பே – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேஎய் 1
பேகன் 1
பேச்சும் 1
பேச 5
பேசப்படுமேல் 1
பேசரும் 1
பேசல் 1
பேசலும் 1
பேசலுற்றாள் 1
பேசாதான் 1
பேசாது 1
பேசாதே 1
பேசாமல் 2
பேசார் 2
பேசி 11
பேசிட 1
பேசிடாமல் 1
பேசிடார் 1
பேசிய 2
பேசியது 1
பேசில் 8
பேசின் 2
பேசினார் 1
பேசினாளே 1
பேசினும் 1
பேசு 10
பேசுங்கால் 2
பேசுதல் 2
பேசும் 3
பேசுமிடத்து 1
பேசுவாயே 1
பேசுவார் 1
பேசுற்ற 1
பேசேம் 1
பேசேல் 12
பேடி 4
பேடியினும் 1
பேடு 1
பேடு-தனக்கு 1
பேண் 2
பேணப்படும் 1
பேணலர் 1
பேணலும் 1
பேணா 1
பேணாத 1
பேணாதவன் 1
பேணாதவாறு 1
பேணாது 11
பேணாமல் 1
பேணாமை 2
பேணார் 3
பேணாரேல் 1
பேணான் 5
பேணி 19
பேணிக்கொளலும் 2
பேணியார் 1
பேணியே 1
பேணின் 1
பேணுகின்ற 1
பேணுதல் 1
பேணுதலால் 1
பேணுதலும் 1
பேணுதற்கே 1
பேணும் 1
பேணுவார் 1
பேத 1
பேதங்களாம் 1
பேதம் 6
பேதம்செய்து 1
பேதமதையே 1
பேதமையாய் 1
பேதன் 1
பேதாய் 1
பேதித்தும் 1
பேதுற்று 1
பேதை 26
பேதைக்கு 5
பேதைமதி 2
பேதைமை 19
பேதைமைக்கு 1
பேதைமையா 1
பேதைமையார் 1
பேதைமையுள் 1
பேதையருக்கு 1
பேதையரும் 1
பேதையரை 1
பேதையாய் 1
பேதையார் 8
பேதையின் 1
பேதையும் 3
பேதையே 1
பேதையேன் 1
பேய் 11
பேய்கள் 1
பேய்களுக்கு 1
பேய்ப்பிறப்பை 1
பேயரேனும் 1
பேயன் 1
பேயினும் 1
பேயே 2
பேயை 1
பேயோ 1
பேர் 41
பேர்-தம் 1
பேர்கள் 5
பேர்கின்றதாகும் 1
பேர்த்து 6
பேர்படைத்த 1
பேர்படைத்தும் 1
பேர 1
பேரண்டங்களை 1
பேரண்டம் 1
பேரணி 1
பேரரசே 1
பேரரசை 1
பேரருளால் 1
பேரழகு 1
பேரழகுதான் 1
பேரழகே 1
பேரழகை 1
பேரறிஞர் 1
பேரறிவாம் 1
பேரறிவாளன் 2
பேரறிவினோடு 1
பேரன்பு 1
பேரா 5
பேராசை 1
பேராண்மை 7
பேராது 1
பேராழி 1
பேராழியிடை 1
பேரான 2
பேரானந்த 1
பேரிகை 1
பேரிட்டு 1
பேரிடர்கள் 1
பேரிடியை 1
பேரிரையான்-கண் 1
பேரின்ப 5
பேரின்பத்துக்கு 1
பேரின்பம் 3
பேருக்கு 1
பேருண்டி 1
பேரும் 6
பேருலகில் 1
பேருவகை 1
பேருறவால் 1
பேரூர்க்கு 1
பேரை 2
பேரையும் 1
பேழை 1
பேற்றின் 1
பேறலின் 1
பேறா 2
பேறாம் 1
பேறு 6
பேறே 1
பேன் 1

பேஎய் (1)

பேஎய் கண்டு அன்னது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:57 565/4

மேல்

பேகன் (1)

