கி – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிக்கிக்கீ 1
கிக்கீ 2
கிசு 3
கிடக்கிலள் 1
கிடக்கிறது 1
கிடக்கின்றன 1
கிடக்கும் 7
கிடத்துவள் 1
கிடந்த 1
கிடந்திடல் 1
கிடந்துவிட்டார் 1
கிடப்பாய் 1
கிடப்பாரடீ 1
கிடப்போன் 1
கிடைக்கிறதா 1
கிடைக்குது 1
கிடைக்கும் 2
கிடைக்குமடா 1
கிடைக்குமோ 1
கிடைத்ததில்லை 1
கிடைத்திலதேல் 1
கிடைப்பரும் 1
கிடைப்பினும் 1
கிடையாது 2
கிடையாதோ 1
கிண்ணத்தில் 1
கிணற்றின் 2
கிணற்று 2
கிணறு 2
கிரகம் 1
கிரணம் 1
கிராமங்களில் 1
கிரி 2
கிரியைகள் 1
கிரியையும் 3
கிரீடத்து 1
கிருத 2
கிருதயுகந்தனை 1
கிருதயுகம் 1
கிருதயுகம்தான் 1
கிருபன் 2
கிருமியை 1
கிலி 1
கிலுகிலு 2
கிழ 3
கிழக்கிலும் 1
கிழக்குமேற்காம் 1
கிழங்கு 1
கிழங்கும் 2
கிழவரை 1
கிழவன் 1
கிழவனார் 1
கிழவிக்கு 1
கிழவியர் 2
கிழித்திடுவார் 1
கிழித்து 1
கிழித்துவிட்டாய் 1
கிழிப்ப 1
கிழிப்போம் 1
கிள்ளாய் 3
கிள்ளிவிடுவான் 1
கிள்ளை 2
கிளர் 3
கிளர்ச்சி 1
கிளர்ச்சிகொண்டு 1
கிளர்ச்சிதன்னை 1
கிளறியும் 1
கிளி 5
கிளிக்கதை 1
கிளிகளும் 1
கிளியரசு 1
கிளியின் 1
கிளியினை 1
கிளியும் 1
கிளியே 26
கிளை 6
கிளைஞரும் 1
கிளைத்து 1
கிளைத்துவர 1
கிளைத்துவிடும் 1
கிளையிடையே 1
கிளையில் 3
கிளையினரும் 1
கிளையினிலே 1
கிறிஸ்து 4
கிறுக்கன் 1
கிறுக்குதடி 1
கின்னரர் 1

கிக்கிக்கீ (1)

வீற்றிருந்தே கிக்கிக்கீ காக்காய் நீ விண்ணிடையே – தனி:1 9/1
மேல்

கிக்கீ (2)

கிலுகிலு கிலுகிலு எனவும் கிக்கீ
கிக்கீ என்றும் கேக்க கேக்க – வசனகவிதை:6 1/7,8
கிக்கீ என்றும் கேக்க கேக்க – வசனகவிதை:6 1/8
மேல்

கிசு (3)

கிசு கிசு கிசு கீ என்றும் ரங்க ரங்க – வசனகவிதை:6 1/12
கிசு கிசு கிசு கீ என்றும் ரங்க ரங்க – வசனகவிதை:6 1/12
கிசு கிசு கிசு கீ என்றும் ரங்க ரங்க – வசனகவிதை:6 1/12
மேல்

கிடக்கிலள் (1)

எழுப்பிடுங்காலை இறந்துதான் கிடக்கிலள்
இளமையும் துணிவும் இசைந்து நம் அன்னை –தேசீய:42 1/131,132
மேல்

கிடக்கிறது (1)

என் முன்னே பஞ்சு தலையணை கிடக்கிறது
அதற்கு ஒரு வடிவம் ஓரளவு ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது – வசனகவிதை:3 5/8,9
மேல்

கிடக்கின்றன (1)

