மூ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 1
மூக்கின் 1
மூக்கினான் 1
மூக்கு 3
மூங்கில் 2
மூங்கை 2
மூட்டிய 1
மூடப்பட்டார் 1
மூடர் 1
மூடி 2
மூடும் 2
மூத்த 4
மூத்தல் 1
மூத்தவர் 1
மூத்தார் 5
மூத்தாலும் 2
மூத்தான் 1
மூத்தானே 1
மூத்தானை 1
மூத்து 2
மூத்தேம் 2
மூத்தொறூஉம் 1
மூத்தோர் 1
மூத்தோரை 2
மூத்தோன் 1
மூதூர் 3
மூதூரின் 1
மூப்பின்கண் 2
மூப்பு 12
மூப்பும் 2
மூப்பொடு 1
மூர்க்கற்கு 1
மூர்க்கன் 1
மூரி 2
மூரியை 1
மூரியோ 1
மூலத்தான் 1
மூலம் 1
மூவர் 37
மூவர்க்கும் 1
மூவா 1
மூவாதான் 1
மூவாது 1
மூவார் 1
மூழ்க 1
மூழ்கல் 1
மூழ்கி 1
மூழ்குவார் 1
மூழ்த்தம் 1
மூழை 1
மூன்றற்கு 1
மூன்றன் 2
மூன்றில் 1
மூன்றினால் 1
மூன்று 8
மூன்றும் 82

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மூ (1)

அடுக்கிய மூ உலகும் கேட்குமே சான்றோர் – நாலடி:10 10/3

TOP


மூக்கின் (1)

மூக்கின் கரியார் உடைத்து – குறள்:28 7/2

TOP


மூக்கினான் (1)

நாக்கின் அறிப இனியவை மூக்கினான்
மோந்து அறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும் – நான்மணி:75/1,2

TOP


மூக்கு (3)

மெய் வாய் கண் மூக்கு செவி என பேர் பெற்ற – நாலடி:6 9/1
மூக்கு அற்றதற்கு இல் பழி – பழ:250/4
கிழிந்தானை மூக்கு பொதிவு – பழ:347/4

TOP


மூங்கில் (2)

முள் உடை மூங்கில் பிணங்கிய சூழ் படப்பை – ஐந்70:36/1
நெடும் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார் ஆட்டும் – சிறுபஞ்:53/3

TOP


மூங்கை (2)

புறங்கூற்றின் மூங்கை ஆய் நிற்பானேல் யாதும் – நாலடி:16 8/3
மறையில் செவி இலன் தீ சொற்கண் மூங்கை
இறையில் பெரியாற்கு இவை – ஏலாதி:19/3,4

TOP


மூட்டிய (1)

சுடுதற்கு மூட்டிய தீ – நாலடி:23 4/4

TOP


மூடப்பட்டார் (1)

முகடியான் மூடப்பட்டார் – குறள்:94 6/2

TOP


மூடர் (1)

மூடர் முனி தக்க சொல்லுங்கால் கேடு அரும் சீர் – நாலடி:32 6/2

TOP


மூடி (2)

மு காலை கொட்டினுள் மூடி தீ கொண்டு எழுவார் – நாலடி:3 4/3
வாய் மூடி இட்டும் இருப்பவோ மாணிழாய் – ஐந்70:51/3

TOP


மூடும் (2)

முன் இன்னார்ஆயினும் மூடும் இடர் வந்தால் – பழ:66/1
தொடு உண்ணின் மூடும் கலம் – பழ:391/4

TOP


மூத்த (4)

மூத்த இடத்து பிணி இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:21/3
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை – குறள்:45 1/1
ஆன்று அவிந்த மூத்த விழுமியார்தம்மோடு அங்கு – ஆசாரக்:60/2
மூத்த உள ஆகலான் – ஆசாரக்:91/3

TOP


மூத்தல் (1)

மூத்தல் இறுவாய்த்து இள நலம் தூக்கு இல் – நான்மணி:17/2

TOP


மூத்தவர் (1)

