நா – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 17
நாக்கின் 1
நாக்கு 1
நாக 1
நாகம் 18
நாகர் 1
நாகரிகம் 1
நாகும் 1
நாஞ்சில் 1
நாஞ்சிலால் 1
நாட்கள் 1
நாட்ட 2
நாட்டப்பாட்டார்களை 1
நாட்டம் 4
நாட்டல் 2
நாட்டவர் 1
நாட்டவரும் 1
நாட்டவும் 1
நாட்டான் 1
நாட்டி 2
நாட்டிற்கு 2
நாட்டின் 1
நாட்டு 7
நாட்டுக்கு 1
நாட்டுள் 1
நாட்டுள்ளும் 1
நாட 79
நாடகம் 2
நாடல் 1
நாடலாம் 1
நாடற்கு 2
நாடன் 47
நாடன்தன் 1
நாடனும் 1
நாடனை 2
நாடா 3
நாடாது 2
நாடாதே 1
நாடாமை 2
நாடார் 1
நாடி 31
நாடிக்கொண்டிருந்து 1
நாடிய 1
நாடியே 1
நாடில் 1
நாடிவிடும் 1
நாடின் 5
நாடினன் 1
நாடு 26
நாடுக 2
நாடுங்கால் 3
நாடுமோ 1
நாடுவ 1
நாடுவர் 1
நாண் 37
நாண 5
நாணம் 1
நாணல் 1
நாணலும் 2
நாணா 2
நாணாக 1
நாணாது 1
நாணாமை 2
நாணார் 2
நாணார்கொல் 1
நாணால் 2
நாணான் 1
நாணி 3
நாணின் 2
நாணின 1
நாணினன் 1
நாணினை 2
நாணு 6
நாணுக்கு 1
நாணுடைமை 1
நாணுதல் 3
நாணுதுமால் 1
நாணுப்படல் 2
நாணுபவர் 1
நாணும் 8
நாணுமாறு 1
நாணுவர் 1
நாணுவார் 2
நாணுவானை 1
நாணை 1
நாணொடு 2
நாப்பண் 1
நாம் 14
நாம 2
நாமம் 1
நாமும் 1
நாய் 31
நாய்க்கு 1
நாய்கர் 1
நாயகற்கு 1
நாயிறு 2
நாயும் 2
நாயேன் 1
நாயை 1
நார் 6
நாராய் 2
நாராயம் 1
நாரால் 1
நாரினால் 1
நாரை 1
நாரைக்கு 1
நால் 11
நால்வர் 2
நாவகம் 1
நாவல் 1
நாவலம்தீவு 1
நாவாய் 5
நாவாயும் 1
நாவிதன் 1
நாவிற்கு 3
நாவின் 3
நாவினார் 1
நாவினால் 2
நாவினான் 1
நாவும் 1
நாவோ 1
நாழி 3
நாழிகையானே 1
நாழியா 1
நாள் 77
நாள்தொறும் 6
நாள்தோறும் 1
நாள்வாயும் 1
நாளால் 2
நாளான் 1
நாளில் 1
நாளும் 24
நாளுமே 1
நாளே 2
நாளேம் 1
நாளை 9
நாளோடு 1
நாற்றம் 7
நாற 2
நாறா 2
நாறாத 2
நாறாமை 2
நாறினும் 1
நாறு 1
நாறும் 4
நாறுவ 1
நான் 1
நான்கின் 3
நான்கு 4
நான்கும் 14
நான்கே 1
நான்மறை 1
நான்மறையாளர் 1
நானம் 2
நானூறும் 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நா (17)

நா பாடம் சொல்லி நயம் உணர்வார் போல் செறிக்கும் – நாலடி:32 2/1
நா தின்னும் நல்ல சுனைத்து – நாலடி:34 5/4
எற்றால் இயன்றதோ நா – நாலடி:36 3/4
நா அன்றோ நட்பு அறுக்கும் தேற்றம் இல் பேதை – நான்மணி:78/1
யா காவார்ஆயினும் நா காக்க காவாக்கால் – குறள்:13 7/1
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை – குறள்:34 5/1
நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம் – குறள்:65 1/1
நா தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இ மூன்றும் – திரி:47/3
நல் அவை கண்டக்கால் நா சுருட்டி நன்று உணரா – பழ:249/1
நல் அவையுள் புக்கு இருந்து நா அடங்க கல்வி – பழ:326/2
கொன்று உண்பான் நா சாம் கொடும் கரி போவான் நா சாம் – சிறுபஞ்:8/1
கொன்று உண்பான் நா சாம் கொடும் கரி போவான் நா சாம் – சிறுபஞ்:8/1
கண்டுழி நா சாம் கடவான் குடி பிறந்தான் – சிறுபஞ்:8/3
உண்டுழி நா சாம் உணர்ந்து – சிறுபஞ்:8/4
நள்ளான் உயிர் அழுங்க நா ஆடான் எள்ளானாய் – சிறுபஞ்:19/2
கால் இல்லார் கண் இல்லார் நா இல்லார் யாரையும் – ஏலாதி:36/1
நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும் என நா காட்ட – ஏலாதி:79/2

TOP


நாக்கின் (1)

நாக்கின் அறிப இனியவை மூக்கினான் – நான்மணி:75/1

TOP


நாக்கு (1)

நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும் என நா காட்ட – ஏலாதி:79/2

TOP


நாக (1)

நாக நறு மலர் நாள் வேங்கை பூ விரவி – கைந்:12/1

TOP


நாகம் (18)

இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் தத்தம் – நாலடி:7 6/3
விரி நிற நாகம் விடர் உளதேனும் – நாலடி:17 4/1
தெரிவு உடையார் தீ இனத்தர் ஆகுதல் நாகம்
விரி பெடையோடு ஆடி விட்டு அற்று – நாலடி:24 10/3,4
மந்திரத்தினால் பிணிப்பர் மா நாகம் கொந்தி – நான்மணி:10/2
குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா – இன்னா40:29/1
அரு மணி நாகம் அனுங்க செரு மன்னர் – கார்40:20/3
ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும் – கள40:26/3
முதிர் மணி நாகம் அனுங்க முழங்கி – திணை50:28/2
ஐ வாய நாகம் புறம் எல்லாம் ஆயுங்கால் – திணை150:13/3
கை வாய நாகம் சேர் காடு – திணை150:13/4
நாள் நாகம் நாறும் நனை குழலாள் நல்கி தன் – திணை150:16/1
நாகம் தோய் நாகம் என இவற்றை போக – திணை150:28/2
நாகம் தோய் நாகம் என இவற்றை போக – திணை150:28/2
ஐம் தலை நாகம் புரையும் அணி கார்தான் – திணை150:107/3
கத நாகம் புற்று அடைய கார் ஏறு சீற – திணை150:117/1
மத நாகம் மாறு முழங்க புதல் நாகம் – திணை150:117/2
மத நாகம் மாறு முழங்க புதல் நாகம்
பொன் பயந்த வெள்ளி புறமாக பூங்கோதாய் – திணை150:117/2,3
நாகம் உயிர்ப்ப கெடும் – குறள்:77 3/2

TOP


நாகர் (1)

வழுத்த வரம் கொடுப்பர் நாகர் தொழு திறந்து – நான்மணி:60/2

TOP


நாகரிகம் (1)

நாகரிகம் வேண்டுபவர் – குறள்:58 10/2

TOP


நாகும் (1)

நல் ஆவின் கன்றுஆயின் நாகும் விலை பெறூஉம் – நாலடி:12 5/1

TOP


நாஞ்சில் (1)

நாஞ்சில் வலவன் நிறம் போல பூம் சினை – கார்40:19/1

TOP


நாஞ்சிலால் (1)

வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல் – கள40:40/1

TOP


நாட்கள் (1)

ஒன்று இடையிட்டு வருமேல் நின் வாழ் நாட்கள்
ஒன்றி அனைத்தும் உளேன் – ஐந்70:56/3,4

TOP


நாட்ட (2)

அலர் மொழி சென்ற கொடி அக நாட்ட
வலன் உயர்ந்து தோன்றும் மலை – ஐந்70:33/3,4
இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு – குறள்:55 5/1,2

TOP


நாட்டப்பாட்டார்களை (1)

நண்பு ஒன்றி தம்மாலே நாட்டப்பாட்டார்களை
கண் கண்ட குற்றம் உள எனினும் காய்ந்தீயார் – பழ:16/1,2

TOP


நாட்டம் (4)

உள் நாட்டம் கொள்ளப்படுதலால் யாக்கை கோள் – நாலடி:2 8/3
உள் நாட்டம் இன்மையும் இல் – நான்மணி:93/4
உள் நாட்டம் சான்றவர் தந்த நசை இற்று என்று – ஐந்70:53/1
நல்லவருள் நாட்டம் இலேம் – திணை50:37/4

TOP


நாட்டல் (2)

வேந்தனா நாட்டல் விதி – சிறுபஞ்:47/4
நன்று தளி சாலை நாட்டல் பெரும் போகம் – சிறுபஞ்:61/3

TOP


நாட்டவர் (1)

