கீ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீ 1
கீச் 4
கீச்சிட்டு 1
கீச்சுக்கீச்சென்று 1
கீத 1
கீதங்களாம் 1
கீதம் 6
கீதை 3
கீர்த்தனை 1
கீர்த்தி 10
கீர்த்திகள் 1
கீர்த்திகொள் 1
கீர்த்திபெற்றார் 1
கீர்த்தியில் 2
கீழ் 8
கீழ்களின் 1
கீழ்த்திசை 2
கீழ்த்திசையில் 1
கீழ்நிலை 1
கீழ்ப்பட்டே 1
கீழ்ப்புறத்து 1
கீழ்மக்கட்கு 1
கீழ்மேலாம் 1
கீழ்மை 2
கீழ்மைகள் 1
கீழ்மையினால் 1
கீழடியார் 1
கீழடியார்க்கு 1
கீழவர் 2
கீழான் 1
கீழும் 4
கீழுறு 1
கீழே 3
கீழோர் 1
கீழோர்க்கு 1
கீற்று 1
கீற்றும் 1
கீறல் 1

கீ (1)

கிசு கிசு கிசு கீ என்றும் ரங்க ரங்க – வசனகவிதை:6 1/12
மேல்

கீச் (4)

குக்கூவே என்றும் கீச் கீச் கீச் கீச் – வசனகவிதை:6 1/11
குக்கூவே என்றும் கீச் கீச் கீச் கீச் – வசனகவிதை:6 1/11
குக்கூவே என்றும் கீச் கீச் கீச் கீச் – வசனகவிதை:6 1/11
குக்கூவே என்றும் கீச் கீச் கீச் கீச்
கிசு கிசு கிசு கீ என்றும் ரங்க ரங்க – வசனகவிதை:6 1/11,12
மேல்

கீச்சிட்டு (1)

தென்னைமர கிளை மீதில் அங்கு ஓர் செல்வ பசுங்கிளி கீச்சிட்டு பாயும் – தனி:2 2/1
மேல்

கீச்சுக்கீச்சென்று (1)

வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு ஸந்தோஷம் – வசனகவிதை:4 1/34
மேல்

கீத (1)

நல்ல கீத தொழில் உணர் பாணர் நடனம் வல்ல நகை முக மாதர் – தனி:14 5/1
மேல்

கீதங்களாம் (1)

மந்திர கீதங்களாம் தர்க்க வாதங்களாம் தவ நீதங்களாம் – பாஞ்சாலி:1 8/3
மேல்

கீதம் (6)

கீதம் இசைக்குதடா நந்தலாலா – தோத்திர:48 3/2
கீதம் பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள் – தோத்திர:62 2/2
நல்ல கீதம் சிவ தனி நாதம் நடன ஞானியர் சிற்சபை ஆட்டம் – தனி:14 6/1
புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது பொங்கி ததும்பும் நல் கீதம் படிப்பான் – கண்ணன்:9 6/1
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர் வன் தடம் தோள் கொட்டி ஆர்த்தனர் மன்னவர் – பாஞ்சாலி:2 156/1
ஆதிமறை கீதம் அரிவையர்கள் சொன்னது போய் – பிற்சேர்க்கை:5 6/1
மேல்

கீதை (3)

போர்க்களத்தே பரஞான மெய் கீதை புகன்றது எவருடை வாய் பகை –தேசீய:8 8/1
எண்ணரும் புகழ் கீதை என சொலும் – தோத்திர:45 2/3
கீதை உரைத்து எனை இன்புறச்செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன் – கண்ணன்:1 10/4
மேல்

கீர்த்தனை (1)

தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள் தனிமை வேய்ங்குழல் என்று இவை போற்றுவான் – கண்ணன்:5 5/2
மேல்

கீர்த்தி (10)

