – பாஞ்சாலி:2 164/1
சோரம் இங்கு இதில் உண்டோ தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ – பாஞ்சாலி:2 169/2
தேர்ந்தவன் வென்றிடுவான் தொழில் தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான் – பாஞ்சாலி:2 176/1
வல்லவன் வென்றிடுவான் தொழில் வன்மையில்லாதவன் தோற்றிடுவான் – பாஞ்சாலி:2 177/1
இடையின்றி தொழில் புரிதல் உலகினிடை பொருட்கு எல்லாம் இயற்கையாயின் – பாஞ்சாலி:3 206/3
சூதிலே வல்லான் சகுனி தொழில் வலியால் – பாஞ்சாலி:5 271/53
தோற்றுவித்தாய் நின்றன் தொழில் வலிமை யார் அறிவார் – குயில்:7 1/80
இவை அனைத்தும் மஹாசக்தியின் தொழில்
அவள் நம்மை கர்மயோகத்தில் நாட்டுக – வசனகவிதை:3 2/10,11
மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில்
பறக்கின்ற பூச்சி கொல்லுகின்ற புலி ஊர்கின்ற புழு – வசனகவிதை:4 15/8,9
டுபுக் பாட்டை காட்டிலும் ரசமான தொழில் வேறு இல்லை – வசனகவிதை:6 3/30
பொய் அகல தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர் – பிற்சேர்க்கை:8 14/2
கொலை தொழில் கருவிகள் கொள்ளாது என்றும் – பிற்சேர்க்கை:26 1/57
மேல்

தொழில்கள் (8)

இதம் தரும் தொழில்கள் செய்து இரும் புவிக்கு நல்கினள் –தேசீய:7 5/1
கையாள் என நின்று அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து – தோத்திர:1 31/2
கூடும் திரவியத்தின் குவைகள் திறல்கொள்ளும் கோடி வகை தொழில்கள் இவை – தோத்திர:32 9/1
பாயும் ஆயிரம் சக்திகள் ஆகியே பாரில் உள்ள தொழில்கள் இயற்றுவை – தோத்திர:34 4/3
கோல வான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர்தாமும் – தனி:19 5/2
துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ – பாஞ்சாலி:2 154/3
பொல்லா விதியால் நீவிர் அவன் போர் முன் இழைத்த பெரும் தொழில்கள்
எல்லாம் மறந்தீர் எம்மவர்காள் என்னே கொடுமை ஈங்கு இதுவே – பிற்சேர்க்கை:4 1/3,4
செல்வத்துள் பிறந்தனமா அது பெறுவான் சிறு தொழில்கள் பயில வல்லோமா – பிற்சேர்க்கை:19 1/1
மேல்

தொழில்களிலும் (1)

வீரர்தம் தோளினிலும் உடல் வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் ஒளி பரவிட வீற்றிருந்து அருள்புரிவாள் – தோத்திர:59 4/3,4
மேல்

தொழில்களும் (1)

எங்கும் எதனிலும் எப்போதும் எல்லாவித தொழில்களும் காட்டுவது சக்தி – வசனகவிதை:3 5/21
மேல்

தொழில்களை (1)

ஓம் சக்தி செய்யும் தொழில்களை எண்ணு நித்தம் – தோத்திர:26 8/1
மேல்

தொழில்செய்கின்றன (1)

அந்த உறுப்புகள் எல்லாம் நேராகவே தொழில்செய்கின்றன
எறும்பு உண்ணுகின்றது உறங்குகின்றது மணம்செய்துகொள்கின்றது குழந்தை பெறுகிறது ஓடுகிறது – வசனகவிதை:4 7/5,6
மேல்

தொழில்செய்து (1)

தவ தொழில்செய்து தரணியை காப்பாய் – வசனகவிதை:7 0/92
மேல்

தொழில்புரிந்து (1)

திருவை பணிந்து நித்தம் செம்மை தொழில்புரிந்து
வருக வருவது என்றே கிளியே மகிழ்வுற்று இருப்போமடி – தோத்திர:76 1/1,2
மேல்

தொழிலா (3)