நலம் மிகு கார்த்திகை நாட்டவர் இட்ட – கார்40:26/1

TOP


நாட்டவரும் (1)

தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால் – நாலடி:25 3/2

TOP


நாட்டவும் (1)

நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் ஆகாதே – பழ:270/1

TOP


நாட்டான் (1)

நாட்டான் வீறு எய்துவர் மன்னவர் கூத்து ஒருவன் – நான்மணி:83/3

TOP


நாட்டி (2)

நாட்டி கொளப்பட்டார் நன்மை இலர்ஆயின் – பழ:39/1
உறு மகன் ஆக ஒருவனை நாட்டி
பெறு மாற்றம் இன்றி பெயர்த்தே ஒழிதல் – பழ:172/1,2

TOP


நாட்டிற்கு (2)

வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – குறள்:74 7/2
அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து – குறள்:74 8/2

TOP


நாட்டின் (1)

நாடு என்ப நாட்டின் தலை – குறள்:74 6/2

TOP


நாட்டு (7)

நாட்டு ஆக்கம் நல்லன் இ வேந்து என்றல் கேட்டு ஆக்கம் – நான்மணி:18/3
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று – குறள்:97 6/1
ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு – சிறுபஞ்:34/4
நலிபு அழிந்தார் நாட்டு அறைபோய் நைந்தார் மெலிவு ஒழிய – சிறுபஞ்:71/2
நாடின் அறம் பெருமை நாட்டு – சிறுபஞ்:72/4
முறை இல் அரசர் நாட்டு இருந்து பழியார் – முது:3 6/1
நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும் என நா காட்ட – ஏலாதி:79/2

TOP


நாட்டுக்கு (1)

நற்பு உடைய நாடு அமிர்து நாட்டுக்கு நற்பு உடைய – சிறுபஞ்:2/2

TOP


நாட்டுள் (1)

நமர் சென்ற நாட்டுள் இ கார் – ஐந்50:3/4

TOP


நாட்டுள்ளும் (1)

நாட்டுள்ளும் நல்ல பதி உள பாட்டுள்ளும் – நான்மணி:62/3

TOP


நாட (79)

வைத்து ஈட்டினார் இழப்பர் வான் தோய் மலை நாட
உய்த்து ஈட்டும் தேனீ கரி – நாலடி:1 10/3,4
கோதை அருவி குளிர் வரை நல் நாட
பேதையோடு யாதும் உரையற்க பேதை – நாலடி:8 1/1,2
கலந்தாரை கைவிடுதல் கானக நாட
விலங்கிற்கும் விள்ளல் அரிது – நாலடி:8 6/3,4
ஒல்லென் அருவி உயர் வரை நல் நாட
நல்ல செய்வார்க்கு தமர் – நாலடி:8 7/3,4
ஒழியாமை கண்டாலும் ஓங்கு அருவி நாட
பழி ஆகா ஆறே தலை – நாலடி:8 9/3,4
இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ம் குன்ற நாட
தொடர்பு உடையேம் என்பார் சிலர் – நாலடி:12 3/3,4
கன மணி நின்று இமைக்கும் நாட கேள் மக்கள் – நாலடி:13 7/3
புனல் செதும்பு நின்று அலைக்கும் பூம் குன்ற நாட
மனத்துக்கண் மாசு ஆய்விடும் – நாலடி:13 8/3,4
நல் வரை நாட சில நாள் அடிப்படின் – நாலடி:16 4/3
ஆர்க்கும் அருவு அணி மலை நாட
பேர்க்குதல் யார்க்கும் அரிது – நாலடி:17 1/3,4
பெரு வரை நாட பெரியார்கண் தீமை – நாலடி:19 6/1
அடுக்கல் மலை நாட தன் சேர்ந்தவரை – நாலடி:21 3/1
புனல் ஒழுக புள் இரியும் பூம் குன்ற நாட
மனம் அறியப்பட்டது ஒன்று அன்று – நாலடி:22 2/3,4
உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட
ஒருவர் பொறை இருவர் நட்பு – நாலடி:23 3/3,4
கழுமியார் செய்த கறங்கு அருவி நாட
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று – நாலடி:23 8/3,4
பொங்கு அருவி தாழும் புனல் வரை நல் நாட
தம் கருமம் முற்றும் துணை – நாலடி:24 1/3,4
வறந்தக்கால் போலுமே வால் அருவி நாட
சிறந்தக்கால் சீர் இலார் நட்பு – நாலடி:24 2/3,4
சந்தன நீள் சோலை சாரல் மலை நாட
பந்தம் இலாளர் தொடர்பு – நாலடி:24 4/3,4
குற்றி பறிக்கும் மலை நாட இன்னாதே – நாலடி:24 7/3
நல் வரை நாட நயம் உணர்வார் நண்பு ஒரீஇ – நாலடி:24 9/3
கலாஅல் கிளி கடியும் கானக நாட
இலாஅர்க்கு இல்லை தமர் – நாலடி:29 3/3,4
கல் மேல் கழூஉம் கண மலை நல் நாட
இன்மை தழுவப்பட்டார்க்கு – நாலடி:29 5/3,4
தாழா உயர் சிறப்பின் தண் குன்ற நல் நாட
வாழாதார்க்கு இல்லை தமர் – நாலடி:29 10/3,4
பரப்பு எலாம் பொன் ஒழுகும் பாய் அருவி நாட
இரப்பாரை எள்ளா மகன் – நாலடி:31 7/3,4
நிரை ஆமா சேக்கும் நெடும் குன்ற நாட
உரை ஆமோ நூலிற்கு நன்கு – நாலடி:32 9/3,4
பெற்றக்கடைத்தும் பிறங்கு அருவி நல் நாட
வற்று ஆம் ஒரு நடை கீழ் – நாலடி:35 3/3,4
என்றும் செயினும் இலங்கு அருவி நல் நாட
நன்று இல நன்று அறியார்மாட்டு – நாலடி:35 4/3,4
வேகம் உடைத்து ஆம் விறல் மலை நல் நாட
ஏகுமாம் எள்ளுமாம் கீழ் – நாலடி:35 8/3,4
கண மலை நல் நாட கண் இன்று ஒருவர் – நாலடி:36 3/1
வீழும் அருவி விறல் மலை நல் நாட
வாழ்வின் வரை பாய்தல் நன்று – நாலடி:37 9/3,4
மஞ்சு இவர் சோலை வள மலை நல் நாட
எஞ்சாது நீ வருதி என்று எண்ணி அஞ்சி – ஐந்50:17/1,2
மா மலை நாட மட மொழிதன் கேண்மை – ஐந்50:18/3
நெடு மலை நல் நாட நீள் வேல் துணையா – ஐந்50:19/1
கானக நாட மறவல் வயங்கிழைக்கு – ஐந்70:1/3
நல் மலை நாட மறவல் வயங்கிழைக்கு – ஐந்70:6/2
வெறி கமழ் தண் சோலை நாட ஒன்று உண்டோ – ஐந்70:8/3
வரையக நாட வரையாய வரின் எம் – ஐந்70:10/3
விறல் மலை நாட வரவு அரிதாம்கொல்லோ – திணை50:2/3
வீழும் அருவி விறல் மலை நல் நாட
மாழை மான் நோக்கியும் ஆற்றாள் இர வரின் – திணை50:7/2,3
மால் நீல மால் வரை நாட கேள் மா நீலம் – திணை150:6/2
நல் மலை நாட இர வரின் வாழாளால் – திணை150:7/3
தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட வாரலோ – திணை150:10/3
கரவு இல் வள மலை கல் அருவி நாட
உர வில் வலியாய் ஒரு நீ இரவின் – திணை150:11/1,2
நாள் வேங்கை பொன் விளையும் நல் மலை நல் நாட
கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார் கோள் வேங்கை – திணை150:20/1,2
பனி வரை நீள் வேங்கை பய மலை நல் நாட
இனி வரையாய் என்று எண்ணி சொல்வேன் முனி வரையுள் – திணை150:27/1,2
நாட வளம் தரும் நாடு – குறள்:74 9/2
இவர் வரை நாட தமரை இல்லார்க்கு – பழ:3/3
அறை பாய் அருவி அணி மலை நாட
உறற்பால யார்க்கும் உறும் – பழ:15/3,4
மரை ஆ கன்று ஊட்டும் மலை நாட மாயா – பழ:48/3
மரம் பயில் சோலை மலை நாட என்றும் – பழ:58/3
அம் தண் அருவி மலை நாட சேண் நோக்கி – பழ:69/3
அணி மலை நாட அளறு ஆடிக்கண்ணும் – பழ:78/3
ஆர்க்கும் அருவி மலை நாட நாய் கொண்டால் – பழ:87/3
பெரு மலை நாட பிறர் அறியலாகா – பழ:91/1
கற்பால் இலங்கு அருவி நாட மற்று யாரானும் – பழ:94/3
குன்றக நல் நாட கூறுங்கால் இல்லையே – பழ:111/3
தாஅய் இழியும் மலை நாட இன்னாதே – பழ:122/3
ஏ கல் மலை நாட என் செய்து ஆங்கு என் பெறினும் – பழ:127/3
கல் மேல் இலங்கு மலை நாட மா காய்த்து – பழ:129/3
பெரு வரை நாட பிரிவு இன்று அதனால் – பழ:136/3
வள்ளியின் ஆடும் மலை நாட அஃது அன்றோ – பழ:140/3
புலி கலாம் கொள் யானை பூம் குன்ற நாட
வலி அலாம் தாக்கு வலிது – பழ:157/3,4
குன்றத்து வீழும் கொடி அருவி நல் நாட
மன்றத்து மையல் சேர்ந்து அற்று – பழ:209/3,4
வரையக நாட விரையின் கருமம் – பழ:227/3
மரையா துணை பயிரும் மா மலை நாட
சுரையாழ் நரம்பு அறுத்து அற்று – பழ:228/3,4
அறை கல் அருவி அணி மலை நாட
நிறை குடம் நீர் தளும்பல் இல் – பழ:243/3,4
குடிஞை இரட்டும் குளிர் வரை நாட
கடிஞையுள் கல் இடுவார் இல் – பழ:246/3,4
மஞ்சு சூழ் சோலை மலை நாட யார்க்கானும் – பழ:254/3
வேழம் பிடி தழூஉம் வேய் சூழ் மலை நாட
ஊழ் அம்பு வீழா நிலத்து – பழ:265/3,4
முசு குத்தி நக்கும் மலை நாட தம்மை – பழ:268/3
வெற்பு அறை மேல் தாழும் விலங்கு அருவி நல் நாட
கற்பறிவு போகா கடை – பழ:270/3,4
செல் நீர் அருவி மலை நாட பாய்பவோ – பழ:293/3
மருள் படுவதுஆயின் மலை நாட என்னை – பழ:334/3
ஏனல்வாய் வீழும் மலை நாட அஃது அன்றோ – பழ:342/3
பாய் வரை நாட பரிசு அழிந்தாரொடு – பழ:350/3
பெரு வரை நாட சிறிதேனும் இன்னாது – பழ:352/3
இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ம் குன்ற நாட
உமி குற்று கை வருந்துமாறு – பழ:368/3,4
கானக நாட பயிலார் பயின்றதூஉம் – பழ:393/3
தகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட
நகையேதான் ஆற்றிவிடும் – பழ:402/3,4

