து – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்கங்கள் 1
துக்கடாக்கள் 1
துக்கம் 2
துக்கமும் 1
துகள் 3
துகளாய் 1
துகில் 3
துகிலினை 3
துங்க 1
துங்கம் 3
துங்கமுற்ற 1
துங்கமுறு 2
துஷ்டர் 1
துஷ்டனும் 1
துச்சப்படு 1
துச்சம் 1
துச்சமாக 1
துச்சமென்று 2
துச்சமென 1
துச்சாதனன் 7
துச்சாதனன்தன்னையும் 1
துச்சாதனனும் 1
துஞ்ச 2
துஞ்சி 1
துஞ்சிடோம் 1
துஞ்சுது 1
துஞ்சும் 1
துஞ்சுமட்டும் 1
துஞ்சோம் 1
துட்ட 1
துட்டன் 1
துடிக்க 1
துடிக்கிறது 1
துடிக்கிறாள் 1
துடிக்கின்றான் 1
துடிக்குதடீ 1
துடிக்கும் 1
துடித்த 1
துடித்ததடீ 1
துடித்தான் 1
துடித்திட 1
துடித்து 2
துடித்துக்கொண்டிருக்கிறது 1
துடித்தே 1
துடிதுடித்தாள் 1
துடிதுடித்து 1
துடிப்பதுமே 1
துடைத்திடுவாய் 1
துடைத்தீரோ 1
துடைத்து 3
துடைத்துக்கொள்வோம் 1
துடைப்பது 2
துடைப்பாய் 3
துடைப்பீர் 1
துடைப்பேன் 2
துண்ட 1
துண்டாக 1
துண்டு 1
துண்டுதுண்டாக்கினும் 1
துண்ணென 1
துணி 6
துணிக 1
துணிகள் 1
துணிகுவதில்லை 1
துணித்து 1
துணிந்த 2
துணிந்தவர் 1
துணிந்தனம் 1
துணிந்தனை 1
துணிந்து 4
துணிந்தேன் 2
துணிமணிகள் 1
துணியவில்லை 1
துணியாலே 1
துணியான் 1
துணியில் 1
துணியும் 1
துணியை 2
துணிவாக 1
துணிவார் 1
துணிவின்றி 1
துணிவினால் 1
துணிவினிலும் 1
துணிவினை 3
துணிவு 4
துணிவுகளும் 1
துணிவுடை 1
துணிவுடைய 1
துணிவுடையான் 1
துணிவும் 1
துணிவுள்ளோர்க்கே 1
துணிவுற்ற 1
துணிவுற்றே 1
துணிவுறுவது 1
துணிவே 2
துணிவோன் 1
துணுக்குற 2
துணை 26
துணைக்கொண்டு 1
துணைசெய்ய 1
துணைபுகுந்தோம் 1
துணைபுரிதல் 1
துணைபுரியும் 1
துணைபுரிவர் 1
துணைபுரிவாயேல் 1
துணைபுரிவாள் 1
துணையடா 1
துணையாக்கி 1
துணையாகவே 1
துணையாம் 1
துணையாய் 2
துணையும் 1
துணையே 3
துணையை 1
துணையொடும் 1
துணையோடு 1
துணைவர் 2
துணைவர்காள் 1
துணைவரா 1
துணைவரே 2
துணைவனை 1
துணைவீர் 1
துதி 3
துதிக்கிறார் 1
துதிக்கிறேன் 1
துதிக்கின்றோமே 1
துதிகள் 1
துதிசெய்தே 1
துதித்தனர் 1
துதிப்போம் 2
துப்பாக்கி 1
துப்பான 1
துப்பு 1
தும்பம்தான் 1
தும்பியடி 1
துய்க்கும் 1
துய்த்தல் 1
துய்த்தனை 1
துய்த்திடல் 1
துய்த்திடும் 1
துய்த்துத்துய்த்து 1
துய்ப்பதற்கு 1
துய்ப்பர் 2
துய்ப்பவே 1
துய்ப்பன 1
துய்ப்பேன் 1
துய்மன் 1
துய்ய 6
துயர் 43
துயர்க்கே 1
துயர்கள் 4
துயர்களில் 1
துயர்களின் 1
துயர்களை 1
துயர்கொடுக்கும் 1
துயர்கொண்டே 1
துயர்கொண்டோம் 1
துயர்செய்யும் 1
துயர்ப்படுத்த 1
துயர்ப்படுவார் 1
துயரங்கள் 1
துயரத்தை 1
துயரம் 5
துயரமும் 1
துயரில் 5
துயரிலே 1
துயரினை 1
துயரும் 4
துயருறல் 1
துயருறுத்தல் 1
துயில் 3
துயில்கின்றனை 1
துயில்கொளும் 1
துயில்பவர் 1
துயில்புரிந்தார் 1
துயில்வாயோ 1
துயிலாது 1
துயிலிடை 1
துயிலில் 2
துயிலினிலே 1
துயிலுதியேல் 1
துயிலும் 1
துயிலெழுந்தார் 1
துயிலெழுந்து 1
துயிலே 1
துர்க்கா 1
துர்க்கை 1
துரகத்து 1
துரத்தடா 1
துரத்திக்கொண்டு 1
துரத்துண்டும் 1
துரத்துவது 1
துரந்திடுவீர் 1
துரிதத்திலும் 1
துரியோதன 2
துரியோதனன் 8
துரியோதனன்தன்னை 3
துரியோதனனும் 1
துரியோதனா 1
துருக்கம் 1
துருக்கர் 3
துருக்கி 1
துருபதன் 4
துருபதனார் 1
துரும்பில் 1
துரும்பு 2
துருவன் 1
துரை 4
துரையே 2
துரோகிகள் 1
துரோணன் 2
துரோணனும் 1
துல்யே 1
துலங்கவில்லை 1
துலங்கு 1
துலங்குக 1
துலங்குவாயே 1
துவஜம் 1
துவசம் 1
துவளாது 1
துவளும் 1
துழாய் 1
துழாயனும் 1
துள்ள 1
துள்ளி 3
துள்ளுவார் 1
துளக்கமற 1
துளக்கமுற்ற 1
துளக்கற 1
துளங்கிலா 1
துளி 3
துளிகூட 1
துளியும் 1
துளுவர் 1
துறக்கலீர் 1
துறந்த 1
துறந்தார் 1
துறந்தான் 1
துறந்திருந்த 1
துறந்தீர் 2
துறந்து 4
துறப்பேன் 1
துறவி 1
துறவியை 1
துறை 1
துன்ப 6
துன்பங்கள் 4
துன்பங்களாம் 1
துன்பத்தில் 3
துன்பத்தினால் 1
துன்பத்தினை 1
துன்பத்து 1
துன்பத்தை 2
துன்பத்தொடு 1
துன்பத்தோடு 1
துன்பப்பட்டு 1
துன்பப்படாது 1
துன்பப்படுத்துது 1
துன்பம் 49
துன்பம்தன்னை 1
துன்பமதிலும் 1
துன்பமற்றார் 1
துன்பமும் 6
துன்பமுற 1
துன்பமுறும் 2
துன்பமே 4
துன்பிழைத்தல் 1
துன்பு 4
துன்புடைத்தன்று 1
துன்புற்று 1
துன்புறுத்திக்கொள்வதை 1
துன்றியே 1
துன்று 1
துன்றும் 1
துன்ன 1
துன்னற்கு 1
துன்னிட 1
துன்னிய 2
துன்னும் 1

துக்கங்கள் (1)

துக்கங்கள் அழித்திடுவாய் கண்ணா தொண்டர் கண்ணீர்களை துடைத்திடுவாய் – பாஞ்சாலி:5 294/3
மேல்

துக்கடாக்கள் (1)

உடனே பாட்டு நேர்த்தியான துக்கடாக்கள் ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு – வசனகவிதை:4 1/47
மேல்

துக்கம் (2)

துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர் சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள் – தோத்திர:49 2/2
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
மேல்

துக்கமும் (1)

ஸுகமும் துக்கமும் ஸமானமா – வசனகவிதை:6 2/29
மேல்

துகள் (3)

அங்கு அவர் மாய அவர் உடல் பூம் துகள் ஆர்ந்ததும் இ நாடே இதை –தேசீய:3 3/4
செறுவது நாடி வருபவரை துகள் செய்து கிடத்துவள் தாய் –தேசீய:9 5/2
கண்ணனை ஏது என கொண்டனை அவன் காலில் சிறு துகள் ஒப்பவர் நிலத்து – பாஞ்சாலி:1 80/3
மேல்

துகளாய் (1)

சொந்த மா மனிதருளே போரிட்டும் பாழாகி துகளாய் வீழ்ந்தேம் – பிற்சேர்க்கை:7 5/3
மேல்

துகில் (3)

பட்டு துகில் எனலாமோ அதில் பாய்ந்து சுழற்றும் பெரும் புயல் காற்று –தேசீய:14 2/1
பன்னி பல உரைகள் சொல்லுவது என்னே துகில் பறித்தவன் கை பறிக்க பயம் கொள்வனோ – கண்ணன்:19 2/3
துன்னிய துகில் கூட்டம் கண்டு தொழும்ப துச்சாதனன் வீழ்ந்துவிட்டான் – பாஞ்சாலி:5 301/4
மேல்

துகிலினை (3)

வன்ன முகத்திரையை களைந்திடு என்றேன் நின்றன் மதம் கண்டு துகிலினை வலிது உரிந்தேன் – கண்ணன்:19 1/3
துச்சாதனன் எழுந்தே அன்னை துகிலினை மன்றிடை உரிதலுற்றான் – பாஞ்சாலி:5 292/1
பிச்சேறியவனை போல் அந்த பேயனும் துகிலினை உரிகையிலே – பாஞ்சாலி:5 292/3
மேல்

துங்க (1)

துங்க மணி மின் போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்து என்னை பார் என்று சொன்னாள் – தனி:9 1/3
மேல்

துங்கம் (3)

துங்கம் உயர்ந்து வளர்கென கோயில்கள் சூழ்ந்ததும் இ நாடே பின்னர் –தேசீய:3 3/3
துங்கம் ஆர் செயலால் போதனையாலும் இயன்றிடும் துணை இவர்க்கு அளிப்பேன் –தேசீய:50 13/4
எங்கள் சிவனார் எழில் பதமே துங்கம் மிகும் – பிற்சேர்க்கை:12 5/2
மேல்

துங்கமுற்ற (1)

துங்கமுற்ற துணை முகிலே மலர் – தோத்திர:45 3/3
மேல்

துங்கமுறு (2)

துங்கமுறு பக்தர் பலர் புவி மீது உள்ளார் தோழரே எந்நாளும் எனக்கு பார் மேல் – சுயசரிதை:2 41/2
துங்கமுறு கல்வி என சூழும் பல கணத்தாள் – பாஞ்சாலி:4 252/26
மேல்

துஷ்டர் (1)

பல திசையும் துஷ்டர் கூட்டங்கள் ஆச்சு பையல்கள் நெஞ்சில் பயம் என்பதே போச்சு –தேசீய:36 1/2
மேல்