மூவாது மூத்தவர் நூல் வல்லார் தாவா – சிறுபஞ்:20/2

TOP


மூத்தார் (5)

மூத்தார் இளையார் பசு பெண்டிர் என்று இவர்கட்கு – ஆசாரக்:64/2
முன் இன்னா மூத்தார் வாய் சொல் – பழ:357/4
வலி அழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால் – சிறுபஞ்:71/1
மூத்தார் இருந்துழி வேண்டார் முது நூலுள் – சிறுபஞ்:83/3
முடம் பட்டார் மூத்தார் மூப்பு இல்லார்க்கு உடம்பட்டு – ஏலாதி:53/2

TOP


மூத்தாலும் (2)

பூத்தாலும் காயா மரம் உள மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர் பாத்தி – பழ:399/1,2
மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் பாத்தி – சிறுபஞ்:21/2

TOP


மூத்தான் (1)

அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிர் இழந்தான் அஞ்சினான் உண்பான் – ஆசாரக்:100/1,2

TOP


மூத்தானே (1)

மூத்தானே ஆடு மகன் – பழ:186/4

TOP


மூத்தானை (1)

கல்லாது மூத்தானை கைவிட்டு கற்றான் – நான்மணி:63/3

TOP


மூத்து (2)

பெற்றாள் தமியள் மூத்து அற்று – குறள்:101 7/2
தக்க யாழ்ப்பாண தளர் முலையாய் மூத்து அமைந்தார் – கைந்:48/3

TOP


மூத்தேம் (2)

மூத்தேம் இனி யாம் வரு முலையார் சேரியுள் – ஐந்70:45/2
மூத்தேம் இனி பாண முன்னாயின் நாம் இளையேம் – கைந்:45/1

TOP


மூத்தொறூஉம் (1)

காத்து ஓம்பி தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீ தொழிலே கன்றி திரிதந்து எருவை போல் – நாலடி:36 1/2,3

TOP


மூத்தோர் (1)

விருந்தினர் மூத்தோர் பசு சிறை பிள்ளை – ஆசாரக்:21/1

TOP


மூத்தோரை (2)

அவைக்கு பாழ் மூத்தோரை இன்மை தனக்கு பாழ் – நான்மணி:20/3
மூத்தோரை இல்லா அவை களனும் பாத்து உண்ணா – திரி:10/2

TOP


மூத்தோன் (1)

மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று – முது:9 2/1

TOP


மூதூர் (3)

கள் இல்லா மூதூர் களிகட்கு நற்கு இன்னா – இன்னா40:9/1
ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா – இன்னா40:24/1
கட்டு இலா மூதூர் உறைவு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:25/3

TOP


மூதூரின் (1)

சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா – இன்னா40:23/1

TOP


மூப்பின்கண் (2)

மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள் – திரி:17/1
ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமே ஆற்ற – பழ:60/1,2

TOP


மூப்பு (12)

நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி – நாலடி:6 2/1
முன்னரே சாம் நாள் முனி தக்க மூப்பு உள – நாலடி:10 2/1
மூப்பு மேல் வாராமை முன்னே அற வினையை – நாலடி:33 6/1
குலம் தவம் கல்வி குடிமை மூப்பு ஐந்தும் – நாலடி:34 3/1
இளமையுள் மூப்பு புகல் – இன்னா40:27/4
இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே – இனிய40:37/1
முறைமைக்கு மூப்பு இளமை இல் – பழ:93/4
அஞ்சும் பிணி மூப்பு அரும் கூற்றுடன் இயைந்து – பழ:137/3
இழிவு உடை மூப்பு கதத்தின் துவ்வாது – முது:4 9/1
மறுபிறப்பு அறியாதது மூப்பு அன்று – முது:5 10/1
இளமை கழியும் பிணி மூப்பு இயையும் – ஏலாதி:21/1
முடம் பட்டார் மூத்தார் மூப்பு இல்லார்க்கு உடம்பட்டு – ஏலாதி:53/2