TOP


நாடகம் (2)

நாடகம் சாராமை நாடுங்கால் நாடகம் – ஏலாதி:25/2
நாடகம் சாராமை நாடுங்கால் நாடகம்
சேர்ந்தால் பகை பழி தீ சொல்லே சாக்காடே – ஏலாதி:25/2,3

TOP


நாடல் (1)

கோள் நாடல் வேண்டா குறி அறிவார் கூஉய் கொண்டு ஓர் – திணை150:54/3

TOP


நாடலாம் (1)

எங்கையர் இல் நாடலாம் இன்று – திணை150:151/4

TOP


நாடற்கு (2)

பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு
ஆசையின் தேம்பும் என் நெஞ்சு – கைந்:3/3,4
முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு என் தோள் – கைந்:5/3

TOP


நாடன் (47)

துப்பு துகளின் கெழூஉம் புனல் நாடன்
தப்பியார் அட்ட களத்து – கள40:1/4,5
நீர் தூம்பு நீர் உமிழ்வ போன்ற புனல் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து – கள40:2/4,5
மழை குரல் மா முரசின் மல்கு நீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து – கள40:3/3,4
வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன்
பொருநரை அட்ட களத்து – கள40:7/3,4
பண் ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து – கள40:8/4,5
நீல சுறா பிறழ்வ போன்ற புனல் நாடன்
நேராரை அட்ட களத்து – கள40:9/3,4
செவ்வல்அம் குன்றம் போல் தோன்றும் புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து – கள40:10/3,4
காவிரி நாடன் கடாஅய் கடிது ஆக – கள40:12/4
ஒண் செம் குருதி உமிழும் புனல் நாடன்
கொங்கரை அட்ட களத்து – கள40:14/3,4
வேங்கை இரும் புலி போன்ற புனல் நாடன்
வேந்தரை அட்ட களத்து – கள40:16/4,5
போர் கொடி தானை பொரு புனல் நீர் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து – கள40:17/4,5
மு கோட்ட போன்ற களிறு எல்லாம் நீர் நாடன்
புக்கு அமர் அட்ட களத்து – கள40:19/3,4
சீர் முழா பண் அமைப்பான் போன்ற புனல் நாடன்
நேராரை அட்ட களத்து – கள40:20/3,4
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன்
கூடாரை அட்ட களத்து – கள40:22/5,6
கண் ஆர் கமழ் தெரியல் காவிரி நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து – கள40:24/4,5
வானம் துடைப்பன போன்ற புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து – கள40:25/3,4
செம் வாய் உவணத்தின் தோன்றும் புனல் நாடன்
தெவ்வாரை அட்ட களத்து – கள40:26/4,5
பூ நீர் வியல் மிடா போன்ற புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து – கள40:27/3,4
கண்ணாடி காண்பாரின் தோன்றும் புனல் நாடன்
நண்ணாரை அட்ட களத்து – கள40:28/5,6
மின்னு கொடியின் மிளிரும் புனல் நாடன்
ஒன்னாரை அட்ட களத்து – கள40:31/3,4
பூம் தார் முரசின் பொரு புனல் நீர் நாடன்
காய்ந்தாரை அட்ட களத்து – கள40:32/3,4
கரை கொன்று இழிதரும் காவிரி நாடன்
உரை சால் உடம்பிடி மூழ்க அரசோடு – கள40:35/3,4
காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள் – கள40:36/2
ஆ உதை காளாம்பி போன்ற புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து – கள40:36/4,5
பெளவம் புணர் அம்பி போன்ற புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து – கள40:37/3,4
பஞ்சி பெய் தாலமே போன்ற புனல் நாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து – கள40:39/3,4
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன்
கூடாரை அட்ட களத்து – கள40:41/4,5
நன் மலை நாடன் நலம் புனைய மென்முலையாய் – ஐந்50:11/2
கானக நாடன் கலவான் என் தோள் என்று – ஐந்50:13/1
நாடன் நயம் உடையன் என்பதனால் நீப்பினும் – ஐந்70:2/3
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை – ஐந்70:5/3
குன்றக நாடன் தெளித்த தெளிவினை – ஐந்70:9/2
தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான் என் தோழி – ஐந்70:11/3
சுரும்பு இமிர் சோலை மலை நாடன் கேண்மை – ஐந்70:12/3
நீரால் தெளி திகழ் கான் நாடன் கேண்மையே – ஐந்70:13/2
பூம் குன்ற நாடன் புணர்ந்த அ நாள் போலா – திணை50:3/3
மணி மலை நாடன் வருவான்கொல் தோழி – திணை50:9/2
நல் மலை நாடன் மகள் – திணை150:7/4
மருவி ஆம் மாலை மலை நாடன் கேண்மை – திணை150:18/3
கானக நாடன் கலந்தான்இலன் என்று – கைந்:1/3
வஞ்ச மலை நாடன் வாரான்கொல் தோழி என் – கைந்:2/3
தீம் கனி மாவின் முசு பாய் மலை நாடன்
தான் கலந்து உள்ளா தகையனோ நேரிழாய் – கைந்:4/2,3
புரை தீர் மலை நாடன் பூண் ஏந்து அகலம் – கைந்:6/3
பெரும் கல் மலை நாடன் பேணி வரினே – கைந்:8/3
பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நல் நாடன்
காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு – கைந்:9/3,4
பொன் இணர் வேங்கை புனம் சூழ் மலை நாடன்
மின்னின் அனைய வேல் ஏந்தி இரவினுள் – கைந்:10/1,2
முறி கிளர் நல் மலை நாடன் வருமே – கைந்:11/3

TOP


நாடன்தன் (1)

ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை – கைந்:7/3

TOP


நாடனும் (1)

வரையக நாடனும் வந்தான் மற்று அன்னை – ஐந்70:3/3

TOP


நாடனை (2)

ஆமா சுரக்கும் அணி மலை நாடனை
யாமா பிரிவது இலம் – ஐந்70:4/3,4
அரா வழங்கு நீள் சோலை நாடனை நம் இல் – ஐந்70:14/3

TOP


நாடா (3)

நண்பு என்னும் நாடா சிறப்பு – குறள்:8 4/2
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல – குறள்:74 9/1
செய்தவை நாடா சிறப்புடைமை எய்த – திரி:21/2

TOP


நாடாது (2)

நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின் – குறள்:80 1/1
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவரால் – பழ:94/1

TOP


நாடாதே (1)

நாடாதே தீதுஉரையும் நஞ்சு – சிறுபஞ்:11/4

TOP


நாடாமை (2)

கோடாமை கோடி பொருள் பெறினும் நாடாமை
நட்டார்கண் விட்ட வினை – நான்மணி:25/3,4
நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும் – குறள்:84 3/1

TOP


நாடார் (1)

கருமம் உடையாரை நாடார் எருமை மேல் – பழ:23/2

TOP


நாடி (31)

