சூ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூக்குமத்தில் 1
சூக்குமமாய் 1
சூட்ட 1
சூட்டி 1
சூட்டின் 1
சூட்டினான் 1
சூட்டுவேன் 1
சூடி 3
சூடிய 1
சூடும் 2
சூடுவோம் 1
சூடேற்றினால் 3
சூத்திரத்தின் 1
சூத்திரம் 3
சூத்திரமான 1
சூத்திரமும் 1
சூத்திரர் 2
சூத்திரனுக்கு 1
சூதர் 4
சூதரம் 1
சூதன் 1
சூதாட 1
சூதாடி 1
சூதாடியதில் 1
சூதால் 1
சூதில் 9
சூதிலாத 1
சூதிலே 3
சூதிற்கு 1
சூதின் 2
சூதினால் 2
சூதினில் 5
சூதினிலே 1
சூதினுக்கு 1
சூதினுக்கே 2
சூதினை 1
சூது 19
சூதுக்கு 1
சூதுசெய்யும் 1
சூதும் 3
சூதை 4
சூர 2
சூரசிகாமணியே 1
சூரத்தனங்கள் 1
சூரர் 1
சூரர்தம் 1
சூரரை 1
சூரிய 2
சூரியரும் 1
சூரியன் 5
சூரியனாம் 1
சூரியா 1
சூல் 3
சூலி 1
சூலினும் 1
சூழ் 7
சூழ்க 2
சூழ்ச்சி 9
சூழ்ச்சிக்கு 1
சூழ்ச்சிகள் 1
சூழ்ச்சிதான் 1
சூழ்ச்சியாம் 1
சூழ்ச்சியும் 1
சூழ்தரும் 1
சூழ்ந்த 7
சூழ்ந்தது 3
சூழ்ந்ததும் 1
சூழ்ந்தவர் 1
சூழ்ந்தன 1
சூழ்ந்தனரே 1
சூழ்ந்தார்க்கு 1
சூழ்ந்திடவும் 1
சூழ்ந்திடுவான் 1
சூழ்ந்திருக்கும் 1
சூழ்ந்திருந்தனர் 1
சூழ்ந்து 15
சூழ்ந்துவிட்டோம் 1
சூழ்ந்தே 1
சூழ்ந்தோர் 1
சூழ்வதும் 1
சூழ்வாம் 1
சூழ்வோமே 1
சூழ 4
சூழல் 2
சூழவே 1
சூழவைத்தாள் 1
சூழினும் 2
சூழுதே 1
சூழும் 6
சூறாவளி 1
சூறை 2
சூறைதன்னில் 1
சூறையாடுகின்றன 1
சூனிய 1
சூனியங்கள் 1

சூக்குமத்தில் (1)

தூல அணுக்களாய் சூக்குமமாய் சூக்குமத்தில்
சாலவுமே நுண்ணியதாய் தன்மை எலாம் தான் ஆகி –வேதாந்த:11 5/1,2
மேல்

சூக்குமமாய் (1)

தூல அணுக்களாய் சூக்குமமாய் சூக்குமத்தில் –வேதாந்த:11 5/1
மேல்

சூட்ட (1)

நவரத்னமாலை இங்கு நான் சூட்ட காப்பாம் –தேசீய:12 1/3
மேல்

சூட்டி (1)

மாலைகள் சூட்டி மதிப்புற இருத்தி –தேசீய:42 1/149
மேல்

சூட்டின் (1)

சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் நோய் வருகிறது அதனை மாற்றி அருள வேண்டும் – வசனகவிதை:5 2/9
மேல்

சூட்டினான் (1)

சங்கிலி பொன்னின் மணி இட்ட ஒளி தாமம் சகுனிக்கு சூட்டினான் பின்னர் – பாஞ்சாலி:1 57/2
மேல்

சூட்டுவேன் (1)

குழலிலே சூட்டுவேன் என்பான் என்னை குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான் – கண்ணன்:9 4/2
மேல்

சூடி (3)

தேம் சொரி மா மலர் சூடி மது தேக்கி நடிப்பாள் எம் அன்னை –தேசீய:10 3/2
பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை ஓரத்திலே அன்பு சூடி நெஞ்சம் – தோத்திர:7 1/3
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து – பல்வகை:1 1/1
மேல்

