பே – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேஎய் 3
பேஎயொடானும் 1
பேசி 1
பேடி 3
பேடியின் 1
பேண் 4
பேண 1
பேணப்படும் 1
பேணலர் 1
பேணலும் 1
பேணா 3
பேணாத 1
பேணாதார்க்கு 1
பேணாது 8
பேணாதே 1
பேணாமை 6
பேணாய் 1
பேணார் 3
பேணான் 1
பேணி 16
பேணிக்கொளலும் 1
பேணிய 1
பேணியார் 1
பேணுங்கால் 2
பேணும் 3
பேணொடும் 1
பேதுறவு 1
பேதுறார் 1
பேதுறுதல் 1
பேதை 33
பேதைக்கு 7
பேதைகள் 2
பேதைமை 18
பேதைமையுள் 1
பேதைமையே 2
பேதையர் 1
பேதையார் 10
பேதையான் 2
பேதையின் 1
பேதையும் 3
பேதையோடு 1
பேய் 3
பேர் 29
பேர்க்குதல் 1
பேர்த்தரல் 1
பேர்த்து 10
பேர்த்தும் 1
பேர்ந்து 2
பேர 1
பேரா 3
பேராண்மை 1
பேராதவர் 1
பேரான் 1
பேரானை 1
பேரும் 5
பேழ் 1
பேற்றின் 1
பேறு 4

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பேஎய் (3)

தடி நிணம் மாந்திய பேஎய் நடுகல் – ஐந்50:35/2
பேஎய் கண்ட அன்னது உடைத்து – குறள்:57 5/2
பேஎய் பிறப்பில் பெரும் பசியும் பாஅய் – திரி:60/1

TOP


பேஎயொடானும் (1)

பேஎயொடானும் பிரிவு – பழ:122/4

TOP


பேசி (1)

கடுக்கி ஒருவன் கடும் குறளை பேசி
மயக்கிவிடினும் மன பிரிப்பு ஒன்று இன்றி – நாலடி:19 9/1,2

TOP


பேடி (3)

பெண் அவாய் ஆண் இழந்த பேடி அணியாளோ – நாலடி:26 1/3
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை – குறள்:62 4/1
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து – குறள்:73 7/1

TOP


பேடியின் (1)

கழி தறுகண்மை பேடியின் துவ்வாது – முது:4 2/1

TOP


பேண் (4)

பேண் அடக்கம் பேணா பெரும் தகைமை பீடு உடைமை – சிறுபஞ்:43/1
பேண் இலன் நாய் பிறர் சேவகன் நாய் ஏண் இல் – சிறுபஞ்:93/2
ஏண் எளிது சேவகனேல் பெரியார் பேண் எளிது – சிறுபஞ்:94/2
பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது – முது:4 4/1

TOP


பேண (1)

பெருகுமால் நம் அலர் பேண பெருகா – திணை150:41/2

TOP


பேணப்படும் (1)

பேணாமை பேணப்படும் – குறள்:87 6/2

TOP


பேணலர் (1)

பேணலர் மேலாயவர் – குறள்:102 6/2

TOP


பேணலும் (1)

துறந்தாரை பேணலும் நாணலும் தாம் கற்ற – ஆசாரக்:63/1

TOP


பேணா (3)

பேணா பெரும் குற்றத்தார்க்கு – குறள்:93 4/2
பேணா அறிவு இலா மாக்களை பேணி – பழ:142/2
பேண் அடக்கம் பேணா பெரும் தகைமை பீடு உடைமை – சிறுபஞ்:43/1

TOP


பேணாத (1)

பெருக்க மதித்த பின் பேணாத செய்தும் – பழ:224/2

TOP


பேணாதார்க்கு (1)

பெரும் பழியும் பேணாதார்க்கு இல் – பழ:170/4

TOP


பேணாது (8)

பெரு மலை தாம் நாடி தேன் துய்த்து பேணாது
அரு மலை மாய்க்குமவர் தங்கை திரு முலைக்கு – திணை150:23/1,2
பெரும் கடல் வெண் சங்கு காரணமா பேணாது
இரும் கடல் மூழ்குவார் தங்கை இரும் கடலுள் – திணை150:33/1,2
பேணாது அழுக்கறுப்பான் – குறள்:17 3/2
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால் – குறள்:90 2/1
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர் – குறள்:91 2/1
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்று அவர் – குறள்:118 8/1
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை – குறள்:129 3/1
பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்தது போல் – பழ:256/2