தொண்டு ஒன்றே தொழிலா கொண்டிருந்தோரை தூண்டினாய் புகழ் வேண்டினாய் –தேசீய:38 5/1
சோரம் தொழிலா கொள்வோமோ முந்தை சூரர் பெயரை அழிப்போமோ – பல்வகை:9 10/1
கல்வியே தொழிலா கொண்டாய் கவிதையே தெய்வமாக – தனி:22 3/1
மேல்

தொழிலாம் (1)

யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம் – தோத்திர:41 5/2
மேல்

தொழிலார் (1)

வீறு உடைய வெம் தொழிலார் வேடர் குல தலைவன் – குயில்:9 1/16
மேல்

தொழிலாளி (1)

தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான் – பல்வகை:11 3/2
மேல்

தொழிலில் (4)

வித்தைக்கு இறைவா கணநாதா மேன்மை தொழிலில் பணி எனையே – தோத்திர:1 27/4
தெரியும் ஒளி விழியை நாட்டுவீர் நல்ல தீர பெரும் தொழிலில் பூட்டுவீர் – தனி:11 6/2
எவ்வாறேனும் இவனை ஓர் தொழிலில்
ஓரிடம்தன்னில் ஒரு வழி வலிய – கண்ணன்:6 1/75,76
நீதி அறிந்து இன்பம் எய்தியே ஒரு நேர்மை தொழிலில் இயங்குவார் – கண்ணன்:7 8/4
மேல்

தொழிலிலும் (2)

எவ்வகை தொழிலிலும் எண்ணம் அற்றவனாய் – கண்ணன்:6 1/66
உயிரிலும் தொழிலிலும் ஒன்றேயாகும் – வசனகவிதை:7 0/74
மேல்

தொழிலிலே (1)

பூமியை காக்கும் தொழிலிலே எந்தப்போதும் செலுத்திடும் சிந்தையும் – கண்ணன்:7 4/4
மேல்

தொழிலினை (1)

கொடுத்திடும் தொழிலினை கொள்ளுதி என்றேன் – கண்ணன்:6 1/106
மேல்

தொழிலுக்கு (1)

விதி உண்டு தொழிலுக்கு விளைவு உண்டு குறைவு இல்லை – தோத்திர:67 2/3
மேல்

தொழிலுக்கும் (1)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் வீணில் –தேசீய:31 4/1
மேல்

தொழிலுடன் (1)

செய்யும் தொழிலுடன் தொழிலே காண் சீர்பெற்றிட நீ அருள்செய்வாய் – தோத்திர:1 3/1
மேல்

தொழிலும் (2)

தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமராதிபனே சரணம் சரணம் – தோத்திர:2 6/2
பேர் அறமும் பெரும் தொழிலும் பிறங்கும் நாடு பெண்கள் எல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு – பாஞ்சாலி:1 118/1
மேல்

தொழிலுமே (1)

தோற்றமும் புறத்து தொழிலுமே காத்து மற்று –தேசீய:24 1/11
மேல்

தொழிலே (4)

ஈனமான தொழிலே உங்களுக்கு இசைவது ஆகும் போடா –தேசீய:34 9/2
செய்யும் தொழிலுடன் தொழிலே காண் சீர்பெற்றிட நீ அருள்செய்வாய் – தோத்திர:1 3/1
சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன் – தோத்திர:1 27/3
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி – தோத்திர:21 1/4
மேல்

தொழிலை (2)

சிங்கம் செய்யும் தொழிலை சிறுமுயல் செய்யவோ நீங்கள் உய்யவோ –தேசீய:38 6/2
வில்லால் விஜயன் அன்று இழைத்த விந்தை தொழிலை மறந்திலிரால் – பிற்சேர்க்கை:4 1/2
மேல்

தொழு (1)

தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா துணையே அமரர் தொழு வானவனே – தோத்திர:46 3/2
மேல்

தொழுகின்றோம் (10)

