மெ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்சல் 1
மெச்சலே 1
மெச்சாது 2
மெச்சி 1
மெச்சிடும் 1
மெச்சுதல் 1
மெச்சுதலே 1
மெச்சும் 1
மெத்த 3
மெத்தவே 1
மெத்தனவை 1
மெத்திய 1
மெத்தென்ப 1
மெத்தையில் 1
மெய் 115
மெய்க்கீர்த்தி 1
மெய்க்கு 1
மெய்கண்டதேவர் 1
மெய்கண்டார் 1
மெய்ச்சுகம் 1
மெய்ஞ்ஞானி 1
மெய்த்த 1
மெய்த்தலையார் 1
மெய்ந்நூல் 1
மெய்ந்நெறி 1
மெய்ந்நெறிக்-கண் 1
மெய்ப்புலவர்-தம்பால் 1
மெய்ப்பொருள் 6
மெய்ப்பொருளார் 1
மெய்ப்பொருளின் 1
மெய்ப்பொருளை 1
மெய்பெற 1
மெய்ம்மை 3
மெய்ம்மையும் 2
மெய்ம்மையே 1
மெய்மறதி 1
மெய்மன் 1
மெய்மன்னும் 1
மெய்மை 2
மெய்யடியார்கள் 1
மெய்யது 1
மெய்யதை 1
மெய்யர் 1
மெய்யா 2
மெய்யாக 2
மெய்யாய் 1
மெய்யார் 1
மெய்யால் 2
மெய்யான 1
மெய்யானதுவே 1
மெய்யில் 4
மெய்யிலே 1
மெய்யினில் 1
மெய்யினும் 1
மெய்யுடை 1
மெய்யுணர்ச்சி 2
மெய்யுணர்ந்தார் 2
மெய்யுணர்வில் 1
மெய்யும் 2
மெய்யுள் 1
மெய்யே 2
மெய்யை 1
மெய்வாதியர்-பால் 1
மெயோடு 1
மெல் 14
மெல்_நுதலை 1
மெல்_இயல் 1
மெல்_இயலார்-பால் 1
மெல்_இயற்கு 1
மெல்_இழைக்கு 1
மெல்ல 7
மெல்லி 2
மெல்லிது 1
மெல்லிய 1
மெல்லென்றல் 1
மெல்லென 1
மெலிந்தாள் 3
மெலிந்து 4
மெலியது 1
மெலியரை 1
மெலியவர் 1
மெலியார் 5
மெலியாரை 1
மெலியும் 1
மெலியோர் 1
மெலிவது 1
மெலிவர் 1
மெலிவினை 1
மெலிவொடு 1
மெழுகு 1
மெள்ள 7
மென் 27
மென்_தொடியார் 1
மென்மை 2
மென்மையதாய் 1
மென்மையாகும் 1
மென்று 1

மெச்சல் (1)

பொருள் என மெச்சல் போல் புன்மை வேறு உண்டோ – நீதிநூல்:37 369/4

மேல்

மெச்சலே (1)

ஒருவன் காணாவிடத்து உவனை மெச்சலே
தருமமாம் முகத்துதி சாற்றல் வைதலாம் – நீதிநூல்:37 369/1,2

மேல்

மெச்சாது (2)

அறுதொழில் நீத்தாரை மெச்சாது அவற்றோடு – அறநெறிச்சாரம்:1 99/1
பொச்சாவா போற்றித்தாம் நோற்பாரை மெச்சாது
அலந்து தம் வாய் வந்த கூறும் அவரின் – அறநெறிச்சாரம்:1 122/2,3

மேல்

மெச்சி (1)

மிக்க பாசண்டமே தீத்தெய்வம் மெச்சி
வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட – அறநெறிச்சாரம்:1 60/2,3

மேல்

மெச்சிடும் (1)

சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை – விவேகசிந்தாமணி:1 109/4

மேல்

மெச்சுதல் (1)

சாவொடு வாழ்க்கையை அஞ்சி தான் மெச்சுதல்
வாழ்வொடு நட்டார் நினைப்பு – அருங்கலச்செப்பு:1 152/1,2

மேல்

மெச்சுதலே (1)

பாவலரை மெச்சுதலே பாண்டித்தியம் குதர்க்கம் – நன்மதிவெண்பா:1 11/3

மேல்

மெச்சும் (1)

குச்சகனார் சொன்னார் குமரேசா மெச்சும்
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 49/2,3

மேல்

மெத்த (3)

நித்தர் அருள் உண்டாய் நிறைந்த புகழ் மெத்த
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார் – முதுமொழிமேல்வைப்பு:1 32/2,3
ஒன்று காண சிதையுமே மெத்த
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – முதுமொழிமேல்வைப்பு:1 120/2,3
கொத்த பயந்தான் குமரேசா மெத்த
பரியது கூர் கோட்டது ஆயினும் யானை – திருக்குறள்குமரேசவெண்பா:60 599/2,3

மேல்

மெத்தவே (1)

இ தரணி போற்றும் இரங்கேசா மெத்தவே
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/2,3

மேல்

மெத்தனவை (1)

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் – நல்வழி:1 33/1

மேல்

மெத்திய (1)

மெத்திய கோபமது வெல்லாது பத்தி மிகு – நீதிவெண்பா:1 53/2

மேல்

மெத்தென்ப (1)

