கூ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூகூ 1
கூகையை 1
கூச்சல் 2
கூச்சலிடவே 1
கூசா 1
கூசும் 1
கூட்டங்கள் 3
கூட்டத்தார் 1
கூட்டத்தில் 1
கூட்டத்திலே 3
கூட்டத்து 1
கூட்டத்தை 3
கூட்டம் 17
கூட்டமடீ 1
கூட்டமும் 1
கூட்டவும் 1
கூட்டி 7
கூட்டியே 1
கூட்டிவருக 1
கூட்டிவிட்டாய் 1
கூட்டிவிட்டார் 1
கூட்டிவைத்தார் 1
கூட்டிவைப்பீரே 1
கூட்டு 3
கூட்டுணும் 1
கூட்டுதல் 1
கூட்டும் 1
கூட்டுவது 1
கூட்டுவான் 1
கூட்டுவீர் 1
கூட்டுவை 1
கூட 5
கூடக்கூட 1
கூடங்கள் 1
கூடத்தில் 1
கூடம் 2
கூடல் 3
கூடாத 1
கூடாதாம் 2
கூடாது 2
கூடி 29
கூடிக்கிடக்குது 1
கூடிய 1
கூடியது 1
கூடியிருக்கும் 2
கூடியிருப்பினும் 1
கூடியே 3
கூடிலேன் 1
கூடிவந்து 1
கூடிவரும் 1
கூடிவாழ்வதில் 2
கூடிவிடுமாயின் 1
கூடினோர் 1
கூடு 3
கூடுகட்டிக்கொண்டு 1
கூடுகின்றன 1
கூடுகின்றிலதென்னில் 1
கூடுங்காலை 1
கூடுதலும் 1
கூடுதில்லை 1
கூடுதே 1
கூடும் 6
கூடுமாயில் 1
கூடுமோ 1
கூடுவதில்லை 2
கூடுவோம் 1
கூடையில் 1
கூண்டில் 1
கூண்டுக்கிளியினை 1
கூத்தடிக்கிறீர் 1
கூத்திடுவாய் 1
கூத்திடுவாள் 1
கூத்திடுவீரே 1
கூத்திடுவோமடா 2
கூத்திலும் 1
கூத்திலே 1
கூத்தினுக்கு 1
கூத்தினை 1
கூத்து 2
கூத்துக்களும் 1
கூத்துகள் 1
கூத்தே 1
கூத்தை 5
கூந்தல் 2
கூந்தலினை 1
கூப்பி 1
கூப்பிட்டால்கூட 1
கூம்புதல் 1
கூர் 2
கூர்த்த 1
கூரை 1
கூரையிலிருந்து 1
கூரையும்தான் 1
கூலி 3
கூவி 4
கூவினார் 1
கூவுகின்றது 1
கூவுங்கால் 1
கூவுதல் 1
கூவும் 1
கூவுமாறு 1
கூழ் 1
கூளத்தை 1
கூளம் 3
கூற்றம் 1
கூற்றான 1
கூற்றினுக்கு 1
கூற்றுக்கு 1
கூற்றே 1
கூற 11
கூறடா 1
கூறல் 1
கூறவில்லை 1
கூறாய் 4
கூறார் 1
கூறி 38
கூறிக்கூறி 1
கூறிட 1
கூறிடவும் 1
கூறிடும் 1
கூறிடுமால் 1
கூறிடுமே 1
கூறிடுவாய் 1
கூறிய 7
கூறியதை 1
கூறியவர் 1
கூறியும் 4
கூறியுள்ள 1
கூறியே 1
கூறில் 2
கூறிவிட்டார் 1
கூறின் 1
கூறினர் 1
கூறினள் 1
கூறினன் 2
கூறினாய் 1
கூறினான் 7
கூறினீர் 1
கூறினும் 1
கூறினேன் 1
கூறீர் 1
கூறீரோ 1
கூறு 3
கூறு-மின் 1
கூறுக 1
கூறுகிலேன் 1
கூறுகிறோம் 1
கூறுகின்றார் 1
கூறுகின்றான் 2
கூறுகின்றோம் 2
கூறுதல் 1
கூறுதற்கு 1
கூறுதி 1
கூறுபட 1
கூறும் 19
கூறுமே 1
கூறுவதாம் 1
கூறுவதோ 1
கூறுவர் 4
கூறுவரோ 1
கூறுவன் 3
கூறுவனோ 1
கூறுவாள் 1
கூறுவான் 2
கூறுவீர் 1
கூறுவேன் 1
கூறுவோம் 2
கூறேன் 2
கூனர்தமை 1
கூனன் 1
கூனி 1

கூகூ (1)

கொட்டி இடிக்குது மேகம் கூகூ என்று விண்ணை குடையுது காற்று – தனி:4 2/2
மேல்

கூகையை (1)

மோட்டு கூகையை காக்கையை விற்று மொய்ம்பு சான்ற மயில்களை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/3

TOP

கூச்சல் (2)

மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும் கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது – வசனகவிதை:4 1/40
மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும் கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது – வசனகவிதை:4 1/40
மேல்

கூச்சலிடவே (1)

வள்ளியம்மை அதிக கூச்சலிடவே கந்தன் அதை விட்டுவிட்டது – வசனகவிதை:4 1/38
மேல்

கூசா (1)

கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை சூத்திரம் பழி சொல கூசா சழக்கன் – கண்ணன்:9 10/1
மேல்

கூசும் (1)

நினைக்க நெஞ்சம் உருகும் பிறர்க்கு இதை நிகழ்த்த நா நனி கூசும் அதன்றியே – சுயசரிதை:1 30/1
மேல்

கூட்டங்கள் (3)

பல திசையும் துஷ்டர் கூட்டங்கள் ஆச்சு பையல்கள் நெஞ்சில் பயம் என்பதே போச்சு –தேசீய:36 1/2
கூவி திரியும் சிலவே சில கூட்டங்கள் கூடி திசைதொறும் போகும் – தனி:2 1/3
தத்தி எழுந்தன எண்ணரும் கூட்டங்கள் சந்திகள் வீதிகள் சாலைகள் சோலைகள் – பாஞ்சாலி:2 155/2
மேல்

கூட்டத்தார் (1)

அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபார கூட்டத்தார் போகிறார்கள் – வசனகவிதை:4 4/4
மேல்

கூட்டத்தில் (1)

கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றல் அன்றி –தேசீய:40 2/1
மேல்

கூட்டத்திலே (3)

தோட்டத்திலே மர கூட்டத்திலே கனி –தேசீய:4 8/1
கூட்டத்திலே இந்த கண்ணனை போல் அன்பு கொண்டவர் வேறு உளரோ – கண்ணன்:1 4/4
பண்ணை பறையர்தம் கூட்டத்திலே இவன் பாக்கியம் ஓங்கிவிட்டான் – கண்ணன்:22 4/1
மேல்

கூட்டத்து (1)

மற்று அந்த கூட்டத்து மன்னவனை காணீரே – தனி:1 18/1
மேல்

கூட்டத்தை (3)

கூறுபட பல கோடி அவுணரின் கூட்டத்தை கண்டு கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய் – தோத்திர:3 3/3
புல்லியர் கூட்டத்தை பூழ்திசெய்திடடா – தோத்திர:68 23/3
கூட்டத்தை கண்டு அஃது கும்பிட்டே தன் அருகு ஓர் – தனி:1 7/1
மேல்