முடிவிலா கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மையுற்றாய் –தேசீய:41 2/4
திகழ்வோம் பெரும் கீர்த்தி சேர்ந்தே இகழ்வோமே – தோத்திர:1 13/2
நாடும்படிக்கு வினை செய்து இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க கலி – தோத்திர:32 9/2
கேளீர் முனிவர்களே இந்த கீர்த்தி கொள் சரிதையை கேட்டவர்க்கே – தோத்திர:42 4/1
திரு வளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல் அறிவு வீரம் – தோத்திர:71 1/1
கும்பமுனி என தோன்றும் சாமிநாத புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுற பெற்றனனேல் இதற்கு என்-கொல் பேருவகை படைக்கின்றீரே – தனி:21 1/3,4
விண்ணளவு உயர்ந்த கீர்த்தி வெங்கடேசுரெட்ட மன்னா – தனி:22 2/1
அன்றொரு நாள் புதுவைநகர்தனிலே கீர்த்தி அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்மராஜா – சுயசரிதை:2 23/1
சாதமும் நெய்யும் எனக்கு என்றான் எங்கும் சாற்றிடும் கீர்த்தி அவர்க்கு என்றான் அட – பாஞ்சாலி:1 89/2
ஆயிழையே நின்றன் அழகின் பெரும் கீர்த்தி
தேயம் எங்கும் தான் பரவ தேன்மலையின் சார்பினில் ஓர் – குயில்:9 1/31,32
மேல்

கீர்த்திகள் (1)

கீதை உரைத்து எனை இன்புறச்செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன் – கண்ணன்:1 10/4
மேல்

கீர்த்திகொள் (1)

மாதர்கள் கற்புள்ள வரையும் பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் –தேசீய:14 8/2
மேல்

கீர்த்திபெற்றார் (1)

யாதொரு தீங்கும் இலாமலே பிழைத்து எண்ணரும் கீர்த்திபெற்றார் அன்றோ – பாஞ்சாலி:1 72/4
மேல்

கீர்த்தியில் (2)

மோதி விழிக்கும் விழியினார் பெண்மை மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில் – கண்ணன்:7 10/4
கண்ணன் அடிமை இவன் எனும் கீர்த்தியில் காதலுற்று இங்கு வந்தேன் – கண்ணன்:22 4/2
மேல்

கீழ் (8)

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் எங்கும் காணரும் வீரர் பெரும் திருக்கூட்டம் –தேசீய:14 4/1
குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது குழந்தையதன் தாய் அடி கீழ் சேய் போலே – தோத்திர:20 2/2
நிலத்தின் கீழ் பல் உலோகங்கள் ஆயினை நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை – தோத்திர:34 5/1
நிலத்தின் கீழ் பல் உலோகங்கள் ஆயினை நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை – தோத்திர:34 5/1
பொன் மரத்தின் கீழ் அந்த – தோத்திர:68 4/1
பொன் மரத்தின் கீழ் வெறும் – தோத்திர:68 4/2
வேதமுனிவரே மேதினியில் கீழ் பறவை – குயில்:9 1/9
யான் அகத்தே பேரொலி கீழ் உள்ளது அறிகுவனால் – பிற்சேர்க்கை:25 11/2
மேல்

கீழ்களின் (1)

கீழ்களின் அவமதிப்பும் தொழில் கெட்டவர் இணக்கமும் கிணற்றின் உள்ளே – தோத்திர:59 2/1
மேல்

கீழ்த்திசை (2)

வீதி கதவை அடைப்பதும் கீழ்த்திசை விம்மிடும் சங்கொலியும் – தனி:3 6/1
கீழ்த்திசை வெள்ளியை கேண்மைகொண்டு இலகும் – தனி:8 1/3
மேல்

கீழ்த்திசையில் (1)

கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான் – தனி:1 2/1
மேல்

கீழ்நிலை (1)

இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர் இதற்கு நாம் ஒருப்பட்டிருப்போமோ – பல்வகை:7 1/4
மேல்

கீழ்ப்பட்டே (1)

சூரிய வெப்பம் படாமலே மரம் சூழ்ந்த மலை அடி கீழ்ப்பட்டே முடை – பாஞ்சாலி:1 70/1
மேல்