துஷ்டனும் (1)

சாதுவும் துஷ்டனும் ஸமானமா – வசனகவிதை:6 2/23
மேல்

துச்சப்படு (1)

துச்சப்படு நெஞ்சிலே நின்றன் சோதி வளருதடீ – தனி:15 1/4
மேல்

துச்சம் (1)

துச்சம் இங்கு இவர் படைகள் பல தொல்லைகள் கவலைகள் சாவுகளாம் – தோத்திர:11 5/2
மேல்

துச்சமாக (1)

துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதினும் –வேதாந்த:1 1/4
மேல்

துச்சமென்று (2)

துச்சமென்று எண்ணி துயர் இலாது இங்கு – தோத்திர:1 4/15
துச்சமென்று சுகங்களை கொள்ள சொல்லும் மூடர் சொல் கேட்பதும் இல்லை – தனி:14 9/4
மேல்

துச்சமென (1)

துச்சமென பிறர் பொருளை கருதலாலே சூழ்ந்தது எலாம் கடவுள் என சுருதி சொல்லும் – சுயசரிதை:2 7/3
மேல்

துச்சாதனன் (7)

இவ் உரை கேட்ட துச்சாதனன் அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன் இவன் – பாஞ்சாலி:5 264/1
துச்சாதனன் இதனை சொல்லினான் பாஞ்சாலி – பாஞ்சாலி:5 271/1
தாதியடி தாதி என துச்சாதனன் அவளை – பாஞ்சாலி:5 271/47
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மை குழல் பற்றி இழுக்கிறான் இந்த – பாஞ்சாலி:5 272/2
துச்சாதனன் எழுந்தே அன்னை துகிலினை மன்றிடை உரிதலுற்றான் – பாஞ்சாலி:5 292/1
துன்னிய துகில் கூட்டம் கண்டு தொழும்ப துச்சாதனன் வீழ்ந்துவிட்டான் – பாஞ்சாலி:5 301/4
பாவி துச்சாதனன் செந்நீர் அந்த பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம் – பாஞ்சாலி:5 307/2
மேல்

துச்சாதனன்தன்னையும் (1)

தொடையை பிளந்து உயிர் மாய்ப்பேன் தம்பி சூர துச்சாதனன்தன்னையும் ஆங்கே – பாஞ்சாலி:5 305/1
மேல்

துச்சாதனனும் (1)

பாவி துச்சாதனனும் பாங்கு இழந்து கூறினான் – பாஞ்சாலி:5 271/92
மேல்

துஞ்ச (2)

துஞ்ச தம் கண்ணால் கண்டும் கிளியே –தேசீய:40 17/2
துஞ்ச நேரினும் தூய சொல் அன்றி சொல் மிலேச்சரை போல் என்றும் சொல்லார் – பாஞ்சாலி:2 172/3
மேல்

துஞ்சி (1)

துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களை தீர்க்க ஓர் வழி இலையே –தேசீய:15 6/4
மேல்

துஞ்சிடோம் (1)

சொந்த நாட்டில் பரர்க்கு அடிமைசெய்தே துஞ்சிடோம் இனி அஞ்சிடோம் –தேசீய:39 1/1
மேல்

துஞ்சுது (1)

துஞ்சுது முகட்டில் என்பார் மிக துயர்ப்படுவார் எண்ணி பயப்படுவார் –தேசீய:15 1/4
மேல்

துஞ்சும் (1)

துஞ்சும் பொழுதினும் தாயின் பத தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும் –தேசீய:14 9/2
மேல்

துஞ்சுமட்டும் (1)

துஞ்சுமட்டும் இ பாரதநாட்டிற்கே தொண்டு இழைக்க துணிந்தவர் யாவரும் –தேசீய:46 2/3
மேல்

துஞ்சோம் (1)

இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழி தொழில் கற்போம் தாய்த்திருநாடு எனில் இனி கையை விரியோம் –தேசீய:6 3/1,2
மேல்

துட்ட (1)

சூதும் பொய்யும் உருவென கொண்ட துட்ட மாமனை தான் சரண் எய்தி – பாஞ்சாலி:1 40/3
மேல்

துட்டன் (1)

தோல் விலைக்கு பசுவினை கொல்லும் துட்டன் இவ் உரை கூறுதல் கேட்டே – பாஞ்சாலி:2 171/1
மேல்

துடிக்க (1)

பொறி பறக்க விழிகள் இரண்டும் புருவம் ஆங்கு துடிக்க சினத்தின் – பாஞ்சாலி:3 207/3
மேல்

துடிக்கிறது (1)

உன்னால் என் மனம் தழலில் பட்ட புழுவை போல் இடையறாது துடிக்கிறது – வசனகவிதை:6 4/6
மேல்

துடிக்கிறாள் (1)

ஆடை குலைவுற்று நிற்கிறாள் அவள் ஆவென்று அழுது துடிக்கிறாள் வெறும் – பாஞ்சாலி:5 272/1
மேல்

துடிக்கின்றான் (1)

ஓலமிடுகின்றான் சுழலுகின்றான் துடிக்கின்றான்
ஓடுகின்றான் எழுகின்றான் நிலையின்றி கலங்குகின்றான் – வசனகவிதை:2 9/12,13
மேல்

துடிக்குதடீ (1)

வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னை போலவே பாவை தெரியுதடீ – கண்ணன்:20 1/3,4
மேல்

துடிக்கும் (1)

ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்
தேவரை ஒத்தனர் திடுக்கென பீடத்து –தேசீய:42 1/26,27
மேல்

துடித்த (1)

சோகம் ததும்பி துடித்த குரலுடனே – பாஞ்சாலி:4 252/88
மேல்

துடித்ததடீ (1)

நீண்ட பொழுதாக எனது நெஞ்சம் துடித்ததடீ
கூண்டுக்கிளியினை போல் தனிமைகொண்டு மிகவும் நொந்தேன் – கண்ணன்:10 1/2,3
மேல்

துடித்தான் (1)

கங்கைமைந்தன் அங்கே நெஞ்சம் கனலுற துடித்தான்
பொங்கு வெம் சினத்தால் அரசர் புகை உயிர்த்து இருந்தார் – பாஞ்சாலி:3 228/1,2
மேல்

துடித்திட (1)

கண் சிவந்து இதழ்கள் துடித்திட கனன்று நான் – கண்ணன்:6 1/123
மேல்

துடித்து (2)

உள்ளம் துடித்து சுயோதனன் சினம் ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான் அட – பாஞ்சாலி:4 253/1
சுற்றுமுற்றும் பார்த்து துடித்து வருகையிலே – குயில்:5 1/2
மேல்

துடித்துக்கொண்டிருக்கிறது (1)

உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் பட்ட புழுவை போலே துடித்துக்கொண்டிருக்கிறது – வசனகவிதை:6 4/3
மேல்

துடித்தே (1)

பூமகட்கு மனம் துடித்தே இவள் புன்மை போக்குவல் என்ற விரதமே –தேசீய:46 1/4
மேல்

துடிதுடித்தாள் (1)

அம்பு பட்ட மான் போல் அழுது துடிதுடித்தாள்
வம்பு மலர் கூந்தல் மண் மேல் புரண்டுவிழ – பாஞ்சாலி:5 271/89,90
மேல்

துடிதுடித்து (1)

பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களை தீர்க்க ஓர் வழி இலையே –தேசீய:15 6/3,4
மேல்

துடிப்பதுமே (1)

பொய்க்கோ தீராது புலம்பி துடிப்பதுமே –தேசீய:27 12/2
மேல்

துடைத்திடுவாய் (1)

துக்கங்கள் அழித்திடுவாய் கண்ணா தொண்டர் கண்ணீர்களை துடைத்திடுவாய்
தக்கவர்தமை காப்பாய் அந்த சதுர்முகவேதனை படைத்துவிட்டாய் – பாஞ்சாலி:5 294/3,4
மேல்

துடைத்தீரோ (1)

சோர்ந்து வீழ்தல் போச்சோ உங்கள் சோம்பரை துடைத்தீரோ –தேசீய:34 6/2
மேல்

துடைத்து (3)

நேத்திரம் கெட்டவன் காலன்தன் முன் நேர்ந்தது அனைத்தும் துடைத்து முடிப்பான் –தேசீய:21 4/2
விழிகளை துடைத்து மீளவும் நோக்கினர் –தேசீய:42 1/95
அவன் வரும் வழியை நன்றாக துடைத்து நல்ல நீர் தெளித்துவைத்திடுவோம் – வசனகவிதை:4 8/20
மேல்

துடைத்துக்கொள்வோம் (1)

மாற்றான அகந்தையினை துடைத்துக்கொள்வோம் மலமான மறதியினை மடித்துக்கொள்வோம் – சுயசரிதை:2 58/2
மேல்

துடைப்பது (2)

ஏட்டை துடைப்பது கையாலே மனவீட்டை துடைப்பது மெய்யாலே –வேதாந்த:16 2/1
ஏட்டை துடைப்பது கையாலே மனவீட்டை துடைப்பது மெய்யாலே –வேதாந்த:16 2/1
மேல்

துடைப்பாய் (3)

மாற்றுவாய் துடைப்பாய் வளர்ப்பாய் காப்பாய் – தோத்திர:10 1/2
துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி – தோத்திர:10 1/19
கண்ணில் நீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய் கவினுறும் பரதப்பெரும்தேவியே – பிற்சேர்க்கை:2 3/1
மேல்

துடைப்பீர் (1)

பிரிவுகள் துடைப்பீர் பிரிதலே சாதல் –தேசீய:42 1/183
மேல்

துடைப்பேன் (2)

எவ்வகையினும் துடைப்பேன் இன்றேல் என் உயிர் துடைப்பேன் என்ன போந்து –தேசீய:43 2/2
எவ்வகையினும் துடைப்பேன் இன்றேல் என் உயிர் துடைப்பேன் என்ன போந்து –தேசீய:43 2/2
மேல்

துண்ட (1)

சோர்ந்தே படுத்திருக்கலாமோ நல்ல துண்ட கறி சமைத்து தின்போம் சுவை – கண்ணன்:12 7/1
மேல்

துண்டாக (1)

இந்திரசித்தன் இரண்டு துண்டாக எடுத்த வில் யாருடை வில் எங்கள் –தேசீய:8 2/1
மேல்

துண்டு (1)

மனிதர்களை போலவே துண்டு கயிறுகளுக்கும் பெயர்வைக்கலாம் – வசனகவிதை:4 1/25
மேல்

துண்டுதுண்டாக்கினும் (1)

சதையை துண்டுதுண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ ஜீவன் ஓயுமோ –தேசீய:39 7/1
மேல்

துண்ணென (1)

துண்ணென வெம் சினம் எய்தியே அட சூதில் அரசு இழந்து ஏகினும் – பாஞ்சாலி:3 231/4
மேல்

துணி (6)