வல்லது ஆம் தாய் நாடி கோடலை தொல்லை – நாலடி:11 1/2
கிழவனை நாடி கொளற்கு – நாலடி:11 1/4
நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடி தம் – நாலடி:23 5/3
நட்ட பின் நாடி திரிவேனேல் நட்டான் – நாலடி:23 10/2
பெரு மலை தாம் நாடி தேன் துய்த்து பேணாது – திணை150:23/1
நாள் நாடி நல்குதல் நன்று – திணை150:54/4
நாடி இனிய சொலின் – குறள்:10 6/2
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான் – குறள்:25 2/1
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் – குறள்:51 4/1
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் – குறள்:51 4/1
மிகை நாடி மிக்க கொளல் – குறள்:51 4/2
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த – குறள்:52 1/1
செய்வானை நாடி வினை நாடி காலத்தொடு – குறள்:52 6/1
செய்வானை நாடி வினை நாடி காலத்தொடு – குறள்:52 6/1
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – குறள்:56 3/1
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் – குறள்:57 1/1
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – குறள்:95 8/1
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – குறள்:95 8/1
வாய் நாடி வாய்ப்ப செயல் – குறள்:95 8/2
நல்காரை நாடி தரற்கு – குறள்:122 4/2
பல நாடி நல்லவை கற்றல் இ மூன்றும் – திரி:21/3
கேட்பாரை நாடி கிளக்கப்படும் பொருட்கண் – பழ:4/1
முந்துற நாடி புறந்தரல் ஓம்புக – பழ:69/2
நாடி நமர் என்று நன்கு புறந்தந்தாரை – பழ:81/1
நல்லவும் தீயவும் நாடி பிறர் உரைக்கும் – பழ:104/1
வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தை – பழ:104/3
நல் நாளே நாடி மலர்தலால் மன்னர் – பழ:120/2
நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு – பழ:145/2
முற்றலை நாடி கருமம் செய வையார் – பழ:373/2
நல் இயலான் நாடி உரைக்குங்கால் நல் இயல் – சிறுபஞ்:34/2
வல்லுவ நாடி வகையினால் சொல்லின் – ஏலாதி:76/2

TOP


நாடிக்கொண்டிருந்து (1)

வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து
கோல வன முலையும் புல்லினான் என்று எடுத்து – கைந்:44/2,3

TOP


நாடிய (1)

வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை – குறள்:52 8/1

TOP


நாடியே (1)

தனக்கு தாய் நாடியே சென்றாள் தனக்கு தாய் – நாலடி:2 5/2

TOP


நாடில் (1)

இணை நாடில் இல்லா இரும் தடம் கண் கண்டும் – திணை150:45/3

TOP


நாடிவிடும் (1)

குடத்துள்ளும் நாடிவிடும் – பழ:179/4

TOP


நாடின் (5)

விதுப்பு அற நாடின் வேறு அல்ல புது புனலும் – நாலடி:37 10/2
துளக்கு அற நாடின் வேறு அல்ல விளக்கு ஒளியும் – நாலடி:38 1/2
நல மென் கதுப்பினாய் நாடின் நெய் பெய்த – பழ:397/3
நாவகம் மேய் நாடின் நகை – சிறுபஞ்:10/4
நாடின் அறம் பெருமை நாட்டு – சிறுபஞ்:72/4

TOP


நாடினன் (1)

துணை நாடினன் தோம் இலன் – திணை150:45/4

TOP


நாடு (26)

நாடு ஊக்கல் மன்னர் தொழில் நலம் கேடு ஊக்கல் – நான்மணி:84/3
கடுத்த மலை நாடு காண் – திணை150:79/4
நையும் இடம் அறிந்து நாடு – திணை150:133/4
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – குறள்:40 7/1
நாள்தொறும் நாடு கெடும் – குறள்:56 3/2
செல்வரும் சேர்வது நாடு – குறள்:74 1/2
ஆற்ற விளைவது நாடு – குறள்:74 2/2
இறை ஒருங்கு நேர்வது நாடு – குறள்:74 3/2
சேராது இயல்வது நாடு – குறள்:74 4/2
கொல் குறும்பும் இல்லது நாடு – குறள்:74 5/2
நாடு என்ப நாட்டின் தலை – குறள்:74 6/2
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல – குறள்:74 9/1
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல – குறள்:74 9/1
நாட வளம் தரும் நாடு – குறள்:74 9/2
வேந்து அமைவு இல்லாத நாடு – குறள்:74 10/2
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு – குறள்:133 3/1
நால் திசையும் செல்லாத நாடு இல்லை அ நாடு – பழ:55/2
நால் திசையும் செல்லாத நாடு இல்லை அ நாடு
வேற்று நாடு ஆகா தமவே ஆகும் ஆயினால் – பழ:55/2,3
வேற்று நாடு ஆகா தமவே ஆகும் ஆயினால் – பழ:55/3
நாடு உறைய நல்கினும் நன்கு ஒழுகார் நாள்தொறும் – பழ:121/2
நாடு அறியப்பட்ட பெரும் செல்வர் நல்கூர்ந்து – பழ:278/1
நற்பு உடைய நாடு அமிர்து நாட்டுக்கு நற்பு உடைய – சிறுபஞ்:2/2
கேட்டார் நன்று என்றல் கிளர் வேந்தன் தன் நாடு
வாட்டான் நன்று என்றல் வனப்பு – சிறுபஞ்:7/3,4
வேல் வழி வெம் முனை வீழாது மன் நாடு
கோல் வழி வாழ்தல் குணம் – சிறுபஞ்:13/3,4
புகழ் வெய்யோர்க்கு புத்தேள் நாடு எளிது – முது:8 1/1
முறை இல் அரசன் நாடு நல்கூர்ந்தன்று – முது:9 1/1

TOP


நாடுக (2)

நாள்தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் – குறள்:52 10/1
நாடுக தான் செய்த நுட்பத்தை கேளாதே – பழ:392/3

TOP


நாடுங்கால் (3)

நாடுங்கால் தூங்குபவர் – திரி:19/4
பரந்து ஒருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார் – பழ:58/2
நாடகம் சாராமை நாடுங்கால் நாடகம் – ஏலாதி:25/2

TOP


நாடுமோ (1)

மங்கையர் இல் நாடுமோ மா கோல் யாழ் பாண்மகனே – திணை150:151/3

TOP


நாடுவ (1)

நல் இயல் தம் இனம் நாடுவ போல் நல் இயல் – திணை150:25/2

TOP


நாடுவர் (1)

நாடுவர் விண்ணோர் நயந்து – ஏலாதி:34/4

TOP


நாண் (37)

நம்பற்க நாண் உடையார் – நாலடி:9 1/4
நயவார்கண் நல்குரவு நாண் இன்றுகொல்லோ – நாலடி:27 7/1
நச்சியார்க்கு ஈயாமை நாண் அன்று நாள் நாளும் – நாலடி:30 9/1
அச்சத்தால் நாணுதல் நாண் அன்றாம் எச்சத்தின் – நாலடி:30 9/2
சொல்லாது இருப்பது நாண் – நாலடி:30 9/4
நன்றி புரிகல்லா நாண் இல் மட மாக்கள் – நாலடி:33 3/3
நாண் உடையாள் பெற்ற நலம் – நாலடி:39 6/4
பொறி கெடும் நாண் அற்ற போழ்தே நெறிபட்ட – நான்மணி:43/1
நல்லாரை நல்லவர் நாண் உவப்பர் அல்லாரை – நான்மணி:53/3
நலம் தீது நாண் அற்று நிற்பின் குலம் தீது – நான்மணி:92/3
பாண இருக்க அது களை நாண் உடையான் – ஐந்70:49/2
நாண் அழிந்து நல்ல நலன் அழிந்து நைந்து உருகி – திணை150:23/3
நாண் ஆய நல் வளையாய் நாண் இன்மை காணாய் – திணை150:64/2
நாண் ஆய நல் வளையாய் நாண் இன்மை காணாய் – திணை150:64/2
நாண் உடையான்கட்டே தெளிவு – குறள்:51 2/2
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை – குறள்:91 7/1
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும் – குறள்:93 4/1
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின் – குறள்:96 10/1
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு – குறள்:99 3/1
நாண் உடைமை மாந்தர் சிறப்பு – குறள்:102 2/2
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும் – குறள்:102 3/1
அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல் – குறள்:102 4/1
நாண் வேலி கொள்ளாதுமன்னோ வியல் ஞாலம் – குறள்:102 6/1
நாண் துறவார் நாண் ஆள்பவர் – குறள்:102 7/2
நாண் துறவார் நாண் ஆள்பவர் – குறள்:102 7/2
நாண் இன்மை நின்ற கடை – குறள்:102 9/2
நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை – குறள்:102 10/1
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே – குறள்:125 7/1
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான் – குறள்:126 7/1
நன்றி பயன் தூக்கா நாண் இலியும் சான்றோர் முன் – திரி:62/1
நாண் அகத்து தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆபவேல் – பழ:210/2
நாண் இன்றி ஆகாது பெண்மை நயவிய – பழ:400/1
நாண் இலான் சால்பும் நடை இலான் நல் நோன்பும் – சிறுபஞ்:10/1
நாண் ஒடுக்கம் என்று ஐந்தும் நண்ணின்றா பூண் ஒடுக்கும் – சிறுபஞ்:43/2
நாண் இலன் நாய் நன்கு நள்ளாதான் நாய் பெரியார் – சிறுபஞ்:93/1
நாண் எளிது பெண்ணேல் நகை எளிது நட்டானேல் – சிறுபஞ்:94/1
நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது – முது:4 3/1