TOP


பேணாதே (1)

பேணாய் இதன் திறத்து என்றாலும் பேணாதே
நாண் ஆய நல் வளையாய் நாண் இன்மை காணாய் – திணை150:64/1,2

TOP


பேணாமை (6)

பேணாமை செய்வது பேதைமை காணா – நான்மணி:22/2
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய – நான்மணி:87/2
பேணாமை பேதை தொழில் – குறள்:84 3/2
பேணாமை பேணப்படும் – குறள்:87 6/2
பேணாமை பேணும் தகைய சிறிய எனினும் – சிறுபஞ்:37/3
பெருமை புகழ் அறம் பேணாமை சீற்றம் – ஏலாதி:60/1

TOP


பேணாய் (1)

பேணாய் இதன் திறத்து என்றாலும் பேணாதே – திணை150:64/1

TOP


பேணார் (3)

பிறர் தன்னை பேணுங்கால் நாணலும் பேணார்
திறன் வேறு கூறின் பொறையும் அற வினையை – திரி:6/1,2
உழந்ததூஉம் பேணார் ஒறுத்தமை கண்டும் – பழ:211/1
பெரும் பழி ஏறுவ பேணார் இரும் புன்னை – பழ:262/2

TOP


பேணான் (1)

பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின் – குறள்:53 6/1

TOP


பேணி (16)

பெண் இனிது பேணி வழிபடின் பண் இனிது – நான்மணி:36/3
பெற்று அன்னர் பேணி வழிபடுவார் கற்று அன்னர் – நான்மணி:73/3
முந்துற பேணி முகம் நான்கு உடையானை – இனிய40:0/3
பட்டாங்கு பேணி பணிந்து ஒழுகல் முன் இனிதே – இனிய40:19/2
தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற – குறள்:6 6/1
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தம போல் செயின் – குறள்:12 10/1,2
பெற்றியார் பேணி கொளல் – குறள்:45 2/2
பேணி தமரா கொளல் – குறள்:45 3/2
பேணி புணர்பவர் தோள் – குறள்:92 7/2
பேணி கொள்வேம் என்னும் நோக்கு – குறள்:98 6/2
பெரியார்க்கு செய்யும் சிறப்பினை பேணி
சிறியார்க்கு செய்துவிடுதல் பொறி வண்டு – பழ:75/1,2
பேணா அறிவு இலா மாக்களை பேணி
ஒழுக்கி அவரொடு உடனுறைசெய்தல் – பழ:142/2,3
பெறு நால்வர் பேணி வழங்கி பெறும் நான்மறை – ஏலாதி:0/2
பெரியார் சொல் பேணி பிறழாது நின்று – ஏலாதி:47/1
பிரசை இரும் பிடி பேணி வரூஉம் – கைந்:5/2
பெரும் கல் மலை நாடன் பேணி வரினே – கைந்:8/3

TOP


பேணிக்கொளலும் (1)

பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார் – குறள்:64 3/1

TOP


பேணிய (1)

பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய
நாணின் வரை நிற்பர் நல் பெண்டிர் நட்டு அமைந்த – நான்மணி:87/2,3

TOP


பேணியார் (1)

பேணியார் பெட்ப செயின் – குறள்:126 7/2

TOP


பேணுங்கால் (2)

பிறர் தன்னை பேணுங்கால் நாணலும் பேணார் – திரி:6/1
ஊண் இன்றி ஆகாது உயிர் வாழ்க்கை பேணுங்கால்
கைத்து இன்றி ஆகா கருமங்கள் காரிகையாய் – பழ:400/2,3

TOP


பேணும் (3)

பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும்
நறு நுதலாள் நன்மை துணை – நாலடி:39 1/3,4
பின்றாது பேணும் புகழான் பின் பின்றா – திணை150:87/2
பேணாமை பேணும் தகைய சிறிய எனினும் – சிறுபஞ்:37/3

TOP


பேணொடும் (1)

பேணொடும் எண்ணும் எழுத்து இவை மாணொடு – ஏலாதி:63/2

TOP


பேதுறவு (1)

பேதுறவு தீர பெருக்க தலையளித்து – பழ:360/1

TOP


பேதுறார் (1)

பேதுறார் கேட்டல் இனிது – இனிய40:8/5

TOP


பேதுறுதல் (1)

பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி பொறாஅன் – பழ:240/2

TOP


பேதை (33)

மனத்தின் அழியுமாம் பேதை நினைத்து அதனை – நாலடி:4 3/2
கோதி குழம்பு அலைக்கும் கும்பத்தை பேதை
பெரும் தோளி பெய்வளாய் என்னும் மீ போர்த்த – நாலடி:5 7/2,3
பேதையோடு யாதும் உரையற்க பேதை
உரைக்கின் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையால் – நாலடி:8 1/2,3
பெற்றதாம் பேதை ஓர் சூத்திரம் மற்று அதனை – நாலடி:32 4/2
நா அன்றோ நட்பு அறுக்கும் தேற்றம் இல் பேதை
விடும் அன்றோ வீங்க பிணிப்பின் அவாஅ – நான்மணி:78/1,2
ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா – இன்னா40:17/1
அழகுடையான் பேதை எனல் – இன்னா40:35/4
கொண்டன்று பேதை நுதல் – கார்40:17/4
செல்வ மழை தடம் கண் சில் மொழி பேதை வாய் – கார்40:21/3
ஊதை உளரும் நறும் தண் கா பேதை
பெரு மடம் நம்மாட்டு உரைத்து – கார்40:30/3,4
இடம் என ஆங்கே குறி செய்தேம் பேதை
மடமொழி எவ்வம் கெட – கார்40:33/3,4
செல்வ மழை மதர் கண் சில் மொழி பேதை ஊர் – கார்40:36/3
ஈந்தும் மென் பேதை நுதல் – கார்40:40/4
பேதை மடவார் தம் வண்டல் விளக்கு அயரும் – ஐந்50:46/2
கொல் களிறு அன்னான் பின் செல்லும்கொல் என் பேதை
மெல் விரல் சேப்ப நடந்து – ஐந்70:42/3,4
பேதை புகலை புதல்வன் துணை சான்றோன் – ஐந்70:48/1
பேதை பட்டு ஏங்கன்மின் நீயிரும் எண் இலா – ஐந்70:52/3
ஓர்த்து ஒழிந்தாள் என் பேதை ஊர்ந்து – திணை150:73/4
பேதை படுக்கும் இழவுஊழ் அறிவு அகற்றும் – குறள்:38 2/1
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த – குறள்:61 3/1
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார் – குறள்:82 6/1
பேணாமை பேதை தொழில் – குறள்:84 3/2
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும் – குறள்:84 5/1
பேதை வினை மேற்கொளின் – குறள்:84 6/2
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்றக்கடை – குறள்:84 7/1,2
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன் – குறள்:84 8/1
குழாஅத்து பேதை புகல் – குறள்:84 10/2
பைம் தொடி பேதை நுதல் – குறள்:124 8/2
பேதை பெரு மழை கண் – குறள்:124 9/2
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – குறள்:125 8/2
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – குறள்:128 4/1,2
பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை தன் – பழ:184/1
தறுகண்மை ஆகாதாம் பேதை தறுகண் – பழ:220/2

TOP


பேதைக்கு (7)

கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நா தின்னும் நல்ல சுனைத்து – நாலடி:34 5/3,4
பேதைக்கு அமர்த்தன கண் – குறள்:109 4/2
உறுதொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் – குறள்:111 6/1,2
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – குறள்:114 6/2
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
பெண் நிறைந்த நீர்மை பெரிது – குறள்:128 2/1,2
விதைத்தாலும் நாறாத வித்து உள பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு – பழ:399/3,4
புதைத்தாலும் நாறாத வித்து உள பேதைக்கு
உரைத்தாலும் செல்லாது உணர்வு – சிறுபஞ்:21/3,4

TOP


பேதைகள் (2)

பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல் – ஆசாரக்:98/2
பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ – பழ:351/3

TOP


பேதைமை (18)

பேதைமை அன்று அது அறிவு – நாலடி:25 9/4
பேணாமை செய்வது பேதைமை காணா – நான்மணி:22/2
பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா – இன்னா40:38/1
பேதைமை கண்டு ஒழுகுவார் – ஐந்70:44/4
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து – குறள்:15 1/1
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும் – குறள்:36 8/1
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து – குறள்:42 7/1
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது – குறள்:43 8/1
பேதைமை எல்லாம் தரும் – குறள்:51 7/2
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க – குறள்:81 5/1
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு – குறள்:84 1/1
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை – குறள்:84 2/1
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – குறள்:91 10/2
பேதைமை வாழி என் நெஞ்சு – குறள்:125 2/2
சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டும் – திரி:14/2
பேதைமை வாழும் உயிர்க்கு – திரி:93/4
பெரியாரை சார்ந்தார் மேல் பேதைமை கந்தா – பழ:139/1
பேதைமை தம்மேலே கொண்டு – கைந்:43/4