சீமை துணி என்றால் உள்ளம் கொதிக்கிறார் சீர் இல்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார் –தேசீய:36 4/1
துணி வெளுக்க மண் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/1
வல்லி இடையினையும் மார்பு இரண்டையும் துணி மறைத்ததனால் அழகு மறைந்ததில்லை – கண்ணன்:18 1/3
கண்ணபிரான் அருளால் தம்பி கழற்றிட கழற்றிட துணி புதிதாய் – பாஞ்சாலி:5 300/2
சோதி என நெஞ்சே துணி – பிற்சேர்க்கை:12 5/4
துணி நிலவு ஆர் செஞ்சடையன் தோள் இளசை ஊரன் – பிற்சேர்க்கை:12 6/1
மேல்

துணிக (1)

சூழும் எனது அதிர்ச்சிக்கு அஞ்சேல் துணிக நீ – பிற்சேர்க்கை:25 7/1
மேல்

துணிகள் (1)

யந்திர சாலை என்பார் எங்கள் துணிகள் என்பார் –தேசீய:40 5/1
மேல்

துணிகுவதில்லை (1)

நாவு துணிகுவதில்லை உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே – கண்ணன்:3 3/1
மேல்

துணித்து (1)

துணித்து எனை கொன்று தொலைத்தல் உன் கடனாம் – தனி:13 1/39
மேல்

துணிந்த (2)

சிந்தை துணிந்த தெலுங்கர் தாயின் சேவடிக்கே பணிசெய்திடு துளுவர் –தேசீய:14 6/2
துன்பமுறும் உயிர்க்கு எல்லாம் தாயை போலே சுரக்கும் அருள் உடைய பிரான் துணிந்த யோகி – சுயசரிதை:2 38/2
மேல்

துணிந்தவர் (1)

துஞ்சுமட்டும் இ பாரதநாட்டிற்கே தொண்டு இழைக்க துணிந்தவர் யாவரும் –தேசீய:46 2/3
மேல்

துணிந்தனம் (1)

தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம் – தோத்திர:29 3/2
மேல்

துணிந்தனை (1)

பின்னியே கிடக்கும் அரசியலதனில் பிணைத்திட துணிந்தனை பெருமான் –தேசீய:41 4/4
மேல்

துணிந்து (4)

எண்ணிலர் உளர் என துணிந்து இன்பு எய்தினன் –தேசீய:42 1/89
செய்ய துணிந்து நிற்பேனே அடி எனது – தோத்திர:56 1/12
கேட்டிலும் துணிந்து நில் – பல்வகை:1 2/20
செய்வது துணிந்து செய் – பல்வகை:1 2/31
மேல்

துணிந்தேன் (2)

பேசா பொருளை பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன் – தோத்திர:1 32/1,2
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்
மண் மீது உள்ள மக்கள் பறவைகள் – தோத்திர:1 32/2,3
மேல்

துணிமணிகள் (1)

சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன் – கண்ணன்:4 1/17
மேல்

துணியவில்லை (1)

சொல்லவுமே நாவு துணியவில்லை தோற்றிட்டார் – பாஞ்சாலி:4 252/95
மேல்

துணியாலே (1)

சின்ன கரிய துணியாலே எங்கள் தேகம் எல்லாம் மூடி நரி போலே – பல்வகை:9 3/2
மேல்

துணியான் (1)

செய் வினை அறியான் தெய்வமும் துணியான்
ஐய வலையில் அகப்படலாயினன் – வசனகவிதை:7 0/80,81
மேல்

துணியில் (1)

சாக துணியில் சமுத்திரம் எம்மட்டு மாயையே இந்த –வேதாந்த:8 4/1
மேல்

துணியும் (1)

துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எள்துணை பயன் கண்டிலார் – சுயசரிதை:1 23/4
மேல்

துணியை (2)

மார்பிலே துணியை தாங்கும் வழக்கம் கீழடியார்க்கு இல்லை – பாஞ்சாலி:5 290/1
தெவ்வர் கண்டு அஞ்சும் மார்பை திறந்தனர் துணியை போட்டார் – பாஞ்சாலி:5 291/2
மேல்

துணிவாக (1)

அஃது அறிவிலே துணிவாக நிற்பது – வசனகவிதை:4 7/11
மேல்

துணிவார் (1)

நம் மக்கள் பெண்டிரை கொல்ல துணிவார்
போர்க்கோலம் பூணுவீர் வகுப்பீர் அணிகளை – பிற்சேர்க்கை:27 1/8,9
மேல்

துணிவின்றி (1)

கொல்ல துணிவின்றி நம்மையும் அ நிலை கூட்டிவைத்தார் பழி கூட்டிவிட்டார் – பல்வகை:6 4/2
மேல்

துணிவினால் (1)

துணிவினால் வீழ்ந்துவிட்டாய் தொகையிலா படைகளோடும் –தேசீய:51 5/1
மேல்

துணிவினிலும் (1)

முன்னிய துணிவினிலும் மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளை – தோத்திர:59 5/3
மேல்

துணிவினை (3)

இன்ன மெய்ஞ்ஞான துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம் –தேசீய:41 4/3
சோதனை வழியினும் துணிவினை கண்டேன் –தேசீய:42 1/114
சித்த துணிவினை மானுடர் கேள்வனை தீமை அழிப்பவனை நன்மை சேர்த்து கொடுப்பவனை பல சீர்களுடையவனை புவி – தோத்திர:74 2/1
மேல்

துணிவு (4)

வாத தருக்கம் எனும் செவி வாய்ந்த நல் துணிவு எனும் தோடு அணிந்தாள் – பாஞ்சாலி:1 4/3
துதிசெய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவு எலாம் – பாஞ்சாலி:1 49/4
சொல்லுக வருவது உண்டேல் மன துணிவு இலையேல் அதும் சொல்லுக என்றான் – பாஞ்சாலி:2 177/4
உங்களுடைய ஸர்வ நாராயண சித்தாந்தத்தின் துணிவு யாது – வசனகவிதை:6 2/16
மேல்

துணிவுகளும் (1)

எம் உயிர் ஆசைகளும் எங்கள் இசைகளும் செயல்களும் துணிவுகளும்
செம்மையுற்றிட அருள்வாய் நின்றன் சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம் – தோத்திர:11 8/1,2
மேல்

துணிவுடை (1)

எவன் உளன் எனலும் இன்னும் ஓர் துணிவுடை
வீரன் முன் நின்று விருப்பினை உணர்த்தினன் –தேசீய:42 1/71,72
மேல்

துணிவுடைய (1)

மிக தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீர பிரான் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 43/2
மேல்

துணிவுடையான் (1)

துரியோதன பெயரான் நெஞ்ச துணிவுடையான் முடி பணிவறியான் – பாஞ்சாலி:1 16/1
மேல்

துணிவும் (1)

இளமையும் துணிவும் இசைந்து நம் அன்னை –தேசீய:42 1/132
மேல்

துணிவுள்ளோர்க்கே (1)

துளக்கற ஓங்கி நிற்பர் துயர் உண்டோ துணிவுள்ளோர்க்கே –தேசீய:51 9/4
மேல்

துணிவுற்ற (1)

துணிவுற்ற குல சக்தி சரணத்தில் முடிதொட்டு – தோத்திர:67 3/4
மேல்

துணிவுற்றே (1)

கடமை செய்வீர் நம் தேசத்து வீர காரிகை கணத்தீர் துணிவுற்றே – பல்வகை:7 3/4
மேல்

துணிவுறுவது (1)

சோற்றை புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே –வேதாந்த:16 3/2
மேல்

துணிவே (2)

சுருதி பொருளே வருக துணிவே கனலே வருக – தோத்திர:2 3/1
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி சொல்லில் விளங்கும் சுடரே சக்தி – தோத்திர:21 2/1
மேல்

துணிவோன் (1)

காளியை தாகம் கழித்திட துணிவோன்
எவன் உளன் எனலும் இன்னும் ஓர் துணிவுடை –தேசீய:42 1/70,71
மேல்

துணுக்குற (2)

எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள் –தேசீய:32 1/7
கொள்ளைகொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானுகோபன் தலை பத்து கோடி துணுக்குற கோபித்தாய் – தோத்திர:3 2/3
மேல்

துணை (26)

துணை நினை வேண்டும் நாட்டினர்க்கு எல்லாம் துயர் கெட விடுதலை அருளி –தேசீய:12 10/3
கோடிகோடி புய துணை கொற்றம் ஆர் –தேசீய:19 3/2
வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ –தேசீய:28 1/4
இன் அருள் நமக்கு ஓர் இரும் துணை ஆகும் –தேசீய:32 1/109
துங்கம் ஆர் செயலால் போதனையாலும் இயன்றிடும் துணை இவர்க்கு அளிப்பேன் –தேசீய:50 13/4
தொண்டருக்கு உண்டு துணை – தோத்திர:1 17/4
உடைமை வேண்டேன் உன் துணை வேண்டினேன் – தோத்திர:1 20/16
அவளே துணை என்று அனவரதம் நெஞ்சம் – தோத்திர:17 1/3
ஓம் சக்தி துணை என்று நம்பி வாழ்த்து சிவ – தோத்திர:26 10/1
மனை வாழ்வு பொருள் எல்லாம் வகுக்கும் தேவி மலரடியே துணை என்று வாழ்த்தாய் நெஞ்சே – தோத்திர:27 2/4
தொல்லை தரும் அகப்பேயை தொலைக்க வேண்டும் துணை என்று நின் அருளை தொடர செய்தே – தோத்திர:27 4/3
துய்ய வெண்ணிறத்தாள்தனை கரியவளை துணை என தொடர்ந்து கொண்டே – தோத்திர:33 4/4
துங்கமுற்ற துணை முகிலே மலர் – தோத்திர:45 3/3
எண்ணிடை கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு – தோத்திர:49 1/4
கந்த மலர்த்தாள் துணை காதல் மகவு வளர்ந்திட வேண்டும் என் –வேதாந்த:15 7/3
தெய்வம் நமக்கு துணை பாப்பா ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா – பல்வகை:2 7/2
திருந்திய ஒருவனை துணை என புகுந்து அவன் – தனி:13 1/28
பொருளிலார்க்கு இனம் இல்லை துணை இலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால் – சுயசரிதை:1 43/2
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால் – சுயசரிதை:1 44/4
தோளை பார்த்து களித்தல் போலே அன்னான் துணை அடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே – சுயசரிதை:2 36/3
தின்ன வரும் ஒர் தவளையை கண்டு சிங்கம் சிரித்து அருள்செய்தல் போல் துணை
என்ன இவனை மதிப்பவும் அவர் ஏற்றத்தை கண்டும் அஞ்சாமலே நின்றன் – பாஞ்சாலி:1 75/2,3
பெட்டை புலம்பல் பிறர்க்கு துணை ஆமோ – பாஞ்சாலி:5 271/22
அருமை மைந்தன் தனியே துணை பிரிந்து – குயில்:9 1/65
நீயே துணை எனக்கு நீயே குலதெய்வம் – குயில்:9 1/101
அவன் நமக்கெல்லாம் துணை
அவன் மழை தருகின்றான் – வசனகவிதை:2 11/3,4
இன்ப பயன் அறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகிறோம் – வசனகவிதை:3 2/23
மேல்