பறவைகள் எல்லாம் வாட்டம் எய்தி நிழலுக்காக பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன
பல தினங்களாக மாலைதோறும் மேகங்கள் வந்து கூடுகின்றன – வசனகவிதை:5 2/12,13
மேல்

கிடக்கும் (7)

மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டி கிடக்கும் தமிழ்நாடு –தேசீய:20 5/2
பின்னியே கிடக்கும் அரசியலதனில் பிணைத்திட துணிந்தனை பெருமான் –தேசீய:41 4/4
மூடி கிடக்கும் நெஞ்சின் ஊடுற்றதை அமரர் – தோத்திர:54 1/6
மண்ணில் கிடக்கும் புழு எலாம் நான் வாரியில் உள்ள உயிர் எலாம் நான் –வேதாந்த:13 2/2
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா – பல்வகை:2 13/2
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எங்கும் நீள கிடக்கும் இலை கடல்கள் மதி – கண்ணன்:12 2/1
கிளியினை பிரிந்துழி கிரி என கிடக்கும்
செயலை என் இயம்புவல் சிவனே – பிற்சேர்க்கை:15 1/12,13
மேல்

கிடத்துவள் (1)

செறுவது நாடி வருபவரை துகள் செய்து கிடத்துவள் தாய் –தேசீய:9 5/2
மேல்

கிடந்த (1)

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பினர் –தேசீய:27 3/1
மேல்

கிடந்திடல் (1)

கச்சை ஒர் நாழிகையா நல்ல காயுடன் விரித்து இங்கு கிடந்திடல் காண் – பாஞ்சாலி:2 170/2
மேல்

கிடந்துவிட்டார் (1)

பேச்சு இழந்தே அங்கு பிணமா கிடந்துவிட்டார்
மன்னவனும் சோர்வு எய்தி மண் மேல் விழுந்துவிட்டான் – குயில்:9 1/155,156
மேல்

கிடப்பாய் (1)

மாண்டு தரை மேல் மகனே கிடப்பாய் நீ – பாஞ்சாலி:4 252/56
மேல்

கிடப்பாரடீ (1)

சோம்பி கிடப்பாரடீ –தேசீய:40 17/3
மேல்

கிடப்போன் (1)

கரு நிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன்
மகமது நபிக்கு மறை அருள்புரிந்தோன் – பல்வகை:1 1/3,4
மேல்

கிடைக்கிறதா (1)

பேசிப்பார் மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை – வசனகவிதை:4 1/13
மேல்

கிடைக்குது (1)

வீரம் வருகுது மேன்மை கிடைக்குது
சொல்லடி சக்தி மலையாள பகவதி – பல்வகை:11 5/8,9
மேல்

கிடைக்கும் (2)

சத்தியமும் நல் அறமும் கிடைக்கும் – தோத்திர:24 30/5
வித்தைகள் சேரும் நல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடை –வேதாந்த:15 1/3
மேல்

கிடைக்குமடா (1)

உணவுக்கு கவலை இல்லை எங்கும் உணவு கிடைக்குமடா
பணமும் காசும் இல்லை எங்கு பார்க்கினும் உணவேயடா – பிற்சேர்க்கை:14 4/1,2
மேல்

கிடைக்குமோ (1)

கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மை கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில் – கண்ணன்:7 1/2
மேல்

கிடைத்ததில்லை (1)

கணமும் உள்ளத்திலே சுகமே காண கிடைத்ததில்லை – கண்ணன்:10 3/4
மேல்

கிடைத்திலதேல் (1)

காதலோ காதல் இனி காதல் கிடைத்திலதேல்
சாதலோ சாதல் என சாற்றும் ஒரு பல்லவி என் – குயில்:3 1/55,56
மேல்

கிடைப்பரும் (1)

தேவியை நில திருவை எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியத்தை – பாஞ்சாலி:4 243/4
மேல்

கிடைப்பினும் (1)