வள்ளல் உயர் பேகன் வறியார்க்கே ஈந்து மயில் – திருக்குறள்குமரேசவெண்பா:23 221/1

மேல்

பேச்சும் (1)

பேசார் போல் பேச்சும் ஆகி பிணியொடு நரகில் வீழ்வார் – விவேகசிந்தாமணி:1 50/4

மேல்

பேச (5)

கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் – உலகநீதி:1 4/5
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம் – உலகநீதி:1 7/2
பேச வாய் அறியுமன்றி பின்னை ஓர் புலன் தேராது – நீதிநூல்:2 12/2
ஐய மெய் அம்மணத்தோடு அழுவதை அன்றி பேச
செய்ய ஒன்று அறியா நொய்ய சிற்றுடல் சேய் வளர்ந்து இங்கு – நீதிநூல்:8 81/1,2
பெருமை மிக பிறங்க பேச அரிய இன்பம் – நன்மதிவெண்பா:1 60/3

மேல்

பேசப்படுமேல் (1)

பிழைத்தான் என பிறரால் பேசப்படுமேல்
இழுக்காம் ஒருங்கே இவை – அறநெறிச்சாரம்:1 89/3,4

மேல்

பேசரும் (1)

பெரிய புண்களும் பேசரும் துன்பமும் – நீதிநூல்:12 150/2

மேல்

பேசல் (1)

பேசல் உண்டோ நன்மதியே பேசு – நன்மதிவெண்பா:1 107/4

மேல்

பேசலும் (1)

பேசலும் மாயோன் பெரும் பாம்பு ஆம் ஆசில் – முதுமொழிமேல்வைப்பு:1 24/2

மேல்

பேசலுற்றாள் (1)

பெரு வாய் எச்சிலை உமிழ்ந்தாள் பேசு என்றேன் கொடும் சொற்கள் பேசலுற்றாள்
மருவு என்றேன் உதைக்குபு கையால் இடித்து கடித்து இனிய மதனநூலாம் – நீதிநூல்:44 508/2,3

மேல்

பேசாதான் (1)

கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும் கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும் – விவேகசிந்தாமணி:1 20/1

மேல்

பேசாது (1)

பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல் – வெற்றிவேற்கை:1 11/1

மேல்

பேசாதே (1)

பொய் பேசாதே – இளையார்-ஆத்திசூடி:1 71/1

மேல்

பேசாமல் (2)

பெரியோர்கள் முன் நின்று மரத்தை போலும் பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும் – விவேகசிந்தாமணி:1 20/3
கூசாது ஏன் கொன்றான் குமரேசா பேசாமல்
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 490/2,3

மேல்

பேசார் (2)

பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு – நல்வழி:1 7/4
பேசார் போல் பேச்சும் ஆகி பிணியொடு நரகில் வீழ்வார் – விவேகசிந்தாமணி:1 50/4

மேல்

பேசி (11)

மறம் பேசி திரிவாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 10/1
திறம் பேசி கலகமிட்டு திரிய வேண்டாம் – உலகநீதி:1 10/3
குறம் பேசி வாழ்கின்ற வள்ளிபங்கன் – உலகநீதி:1 10/7
பின்னைக்கு இனிய மொழி பேசி வென்ற மாயவன் போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/1
பிள்ளை உடன் உண்ண பேசி அழைத்தார் அன்பு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 30/1
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பு இலா கூழ் இட்டாலும் உண்பதே அமிழ்தம் ஆகும் – விவேகசிந்தாமணி:1 4/1,2
கொடும் மத குவடு என வளர்ந்திடு குஞ்சரத்தையும் நம்பலாம் குலுங்க பேசி நகைத்திடும் சிறுகுமரர்-தம்மையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/2
வல்லா அந்தணர்-தமையும் கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி
நல்லார் போல் அருகு இருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பொணாதே – விவேகசிந்தாமணி:1 62/3,4
ஏளனம் பேசி தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும் – விவேகசிந்தாமணி:1 63/3
வாரம் கொண்டு வழக்குரைத்து மண் மேல் நின்று வலி பேசி
ஓரம் சொன்ன குடியது போல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே – விவேகசிந்தாமணி:1 94/3,4
கூசி நொந்தாள் என்னே குமரேசா பேசி
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1232/2,3