மெத்தென்ப பேசு – இளையார்-ஆத்திசூடி:1 78/1

மேல்

மெத்தையில் (1)

மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு – கொன்றைவேந்தன்:1 76/1

மேல்

மெய் (115)

இடும் பொய்யை மெய் என்று இராதே இடும் கடுக – நல்வழி:1 3/2
மெய் அம்புவியதன் மேல் – நல்வழி:1 13/4
கண்ணுறுவதல்லால் கவலைப்படேல் நெஞ்சே மெய்
விண்ணுறுவார்க்கு இல்லை விதி – நல்வழி:1 37/3,4
மெய் போலும்மே மெய் போலும்மே – வெற்றிவேற்கை:1 73/2
மெய் போலும்மே மெய் போலும்மே – வெற்றிவேற்கை:1 73/2
அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும் கல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 5/1
விளிவு உன்னி வெய்துயிர்ப்பர் மெய் பயன் கொண்டார் – நீதிநெறிவிளக்கம்:1 42/3
மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் – நீதிநெறிவிளக்கம்:1 52/1
வெங்காரம் வெய்து எனினும் நோய் தீர்க்கும் மெய் பொடிப்ப – நீதிநெறிவிளக்கம்:1 58/3
மெய் விதிர்ப்பு காண்பான் கொடிறு உடைத்து கொல்வான் போல் – நீதிநெறிவிளக்கம்:1 72/3
மெய் நடுங்க உள் நடுங்கும் நோய் – நீதிநெறிவிளக்கம்:1 76/4
கற்பு உடுத்து அன்பு முடித்து நாண் மெய் பூசி – நீதிநெறிவிளக்கம்:1 80/1
எப்புலமும் காவாமே மெய் புலம் காக்கும் மற்று – நீதிநெறிவிளக்கம்:1 92/3
தன் மேல் படாமை தவிர்ப்பானும் மெய் மேல் – அறநெறிச்சாரம்:1 85/2
வீழ் நாள் இடர் மூப்பு மெய் கொள்ளும் வாழ்நாளுள் – அறநெறிச்சாரம்:1 128/2
பொய் வினை மற்றை பொருள் எல்லாம் மெய் வினவில் – அறநெறிச்சாரம்:1 152/2
பொய் நூல் அவற்றின் பொருள் தெரிந்து மெய் நூல் – அறநெறிச்சாரம்:1 218/2
வேதநூலதனை மண்ணோர் மெய் உறை உயிரை நெஞ்சை – நீதிநூல்:2 11/2
வாசம் மூக்கு அறியுமன்றி வாய் செவி விழி மெய் தேரா – நீதிநூல்:2 12/1
நிரை எலாம் உளன் மெய் ஆவி நெஞ்சுளும் உளன் இயம்பும் – நீதிநூல்:3 19/2
கதமொடு மீச்சென்றாலும் கடவுள் மெய் நடுவை அன்றி – நீதிநூல்:3 22/2
செறி பெரும் தானையான் மெய் திறலிலார் என அறிந்தோம் – நீதிநூல்:3 35/2
காது இறைவனுக்கு கண் எனலான் மெய் காண்குறான் எனும் மொழி மாற்றி – நீதிநூல்:4 43/1
மெய் மா மறையின் பயன் ஓதுவர் மேன்மையோரே – நீதிநூல்:6 63/4
ஐய மெய் அம்மணத்தோடு அழுவதை அன்றி பேச – நீதிநூல்:8 81/1
புவிநடை கடவுள் மெய் போதம் அன்பு அறம் – நீதிநூல்:9 92/1
பாதியையே அலங்கரித்து பாதி மெய்
மீதினில் அணி இன்றி விடுத்தல் ஒக்குமே – நீதிநூல்:10 100/3,4
அங்கு உறும் நாசம் மேய பல மெய் இதன் – நீதிநூல்:12 128/3
மனம் வரும் உயிர் வரும் வராத மெய் விலங்கு – நீதிநூல்:12 130/3
தாண்டிய வளி அவர் மெய் தடவி என் உடல் படர்வாய் – நீதிநூல்:12 155/3
மற்றவர் எவரும் தம் மெய் வருந்தவே உழைப்பர் செல்வம் – நீதிநூல்:14 180/2
என்றும் மெய் வருந்த வேலை இயற்றுவோர்க்கு உயர்ந்தோர் அற்ப – நீதிநூல்:14 182/1
வெளி மயக்கு அன்றி சற்றும் மெய் அல உணர்வாய் நெஞ்சே – நீதிநூல்:14 183/4
ஐயனது அருளால் மெய்மை அனை தந்தை ஈந்தார் அ மெய்
உய்ய ஊண் யசமானன் தான் உதவலால் அவற்கே தம் மெய் – நீதிநூல்:15 190/1,2
உய்ய ஊண் யசமானன் தான் உதவலால் அவற்கே தம் மெய்
ஐயம்_இல் பொருள் என்று உன்னி அன்பொடும் ஏவலாளர் – நீதிநூல்:15 190/2,3
அங்கதமே பொருள் என்ன கைக்கொண்டோர் மறந்து ஒரு மெய் அறைந்திட்டாலும் – நீதிநூல்:16 197/1
பின் பயன் தோன்றிடச்செய்தல் மெய் உரைக்க அஞ்சி வாய் பேசிடாமல் – நீதிநூல்:16 204/3
மாலியை மாந்துவோர் மலர் கள் நீத்து மெய்
தோல் இரணம்-தனை சூதகம்-தனை – நீதிநூல்:19 229/2,3
நஞ்சு என நுகர்வர் மெய் நலிய மூப்புற – நீதிநூல்:19 233/2
எரியாநின்றேன் பிணம் விழித்து இஃது இன்தேன் மயக்கு என்று இயம்பி மெய் கொள் – நீதிநூல்:19 235/3
வெருவ அவன் மேல் பொய்வழக்கை மெய் போல் கற்பித்து இடர் இழைத்து – நீதிநூல்:21 255/3
முன்ன மெய் என்னினும் முழுப்பொய் போலுமாம் – நீதிநூல்:22 262/2
முற்றும் மெய் உழைத்து உயிர் முறையில் காக்குமால் – நீதிநூல்:25 285/2
சற்றும் மெய் அசைவு இலா சழக்கர் ஆருயிர் – நீதிநூல்:25 285/3
கிடக்கும் மெய் சோம்புளோர் கேடுளார்களே – நீதிநூல்:25 286/4
கண் சிவந்திட மெய் எலாம் நடுங்கிட காலால் – நீதிநூல்:26 294/1
சூரணம் இலை மெய் தன்மைது உணா தன்மை ஏனை – நீதிநூல்:36 364/3
மண்கலம் என அன்னார் மெய் மட்கலாம் வட்கலாமால் – நீதிநூல்:36 367/4
சகம் எலாம் புகழ்தல் மெய் மேல் சைத்திய உபசாரங்கள் – நீதிநூல்:38 379/3
மா தரையில் ஒன்று உரிய சமையலாள் ஒன்று நம் மெய் வள சாந்தாற்றி – நீதிநூல்:40 412/2
பொய்யால் செய் மெய் நம்பி ஏதேதோ நினைவுற்றாய் புரை சேர் நெஞ்சே – நீதிநூல்:41 420/2
வீடுதான் இத்தனை நாள் நிற்கும் என விளம்பலாம் மெய் என்னும் பொய் – நீதிநூல்:41 423/3
எமது எனும் மெய் பிறக்கும் முன் எங்கு இருந்தது இன்னம் சில காலத்து எங்கே செல்லும் – நீதிநூல்:41 434/1
வினையவர் மெய் உரோமத்தை எண்ணினும் நோய் திரள் எண்ண விதானம் உண்டோ – நீதிநூல்:44 506/3
முரணுற ஒண்ணாது என்றேன் இரணியாசுரன் அன்று முராரி மெய் மேல் – நீதிநூல்:44 509/3
நலங்களும் இலை என்றாலும் நரரை போல் சீவன் மெய் ஐம்புலன்களும் – நீதிநூல்:45 514/2
மெய் வளர் வேத நிந்தை விமல தூடணங்கள் ஆமால் – நீதிநூல்:47 567/4
தீயகம் போம் மெய் துறும் காண் தேவர் பெறும் பேறே – நீதிநூல்:47 576/4
கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தி – நன்னெறி:1 27/1
மெய் சென்று தாக்கும் வியன் கோல் அடி தன் மேல் – நன்னெறி:1 31/3