காயம் உள்ளவரையும் கிடைப்பினும் கயவர் மாய்வது காய்ந்த உளம் கொண்டே – சுயசரிதை:1 41/4
மேல்

கிடையாது (2)

மனம்தான் சத்துரு வேறு நமக்கு பகையே கிடையாது
மனம்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது அடுத்துக்கெடுக்கிறது – வசனகவிதை:6 1/22,23
கிடையாது – வசனகவிதை:6 2/8
மேல்

கிடையாதோ (1)

நீ அவனை பார்த்தது கிடையாதோ – வசனகவிதை:6 2/7
மேல்

கிண்ணத்தில் (1)

பக்குவ தேயிலைநீர் குடிப்போம் அங்கு பதுமை கை கிண்ணத்தில் அளித்திடவே –வேதாந்த:25 4/2
மேல்

கிணற்றின் (2)

கீழ்களின் அவமதிப்பும் தொழில் கெட்டவர் இணக்கமும் கிணற்றின் உள்ளே – தோத்திர:59 2/1
தேசு உடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனை காண்பாய் – சுயசரிதை:2 28/3
மேல்

கிணற்று (2)

அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ என கேட்டான் அறிந்தேன் என்றேன் – சுயசரிதை:2 27/3
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்று ஓரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார் – சுயசரிதை:2 52/2
மேல்

கிணறு (2)

கடல் பெரிய ஏரி விசாலமான குளம் பெரும் கிணறு
கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா – வசனகவிதை:5 1/7,8
கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா – வசனகவிதை:5 1/8
மேல்

கிரகம் (1)

பாலத்து சோசியனும் கிரகம் படுத்தும் என்றுவிட்டான் – கண்ணன்:10 4/4
மேல்

கிரணம் (1)

ஒண் பெரும் கதிரின் ஓர் இரு கிரணம் என் – தனி:24 1/27
மேல்

கிராமங்களில் (1)

கேட்டீர்களா கிராமங்களில்
வீரிடும் அரக்க படைகள் – பிற்சேர்க்கை:27 1/5,6
மேல்

கிரி (2)

கிரி வகுத்த ஓடையிலே மிதத்து செல்லும் கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்குமேற்காம் – பாஞ்சாலி:1 146/3
கிளியினை பிரிந்துழி கிரி என கிடக்கும் – பிற்சேர்க்கை:15 1/12
மேல்

கிரியைகள் (1)

சாத்திரங்கள் கிரியைகள் பூசைகள் சகுன மந்திரம் தாலி மணி எலாம் – சுயசரிதை:1 38/1
மேல்

கிரியையும் (3)

ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் –தேசீய:24 1/107
இச்சையும் கிரியையும் ஞானமும் என்று ஆக்கு – தோத்திர:1 40/6
பொய்த்த இந்திரசாலம் நிகர் பூசையும் கிரியையும் புலை நடையும் – பாஞ்சாலி:1 9/3
மேல்

கிரீடத்து (1)

சுரர் தமனியன் மால் தொழும் கால் கிரீடத்து
அரதனங்கள் சிந்தும் அகம் – பிற்சேர்க்கை:12 1/3,4
மேல்

கிருத (2)

மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே – தோத்திர:1 39/4
கிருத யுகத்தினை கேடு இன்றி நிறுத்த – தோத்திர:1 40/17
மேல்

கிருதயுகந்தனை (1)

இத்தகைய துயர் நீக்கி கிருதயுகந்தனை உலகில் இசைக்க வல்ல – தனி:23 5/1
மேல்

கிருதயுகம் (1)

இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ –தேசீய:52 6/4
மேல்

கிருதயுகம்தான் (1)

வீழ்க கலியின் வலி எல்லாம் கிருதயுகம்தான் மேவுகவே – தோத்திர:1 35/4
மேல்

கிருபன் (2)

