கெ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெக்கெக்கே 1
கெஞ்சுவாய் 1
கெட்ட 15
கெட்டபெயர் 1
கெட்டவர் 1
கெட்டவன் 1
கெட்டார் 1
கெட்டார்தம் 1
கெட்டீர் 1
கெட்டு 7
கெட 5
கெடல் 2
கெடவே 1
கெடாதவாறு 1
கெடாது 1
கெடுக்க 1
கெடுக்கின்றார் 1
கெடுக்கும் 3
கெடுக 2
கெடுகின்றாரே 1
கெடுகின்றீரே 1
கெடுத்தார் 2
கெடுத்தான் 1
கெடுத்திடலாமோ 1
கெடுத்து 1
கெடுதல் 2
கெடுதலை 1
கெடுதி 1
கெடுப்பதற்கு 1
கெடுப்பது 2
கெடுப்பதுவாம் 1
கெடும் 2
கெடுவதில்லை 1
கெடுவது 1
கெடுவதும் 1
கெலித்தனன் 1
கெலித்திட்டான் 1
கெலித்திடல் 1

கெக்கெக்கே (1)

கேட்க கேட்க எனவும் கெக்கெக்கே
குக்குக் குக்குக் குக்குக் குக்குக் – வசனகவிதை:6 1/9,10
மேல்

கெஞ்சுவாய் (1)

நாண் இலாது கெஞ்சுவாய் போ போ போ –தேசீய:16 2/4
மேல்

கெட்ட (15)

நல்லோர் பெரியர் என்னும் காலம் வந்ததே கெட்ட
நயவஞ்சக்காரருக்கு நாசம் வந்ததே –தேசீய:31 3/3,4
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு – தோத்திர:26 1/1,2
என்று கதறிய யானையை காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட –வேதாந்த:7 1/2
என்னை கெடுப்பதற்கு எண்ணமுற்றாய் கெட்ட மாயையே நான் –வேதாந்த:8 3/1
ஆசையை கொல்வோம் புலை அச்சத்தை கொன்று பொசுக்கிடுவோம் கெட்ட
பாசம் அறுப்போம் இங்கு பார்வதி சக்தி விளங்குதல் கண்டு அதை –வேதாந்த:15 3/1,2
பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட பாசியை எற்றிவிடும் பெரு – கண்ணன்:1 5/3
துன்பம் என சில கதைகள் கெட்ட தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/2
காமனை போன்ற வடிவமும் இளம்காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட
பூமியை காக்கும் தொழிலிலே எந்தப்போதும் செலுத்திடும் சிந்தையும் – கண்ணன்:7 4/3,4
தாம் பெற்ற மைந்தர்க்கு தீது செய்திடும் தந்தையர் பார் மிசை உண்டு-கொல் கெட்ட
வேம்பு நிகர் இவனுக்கு நான் சுவை மிக்க சருக்கரை பாண்டவர் அவர் – பாஞ்சாலி:1 86/2,3
சாலவும் அஞ்சுதரும் கெட்ட சதிக்குணத்தார் பல மாயம் வல்லோர் – பாஞ்சாலி:2 165/1
குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர் கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய் – பாஞ்சாலி:3 215/4
மாயத்தையே உருவாக்கிய அந்த மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே கெட்ட
தாயத்தை கையினில் பற்றினான் பின்பு சாற்றி விருத்தம் அங்கு ஒன்றையே கையில் – பாஞ்சாலி:3 234/1,2
ஒருப்பட்டு போனவுடன் கெட்ட மாமனும் உன்னி அ தாயம் கொண்டே – பாஞ்சாலி:4 246/3
மாதவிடாயில் இருக்கிறாள் அந்த மாதரசு என்பதும் கூறினான் கெட்ட
பாதகன் நெஞ்சம் இளகிடான் நின்ற பாண்டவர்தம் முகம் நோக்கினான் அவர் – பாஞ்சாலி:4 260/1,2
கேடுற்ற மன்னர் அறம் கெட்ட சபைதனிலே – பாஞ்சாலி:5 271/25
மேல்

கெட்டபெயர் (1)