மெய் உணர்வு இல்லாதவர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/4
மெய் வேல் பறியா நகும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/4
மெய் தவத்தை காசிபனும் விட்டு ஒழிந்து மாயை-பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/1
ஈன்றான் திலோத்தமையை இச்சிக்கில் ஆங்கு அவள் மெய்
தோன்றும் எழில் என் சொல்வேன் சோமேசா ஆன்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 112/1,2
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே – விவேகசிந்தாமணி:1 30/4
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே – விவேகசிந்தாமணி:1 30/4
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே – விவேகசிந்தாமணி:1 30/4
மாண் உலகத்தோர் புல்லர் வழக்கினை மெய் என்பாரே – விவேகசிந்தாமணி:1 33/4
செம் தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர் – விவேகசிந்தாமணி:1 68/4
மா வளரும் புன்னைவன நாதா மெய் துணையா – ஆத்திசூடிவெண்பா:1 1/3
மால் திரு மெய் ங போல் வளை – ஆத்திசூடிவெண்பா:1 15/4
பத்திரகிரிராசன் பகர் சனகன் மெய் விதுரன் – ஆத்திசூடிவெண்பா:1 30/1
இருமைக்கும் மெய் துணை ஆம் என்று மார்க்கண்டன் – ஆத்திசூடிவெண்பா:1 50/1
கோபாலன் அம் சுடர் மெய் குன்றியே சோபமுற்றான் – ஆத்திசூடிவெண்பா:1 78/2
புண்ணிய மா மெய் துணையாம் புன்னைவன பூபதியே – ஆத்திசூடிவெண்பா:1 87/3
வீமன் உடலில் பாதி மெய் வழக்கில் தேர்ந்து புருடாமிருகத்தின் – ஆத்திசூடிவெண்பா:1 96/1
பகைவரிடம் மெய் அன்பு பாவித்து அவரால் – நீதிவெண்பா:1 5/3
மெய் எனில் மெய்யாய் விளங்குமே மேதினியில் – நீதிவெண்பா:1 38/3
மெய் அழகில் ஐங்கணை கொள் வேள் எனினும் ஆன்றோர் சொல் – நன்மதிவெண்பா:1 40/1
பாழி மெய் மறைத்தல் என பன்னு – நன்மதிவெண்பா:1 91/4
மெய் உறுதி காட்டியதன் மேல் பொய்த்திட முயலேல் – நன்மதிவெண்பா:1 93/1
வேதநிலைகண்டானும் மெய் மறந்தான் ஆதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 27/2
மெய் உணர்வு இல்லாதவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 61/4
மெய் பொருள் காண்பது அறிவு – முதுமொழிமேல்வைப்பு:1 74/4
மெய் பொருள் காண்பது அறிவு – முதுமொழிமேல்வைப்பு:1 75/4
வென்றி மதுரையில் முன் மெய் சிறப்பும் பூசனையும் – திருக்குறள்குமரேசவெண்பா:2 18/1
வீடுமனார் மெய் தவத்தை மேவினார் சந்தனு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:3 26/1
வேடம் இன்றி பூசை இன்றி மெய் அறத்தை சாக்கியனார் – திருக்குறள்குமரேசவெண்பா:4 34/1
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/3
உண்டாம் அறங்கள் எல்லாம் உற்று அடைய மெய் புகழ் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/1
வேறொன்றும் வேண்டாமல் மெய் உதவிசெய்து நள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/1
தண் தார் அரவான் ததீசி போல் மெய் புகழை – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/1
பண்டு மனம் பொருந்த பாஞ்சாலி மெய் புகன்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/1
பண்டு ஏனோ சங்கரர் பாலசித்தர் மெய் துறவை – திருக்குறள்குமரேசவெண்பா:35 342/1
மெய் உணர்வு இல்லாதவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/4
பண்டு கண்ணன் மெய் வடிவே பார்த்து சகாதேவர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 355/1
மெய் பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:36 355/4
கண்டார் கபிலர் மெய் கற்ற மணிவாசகர் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/1
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/3
குன்று என மெய் கொண்டார் குமரேசா நன்றான – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/2
உற்றவர் வாய் சொல் எல்லாம் ஓர்ந்து ஏன் உருத்திரர் மெய்
குற்றம் அற கண்டார் குமரேசா எற்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/1,2
மெய் பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/4
வென்றி சுதரிசனன் மெய் வருந்தி ஏன் முயன்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:62 619/1
மெய் வருத்த கூலி தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 619/4
திண் திறல் மெய் குண்டலன் முன் சேராரை ஏன் விரைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:68 679/1
வென்றி அனரண்யன் மெய் படை போர் வன்கண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:77 764/1
வீர உதயணன்-தன் மெய் படை போய் எங்கும் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:77 769/1
பண்டு ஏன் இராவணி மெய் பட்ட கணை தொட்டு எடுத்துக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/1
மெய் வேல் பறியா நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/4
மெய் அறியாமை கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:93 925/4
வேதவதி நாண் காத்து மெய் உயிரை நீத்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/1
மென் தோள் சுபத்திரையின் மெய் முயக்கை ஏன் விசயன் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/1
காமர் உயர் சாருகாசினி ஏன் மெய் பசந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1186/1
காதலனார் நீங்கும் முன்னே காஞ்சனி தன் மெய் பசந்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1278/1
போந்து மெய் நீவி புனைந்தான் வசந்தை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1313/1