கூட்டம் (17)

கூட்டம் கூடி வந்தேமாதரம் என்று கோஷித்தாய் எமை தூஷித்தாய் –தேசீய:38 2/1
சிங்க கூட்டம் திகைத்து இருந்தாங்கு –தேசீய:42 1/36
கால பெரும் களத்தின் மீதே எங்கள் காளி நடம் உலக கூட்டம் – தோத்திர:23 2/2
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசை எலாம் நான் அன்றி வேறில்லை நோக்கநோக்க களியாட்டம் –வேதாந்த:2 3/1,2
கன்னங்கரும் காக கூட்டம் வர கண்டது அங்கே – தனி:1 6/2
போற்றி எதை நோக்குகிறாய் கூட்டம் அங்கு போவது என்னே – தனி:1 9/2
அம்மவோ காக பெரும் கூட்டம் அஃது என்னே – தனி:1 13/2
சார்ந்து நின்ற கூட்டம் அங்கு சாலையின் மேல் கண்டீரே – தனி:1 17/2
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம் – சுயசரிதை:2 16/3
திக்கு குலுங்கிடவே எழுந்து ஆடுமாம் தீயவர் கூட்டம் எல்லாம் – பாஞ்சாலி:4 247/1
கொண்டு ஓர் வனத்திடையே வைத்து பின் கூட்டம் உற – பாஞ்சாலி:5 271/76
துன்னிய துகில் கூட்டம் கண்டு தொழும்ப துச்சாதனன் வீழ்ந்துவிட்டான் – பாஞ்சாலி:5 301/4
கோல பறவைகளின் கூட்டம் எல்லாம் காணவில்லை – குயில்:7 1/4
பத்திரிகை கூட்டம் பழம் பாய் வரிசை எல்லாம் – குயில்:9 1/255
அவர்களுடைய கூட்டம் இனிது – வசனகவிதை:2 9/2
உங்கள் கூட்டம் மிக இனிது – வசனகவிதை:2 9/22
ஒரு க்ஷணம் யம வாதனை வியாபார கூட்டம் முழுதும் மணலிலே அழிந்துபோகிறது – வசனகவிதை:4 4/7
மேல்

கூட்டமடீ (1)

பெண்களின் கூட்டமடீ கிளியே –தேசீய:40 4/2
மேல்

கூட்டமும் (1)

இந்த புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறு மலர் பூம் செடி கூட்டமும்
அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் –வேதாந்த:19 1/1,2
மேல்

கூட்டவும் (1)

பாட்டிலே தனி இன்பத்தை நாட்டவும் பண்ணிலே களி கூட்டவும் வேண்டி நான் – தோத்திர:19 3/2
மேல்

கூட்டி (7)

கூட்டி மானுட சாதியை ஒன்று என கொண்டு வையம் முழுதும் பயனுற – தோத்திர:19 2/2
குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டி வைத்து பல நலம் துய்த்தனை – தோத்திர:34 5/3
மெள்ள பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்து பல –வேதாந்த:10 9/1
கொட்டும் முகிலாய் அணுக்கள் கூட்டி பிரிப்பதுவாய் –வேதாந்த:11 4/2
கொத்தி திரியும் அந்த கோழி அதை கூட்டி விளையாடு பாப்பா – பல்வகை:2 3/1
கொண்ட கருத்தை முடிப்பவே மெல்ல கூட்டி வன் சூது பொர செய்வோம் அந்த – பாஞ்சாலி:1 54/2
மண்ணுக்குள்ளே அமுதை கூட்டி
கண்ணுக்குள்ளே களியைக்காட்டி – வசனகவிதை:7 2/1,2
மேல்

கூட்டியே (1)

கூட்டியே தெய்வ கொலு ஒன்று அமைத்தனன் –தேசீய:42 1/144
மேல்

கூட்டிவருக (1)

கூடியிருக்கும் சபையிலே உன்னை கூட்டிவருக என்று மன்னவன் சொல்ல – பாஞ்சாலி:5 270/2
மேல்

கூட்டிவிட்டாய் (1)

பேசவும் தோன்றுதில்லை உயிர் மாமனே பேரின்பம் கூட்டிவிட்டாய் – பாஞ்சாலி:4 250/4
மேல்

கூட்டிவிட்டார் (1)

கொல்ல துணிவின்றி நம்மையும் அ நிலை கூட்டிவைத்தார் பழி கூட்டிவிட்டார் – பல்வகை:6 4/2
மேல்

கூட்டிவைத்தார் (1)

கொல்ல துணிவின்றி நம்மையும் அ நிலை கூட்டிவைத்தார் பழி கூட்டிவிட்டார் – பல்வகை:6 4/2
மேல்

கூட்டிவைப்பீரே (1)

நாட்டிலே அறம் கூட்டிவைப்பீரே நாடும் இன்பங்கள் ஊட்டிவைப்பீரே – பல்வகை:8 3/3
மேல்

கூட்டு (3)

கூட்டு களியினிலே கவிதைகள் கொண்டு தர வேணும் அந்த – தோத்திர:12 3/2
கூண்டில் பறவையும் அல்லளே ஐவர் கூட்டு மனைவிக்கு நாணம் ஏன் சினம் – பாஞ்சாலி:4 254/3
கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டு அமுத பாட்டினிலும் – குயில்:3 1/40
மேல்

கூட்டுணும் (1)

கொச்சை பேச்சில் கைகொட்டி நகைப்போம் கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும் – தனி:14 1/3
மேல்

கூட்டுதல் (1)

குழைத்தல் என்பது மன்னவர்க்கு இல்லை கூடக்கூட பின் கூட்டுதல் வேண்டும் – பாஞ்சாலி:1 100/3
மேல்

கூட்டும் (1)

கோலமாக மணத்திடை கூட்டும் இ கொலை எனும் செயல் ஒன்றினை உள்ளவும் – சுயசரிதை:1 34/3
மேல்

கூட்டுவது (1)

சக்தி அடிப்பது துரத்துவது கூட்டுவது
பிணைப்பது கலப்பது உதறுவது – வசனகவிதை:3 1/5,6
மேல்

கூட்டுவான் (1)

ஆவல் அறிந்து அருள் கூட்டுவான் நித்தம் ஆண்மையும் வீரமும் ஊட்டுவான் – தோத்திர:5 3/4
மேல்

கூட்டுவீர் (1)

வான மழை பொழிதல் போலவே நித்தம் வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர்
கானை அழித்து மனை கட்டுவீர் துன்ப கட்டு சிதறி விழ வெட்டுவீர் – தனி:11 5/1,2
மேல்

கூட்டுவை (1)

ஆற்றலின் மிகுந்தனை அரும் பதம் கூட்டுவை
மாற்றலர் கொணர்ந்த வன் படை ஓட்டுவை –தேசீய:19 3/5,6
மேல்

கூட (5)

செம்மையுற்று நாளும் சேர்ந்தே தேசு கூட வேண்டும் – தோத்திர:31 3/4
அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில் கூட களித்து ஆடும் காளீ சாமுண்டீ கங்காளீ – தோத்திர:35 1/2
கேடற்றது என்று கண்டு கூட கருதும் ஒளி – தோத்திர:54 1/2
வேதனை ஒன்று இல்லாதே பிரிந்து சென்று வேறொருவன்றனை கூட வேண்டும் என்பார் – சுயசரிதை:2 54/4
கண்ணாலம் கூட இன்னும் கட்டி முடியவில்லை – குயில்:9 1/124
மேல்