TOP


மூப்பும் (2)

பிணியொடு மூப்பும் வருமால் துணிவு ஒன்றி – நாலடி:6 5/2
ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும் புணர்ந்தார்க்கு – திரி:18/1

TOP


மூப்பொடு (1)

பிணி பிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம் – ஏலாதி:24/1

TOP


மூர்க்கற்கு (1)

மூர்க்கற்கு உறுதி மொழியற்க மூர்க்கன் தான் – பழ:168/2

TOP


மூர்க்கன் (1)

மூர்க்கற்கு உறுதி மொழியற்க மூர்க்கன் தான் – பழ:168/2

TOP


மூரி (2)

மூரி எருத்தால் உழவு – இன்னா40:20/4
மூரி எருத்தான் உழவு – பழ:389/4

TOP


மூரியை (1)

மூரியை தீற்றிய புல் – பழ:396/4

TOP


மூரியோ (1)

ஊர் அறியா மூரியோ இல் – பழ:351/4

TOP


மூலத்தான் (1)

முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலம் சேர் – ஐந்70:0/3

TOP


மூலம் (1)

உறு பஞ்ச மூலம் தீர் மாரி போல் கூறீர் – சிறுபஞ்:107/3

TOP


மூவர் (37)

உண்டி உதவாதாள் இல் வாழ் பேய் இ மூவர்
கொண்டானை கொல்லும் படை – நாலடி:37 3/3,4
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் – குறள்:59 9/1,2
கோளாளன் என்பான் மறவாதான் இ மூவர்
கேள் ஆக வாழ்தல் இனிது – திரி:12/3,4
மாண்ட குணத்தான் தவசி என்று இ மூவர்
யாண்டும் பெறற்கு அரியார் – திரி:13/3,4
ஒட்டி வினை நலம் பார்ப்பானும் இ மூவர்
நட்க படாஅதவர் – திரி:15/3,4
கூவல் குறை இன்றி தொட்டானும் இ மூவர்
சாவா உடம்பு எய்தினார் – திரி:16/3,4
சொல் வென்றி வேண்டும் இலிங்கியும் இ மூவர்
கல்வி புணை கைவிட்டார் – திரி:17/3,4
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும் இ மூவர்
நாடுங்கால் தூங்குபவர் – திரி:19/3,4
வைத்த அறப்புறம் கொண்டானும் இ மூவர்
கைத்து உண்ணார் கற்றறிந்தார் – திரி:25/3,4
சீலம் இனிது உடைய ஆசானும் இ மூவர்
ஞாலம் எனப்படுவார் – திரி:26/3,4
செவி குற்றம் பார்த்திருப்பானும் இ மூவர்
உமி குத்தி கை வருந்துவார் – திரி:28/3,4
என்றும் அழுக்காறு இகந்தானும் இ மூவர்
நின்ற புகழ் உடையார் – திரி:30/3,4
அலவலை இல்லா குடியும் இ மூவர்
உலகம் எனப்படுவார் – திரி:34/3,4
மை நீர்மை இன்றி மயல் அறுப்பான் இ மூவர்
மெய் நீர்மை மேல் நிற்பவர் – திரி:35/3,4
காமுறு வேள்வியில் கொல்வானும் இ மூவர்
தாம் அறிவர் தாம் கண்டவாறு – திரி:36/3,4
வரவு உண்மை சிந்தியாதானும் இ மூவர்
நிரயத்து சென்று வீழ்வார் – திரி:45/3,4
கைப்பதனை கட்டி என்று உண்பானும் இ மூவர்
மெய் பொருள் கண்டு வாழ்வார் – திரி:48/3,4
அம் மனை தேய்க்கும் மனையாளும் இ மூவர்
இம்மைக்கு உறுதி இலார் – திரி:49/3,4
இல் இருந்து எல்லை கடப்பாளும் இ மூவர்
வல்லே மழை அருக்கும் கோள் – திரி:50/3,4
ஈர்ந்த கல் இன்னார் கயவர் இவர் மூவர்
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள் – திரி:51/3,4
செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும் இ மூவர்
ஒற்றாள் எனப்படுவார் – திரி:55/3,4
வைத்த அடைக்கலம் கொள்வானும் இ மூவர்
எச்சம் இழந்து வாழ்வார் – திரி:62/3,4
ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும் இ மூவர்
செல்வர் எனப்படுவார் – திரி:70/3,4
விரி கடலூடு செல்வானும் இ மூவர்
அரிய துணிந்து ஒழுகுவார் – திரி:73/3,4
ஈக என்பவனை நகுவானும் இ மூவர்
யாதும் கடைப்பிடியாதார் – திரி:74/3,4
தக்கது அறியும் தலைமகனும் இ மூவர்
பொத்து இன்றி காழ்த்த மரம் – திரி:75/3,4
மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும் இ மூவர்
போற்றற்கு அரியார் புரிந்து – திரி:76/3,4
இல் அஞ்சி வாழும் எருதும் இவர் மூவர்
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய் – திரி:79/3,4
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும் இ மூவர்
ஆசை கடலுள் ஆழ்வார் – திரி:81/3,4
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இ மூவர்
நல்குரவு சேரப்பட்டார் – திரி:84/3,4
விழு நிதி குன்றுவிப்பானும் இ மூவர்
முழுமக்கள் ஆகற்பாலார் – திரி:87/3,4
இறந்து இன்னா சொல்லகிற்பானும் இ மூவர்
பிறந்தும் பிறந்திலாதார் – திரி:89/3,4
இறந்துரை காமுறுவானும் இ மூவர்
பிறந்தும் பிறவாதவர் – திரி:92/3,4
இழுக்கு ஆய சொல்லாடுவானும் இ மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியாதார் – திரி:94/3,4
நல்லவை செய்வான் அரசன் இவர் மூவர்
பெய் என பெய்யும் மழை – திரி:96/3,4
அல்லவை செய்யும் அலவலையும் இ மூவர்
நல் உலகம் சேராதவர் – திரி:99/3,4
வரும் குற்றம் பாராத மன்னும் இ மூவர்
இருந்திட்டு என் போய் என் இவர் – திரி:104/3,4