TOP


நாண (5)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன் நயம் செய்து விடல் – குறள்:32 4/1,2
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின் – குறள்:102 8/1
அறம் நாண தக்கது உடைத்து – குறள்:102 8/2
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார் – குறள்:115 9/1
பலர் நாண நீத்த கடை – குறள்:115 9/2

TOP


நாணம் (1)

நலத்துக்கு அணி என்ப நாணம் தனக்கு அணியாம் – நான்மணி:9/3

TOP


நாணல் (1)

பல்லாருள் நாணல் பரிந்து – நாலடி:16 5/4

TOP


நாணலும் (2)

பிறர் தன்னை பேணுங்கால் நாணலும் பேணார் – திரி:6/1
துறந்தாரை பேணலும் நாணலும் தாம் கற்ற – ஆசாரக்:63/1

TOP


நாணா (2)

நகுவது போல் மின் ஆட நாணா என் ஆவி – திணை150:122/3
நாணா நடுக்கும் நளி வயல் ஊரனை – திணை150:153/3

TOP


நாணாக (1)

நாணாக நாணும் தரும் – குறள்:91 2/2

TOP


நாணாது (1)

நல்லாரிடை புக்கு நாணாது சொல்லி தன் – நாலடி:32 4/3

TOP


நாணாமை (2)

நலத்தகையார் நாணாமை இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:19/3
நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும் – குறள்:84 3/1

TOP


நாணார் (2)

பற்று இலர் நாணார் பழி – குறள்:51 6/2
நாணார் பரியார் நயன் இல செய்து ஒழுகும் – பழ:142/1

TOP


நாணார்கொல் (1)

தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – குறள்:121 5/1,2

TOP


நாணால் (2)

நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால் – குறள்:102 7/1
நாணால் உயிர் மருட்டி அற்று – குறள்:102 10/2

TOP


நாணான் (1)

பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின் – குறள்:102 8/1

TOP


நாணி (3)

தாமேயும் நாணி தலைச்செல்லார் காணாய் – நாலடி:25 1/2
காணவே கற்பு அழியும் என்பார் போல் நாணி
புறம் கடை வைத்து ஈவர் சோறும் அதனால் – நாலடி:30 3/2,3
கொண்டு அதனை நாணி மறைத்தலால் தன் கண்ணின் – பழ:153/3

TOP


நாணின் (2)

நாணின் வரை நிற்பர் நல் பெண்டிர் நட்டு அமைந்த – நான்மணி:87/3
நடை வனப்பும் நாணின் வனப்பும் புடை சால் – ஏலாதி:74/2

TOP


நாணின (1)

நறு மலர் நாணின கண் – குறள்:124 1/2

TOP


நாணினன் (1)

நயமே பல சொல்லி நாணினன் போன்றான் – கைந்:46/2

TOP


நாணினை (2)

நாணினை நீக்கி உயிரோடு உடன் சென்று – ஐந்70:32/3
நாணினை நீக்கி நிறுத்து – குறள்:114 2/2

TOP


நாணு (6)

நல்லாருள் நாணு தரும் – குறள்:91 3/2
கருமத்தான் நாணுதல் நாணு திருநுதல் – குறள்:102 1/1
நல்லவர் நாணு பிற – குறள்:102 1/2
உரைத்தலும் நாணு தரும் – குறள்:117 2/2
நாணு தாழ் வீழ்த்த கதவு – குறள்:126 1/2
நலன் உடைமையின் நாணு சிறந்தன்று – முது:1 6/1

TOP


நாணுக்கு (1)

பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் வழக்கு – குறள்:102 5/1,2

TOP


நாணுடைமை (1)

பெண்ணுக்கு அணிகலம் நாணுடைமை நண்ணும் – திரி:52/2

TOP


நாணுதல் (3)

அச்சத்தால் நாணுதல் நாண் அன்றாம் எச்சத்தின் – நாலடி:30 9/2
கருமத்தான் நாணுதல் நாணு திருநுதல் – குறள்:102 1/1
தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல் இ மூன்றும் – திரி:91/3

TOP


நாணுதுமால் (1)

அஞ்ஞான்று கண்டேம் போல் நாணுதுமால் எஞ்ஞான்றும் – நாலடி:39 5/2

TOP


நாணுப்படல் (2)

விரவாருள் நாணுப்படல் அஞ்சி யாதும் – நாலடி:9 8/3
பல்லாருள் நாணுப்படல் – இன்னா40:15/4

TOP


நாணுபவர் (1)

நடுவு அன்மை நாணுபவர் – குறள்:18 2/2

TOP


நாணும் (8)

நாணாக நாணும் தரும் – குறள்:91 2/2
செப்பமும் நாணும் ஒருங்கு – குறள்:96 1/2
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும் – குறள்:96 2/1
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு – குறள்:109 9/1
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என் – குறள்:117 3/1
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா – குறள்:119 3/1
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என் – குறள்:130 7/1
மானமும் நாணும் அறியார் மதி மயங்கி – பழ:298/1

TOP


நாணுமாறு (1)

நையாது தான் நாணுமாறு – திணை150:149/4

TOP


நாணுவர் (1)

உள் அரவம் நாணுவர் என்று – ஐந்70:59/4

TOP


நாணுவார் (2)

கொள்வர் பழி நாணுவார் – குறள்:44 3/2
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு – குறள்:102 5/1

TOP


நாணுவானை (1)

குடி பிறந்து தன்கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – குறள்:80 4/1,2

TOP


நாணை (1)

கெழுமிய நாணை மறைக்கும் தொழுநையுள் – பழ:12/2

TOP


நாணொடு (2)

நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன் – குறள்:114 3/1
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை – குறள்:114 4/1,2

TOP


நாப்பண் (1)

அகலம் உடைய அறிவு உடையார் நாப்பண்
புகல் அரியார் புக்கு அவர் தாமே இகலினால் – பழ:115/1,2

TOP


நாம் (14)

ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து – நாலடி:4 2/1
போவாம் நாம் என்னா புலை நெஞ்சே ஓவாது – நாலடி:4 2/2
ஆதும் நாம் என்னும் அவாவினை கைவிட்டு – நாலடி:19 1/3
செய்யாத செய்தும் நாம் என்றலும் செய்வதனை – நாலடி:24 5/1
எவ்வெவ் திசைகளும் வந்தன்று சேறும் நாம்
செவ்வி உடைய சுரம் – கார்40:29/3,4
நன்கு வதிந்தனை நல் நெஞ்சே நாளை நாம்
குன்று அதர் அத்தம் இறந்து தமியமாய் – ஐந்50:40/2,3
நெறி தூர் அரும் சுரம் நாம் உன்னி அறிவிட்டு – ஐந்70:33/2
விரும்பு நாம் செல்லும் இடம் – திணை50:16/4
பனை விளைவு நாம் எண்ண பாத்தி தினை விளைய – திணை150:5/2
நல்லார் விழவகத்தும் நாம் காணேம் நல்லாய் – திணை150:62/2
ஒன்றானும் நாம் மொழியலாமோ செலவு தான் – திணை150:87/1
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – குறள்:120 5/1
வல்லை நாம் காணும் வரவு – கைந்:22/4
மூத்தேம் இனி பாண முன்னாயின் நாம் இளையேம் – கைந்:45/1

TOP


நாம (2)

நாம வேல் கண்ணாள் நடுநடுப்ப வாரலோ – திணை150:25/3
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் – குறள்:15 9/1

TOP


நாமம் (1)

நாமம் கெட கெடும் நோய் – குறள்:36 10/2

TOP


நாமும் (1)

குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும்
விருந்தோடு நிற்றல் விதி – திணை150:112/3,4

TOP


நாய் (31)