கூடக்கூட (1)

குழைத்தல் என்பது மன்னவர்க்கு இல்லை கூடக்கூட பின் கூட்டுதல் வேண்டும் – பாஞ்சாலி:1 100/3
மேல்

கூடங்கள் (1)

சாடு பல் குண்டுகளால் ஒளி சார் மதி கூடங்கள் தகர்த்திடுவார் – தோத்திர:11 6/3
மேல்

கூடத்தில் (1)

மாடத்தில் ஏறி ஞான கூடத்தில் விளையாடி – தோத்திர:54 1/3
மேல்

கூடம் (2)

எங்கள் வேள்வி கூடம் மீதில் ஏறுதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 1/1
இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில் நகர் கோபுரம் யாவுமே நான் –வேதாந்த:13 3/2
மேல்

கூடல் (3)

கூடல் கூடல் கூடல் – குயில்:2 8/1
கூடல் கூடல் கூடல் – குயில்:2 8/1
கூடல் கூடல் கூடல்
கூடி பின்னே குமரன் போயின் – குயில்:2 8/1,2
மேல்

கூடாத (1)

உள்ளம்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத
கொள்ளை பெரிய உரு கொண்ட பல கோடி – குயில்:7 1/81,82
மேல்

கூடாதாம் (2)

என்னால் பல உரைத்தல் இப்பொழுது கூடாதாம்
நாளை வருவீரேல் நடந்தது எலாம் சொல்வேன் இவ் – குயில்:6 1/14,15
காதல் இசைந்தாலும் கடி மணம்தான் கூடாதாம்
சாதல் பொழுதிலே தார் வேந்தன் கூறிய சொல் – குயில்:9 1/181,182
மேல்

கூடாது (2)

பொய் சொல்ல கூடாது பாப்பா என்றும் புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா – பல்வகை:2 7/1
புழுதி படிந்திருக்கலாகாது எவ்விதமான அசுத்தமும் கூடாது
காற்று வருகின்றான் – வசனகவிதை:4 8/18,19
மேல்

கூடி (29)

கூட்டம் கூடி வந்தேமாதரம் என்று கோஷித்தாய் எமை தூஷித்தாய் –தேசீய:38 2/1
கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றல் அன்றி –தேசீய:40 2/1
குடிமையில் உயர்வு கல்வி ஞானமும் கூடி ஓங்கி –தேசீய:41 2/2
நேரத்திலே மலை வாரத்திலே நதி ஓரத்திலே உனை கூடி நின்றன் – தோத்திர:7 1/1
கொள்ளையிலே உனை கூடி முயங்கி குறிப்பினிலே ஒன்றுபட்டு நின்றன் – தோத்திர:7 2/2
நினையாத விளைவு எல்லாம் விளைந்து கூடி நினைத்த பயன் காண்பது அவள் செய்கை அன்றோ – தோத்திர:27 2/1
கூடி கிழ பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரை என பின் மாயும் பல – தோத்திர:32 4/3
கூடி மகிழ்வம் என்றால் விழி கோணத்திலே நகை காட்டி செல்வாள் அம்மா – தோத்திர:64 2/4
குணம் உயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே – தோத்திர:65 1/2
இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்று இசைக்கும் வேதம் – தோத்திர:71 3/4
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ஒன்று வெண்ணிலாவே வந்து கூடி இருக்குது நின் ஒளியோடு இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 1/4
கோடி நாளாய் இவ் வனத்தில் கூடி வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 6/1
கூடி தொழில் செய் – பல்வகை:1 2/18
கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா – பல்வகை:2 1/2
கூவி திரியும் சிலவே சில கூட்டங்கள் கூடி திசைதொறும் போகும் – தனி:2 1/3
கோலமிட்டு விளக்கினை ஏற்றி கூடி நின்று பராசக்தி முன்னே – தனி:2 5/1
அல்லல் போக இவருடன் கூடி ஆடியாடி களித்து இன்பம்கொள்வோம் – தனி:14 5/2
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம் – சுயசரிதை:2 16/3
கூடி பிரியாமலே ஓர் இரா எலாம் கொஞ்சி குலவி அங்கே – கண்ணன்:20 4/1
மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும் – பாஞ்சாலி:1 51/1
கொற்றவர் கோன் திரிதராட்டிரன் சபை கூடி வணங்கி இருந்தனர் அருளற்ற – பாஞ்சாலி:1 58/2
கொம்பினை ஒத்த மடப்பிடியோடும் கூடி இங்கு எய்தி விருந்து களிக்க – பாஞ்சாலி:1 111/3
கொக்கரித்து ஆர்த்து முழங்கியே களி கூடி சகுனியும் சொல்லுவான் எட்டு – பாஞ்சாலி:3 235/1
கூடி தருமனை நோக்கியே அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ – பாஞ்சாலி:5 272/4
காதலித்து கூடி களியுடனே வாழோமோ – குயில்:1 1/29
கூடி பின்னே குமரன் போயின் – குயில்:2 8/2
கூடி குடித்து குதித்தாலும் கோபுரத்தில் – குயில்:5 1/38
கூடி மதியில் குவிந்திடுமாம் செய்தி எலாம் – குயில்:6 1/24
கோட்டு பெரு மரங்கள் கூடி நின்ற கா அறியேன் – குயில்:7 1/72
மேல்

கூடிக்கிடக்குது (1)

கொடுமை பொறுக்கவில்லை கட்டும்காவலும் கூடிக்கிடக்குது அங்கே – கண்ணன்:20 3/3
மேல்

கூடிய (1)

குந்தியும் இளங்கொடியும் வந்து கூடிய மாதர்தம்மொடு குலவி – பாஞ்சாலி:2 160/1
மேல்

கூடியது (1)

கோலிய பூமழை பெய்திட தோரணம் கொஞ்ச நகர் எழில் கூடியது அன்றே – பாஞ்சாலி:2 157/4
மேல்

கூடியிருக்கும் (2)

எல்லாரும் கூடியிருக்கும் சபைதனிலே – பாஞ்சாலி:4 252/96
கூடியிருக்கும் சபையிலே உன்னை கூட்டிவருக என்று மன்னவன் சொல்ல – பாஞ்சாலி:5 270/2
மேல்

கூடியிருப்பினும் (1)

இன்னும் இங்கு இருள் கூடியிருப்பினும் ஏங்குகின்ற நரகத்து உயிர்கள் போல் – பல்வகை:10 3/1
மேல்

கூடியே (3)

வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே –தேசீய:30 3/3,4
மழை பொழிந்திடும் வண்ணத்தை கண்டு நான் வான் இருண்டு கரும் புயல் கூடியே
இழையும் மின்னல் சரேலென்று பாயவும் ஈர வாடை இரைந்து ஒலி செய்யவும் – தோத்திர:19 4/1,2
கொஞ்ச நேரத்தில் பாதகத்தொடு கூடியே உறவு எய்தி நின்றானால் – பாஞ்சாலி:1 39/4
மேல்

கூடிலேன் (1)

வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்
தூண்டு நூல் கணத்தோடு தனியனாய் தோழமை பிறிது இன்றி வருந்தினேன் – சுயசரிதை:1 4/3,4
மேல்

கூடிவந்து (1)