விண் முட்டி சென்ற புகழ் போச்சே இந்த மேதினியில் கெட்டபெயர் ஆச்சே – பல்வகை:9 1/2
மேல்

கெட்டவர் (1)

கீழ்களின் அவமதிப்பும் தொழில் கெட்டவர் இணக்கமும் கிணற்றின் உள்ளே – தோத்திர:59 2/1
மேல்

கெட்டவன் (1)

நேத்திரம் கெட்டவன் காலன்தன் முன் நேர்ந்தது அனைத்தும் துடைத்து முடிப்பான் –தேசீய:21 4/2
மேல்

கெட்டார் (1)

தேசத்தில் எண்ணற்ற பேர்களும் கெட்டார் செய்யும் தொழில் முறை யாவரும் விட்டார் –தேசீய:36 2/1
மேல்

கெட்டார்தம் (1)

கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும் – பாஞ்சாலி:4 252/63
மேல்

கெட்டீர் (1)

உண்டாக்கி பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியீரோ உணர்ச்சி கெட்டீர்
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும் பாரிடை முன் அறி தெய்வம் என்றாள் அன்றோ – சுயசரிதை:2 46/3,4
மேல்

கெட்டு (7)

பாமரராய் விலங்குகளாய் உலகு அனைத்தும் இகழ்ச்சி சொல பான்மை கெட்டு
நாமமது தமிழர் என கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் –தேசீய:22 1/2,3
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டு
பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரததேசம்தன்னை –தேசீய:41 1/2,3
மூழ்கிய விளக்கினை போல் செய்யும் முயற்சி எல்லாம் கெட்டு முடிவதுவும் – தோத்திர:59 2/2
பாதங்கள் போற்றுகின்றேன் என்றன் பாவம் எலாம் கெட்டு ஞான கங்கை – தோத்திர:61 2/2
சந்ததி வாழும் வெறும் சஞ்சலம் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும் –வேதாந்த:15 7/1
பார்ப்பன குலம் கெட்டு அழிவு எய்திய பாழடைந்த கலியுகம் ஆதலால் – சுயசரிதை:1 40/1
வேதம் கெட்டு வெறுங்கதை மலிந்தது – வசனகவிதை:7 0/59
மேல்

கெட (5)

துணை நினை வேண்டும் நாட்டினர்க்கு எல்லாம் துயர் கெட விடுதலை அருளி –தேசீய:12 10/3
முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியிலே ஆவி கெட முடிவது உண்டு –தேசீய:52 3/4
நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ – தோத்திர:13 1/1
எல்லோரும் வந்து ஏத்தும் அளவில் யம பயம் கெட செய்பவன் – தோத்திர:78 1/8
நான்முகனார் நா அடைக்க நாமகட்கு புத்தி கெட
வான் முகிலை போன்றதொரு வண்ண திருமாலும் – பாஞ்சாலி:4 252/9,10
மேல்

கெடல் (2)

வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார் – சுயசரிதை:1 23/3
மூலத்தோடு குலம் கெடல் நாடிய மூட மூட நிர்மூட புலையர்தாம் – சுயசரிதை:1 34/2
மேல்

கெடவே (1)

தான் எனும் பேய் கெடவே பல சஞ்சல குரங்குகள் தலைப்படவே – தோத்திர:61 4/1
மேல்

கெடாதவாறு (1)

பூண்ட பெருமை கெடாதவாறு எண்ணி பொங்குகின்றான் நலம் வேட்கின்றான் மைந்தன் – பாஞ்சாலி:1 68/3
மேல்

கெடாது (1)

வல்ல நூல் கெடாது காப்பள் வாழி அன்னை வாழியே –தேசீய:7 3/4
மேல்

கெடுக்க (1)

கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும் கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும் – தோத்திர:27 4/2
மேல்

கெடுக்கின்றார் (1)

கோத்திர மங்கையர் குலம் கெடுக்கின்றார்
எண்ணில துணைவர்காள் எமக்கு இவர் செயும் துயர் –தேசீய:32 1/52,53
மேல்

கெடுக்கும் (3)