உஷையை நாங்கள் தொழுகின்றோம்
அவள் திரு – வசனகவிதை:2 3/3,4
அவளை தொழுகின்றோம்
ஒளியே வாழ்க – வசனகவிதை:2 6/17,18
வெம்மையை தொழுகின்றோம்
வெம்மை ஒளியின் தாய் ஒளியின் முன்னுருவம் – வசனகவிதை:2 8/3,4
இவை அனைத்தையும் தொழுகின்றோம்
இவற்றை காக்கின்றோம் – வசனகவிதை:2 8/21,22
மின்னலை தொழுகின்றோம்
அது நம் அறிவை ஒளியுறச்செய்க – வசனகவிதை:2 13/5,6
ப்ராணவாயுவை தொழுகின்றோம் அவன் நம்மை காத்திடுக – வசனகவிதை:4 14/4
அபாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/5
வ்யாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/6
உதாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/7
ஸமாநனை தொழுகின்றோம் அவன் நம்மை காக்க – வசனகவிதை:4 14/8
மேல்

தொழுதவுடன் (1)

கங்குலை பார்த்தவுடன் இங்கு காலையில் இரவியை தொழுதவுடன்
பொங்குவீர் அமிழ்து எனவே அந்த புதுமையிலே துயர் மறந்திருப்பேன் – தோத்திர:61 1/3,4
மேல்

தொழுதார் (1)

நல் தவ காந்தாரி முதல் நாரியர்தமை முறைப்படி தொழுதார் – பாஞ்சாலி:2 159/4
மேல்

தொழுதிடல் (2)

சுதந்திரதேவி நின்னை தொழுதிடல் மறக்கிலேனே –தேசீய:29 1/4
காலம் முற்றும் தொழுதிடல் வேண்டும் காதல் என்பதொர் கோயிலின்கண்ணே – தனி:2 5/4
மேல்

தொழுதிடும் (2)

விண்ணவர் தொழுதிடும் வீர சிங்காதனத்தே – தோத்திர:54 2/2
ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை நாடி தொழுதிடும் தன்மை போல் அவர் – பாஞ்சாலி:1 66/3
மேல்

தொழுதிடுவோம் (1)

மாலையும் தொழுதிடுவோம் நாங்கள் மகிழ்ச்சியில் ஆடிடுவோம் – பிற்சேர்க்கை:14 17/2
மேல்

தொழுதிடுவோமடா (1)

தொல்லை தவிர்ப்பவளை நித்தம் தோத்திரம் பாடி தொழுதிடுவோமடா – தோத்திர:64 9/4
மேல்

தொழுது (7)

தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் –தேசீய:11 1/3
தொழுது அடிமைசெய்வாருக்கு செல்வங்கள் உண்டு உண்மை சொல்வோர்க்கு எல்லாம் –தேசீய:52 3/2
அல்லா யெஹோவா என தொழுது இன்புறும் – தோத்திர:1 8/6
சந்நிதியிலே தொழுது நில்லு – தோத்திர:26 1/4
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா – பல்வகை:2 12/1
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையை தொழுது நிற்பேன் – தனி:17 1/4
மேலை போம் பரிதியினை தொழுது கண்டான் மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்ல சாய்ந்து – பாஞ்சாலி:1 147/3
மேல்

தொழுதேன் (4)

உய்யக்கொண்டு அருள வேண்டும் அடி உன்னை கோடி முறை தொழுதேன் இனி – தோத்திர:32 10/3
சுகத்தினை நான் வேண்டி தொழுதேன் எப்போதும் – தோத்திர:66 5/1
நம்பி நின் அடி தொழுதேன் என்னை நாண் அழியாது இங்கு காத்தருள்வாய் – பாஞ்சாலி:5 297/4
காலை பொழுதினிலே கண் விழித்து நான் தொழுதேன்
நாலு புறத்தும் உயிர் நாதங்கள் ஓங்கிடவும் – குயில்:6 1/43,44
மேல்

தொழும் (3)

எனை ஆளும் மா தேவி வீரர் தேவி இமையவரும் தொழும் தேவி எல்லை தேவி – தோத்திர:27 2/3
சுரர் தமனியன் மால் தொழும் கால் கிரீடத்து – பிற்சேர்க்கை:12 1/3
தொழும் தாய் அழைப்பிற்கு இணங்கி வந்தோம் யாம் – பிற்சேர்க்கை:26 1/48
மேல்

தொழும்ப (1)

துன்னிய துகில் கூட்டம் கண்டு தொழும்ப துச்சாதனன் வீழ்ந்துவிட்டான் – பாஞ்சாலி:5 301/4
மேல்

தொழும்பர்காள் (1)