துணைக்கொண்டு (1)

என்னை துணைக்கொண்டு என்னுடைய முயற்சியால் – கண்ணன்:6 1/5
மேல்

துணைசெய்ய (1)

சீருக்கெல்லாம் முதல் ஆகும் ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும் – பல்வகை:3 1/2
மேல்

துணைபுகுந்தோம் (1)

இன்னவை காத்திடவே அன்னை இணை மலர் திருவடி துணைபுகுந்தோம் – தோத்திர:11 7/4
மேல்

துணைபுரிதல் (1)

பண்ண பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் சுவை – தோத்திர:32 7/2
மேல்

துணைபுரியும் (1)

பாரதர்தம் நாட்டிலே நாசம் எய்த பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே – பாஞ்சாலி:1 118/4
மேல்

துணைபுரிவர் (1)

நல் துணைபுரிவர் வானக நாடுறும் –தேசீய:32 1/113
மேல்

துணைபுரிவாயேல் (1)

நின்னால் இயன்ற துணைபுரிவாயேல்
பொன்னால் உனக்கு ஒரு கோயில் புனைவேன் – தோத்திர:1 12/16,17
மேல்

துணைபுரிவாள் (1)

பெய்வாள் சக்தி துணைபுரிவாள் பிள்ளாய் நின்னை பேசிடிலே – தோத்திர:1 31/4
மேல்

துணையடா (1)

துன்பம் இனி இல்லை பெருஞ்சோதி துணையடா – பிற்சேர்க்கை:14 20/2
மேல்

துணையாக்கி (1)

மொய்க்கும் கவலை பகை போக்கி முன்னோன் அருளை துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடலை இருப்புக்கு இணையாக்கி – தோத்திர:1 39/1,2
மேல்

துணையாகவே (1)

உன்னுங்காலை உயர் துணையாகவே
சொன்ன சொல்லை உயிரிடை சூடுவோம் – தோத்திர:45 5/3,4
மேல்

துணையாம் (1)

பெருமையுறு வாழ்வு அளிக்கும் நல் துணையாம் ஹிந்துமத பெற்றிதன்னை – தனி:23 4/2
மேல்

துணையாய் (2)

நிழலினும் வெயிலினும் நேர்ந்த நல் துணையாய்
தழலினும் புனலினும் அபாயம் தவிர்த்து – தோத்திர:1 16/1,2
என் பயன் கருதி எனக்கு ஒரு துணையாய்
என்னுடன் சில நாள் இருந்திட நின்னை – கண்ணன்:6 1/95,96
மேல்

துணையும் (1)

தமை அலது எவர்கள் துணையும் இல்லாது தம் அரும் திறமையை செலுத்தல் –தேசீய:50 8/3
மேல்

துணையே (3)

துணையே எனது உயிர் உள்ளே இருந்து சுடர் விடுக்கும் – தோத்திர:1 18/1
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா துணையே அமரர் தொழு வானவனே – தோத்திர:46 3/2
மாகாளி பராசக்தி துணையே வேண்டும் வையகத்தில் எதற்கும் இனி கவலை வேண்டா – சுயசரிதை:2 9/1
மேல்

துணையை (1)

சுற்றுமுற்றும் பார்த்து பின் முறுவல் பூத்தான் தூய திருக்கமல பத துணையை பார்த்தேன் – சுயசரிதை:2 26/2
மேல்

துணையொடும் (1)

சொல்ல நாவு கனியுதடா நல் சுதியில் ஒத்து துணையொடும் பாடி – தனி:14 5/3
மேல்

துணையோடு (1)

ஒப்பில் வலிமையுடையதாம் துணையோடு பகைத்தல் உறுதியோ நம்மை – பாஞ்சாலி:1 76/1
மேல்

துணைவர் (2)

வேளாண்மை நின் துணைவர் பெறுக எனவே வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி –தேசீய:49 1/4
இவனை துணைவர் சிரித்ததோர் செயல் எண்ணரும் பாதகம் ஆகுமோ மன – பாஞ்சாலி:1 77/2
மேல்

துணைவர்காள் (1)

எண்ணில துணைவர்காள் எமக்கு இவர் செயும் துயர் –தேசீய:32 1/53
மேல்

துணைவரா (1)

மானுடர் துணைவரா மறமே பகையா –தேசீய:42 1/195
மேல்

துணைவரே (2)

நாம் என்ன செய்வோம் துணைவரே இந்த –தேசீய:36 0/1
வன்னமுற வீற்றிருந்து வாழ்க துணைவரே – தனி:1 22/2
மேல்

துணைவனை (1)

உயிர்க்கு எலாம் தலைவனை உயிர்க்கு எலாம் துணைவனை
உயிர்க்கு எலாம் உயிரை உயிர்க்கு எலாம் உணர்வை – வசனகவிதை:7 0/15,16
மேல்

துணைவீர் (1)

வம்-மினோ துணைவீர் மருட்சிகொள்ளாதீர் –தேசீய:32 1/105
மேல்

துதி (3)

துதி அறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்து அறிவாய் இறப்பின்றி துலங்குவாயே – தனி:21 3/4
பாணர்கள் துதி கூற இளம்பகலவன் எழும் முனர் துயிலெழுந்தார் – பாஞ்சாலி:2 162/1
துதி மேவும் எங்கள் பழநாடு கொண்டு தொலையாத வண்மை அறம் நீள் – பிற்சேர்க்கை:24 4/2
மேல்

துதிக்கிறார் (1)

தாம் எத்தையோ வந்தே என்று துதிக்கிறார் தரமற்ற வார்த்தைகள் பேசி குதிக்கிறார் –தேசீய:36 4/2
மேல்

துதிக்கிறேன் (1)

வேலாயுத விருதினை மனதில் மதிக்கிறேன் என்றன் வேதாந்தம் உரைத்த ஞானியர்தமை எண்ணி துதிக்கிறேன் ஆதிமூலா –வேதாந்த:7 1/1
மேல்

துதிக்கின்றோமே (1)

தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான் இவன் பதங்கள் துதிக்கின்றோமே – தனி:18 4/4
மேல்

துதிகள் (1)

துதிகள் சொல்லும் விதுரன் மொழியை சுருதியாம் என கொண்டனை நீதான் – பாஞ்சாலி:1 98/3
மேல்

துதிசெய்தே (1)

துதிசெய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவு எலாம் – பாஞ்சாலி:1 49/4
மேல்

துதித்தனர் (1)

தோள் நலத்து இணையில்லார் தெய்வம் துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து – பாஞ்சாலி:2 162/2
மேல்

துதிப்போம் (2)

வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழி என்றே துதிப்போம் – தோத்திர:65 2/2
ஞாயிற்றை துதிப்போம் வாருங்கள் – வசனகவிதை:2 11/2
மேல்

துப்பாக்கி (1)

துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வர கண்டு வீட்டில் ஒளிவார் –தேசீய:15 3/2
மேல்

துப்பான (1)

துப்பான மதத்தினையே ஹிந்துமதம் என புவியோர் சொல்லுவாரே – தனி:23 3/4
மேல்

துப்பு (1)

துப்பு இதழ் மைத்துனி தான் சிரித்திடில் தோஷம் இதில் மிக வந்ததோ – பாஞ்சாலி:1 76/4
மேல்

தும்பம்தான் (1)

தும்பம்தான் ஓர் பேதைமை அன்றோ – வசனகவிதை:7 3/3
மேல்

தும்பியடி (1)

தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு – கண்ணன்:21 1/2
மேல்

துய்க்கும் (1)

நிதி அறியோம் இவ் உலகத்து ஒரு கோடி இன்ப வகை நித்தம் துய்க்கும்
கதி அறியோம் என்று மனம் வருந்தற்க குடந்தைநகர் கலைஞர் கோவே – தனி:21 3/1,2
மேல்

துய்த்தல் (1)

போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால் – தனி:14 11/3
மேல்

துய்த்தனை (1)

குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டி வைத்து பல நலம் துய்த்தனை
புலத்தை இட்டு இங்கு உயிர்கள் செய்தாய் அன்னே போற்றி போற்றி நினது அருள் போற்றியே – தோத்திர:34 5/3,4
மேல்

துய்த்திடல் (1)

போத நல் வெறி துய்த்திடல் ஓர்பால் பொலியும் கள் வெறி துய்த்தல் மற்று ஓர்பால் – தனி:14 11/3
மேல்

துய்த்திடும் (1)

தப்பு இன்றி இன்பங்கள் துய்த்திடும் வகை தான் உணர்ந்தான் ஸஹதேவனாம் எங்கும் – பாஞ்சாலி:3 229/2
மேல்

துய்த்துத்துய்த்து (1)

சொல் நலமும் பொருள் நலமும் சுவைகண்டு சுவைகண்டு துய்த்துத்துய்த்து
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ் சுவை நீ களித்தாய் அன்றே – தனி:22 5/3,4
மேல்

துய்ப்பதற்கு (1)

சுண்ணமும் நறும் புகையும் சுரர் துய்ப்பதற்கு உரிய பல் பண்டங்களும் – பாஞ்சாலி:1 13/3
மேல்

துய்ப்பர் (2)

நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
துன்பு நேரினும் இன்பு என கொள்வார் துய்ப்பர் இன்பம் மிக சுவை கொண்டே – தனி:14 8/4
மேல்

துய்ப்பவே (1)

விப்பிரர் ஆதிய நால் வருணத்தவர் துய்ப்பவே நல் விருந்து செயலில் அளவற்ற பொன் செலவிட்டதும் – பாஞ்சாலி:1 46/1
மேல்

துய்ப்பன (1)

விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று வேண்டும் இன்பமும் பெற்றவனேனும் – பாஞ்சாலி:1 19/3
மேல்

துய்ப்பேன் (1)

தோற்றிடாது ஏறி போய் வானுலகு துய்ப்பேன் யான் – பிற்சேர்க்கை:25 20/2
மேல்

துய்மன் (1)

துருபதன் மகளை திட்ட துய்மன் உடற்பிறப்பை – பாஞ்சாலி:5 280/1
மேல்

துய்ய (6)

தூணில் அழகியதாய் நன் மாடங்கள் துய்ய நிறத்தினதாய் அந்த – தோத்திர:12 1/2
துய்ய வெண்ணிறத்தாள்தனை கரியவளை துணை என தொடர்ந்து கொண்டே – தோத்திர:33 4/4
தூண்டும் இன்ப வாடை வீசு துய்ய தேன் கடல் –வேதாந்த:4 1/1
சோகாடவிக்குள் எனை புகவொட்டாமல் துய்ய செழும் தேன் போலே கவிதை சொல்வாள் – சுயசரிதை:2 3/4
துய்ய சிந்தையர் எத்தனை மக்கள் துன்பம் இவ் வகை எய்தினர் அம்மா – பாஞ்சாலி:2 178/4
துய்ய சீர்த்தி மதிக்குலமோ நாம் தூ என்று எள்ளி விதுரனும் சொல்வான் – பாஞ்சாலி:2 196/4
மேல்