சூடிய (1)

பிறைமதி சூடிய பெருமாள் வாழி – தோத்திர:1 40/8
மேல்

சூடும் (2)

சாத்துவிக தன்மையினை சூடும் – தோத்திர:24 13/5
உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க – வசனகவிதை:3 8/9
மேல்

சூடுவோம் (1)

சொன்ன சொல்லை உயிரிடை சூடுவோம் – தோத்திர:45 5/4
மேல்

சூடேற்றினால் (3)

பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது நீரிலே குடேற்றினால் வாயு ஆகிவிடுகிறது – வசனகவிதை:4 12/9
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது அ திரவத்திலே சூடேற்றினால் வாயு ஆகின்றது – வசனகவிதை:4 12/10
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது அ திரவத்திலே சூடேற்றினால் வாயு ஆகின்றது – வசனகவிதை:4 12/10
மேல்

சூத்திரத்தின் (1)

வித்தை செயும் சூத்திரத்தின் மேவும் ஒரு பொம்மை என – குயில்:4 1/17
மேல்

சூத்திரம் (3)

சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது – பல்வகை:11 3/3
கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை சூத்திரம் பழி சொல கூசா சழக்கன் – கண்ணன்:9 10/1
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் மன்னர் சாத்திரத்தே முதல் சூத்திரம் பின்னும் – பாஞ்சாலி:1 64/3
மேல்

சூத்திரமான (1)

கொல்ல கருதி சுயோதனன் முன்பு சூத்திரமான சதி பல செய்தான் – பாஞ்சாலி:1 127/1
மேல்

சூத்திரமும் (1)

கொடி பவள வாய் கிள்ளாய் சூத்திரமும் தீங்கும் –தேசீய:13 10/1
மேல்

சூத்திரர் (2)

எந்த நெறியுடைய பிறர் எனினும் அவர் சூத்திரர் என்று இகழ்கின்றோமால் – பிற்சேர்க்கை:10 1/4
பல் நாளா வேளாளர் சூத்திரர் என்று எண்ணிவரும் பழம் பொய்தன்னை – பிற்சேர்க்கை:10 3/1
மேல்

சூத்திரனுக்கு (1)

சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி – பிற்சேர்க்கை:8 13/1
மேல்

சூதர் (4)

வென்றி கொள் பெரும் சூதர் அந்த விவிஞ்சதி சித்திரசேனனுடன் – பாஞ்சாலி:2 164/3
சூதர் சபைதனிலே தொல் சீர் மறக்குலத்து – பாஞ்சாலி:4 252/99
சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிர் உண்டு – பாஞ்சாலி:5 273/1
இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில் ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம் – பாஞ்சாலி:5 285/4
மேல்

சூதரம் (1)

தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர் சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே – பிற்சேர்க்கை:24 1/1
மேல்

சூதன் (1)

பேர் உயர் முனிவர் முன்னே கல்வி பெரும் கடல் பருகிய சூதன் என்பான் – தோத்திர:42 1/3
மேல்

சூதாட (1)

மாயம் உணராத மன்னவனை சூதாட
வற்புறுத்தி கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ – பாஞ்சாலி:5 271/82,83
மேல்

சூதாடி (1)

சூதாடி நின்னை யுதிட்டிரனே தோற்றுவிட்டான் – பாஞ்சாலி:5 271/51
மேல்

சூதாடியதில் (1)

மாமன் சகுனியொடு மாய சூதாடியதில்
பூமி இழந்து பொருள் இழந்து தம்பியரை – பாஞ்சாலி:4 252/91,92
மேல்

சூதால் (1)

பொறி இழந்த சகுனியின் சூதால் புண்ணியர்தமை மாற்றலர் ஆக்கி – பாஞ்சாலி:2 204/2
மேல்

சூதில் (9)