மேல்

பேசிட (1)

பித்தரில் பித்தர் பாரில் பேசிட உளரோ அம்மா – நீதிநூல்:2 15/4

மேல்

பேசிடாமல் (1)

பின் பயன் தோன்றிடச்செய்தல் மெய் உரைக்க அஞ்சி வாய் பேசிடாமல்
சற்பனையாய் இருத்தல் பொய்க்கதை கூறல் கேட்டல் எலாம் சலங்கள் ஆமே – நீதிநூல்:16 204/3,4

மேல்

பேசிடார் (1)

பெருமையோன் தீயன் என அறியா முன் பேசிடார் தீயனேல் பெயர்வார் – நீதிநூல்:43 462/2

மேல்

பேசிய (2)

கரங்கள் நீட்டியே பேசிய கசடரை கண்டு – விவேகசிந்தாமணி:1 109/3
பேசிய தோழிக்கு அவளும் பேசியது கூறின் – முதுமொழிமேல்வைப்பு:1 182/2

மேல்

பேசியது (1)

பேசிய தோழிக்கு அவளும் பேசியது கூறின் – முதுமொழிமேல்வைப்பு:1 182/2

மேல்

பேசில் (8)

தூசு ஆர் துவட்டா சேய் சோமேசா பேசில்
எனை வகையால் தேறியக்-கண்ணும் வினை வகையான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 52/2,3
பேசில் இவை உடையாள் பெண் – நீதிவெண்பா:1 30/4
பெண் ஒருத்தி பேசில் பெரும் பூமி தான் அதிரும் – நீதிவெண்பா:1 31/1
பெண் இருவர் பேசில் விழும் வான்மீன்கள் பெண் மூவர் – நீதிவெண்பா:1 31/2
பேசில் அலை சுவறும் பேதையே பெண் பலர் தாம் – நீதிவெண்பா:1 31/3
பேசில் உலகு என் ஆமோ பின் – நீதிவெண்பா:1 31/4
பெற்றாள் இவர் ஐவர் பேசில் எவருக்கும் – நீதிவெண்பா:1 42/3
பூசுரரும் கோழிகளும் பொன்_அனையாய் பேசில் ஒரு – நீதிவெண்பா:1 65/2

மேல்

பேசின் (2)

நேசரிடத்து இரந்து நிற்றலால் பேசின்
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – முதுமொழிமேல்வைப்பு:1 156/2,3
கூசி உளைந்தாள் குமரேசா பேசின்
பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1295/2,3

மேல்

பேசினார் (1)

பேடியினும் பேதை என பேசினார் பெண் விழைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:91 907/1

மேல்

பேசினாளே (1)

பெண்ணானாள் எனை உன் வாய் கொட்டுவள் என்றே நகைத்து பேசினாளே – நீதிநூல்:44 479/4

மேல்

பேசினும் (1)

முடவரே நடக்கினும் மூங்கை பேசினும்
திடமொடு அந்தகர் வழி தெரிந்து செல்லினும் – நீதிநூல்:10 98/1,2

மேல்

பேசு (10)

பெரு வாய் எச்சிலை உமிழ்ந்தாள் பேசு என்றேன் கொடும் சொற்கள் பேசலுற்றாள் – நீதிநூல்:44 508/2
பெருகுதல்-கண் என் செய்வார் பேசு – நன்னெறி:1 30/4
பேரும் என்று நன்மதியே பேசு – நன்மதிவெண்பா:1 37/4
பிணம் எரியும் ஈமம் என பேசு – நன்மதிவெண்பா:1 96/4
பேசல் உண்டோ நன்மதியே பேசு – நன்மதிவெண்பா:1 107/4
நேர்பட பேசு – புதிய-ஆத்திசூடி:1 61/1
வெடிப்புற பேசு – புதிய-ஆத்திசூடி:1 107/1
உள்ளதை பேசு – இளையார்-ஆத்திசூடி:1 5/1
சிரித்து பேசு – இளையார்-ஆத்திசூடி:1 33/1
மெத்தென்ப பேசு – இளையார்-ஆத்திசூடி:1 78/1