வில் நயம் உணர் கிருபன் புகழ் வீர துரோணன் அங்கு அவன் புதல்வன் – பாஞ்சாலி:2 158/4
குருகுல தலைவன் சபைக்கண்ணே கொற்றம் மிக்க துரோணன் கிருபன்
பெருகு சீர்த்தி அ கங்கையின்மைந்தன் பேதை நானும் மதிப்பு இழந்து ஏக – பாஞ்சாலி:2 203/1,2
மேல்

கிருமியை (1)

கெடும் நாள் வருமளவும் ஒரு கிருமியை அழிப்பவர் உலகில் உண்டோ – பாஞ்சாலி:1 134/2
மேல்

கிலி (1)

கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ –தேசீய:16 1/7
மேல்

கிலுகிலு (2)

கிலுகிலு கிலுகிலு எனவும் கிக்கீ – வசனகவிதை:6 1/7
கிலுகிலு கிலுகிலு எனவும் கிக்கீ – வசனகவிதை:6 1/7
மேல்

கிழ (3)

கூடி கிழ பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரை என பின் மாயும் பல – தோத்திர:32 4/3
பொய்யை உருவம் என கொண்டவன் என்றே கிழ பொன்னி உரைத்தது உண்டு தங்கமே தங்கம் – கண்ணன்:13 4/2
கீழே இருந்து ஓர் கிழ காளை மாடு அதனை – குயில்:7 1/7
மேல்

கிழக்கிலும் (1)

கிடக்கும் பெரிய கடல் கண்டாய் இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா – பல்வகை:2 13/2
மேல்

கிழக்குமேற்காம் (1)

கிரி வகுத்த ஓடையிலே மிதத்து செல்லும் கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்குமேற்காம்
புரி வகுத்த முந்நூலார் புலையர்தம்மை போற்றிடுவார் விதி வகுத்த போழ்தின் அன்றே – பாஞ்சாலி:1 146/3,4
மேல்

கிழங்கு (1)

சந்ததமும் வாழும் நல்ல கிழங்கு – தோத்திர:26 7/4
மேல்

கிழங்கும் (2)

கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றி தரும் நாடு இது –தேசீய:17 1/5
காற்றும் புனலும் கடி புல் கிழங்கும்
இனைய பல் இன்பம் இதன்கணே உளவாம் – தனி:13 1/51,52
மேல்

கிழவரை (1)

வேடம் தரித்த கிழவரை கொல்லவேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினேன் சிறு – கண்ணன்:7 5/2
மேல்

கிழவன் (1)

கூடும் வயதில் கிழவன் விரும்பி கூறினன் இஃது என சொல்லுவை கண்டாய் – பாஞ்சாலி:1 112/4
மேல்

கிழவனார் (1)

ஓடும் யமுனை கரையிலே தடி ஊன்றி சென்றார் ஓர் கிழவனார் ஒளி – கண்ணன்:7 2/2
மேல்

கிழவிக்கு (1)

வெறும் வாய் மெல்லும் கிழவிக்கு இஃது ஓர் – கண்ணன்:6 1/25
மேல்

கிழவியர் (2)

கிழவியர் எல்லாம் கிறுக்கன் என்று இவனை – கண்ணன்:6 1/48
கிழவியர் தபசியர் போல் பழம் கிளிக்கதை படிப்பவன் பொறுமை என்றும் – பாஞ்சாலி:1 25/1
மேல்

கிழித்திடுவார் (1)

மனம் கொண்டு தம் கழுத்தை தாமே வெய்ய வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவாராம் – சுயசரிதை:2 8/2
மேல்

கிழித்து (1)

நெஞ்சினை கிழித்து நிலம் மிசை உதிரம் –தேசீய:42 1/46
மேல்

கிழித்துவிட்டாய் (1)

புத்தகத்தின் ஏடுகளை கிழித்துவிட்டாய்
மறுபடி மழையை கொண்டுவந்து சேர்த்தாய் – வசனகவிதை:4 9/6,7
மேல்