TOP


மூவர்க்கும் (1)

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை – குறள்:5 1/1,2

TOP


மூவா (1)

தாவாத இல்லை வலிகளும் மூவா
இளமை இசைந்தாரும் இல்லை வளமையில் – நான்மணி:76/2,3

TOP


மூவாதான் (1)

முழுது உணர்ந்து மூன்று ஒழித்து மூவாதான் பாதம் – சிறுபஞ்:0/1

TOP


மூவாது (1)

மூவாது மூத்தவர் நூல் வல்லார் தாவா – சிறுபஞ்:20/2

TOP


மூவார் (1)

மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் பாத்தி – சிறுபஞ்:21/2

TOP


மூழ்க (1)

உரை சால் உடம்பிடி மூழ்க அரசோடு – கள40:35/4

TOP


மூழ்கல் (1)

இராஇருக்கை ஏலாத வைகல் பனி மூழ்கல்
குரா கான் புகல் நெடிய மண் என்று உராய் தனது – சிறுபஞ்:90/1,2

TOP


மூழ்கி (1)

இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி
கடைமணி காண்வர தோன்றி நடை மெலிந்து – கள40:19/1,2

TOP


மூழ்குவார் (1)

இரும் கடல் மூழ்குவார் தங்கை இரும் கடலுள் – திணை150:33/2

TOP


மூழ்த்தம் (1)

நாள் கூட்டம் மூழ்த்தம் இவற்றொடு நன்று ஆய – சிறுபஞ்:42/1

TOP


மூழை (1)

மூழை சுவை உணராத ஆங்கு – நாலடி:33 1/4

TOP


மூன்றற்கு (1)

கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவா பசி தோற்றம் – பழ:363/1

TOP


மூன்றன் (2)

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் – குறள்:36 10/1,2
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
செறிவு உடையான் செல்க வினைக்கு – குறள்:69 4/1,2

TOP


மூன்றில் (1)

வடு இலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இரு தலையும் எய்தும் – நாலடி:12 4/1,2

TOP


மூன்றினால் (1)

தொடங்கிய மூன்றினால் மாண்டு ஈண்டு உடம்பு ஒழிய – பழ:99/2

TOP


மூன்று (8)

கண் மூன்று உடையானும் காக்கையும் பை அரவும் – நாலடி:40 10/1
கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே – இனிய40:0/1
இன்றியமையாத மூன்று – குறள்:69 2/2
வளி முதலா எண்ணிய மூன்று – குறள்:95 1/2
மூன்று கடன் கழித்த பார்ப்பானும் ஓர்ந்து – திரி:34/1
சாரத்தால் சொல்லிய மூன்று – ஆசாரக்:62/3
முழுது உணர்ந்து மூன்று ஒழித்து மூவாதான் பாதம் – சிறுபஞ்:0/1
எல்லை உயர்ந்தார் தவம் முயலின் மூன்று ஐந்து ஏழ் – ஏலாதி:77/3

TOP


மூன்றும் (82)

சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவை மூன்றும்
வான் தோய் குடி பிறந்தார்க்கு அல்லது வான் தோயும் – நாலடி:15 2/1,2
முட்டு இன்றி மூன்றும் முடியுமேல் அஃது என்ப – நாலடி:25 10/3
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு – குறள்:39 3/1,2
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு – குறள்:69 8/1,2
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் – குறள்:96 2/1,2
நோக்கம் இ மூன்றும் உடைத்து – குறள்:109 5/2
மாய சகடம் உதைத்ததூஉம் இ மூன்றும்
பூவை பூ வண்ணன் அடி – திரி:0/3,4
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இ மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து – திரி:1/3,4
நான்மறையாளர் வழி செலவும் இ மூன்றும்
மேல் முறையாளர் தொழில் – திரி:2/3,4
சிறியாரை கொண்டு புகலும் இ மூன்றும்
அறியாமையால் வரும் கேடு – திரி:3/3,4
காய்வானை கை வாங்கி கோடலும் இ மூன்றும்
சால உறுவான் தொழில் – திரி:4/3,4
விருந்தினனாய் வேற்றூர் புகலும் இ மூன்றும்
அரும் துயரம் காட்டும் நெறி – திரி:5/3,4
கார் ஆண்மை போல ஒழுகலும் இ மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு – திரி:6/3,4
அஞ்சுவான் கற்ற அரு நூலும் இ மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா – திரி:7/3,4
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும் இ மூன்றும்
தாம் தம்மை கூறா பொருள் – திரி:8/3,4
விழுமிய அல்ல துணிதல் இ மூன்றும்
முழு மக்கள் காதல் அவை – திரி:9/3,4
தன்மையிலாளர் அயல் இருப்பும் இ மூன்றும்
நன்மை பயத்தல் இல – திரி:10/3,4
கூரையுள் பல் காலும் சேறலும் இ மூன்றும்
ஊர் எல்லாம் நோவது உடைத்து – திரி:11/3,4
செறுவொடு நிற்கும் சிறுமை இ மூன்றும்
குறுகார் அறிவுடையார் – திரி:14/3,4
உள் உருக்கி தின்னும் பெரும் பிணியும் இ மூன்றும்
கள்வரின் அஞ்சப்படும் – திரி:18/3,4
கல்லான் என்று எள்ளப்படுதலும் இ மூன்றும்
எல்லார்க்கும் இன்னாதன – திரி:20/3,4
பல நாடி நல்லவை கற்றல் இ மூன்றும்
நல மாட்சி நல்லவர் கோள் – திரி:21/3,4
பொய்த்துரை என்னும் புகை இருளும் இ மூன்றும்
வித்து அற வீடும் பிறப்பு – திரி:22/3,4
பல் பொருள் நீங்கிய சிந்தையும் இ மூன்றும்
நல் வினை ஆர்க்கும் கயிறு – திரி:23/3,4
காழ்த்த பகைவர் வணக்கமும் இ மூன்றும்
ஆழ்ச்சி படுக்கும் அளறு – திரி:24/3,4
சாயினும் சான்றாண்மை குன்றாமை இ மூன்றும்
தூஉயம் என்பார் தொழில் – திரி:27/3,4
மண் விழைந்து வாழ் நாள் மதியாமை இ மூன்றும்
நுண் விழைந்த நூலவர் நோக்கு – திரி:29/3,4
தாளின் ஒரு பொருள் ஆக்கலும் இ மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை – திரி:31/3,4
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இ மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன் – திரி:32/3,4
கடை மணி போல் திண்ணியான் காப்பும் இ மூன்றும்
படை வேந்தன் பற்று விடல் – திரி:33/3,4
தூய்மையுள் தோன்றும் பிரமாணம் இ மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு – திரி:37/3,4
பல் பொருள் வெஃகும் சிறுமையும் இ மூன்றும்
செல்வம் உடைக்கும் படை – திரி:38/3,4
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல் இ மூன்றும்
நன்மை இலாளர் தொழில் – திரி:39/3,4
நல் அறிவாண்மை தலைப்படலும் இ மூன்றும்
தொல்லறிவாளர் தொழில் – திரி:40/3,4
நாள் நாளும் நட்டார் பெருக்கலும் இ மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை – திரி:41/3,4
உழவின்கண் காமுற்று வாழ்தல் இ மூன்றும்
அழகு என்ப வேளாண் குடிக்கு – திரி:42/3,4
நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும் இ மூன்றும்
வஞ்சத்தின் தீர்ந்த பொருள் – திரி:43/3,4
ஈயாது ஒழிந்து அகன்ற காலையும் இ மூன்றும்
நோயே உரன் உடையார்க்கு – திரி:44/3,4
கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி இ மூன்றும்
குறுகார் அறிவுடையார் – திரி:46/3,4
நா தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இ மூன்றும்
காப்பு இகழல் ஆகா பொருள் – திரி:47/3,4
மறுமைக்கு அணிகலம் கல்வி இ மூன்றும்