துயர் (43)

பயம் கொல்லுவார் துயர் பகை வெல்லுவார் –தேசீய:5 0/2
அன்பு சிவம் உலக துயர் யாவையும் அன்பினில் போகும் என்றே இங்கு –தேசீய:8 10/1
துணை நினை வேண்டும் நாட்டினர்க்கு எல்லாம் துயர் கெட விடுதலை அருளி –தேசீய:12 10/3
சோர வாழ்க்கை துயர் மிடி ஆதிய –தேசீய:29 9/2
எண்ணில துணைவர்காள் எமக்கு இவர் செயும் துயர்
கண்ணியம் மறுத்தனர் ஆண்மையும் கடிந்தனர் –தேசீய:32 1/53,54
அன்னாளை துயர் தவிர்ப்பான் முயல்வர் சில மக்கள் அவர் அடிகள் சூழ்வாம் –தேசீய:43 1/4
துளக்கற ஓங்கி நிற்பர் துயர் உண்டோ துணிவுள்ளோர்க்கே –தேசீய:51 9/4
துச்சமென்று எண்ணி துயர் இலாது இங்கு – தோத்திர:1 4/15
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல் – தோத்திர:1 8/2
நாட்டினை துயர் இன்றி நன்கு அமைத்திடுவதும் – தோத்திர:1 28/9
சுடர் தரு மதியொடு துயர் இன்றி வாழ்தலும் – தோத்திர:1 28/12
சொல்லால் அழியும் துயர் – தோத்திர:17 3/4
துயர் இலாது எனை செய்துவிட்டாள் துன்பம் என்பதை கொய்துவிட்டாள் – தோத்திர:28 2/2
மண்ணில் ஆர்க்கும் துயர் இன்றி செய்வேன் வறுமை என்பதை மண் மிசை மாய்ப்பேன் – தோத்திர:37 1/4
பண்ணை இசைப்பீர் நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர் இந்த பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை – தோத்திர:49 1/3
நீ எனது இன் உயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனை போற்றுவேன் துயர்
போயின போயின துன்பங்கள் நினை பொன் என கொண்ட பொழுதிலே என்றன் – தோத்திர:52 2/1,2
பொங்குவீர் அமிழ்து எனவே அந்த புதுமையிலே துயர் மறந்திருப்பேன் – தோத்திர:61 1/4
தொலை ஒட்டி கரையுற்று துயர் அற்று விடுபட்டு – தோத்திர:67 3/3
துயர் நீங்கி என் உளம் சுடர்கொள செய்தாய் – தோத்திர:72 1/4
நேயத்துடன் பணிந்தால் கிளியே நெருங்கி துயர் வருமோ – தோத்திர:76 5/2
தொல் புவியதனை துயர் கடல் ஆழ்த்தி நீ – தனி:8 5/3
தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன் – தனி:9 2/3
உலை விளக்கே என தளரும் அந்தோ நீ அகன்ற துயர் உரைக்கற்பாற்றோ – தனி:20 3/4
இத்தகைய துயர் நீக்கி கிருதயுகந்தனை உலகில் இசைக்க வல்ல – தனி:23 5/1
கைக்கிளை பெயர் கொண்ட பெரும் துயர் காதல் அஃது கருதவும் தீயதால் – சுயசரிதை:1 16/4
ஈங்கு இதற்கிடை எந்தை பெரும் துயர் எய்தி நின்றனன் தீய வறுமையான் – சுயசரிதை:1 39/1
நாச காசினில் ஆசையை நாட்டினன் நல்லன் எந்தை துயர் கடல் வீழ்ந்தனன் – சுயசரிதை:1 42/4
எந்த மார்க்கமும் தோற்றிலது என் செய்கேன் ஏன் பிறந்தனன் இ துயர் நாட்டிலே – சுயசரிதை:1 46/4
ஞானம் முந்துறவும் பெற்றிலாதவர் நானிலத்து துயர் அன்றி காண்கிலர் – சுயசரிதை:1 48/1
சினம் பிறர் மேல் தாம் கொண்டு கவலையாக செய்தது எணி துயர் கடலில் வீழ்ந்து சாவார் – சுயசரிதை:2 8/4
துயர் இல்லை மூப்பும் இல்லை என்றும் சோர்வு இல்லை நோய் ஒன்றும் தொடுவதில்லை – கண்ணன்:3 9/2
மாந்தர்க்கு உற்ற துயர் எலாம் மாற்றி – கண்ணன்:6 1/19
என துயர் நீங்கி அமைதியோடு இசைத்தேன் – கண்ணன்:6 1/135
தீமைகள் மாய்ப்பதுவாய் துயர் தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய் – பாஞ்சாலி:1 1/2
மன்னும் அ பாண்டவ சோதரர் இவை வாய்ந்தும் உனக்கு துயர் உண்டோ – பாஞ்சாலி:1 61/4
பெரிதா துயர் கொணர்ந்தாய் கொடும் பேய் என பிள்ளைகள் பெற்றுவிட்டேன் – பாஞ்சாலி:1 92/2
என் துயர் தீர்த்தாயடா உயிர் மாமனே ஏளனம் தீர்த்துவிட்டாய் – பாஞ்சாலி:4 249/2
பீடையை நோக்கினன் வீமனும் கரை மீறி எழுந்தது வெம் சினம் துயர்
கூடி தருமனை நோக்கியே அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ – பாஞ்சாலி:5 272/3,4
விம்மி பரிந்து சொல்லும் வெம் துயர் சொல் கொண்டதுவாய் – குயில்:5 1/11
மண்டு துயர் எனது மார்பை எலாம் கவ்வுவதே – குயில்:6 1/22
பின் அவனை நீயும் பெரும் துயர் கொண்டே மடியில் – குயில்:9 1/157
மிச்சம் இல்லை பழம் துயர் குப்பை வெற்றி உண்டு விரைவினில் உண்டு – பிற்சேர்க்கை:1 6/2
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்

துயர்க்கே (1)

வந்ததொர் துன்பத்தினை அங்கு மடித்திடல் அன்றி பின் வரும் துயர்க்கே
சிந்தனை உழல்வாரோ உள சிதைவின்மை ஆரியர் சிறப்பு அன்றோ – பாஞ்சாலி:2 161/3,4
மேல்

துயர்கள் (4)

யந்திர சூனியங்கள் இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்
தந்த பொருளை கொண்டே ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசர் எல்லாம் –தேசீய:15 2/2,3
பார வெம் துயர்கள் தாய்த்திருநாட்டின் பணிக்கு என பலவிதத்து உழன்ற –தேசீய:50 1/3
சூழ்க துயர்கள் தொலைந்திடுக தொலையா இன்பம் விளைந்திடுக – தோத்திர:1 35/3
கூறும் எந்த துயர்கள் விளையினும் கோடி மக்கள் பழி வந்து சூழினும் – சுயசரிதை:1 33/3
மேல்

துயர்களில் (1)

பின்னை துயர்களில் என் பேரு மறந்திட்டாரோ –தேசீய:48 18/2
மேல்

துயர்களின் (1)

மாற்றலர் எங்கள் கோடியர்க்கு இழைக்கும் வகுக்கொணா துயர்களின் ஆணை –தேசீய:50 6/3
மேல்

துயர்களை (1)

துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களை தீர்க்க ஓர் வழி இலையே –தேசீய:15 6/4
மேல்

துயர்கொடுக்கும் (1)

வஞ்சித்திடும் அகழி சுனைகள் முட்கள் மண்டி துயர்கொடுக்கும் புதர்கள் – கண்ணன்:12 2/2
மேல்

துயர்கொண்டே (1)

என்று விதுரன் பெரும் துயர்கொண்டே ஏங்கி பல சொல் இயம்பிய பின்னர் – பாஞ்சாலி:1 114/1
மேல்

துயர்கொண்டோம் (1)

நாம் துயர்கொண்டோம் தாய் அதை மாற்றி களிப்பு தந்தாள் – வசனகவிதை:3 3/10
மேல்

துயர்செய்யும் (1)

எம்மை துயர்செய்யும் பெரியோர் வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான் – கண்ணன்:9 9/2
மேல்

துயர்ப்படுத்த (1)

எனை துயர்ப்படுத்த வந்து எய்தியது உலகில் – தனி:13 1/20
மேல்

துயர்ப்படுவார் (1)

துஞ்சுது முகட்டில் என்பார் மிக துயர்ப்படுவார் எண்ணி பயப்படுவார் –தேசீய:15 1/4
மேல்

துயரங்கள் (1)

துன்பம் இனி இல்லை உன் துயரங்கள் ஒழிந்ததடா – பிற்சேர்க்கை:14 21/2
மேல்

துயரத்தை (1)

வாருங்கள் வாருங்கள் வாருங்கள் துயரத்தை அழிப்போம் – வசனகவிதை:6 3/41
மேல்

துயரம் (5)

பேரன்பு செய்தாரில் யாவரே பெரும் துயரம் பிழைத்துநின்றார் –தேசீய:47 3/1
வீரம் கொள் மனமுடையார் கொடும் துயரம் பல அடைதல் வியத்தற்கு ஒன்றோ –தேசீய:47 3/4
அன்றி ஓர் பொருளும் இல்லை அன்றி ஒன்றும் இல்லை ஆய்ந்திடில் துயரம் எல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானம் ஆகும் – தோத்திர:38 3/2
ஈயை கருடநிலை ஏற்றுவீர் எம்மை என்றும் துயரம் இன்றி வாழ்த்துவீர் – தனி:11 4/2
சென்று வருவீர் என தேறா பெரும் துயரம்
கொண்டு சிறு குயிலும் கூறி மறைந்தது காண் – குயில்:3 1/74,75
மேல்

துயரமும் (1)

துன்பம் என்று இல்லையடா ஒரு துயரமும் இல்லையடா – பிற்சேர்க்கை:14 16/1
மேல்

துயரில் (5)

ஊரவர் துயரில் நெஞ்சு உருகுவீர் இரு-மின் –தேசீய:32 1/99
மேவி மேவி துயரில் வீழ்வாய் – தோத்திர:1 36/1
ஒன்றை விட்டு மற்று ஓர் துயரில் உழலும் நெஞ்சம் வேண்டா – தோத்திர:31 4/4
சோரம் செய்திடாமே பிறரை துயரில் வீழ்த்திடாமே – பாஞ்சாலி:3 221/2
நீண்ட துயரில் குலைந்துபோய் நின்ற நேரிழை மாதினை கண்டனன் அவள் – பாஞ்சாலி:5 267/2
மேல்

துயரிலே (1)

தோலிலே மெலிந்தான் துயரிலே அமிழ்ந்தான் – வசனகவிதை:7 0/78
மேல்

துயரினை (1)