நேர்செய் சூதினில் வென்று தருவான் நீதி தர்மனும் சூதில் அன்புள்ளோன் – பாஞ்சாலி:1 104/4
சூதில் பிள்ளை கெலித்திடல் கொண்டு சொர்க்க போகம் பெறுபவன் போல – பாஞ்சாலி:2 199/1
வல்லார் நினது இளைஞர் சூதில் வைத்திட தகுந்தவர் பணயம் என்றே – பாஞ்சாலி:3 223/3
துண்ணென வெம் சினம் எய்தியே அட சூதில் அரசு இழந்து ஏகினும் – பாஞ்சாலி:3 231/4
இன்னே நாம் சூதில் எடுத்த விலைமகள்பால் – பாஞ்சாலி:4 252/40
சோதரர்தம் தேவிதனை சூதில் வசமாக்கி – பாஞ்சாலி:5 271/5
சூதில் பணயம் என்றே அங்கு ஓர் தொண்டச்சி போவது இல்லை – பாஞ்சாலி:5 273/2
சோரத்தில் கொண்டது இல்லை அண்ணே சூதில் படைத்தது இல்லை – பாஞ்சாலி:5 277/1
எந்தையர் தாம் மனைவியரை விற்பது உண்டோ இதுகாறும் அரசியரை சூதில் தோற்ற – பாஞ்சாலி:5 285/1
மேல்

சூதிலாத (1)

சூதிலாத உளத்தினன் எந்தைதான் சூழ்ந்து எனக்கு நலம் செயல் நாடியே – சுயசரிதை:1 27/1
மேல்

சூதிலே (3)

ஒவ்வுற ஆய்ந்த குருக்களும் கல்வி ஓங்கிய மன்னரும் சூதிலே செல்வம் – பாஞ்சாலி:4 257/3
நீண்ட சபைதனில் சூதிலே எங்கள் நேச சகுனியோடு ஆடி அங்கு உன்னை – பாஞ்சாலி:5 269/3
சூதிலே வல்லான் சகுனி தொழில் வலியால் – பாஞ்சாலி:5 271/53
மேல்

சூதிற்கு (1)

ஐய சூதிற்கு அவரை அழைத்தால் ஆடி உய்குதும் அஃது இயற்றாயேல் – பாஞ்சாலி:1 106/1
மேல்

சூதின் (2)

தொண்டர் என செய்திடுவன் யான் என்றன் சூதின் வலிமை அறிவை நீ – பாஞ்சாலி:1 54/4
மன்று புனைந்தது கேட்டும் இ சூதின் வார்த்தையை கேட்டும் இங்கு என்றன் மனத்தே – பாஞ்சாலி:1 126/2
மேல்

சூதினால் (2)

கொஞ்சம் இலை பெரு சூதினால் வெற்றி கொண்டு பகையை அழித்துளோர் – பாஞ்சாலி:1 55/4
நாடும் குடிகளும் செல்வமும் ஒரு நாழிகை போதினில் சூதினால் வெல்லக்கூடும் – பாஞ்சாலி:1 56/3
மேல்

சூதினில் (5)

நேர்செய் சூதினில் வென்று தருவான் நீதி தர்மனும் சூதில் அன்புள்ளோன் – பாஞ்சாலி:1 104/4
மெய்யதாக ஒர் மண்டலத்து ஆட்சி வென்று சூதினில் ஆளும் கருத்தோ – பாஞ்சாலி:2 196/2
பொய் வளர் சூதினில் வைத்திட்டேன் வென்று போ என்று உரைத்தனன் பொங்கியே – பாஞ்சாலி:3 236/4
சீரிய வீமனை சூதினில் அந்த தீயர் விழுந்திட காணலும் நின்று – பாஞ்சாலி:3 237/3
வடிவுறு பேரழகை இன்ப வளத்தினை சூதினில் பணயம் என்றே – பாஞ்சாலி:4 244/3
மேல்

சூதினிலே (1)

சல்லிய சூதினிலே மனம் தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன் – பாஞ்சாலி:1 129/3
மேல்

சூதினுக்கு (1)

தருமன் அங்கு இவை சொல்வான் ஐய சதியுறு சூதினுக்கு எனை அழைத்தாய் – பாஞ்சாலி:2 167/1
மேல்

சூதினுக்கே (2)

மாய சூதினுக்கே ஐயன் மனம் இணங்கிவிட்டான் – பாஞ்சாலி:2 183/1
விருப்புற்ற சூதினுக்கே ஒத்த பந்தயம் மெய் தவ பாஞ்சாலியோ – பாஞ்சாலி:4 246/2
மேல்

சூதினை (1)