TOP


பேதைமையுள் (1)

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை – குறள்:84 2/1

TOP


பேதைமையே (2)

பின் நலிதும் என்று உரைத்தல் பேதைமையே பின் நின்று – பழ:148/2
பெற்றிலேம் என்பது பேதைமையே மற்று அதனை – பழ:181/2

TOP


பேதையர் (1)

பேதையர் என்று தமரை செறுபவோ – ஐந்70:51/1

TOP


பேதையார் (10)

பித்தரின் பேதையார் இல் – நாலடி:6 2/4
பொச்சாந்து ஒழுகுவர் பேதையார் அ சார்வு – நாலடி:19 2/2
பின் அறிவாம் என்று இருக்கும் பேதையார் கை காட்டும் – நாலடி:33 8/3
பேதையார் முன்னர் படின் – நான்மணி:96/4
நின்றாரின் பேதையார் இல் – குறள்:15 2/2
பின் நீர பேதையார் நட்பு – குறள்:79 2/2
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
கேண்மை ஒரீஇ விடல் – குறள்:80 7/1,2
பேதையின் பேதையார் இல் – குறள்:84 4/2
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்கண் – குறள்:84 9/1
பின் இன்னா பேதையார் நட்பு – பழ:113/4

TOP


பேதையான் (2)

பேதையான் வீழ்வானேல் கால் முரியும் எல்லாம் – நான்மணி:72/2
பேதையான் என்று உணரும் நெஞ்சம் இனிது உண்மை – ஐந்70:57/3

TOP


பேதையின் (1)

பேதையின் பேதையார் இல் – குறள்:84 4/2

TOP


பேதையும் (3)

புல்லுங்கால் தான் புல்லும் பேதையும் இல் எனக்கு ஒன்று – திரி:74/2
பெண்பாலை காப்பு இகழும் பேதையும் பண்பு இல் – திரி:94/2
பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும் முட்டு இன்றி – திரி:99/2

TOP


பேதையோடு (1)

பேதையோடு யாதும் உரையற்க பேதை – நாலடி:8 1/2

TOP


பேய் (3)

கைப்பு அறா பேய் சுரையின் காய் – நாலடி:12 6/4
உண்டி உதவாதாள் இல் வாழ் பேய் இ மூவர் – நாலடி:37 3/3
பிறை பெற்ற வாணுதலாய் தானே ஆடும் பேய்
பறை பெற்றாள் ஆடாதோ பாய்ந்து – பழ:403/3,4

TOP


பேர் (29)

மெய் வாய் கண் மூக்கு செவி என பேர் பெற்ற – நாலடி:6 9/1
பெய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்து ஆகும் – நாலடி:15 7/2
பிறப்பு இன்னாது என்று உணரும் பேர் அறிவினாரை – நாலடி:18 3/3
பேர் ஆண்மை இல்லாக்கடை – நாலடி:20 9/4
பிறந்த குலம் மாயும் பேர் ஆண்மை மாயும் – நாலடி:29 5/1
பிறக்குங்கால் பேர் எனவும் பேரா இறக்குங்கால் – நான்மணி:40/1
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு – குறள்:15 8/1
பேர் அறிவாளன் திரு – குறள்:22 5/2
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை – குறள்:75 4/1
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால் – குறள்:78 3/1
கழி பேர் இரையான்கண் நோய் – குறள்:95 6/2
பெண் தகையான் பேர் அமர் கட்டு – குறள்:109 3/2
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் – குறள்:119 10/1
வீறு சால் பேர் அமைச்சர் கோள் – திரி:61/4
பேர் அறிவாளர் துணிவு – ஆசாரக்:19/3
பேர் அறிவாளர் துணிவு – ஆசாரக்:42/3
தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார் இல்லத்து – ஆசாரக்:80/1
பேர் பிறிது ஆக பெறுதலால் போகாரே – பழ:146/3
சுட்டி சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும் – பழ:203/1
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை – பழ:348/1
பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ – பழ:351/3
பிளந்து அறியும் பேர் ஆற்றலான் – சிறுபஞ்:56/4
பார் அறம் நன்று பாத்து உண்பானேல் பேர் அறம் – சிறுபஞ்:61/2
அழிந்தாளை இல் வைத்தல் பேர் அறமா ஆற்ற – சிறுபஞ்:70/3
பேர் இல் பிறந்தமை ஈரத்தின் அறிப – முது:2 1/1
பேர் அறிவினோன் இனிது வாழாமை பொய் – முது:7 1/1
கிரிதன் பௌநற்பவன் பேர் – ஏலாதி:30/4
இ திறத்த எஞ்சினார் பேர் – ஏலாதி:31/4
பெரும் சிரங்கு பேர் வயிற்று தீயார்க்கு அரும் சிரமம் – ஏலாதி:57/2

