ஞா – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஞாங்கர் (1)

பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன தங்கா – கார்40:29/1

TOP


ஞாட்பில் (1)

மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா – இன்னா40:6/2

TOP


ஞாட்பினுள் (8)

ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானை கீழ் – கள40:2/1
கழுமிய ஞாட்பினுள் மைந்து இகந்தார் இட்ட – கள40:11/1
ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி – கள40:17/1
பீடு உடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள்
கேடகத்தோடு அற்ற தட கை கொண்டு ஓடி – கள40:28/2,3
இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர் – கள40:34/1
மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்
புய்ந்து கால் போகி புலால் முகந்த வெண்குடை – கள40:39/1,2
ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு – குறள்:109 8/1,2
உருத்து எழு ஞாட்பினுள் ஒன்னார் தொலைய – பழ:378/1

TOP


ஞாண் (1)

நுண் ஞாண் வலையின் பரதவர் போத்தந்த – ஐந்70:66/1

TOP


ஞாயிற்றை (1)

ஞாயிற்றை கை மறைப்பார் இல் – பழ:34/4

TOP


ஞாயிறு (5)

தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும் – நாலடி:1 7/1
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் – நான்மணி:0/2
நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர் – கள40:1/1
பகல் பருகி பல் கதிர் ஞாயிறு கல் சேர – திணை150:94/1
ஆழி போல் ஞாயிறு கல் சேர தோழியோ – திணை150:97/2

TOP


ஞாயிறும் (1)

அம்பும் அழலும் அவிர் கதிர் ஞாயிறும்
வெம்பி சுடினும் புறம் சுடும் வெம்பி – நாலடி:9 9/1,2

TOP


ஞாலத்திற்கு (1)

துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன் – குறள்:56 7/1

TOP


ஞாலத்தின் (1)

ஞாலத்தின் மாண பெரிது – குறள்:11 2/2

TOP


ஞாலத்து (7)

மல்லல் மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம் – நாலடி:30 6/1
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம் – இனிய40:20/3
மண் இயல் ஞாலத்து மன்னும் புகழ் வேண்டி – கார்40:8/1
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்க்கண் இல் – குறள்:15 1/1,2
விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து
உரியதனில் கண்டு உணர்ந்தார் ஒக்கமே போல – பழ:1/2,3
மா இரு ஞாலத்து மண்பு ஒருவன் போல்கலார் – பழ:47/2
மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா – சிறுபஞ்:0/3

TOP


ஞாலம் (15)

புகழ்மையா கொள்ளாது பொங்கு நீர் ஞாலம்
சமழ்மையா கொண்டுவிடும் – நாலடி:8 2/3,4
அம் கண் மா ஞாலம் விளக்குறூஉம் திங்கள் போல் – நாலடி:15 8/2
ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானை கீழ் – கள40:2/1
வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல் – கள40:40/1
மா இரு ஞாலம் இருள் கூர் மருள் மாலை – திணை50:27/3
மல்லல் மா ஞாலம் கரி – குறள்:25 5/2
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் – குறள்:49 4/1
ஞாலம் கருதுபவர் – குறள்:49 5/2
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது – குறள்:65 8/1
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பால் பட்டன்று இருள் – குறள்:100 9/1,2
நாண் வேலி கொள்ளாதுமன்னோ வியல் ஞாலம்
பேணலர் மேலாயவர் – குறள்:102 6/1,2
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்த அற்று – குறள்:106 8/1,2
கண் அகல் ஞாலம் அளந்ததூஉம் காமரு சீர் – திரி:0/1
ஞாலம் எனப்படுவார் – திரி:26/4
ஞாலம் அறிந்த புகழ் – ஏலாதி:26/4

TOP


ஞாழல் (3)

கன்னி இள ஞாழல் பூம் பொழில் நோக்கிய – திணை50:49/3
பூவா இள ஞாழல் போது – திணை150:39/4
தாழை மா ஞாழல் ததைந்து உயர்ந்த தாழ் பொழில் – திணை150:44/3

TOP


ஞாழலும் (1)

இடை எலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த – திணை150:58/3

TOP


ஞான்று (2)

அம்மனை கோல் ஆகிய ஞான்று – நாலடி:2 4/4
எண்ண அரும் பெண்ணை போன்று இட்ட ஞான்று இட்டதே – நாலடி:22 6/3

TOP


ஞானத்தான் (1)

ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு – சிறுபஞ்:34/4

TOP


ஞானம் (6)

நல் ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை – நாலடி:31 8/2
மெய் ஞானம் கோட்டி உறழ்வழி விட்டு ஆங்கு ஓர் – நாலடி:32 1/1
கை ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன் – நாலடி:32 1/3
சொல் ஞானம் சோர விடல் – நாலடி:32 1/4
ஞானம் அறிவார் இடை புக்கு தாம் இருந்து – பழ:298/2
ஞானம் வினாஅய் உரைக்கின் நகை ஆகும் – பழ:298/3

TOP