கூர்த்து நாய் கௌவி கொள கண்டும் தம் வாயால் – நாலடி:7 10/1
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை நீர்த்து அன்றி – நாலடி:7 10/2
யானை அனையவர் நண்பு ஒரீஇ நாய் அனையார் – நாலடி:22 3/1
மெய்யதா வால் குழைக்கும் நாய் – நாலடி:22 3/4
நாய் கால் சிறு விரல் போல் நன்கு அணியர்ஆயினும் – நாலடி:22 8/1
இருப்பினும் நாய் இருந்து அற்றே இராஅது – நாலடி:26 4/3
உரைப்பினும் நாய் குரைத்து அற்று – நாலடி:26 4/4
கவ்வி தோல் தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின் – நாலடி:33 2/3
பொன் கலத்து ஊட்டி புறந்தரினும் நாய் பிறர் – நாலடி:35 5/1
தொடரொடு கோள் நாய் புரையும் அடர் பைம் பூண் – கள40:34/4
எச்சிலார் நோக்கார் புலை திங்கள் நாய் நாயிறு – ஆசாரக்:6/1
நாய் நட்டால் நல்ல முயல் – பழ:14/4
வருந்த வலிதினின் யாப்பினும் நாய் வால் – பழ:30/3
நாய் மேல் தவிசு இடுமாறு – பழ:75/4
ஆர்க்கும் அருவி மலை நாட நாய் கொண்டால் – பழ:87/3
தீ நாய் எடுப்புமாம் எண்கு – பழ:139/4
திங்களை நாய் குரைத்து அற்று – பழ:149/4
நாய் பெற்ற தெங்கம் பழம் – பழ:151/4
நாய் பின்னதாக தகர் – பழ:156/4
நாய் காணின் கல் காணாவாறு – பழ:261/4
புலி தலை நாய் மோத்தல் இல் – பழ:278/4
இருவர் உடன் ஆடல் நாய் – பழ:352/4
பார்த்து ஓடி சென்று கதம் பட்டு நாய் கவ்வின் – பழ:375/3
பேர்த்து நாய் கவ்வினார் இல் – பழ:375/4
நாய் வாயுள் நல்ல தசை – சிறுபஞ்:15/4
நாண் இலன் நாய் நன்கு நள்ளாதான் நாய் பெரியார் – சிறுபஞ்:93/1
நாண் இலன் நாய் நன்கு நள்ளாதான் நாய் பெரியார் – சிறுபஞ்:93/1
பேண் இலன் நாய் பிறர் சேவகன் நாய் ஏண் இல் – சிறுபஞ்:93/2
பேண் இலன் நாய் பிறர் சேவகன் நாய் ஏண் இல் – சிறுபஞ்:93/2
பருத்தி பகர்வுழி நாய் – சிறுபஞ்:93/4
கத நாய் துரப்ப – கைந்:14/1

TOP


நாய்க்கு (1)

இடை நாய்க்கு எலும்பு இடுமாறு – பழ:73/4

TOP


நாய்கர் (1)

குடி நாய்கர் தாம் பல பெற்றாரின் கேளா – திணை150:134/3

TOP


நாயகற்கு (1)

பாலை யாழ் பாண்மகனே பண்டு நின் நாயகற்கு
மாலை யாழ் ஓதி வருடாயோ காலை யாழ் – திணை150:133/1,2

TOP


நாயிறு (2)

எச்சிலார் நோக்கார் புலை திங்கள் நாய் நாயிறு
அத்தக வீழ்மீனோடு இ ஐந்தும் தெற்றென – ஆசாரக்:6/1,2
ஐம் பூதம் பார்ப்பார் பசு திங்கள் நாயிறு
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல் தம் மெய்க்கண் – ஆசாரக்:15/1,2

TOP


நாயும் (2)

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா – இன்னா40:2/1
கடை அடைத்து வைத்து புடைத்தக்கால் நாயும்
உடையானை கௌவிவிடும் – பழ:252/3,4

TOP


நாயேன் (1)

அடி நாயேன் பெற்ற அருள் – திணை150:134/4

TOP


நாயை (1)

நாயை புலியாம் எனல் – பழ:117/4

TOP


நார் (6)

நார் தொடுத்து ஈர்க்கில் என் நன்று ஆய்ந்து அடக்கில் என் – நாலடி:3 6/1
நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா – இன்னா40:8/2
கள்ளி சார் கார் ஓமை நார் இல் பூ நீள் முருங்கை – திணை150:91/1
நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும் – குறள்:84 3/1
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் அவனை – குறள்:96 8/1
பூவொடு நார் இயைக்குமாறு – பழ:356/4

TOP


நாராய் (2)

சிறு மீன் கவுள் கொண்ட செம் தூவி நாராய்
இறு மென் குரல நின் பிள்ளைகட்கே ஆகி – ஐந்70:68/1,2
தடம் தாள் மட நாராய் கேள் – கைந்:50/4

TOP


நாராயம் (1)

நல்ல நாராயம் கொளல் – பழ:80/4

TOP


நாரால் (1)

தன் நாரால் யாத்துவிடல் – பழ:365/4

TOP


நாரினால் (1)

உள்ளம் எனும் நாரினால் கட்டி உளவரையால் – நாலடி:16 3/3

TOP


நாரை (1)

நாரை துயில் வதியும் ஊர குளம் தொட்டு – பழ:23/3

TOP


நாரைக்கு (1)

மடம் உடை நாரைக்கு உரைத்தேன் கடன் அறிந்து – ஐந்70:71/2

TOP


நால் (11)

அச்சத்தோடு இ நால் பொருள் – நாலடி:9 2/4
நால் ஆறும் ஆறாய் நனி சிறிதாய் எ புறனும் – நாலடி:39 3/1
நால் நால் திசையும் பிணம் பிறங்க யானை – கள40:6/1
நால் நால் திசையும் பிணம் பிறங்க யானை – கள40:6/1
வீற்று வீற்று ஓடும் மயல் இனம் போல் நால் திசையும் – கள40:29/2
ஐந்து உருவின் வில் எழுதி நால் திசைக்கும் முந்நீரை – திணை150:104/1
அ பால் நால் கூற்றே மருந்து – குறள்:95 10/2
நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து – ஆசாரக்:8/1
நால் திசையும் செல்லாத நாடு இல்லை அ நாடு – பழ:55/2
ஒத்த இவை அல் ஒரு நால் இட்டு ஒத்த – சிறுபஞ்:107/2
நால் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான் – ஏலாதி:77/1

TOP


நால்வர் (2)

அறு நால்வர் ஆய் புகழ் சேவடி ஆற்ற – ஏலாதி:0/1
பெறு நால்வர் பேணி வழங்கி பெறும் நான்மறை – ஏலாதி:0/2

TOP


நாவகம் (1)

நாவகம் மேய் நாடின் நகை – சிறுபஞ்:10/4

TOP


நாவல் (1)

நாவல் கீழ் பெற்ற கனி – பழ:138/4

TOP


நாவலம்தீவு (1)

நாவலம்தீவு ஆள்வாரே நன்கு – ஏலாதி:56/4

TOP


நாவாய் (5)

கடு விசை நாவாய் கரை அலைக்கும் சேர்ப்ப – நாலடி:23 4/2
பண்டம் கொள் நாவாய் வழங்கும் துறைவனை – ஐந்70:61/2
நாவாய் அடக்கல் அரிது ஆகும் நாவாய் – பழ:79/2
நாவாய் அடக்கல் அரிது ஆகும் நாவாய்
களிகள் போல் தூங்கும் கடல் சேர்ப்ப வாங்கி – பழ:79/2,3
நாவாய் வழங்கு நளி திரை தண் கடலுள் – கைந்:49/1

TOP


நாவாயும் (1)

நாவாயும் ஓடா நிலத்து – குறள்:50 6/2

TOP


நாவிதன் (1)

யாத்த தேசு இல்லார் படை ஆண்மை நாவிதன் வாள் – பழ:284/3

TOP


நாவிற்கு (3)

ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் – குறள்:107 6/1,2
நாவிற்கு நல்குரவு இல் – பழ:152/4
நாவிற்கு நன்று அல் வசை – சிறுபஞ்:9/4

TOP


நாவின் (3)

நாவின் கிழத்தி உறைதலால் சேராளே – நாலடி:26 2/3
நாவின் ஒருவரை வைதால் வயவு உரை – பழ:45/2
நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடைய – பழ:238/1

TOP


நாவினார் (1)

கற்று அறிந்த நாவினார் சொல்லார் தம் சோர்வு அஞ்சி – நாலடி:26 6/1

TOP


நாவினால் (2)

நாவினால் சுட்ட வடு – குறள்:13 9/2
காவோடு அற குளம் தொட்டானும் நாவினால்
வேதம் கரைகண்ட பார்ப்பானும் தீது இகந்து – திரி:70/1,2

TOP


நாவினான் (1)

நாவினான் ஆகும் அருள் மனம் அ மனத்தான் – நான்மணி:105/3

TOP


நாவும் (1)

நன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம் ஒன்றானை – சிறுபஞ்:8/2

TOP


நாவோ (1)

உரைத்தவர் நாவோ பருந்து எறியாது என்று – பழ:176/1

TOP


நாழி (3)

நாழி மணை மேல் இரியார் மணை கவிழார் – ஆசாரக்:44/1
தமன் என்று இரு நாழி ஈத்தவன் அல்லால் – பழ:35/1
நன்கு ஒன்று அறிபவர் நாழி கொடுப்பவர்க்கு – பழ:275/1

TOP


நாழிகையானே (1)

நாழிகையானே நடந்தன தாழீயா – நான்மணி:71/2

TOP


நாழியா (1)

தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும் – நாலடி:1 7/1

TOP


நாள் (77)

இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ – நாலடி:1 6/1
கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் ஆற்ற – நாலடி:1 7/2
வீழ் நாள் படாஅது எழுதலால் வாழ்நாள் – நாலடி:3 2/2
துன்பம் பல நாள் உழந்தும் ஒரு நாளை – நாலடி:6 4/1
பல்லார் அறிய பறை அறைந்து நாள் கேட்டு – நாலடி:9 6/1
முன்னரே சாம் நாள் முனி தக்க மூப்பு உள – நாலடி:10 2/1
கல்வி கரை இல கற்பவர் நாள் சில – நாலடி:14 5/1
செல்வுழிக்கண் ஒரு நாள் காணினும் சான்றவர் – நாலடி:16 4/1
நல் வரை நாட சில நாள் அடிப்படின் – நாலடி:16 4/3
நளி கடல் தண் சேர்ப்ப நாள் நிழல் போல – நாலடி:17 6/1
உறு புலி ஊன் இரை இன்றி ஒரு நாள்
சிறு தேரை பற்றியும் தின்னும் அறிவினால் – நாலடி:20 3/1,2
நாள் வாய் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து – நாலடி:21 7/1
மரீஇ பலரொடு பல் நாள் முயங்கி – நாலடி:22 10/1
பாலால் கழீஇ பல நாள் உணக்கினும் – நாலடி:26 8/1
நச்சியார்க்கு ஈயாமை நாண் அன்று நாள் நாளும் – நாலடி:30 9/1
முனியார்கொல் தாம் வாழும் நாள் – நாலடி:34 8/4
பழையர் இவர் என்று பல் நாள் பின் நிற்பின் – நாலடி:35 9/1
நாள் வைத்து நம் குற்றம் எண்ணுங்கொல் அந்தோ தன் – நாலடி:40 4/3
மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா – இன்னா40:20/1
எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா – இன்னா40:31/2
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி – கார்40:26/2
நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர் – கள40:1/1
காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள்
மா உதைப்ப மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய் – கள40:36/2,3
போயின சில் நாள் புனத்து மறையினால் – ஐந்50:11/3
அச்சு பணி மொழி உண்டேனோ மேல் நாள் ஓர் – ஐந்70:50/3
பூம் குன்ற நாடன் புணர்ந்த அ நாள் போலா – திணை50:3/3
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள்
எல் வளையம் மென் தோளேம் எங்கையர்தம் போல – திணை50:37/2,3
விரும்பு நாள் போலான் வியல் நலம் உண்டான் – திணை50:39/3
கைதை சூழ் கானலுள் கண்ட நாள் போல் ஆனான் – திணை50:41/2
அணி பூம் கழி கானல் அற்றை நாள் போலான் – திணை50:47/1
நாள் நாகம் நாறும் நனை குழலாள் நல்கி தன் – திணை150:16/1
என் ஆம்கொல் ஈடு இல் இள வேங்கை நாள் உரைப்ப – திணை150:18/1
நாள் வேங்கை பொன் விளையும் நல் மலை நல் நாட – திணை150:20/1
நாள் வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ – திணை150:31/3
தந்தார்க்கே ஆமால் தட மென் தோள் இன்ன நாள்
வந்தார்க்கே ஆம் என்பார் வாய் காண்பாம் வந்தார்க்கே – திணை150:39/1,2
தந்து ஆயல் வேண்டா ஓர் நாள் கேட்டு தாழாது – திணை150:46/1
வேந்து கிளர்ந்து அன்ன வேலை நீர் சேர்ப்ப நாள்
ஆய்ந்து வரைதல் அறம் – திணை150:52/3,4
நாள் நாடி நல்குதல் நன்று – திணை150:54/4
நாள் இழந்த எண் மிக்கு நைந்து – திணை150:99/4
கேட்டு உற்ற கீழ் நாள் கிளர்ந்து – திணை150:131/4
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் – குறள்:4 8/1
வாழ் நாள் வழி அடைக்கும் கல் – குறள்:4 8/2
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் – குறள்:34 4/1
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் – குறள்:78 6/1
நாள் இழுக்கம் நட்டார் செயின் – குறள்:81 8/2
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும் – குறள்:115 6/1
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
நெடிய கழியும் இரா – குறள்:117 9/1,2
உற்ற நாள் உள்ள உளேன் – குறள்:121 6/2
மணந்த நாள் வீங்கிய தோள் – குறள்:124 3/2
நாள் ஒற்றி தேய்த்த விரல் – குறள்:127 1/2
வருகமன் கொண்கன் ஒரு நாள் பருகுவன் – குறள்:127 6/1
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – குறள்:127 9/1
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – குறள்:127 9/1
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – குறள்:127 9/2
மண் விழைந்து வாழ் நாள் மதியாமை இ மூன்றும் – திரி:29/3
நாள் நாளும் நட்டார் பெருக்கலும் இ மூன்றும் – திரி:41/3
மாரி நாள் வந்த விருந்தும் மனம் பிறிதாய் – திரி:76/1
நாள் கழகம் பார்க்கும் நயம் இலா சூதனும் – திரி:81/2
நாள் அந்தி கோல் தின்று கண் கழீஇ தெய்வத்தை – ஆசாரக்:9/1
தீண்டா நாள் மு நாளும் நோக்கார் நீர் ஆடிய பின் – ஆசாரக்:42/1
மிக்க இரு தேவர் நாளோடு உவாத்திதி நாள்
அட்டமியும் ஏனை பிறந்த நாள் இ அனைத்தும் – ஆசாரக்:43/2,3
அட்டமியும் ஏனை பிறந்த நாள் இ அனைத்தும் – ஆசாரக்:43/3
இலங்கு நூல் ஓதாத நாள் – ஆசாரக்:47/4
புலையர்வாய் நாள் கேட்டு செய்யார் தொலைவு இல்லா – ஆசாரக்:92/2
அந்தணர்வாய் நாள் கேட்டு செய்க அவர் வாய்ச்சொல் – ஆசாரக்:92/3
தீ நாள் திரு உடையார்க்கு இல் – பழ:84/4
சில நாள் சிறந்தவற்றால் செய்க முலை நெருங்கி – பழ:134/2
கன்றி முதிர்ந்த கழிய பல் நாள் செயினும் – பழ:204/1
பல் நாள் தொழில் செய்து உடைய கவர்ந்து உண்டார் – பழ:365/1
உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும் செய்தல் – சிறுபஞ்:28/2
நாள் கூட்டம் மூழ்த்தம் இவற்றொடு நன்று ஆய – சிறுபஞ்:42/1
உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வான் நாள்
பெற்றானேல் கொள்க பெரிது – சிறுபஞ்:42/3,4
நன் புலத்து வை அடக்கி நாளும் நாள் ஏர் போற்றி – சிறுபஞ்:58/1
சிறை கிடந்தார் செத்தார்க்கு நோற்பார் பல நாள்
உறை கிடந்தார் ஒன்று இடையிட்டு உண்பார் பிறை கிடந்து – சிறுபஞ்:69/1,2
வரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே இ நாள்
ஒரு நோயும் இன்றி வாழ்வார் – சிறுபஞ்:74/3,4
ஆள் அஞ்சான் ஆய் பொருள்தான் அஞ்சான் நாள் எஞ்சா – ஏலாதி:22/2
நாக நறு மலர் நாள் வேங்கை பூ விரவி – கைந்:12/1

TOP


நாள்தொறும் (6)

நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடி தம் – நாலடி:23 5/3
நல்லவை நாள்தொறும் எய்தார் அறம் செய்யார் – நாலடி:34 8/1
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – குறள்:56 3/1
நாள்தொறும் நாடு கெடும் – குறள்:56 3/2
தாளினால் தந்த விழு நிதியும் நாள்தொறும்
நா தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இ மூன்றும் – திரி:47/2,3
நாடு உறைய நல்கினும் நன்கு ஒழுகார் நாள்தொறும்
கையுளது ஆகி விடினும் குறும்பூழ்க்கு – பழ:121/2,3

TOP


நாள்தோறும் (1)

நாள்தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் – குறள்:52 10/1

TOP


நாள்வாயும் (1)

நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும் – பழ:6/3

TOP


நாளால் (2)

நறை படர் சாந்தம் அற எறிந்து நாளால்
உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல் பிறை எதிர்ந்த – திணை150:1/1,2
வளமை வலி இவை வாடும் உள நாளால்
பாடே புரியாது பால் போலும் சொல்லினாய் – ஏலாதி:21/2,3

TOP


நாளான் (1)

எண் கிடந்த நாளான் இகழ்ந்து ஒழுக பெண் கிடந்த – திணை150:146/2

TOP


நாளில் (1)

வரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே இ நாள் – சிறுபஞ்:74/3

TOP


நாளும் (24)