மேல்

மெய்க்கீர்த்தி (1)

நன்று அறிந்தும் மெய்க்கீர்த்தி நாடி உலகு இயற்கை – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/1

மேல்

மெய்க்கு (1)

கலங்களின் வைத்தலை ஒக்கும் மெய்க்கு உரிய வாயால் பொய் கழறல் அன்றே – நீதிநூல்:16 200/4

மேல்

மெய்கண்டதேவர் (1)

சென்று உணர்ந்தும் மெய்கண்டதேவர் எதிர் நந்தியார் – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/1

மேல்

மெய்கண்டார் (1)

மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு – அறநெறிச்சாரம்:1 134/4

மேல்

மெய்ச்சுகம் (1)

ஞானம் மெய்ச்சுகம் புகழ் நலம் பெற தனம் – நீதிநூல்:19 226/1

மேல்

மெய்ஞ்ஞானி (1)

வேறுபடினும் சிறப்பாம் மெய்ஞ்ஞானி நின்ற நிலை – நீதிவெண்பா:1 29/3

மேல்

மெய்த்த (1)

மெய்த்த திருவள்ளுவனார் வென்று உயர்ந்தார் கல்வி நலம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 41/1

மேல்

மெய்த்தலையார் (1)

மிண்டு மிடியுற்றிருந்தும் மெய்த்தலையார் மேன்மை மிக – திருக்குறள்குமரேசவெண்பா:66 657/1

மேல்

மெய்ந்நூல் (1)

மெய்ந்நூல் தலைப்படல் ஆகும் மற்று ஆகாதே – அறநெறிச்சாரம்:1 41/3

மேல்

மெய்ந்நெறி (1)

ஈசன் நெறி தொண்டர் இயம்புதலும் மெய்ந்நெறி என்று – முதுமொழிமேல்வைப்பு:1 74/1

மேல்

மெய்ந்நெறிக்-கண் (1)

மெய்ந்நெறிக்-கண் உள்ளம் துளக்கு இன்மை காட்சிக்-கண் – அருங்கலச்செப்பு:1 17/1

மேல்

மெய்ப்புலவர்-தம்பால் (1)