கிழிப்ப (1)

குருமணி நின் ஒரு கொற்ற வாள் கிழிப்ப
விடாய் அறா தருமம் மேம்படு தெய்வதத்து –தேசீய:42 1/53,54
மேல்

கிழிப்போம் (1)

அதை கொத்துவோம் வாருங்கள் அதை கிழிப்போம் வாருங்கள் அதை வேட்டையாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:6 1/25
மேல்

கிள்ளாய் (3)

தேன் ஆர் மொழி கிள்ளாய் தேவி எனக்கு ஆனந்தமானாள் –தேசீய:13 2/1
கருணை உருவானாள் காய்ந்து எழுங்கால் கிள்ளாய்
செருநரை வீழ்த்தும் படை என் செப்பாய் பொருபவர் மேல் –தேசீய:13 7/1,2
கொடி பவள வாய் கிள்ளாய் சூத்திரமும் தீங்கும் –தேசீய:13 10/1
மேல்

கிள்ளிவிடுவான் (1)

மான் ஒத்த பெண்ணடி என்பான் சற்று மனம் மகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான் – கண்ணன்:9 3/2
மேல்

கிள்ளை (2)

கிள்ளை மொழி சிறு வள்ளி எனும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய் – தோத்திர:3 2/2
கிள்ளை மொழியின் நலத்தையே இங்கு கேட்க விரும்பும் என் உள்ளமே – பாஞ்சாலி:4 253/4
மேல்

கிளர் (3)

நம்பரும் பெரும் செல்வம் இவன் நலம் கிளர் சபையினில் பொழிந்ததுவும் – பாஞ்சாலி:1 26/4
மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல் வன குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே – பிற்சேர்க்கை:24 3/5
திரு கிளர் தெய்வ பிறப்பினர் பலரை – பிற்சேர்க்கை:26 1/6
மேல்

கிளர்ச்சி (1)

எழுச்சி தருவது கிளர்ச்சி தருவது – வசனகவிதை:3 1/16
மேல்

கிளர்ச்சிகொண்டு (1)

கேள்வியுண்டு உடனே மீள கிளர்ச்சிகொண்டு உயிர்த்து வாழ்தல் –தேசீய:51 8/4
மேல்

கிளர்ச்சிதன்னை (1)

கெடுதல் இன்றி நம் தாய்த்திருநாட்டின் கிளர்ச்சிதன்னை வளர்ச்சிசெய்கின்றான் –தேசீய:12 8/2
மேல்

கிளறியும் (1)

கேலிகள் பேசி கிளறியும் இன்னும் – கண்ணன்:6 1/62
மேல்

கிளி (5)

வண்ண கிளி வந்தேமாதரம் என்று ஓதுவரை –தேசீய:13 4/1
பிள்ளை கிளி மென் குதலையிலே மனம் பின்னம் அற செல்லவிட்டு அடி – தோத்திர:7 2/3
கோல கிளி மொழியும் செவியில் குத்தலெடுத்ததடீ – கண்ணன்:10 4/2
அழகிய கிளி வயிற்றின் வண்ணம் ஆர்ந்தனவாய் பணி சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 32/4
அன்னங்கள் பொன் கமல தடத்தின் ஊர அளி முரல கிளி மழலை அரற்ற கேட்போர் – பாஞ்சாலி:1 117/1
மேல்

கிளிக்கதை (1)

கிழவியர் தபசியர் போல் பழம் கிளிக்கதை படிப்பவன் பொறுமை என்றும் – பாஞ்சாலி:1 25/1
மேல்

கிளிகளும் (1)

குயில்களும் கிளிகளும் குலவு பல ஜாதி – வசனகவிதை:6 1/14
மேல்

கிளியரசு (1)

கொஞ்சு மொழிகளுமாக காலம்கழிக்கிறோம் இருந்தாலும் கிளியரசு சொல்லியது போல் – வசனகவிதை:6 3/37
மேல்

