பை – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பை (7)

தோல் பை உள் நின்று தொழில் அற செய்து ஊட்டும் – நாலடி:3 6/3
இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் தத்தம் – நாலடி:7 6/3
கண் மூன்று உடையானும் காக்கையும் பை அரவும் – நாலடி:40 10/1
பவளம் சொரிதரு பை போல் திவள் ஒளிய – கள40:14/2
பால் போலும் வெண் நிலவும் பை அரவு அல்குலாய் – திணை150:96/3
பை ஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும் – பழ:109/2
பை அரவு அல்குல் பணை தோளாய் பாத்து அறிவு என் – பழ:364/3

TOP


பைங்கூழ் (1)

புல் பைங்கூழ் ஆப்பி சுடலை வழி தீர்த்தம் – ஆசாரக்:32/1

TOP


பைத்து (3)

வைத்தாரின் நல்லர் வறியவர் பைத்து எழுந்து – நான்மணி:67/2
செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்து அகன்ற – திரி:25/1
பைத்து அகன்ற அல்குலாய் அஃதால் அ வெண்ணெய் மேல் – பழ:325/3

TOP


பைத்தொடீஇ (1)

உற்றுழி ஒன்றுக்கு உதவலராய் பைத்தொடீஇ
அச்சு இடையிட்டு திரியின் அது அன்றோ – பழ:291/2,3

TOP


பைதல் (7)

பைதல் உழப்பது எவன் – குறள்:118 2/2
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா – குறள்:118 5/1
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி – குறள்:123 3/1
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு – குறள்:123 9/1
பைதல் நோய் செய்தார்கண் இல் – குறள்:125 3/2
பைதல் நோய் எல்லாம் கெட – குறள்:127 6/2
பருவரல் பைதல் நோய் கொண்டு – கைந்:25/4

TOP


பைதலும் (1)

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் – குறள்:120 7/1

TOP


பைந்தொடி (1)

பை ஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும் – பழ:109/2

TOP


பைந்தொடியும் (1)

பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும் ஊர்க்கு – திரி:104/2

TOP


பைம் (21)

பைம் மறியா பார்க்கப்படும் – நாலடி:5 2/4
கோள் ஆற்ற கொள்ளா குளத்தின் கீழ் பைம் கூழ் போல் – நாலடி:20 1/1
நலம் கெடும் நீர் அற்ற பைம் கூழ் நலம் மாறின் – நான்மணி:43/3
வறன் உழக்கும் பைம் கூழ்க்கு வான் சோர்வு இனிதே – இனிய40:15/2
செம் கால் மராஅம் தகைந்தன பைம் கோல் – கார்40:19/2
பைம் தலை பாரில் புரள்பவை நன்கு எனைத்தும் – கள40:24/2
தொடரொடு கோள் நாய் புரையும் அடர் பைம் பூண் – கள40:34/4
பைம் கொடி முல்லை அவிழ் அரும்பு ஈன்றன – ஐந்50:9/3
பாவையும் பந்தும் பவள வாய் பைம் கிளியும் – ஐந்50:33/1
அவரை பொருந்திய பைம் குரல் ஏனல் – ஐந்70:1/1
பைம் கொடி முல்லை மணம் கமழ வண்டு இமிர – ஐந்70:15/2
பலவின் பழம் பெற்ற பைம் கண் கடுவன் – திணை50:10/1
வித்தக பைம் பூண் நின் மார்பு – திணை50:42/4
பரு விரலால் பைம் சுனை நீர் தூஉய் பெரு வரை மேல் – திணை150:10/2
பருகு நீர் பைம் சுனையில் காணாது அருகல் – திணை150:78/2
பைம் தார் புனல்வாய் பாய்ந்து ஆடுவாள் அம் தார் – திணை150:128/2
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ் – குறள்:55 10/1
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி – குறள்:124 4/1
பைம் தொடி பேதை நுதல் – குறள்:124 8/2
கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைம் கூழ் – திரி:59/1
சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய் பைம் கரும்பு – பழ:289/3

TOP


பைய (4)

பைய நிறைத்துவிடும் – நாலடி:10 9/4
பைய தாம் செல்லும் நெறி – நாலடி:31 9/4
அடி பைய இட்டு ஒதுங்கி சென்று துடியின் – நாலடி:39 8/2
பசையினள் பைய நகும் – குறள்:110 8/2

TOP


பையென (2)

பஞ்சி கொண்டு ஊட்டினும் பையென பையென என்று – நாலடி:40 6/3
பஞ்சி கொண்டு ஊட்டினும் பையென பையென என்று – நாலடி:40 6/3

TOP