மெய்ப்புலவர்-தம்பால் விளையாவாம் துப்பின் – நன்னெறி:1 11/2

மேல்

மெய்ப்பொருள் (6)

கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி – கொன்றைவேந்தன்:1 22/1
மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்று உரைப்பர் – அருங்கலச்செப்பு:1 3/1
மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரண் ஆகி – அருங்கலச்செப்பு:1 10/1
கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் – முதுமொழிமேல்வைப்பு:1 60/3
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின் – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/3
மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல் மேவல் – திருக்குறள்குமரேசவெண்பா:86 857/3

மேல்

மெய்ப்பொருளார் (1)

சுட்டிய சீர் மெய்ப்பொருளார் சோமேசா முட்ட – சோமேசர்முதுமொழிவெண்பா:1 16/2

மேல்

மெய்ப்பொருளின் (1)

நின்று ஒழுகும் மெய்ப்பொருளின் நேரான் போய் அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 45/2

மேல்

மெய்ப்பொருளை (1)

கற்றவர் போல் மெய்ப்பொருளை கண்டார்-கொல் உற்றது கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 61/2

மேல்

மெய்பெற (1)

மெய்பெற இன்னவை நான்கு – அருங்கலச்செப்பு:1 14/2

மேல்

மெய்ம்மை (3)

மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம் – அறநெறிச்சாரம்:1 12/1
வினை பயனும் ஆயிற்றாம் என்று அதன்-கண் மெய்ம்மை
நினைத்து ஒழிய நெஞ்சில் நோய் இல் – அறநெறிச்சாரம்:1 80/3,4
மெய்ம்மை நெறி நிருபன் மீறி ஒழுகுதல் வெம் – நன்மதிவெண்பா:1 64/1

மேல்

மெய்ம்மையும் (2)

வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இ மூன்றும் – அறநெறிச்சாரம்:1 107/3
தானமும் தயையும் மெய்ம்மையும் தவமும் தற்பரன் வணக்கமும் பொறையும் – நீதிநூல்:4 41/3

மேல்

மெய்ம்மையே (1)

உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் மெய்ம்மையே
பட்டாங்கு அறம் உரைக்கும் பண்புடையாளரே – அறநெறிச்சாரம்:1 93/2,3

மேல்

மெய்மறதி (1)

ஈனம் மெய்மறதி நோய் இழிவு உற பொருள் – நீதிநூல்:19 226/3

மேல்

மெய்மன் (1)

எள்ளி முனி தாய் மொழிந்தும் ஏன் மெய்மன் வீடுமன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 141/1

மேல்

மெய்மன்னும் (1)

வென்றி விரோசனனும் மெய்மன்னும் ஒப்புரவால் – திருக்குறள்குமரேசவெண்பா:48 480/1

மேல்

மெய்மை (2)

ஐயனது அருளால் மெய்மை அனை தந்தை ஈந்தார் அ மெய் – நீதிநூல்:15 190/1
வென்றி சதவிந்து ஏன் மெய்மை இலா சாலுவன் கேள் – திருக்குறள்குமரேசவெண்பா:82 811/1

மேல்

மெய்யடியார்கள் (1)

வேதியர் நாளும் வாழ்க மெய்யடியார்கள் வாழ்க – நீதிநூல்:46 523/2

மேல்

மெய்யது (1)

நரர் பல உறுப்புகள் நலம்கொள் மெய்யது
சிரமுறும் பொறி வழி செல்லும் தன்மை போல் – நீதிநூல்:5 50/2,3

மேல்

மெய்யதை (1)

மெய்யதை சொல்வாராகில் விளங்கிடும் மேலும் நன்மை – விவேகசிந்தாமணி:1 67/1

மேல்

மெய்யர் (1)

மெய்யர் என பெயர் பூண்டார் வறிஞரே எனினும் நிதி மிகவும் அன்னார் – நீதிநூல்:16 199/1

மேல்

மெய்யா (2)

மெய்யா உற்றோர் தம்முள் நட்பிலரேல் பிரபஞ்ச விநோத கூத்தை – நீதிநூல்:12 115/3
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/3

மேல்

மெய்யாக (2)

செய் பழி நீக்கல் நிறுத்துதல் மெய்யாக
அன்புடைமை ஆன்ற அற விளக்கம் செய்தலோடு – அறநெறிச்சாரம்:1 68/2,3
கொய் மலர் பூங்கோதை குமரேசா மெய்யாக
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/2,3

மேல்

மெய்யாய் (1)

மெய் எனில் மெய்யாய் விளங்குமே மேதினியில் – நீதிவெண்பா:1 38/3

மேல்

மெய்யார் (1)

கொற்றம் மிகு மெய்யார் குமரேசா பெற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/2

மேல்

மெய்யால் (2)

பண்டு செழியன் பரதன் பிருது மெய்யால்
கொண்டனர் ஏன் தூய்மை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:30 298/1,2
தண் தார் தசரதன் சத்தியன் சன்னு மெய்யால்
கொண்டார் ஒளி ஏன் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:30 299/1,2

மேல்

மெய்யான (1)

கொய்து கொடுத்தான் குமரேசா மெய்யான
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/2,3

மேல்

மெய்யானதுவே (1)

மெய்யானதுவே வியர்வையுற பல் வினை கையால் – நீதிநூல்:25 290/3

மேல்

மெய்யில் (4)