பொய்யர்தம் துயரினை போல் நல்ல புண்ணியவாணர்தம் புகழினை போல் – பாஞ்சாலி:5 299/3
மேல்

துயரும் (4)

அச்சமும் துயரும் என்றே இரண்டு அசுரர் வந்து எமை இங்கு சூழ்ந்து நின்றார் – தோத்திர:11 5/1
இன்ப வெறியும் துயரும் இணைந்தனவால் – குயில்:3 1/3
நாணும் துயரும் நலிவுறுத்த நான் மீண்டு – குயில்:6 1/5
குடும்ப கவலை இல்லை சிறு கும்பி துயரும் இல்லை – பிற்சேர்க்கை:14 15/1
மேல்

துயருறல் (1)

ஐயகோ சிறிது உண்மை விளங்கும் முன் ஆவி நைய துயருறல் வேண்டுமே – சுயசரிதை:1 45/3
மேல்

துயருறுத்தல் (1)

நின்று துயருறுத்தல் நீதியோ பேய்கள் எனை – குயில்:9 1/194
மேல்

துயில் (3)

துயில் உடம்பின் மீதிலும் தீ தோன்றிவிட்டானே அம்மாவோ – தோத்திர:75 10/2
கால் கை சோர்ந்து விழலானேன் இரு கண்ணும் துயில் படரலானேன் ஒரு – கண்ணன்:12 5/1
அறிதுயில் போய் மற்று ஆங்கே ஆழ்ந்த துயில் எய்திவிட – பாஞ்சாலி:4 252/11
மேல்

துயில்கின்றனை (1)

விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே வியப்பு இது காண் பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 1/4
மேல்

துயில்கொளும் (1)

போத துயில்கொளும் நாயகன் கலை போந்து புவி மிசை தோன்றினான் இந்த – பாஞ்சாலி:1 81/3
மேல்

துயில்பவர் (1)

விலையிலா நிதி கொண்டனம் என்றே மெய் குழைந்து துயில்பவர் மூடர் – பாஞ்சாலி:1 99/4
மேல்

துயில்புரிந்தார் (1)

விந்தை கொள் பாட்டு இசைப்ப அதை விழைவொடு கேட்டனர் துயில்புரிந்தார்
வந்ததொர் துன்பத்தினை அங்கு மடித்திடல் அன்றி பின் வரும் துயர்க்கே – பாஞ்சாலி:2 161/2,3
மேல்

துயில்வாயோ (1)

மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ மாநிலம் பெற்றவள் இஃது உணராயோ –தேசீய:11 5/1
மேல்

துயிலாது (1)

கண் துயிலாது நனவினிலே உற்ற – தோத்திர:68 0/2
மேல்

துயிலிடை (1)

சொன்ன தீம் கனவு அங்கு துயிலிடை தோய்ந்ததன்று நனவிடை தோய்ந்ததால் – சுயசரிதை:1 5/2
மேல்

துயிலில் (2)

முற்றும் மறந்து முழு துயிலில் ஆழ்ந்துவிட்டேன் – குயில்:6 1/20
கண் இரண்டும் மூட கடும் துயிலில் ஆழ்ந்துவிட்டேன் – குயில்:7 1/122
மேல்

துயிலினிலே (1)

மோனத்து இருக்குதடீ இந்த வையகம் மூழ்கி துயிலினிலே
நான் ஒருவன் மட்டிலும் பிரிவு என்பதோர் நரகத்து உழலுவதோ – கண்ணன்:20 2/3,4
மேல்

துயிலுதியேல் (1)

இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ இன் உயிரே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 4/4
மேல்

துயிலும் (1)

சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும் சாவுதான் சாவும் துயிலே – வசனகவிதை:4 1/72
மேல்

துயிலெழுந்தார் (1)

பாணர்கள் துதி கூற இளம்பகலவன் எழும் முனர் துயிலெழுந்தார்
தோள் நலத்து இணையில்லார் தெய்வம் துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து – பாஞ்சாலி:2 162/1,2
மேல்

துயிலெழுந்து (1)

காலை துயிலெழுந்து கால் இரண்டு முன் போலே – குயில்:7 1/1
மேல்

துயிலே (1)

சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும் சாவுதான் சாவும் துயிலே
நான் விளங்கும் இடத்தே அவ் இரண்டும் இல்லை மாலையில் வந்து ஊதுவேன் அது மறுபடி பிழைத்துவிடும் – வசனகவிதை:4 1/72,73
மேல்

துர்க்கா (1)

ஜய ஜய மாதா ஜய ஜய துர்க்கா
வந்தேமாதரம் வந்தேமாதரம் –தேசீய:32 1/2,3
மேல்

துர்க்கை (1)

தோம் இழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடும் துர்க்கை அனையவள் தாய் –தேசீய:9 6/2
மேல்

துரகத்து (1)

அதி ரத மன்னர்காள் துரகத்து அதிபர்காள் –தேசீய:32 1/6
மேல்

துரத்தடா (1)

எங்கும் சிவனை காணடா ஈன பயத்தை துரத்தடா
கங்கை சடையா காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ – பிற்சேர்க்கை:21 4/1,2
மேல்

துரத்திக்கொண்டு (1)

சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்து துரத்திக்கொண்டு போகின்றன – வசனகவிதை:5 2/15
மேல்

துரத்துண்டும் (1)

வேற்று நாடுகளில் அவர் துரத்துண்டும் மெய் குலைந்து இறந்துமே படுதல் –தேசீய:50 6/1
மேல்

துரத்துவது (1)

சக்தி அடிப்பது துரத்துவது கூட்டுவது – வசனகவிதை:3 1/5
மேல்

துரந்திடுவீர் (1)

காலன் உருக்கொளும் கணை துரந்திடுவீர்
மற்றும் ஆயிர விதம் பற்றலர்தம்மை –தேசீய:32 1/9,10
மேல்

துரிதத்திலும் (1)

ஐயத்திலும் துரிதத்திலும் சிந்தி அழிவது என்னே – தோத்திர:1 26/3
மேல்

துரியோதன (2)

துரியோதன பெயரான் நெஞ்ச துணிவுடையான் முடி பணிவறியான் – பாஞ்சாலி:1 16/1
சொல் இதனை கேட்டு துரியோதன மூடன் – பாஞ்சாலி:4 252/79
மேல்

துரியோதனன் (8)

கேட்டினுக்கு இரையாவான் மதி கெடும் துரியோதனன் கிளையினரும் – பாஞ்சாலி:2 163/3
தருமன் வார்த்தை கேட்டே துரியோதனன் எழுந்து சொல்வான் – பாஞ்சாலி:2 185/1
மாமன் ஒர் தெய்வம் என்பார் துரியோதனன் வாழ்க என்று ஆர்த்திடுவார் – பாஞ்சாலி:4 248/4
நின்று துரியோதனன் அந்த மாமனை நெஞ்சொடு சேர கட்டி – பாஞ்சாலி:4 249/1
என்று பல சொல்லுவான் துரியோதனன் எண்ணியெண்ணி குதிப்பான் – பாஞ்சாலி:4 251/1
குன்று குதிப்பது போல் துரியோதனன் கொட்டி குதித்து ஆடுவான் – பாஞ்சாலி:4 251/2
துரியோதனன் இ சுடுசொற்கள் கூறிடவும் – பாஞ்சாலி:4 252/45
பாவி துச்சாதனன் செந்நீர் அந்த பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம் – பாஞ்சாலி:5 307/2
மேல்

துரியோதனன்தன்னை (3)

குலம் எலாம் அழிவு எய்திடற்கு அன்றோ குத்திர துரியோதனன்தன்னை
நலமிலா விதி நம்மிடை வைத்தான் ஞால மீதில் அவன் பிறந்த அன்றே – பாஞ்சாலி:2 198/1,2
ஆணையிட்டு இஃது உரைசெய்வேன் இந்த ஆண்மையிலா துரியோதனன்தன்னை
பேணும் பெரும் கனல் ஒத்தாள் எங்கள் பெண்டு திரௌபதியை தொடை மீதில் – பாஞ்சாலி:5 304/1,2
நாண் இன்றி வந்திரு என்றான் இந்த நாய்மகனாம் துரியோதனன்தன்னை
மாண் அற்ற மன்னர் கண் முன்னே என்றன் வன்மையினால் யுத்தரங்கத்தின் கண்ணே – பாஞ்சாலி:5 304/3,4
மேல்

துரியோதனனும் (1)

துரியோதனனும் சுறுக்கெனவே தான் திரும்பி – பாஞ்சாலி:4 252/35
மேல்

துரியோதனா (1)

கக்கக்கென்றே நகைப்பார் துரியோதனா கட்டிக்கொள் எம்மை என்பார் – பாஞ்சாலி:4 247/4
மேல்

துருக்கம் (1)

தோள் நலத்த துருக்கம் மிசிரம் சூழ் கடற்கு அப்புறத்தினில் இன்னும் – தோத்திர:62 7/3
மேல்

துருக்கர் (3)

இந்திரன் வச்சிரம் ஓர்பால் அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் –தேசீய:14 3/1
தீயினை கும்பிடும் பார்ப்பார் நித்தம் திக்கை வணங்கும் துருக்கர்
கோவில் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேசு மதத்தார் – பல்வகை:3 12/1,2
தில்லி துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் – கண்ணன்:18 1/1
மேல்

துருக்கி (1)

தொல்லை எலாம் தவிர்த்து எங்கள் கண் காண நொடிப்பொழுதில் துருக்கி மாந்தர் – பிற்சேர்க்கை:7 2/2
மேல்

துருபதன் (4)

வெம் திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கி தலைகுனிந்து ஆங்கு வந்து எய்தி – பாஞ்சாலி:1 120/2
தாயத்திலே விலைப்பட்டவர் புவி தாங்கும் துருபதன் கன்னி நான் நிலை – பாஞ்சாலி:4 256/3
தேவர் புவி மிசை பாண்டவர் அவர் தேவி துருபதன் கன்னி நான் இதை – பாஞ்சாலி:5 268/1
துருபதன் மகளை திட்ட துய்மன் உடற்பிறப்பை – பாஞ்சாலி:5 280/1
மேல்

துருபதனார் (1)

கனம் ஆரும் துருபதனார் மகளை சூது களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய் – பாஞ்சாலி:5 282/3
மேல்

துரும்பில் (1)

நல்லதொரு மகன் சொல்வான் தூணில் உள்ளான் நாராயணன் துரும்பில் உள்ளான் என்றான் – சுயசரிதை:2 15/2
மேல்

துரும்பு (2)

ஐயம் விஞ்சி சுதந்திரம் நீங்கி என் அறிவு வாரி துரும்பு என்று அலைந்ததால் – சுயசரிதை:1 28/4
வற்றி துரும்பு ஒத்து இருக்கின்றான் உயிர் வாழ்வை முழுதும் வெறுக்கின்றான் – பாஞ்சாலி:1 58/4
மேல்

துருவன் (1)