கிளியின் (1)

கீதம் பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள் – தோத்திர:62 2/2
மேல்

கிளியினை (1)

கிளியினை பிரிந்துழி கிரி என கிடக்கும் – பிற்சேர்க்கை:15 1/12
மேல்

கிளியும் (1)

மேதக நீயும் நின் காதல் அம் கிளியும்
என்றனை காணுமாறு இத்தனை காதம் – தனி:24 1/5,6
மேல்

கிளியே (26)

பச்சை மணி கிளியே பாவி எனக்கே யோக –தேசீய:13 1/1
வஞ்சனை சொல்வாரடீ கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி –தேசீய:40 1/2,3
நாட்டத்தில் கொள்ளாரடீ கிளியே
நாளில் மறப்பாரடீ –தேசீய:40 2/2,3
அந்தகர்க்கு உண்டாகுமோ கிளியே
அலிகளுக்கு இன்பம் உண்டோ –தேசீய:40 3/2,3
பெண்களின் கூட்டமடீ கிளியே
பேசி பயன் என்னடீ –தேசீய:40 4/2,3
மந்திரத்தாலே எங்கும் கிளியே
மாங்கனி வீழ்வது உண்டோ –தேசீய:40 5/2,3
செப்பி திரிவாரடீ கிளியே
செய்வது அறியாரடீ –தேசீய:40 6/2,3
நாவினால் சொல்வது அல்லால் கிளியே
நம்புதல் அற்றாரடீ –தேசீய:40 7/2,3
பேதைகள் போல் உயிரை கிளியே
பேணியிருந்தாரடீ –தேசீய:40 8/2,3
ஆவி பெரிது என்று எண்ணி கிளியே
அஞ்சிக்கிடந்தாரடீ –தேசீய:40 9/2,3
உச்சத்தில் கொண்டாரடீ கிளியே
ஊமை சனங்களடீ –தேசீய:40 10/2,3
மாக்களுக்கு ஓர்கணமும் கிளியே
வாழ தகுதி உண்டோ –தேசீய:40 11/2,3
ஈனர்க்கு உலகம்தனில் கிளியே
இருக்க நிலைமை உண்டோ –தேசீய:40 12/2,3
வந்தேமாதரம் என்பார் கிளியே
மனத்தில் அதனை கொள்ளார் –தேசீய:40 13/2,3
பழமை இருந்த நிலை கிளியே
பாமரர் ஏது அறிவார் –தேசீய:40 14/2,3
தேட்டில் விருப்பும் கொண்டே கிளியே
சிறுமை அடைவாரடீ –தேசீய:40 15/2,3
சிந்தை இரங்காரடீ கிளியே
செம்மை மறந்தாரடீ –தேசீய:40 16/2,3
துஞ்ச தம் கண்ணால் கண்டும் கிளியே
சோம்பி கிடப்பாரடீ –தேசீய:40 17/2,3
வாயை திறந்து சும்மா கிளியே
வந்தேமாதரம் என்பார் –தேசீய:40 18/2,3
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ – தோத்திர:4 0/1,2
வருக வருவது என்றே கிளியே மகிழ்வுற்று இருப்போமடி – தோத்திர:76 1/2
கற்று தெளிந்த பின்னும் கிளியே கவலைப்படலாகுமோ – தோத்திர:76 2/2
அன்பில் அழியுமடீ கிளியே அன்புக்கு அழிவு இல்லை காண் – தோத்திர:76 3/2
ஆயிரம் ஆண்டு உலகில் கிளியே அழிவு இன்றி வாழ்வோமடீ – தோத்திர:76 4/2
நேயத்துடன் பணிந்தால் கிளியே நெருங்கி துயர் வருமோ – தோத்திர:76 5/2
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே – கண்ணன்:8 1/1
மேல்

கிளை (6)