குறியுடையார்கண்ணே உள – திரி:52/3,4
பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும் இ மூன்றும்
எண்ணின் தெரியா பொருள் – திரி:53/3,4
குற்றம் பிறர் மேல் உரைத்தலும் இ மூன்றும்
தெற்றெனவு இல்லார் தொழில் – திரி:54/3,4
ஒழுக்கம் பெரு நெறி சேர்தல் இ மூன்றும்
விழுப்ப நெறி தூராவாறு – திரி:56/3,4
நாளும் கலாம் காமுறுதலும் இ மூன்றும்
கேள்வியுள் இன்னாதன – திரி:57/3,4
துன்னிய சொல்லால் இனம் திரட்டல் இ மூன்றும்
மன்னற்கு இளையான் தொழில் – திரி:58/3,4
கள் உண்டு வாழ்வான் குடிமையும் இ மூன்றும்
உள்ளன போல கெடும் – திரி:59/3,4
மக்கள் பிறப்பின் நிரப்பு இடும்பை இ மூன்றும்
துக்க பிறப்பாய்விடும் – திரி:60/3,4
மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல் இ மூன்றும்
வீறு சால் பேர் அமைச்சர் கோள் – திரி:61/3,4
தன்மையிலாளர் அயல் இருப்பும் இ மூன்றும்
நன்மை பயத்தல் இல – திரி:63/3,4
மக்கள் பெறலின் மனை கிழத்தி இ மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன் – திரி:64/3,4
மெய் நிலை காணா வெகுளியும் இ மூன்றும்
தம் நெய்யில் தாம் பொரியுமாறு – திரி:65/3,4
கோல் கோடி வாழும் அரசனும் இ மூன்றும்
சால்போடு பட்டது இல – திரி:66/3,4
முந்தை பழ வினையாய் தின்னும் இவை மூன்றும்
நொந்தார் செய கிடந்தது இல் – திரி:67/3,4
துன்புறுவ செய்யாத தூய்மையும் இ மூன்றும்
நன்று அறியும் மாந்தர்க்கு உல – திரி:68/3,4
நெறி மாறி வந்த விருந்தும் இ மூன்றும்
பெறுமாறு அரிய பொருள் – திரி:69/3,4
ஆண்மை உடையவர் நல்குரவும் இ மூன்றும்
காண அரிய என் கண் – திரி:71/3,4
மறவனை எ உயிரும் அஞ்சும் இ மூன்றும்
திறவதின் தீர்ந்த பொருள் – திரி:72/3,4
வடுவான வாராமல் காத்தல் இ மூன்றும்
குடி மாசு இலார்க்கே உள – திரி:77/3,4
மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும்
தவத்தின் தருக்கினார் கோள் – திரி:78/3,4
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து – திரி:80/3,4
கொள்ளாருள் கொள்ளாத கூறாமை இ மூன்றும்
நல் ஆள் வழங்கும் நெறி – திரி:82/3,4
செப்பம் உடையார் மழை அனையர் இ மூன்றும்
செப்ப நெறி தூராவாறு – திரி:83/3,4
உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும் இ மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம் – திரி:85/3,4
நட்பின் நய நீர்மை நீங்கல் இவை மூன்றும்
குற்றம் தரூஉம் பகை – திரி:86/3,4
பிணை செல்வம் மாண்பு இன்று இயங்கல் இவை மூன்றும்
புணை இல் நிலை கலக்குமாறு – திரி:88/3,4
அருள் புரிந்து சொல்லுக சொல்லை இ மூன்றும்
இருள் உலகம் சேராத ஆறு – திரி:90/3,4
தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல் இ மூன்றும்
மன்னா உடம்பின் தொழில் – திரி:91/3,4
காதற்படுக்கும் விழைவும் இவை மூன்றும்
பேதைமை வாழும் உயிர்க்கு – திரி:93/3,4
வெவ் உரை நோனா வெகுள்வும் இவை மூன்றும்
நல் வினை நீக்கும் படை – திரி:95/3,4
கற்பு உடையாளை துறத்தலும் இ மூன்றும்
நல் புடை இலாளர் தொழில் – திரி:97/3,4
பெண்பால் கொழுநன் வழி செலவும் இ மூன்றும்
திங்கள் மு மாரிக்கு வித்து – திரி:98/3,4
எண்ணின் உலவா இரு நிதியும் இ மூன்றும்
மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு – திரி:100/3,4
ஈவார் முகம் போல் ஒளிவிடுதல் இ மூன்றும்
ஓவாதே திங்கட்கு உள – திரி:101/3,4
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும் மூன்றும்
பரித்தாலும் செய்யா பயன் – திரி:102/3,4
உடன் கொண்டு மீளா அரசும் இ மூன்றும்
கடன் கொண்டார் நெஞ்சில் கனா – திரி:103/3,4
மறந்தும் குரவர் முன் சொல்லாமை மூன்றும்
திறம் கண்டார் கண்ட நெறி – ஆசாரக்:63/2,3
செறப்பட்டார் இல்லம் புகாமை இ மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள – ஆசாரக்:79/3,4
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி – ஆசாரக்:101/1
கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான் கடியாதான் – சிறுபஞ்:27/3
கள்ளத்த அல்ல கருதின் இவை மூன்றும்
உள்ளத்த ஆக உணர் – ஏலாதி:27/3,4
மை என நீள் கண்ணாய் மறுதலைய இ மூன்றும்
மெய் அளவு ஆக விதி – ஏலாதி:29/3,4

TOP