மேல்

பேசுங்கால் (2)

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை சிச்சீ – நல்வழி:1 14/1,2
ஈசனுடன் போந்தான் இரங்கேசா பேசுங்கால்
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/2,3

மேல்

பேசுதல் (2)

ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு – கொன்றைவேந்தன்:1 12/1
கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே – வெற்றிவேற்கை:1 36/1,2

மேல்

பேசும் (3)

இசையினால் மகிழ்வும் பேசும் இகழ்வினால் துயரும் உற்று – நீதிநூல்:38 377/3
வினையையும் அறிவான் பேசும் விதங்களும் அறிவான் அன்பு ஆர் – நீதிநூல்:47 558/3
பிரிந்த வழி பரவை பேசும் இரங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 170/2

மேல்

பேசுமிடத்து (1)

பேசுமிடத்து ஊமை ஆம் பெற்றிமையால் ஆகமத்தை – முதுமொழிமேல்வைப்பு:1 71/2

மேல்

பேசுவாயே (1)

பின்பு இறக்கும் போது அதுவும் கூட இறந்திடும்-கொல்லோ பேசுவாயே – நீதிநூல்:40 405/4

மேல்

பேசுவார் (1)

பின்னையும் யாரோ என்று பேசுவார் ஏசுவாரே – விவேகசிந்தாமணி:1 25/4

மேல்

பேசுற்ற (1)

பேசுற்ற இன்சொல் பிறிது என்க ஈசற்கு – நன்னெறி:1 2/2

மேல்

பேசேம் (1)

பெருமை சிறுமை இனி பேசேம் இறையாம் – முதுமொழிமேல்வைப்பு:1 84/2

மேல்

பேசேல் (12)

ஔவியம் பேசேல் – ஆத்திசூடி:1 12/1
வஞ்சகம் பேசேல் – ஆத்திசூடி:1 27/1
சித்திரம் பேசேல் – ஆத்திசூடி:1 46/1
வல்லமை பேசேல் – ஆத்திசூடி:1 99/1
வெட்டென பேசேல் – ஆத்திசூடி:1 105/1
கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் – கொன்றைவேந்தன்:1 19/1
தோழனோடும் ஏழைமை பேசேல் – கொன்றைவேந்தன்:1 47/1
திண்மை உன்னி ஔவியம் பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 12/4
சீருறா வஞ்சகம் பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 27/4
சேரலர்க்கு சித்திரம் பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 45/4
மாறான வல்லமை பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 98/4
சீர்மை தப்பி வெட்டென பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 104/4

மேல்

பேடி (4)

வலி இலா பேடி கை வாள்-கொல் ஆண் என – நீதிநூல்:24 274/3
பெண்டுகள் சொல்கேட்கின்ற பேயரேனும் குணம் மூட பேடி லோபர் – விவேகசிந்தாமணி:1 98/1
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை – திருக்குறள்குமரேசவெண்பா:62 614/3
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/3

மேல்

பேடியினும் (1)

பேடியினும் பேதை என பேசினார் பெண் விழைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:91 907/1

மேல்

பேடு (1)

பேடு கொளப்படுவது இல் – நீதிநெறிவிளக்கம்:1 23/4

மேல்

பேடு-தனக்கு (1)

உரந்து சிறு கானகத்தில் உயிர் புறா பேடு-தனக்கு உரைக்கும்காலை – விவேகசிந்தாமணி:1 105/2

மேல்

பேண் (2)

தந்தை தாய் பேண் – ஆத்திசூடி:1 20/1
பேர் ஆரும் தந்தை தாய் பேண் – ஆத்திசூடிவெண்பா:1 20/4