கனகன் மைந்தன் குமரகுருபரன் கனியும் ஞானசம்பந்தன் துருவன் மற்று – சுயசரிதை:1 8/1
மேல்

துரை (4)

பரங்கியை துரை என்ற காலமும் போச்சே பிச்சை –தேசீய:31 1/2
பேராசைக்காரனடா பார்ப்பான் ஆனால் பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான் – பல்வகை:9 6/1
யாரானாலும் கொடுமை இழைப்பான் துரை இம்மென்றால் நாய் போலே உழைப்பான் – பல்வகை:9 6/2
ஐயர் என்றும் துரை என்றும் மற்று எனக்கு ஆங்கில கலை என்று ஒன்று உணர்த்திய – சுயசரிதை:1 28/1
மேல்

துரையே (2)

சுடரே போற்றி கணத்தேவர் துரையே போற்றி எனக்கு என்றும் – தோத்திர:1 19/1
சொல் ஆண்ட புலவோர்தம் உயிர்த்துணையே தமிழ் காக்கும் துரையே வெற்றி – பிற்சேர்க்கை:11 1/2
மேல்

துரோகிகள் (1)

சோதரர்தம்மை துரோகிகள் அழிப்ப –தேசீய:32 1/81
மேல்

துரோணன் (2)

வில் நயம் உணர் கிருபன் புகழ் வீர துரோணன் அங்கு அவன் புதல்வன் – பாஞ்சாலி:2 158/4
குருகுல தலைவன் சபைக்கண்ணே கொற்றம் மிக்க துரோணன் கிருபன் – பாஞ்சாலி:2 203/1
மேல்

துரோணனும் (1)

வீமனும் துரோணனும் வீட்டுமன்தானும் –தேசீய:32 1/111
மேல்

துல்யே (1)

போக ரதி கோடி துல்யே ராதே ராதே – தோத்திர:60 1/3
மேல்

துலங்கவில்லை (1)

நன்று வடிவம் துலங்கவில்லை நாடு மனம் – குயில்:8 1/12
மேல்

துலங்கு (1)

கலகலென்ற மொழியும் தெய்வ களி துலங்கு நகையும் – தோத்திர:57 1/3
மேல்

துலங்குக (1)

சூழ் கலி நீங்க தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே –தேசீய:23 3/1
மேல்

துலங்குவாயே (1)

துதி அறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்து அறிவாய் இறப்பின்றி துலங்குவாயே – தனி:21 3/4
மேல்

துவஜம் (1)

தேர்ந்தவர் போற்றும் பரத நில தேவி துவஜம் சிறப்புற வாழ்க –தேசீய:14 10/2
மேல்

துவசம் (1)

தூய சீர் உடைத்தாம் சுதந்திர துவசம் துளங்கிலா நாட்டிடை பிறந்தேன் –தேசீய:50 3/4
மேல்

துவளாது (1)

துவளாது இருத்தல் சுகம் – தோத்திர:17 1/4
மேல்

துவளும் (1)

துவளும் நெஞ்சினாராய் வதனம் தொங்க வீற்றிருந்தார் – பாஞ்சாலி:3 226/4
மேல்

துழாய் (1)

வாசம் மிகு துழாய் தாரான் கண்ணன் அடி மறவாத மனத்தான் சக்திதாசன் – தனி:22 4/3
மேல்

துழாயனும் (1)

பாண்டவர் பொறை கொள்ளுவரேனும் பைம் துழாயனும் பாஞ்சாலத்தானும் – பாஞ்சாலி:2 197/1
மேல்

துள்ள (1)

வண்ணம் இனிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள –வேதாந்த:4 3/4
மேல்

துள்ளி (3)

துள்ளி குலாவி திரியும் சிறுவன் மானை போல் தினை தோட்டத்திலே ஒரு பெண்ணை மணம்கொண்ட வேலவா – தோத்திர:3 2/4
சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் – தோத்திர:65 3/2
துன்பம் இலாதே மிதந்து துள்ளி விளையாடுவதே – பிற்சேர்க்கை:25 5/2
மேல்

துள்ளுவார் (1)

ஈடுபட்டு என்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார் அவர் – கண்ணன்:7 11/2
மேல்

துளக்கமற (1)

துளக்கமற யான் பெற்று இங்கு உண்ணுவனோ அல்லால் –தேசீய:33 1/194
மேல்

துளக்கமுற்ற (1)

துளக்கமுற்ற விண்மீனிடம் செல்லுவார் தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார் – பல்வகை:10 1/3
மேல்

துளக்கற (1)

துளக்கற ஓங்கி நிற்பர் துயர் உண்டோ துணிவுள்ளோர்க்கே –தேசீய:51 9/4
மேல்

துளங்கிலா (1)

தூய சீர் உடைத்தாம் சுதந்திர துவசம் துளங்கிலா நாட்டிடை பிறந்தேன் –தேசீய:50 3/4
மேல்

துளி (3)

துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ – பாஞ்சாலி:2 154/3
சல்லி துளி பறவை சாதியிலே நான் பிறந்தேன் – குயில்:7 1/31
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இ பூமி – பிற்சேர்க்கை:8 21/2
மேல்

துளிகூட (1)

பார்த்தால் துளிகூட கவலை இருப்பதாக தெரியவில்லை – வசனகவிதை:4 1/7
மேல்

துளியும் (1)

உடல் பரந்த கடலும் தன்னுள்ளே ஒவ்வொரு நுண் துளியும் வழியாக – தோத்திர:70 1/3
மேல்

துளுவர் (1)

சிந்தை துணிந்த தெலுங்கர் தாயின் சேவடிக்கே பணிசெய்திடு துளுவர் –தேசீய:14 6/2
மேல்

துறக்கலீர் (1)

ஞானம் தவம் கல்வி நான்கும் துறக்கலீர்
ஆனந்தம் ஐயா ஹரீ – பிற்சேர்க்கை:23 1/3,4
மேல்

துறந்த (1)

துறந்த நடைகள் உடையான் உங்கள் சூனிய பொய் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் – கண்ணன்:3 4/4
மேல்

துறந்தார் (1)

துறந்தார் திறமை பெரிது அதினும் பெரிதாகும் இங்கு – தோத்திர:1 10/1
மேல்

துறந்தான் (1)

தந்தை இனி துறந்தான் அரசாட்சியும் தையலர்தம் உறவும் இனி –தேசீய:8 9/1
மேல்

துறந்திருந்த (1)

நாரியர்தம் காதல் துறந்திருந்த நல் நாடு –தேசீய:48 12/2
மேல்

துறந்தீர் (2)

உலகை துறந்தீர் உருவை துறந்தீர் – பிற்சேர்க்கை:23 1/1
உலகை துறந்தீர் உருவை துறந்தீர்
மலையை பிளந்துவிட வல்லீர் இலகு புகழ் – பிற்சேர்க்கை:23 1/1,2
மேல்

துறந்து (4)

துறந்து அறம் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது சுகம் என்று மதிப்பாரோ –தேசீய:26 3/2
தொல்வினை கட்டு எல்லாம் துறந்து – தோத்திர:1 9/4
கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று காட்டும் மறைகள் எலாம் நீவிர் –வேதாந்த:10 7/1
மன்னர்களே களிப்பதுதான் சூது என்றாலும் மனுநீதி துறந்து இங்கே வலிய பாவம்தன்னை – பாஞ்சாலி:5 286/3
மேல்

துறப்பேன் (1)

ஆவி துறப்பேன் அழுது ஓர் பயன் இல்லை – குயில்:9 1/162
மேல்

துறவி (1)

சொல் விறலால் போர்செய்வோன் பிறர்க்கு இன்றி தனக்கு உழையா துறவி ஆவோன் –தேசீய:43 3/4
மேல்

துறவியை (1)

கற்றை சடை மதி வைத்த துறவியை கைதொழுவாள் எங்கள் தாய் கையில் –தேசீய:9 7/1
மேல்

துறை (1)

பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே – பிற்சேர்க்கை:24 1/2
மேல்

துன்ப (6)

கேட்டிருப்பாய் காற்றே துன்ப கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் –தேசீய:53 3/3
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் – தோத்திர:76 3/1
புல் நிலை மாந்தர்தம் பொய் எலாம் நான் பொறையரும் துன்ப புணர்ப்பு எலாம் நான் –வேதாந்த:13 4/2
கானை அழித்து மனை கட்டுவீர் துன்ப கட்டு சிதறி விழ வெட்டுவீர் – தனி:11 5/2
சோதி திருவிழியீர் துன்ப கடலினிலே – குயில்:3 1/64
துன்ப கதையின் தொடர் உரைப்பேன் கேளீரோ – குயில்:6 1/46
மேல்

துன்பங்கள் (4)

போயின போயின துன்பங்கள் நினை பொன் என கொண்ட பொழுதிலே என்றன் – தோத்திர:52 2/2
துன்பங்கள் யாவுமே போகும் வெறும் சூது பிரிவுகள் போனால் – பல்வகை:3 19/2
பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான் – கண்ணன்:5 10/2
சொல்லும் மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய் – கண்ணன்:8 8/1
மேல்

துன்பங்களாம் (1)

பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ – தோத்திர:18 1/2
மேல்

துன்பத்தில் (3)

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் –தேசீய:40 16/1
துன்பத்தில் நொந்து வருவோர்தம்மை தூவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவான் – கண்ணன்:3 10/1
துன்பத்தில் இருக்கிறானா – வசனகவிதை:6 2/12
மேல்

துன்பத்தினால் (1)

உற்ற துன்பத்தினால் பகை உண்டாம் ஓர் தொழில் பயில்வார்தமக்குள்ளே – பாஞ்சாலி:1 102/4
மேல்

துன்பத்தினை (1)

வந்ததொர் துன்பத்தினை அங்கு மடித்திடல் அன்றி பின் வரும் துயர்க்கே – பாஞ்சாலி:2 161/3
மேல்

துன்பத்து (1)

இன்பம் என்று எண்ணி துன்பத்து வீழ்வாய் –வேதாந்த:22 1/25
மேல்

துன்பத்தை (2)

சுருங்குகின்றனரே அவர் துன்பத்தை நீக்க வழி இல்லையோ ஒரு –தேசீய:53 1/3
வாரத்திலே விளையாடுவான் என்றும் வானவர் துன்பத்தை சாடுவான் – தோத்திர:5 1/4
மேல்

துன்பத்தொடு (1)

தோன்றி அழிவது வாழ்க்கைதான் இங்கு துன்பத்தொடு இன்பம் வெறுமையாம் இவை – பாஞ்சாலி:1 140/1
மேல்

துன்பத்தோடு (1)

தோன்றி அழிவது வாழ்க்கை இதில் துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும் – பிற்சேர்க்கை:8 23/1
மேல்

துன்பப்பட்டு (1)

பஞ்சை மகளிர் எல்லாம் துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்து ஒரு –தேசீய:53 4/2
மேல்

துன்பப்படாது (1)

தீன குழந்தைகள் துன்பப்படாது இங்கு தேவி அருள்செய்ய வேண்டுகிறோம் – தனி:5 2/2
மேல்

துன்பப்படுத்துது (1)