எய்தாமை சொல்லின் வழுக்காது மெய்யில்
புலம் ஐந்தும் காத்தும் மனம் மாசு அகற்றும் – நீதிநெறிவிளக்கம்:1 59/2,3
ஆயுதம் செய அறிந்த நரர் மெய்யில் ஆயுதங்கள் – நீதிநூல்:47 547/1
நல் அணி மெய்யில் பூண்டு நாசிகாபரணம் மீதில் – விவேகசிந்தாமணி:1 106/2
செய்ய முகம் வாய் கை கால் தேக சுத்திசெய்து மெய்யில்
துய்ய வெண் நீறு இட்டு அரனை தோத்திரம்செய்து உய்யும் வகை – ஆத்திசூடிவெண்பா:1 106/1,2

மேல்

மெய்யிலே (1)

மின் இயல் வேசிக்கு ஈந்தால் மெய்யிலே வியாதி ஆகும் – விவேகசிந்தாமணி:1 29/2

மேல்

மெய்யினில் (1)

ஓதியர்க்கு ஓதிடாது ஒழித்தல் மெய்யினில்
பாதியையே அலங்கரித்து பாதி மெய் – நீதிநூல்:10 100/2,3

மேல்

மெய்யினும் (1)

பன்னு பொய் மெய்யினும் பாடு உடைத்து அரோ – நீதிநூல்:22 262/4

மேல்

மெய்யுடை (1)

மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் – வெற்றிவேற்கை:1 74/1

மேல்

மெய்யுணர்ச்சி (2)

மெய்யுணர்ந்தார் பொய் மேல் புலம் போக்கார் மெய்யுணர்ச்சி
கைவருதல் கண்ணா புலம் காப்பார் மெய்யுணர்ந்தார் – நீதிநெறிவிளக்கம்:1 98/1,2
மெய்யுணர்ச்சி கண் விழிப்ப தூங்குவார் தம் உளே – நீதிநெறிவிளக்கம்:1 101/2

மேல்

மெய்யுணர்ந்தார் (2)

மெய்யுணர்ந்தார் பொய் மேல் புலம் போக்கார் மெய்யுணர்ச்சி – நீதிநெறிவிளக்கம்:1 98/1
கைவருதல் கண்ணா புலம் காப்பார் மெய்யுணர்ந்தார்
காப்பே நிலையா பழி நாணல் நீள் கதவா – நீதிநெறிவிளக்கம்:1 98/2,3

மேல்

மெய்யுணர்வில் (1)

துறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம் – நீதிநெறிவிளக்கம்:1 99/3

மேல்

மெய்யும் (2)

மேவி அவர் இருவருமே நள்ளாது முரண்செய்யில் விளங்கு மெய்யும்
சீவனும் ஒன்றோடொன்று போராடி அழிந்தது ஒக்கும் செப்புங்காலே – நீதிநூல்:12 109/3,4
கண்டு அறி செவி நா மெய்யும் கழறும் ஐம்புலன்கட்கு ஏன்ற – நீதிநூல்:47 530/3

மேல்

மெய்யுள் (1)

நாம் அறியாது உயிர்ப்பு கணம்-தொறும் நடக்க மெய்யுள்
தோம் அறும் இயந்திரங்கள் தொழில் பல இயற்ற உண்ணும் – நீதிநூல்:47 553/1,2

மேல்

மெய்யே (2)

சூடும் மகிழ்ச்சி மெய்யே சோமேசா நாடி இடில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/2
துய்ய கங்கை_சேய் முதலோர் சோமேசா மெய்யே ஆம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 56/2

மேல்

மெய்யை (1)

எய்தும் புறவுக்கா ஏன் சிபி முன் தன் மெய்யை
கொய்து கொடுத்தான் குமரேசா மெய்யான – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/1,2

மேல்

மெய்வாதியர்-பால் (1)

மெய்வாதியர்-பால் கொண்டு அவர்க்கு விவாதம் தீர்க்கும் நிலை எற்றேல் – நீதிநூல்:21 256/2

மேல்

மெயோடு (1)

எண் சிதைந்திட சினம்கொள்வீர் நும் மெயோடு இதயம் – நீதிநூல்:26 294/3

மேல்

மெல் (14)

மெல் இயல் நல்லாளும் நல்லள் விருந்து ஓம்பி – அறநெறிச்சாரம்:1 158/3
ஒற்றை ஒண் சுடரினை ஒழிக்கும் மெல் வளி – நீதிநூல்:11 107/1
இரு பாத தாடனம் ஆலிங்கனம் மெல் இதழ் சுவைத்தல் என்றாள் அம்மா – நீதிநூல்:44 508/4
மெல்_இயல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண் முத்து என்றாள் – விவேகசிந்தாமணி:1 106/4
செய்ய மெல் இல் நல்லாள் தோள் சேர் – ஆத்திசூடிவெண்பா:1 93/4
வீட்டுமனும் நல் பருவ மெல்_இயலார்-பால் இருப்பின் – நன்மதிவெண்பா:1 73/1
மெல்_இயற்கு சீவன் மிகு மானம் அல்லல் இலா – நன்மதிவெண்பா:1 90/2
மெல் நீரள் யாம் வீழ்பவள் – முதுமொழிமேல்வைப்பு:1 165/4
வெம் துயரால் ஆற்றுவித்த மெல்_இழைக்கு வந்து சொலல் – முதுமொழிமேல்வைப்பு:1 171/2
வென்றி மிகு கோசிகனும் மெல்_நுதலை கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/1
வீமன் திரு மடந்தை மெல் நீரள் என்று ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:112 1111/1
மெல் நீரள் யாம் வீழ்பவள் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1111/4
மேனி மெலிந்து ஆதிரை ஏன் மெல் வளை கை வீழ நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1157/1
வீழ்ந்த மதன் வந்த பின்பே மெல் இரதி வாழ்வு வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/1