ஆதலால் இந்த சூதினை வேண்டேன் ஐய செல்வம் பெருமை இவற்றின் – பாஞ்சாலி:2 173/1
மேல்

சூது (19)

திரணம் என கருதிவிட்டான் ஜார் மூடன் பொய் சூது தீமை எல்லாம் –தேசீய:52 2/3
வஞ்சனை இன்றி பகை இன்றி சூது இன்றி வையக மாந்தர் எல்லாம் – தோத்திர:18 1/3
புகப்புக புக இன்பமடா போது எல்லாம் புறத்தினிலே தள்ளிடுவாய் சூது எல்லாம் – தோத்திர:20 2/1
சூது இல்லை காணும் இந்த நாட்டீர் மற்ற தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம் – தோத்திர:23 1/2
துன்பங்கள் யாவுமே போகும் வெறும் சூது பிரிவுகள் போனால் – பல்வகை:3 19/2
சொல்லும் மொழிகள் குழந்தைகள் போல் ஒரு சூது அறியாது சொல்வான் என்றும் – கண்ணன்:1 9/2
கொண்ட கருத்தை முடிப்பவே மெல்ல கூட்டி வன் சூது பொர செய்வோம் அந்த – பாஞ்சாலி:1 54/2
விந்தை பொருந்திய மண்டபத்து உம்மை வெய்ய புன் சூது களித்திட செய்யும் – பாஞ்சாலி:1 125/3
வல்லுறு சூது எனும் போர்தனில் வலிமைகள் பார்க்குதும் வருதி என்றான் – பாஞ்சாலி:2 166/4
சோரம் இங்கு இதில் உண்டோ தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ – பாஞ்சாலி:2 169/2
சோர்ந்து அழிவு எய்திடுவான் இவை சூது என்றும் சதி என்றும் சொல்வாரோ – பாஞ்சாலி:2 176/4
பொழுது போக்குதற்கே சூது போர் தொடங்குகின்றோம் – பாஞ்சாலி:2 187/1
மற்று நீரும் இ சூது எனும் கள்ளால் மதி மயங்கி வரும் செயல் காணீர் – பாஞ்சாலி:2 200/1
காய் உருட்டலானார் சூது களி தொடங்கலானார் – பாஞ்சாலி:3 218/1
நண்ணி தொடங்கிய சூது அன்றோ இவர் நாணுற செய்வது நேர்மையோ – பாஞ்சாலி:3 240/4
கனம் ஆரும் துருபதனார் மகளை சூது களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய் – பாஞ்சாலி:5 282/3
தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை – பாஞ்சாலி:5 283/1
மன்னர்களே களிப்பதுதான் சூது என்றாலும் மனுநீதி துறந்து இங்கே வலிய பாவம்தன்னை – பாஞ்சாலி:5 286/3
தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர் சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே – பிற்சேர்க்கை:24 1/1
மேல்

சூதுக்கு (1)

சூதுக்கு அவரை அழைத்து எலாம் அதில் தோற்றிடுமாறு புரியலாம் இதற்கு – பாஞ்சாலி:1 91/3
மேல்

சூதுசெய்யும் (1)

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமை சூதுசெய்யும் நீசர்களை பணிந்திடுவார் –தேசீய:15 5/3
மேல்

சூதும் (3)

சார்வது இல்லை அச்சமுடன் சூதும் – தோத்திர:24 26/5
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் – பல்வகை:11 2/3
சூதும் பொய்யும் உருவென கொண்ட துட்ட மாமனை தான் சரண் எய்தி – பாஞ்சாலி:1 40/3
மேல்

சூதை (4)

நெஞ்சத்தில் சூதை இகழ்ச்சியா கொள்ள நீதம் இல்லை முன்னை பார்த்திவர் தொகை – பாஞ்சாலி:1 55/3
வெல்ல கடவர் எவர் என்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிடலாமோ – பாஞ்சாலி:1 127/3
வஞ்சகத்தினில் வெற்றியை வேண்டார் மாய சூதை பழி என கொள்வார் – பாஞ்சாலி:2 172/1
வறிய வாழ்வை விரும்பிடலாமோ வாழி சூதை நிறுத்துதி என்றான் – பாஞ்சாலி:2 204/4
மேல்

சூர (2)