கூடிவந்து எய்தினர் கொழும் பொழில் இனங்களும் –தேசீய:42 1/15
மேல்

கூடிவரும் (1)

கூடிவரும் செய்கை இறுதியற்ற செய்கை – வசனகவிதை:3 2/16
மேல்

கூடிவாழ்வதில் (2)

உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை – வசனகவிதை:6 4/1
உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை – வசனகவிதை:6 4/4
மேல்

கூடிவிடுமாயின் (1)

சக்தி அருள் கூடிவிடுமாயின் உயிர் – தோத்திர:26 7/3
மேல்

கூடினோர் (1)

ஓதொணாத பெரும் தவம் கூடினோர் உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர் – சுயசரிதை:1 15/3
மேல்

கூடு (3)

கூடு திண்மை குறைந்தனை என்பது என் –தேசீய:19 3/4
கூடு முகமும் தெளிவுதான் குடிகொண்ட விழியும் சடைகளும் வெள்ளை – கண்ணன்:7 2/3
கொண்டை முடிப்பதற்கே மணம் கூடு தயிலங்களும் – கண்ணன்:15 2/1
மேல்

கூடுகட்டிக்கொண்டு (1)

பெட்டையினோடு இன்பம் பேசி களிப்புற்று பீடையிலாததோர் கூடுகட்டிக்கொண்டு
முட்டை தரும் குஞ்சை காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு –வேதாந்த:3 2/1,2
மேல்

கூடுகின்றன (1)

பல தினங்களாக மாலைதோறும் மேகங்கள் வந்து கூடுகின்றன
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய் ஓர் இலைகூட அசையாமல் புழுக்கம் கொடிதாக இருக்கிறது – வசனகவிதை:5 2/13,14
மேல்

கூடுகின்றிலதென்னில் (1)

கூடுமாயில் பிரமசரியம் கொள் கூடுகின்றிலதென்னில் பிழைகள் செய்து – சுயசரிதை:1 31/3
மேல்

கூடுங்காலை (1)

குழலில் கீறல் கூடுங்காலை
விழலே விழலே விழலே – குயில்:2 9/2,3
மேல்

கூடுதலும் (1)

கூடுதலும் அங்கே போய் கோவென்று அலறினாள் – பாஞ்சாலி:5 271/26
மேல்

கூடுதில்லை (1)

நிறைவுற இன்பம் வைத்தாள் அதை நினைக்கவும் முழுதிலும் கூடுதில்லை – கண்ணன்:2 8/4
மேல்

கூடுதே (1)

ஓரத்திலே புணை கூடுதே கந்தன் ஊக்கத்தை என் உளம் நாடுதே மலை – தோத்திர:5 1/3
மேல்

கூடும் (6)

சாதனைகள் யாவினையும் கூடும் கையை – தோத்திர:24 1/3
சஞ்சலங்கள் தீர்ந்து ஒருமை கூடும் மனம் – தோத்திர:24 13/3
கூடும் திரவியத்தின் குவைகள் திறல்கொள்ளும் கோடி வகை தொழில்கள் இவை – தோத்திர:32 9/1
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம் – சுயசரிதை:2 49/4
கொல்லலும் நோய்க்கு மருந்து செய் போழ்தில் கூடும் வெம்மையதாய் பிணக்குற்றே – பாஞ்சாலி:1 85/1
கூடும் வயதில் கிழவன் விரும்பி கூறினன் இஃது என சொல்லுவை கண்டாய் – பாஞ்சாலி:1 112/4
மேல்

கூடுமாயில் (1)

கூடுமாயில் பிரமசரியம் கொள் கூடுகின்றிலதென்னில் பிழைகள் செய்து – சுயசரிதை:1 31/3
மேல்

கூடுமோ (1)

தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ என்றன் சித்தம் தெளிவு நிலை கூடுமோ – தனி:11 2/2
மேல்

கூடுவதில்லை (2)

சொல்லவும் கூடுவதில்லை அவை சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை –தேசீய:21 10/1
நானத்தை கணக்கிடவே மனம் நாடி மிக முயல்கினும் கூடுவதில்லை
கானத்து மலைகள் உண்டு எந்த காலமும் ஒர் இடம்விட்டு நகர்வதில்லை – கண்ணன்:2 4/2,3
மேல்

கூடுவோம் (1)

தமிழில் பழமறையை பாடுவோம் என்றும் தலைமை பெருமை புகழ் கூடுவோம் – தனி:11 10/2
மேல்

கூடையில் (1)

கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மை கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில் – கண்ணன்:7 1/2
மேல்

கூண்டில் (1)

கூண்டில் பறவையும் அல்லளே ஐவர் கூட்டு மனைவிக்கு நாணம் ஏன் சினம் – பாஞ்சாலி:4 254/3
மேல்

கூண்டுக்கிளியினை (1)

கூண்டுக்கிளியினை போல் தனிமைகொண்டு மிகவும் நொந்தேன் – கண்ணன்:10 1/3
மேல்

கூத்தடிக்கிறீர் (1)

நேரம் மிகுந்தது இன்னும் நித்திரை இன்றி உங்கள் நினைப்பு தெரியவில்லை கூத்தடிக்கிறீர்
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவில் என்ன தூளிபடுகுதடி இவ்விடத்திலே – கண்ணன்:11 1/1,2
மேல்

கூத்திடுவாய் (1)

கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையை கொஞ்சி தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய்
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 5/2,3
மேல்

கூத்திடுவாள் (1)

அல்லவராயின் அவரை விழுங்கி பின் ஆனந்த கூத்திடுவாள் –தேசீய:9 9/2
மேல்

கூத்திடுவீரே (1)

பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே பரதநாட்டிய கூத்திடுவீரே
காட்டும் வைய பொருள்களின் உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே – பல்வகை:8 3/1,2
மேல்

கூத்திடுவோமடா (2)

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா – பல்வகை:5 1/1
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா
தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன தாயின் பெயரும் சதி என்ற நாமமும் – பல்வகை:5 1/1,2
மேல்

கூத்திலும் (1)

பண்ணும் நல் பாவையிலும் நல்ல பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும் – தோத்திர:59 6/3
மேல்

கூத்திலே (1)

சக்தி கூத்திலே ஒளி ஒரு தாளம் – வசனகவிதை:3 1/37
மேல்

கூத்தினுக்கு (1)

கூத்தினுக்கு சென்றதனை கேட்டு குதூகலமாய் – குயில்:9 1/120
மேல்

கூத்தினை (1)

கண்டோம் கண்டோம் கண்டோம் இந்த காலத்தின் கூத்தினை கண் முன்பு கண்டோம் – தனி:4 3/4
மேல்

கூத்து (2)

மந்திரத்தால் இவ் உலகு எலாம் வந்த மாய களி பெரும் கூத்து காண் இதை – கண்ணன்:7 7/3
சாற்றினிலே பண் கூத்து எனும் இவற்றின் சாரம் எலாம் – குயில்:9 1/243
மேல்

கூத்துக்களும் (1)

கோத்த பொய் வேதங்களும் மத கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய் நடையும் இன மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் – கண்ணன்:2 9/3,4
மேல்

கூத்துகள் (1)

தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள் தனிமை வேய்ங்குழல் என்று இவை போற்றுவான் – கண்ணன்:5 5/2
மேல்

கூத்தே (1)

ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து உறுமி திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய் – தோத்திர:35 3/2
மேல்