மேல்

மெல்_நுதலை (1)

வென்றி மிகு கோசிகனும் மெல்_நுதலை கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/1

மேல்

மெல்_இயல் (1)

மெல்_இயல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண் முத்து என்றாள் – விவேகசிந்தாமணி:1 106/4

மேல்

மெல்_இயலார்-பால் (1)

வீட்டுமனும் நல் பருவ மெல்_இயலார்-பால் இருப்பின் – நன்மதிவெண்பா:1 73/1

மேல்

மெல்_இயற்கு (1)

மெல்_இயற்கு சீவன் மிகு மானம் அல்லல் இலா – நன்மதிவெண்பா:1 90/2

மேல்

மெல்_இழைக்கு (1)

வெம் துயரால் ஆற்றுவித்த மெல்_இழைக்கு வந்து சொலல் – முதுமொழிமேல்வைப்பு:1 171/2

மேல்

மெல்ல (7)

வீயும் என்று அ கால் மெல்ல வீசச்செய்து உலகு எங்கும் சார் – நீதிநூல்:47 544/2
இல்லை அவன் என்றான் இரங்கேசா மெல்ல
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 58/2,3
மெல்ல தெரிந்து சொல் – புதிய-ஆத்திசூடி:1 81/1
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 562/3
கொல்ல கொடுத்தான் குமரேசா மெல்ல போய் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1078/2
பீலிவளை ஏன் வளவன் பின் நோக்கி முன் மெல்ல
கோலி நகைத்தாள் குமரேசா மால் ஆகி – திருக்குறள்குமரேசவெண்பா:110 1094/1,2
தான் நோக்கி மெல்ல நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1094/4

மேல்

மெல்லி (2)

மெல்லி நல்லாள் தோள் சேர் – ஆத்திசூடி:1 94/1
நல்ல அன்பர் சொற்கு ஒவ்வா நான்மறைகள் மெல்லி நல்லாய் – நீதிவெண்பா:1 97/2

மேல்

மெல்லிது (1)

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1289/3

மேல்

மெல்லிய (1)

அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் மெல்லிய
வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே – மூதுரை-வாக்குண்டாம்:1 27/2,3

மேல்

மெல்லென்றல் (1)

மெல்லென்றல் சால அரிதாகும் அஃதே போல் – அறநெறிச்சாரம்:1 31/2

மேல்

மெல்லென (1)

மின்னு மணி மேகலைகள் மெல்லென ஒலிப்ப – விவேகசிந்தாமணி:1 37/2

மேல்

மெலிந்தாள் (3)

பதவி எலாம் ஈன்றோர்-பால் இருக்க நண்பனொடு மெலிந்தாள் பசி நோயுற்றே – நீதிநூல்:12 123/4
மேனி பசந்து மெலிந்தாள் விந்தை தன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1185/1
மேரு ஏன் ஊடி மெலிந்தாள் கொழுநன் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:132 1314/1

மேல்

மெலிந்து (4)

நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர் – வெற்றிவேற்கை:1 50/2
விதி செயல் சிதைந்து அகம் மெலிந்து நையுமே – நீதிநூல்:5 49/4
மேனி மெலிந்து ஆதிரை ஏன் மெல் வளை கை வீழ நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1157/1
சாம்பவதி ஏன் தணந்த நாள் தோள் மெலிந்து
கூம்பி இருந்தாள் குமரேசா தேம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/1,2

மேல்

மெலியது (1)

மெலியது மேன்மேல் எழ செல்லச்செல்ல – நீதிநெறிவிளக்கம்:1 16/3

மேல்

மெலியரை (1)

மெலிவொடு இரண்டும் கெடுவ போல் கெடுவார் மெலியரை வெகுளுவோர் வேங்கை – நீதிநூல்:26 292/3

மேல்

மெலியவர் (1)

மெலியவர் வழக்கினை விளம்பல் வாடிய – நீதிநூல்:21 245/2

மேல்

மெலியார் (5)

மெலியார் விழினும் ஒருவாற்றான் உய்ப – நீதிநெறிவிளக்கம்:1 95/1
மெலியார் மேல் மேக பகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 87/4
மெலியார் மேல் மேக பகை – முதுமொழிமேல்வைப்பு:1 134/4
மெலியார் மேல் செல்லும் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:25 250/4
மெலியார் மேல் மேக பகை – திருக்குறள்குமரேசவெண்பா:87 861/4

மேல்

மெலியாரை (1)

தம்மின் மெலியாரை நோக்கி தமது உடைமை – நீதிநெறிவிளக்கம்:1 14/1

மேல்

மெலியும் (1)

மெலியும் ஏழைக்கு இடாமல் விளை பொன்னை – நீதிநூல்:24 281/1

மேல்

மெலியோர் (1)