சுற்றம் கொல்வேனோ கிளை
அற்ற பின் செய்யும் அரசும் ஓர் அரசோ – தோத்திர:68 20/2,3
கிளை பல தாங்கேல் – பல்வகை:1 2/15
தென்னைமர கிளை மேல் சிந்தனையோடு ஓர் காகம் – தனி:1 4/1
கன்னங்கரும் காக்கை கண் எதிரே ஓர் கிளை மேல் – தனி:1 8/2
மேவி பல கிளை மீதில் இங்கு விண்ணிடை அந்தி பொழுதினை கண்டே – தனி:2 1/2
தென்னைமர கிளை மீதில் அங்கு ஓர் செல்வ பசுங்கிளி கீச்சிட்டு பாயும் – தனி:2 2/1
மேல்

கிளைஞரும் (1)

வாங்கி உய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்த பின் யாது மதிப்பரோ – சுயசரிதை:1 39/4
மேல்

கிளைத்து (1)

பொய் கிளைத்து வருந்திய மெய் அரோ பொன்னனார் அருள்பூண்டிலராம் எனில் – சுயசரிதை:1 16/3
மேல்

கிளைத்துவர (1)

வீழ்த்தல் பெற தருமம் எலாம் மறம் அனைத்தும் கிளைத்துவர மேலோர்தம்மை –தேசீய:44 2/1
மேல்

கிளைத்துவிடும் (1)

கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும்
பட்டார்தம் நெஞ்சில் பல நாள் அகலாது – பாஞ்சாலி:4 252/63,64
மேல்

கிளையிடையே (1)

தென்னைமரத்தின் கிளையிடையே தென்றல் போய் – தனி:1 3/1
மேல்

கிளையில் (3)

பேடை குயில் ஒன்று பெண் புறவு ஓர் வான் கிளையில்
வீற்றிருந்தே ஆண் குயில்கள் மேனி புளகம் உற – குயில்:1 1/12,13
சோலை கிளையில் எலாம் தோன்றி ஒலித்தனவால் – குயில்:3 1/61
மாய குயில் ஓர் மர கிளையில் வீற்றிருந்தே – குயில்:5 1/9
மேல்

கிளையினரும் (1)

கேட்டினுக்கு இரையாவான் மதி கெடும் துரியோதனன் கிளையினரும்
மாட்டுறு நண்பர்களும் அந்த வான் பெரும் சபையிடை வணங்கிநின்றார் – பாஞ்சாலி:2 163/3,4
மேல்

கிளையினிலே (1)

மூலையில் ஓர் மாமரத்தின் மோட்டு கிளையினிலே
நீல குயில் இருந்து நீண்ட கதை சொல்லுவதும் – குயில்:7 1/5,6
மேல்

கிறிஸ்து (4)

அன்பு காண் மரியா மக்தலேநா ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினை கொன்றால் மூன்று நாளினில் நல் உயிர் தோன்றும் – தோத்திர:77 2/1,2
வண்மை பேர் உயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும் – தோத்திர:77 3/2
பெண்மை காண் மரியா மக்தலேநா பேணும் நல் அறம் யேசு கிறிஸ்து
நுண்மை கொண்ட பொருள் இது கண்டீர் நொடியில் இஃது பயின்றிடலாகும் – தோத்திர:77 3/3,4
மோசே கிறிஸ்து நானக் முதலியோர் – பிற்சேர்க்கை:26 1/21
மேல்

கிறுக்கன் (1)

கிழவியர் எல்லாம் கிறுக்கன் என்று இவனை – கண்ணன்:6 1/48
மேல்

கிறுக்குதடி (1)

மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தை பழைய கள்ளை போலே – கண்ணன்:12 10/2
மேல்

கின்னரர் (1)

மறைவினின்றும் கின்னரர் ஆதியர் வாத்தியத்தின் இசை இதுவோ அடி – தோத்திர:51 4/2
மேல்