துன்பம் தீர்வது பெண்மையினாலடா சூர பிள்ளைகள் தாய் என்று போற்றுவோம் – பல்வகை:5 2/2
தொடையை பிளந்து உயிர் மாய்ப்பேன் தம்பி சூர துச்சாதனன்தன்னையும் ஆங்கே – பாஞ்சாலி:5 305/1
மேல்

சூரசிகாமணியே (1)

சூரசிகாமணியே நின்றன் சொத்தினை திருடுவம் எனும் கருத்தோ – பாஞ்சாலி:2 169/4
மேல்

சூரத்தனங்கள் (1)

சொல்லுக்கு அடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம் – தோத்திர:65 2/1
மேல்

சூரர் (1)

சோரம் தொழிலா கொள்வோமோ முந்தை சூரர் பெயரை அழிப்போமோ – பல்வகை:9 10/1
மேல்

சூரர்தம் (1)

சூரர்தம் மக்களை தொழும்பராய் புரிந்தனர் –தேசீய:32 1/58
மேல்

சூரரை (1)

சூரரை போற்று – பல்வகை:1 2/30
மேல்

சூரிய (2)

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ – கண்ணன்:16 1/1
சூரிய வெப்பம் படாமலே மரம் சூழ்ந்த மலை அடி கீழ்ப்பட்டே முடை – பாஞ்சாலி:1 70/1
மேல்

சூரியரும் (1)

சூரியரும் சொலும் வீரிய வாசகம் –தேசீய:2 2/2
மேல்

சூரியன் (5)

அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன் – தோத்திர:1 22/3
துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர் சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள் – தோத்திர:49 2/2
எங்கள் கண்ணம்மா முகம் செந்தாமரைப்பூ எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன் – தோத்திர:55 0/2
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே – கண்ணன்:2 3/4
சொன்னதொர் நூல் சற்று காட்டுவாய் விண்ணில் சூரியன் போல் நிகரின்றியே புகழ் – பாஞ்சாலி:1 74/2
மேல்

சூரியனாம் (1)

சோதி கதிர் விடுக்கும் சூரியனாம் தெய்வத்தின் – பாஞ்சாலி:4 252/32
மேல்

சூரியா (1)

இருளா சூரியா இந்துவே சக்தியே – தோத்திர:1 20/8
மேல்

சூல் (3)

நிருதர்கள் நடுக்குற சூல் கரத்து ஏற்றாய் நிர்மலையே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 3/4
வேல் எறி படைகாள் சூல் எறி மறவர்காள் –தேசீய:32 1/8
சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே – பாஞ்சாலி:1 24/3
மேல்

சூலி (1)

அந்தரி வீரி சண்டிகை சூலி
குடுகுடு குடுகுடு – பல்வகை:11 4/3,4
மேல்

சூலினும் (1)

வாளுடை முனையினும் வயம் திகழ் சூலினும்
ஆளுடை கால்கள் அடியினும் தேர்களின் –தேசீய:32 1/119,120
மேல்

சூழ் (7)

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ் கலைவாணர்களும் இவள் –தேசீய:9 1/1
சூழ் கலி நீங்க தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே –தேசீய:23 3/1
தோள் நலத்த துருக்கம் மிசிரம் சூழ் கடற்கு அப்புறத்தினில் இன்னும் – தோத்திர:62 7/3
காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனை கண்டேன் – சுயசரிதை:2 40/4
முத்து ஒளிர் மாடங்களாம் எங்கும் மொய்த்து அளி சூழ் மலர் சோலைகளாம் – பாஞ்சாலி:1 7/3
தேன் இருந்த சோலை சூழ் தென் இளசை நல் நகரின் – பிற்சேர்க்கை:12 1/1
ஆல விழியாரவர் முலை நேர் தண் வரை சூழ்
கோல மணி இளசை கோன் பதமே சீல – பிற்சேர்க்கை:12 9/1,2
மேல்

சூழ்க (2)

அன்றியும் மக்கள் வெறுத்து எனை இகழ்க அசத்திய பாதகம் சூழ்க
நின்ற தீ எழு வாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம் யான் உழலுக-மன்னோ –தேசீய:50 14/3,4
சூழ்க துயர்கள் தொலைந்திடுக தொலையா இன்பம் விளைந்திடுக – தோத்திர:1 35/3
மேல்