துன்பமே அச்சமே இருளே தொழும்பர்காள்
பெயர் பல காட்டும் ஒரு கொடும் பேயே – வசனகவிதை:7 0/40,41
மேல்

தொழும்பராய் (1)

சூரர்தம் மக்களை தொழும்பராய் புரிந்தனர் –தேசீய:32 1/58
மேல்

தொழும்பாய் (1)

மானம் என்று இலாது மாற்றலர் தொழும்பாய்
ஈனமுற்று இருக்க எவன்-கொலோ விரும்புவன் –தேசீய:32 1/67,68
மேல்

தொழும்புகண்டாய் (1)

சொல்லரிய பிழை செய்தது அத்தனையும் மறந்து அவரை தொழும்புகண்டாய் – பிற்சேர்க்கை:7 2/4
மேல்

தொழும்புகள் (2)

சேனை நடத்துவாயோ தொழும்புகள் செய்திட விரும்புவாயோ –தேசீய:34 9/1
சுதந்திரம் என்கிற பேச்சு எங்கள் தொழும்புகள் எல்லாம் வீணாய் போச்சு இது –தேசீய:35 2/1
மேல்

தொழும்பை (1)

புலையர்தம் தொழும்பை பொறுக்கிலார் இரு-மின் –தேசீய:32 1/97
மேல்

தொழுமாடும் (1)

சொற்றை குரங்கும் தொழுமாடும் வந்து எனக்கு – குயில்:7 1/117
மேல்

தொழுவதென்னே (1)

ஏற்றி நின்னை தொழுவதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/1
மேல்

தொழுவர் (1)

சொல்லுவர் உண்மை தெளிந்தார் இதை தூவெளி என்று தொழுவர் பெரியோர் – பிற்சேர்க்கை:8 19/2
மேல்

தொழுவாள் (1)

ஒற்றை திகிரி கொண்டு ஏழுலகு ஆளும் ஒருவனையும் தொழுவாள் –தேசீய:9 7/2
மேல்

தொழுவிலும் (1)

தோரண பந்தரிலும் பசு தொழுவிலும் சுடர் மணி மாடத்திலும் – தோத்திர:59 4/2
மேல்

தொழுவினில் (1)

மாட்டை அடித்து வசக்கி தொழுவினில் மாட்டும் வழக்கத்தை கொண்டுவந்தே – பல்வகை:6 3/1
மேல்

தொழுவேன் (1)

தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா துணையே அமரர் தொழு வானவனே – தோத்திர:46 3/2
மேல்

தொளைத்திடலாயினேன் (1)

சொல்லி நான் கண்ணனை தொளைத்திடலாயினேன்
தேவநிலையிலே சேர்த்திடாவிடினும் – கண்ணன்:6 1/56,57
மேல்

தொளைத்து (1)

தூற்றல் கதவு சாளரம் எல்லாம் தொளைத்து அடிக்குது பள்ளியிலே – தனி:5 1/2
மேல்

தொளைப்பாய் (1)

தன்னை அறியாய் சகத்து எலாம் தொளைப்பாய்
தன் பின் நிற்கும் தனி பரம்பொருளை –வேதாந்த:22 1/26,27
மேல்

தொளையிலே (2)

குழலிலே இசை பிறந்ததா தொளையிலே பிறந்ததா – வசனகவிதை:3 7/2
அவள் உள்ளத்திலே பாடுகிறாள் அது குழலின் தொளையிலே கேட்கிறது – வசனகவிதை:3 7/8
மேல்

தொன் (1)

சோலை பசுங்கிளியே தொன் மறைகள் நான்கு உடையாள் –தேசீய:13 5/1
மேல்

தொன்மைக்கு (1)

தொன்மைக்கு அஞ்சேல் – பல்வகை:1 2/51
மேல்

தொன்று (1)

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ் கலைவாணர்களும் இவள் –தேசீய:9 1/1
மேல்

தொனி (2)

சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே – பாஞ்சாலி:1 24/3
இ பிறவிக்குள் இவை ஒத்த வேள்வி விருந்துகள் புவி எங்கணும் நான் கண்டதில்லை என தொனி பட்டதும் – பாஞ்சாலி:1 46/2
மேல்

தொனியுடை (1)

விண்ணை பிளக்கும் தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார் – பாஞ்சாலி:1 44/4
மேல்