கூத்தை (5)

அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 1/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 2/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 3/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 4/3
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 5/3
மேல்

கூந்தல் (2)

சீரழிய கூந்தல் சிதைய கவர்ந்துபோய் – பாஞ்சாலி:5 271/24
வம்பு மலர் கூந்தல் மண் மேல் புரண்டுவிழ – பாஞ்சாலி:5 271/90
மேல்

கூந்தலினை (1)

பக்கத்தில் வந்தே அ பாஞ்சாலி கூந்தலினை
கையினால் பற்றி கரகரென தான் இழுத்தான் – பாஞ்சாலி:5 271/10,11
மேல்

கூப்பி (1)

தாளை பார்த்து இரு கரமும் சிரம் மேல் கூப்பி சங்கரசங்கர என்று பணிதல் வேண்டும் – சுயசரிதை:2 16/2
மேல்

கூப்பிட்டால்கூட (1)

சில சமயங்களில் அசையாமல் உம்மென்று இருக்கும் கூப்பிட்டால்கூட ஏன் என்று கேட்காது – வசனகவிதை:4 1/8
மேல்

கூம்புதல் (1)

கூம்புதல் இன்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலை பெறும் –வேதாந்த:15 6/2
மேல்

கூர் (2)

கூற நா நடுங்கும் ஓர் கொற்ற கூர் வாள் –தேசீய:42 1/33
குன்று சத்தியவிரதன் இதழ் கூர் புருமித்திரன் சயன் என்பார் – பாஞ்சாலி:2 164/4
மேல்

கூர்த்த (1)

கூர்த்த இடர்கள் போக்கிடும் நம் கோமான் பாத குளிர் நிழலே – தோத்திர:1 15/4
மேல்

கூரை (1)

நொய்ந்த வீடு நொய்ந்த கதவு நொய்ந்த கூரை
நொய்ந்த மரம் நொய்ந்த உடல் நொய்ந்த உயிர் – வசனகவிதை:4 9/9,10
மேல்

கூரையிலிருந்து (1)

கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது – வசனகவிதை:4 13/3
மேல்

கூரையும்தான் (1)

நாணற்ற வார்த்தை அன்றோ வீட்டை சுட்டால் நலமான கூரையும்தான் எரிந்திடாதோ – சுயசரிதை:2 56/2
மேல்

கூலி (3)

மண் வெட்டி கூலி தினலாச்சே எங்கள் வாள் வலியும் வேல் வலியும் போச்சே – பல்வகை:9 1/1
கூலி மிக கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார் – கண்ணன்:4 1/1
கூலி என்ன கேட்கின்றாய் கூறுக என்றேன் ஐயனே – கண்ணன்:4 1/33
மேல்

கூவி (4)

கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றல் அன்றி –தேசீய:40 2/1
நீயே சரணம் என்று கூவி என்றன் நெஞ்சில் பேர் உறுதிகொண்டு அடி – தோத்திர:32 2/1
கூவி திரியும் சிலவே சில கூட்டங்கள் கூடி திசைதொறும் போகும் – தனி:2 1/3
கூவி சமயர்க்கு உரைப்பன பொய் இ குவலயத்தில் – பிற்சேர்க்கை:19 2/2
மேல்

கூவினார் (1)

துளக்கமுற்ற விண்மீனிடம் செல்லுவார் தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்
களிப்பு மிஞ்சி ஒளியினை பண்டு ஒரு காலம் நீர் சென்று தேடியதில்லையோ – பல்வகை:10 1/3,4
மேல்

கூவுகின்றது (1)

கோழி கூவுகின்றது
எறும்பு ஊர்ந்து செல்கின்றது – வசனகவிதை:3 2/6,7
மேல்

கூவுங்கால் (1)

இதயமோ எனில் காலையும் மாலையும் எந்த நேரமும் வாணியை கூவுங்கால்
எதையும் வேண்டிலது அன்னை பராசக்தி இன்பம் ஒன்றினை பாடுதல் அன்றியே – தோத்திர:19 1/3,4
மேல்

கூவுதல் (1)

கொள்ளற்கு அரிய பிரமம் என்றே மறை கூவுதல் கேளீரோ –வேதாந்த:10 8/2
மேல்

கூவும் (1)

பின்னர் தெருவில் ஓர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும் – தனி:2 2/4
மேல்

கூவுமாறு (1)

குன்றி தீக்குறி தோன்றும் இராப்புட்கள் கூவுமாறு ஒத்திருந்தன காண்டிரோ – பல்வகை:10 2/4
மேல்

கூழ் (1)

கூழ் இவரே பிறர்க்கு அளிப்பர் நிலமுடை வைசியர் என்றே கொள்வாம்-மனோ – பிற்சேர்க்கை:10 2/4
மேல்

கூளத்தை (1)

கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம் – சுயசரிதை:2 16/3
மேல்

கூளம் (3)

கூளம் கூளம் கூளம் – குயில்:2 4/3
கூளம் கூளம் கூளம் – குயில்:2 4/3
கூளம் கூளம் கூளம் – குயில்:2 4/3
மேல்

கூற்றம் (1)

காற்று என வந்தது கூற்றம் இங்கே நம்மை காத்தது தெய்வ வலிமை அன்றோ – தனி:5 3/2
மேல்

கூற்றான (1)

கூற்றான அரக்கர் உயிர் முடித்துக்கொள்வோம் குலைவான மாயைதனை அடித்துக்கொள்வோம் – சுயசரிதை:2 58/3
மேல்

கூற்றினுக்கு (1)

கூற்றினுக்கு உயிர் கோடி கொடுத்தும் நின் –தேசீய:29 7/3
மேல்

கூற்றுக்கு (1)

கூடி கிழ பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரை என பின் மாயும் பல – தோத்திர:32 4/3
மேல்

கூற்றே (1)

கங்கை சடையா காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ – பிற்சேர்க்கை:21 4/2
மேல்

கூற (11)

கொன்றிடல் போல் ஒரு வார்த்தை இங்கு கூற தகாதவன் கூறினன் கண்டீர் –தேசீய:21 8/2
மெய்ஞ்ஞானம் நம் இறையவர் கூற
குன்று எனும் வயிர கொற்ற வான் புயத்தோன் –தேசீய:32 1/174,175
கூற நா நடுங்கும் ஓர் கொற்ற கூர் வாள் –தேசீய:42 1/33
குணமதில் பலவாம் கூற கேளீர் – தோத்திர:1 4/9
நண்ணி அமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள –வேதாந்த:4 3/3
நல்ல தொழில் உணர்ந்தார் செயல் என்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூற
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்து – பாஞ்சாலி:1 110/2,3
தீ செயல் இஃது என்று அதையும் குறிப்பால் செப்பிடுவாய் என மன்னவன் கூற
போச்சுது போச்சுது பாரதநாடு போச்சுது நல் அறம் போச்சுது வேதம் – பாஞ்சாலி:1 113/2,3
பாணர்கள் துதி கூற இளம்பகலவன் எழும் முனர் துயிலெழுந்தார் – பாஞ்சாலி:2 162/1
மாய சொல் கூற மனம் தீயுற நின்றேன் – குயில்:3 1/12
நாடி சினத்துடனே நானா மொழி கூற
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால் – குயில்:9 1/46,47
அன்னாய் இங்கு உனை கூற பிழை இல்லை யாமே நின் அருள் பெற்று ஓங்க – பிற்சேர்க்கை:7 1/1
மேல்