சூழ்ச்சி (9)

படி மிசை தலைமை எய்தும்படிக்கு ஒரு சூழ்ச்சி செய்தாய் –தேசீய:41 2/3
படி மிசை புதிதா சாலவும் எளிதாம்படிக்கு ஒரு சூழ்ச்சி நீ படைத்தாய் –தேசீய:41 3/4
துன்பம் என்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர் சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர் –தேசீய:45 3/1
சோதி அறிவில் விளங்கவும் உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் அற – கண்ணன்:7 10/1
சோரமிழைத்து இடையர் பெண்களுடனே அவன் சூழ்ச்சி திறமை பல காட்டுவது எல்லாம் – கண்ணன்:13 6/1
ஆதரம் கொண்டவர் அல்லரோ முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் அந்த – பாஞ்சாலி:1 72/2
தொல்லைப்படும் என் மனம் தெளிவு எய்த சொல்லுதி நீ ஒரு சூழ்ச்சி இங்கு என்றான் – பாஞ்சாலி:1 127/4
சொல்லும் மொழி கேட்டு அதன் பின் கொல்லுதலே சூழ்ச்சி என – குயில்:7 1/12
தோன்றிய ஓர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டுகொண்டேன் – குயில்:9 1/259
மேல்

சூழ்ச்சிக்கு (1)

சொல்லினுக்கு அரியனாய் சூழ்ச்சிக்கு அரியனாய் – தோத்திர:1 12/1
மேல்

சூழ்ச்சிகள் (1)

தோற்றுவிட்டேனடா சூழ்ச்சிகள் அறிந்தேன் – கண்ணன்:6 1/133
மேல்

சூழ்ச்சிதான் (1)

இதனில் பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு என்னை வேண்டும் இடர்க்கு உறு சூழ்ச்சிதான்
எதனிலேனும் கடமை விளையுமேல் எத்துயர்கள் உழன்றும் மற்று என் செய்தும் – சுயசரிதை:1 37/2,3
மேல்

சூழ்ச்சியாம் (1)

சுமை என பொறுப்பின் செயத்தினுக்கு அதுவே சூழ்ச்சியாம் என்பதை அறிந்தும் –தேசீய:50 8/4
மேல்

சூழ்ச்சியும் (1)

சோரன் அவ் எதுகுலத்தான் சொலும் சூழ்ச்சியும் தம்பியர் தோள் வலியும் – பாஞ்சாலி:1 21/3
மேல்

சூழ்தரும் (1)

சோலைகள் காவினங்கள் அங்கு சூழ்தரும் பல நிற மணி மலர்கள் – கண்ணன்:2 6/1
மேல்

சூழ்ந்த (7)

சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ –தேசீய:16 4/8
காதல் புரியும் அரம்பையர் போல் இளம் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு –தேசீய:20 2/2
சுத்த மோன பகுதியும் வெண்பனி சூழ்ந்த பாகமும் சுட்ட வெந்நீரும் என்று – தோத்திர:34 6/3
அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் –வேதாந்த:19 1/2
சோதி அறிவு என்னும் ஞாயிறுதன்னை சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் இங்கு – கண்ணன்:7 8/2
சூரிய வெப்பம் படாமலே மரம் சூழ்ந்த மலை அடி கீழ்ப்பட்டே முடை – பாஞ்சாலி:1 70/1
மன்னர் சூழ்ந்த சபையில் எங்கள் மாற்றலார்களோடு – பாஞ்சாலி:3 210/1
மேல்

சூழ்ந்தது (3)

தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர் – சுயசரிதை:1 46/1
துச்சமென பிறர் பொருளை கருதலாலே சூழ்ந்தது எலாம் கடவுள் என சுருதி சொல்லும் – சுயசரிதை:2 7/3
போத சுடரை புகை இருள் சூழ்ந்தது
தவம் எலாம் குறைந்து சதி பல வளர்ந்தன – வசனகவிதை:7 0/60,61
மேல்

சூழ்ந்ததும் (1)

துங்கம் உயர்ந்து வளர்கென கோயில்கள் சூழ்ந்ததும் இ நாடே பின்னர் –தேசீய:3 3/3
மேல்

சூழ்ந்தவர் (1)