பெரியவர் கேண்மை பிறை போல நாளும்
வரிசை வரிசையா நந்தும் வரிசையால் – நாலடி:13 5/1,2
நல் அறிவு நாளும் தலைப்படுவர் தொல் சிறப்பின் – நாலடி:14 9/2
பல் நாளும் சென்றக்கால் பண்பு இலார் தம்முழை – நாலடி:16 9/1
கல்லாது போகிய நாளும் பெரியவர்கண் – நாலடி:17 9/1
முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து – நாலடி:19 10/1
பல நாளும் பக்கத்தார்ஆயினும் நெஞ்சில் – நாலடி:22 4/1
சில நாளும் ஒட்டாரோடு ஒட்டார் பல நாளும் – நாலடி:22 4/2
சில நாளும் ஒட்டாரோடு ஒட்டார் பல நாளும்
நீத்தார் என கைவிடல் உண்டோ தம் நெஞ்சத்து – நாலடி:22 4/2,3
நச்சியார்க்கு ஈயாமை நாண் அன்று நாள் நாளும்
அச்சத்தால் நாணுதல் நாண் அன்றாம் எச்சத்தின் – நாலடி:30 9/1,2
என்றும் உளவாகும் நாளும் இரு சுடரும் – நான்மணி:57/1
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே – இனிய40:3/2
பற்பல நாளும் பழுது இன்றி பாங்கு உடைய – இனிய40:40/3
உருகுமால் உள்ளம் ஒரு நாளும் அன்றால் – திணை150:41/1
நாள் நாளும் நட்டார் பெருக்கலும் இ மூன்றும் – திரி:41/3
நாளும் கலாம் காமுறுதலும் இ மூன்றும் – திரி:57/3
நன்கு அறிவார் நாளும் விரைந்து – ஆசாரக்:6/3
தீண்டா நாள் மு நாளும் நோக்கார் நீர் ஆடிய பின் – ஆசாரக்:42/1
ஈர்ஆறு நாளும் இகவற்க என்பதே – ஆசாரக்:42/2
ஐவகை நாளும் இகழாது அறம் செய்க – ஆசாரக்:48/2
பல் நாளும் நின்ற இடத்தும் கணி வேங்கை – பழ:120/1
பல நாளும் ஆற்றார்எனினும் அறத்தை – பழ:134/1
நலிந்து ஒருவன் நாளும் அடுபாக்கு புக்கால் – பழ:354/1
நன் புலத்து வை அடக்கி நாளும் நாள் ஏர் போற்றி – சிறுபஞ்:58/1
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய் நாளும்
விருந்து ஏற்பர் விண்ணோர் விரைந்து – ஏலாதி:7/3,4

TOP


நாளுமே (1)

வானும் வரிசையால்தான் ஆளும் நாளுமே
ஈனமே இன்றி இனிது – ஏலாதி:70/3,4

TOP


நாளே (2)

வாராத நாளே வரும் – திணை150:101/4
நல் நாளே நாடி மலர்தலால் மன்னர் – பழ:120/2

TOP


நாளேம் (1)

எழு நாளேம் மேனி பசந்து – குறள்:128 8/2

TOP


நாளை (9)

பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை
தழீஇம் தழீஇம் தண்ணம் படும் – நாலடி:1 6/3,4
துன்பம் பல நாள் உழந்தும் ஒரு நாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் இன்பம் – நாலடி:6 4/1,2
கடக்க அரும் கானத்து காளை பின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி சுடர்த்தொடீஇ – நாலடி:40 8/1,2
நன்கு வதிந்தனை நல் நெஞ்சே நாளை நாம் – ஐந்50:40/2
இன்றையின் நாளை மிகும் – திணை50:23/4
என்னையோ நாளை எளிது – திணை150:20/4
தகையினால் எம் சீறூர் தங்கினிராய் நாளை
வகையினிராய் சேறல் வனப்பு – திணை150:69/3,4
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு – குறள்:16 6/1
வைக்கும் தன் நாளை எடுத்து – குறள்:78 6/2

TOP


நாளோடு (1)

மிக்க இரு தேவர் நாளோடு உவாத்திதி நாள் – ஆசாரக்:43/2

TOP


நாற்றம் (7)

தேம் கமழ் நாற்றம் இழந்த ஆங்கு ஓங்கும் – நாலடி:20 9/2
நாற்றம் உரைக்கும் மலர் உண்மை கூறிய – நான்மணி:45/1
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா – இன்னா40:7/2
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – குறள்:3 7/1
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – குறள்:112 3/1,2
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை – குறள்:128 4/1
நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல் – ஏலாதி:17/3

TOP


நாற (2)

இரு நிலம் தீம் பெயல் தாழ விரை நாற
ஊதை உளரும் நறும் தண் கா பேதை – கார்40:30/2,3
தான் நாற தாழ்ந்த இடம் – திணை150:29/4

TOP


நாறா (2)

நாறா தகடே போல் நல் மலர் மேல் பொன் பாவாய் – நாலடி:27 6/1
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது – குறள்:65 10/1

TOP


நாறாத (2)

விதைத்தாலும் நாறாத வித்து உள பேதைக்கு – பழ:399/3
புதைத்தாலும் நாறாத வித்து உள பேதைக்கு – சிறுபஞ்:21/3

TOP


நாறாமை (2)

நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா – இன்னா40:19/2
நறிய மலர் பெரிது நாறாமை இன்னா – இன்னா40:37/1

TOP


நாறினும் (1)

பொழிந்து இனிது நாறினும் பூ மிசைதல் செல்லாது – நாலடி:26 9/1

TOP


நாறு (1)

வீ நாறு கானல் விரி திரை தண் சேர்ப்ப – பழ:84/3

TOP


நாறும் (4)

அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம் மருங்கிற்கு அன்னோ – நாலடி:40 6/1
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்
பல் இரும் கூந்தல் பனி நோனாள் கார் வானம் – கார்40:24/2,3
நாள் நாகம் நாறும் நனை குழலாள் நல்கி தன் – திணை150:16/1
கான் அட்டு நாறும் கதுப்பினாய் தீற்றாதோ – பழ:14/3

TOP


நாறுவ (1)

விதையாமை நாறுவ வித்து உள மேதைக்கு – சிறுபஞ்:20/3

TOP


நான் (1)

வால் முறையான் வந்த நான் மறையாளரை – ஆசாரக்:61/1

TOP


நான்கின் (3)

பொழிப்பு அகலம் நுட்பம் நூல் எச்சம் இ நான்கின்
கொழித்து அகலம் காட்டாதார் சொற்கள் பழிப்பு இல் – நாலடி:32 9/1,2
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும் – குறள்:51 1/1,2
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – குறள்:75 3/1,2

TOP


நான்கு (4)

முந்துற பேணி முகம் நான்கு உடையானை – இனிய40:0/3
இவை எச்சில் இ நான்கு – ஆசாரக்:7/3
முன்றுறை மன்னவன் நான்கு அடியும் செய்து அமைத்தான் – பழ:404/3
ஆகும் அ நான்கு ஒழித்து ஐந்து அடக்குவான்ஆகில் – சிறுபஞ்:67/3

TOP


நான்கும் (14)

அறம் புகழ் கேண்மை பெருமை இ நான்கும்
பிறன் தாரம் நச்சுவார் சேரா பிறன் தாரம் – நாலடி:9 2/1,2
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – குறள்:4 5/1,2
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவா ஆம் இல் இறப்பான்கண் – குறள்:15 6/1,2
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு – குறள்:39 2/1,2
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – குறள்:39 10/1,2
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
நன்கு உடையான்கட்டே தெளிவு – குறள்:52 3/1,2
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் – குறள்:61 5/1,2
நகை ஈகை இன் சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு – குறள்:96 3/1,2
தக்கிணை வேள்வி தவம் கல்வி இ நான்கும்
மு பால் ஒழுக்கினால் காத்து உய்க்க உய்யாக்கால் – ஆசாரக்:3/1,2
பொய் குறளை வெளவல் அழுக்காறு இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார் சிந்திப்பின் – ஆசாரக்:38/1,2
உடை நடை சொற்செலவு வைதல் இ நான்கும்
நிலைமைக்கும் ஆண்மைக்கும் கல்விக்கும் தத்தம் – ஆசாரக்:49/1,2
முழை உறை சீயமும் என்று இவை நான்கும்
இளைய எளிய பயின்றன என்று எண்ணி – ஆசாரக்:84/2,3
உன்னித்து வைத்த பொருளோடு இவை நான்கும்
பொன்னினை போல் போற்றி காத்து உய்க்க உய்க்காக்கால் – ஆசாரக்:95/2,3
குறளை கடும் சொல் பயன் இல் சொல் நான்கும்
மறலையின் வாயினவாம் மற்று – ஏலாதி:28/3,4

TOP


நான்கே (1)

என நான்கே ஏமம் படைக்கு – குறள்:77 6/2

TOP


நான்மறை (1)

பெறு நால்வர் பேணி வழங்கி பெறும் நான்மறை
புரிந்து வாழுமேல் மண் ஒழிந்து விண்ணோர்க்கு – ஏலாதி:0/2,3

TOP


நான்மறையாளர் (1)

நான்மறையாளர் வழி செலவும் இ மூன்றும் – திரி:2/3

TOP


நானம் (2)

நானம் கமழும் கதுப்பினாய் நன்றே காண் – நாலடி:30 4/3
மான் அமர் கண்ணாய் மயங்கல் நீ நானம்
கலந்து இழியும் நல் மலை மேல் வால் அருவி ஆட – ஐந்50:13/2,3

TOP


நானூறும் (1)

பண்டை பழமொழி நானூறும் கொண்டு இனிதா – பழ:404/2

TOP