கூறடா (1)

ஏகி நமது உளம் கூறடா அவள் ஏழு கணத்தில் வரச்செய்வாய் உன்னை – பாஞ்சாலி:4 261/2
மேல்

கூறல் (1)

பொய்ம்மை கூறல் அஞ்சுவாய் வா வா வா –தேசீய:16 6/3
மேல்

கூறவில்லை (1)

வஞ்சனை நான் கூறவில்லை மான்மதனார் விந்தையால் – குயில்:4 1/15
மேல்

கூறாய் (4)

வாலை வளரும் மலை கூறாய் ஞாலத்துள் –தேசீய:13 5/2
தாராள் புனையும் மணி தார் கூறாய் சேராரை –தேசீய:13 9/2
வந்தித்து நினை கேட்டேன் கூறாய் என்றேன் வானவனாம் கோவிந்தசாமி சொல்வான் – சுயசரிதை:2 59/2
வன்ன குருவி நீ வாழும் முறை கூறாய் – பிற்சேர்க்கை:14 2/2
மேல்

கூறார் (1)

இடும்பைக்கு வழி சொல்வார் நன்மை காண்பார் இளகுமொழி கூறார் என நினைத்தே தானும் – பாஞ்சாலி:3 214/3
மேல்

கூறி (38)

வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ இதை –தேசீய:3 1/4
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இ நாடே அவர் –தேசீய:3 2/2
விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி வேண்டியவாறு உனை பாடுதும் காணாய் –தேசீய:11 5/3
என்ன கூறி இசைத்திட வல்லனே –தேசீய:29 8/2
என பல கூறி அவ் இந்திரன் புதல்வன் –தேசீய:32 1/154
ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற –தேசீய:42 1/19
ஆசிகள் கூறி அவையினை நோக்கி –தேசீய:42 1/102
ஆசி கூறி அருளுக ஏழையேற்கு –தேசீய:50 15/3
சமயம் உளபடிக்கு எல்லாம் பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த –தேசீய:52 5/2
பிற நாட்டு இருப்போர் பெயர் பல கூறி
அல்லா யெஹோவா என தொழுது இன்புறும் – தோத்திர:1 8/5,6
வெல்லும் முறை கூறி தவ மேன்மை கொடுத்து அருளல் வேண்டும் – தோத்திர:32 6/4
அஞ்சல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல் ஆண்மை சமைப்பவனை பல் வெற்றிகள் ஆக்கி கொடுப்பவனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 4/2
என பல கூறி இரங்கினன் பின்னர் – தனி:13 1/63
என்று இது கூறி இருந்த அ பன்றி தன் – தனி:13 1/70
விராவு புகழ் ஆங்கில தீம் கவியரசர்தாமும் மிக வியந்து கூறி
பராவி என்றன் தமிழ் கவியை மொழிபெயர்த்து போற்றுகின்றார் பாரோர் ஏத்தும் – தனி:22 7/2,3
என்ன கூறி மற்று எங்ஙன் உணர்த்துவேன் இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதே – சுயசரிதை:1 26/4
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறி கோ கவிஞன் காளிதாசனும் பூஜித்தான் – சுயசரிதை:2 51/1
நன்று என கூறி ஓர் நாழிகை இருந்தான் – கண்ணன்:6 1/107
மா ரத வீரர் அ பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து மா மறை ஆசிகள் கூறி பெரும் புகழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/2
புகையும் என்றன் உளத்தினை வீறில் புன்சொல் கூறி அவித்திடலாமோ – பாஞ்சாலி:1 105/2
எண்ணமுறலாகி தன் இதயத்துள்ளே இனைய பல மொழி கூறி இரங்குவானால் – பாஞ்சாலி:1 115/4
தங்க பதுமை என வந்து நின்ற தையலுக்கு ஐயன் நல் ஆசிகள் கூறி
அங்கம் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் ஆங்கு வந்துற்ற உறவினர் நண்பர் – பாஞ்சாலி:1 121/1,2
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல் வழி செல்வோம் என கூறி வணங்கி சென்றார் – பாஞ்சாலி:1 144/4
கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொல் கூறி குமைவதனில் அணுவளவும் குழப்பம் எய்தான் – பாஞ்சாலி:3 213/2
நலம் கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா நரபதி நின் அவைக்களத்தே அமைச்சராக – பாஞ்சாலி:3 215/1
மதி வழியே செல்லுக என விதுரன் கூறி வாய் மூடி தலைகுனிந்தே இருக்கை கொண்டான் – பாஞ்சாலி:3 217/3
பாரதர்க்கு வேந்தன் பணித்தான் என கூறி
பாண்டவர்தம் தேவிதனை பார் வேந்தர் மன்றினிலே – பாஞ்சாலி:4 252/84,85
என்னை முன்னே கூறி இழந்தாரா தம்மையே – பாஞ்சாலி:4 252/105
என்று அவளும் கூறி இவன் போகிய பின்னர் – பாஞ்சாலி:4 252/108
சொன்ன மொழியினை பாகன் போய் அந்த தோகை முன் கூறி வணங்கினான் அவள் – பாஞ்சாலி:4 255/3
ஒக்கும் என கூறி உகந்தனராம் சாத்திரிமார் – பாஞ்சாலி:5 271/80
கொண்டு சிறு குயிலும் கூறி மறைந்தது காண் – குயில்:3 1/75
ஏதேதோ கூறி இரங்கும் நிலை கண்டேன் – குயில்:5 1/13
நேச உரை கூறி நெடிது உயிர்த்து பொய் குயிலி – குயில்:7 1/68
சிங்கமே என வாழ்தல் சிறப்பு எனா செம்மை கூறி நம் தாய் பெரும் தேயத்தை – பிற்சேர்க்கை:2 1/2
வந்த மாதேவி நினை நல்வரவு கூறி அடி வணங்கிடாமல் – பிற்சேர்க்கை:7 5/2
உற்றவர் நாட்டவர் ஊரார் இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல் – பிற்சேர்க்கை:8 15/1
இடியுற கூறி வெற்றி ஏறி – பிற்சேர்க்கை:26 1/62
மேல்

கூறிக்கூறி (1)

கூறிக்கூறி குறைவற தேர்ந்து – தோத்திர:1 12/14
மேல்

கூறிட (1)

தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் செல்வம் யாவினும் மேல் செல்வம் எய்தினோம் – பல்வகை:4 10/4
மேல்

கூறிடவும் (1)

துரியோதனன் இ சுடுசொற்கள் கூறிடவும்
பெரியோன் விதுரன் பெரிதும் சினம்கொண்டு – பாஞ்சாலி:4 252/45,46
மேல்

கூறிடும் (1)

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் இந்த காற்று அதை எட்டு திசையிலும் கூறிடும்
திண்ணமுடையான் மணி வண்ணமுடையான் உயிர் தேவர் தலைவன் புவி மிசை தோன்றினன் – தோத்திர:49 1/1,2
மேல்

கூறிடுமால் (1)

பண் இசை போல் இன் குரலால் பாவி அது கூறிடுமால்
ஐயனே என் உயிரின் ஆசையே ஏழை எனை – குயில்:8 1/42,43
மேல்

கூறிடுமே (1)

நாமம் பல் கோடி ஒர் உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 5/1
மேல்