துன்பப்படுத்துது மந்திரம்செய்து தொலைத்திட வேண்டும் ஐயே – கண்ணன்:22 9/2
மேல்

துன்பம் (49)

சித்தமயம் இவ் உலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கிவிட்டால் துன்பம்
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல் ஆரிய ராணியின் சொல் –தேசீய:8 4/1,2
விடிவிலா துன்பம் செயும் பராதீன வெம் பிணி அகற்றிடும் வண்ணம் –தேசீய:41 3/3
துன்பம் என்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர் சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர் –தேசீய:45 3/1
பன்னரிய துன்பம் படர்ந்து இங்கே மாய்வேனோ –தேசீய:48 16/2
துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி – தோத்திர:10 1/19
இன்பம் என்று உரைத்திடுவார் சிலர் எண்ணரும் துன்பம் என்று உனை இசைப்பார் – தோத்திர:11 2/2
துன்பம் இலாத நிலையே சக்தி தூக்கம் இலா கண் விழிப்பே சக்தி – தோத்திர:21 1/1
சக்தி சக்தி என்றால் துன்பம் தானே தீரும் கண்டீரே – தோத்திர:25 6/1
துயர் இலாது எனை செய்துவிட்டாள் துன்பம் என்பதை கொய்துவிட்டாள் – தோத்திர:28 2/2
துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய் – தோத்திர:30 2/4
தாளில் விழுந்து அபயம் கேட்டேன் அது தாராயெனில் உயிரை தீராய் துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கருநீலி என் இயல்பு அறியாயோ – தோத்திர:32 3/3,4
வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை – தோத்திர:32 4/2
கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமை துன்பம்
அவலமாம் அனைத்தை காட்டில் அவலமாம் புலைமை அச்சம் – தோத்திர:71 2/1,2
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவும் மற்று இவை போல் –வேதாந்த:18 1/3
துன்பம் மறந்திடு – பல்வகை:1 2/46
துன்பம் நெருங்கி வந்த போதும் நாம் சோர்ந்துவிடலாகாது பாப்பா – பல்வகை:2 9/1
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா – பல்வகை:2 9/2
தோற்றி நின்றனை பாரதநாட்டிலே துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை – பல்வகை:4 1/3
துன்பம் தீர்வது பெண்மையினாலடா சூர பிள்ளைகள் தாய் என்று போற்றுவோம் – பல்வகை:5 2/2
சோற்றுக்கு பஞ்சம் இல்லை போர் இல்லை துன்பம் இல்லை – தனி:1 20/1
நினக்கு இதில் துன்பம் நிகழுமேல் சென்று அவ் – தனி:13 1/68
இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தே இ சகத்தின் இயல் வலி ஆகி – தனி:14 8/1
சிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனும் சென்று பல துன்பம் உற்றான் – சுயசரிதை:2 51/3
துன்பம் என சில கதைகள் கெட்ட தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/2
இன்பத்தை இனிது எனவும் துன்பம் இனிது இல்லை என்றும் அவன் எண்ணுவதில்லை – கண்ணன்:3 6/1
அன்பினை கைக்கொள் என்பான் துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான் – கண்ணன்:3 10/2
சுற்றுவேன் தங்களுக்கு ஓர் துன்பம் உறாமல் காப்பேன் – கண்ணன்:4 1/23
என்னை நீ துன்பம் எய்துவித்திடாமே – கண்ணன்:6 1/98
தொழில் பல புரிவேன் துன்பம் இங்கு என்றும் – கண்ணன்:6 1/140
துன்பம் இனி இல்லை சோர்வு இல்லை தோற்பு இல்லை – கண்ணன்:23 4/1
சொன்ன பணிசெயும் மன்னவர் வரும் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக – பாஞ்சாலி:1 61/2
மிகையுறும் துன்பம் ஏது நம்மோடு வேறுறாது எமை சார்ந்து நன்கு உய்வார் – பாஞ்சாலி:1 105/4
சொல்லப்படாது அவனால் எமக்கு ஆன துன்பம் அனைத்தையும் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 127/2
ஊன்றிய கொள்கை தழைப்பரோ துன்பம் உற்றிடும் என்பதொர் அச்சத்தால் விதி – பாஞ்சாலி:1 140/3
துய்ய சிந்தையர் எத்தனை மக்கள் துன்பம் இவ் வகை எய்தினர் அம்மா – பாஞ்சாலி:2 178/4
துன்பம் துன்பம் துன்பம் – குயில்:2 2/3
துன்பம் துன்பம் துன்பம் – குயில்:2 2/3
துன்பம் துன்பம் துன்பம் – குயில்:2 2/3
சாவிலே துன்பம் இல்லை தையலே இன்னமும் நாம் – குயில்:9 1/163
இன்பம் துன்பம் பாட்டு – வசனகவிதை:1 4/7
நோய் இல்லை வறுமை இல்லை நோன் பிழைப்பதிலே துன்பம் இல்லை – பிற்சேர்க்கை:1 5/1
உள் நிகழ்ந்திடும் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேல் நெறி உற்றனர் – பிற்சேர்க்கை:2 3/2
இளைத்தவர்க்கே வலியர் துன்பம் இழைத்துமே கொல்லவில்லை – பிற்சேர்க்கை:14 10/2
துன்பம் என்று இல்லையடா ஒரு துயரமும் இல்லையடா – பிற்சேர்க்கை:14 16/1
துன்பம் இனி இல்லை பெருஞ்சோதி துணையடா – பிற்சேர்க்கை:14 20/2
துன்பம் இனி இல்லை உன் துயரங்கள் ஒழிந்ததடா – பிற்சேர்க்கை:14 21/2
ஆவி சுகம் என்று அறிந்தது எல்லாம் துன்பம் அன்றி இலை – பிற்சேர்க்கை:19 2/3
துன்பம் இலாதே மிதந்து துள்ளி விளையாடுவதே – பிற்சேர்க்கை:25 5/2
துன்பம் அருள்செய்தான் தோல்விதனை அளித்தான் – பிற்சேர்க்கை:25 15/1
மேல்

துன்பம்தன்னை (1)

பக்கத்திருப்பவர் துன்பம்தன்னை பார்க்க பொறாதவன் புண்ணியமூர்த்தி – பிற்சேர்க்கை:8 16/1
மேல்

துன்பமதிலும் (1)

தாழ வரும் துன்பமதிலும் நெஞ்ச தளர்ச்சிகொள்ளாதவர்க்கு செல்வம் அளிப்பான் – கண்ணன்:3 5/2
மேல்

துன்பமற்றார் (1)

மற்று இதனை கண்டார் மலமற்றார் துன்பமற்றார்
பற்று இதனை கொண்டார் பயன் அனைத்தும் கண்டாரே –வேதாந்த:11 11/1,2
மேல்

துன்பமும் (6)

விளங்குக துன்பமும் மிடிமையும் நோவும் – தோத்திர:1 32/10
துன்பமும் இல்லை கொடும் – தோத்திர:68 26/1
துன்பமும் இல்லை அதில் – தோத்திர:68 26/2
துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்து சுகம் அருளல் வேண்டும் – கண்ணன்:22 2/1
இன்பமும் துன்பமும் பூமியின் மிசை யார்க்கும் வருவது கண்டனம் எனில் – பாஞ்சாலி:4 258/1
துன்பமும் ஓர் கண தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கண தோற்றம் – பிற்சேர்க்கை:8 22/2
மேல்

துன்பமுற (1)

தன்னை எண்ணி துன்பமுற நாணும் – தோத்திர:24 43/5
மேல்

துன்பமுறும் (2)

துன்பமுறும் உயிர்க்கு எல்லாம் தாயை போலே சுரக்கும் அருள் உடைய பிரான் துணிந்த யோகி – சுயசரிதை:2 38/2
துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய் சொல்லை மறுத்து உரைத்தோமோ நின்பால் உள்ள – பாஞ்சாலி:1 144/1
மேல்

துன்பமே (4)

துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம் – தோத்திர:41 6/1
இன்பம் காத்து துன்பமே அழிப்பாய் –வேதாந்த:22 1/24
துன்பமே அச்சமே இருளே தொழும்பர்காள் – வசனகவிதை:7 0/40
இன்பமே சோர்வது துன்பமே வெல்வது – வசனகவிதை:7 0/53
மேல்

துன்பிழைத்தல் (1)

ஒற்றுமையால் மேன்மை உண்டாம் ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றம் என்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே – தனி:1 26/1,2
மேல்

துன்பு (4)

முன் நாளில் துன்பு இன்றி இன்பம் வராது என பெரியோர் மொழிந்தார் அன்றே –தேசீய:44 4/4
அன்பு வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை இதை ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை அவள் – தோத்திர:38 2/1
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
துன்பு நேரினும் இன்பு என கொள்வார் துய்ப்பர் இன்பம் மிக சுவை கொண்டே – தனி:14 8/4
மேல்

துன்புடைத்தன்று (1)

அத்துணை துன்புடைத்தன்று இவ் வாழ்க்கை – தனி:13 1/50
மேல்

துன்புற்று (1)

அகத்தினிலே துன்புற்று அழுதேன் யுகத்தினில் ஓர் – தோத்திர:66 5/2
மேல்

துன்புறுத்திக்கொள்வதை (1)

தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக்கொள்வதை காட்டிலும் பெரிய பேதைமை வேறு இல்லை – வசனகவிதை:6 3/21
மேல்

துன்றியே (1)

விண்ணும் மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
பொருத்தமுற நல் வேதம் ஓர்ந்து பொய்ம்மை தீர மெய்ம்மை நேர –வேதாந்த:4 2/2,3
மேல்

துன்று (1)

துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால் சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர் – பல்வகை:10 2/2
மேல்

துன்றும் (1)

துன்றும் உவகையில் வெற்றுநாவினை தோய்த்து சுவைத்து மகிழ்தல் போல் அவன் – பாஞ்சாலி:3 242/3
மேல்

துன்ன (1)

துன்ன புவி சக்கராதிபம் உடன் சோதரர் தாம் கொண்டிருப்பவும் தந்தை – பாஞ்சாலி:1 74/3
மேல்

துன்னற்கு (1)

துன்னற்கு இனியதுவாய் நல்ல சுவைதரும் நீருடை யமுனை எனும் – பாஞ்சாலி:1 15/2
மேல்

துன்னிட (1)

சோதி மறைந்து இருள் துன்னிட கண்டனன் – தோத்திர:68 7/3
மேல்

துன்னிய (2)

துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே – தோத்திர:73 3/3
துன்னிய துகில் கூட்டம் கண்டு தொழும்ப துச்சாதனன் வீழ்ந்துவிட்டான் – பாஞ்சாலி:5 301/4
மேல்

துன்னும் (1)

துன்னும் அதிட்டமுடையவள் இவர் தோற்றது அனைத்தையும் மீட்டலாம் – பாஞ்சாலி:3 241/4
மேல்