சொப்பனநாடு என்ற சுடர்நாடு அங்கு சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை –வேதாந்த:25 1/2
மேல்

சூழ்ந்தன (1)

ஆத்திரம் நின்றது அதனிடை நித்தம் ஆயிரம் தொல்லைகள் சூழ்ந்தன – கண்ணன்:7 1/4
மேல்

சூழ்ந்தனரே (1)

காமுகரும் பொய் அடிமை கள்வர்களும் சூழ்ந்தனரே – பிற்சேர்க்கை:5 8/2
மேல்

சூழ்ந்தார்க்கு (1)

சூழ்ந்து தெளிந்து பின் சூழ்ந்தார்க்கு எல்லாம் – தோத்திர:1 12/13
மேல்

சூழ்ந்திடவும் (1)

மோன ஒளி சூழ்ந்திடவும் மொய்ம்பில் கொலுவிருந்தான் – குயில்:6 1/2
மேல்

சூழ்ந்திடுவான் (1)

வன்ன மகளிர் வசப்படவே பல மாயங்கள் சூழ்ந்திடுவான் அவன் – கண்ணன்:1 6/2
மேல்

சூழ்ந்திருக்கும் (1)

சூழ்ந்திருக்கும் பண்டை சுவடி எழுதுகோல் – குயில்:9 1/254
மேல்

சூழ்ந்திருந்தனர் (1)

சூழ்ந்திருந்தனர் உயிர் தொண்டர் தாம் ஐவரும் –தேசீய:42 1/147
மேல்

சூழ்ந்து (15)

தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் –தேசீய:11 1/3
கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் நல்ல கருத்தினால் அதனை சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான் –தேசீய:45 2/1
இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன் இவனை சூழ்ந்து
சமயம் உளபடிக்கு எல்லாம் பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த –தேசீய:52 5/1,2
சூழ்ந்து தெளிந்து பின் சூழ்ந்தார்க்கு எல்லாம் – தோத்திர:1 12/13
அச்சமும் துயரும் என்றே இரண்டு அசுரர் வந்து எமை இங்கு சூழ்ந்து நின்றார் – தோத்திர:11 5/1
சோதி என்னும் நிறைவு இஃது உலகை சூழ்ந்து நிற்ப ஒரு தனி நெஞ்சம் – தனி:10 2/3
சூதிலாத உளத்தினன் எந்தைதான் சூழ்ந்து எனக்கு நலம் செயல் நாடியே – சுயசரிதை:1 27/1
சுத்த சுகம் தனி ஆநந்தம் என சூழ்ந்து கவலைகள் தள்ளியே – கண்ணன்:7 9/4
தங்கும் எழில் பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர் – பாஞ்சாலி:1 123/3
தோற்றும் பொழுதில் புரிகுவார் பல சூழ்ந்து கடமை அழிப்பரோ – பாஞ்சாலி:1 141/4
சொல்வதொர் பொருள் கேளாய் இன்னும் சூழ்ந்து ஒரு பணயம்வைத்து ஆடுதியேல் – பாஞ்சாலி:3 222/3
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கை அன்றோ – பாஞ்சாலி:5 271/84
சோலை பறவை எலாம் சூழ்ந்து பரவசமாய் – குயில்:1 1/15
நாலு புறமும் எனை நண்பர் வந்து சூழ்ந்து நின்றார் – குயில்:6 1/8
மன்னனையே சேர்வை என்று தாம் சூழ்ந்து மற்று அவரும் – குயில்:9 1/190
மேல்

சூழ்ந்துவிட்டோம் (1)

மோன குரு திருவருளால் பிறப்பு மாறி முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம்
தேன் அனைய பராசக்தி திறத்தை காட்டி சித்தின் இயல் காட்டி மன தெளிவு தந்தான் – சுயசரிதை:2 19/2,3
மேல்

சூழ்ந்தே (1)

முன்றிலில் ஓடும் ஒர் வண்டியை போல் அன்று மூன்று உலகும் சூழ்ந்தே
நன்று திரியும் விமானத்தை போல் ஒரு நல்ல மனம் படைத்தோம் – தனி:3 3/3,4
மேல்

சூழ்ந்தோர் (1)