கூறிடுவாய் (1)

என் நிலைமை கூறிடுவாய் ஏகுக நீ என்றிட்டாள் – பாஞ்சாலி:5 271/8
மேல்

கூறிய (7)

மேலே நீ கூறிய விநாச புலவரை –தேசீய:24 1/118
முன்னவன் கூறிய மொழியினை நினைந்தும் – தனி:13 1/43
வாழ்வு முற்றும் கனவு என கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண் – சுயசரிதை:1 1/1
முன்னம் தான் நெஞ்சில் கூறிய எல்லாம் மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான் – பாஞ்சாலி:1 41/4
கூடி தருமனை நோக்கியே அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ – பாஞ்சாலி:5 272/4
பொய்ம்மை குயில் என்னை போந்திடவே கூறிய நாள் – குயில்:8 1/3
சாதல் பொழுதிலே தார் வேந்தன் கூறிய சொல் – குயில்:9 1/182
மேல்

கூறியதை (1)

சந்தமும் கூறியதை தேராமே பிறப்பு ஒன்றால் தருக்கி நாமே – பிற்சேர்க்கை:10 1/3
மேல்

கூறியவர் (1)

நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய் நினக்கு எவரும் கூறியவர் இல்லை-கொல்லோ – பாஞ்சாலி:3 214/4
மேல்

கூறியும் (4)

எத்தனை கூறியும் விடுதலைக்கு இசையாய் – தோத்திர:1 36/2
புகழ்ச்சிகள் கூறியும் புலமையை வியந்தும் – கண்ணன்:6 1/23
சிரித்து உரை கூறியும் செள்ளென விழுந்தும் – கண்ணன்:6 1/61
எந்தை நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பல் முறை கூறியும் கேளாய் – பாஞ்சாலி:1 97/2
மேல்

கூறியுள்ள (1)

கூறியுள்ள மாஞ்சோலைதன்னை குறுகி அந்த – குயில்:8 1/25
மேல்

கூறியே (1)

என்று சுயோதனன் கூறியே நெஞ்சம் ஈர்ந்திட கண்ட சகுனிதான் அட – பாஞ்சாலி:1 53/1
மேல்

கூறில் (2)

நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ –தேசீய:16 2/3
மாதர் அன்பு கூறில் மனம் இளகார் இங்கு உளரோ – குயில்:9 1/222
மேல்

கூறிவிட்டார் (1)

கடி ஒன்றில் எழுந்தது பார் குடியரசு என்று உலகு அறிய கூறிவிட்டார்
அடிமைக்கு தளை இல்லை யாரும் இப்போது அடிமை இல்லை அறிக என்றார் –தேசீய:52 6/2,3
மேல்

கூறின் (1)

உய்கை கொண்டு அதன் நாமத்தை கூறின் உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர் – பிற்சேர்க்கை:1 4/2
மேல்

கூறினர் (1)

காவலர்க்கு விதித்தது அ நூலில் கவறும் நஞ்சு என கூறினர் கண்டாய் – பாஞ்சாலி:2 171/4
மேல்

கூறினள் (1)

கேள் விடை கூறினள் மாதா நம்மிடை – பிற்சேர்க்கை:26 1/27
மேல்

கூறினன் (2)

கொன்றிடல் போல் ஒரு வார்த்தை இங்கு கூற தகாதவன் கூறினன் கண்டீர் –தேசீய:21 8/2
கூடும் வயதில் கிழவன் விரும்பி கூறினன் இஃது என சொல்லுவை கண்டாய் – பாஞ்சாலி:1 112/4
மேல்

கூறினாய் (1)

கோழைப்பட்ட ஜனங்களுக்கு உண்மைகள் கூறினாய் சட்டம் மீறினாய் –தேசீய:38 3/1
மேல்

கூறினான் (7)

இல்லை என்று ஒரு சொல் இமைக்கும் முன் கூறினான்
வெடுக்கென சின தீ வெள்ளமாய் பாய்ந்திட – கண்ணன்:6 1/121,122
எனில் பிறிது எண்ணலேன் என்றன் கொள்கை இது என கூறினான் – பாஞ்சாலி:1 56/4
பூபாலரே என்று அ புண்ணியனும் கூறினான்
சொல் இதனை கேட்டு துரியோதன மூடன் – பாஞ்சாலி:4 252/78,79
நன்று மனத்திடை கொண்டவன் சபை நண்ணி நிகழ்ந்தது கூறினான் – பாஞ்சாலி:4 259/4
மாதவிடாயில் இருக்கிறாள் அந்த மாதரசு என்பதும் கூறினான் கெட்ட – பாஞ்சாலி:4 260/1
தீதுரைகள் கூறினான் கர்ணன் சிரித்திட்டான் – பாஞ்சாலி:5 271/48
பாவி துச்சாதனனும் பாங்கு இழந்து கூறினான் – பாஞ்சாலி:5 271/92
மேல்

கூறினீர் (1)

சால நன்கு கூறினீர் ஐயா தரும நெறி – பாஞ்சாலி:5 271/74
மேல்

கூறினும் (1)

பன்னி ஆயிரம் கூறினும் பக்தியின் பான்மை நன்கு பகர்ந்திடலாகுமோ – சுயசரிதை:1 14/2
மேல்

கூறினேன் (1)

ஞானியர்தம் இயல் கூறினேன் அந்த ஞானம் விரைவினில் எய்துவாய் என – கண்ணன்:7 12/1
மேல்

கூறீர் (1)

கொன்றுவிட சித்தமோ கூறீர் ஒரு மொழியில் – குயில்:8 1/45
மேல்

கூறீரோ (1)

யாதானும் சற்றே இடம் இருந்தால் கூறீரோ
&10 வசன கவிதை – வசனகவிதை:9 1/262,263
மேல்

கூறு (3)

சங்கடம் வந்தால் இரண்டு கூறு
சக்தி சில சோதனைகள் செய்தால் அவள் – தோத்திர:26 9/2,3
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள் – தோத்திர:62 1/2
திக்கு அனைத்தும் வென்ற பார்த்தனை வென்று தீர்த்தனம் வீமனை கூறு என்றான் தர்மன் – பாஞ்சாலி:3 235/2
மேல்

கூறு-மின் (1)

வெற்றி கூறு-மின் வெண்சங்கு ஊது-மின் –தேசீய:12 5/1
மேல்

கூறுக (1)

கூலி என்ன கேட்கின்றாய் கூறுக என்றேன் ஐயனே – கண்ணன்:4 1/33
மேல்

கூறுகிலேன் (1)

குற்றம் நுமை கூறுகிலேன் குற்றம் இலேன் யான் அம்ம – குயில்:8 1/54
மேல்

கூறுகிறோம் (1)

உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்
உன்னை வழிபடுகின்றோம் – வசனகவிதை:4 6/10,11
மேல்

கூறுகின்றார் (1)

கூறுகின்றார் ஐயர் குயிலே கேள் முன் பிறப்பில் – குயில்:9 1/15
மேல்

கூறுகின்றான் (2)

கோன் ஆகி சாத்திரத்தை ஆளும் மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான்
ஞானானுபவத்தில் இது முடிவாம் கண்டீர் நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான் – சுயசரிதை:2 13/3,4
கண்ணை விழித்து உனது காவலனும் கூறுகின்றான்
பெண்ணே இனி நான் பிழைத்திடேன் சில் கணத்தே – குயில்:9 1/160,161
மேல்