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார் – நன்னெறி:1 9/1

மேல்

மெலிவது (1)

மெலிவது விளக்கே ஆகில் மீண்டும் அ காற்றே கூற்றம் – விவேகசிந்தாமணி:1 79/4

மேல்

மெலிவர் (1)

வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார் மேலவர் அசடரால் மெலிவர்
அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசு ஆணைக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே – நீதிநூல்:5 48/3,4

மேல்

மெலிவினை (1)

மீண்டிலரிடம் எனது மெலிவினை உரை முகிலே – நீதிநூல்:12 155/4

மேல்

மெலிவொடு (1)

மெலிவொடு இரண்டும் கெடுவ போல் கெடுவார் மெலியரை வெகுளுவோர் வேங்கை – நீதிநூல்:26 292/3

மேல்

மெழுகு (1)

புனல் உறும் உப்பினை போலும் மென் மெழுகு
அனல் உறல் என்னவும் அழிவது உண்மையே – நீதிநூல்:13 160/3,4

மேல்

மெள்ள (7)

கொள்ளி வைத்தால் போல் கொடிது எனினும் மெள்ள
அறிவு என்னும் நீரால் அவித்து ஒழுகல் ஆற்றின் – அறநெறிச்சாரம்:1 81/2,3
துள்ளி அழிந்தான் அரக்கன் சோமேசா மெள்ள
முடிவும் இடையூறும் முற்றி ஆங்கு எய்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 68/2,3
கொள்ளவில்லை என்னே குமரேசா மெள்ள
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற – திருக்குறள்குமரேசவெண்பா:18 174/2,3
கொள்ள உயர்ந்தார் ஏன் குமரேசா மெள்ள
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/2,3
கொள்ள வந்த போது ஏன் குமரேசா மெள்ள
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1054/2,3
கொள்ள நின்ற போது ஏன் குமரேசா மெள்ள வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1084/2
மெள்ள அகன்றவுடன் மேனி பசந்தாள் சுதை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/1

மேல்

மென் (27)

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும் – மூதுரை-வாக்குண்டாம்:1 28/1
நட்டாரை வேண்டின் நறு மென் கதுப்பினாய் – அறநெறிச்சாரம்:1 95/1
பொறி சுணங்கு மென் முலை பொன்_அன்னாய் உய்ப்பர் – அறநெறிச்சாரம்:1 95/3
நீதி நூல் மைந்தர்க்கு நிகழ்த்தி மென் மலர் – நீதிநூல்:10 100/1
புனல் உறும் உப்பினை போலும் மென் மெழுகு – நீதிநூல்:13 160/3
பொறி உடல்களை மென் தோலால் போர்த்தினோன் சீர்த்தியோனே – நீதிநூல்:47 546/4
சென்று படர்ந்த செழும் கொடி மென் பூ மலர்ந்த – நன்னெறி:1 39/3
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/3
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/3
மென் மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின – நீதிவெண்பா:1 4/1
மென் சீத காலத்து வெம்மை தரும் வெம்மை-தனில் – நீதிவெண்பா:1 43/3
வில்லம் அறுகுக்கு ஒவ்வா மென் மலர்கள் நால்வர் எனும் – நீதிவெண்பா:1 97/1
வெம் திறல் மிக்கோனேனும் மென் மனையை அன்னவள்-தன் – நன்மதிவெண்பா:1 25/1
என்பு உருக்கும் மென் குதலை ஏந்து_இழையார் நன்மதியே – நன்மதிவெண்பா:1 34/3
வெள்ளிலை உண்ணா வாயும் மென் மணம்செய் நாதனுடன் – நன்மதிவெண்பா:1 53/1
வன மதுர மென் மொழிக்கு வாயாம் மனிதர்க்கு – நன்மதிவெண்பா:1 67/2
மென்_தொடியார் தேத்தும் விழைந்திலார் என்ப – முதுமொழிமேல்வைப்பு:1 29/2
பனி மலர் மென் கோதை எழில் பாவை ஒழிய – முதுமொழிமேல்வைப்பு:1 139/2
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – முதுமொழிமேல்வைப்பு:1 163/3
நீங்கும் என் மென் தோள் பசப்பு – முதுமொழிமேல்வைப்பு:1 180/4
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/3
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/3
மென் தோள் சுபத்திரையின் மெய் முயக்கை ஏன் விசயன் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/1
நீங்கும் என் மென் தோள் பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/4
சேவடியும் மென் தோளும் தேவகி முன் நோக்கி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/1
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/3
தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென் தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1325/3

மேல்

மென்_தொடியார் (1)

மென்_தொடியார் தேத்தும் விழைந்திலார் என்ப – முதுமொழிமேல்வைப்பு:1 29/2

மேல்

மென்மை (2)

வள்ளல் உயர் நாஞ்சிலான் மாற்றார் முன் மென்மை என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/1
மென்மை பகைவர் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/4

மேல்

மென்மையதாய் (1)

தருவின் வேர் பயிர் வேர் உள் சென்று உலாவ மென்மையதாய் தங்கும் – நீதிநூல்:47 540/1

மேல்

மென்மையாகும் (1)

மென்மையாகும் விழி முதல் யாவையும் – நீதிநூல்:12 154/1

மேல்

மென்று (1)

விளைக்கும் வலியன தாம் மென்று – நன்னெறி:1 27/4

மேல்