கீழ்ப்புறத்து (1)

பூமி பந்தின் கீழ்ப்புறத்து உள்ள –தேசீய:24 1/33
மேல்

கீழ்மக்கட்கு (1)

கேள்விக்கு ஒருவர் இல்லை உயிர் தேவியை கீழ்மக்கட்கு ஆளாக்கினான் – பாஞ்சாலி:4 245/4
மேல்

கீழ்மேலாம் (1)

கிரி வகுத்த ஓடையிலே மிதத்து செல்லும் கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்குமேற்காம் – பாஞ்சாலி:1 146/3
மேல்

கீழ்மை (2)

கீழ்மை என்றும் வேண்டுவாய் போ போ போ –தேசீய:16 1/8
ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரம் ஆமோ – பாஞ்சாலி:5 271/17
மேல்

கீழ்மைகள் (1)

கெடுதலை ஒன்றும் இல்லை உன் கீழ்மைகள் உதறிடடா – பிற்சேர்க்கை:14 19/2
மேல்

கீழ்மையினால் (1)

கேடு வர அறியாய் கீழ்மையினால் சொல்லிவிட்டாய் – பாஞ்சாலி:4 252/48
மேல்

கீழடியார் (1)

காவலர்க்கு தம் குறைகள் காட்டாரோ கீழடியார்
ஆசைதான் வெட்கம் அறியுமோ என்று பல – குயில்:7 1/66,67
மேல்

கீழடியார்க்கு (1)

மார்பிலே துணியை தாங்கும் வழக்கம் கீழடியார்க்கு இல்லை – பாஞ்சாலி:5 290/1
மேல்

கீழவர் (2)

நீதி நெறியினின்று பிறர்க்கு உதவும் நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர் –தேசீய:5 13/2
மேலவர் கீழவர் என்றே வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம் – கண்ணன்:3 8/3
மேல்

கீழான் (1)

கேளப்பா சீடனே கழுதை ஒன்றை கீழான் பன்றியினை தேளை கண்டு – சுயசரிதை:2 16/1
மேல்

கீழும் (4)

மேலும் ஆகி கீழும் ஆகி வேறு உள திசையும் ஆகி விண்ணும் மண்ணும் ஆன சக்தி வெள்ளம் இந்த விந்தை எல்லாம் ஆங்கு அது செய் கள்ளம் பழ – தோத்திர:38 1/3
மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன – வசனகவிதை:3 2/5
மெய் உரைப்பேன் பேய் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/2
மெய் உரைப்பேன் பாழ் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 6/2
மேல்

கீழுறு (1)

மொய்க்கும் மேகத்தின் வாடிய மா மதி மூடு வெம் பனி கீழுறு மென் மலர் – சுயசரிதை:1 16/1
மேல்

கீழே (3)

என்றன் உள்ளம் கடலினை போலே எந்த நேரமும் நின் அடி கீழே
நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும் நின்றன் ஜோதி நிறைந்தது ஆகி – தோத்திர:70 2/1,2
கீழே இருந்து ஓர் கிழ காளை மாடு அதனை – குயில்:7 1/7
அலமாரி புத்தகங்களை கீழே தள்ளிவிடாதே – வசனகவிதை:4 9/4
மேல்

கீழோர் (1)

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை – பிற்சேர்க்கை:14 3/1
மேல்

கீழோர்க்கு (1)

கீழோர்க்கு அஞ்சேல் – பல்வகை:1 2/16
மேல்

கீற்று (1)

தென்னையின் கீற்று சலசலச என்றிடச்செய்து வரும் காற்றே – தனி:3 4/1
மேல்

கீற்றும் (1)

கேணி அருகினிலே தென்னை மரம் கீற்றும் இளநீரும் – தோத்திர:12 1/4
மேல்

கீறல் (1)

குழலில் கீறல் கூடுங்காலை – குயில்:2 9/2
மேல்