கூறுகின்றோம் (2)

அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம்
அவன் வாழ்க – வசனகவிதை:4 8/28,29
காற்று என்று சக்தியை கூறுகின்றோம்
எற்றுகிற சக்தி புடைக்கிற சக்தி மோதுகிற சக்தி சுழற்றுவது ஊதுவது – வசனகவிதை:4 11/1,2
மேல்

கூறுதல் (1)

தோல் விலைக்கு பசுவினை கொல்லும் துட்டன் இவ் உரை கூறுதல் கேட்டே – பாஞ்சாலி:2 171/1
மேல்

கூறுதற்கு (1)

முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே – கண்ணன்:2 3/4
மேல்

கூறுதி (1)

கொள்ளை ஒலி கடலே நல் அறம் நீ கூறுதி காண் – பிற்சேர்க்கை:25 1/2
மேல்

கூறுபட (1)

கூறுபட பல கோடி அவுணரின் கூட்டத்தை கண்டு கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய் – தோத்திர:3 3/3
மேல்

கூறும் (19)

நூறு நூல்கள் போற்றுவாய் மெய் கூறும்
நூலில் ஒத்து இயல்கிலாய் போ போ போ –தேசீய:16 3/3,4
புத்தம் புதிய கலைகள் பஞ்சபூத செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே அந்த மேன்மை கலைகள் தமிழினில் இல்லை –தேசீய:21 9/1,2
நாசம் கூறும் நாட்டுவயித்தியர் –தேசீய:24 1/113
கூறும் எங்கள் மிடிமையை தீர்ப்பது குற்றமோ இதில் செற்றமோ –தேசீய:39 5/2
யாது அவன் கூறும் என் எமக்கு அருளும் –தேசீய:42 1/22
ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம் – தோத்திர:41 5/1,2
கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் – தோத்திர:62 1/4
சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ பல –வேதாந்த:10 3/1
நறிய பொன் மலர் மென் சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ – பல்வகை:4 3/4
நலத்தை காக்க விரும்புதல் தீமையாம் நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ – பல்வகை:4 5/4
இனையது கூறும் ஏடா நிற்க – தனி:13 1/48
மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால் இவ் உண்மை விளங்க கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமதம் என புவியோர் சொல்லுவாரே – தனி:23 3/3,4
கூறும் எந்த துயர்கள் விளையினும் கோடி மக்கள் பழி வந்து சூழினும் – சுயசரிதை:1 33/3
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும் நல் மணிமண்டபம் செய்ததும் சொல்வாய் – பாஞ்சாலி:1 112/1
நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன் உளம் நொந்து இவை கூறும்
தேவல பெயர் மா முனிவோனும் செய்ய கேள்வி அசிதனும் முன்னர் – பாஞ்சாலி:2 171/2,3
கொன்றுவிட்டாலும் பெரிதில்லை இவள் கூறும் வினாவிற்கு அவர் விடை தரின் – பாஞ்சாலி:4 259/2
கூறும் பணி செய வல்லன் யான் அந்த கோதை வராவிடில் என் செய்வேன் – பாஞ்சாலி:4 262/4
வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்
உயிருடையன எல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம் – வசனகவிதை:4 5/1,2
நீ இனி கவலாது அறப்போர்செய்தல் நேர்மை என்றதோர் செய்தியை கூறும் என் – பிற்சேர்க்கை:9 1/2
மேல்

கூறுமே (1)

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நைய பாடு என்று ஒரு தெய்வம் கூறுமே
கூட்டி மானுட சாதியை ஒன்று என கொண்டு வையம் முழுதும் பயனுற – தோத்திர:19 2/1,2
மேல்

கூறுவதாம் (1)

கொண்டு குயில் ஆங்கே கூறுவதாம் நந்தியே – குயில்:7 1/15
மேல்

கூறுவதோ (1)

கோல நல் பட்டுக்களின் வகை கூறுவதோ எண்ணில் ஏறுவதோ – பாஞ்சாலி:1 31/4
மேல்

கூறுவர் (4)

மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே – தோத்திர:73 2/1
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே இங்கு தோன்றும் உலகவளே என்று கூறுவர் வெண்ணிலாவே – தோத்திர:73 3/3
இலங்கு நூல் உணர் ஞானியர் கூறுவர் யானும் மற்றது மெய் என தேர்ந்துளேன் – சுயசரிதை:1 11/3
மதியினில் புலை நாத்திகம் கூறுவர் மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே – சுயசரிதை:1 13/3
மேல்

கூறுவரோ (1)

கோத்திர குல மன்னர் பிறர் குறைபட தம் புகழ் கூறுவரோ
நா திறன் மிக உடையாய் எனில் நம்மவர் காத்திடும் பழ வழக்கை – பாஞ்சாலி:2 175/2,3
மேல்

கூறுவன் (3)

பொய்யருக்கு இது கூறுவன் கேட்பீரேல் பொழுது எலாம் உங்கள் பாடத்தில் போக்கி நான் – சுயசரிதை:1 28/2
மருளர்தம் இசையே பழி கூறுவன் மா மகட்கு இங்கு ஒர் ஊனம் உரைத்திலன் – சுயசரிதை:1 43/4
சரண் என்று போவையேல் அவன் சத்தியம் கூறுவன் என்றனர் – கண்ணன்:7 3/4
மேல்

கூறுவனோ (1)

ஆளை விழுங்கும் அதிசயத்தை கூறுவனோ
மீள விழியில் மிதந்த கவிதை எலாம் – குயில்:9 1/233,234
மேல்

கூறுவாள் (1)

இன்னல் விளைந்து இவை கூறுவாள் தம்பி என்றனை வீணில் அழைப்பது ஏன் – பாஞ்சாலி:4 255/4
மேல்

கூறுவான் (2)

பெரும் புகழ் சேரவே முனிநாதனுக்கு இ மொழி கூறுவான் சுரர் – தோத்திர:5 2/2
பாடுபட்டோர்க்கும் விளங்கிடா உண்மை பார்த்திவன் எங்ஙனம் கூறுவான் – கண்ணன்:7 5/4
மேல்

கூறுவீர் (1)

போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர் புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே – பல்வகை:5 7/1
மேல்

கூறுவேன் (1)

அனைத்து ஒர் செய்தி மற்று ஏதெனில் கூறுவேன் அம்ம மாக்கள் மணம் எனும் செய்தியே – சுயசரிதை:1 30/3
மேல்

கூறுவோம் (2)

அமிழ்தம் அமிழ்தம் என்று கூறுவோம் நித்தம் அனலை பணிந்து மலர் தூவுவோம் – தனி:11 10/1
மந்திரம் கூறுவோம் உண்மையே தெய்வம் – வசனகவிதை:7 0/86
மேல்

கூறேன் (2)

மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே – சுயசரிதை:2 6/3
மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே – சுயசரிதை:2 6/3
மேல்

கூனர்தமை (1)

கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும் – குயில்:7 1/46
மேல்

கூனன் (1)

கூனன் ஒருவன் வந்து இ நாணி பின்னலை கொண்டை மலர் சிதற நின்று இழுத்ததும் – கண்ணன்:11 2/2
மேல்

கூனி (1)

கூனி இருக்கும் கொலு நேர்த்திதன்னிலுமே – குயில்:5 1/30
மேல்