திருமுடி சூழ்ந்தோர் தேசி காத்திருப்ப –தேசீய:42 1/31
மேல்

சூழ்வதும் (1)

ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார் –தேசீய:32 1/50
மேல்

சூழ்வாம் (1)

அன்னாளை துயர் தவிர்ப்பான் முயல்வர் சில மக்கள் அவர் அடிகள் சூழ்வாம் –தேசீய:43 1/4
மேல்

சூழ்வோமே (1)

மாண் உயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே – தோத்திர:63 2/4
மேல்

சூழ (4)

சொல்லும் இவ் அனைத்தும் வேறு சூழ நன்மையும் தர –தேசீய:7 3/3
சூழ நின்ற தீவில் அங்கு சோதி வானவர் –வேதாந்த:4 1/2
வானடியை சூழ நகைத்து திரிவாள் – வசனகவிதை:2 3/13
மன்பதையின் கால் சூழ வைத்தான் வலை திரளே – பிற்சேர்க்கை:25 15/2
மேல்

சூழல் (2)

சொல்லிலே நிகரிலாத புலவர் நின் சூழல் உற்றால் – தனி:22 3/3
மூண்ட வெம் சினத்தோடு நம் சூழல் முற்றும் வேரறச்செய்குவர் அன்றோ – பாஞ்சாலி:2 197/2
மேல்

சூழவே (1)

பார் சுடர் பரிதியை சூழவே படர் முகில் – பாஞ்சாலி:1 152/1
மேல்

சூழவைத்தாள் (1)

நன்று இயல் காதலுக்கே இந்த நாரியர்தமை எனை சூழவைத்தாள் – கண்ணன்:2 7/4
மேல்

சூழினும் (2)

எத்தனை கோடி இடர் வந்து சூழினும்
எண்ணம் சிறிதும் உண்டோ –வேதாந்த:24 3/3,4
கூறும் எந்த துயர்கள் விளையினும் கோடி மக்கள் பழி வந்து சூழினும்
நீறுபட்ட இ பாழ் செயல் மட்டினும் நெஞ்சத்தாலும் நினைப்பது ஒழிகவே – சுயசரிதை:1 33/3,4
மேல்

சூழுதே (1)

தோழரே நம் ஆவி வேக சூழுதே தீ தீ ஐயோ நாம் – தோத்திர:75 2/1
மேல்

சூழும் (6)

சந்தமும் சக்திதனை சூழும் மனம் – தோத்திர:24 18/3
தொல்லை தீர்த்து உயர்வு கல்வி வெற்றி சூழும் வீரம் அறிவு ஆண்மை – தோத்திர:32 8/4
சொரியும் நீர் என பல் உயிர் போற்றுவை சூழும் வெள்ளம் என உயிர் மாற்றுவை – தோத்திர:34 3/3
சூழும் மாய உலகினில் காணுறும் தோற்றம் யாவையும் மானதம் ஆகுமால் – சுயசரிதை:1 12/1
துங்கமுறு கல்வி என சூழும் பல கணத்தாள் – பாஞ்சாலி:4 252/26
சூழும் எனது அதிர்ச்சிக்கு அஞ்சேல் துணிக நீ – பிற்சேர்க்கை:25 7/1
மேல்

சூறாவளி (1)

காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி – வசனகவிதை:4 2/19
மேல்

சூறை (2)

சோதி என்னும் பெரும் கடல் சோதி சூறை மாசறு சோதி அனந்தம் – தனி:10 2/2
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 1/4
மேல்

சூறைதன்னில் (1)

சுமடர் சடசடவென்று சரிந்திட்டார் புயல் காற்றும் சூறைதன்னில்
திமுதிமென மரம் விழுந்து காடு எல்லாம் விறகான செய்தி போலே –தேசீய:52 5/3,4
மேல்

சூறையாடுகின்றன (1)

அவை மோதி வெடிக்கின்றன சூறையாடுகின்றன
கப்பல் நிர்த்தனஞ்செய்கிறது – வசனகவிதை:4 2/4,5
மேல்

சூனிய (1)

துறந்த நடைகள் உடையான் உங்கள் சூனிய பொய் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் – கண்ணன்:3 4/4
மேல்

சூனியங்கள் (1)

யந்திர சூனியங்கள் இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள் –தேசீய:15 2/2
மேல்