TOP


பேர்க்குதல் (1)

பேர்க்குதல் யார்க்கும் அரிது – நாலடி:17 1/4

TOP


பேர்த்தரல் (1)

இலங்காமை பேர்த்தரல் ஈற்றம் விலங்காமை – சிறுபஞ்:72/2

TOP


பேர்த்து (10)

பெடை சேவல் வன் கழுகு பேர்த்து இட்டு குத்தல் – நாலடி:5 8/3
பேர்த்து இன்னா செய்யாமை நன்று – நாலடி:7 7/4
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை நீர்த்து அன்றி – நாலடி:7 10/2
பிறியோலை பேர்த்து விளியா கதிப்ப – திணை150:113/2
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – குறள்:36 7/2
இறந்தது பேர்த்து அறிவார் இல் – பழ:43/4
பேர்த்து தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே – பழ:195/2
வெறுப்பினால் பேர்த்து செறுப்பின் தலையுள் – பழ:294/3
பேர்த்து நாய் கவ்வினார் இல் – பழ:375/4
பேர்த்து உடம்பு கோடல் அரிது – சிறுபஞ்:17/4

TOP


பேர்த்தும் (1)

ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் பேர்த்தும் ஓர் – நாலடி:37 4/2

TOP


பேர்ந்து (2)

பெரும் பீர் பசப்பித்தீர் பேர்ந்து – திணை150:116/4
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான் பெரியாரை – பழ:92/3

TOP


பேர (1)

திரை அலறி பேர தெழியா திரியா – திணை150:60/1

TOP


பேரா (3)

பிறக்குங்கால் பேர் எனவும் பேரா இறக்குங்கால் – நான்மணி:40/1
பேரா இயற்கை தரும் – குறள்:37 10/2
பேரா இடும்பை தரும் – குறள்:90 2/2

TOP


பேராண்மை (1)

பேராண்மை வேண்டுபவர் – குறள்:97 2/2

TOP


பேராதவர் (1)

சென்றது பேராதவர் – பழ:297/4

TOP


பேரான் (1)

சூது உவவான் பேரான் சுலா உரையான் யார்திறத்தும் – ஏலாதி:43/1

TOP


பேரானை (1)

பிடர்த்தலை பேரானை பெற்று கடைக்கால் – பழ:105/2

TOP


பேரும் (5)

பேரும் பிறிது ஆகி தீர்த்தம் ஆம் ஓரும் – நாலடி:18 5/2
பேரும் அறியார் நனி விரும்பு தாளாண்மை – நாலடி:20 10/3
கல் பேரும் கோட்டால் கனைத்து தம் கன்று உள்ளி – திணை150:148/3
தாக்கற்கு பேரும் தகைத்து – குறள்:49 6/2
ஓர்த்து உடம்பு பேரும் என்று ஊன் அவாய் உண்ணானேல் – சிறுபஞ்:17/3

TOP


பேழ் (1)

பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்து – ஐந்70:31/1

TOP


பேற்றின் (1)

விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்மாட்டும் – குறள்:17 2/1

TOP


பேறு (4)

மாண்ட குணத்தொடு மக்கள் பேறு இல் எனினும் – நாலடி:6 6/1
நன் கலம் நன் மக்கள் பேறு – குறள்:6 10/2
மக்கள் பேறு அல்ல பிற – குறள்:7 1/2
மக்கள்பேற்றின் பெறும் பேறு இல்லை – முது:6 1/1

TOP