பிணி இருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய் – தோத்திர:10 1/13
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி சொல்லில் விளங்கும் சுடரே சக்தி – தோத்திர:21 2/1
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே – பல்வகை:4 2/4
மேல்

கெடுக (2)

வல் இடி போல் சீச்சி மடையா கெடுக நீ – பாஞ்சாலி:4 252/80
தீது கெடுக திறமை வளர்க – வசனகவிதை:7 0/10
மேல்

கெடுகின்றாரே (1)

மூடர் எலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்தி கெடுகின்றாரே – சுயசரிதை:2 52/4
மேல்

கெடுகின்றீரே (1)

ஆன்மா என்றே கருமத்தொடர்பை எண்ணி அறிவு மயக்கம்கொண்டு கெடுகின்றீரே
மான் மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டு தனை மறந்து வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 33/3,4
மேல்

கெடுத்தார் (2)

பண்ணி கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு –தேசீய:20 9/2
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார் – பல்வகை:3 9/2
மேல்

கெடுத்தான் (1)

துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர் சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள் – தோத்திர:49 2/2
மேல்

கெடுத்திடலாமோ (1)

கண்கள் இரண்டினில் ஒன்றை குத்தி காட்சி கெடுத்திடலாமோ
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர் – பல்வகை:3 10/1,2
மேல்

கெடுத்து (1)

அல்லல் கெடுத்து அமரர்க்கு இணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 2/4
மேல்

கெடுதல் (2)

எண்ணம் கெடுதல் வேண்டா –தேசீய:12 7/3
கெடுதல் இன்றி நம் தாய்த்திருநாட்டின் கிளர்ச்சிதன்னை வளர்ச்சிசெய்கின்றான் –தேசீய:12 8/2
மேல்

கெடுதலை (1)

கெடுதலை ஒன்றும் இல்லை உன் கீழ்மைகள் உதறிடடா – பிற்சேர்க்கை:14 19/2
மேல்

கெடுதி (1)

சோம்பல் மிக கெடுதி பாப்பா தாய் சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா – பல்வகை:2 10/1
மேல்

கெடுப்பதற்கு (1)

என்னை கெடுப்பதற்கு எண்ணமுற்றாய் கெட்ட மாயையே நான் –வேதாந்த:8 3/1
மேல்

கெடுப்பது (2)

உன்னை கெடுப்பது உறுதி என்றே உணர் மாயையே –வேதாந்த:8 3/2
கெடுப்பது சோர்வு – பல்வகை:1 2/19
மேல்

கெடுப்பதுவாம் (1)

இருமையும் கெடுப்பதுவாம் இந்த இழிதொழிலால் எமை அழித்தலுற்றாய் – பாஞ்சாலி:2 167/4
மேல்

கெடும் (2)

கெடும் நாள் வருமளவும் ஒரு கிருமியை அழிப்பவர் உலகில் உண்டோ – பாஞ்சாலி:1 134/2
கேட்டினுக்கு இரையாவான் மதி கெடும் துரியோதனன் கிளையினரும் – பாஞ்சாலி:2 163/3
மேல்

கெடுவதில்லை (1)

நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு – தோத்திர:41 7/1
மேல்

கெடுவது (1)

மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே – தோத்திர:73 2/1
மேல்

கெடுவதும் (1)

பூவில் உதிர்வதும் உண்டு பிஞ்சை பூச்சி அரித்து கெடுவதும் உண்டு – பிற்சேர்க்கை:8 2/1
மேல்

கெலித்தனன் (1)

முன்னை கதை அன்றி வேறு உண்டோ அந்த மோச சகுனி கெலித்தனன் – பாஞ்சாலி:3 238/4
மேல்

கெலித்திட்டான் (1)

செப்பினன் காயை உருட்டினார் அங்கு தீய சகுனி கெலித்திட்டான் – பாஞ்சாலி:3 229/4
மேல்

கெலித்திடல் (1)

சூதில் பிள்ளை கெலித்திடல் கொண்டு சொர்க்க போகம் பெறுபவன் போல – பாஞ்சாலி:2 199/1
மேல்