மேல்

பேணப்படும் (1)

பேணாமை பேணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 866/4

மேல்

பேணலர் (1)

பேணலர் மேலாயவர் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/4

மேல்

பேணலும் (1)

காதலர் வளர்த்தலும் காந்தர் பேணலும்
மாதருக்கு உணர்த்தல் ஈன்றோர்க்கு மாண்பு அரோ – நீதிநூல்:47 593/3,4

மேல்

பேணா (1)

பேணா பெரும் குற்றத்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:93 924/4

மேல்

பேணாத (1)

கொற்ற சகுந்தன் ஏன் கோசிகரை பேணாத
குற்றத்தால் நொந்தான் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:90 892/1,2

மேல்

பேணாதவன் (1)

வியந்து பேணாதவன் வேறுளோர்களை – நீதிநூல்:11 106/2

மேல்

பேணாதவாறு (1)

நாரதர் மால் உட்பகையாய் நம்பர் அடி பேணாதவாறு
சொல்லி முப்புரமும் மாய்வித்தார் ஆதலினால் – முதுமொழிமேல்வைப்பு:1 136/1,2

மேல்

பேணாது (11)

பெண் விழைவார்க்கு இல்லை பெரும் தூய்மை பேணாது ஊன் – அறநெறிச்சாரம்:1 104/1
தண்டியடிகள் இரு தாள் இணை பேணாது அழிந்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 98/1
மறந்துமறந்து ஈசன் மலர் அடியை பேணாது
இறந்துஇறந்து மாலும் இடர் எய்தும் அறிந்துஅறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 87/1,2
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால் – முதுமொழிமேல்வைப்பு:1 137/3
பெற்றான் நளன் ஆக்கம் என்று கலி பேணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:17 163/1
பேணாது அழுக்கறுப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:17 163/4
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால் – திருக்குறள்குமரேசவெண்பா:90 892/3
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர் – திருக்குறள்குமரேசவெண்பா:91 902/3
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/3
பேணாது போன உனை பேணி ஏன் தெய்வானை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1283/1
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1283/3

மேல்

பேணாமல் (1)

கண்ட செல்வம் பேணாமல் காடவர்கோன் கல்வியை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:40 400/1

மேல்

பேணாமை (2)

பேணாமை பேதை தொழில் – திருக்குறள்குமரேசவெண்பா:84 833/4
பேணாமை பேணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 866/4

மேல்

பேணார் (3)

நிறையும் நெடு நாணும் பேணார் பிறிதும் ஒரு – நீதிநெறிவிளக்கம்:1 83/2
செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார்
சொல்வதை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் பேணார் – விவேகசிந்தாமணி:1 51/1,2
சொல்வதை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் பேணார்
வெல்வதே கருமம் அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் – விவேகசிந்தாமணி:1 51/2,3

மேல்

பேணாரேல் (1)

பெறலரும் பேர் பெற்றும் ஒருவரையொருவர் பேணாரேல் பெருமை என்னோ – நீதிநூல்:12 117/2

மேல்

பேணான் (5)

பெரும் தக்கவரையும் பேணான் பிரிந்து போய் – அறநெறிச்சாரம்:1 166/2
இயைந்து பேணான் என எண்ணி நீக்குவர் – நீதிநூல்:11 106/3
கண்ட மன் உயிரை பேணான் காண் ஒணா பரன்-பால் நேசம் – நீதிநூல்:47 561/1
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின் – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/3
பீடு உடைய ஔவையையும் பேணான் அசிதன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:98 976/1

மேல்

பேணி (19)

பீரம் பேணி பாரம் தாங்கும் – கொன்றைவேந்தன்:1 62/1
பேணி தமரா கொளல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 45/4
பேணி கொள்வோம் என்னும் நோக்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 98/4
பிறர் பொருள் வவ்வாதவரை பேணி பிறர் தம்மை – நன்மதிவெண்பா:1 71/2
பெற்றியார் பேணி கொளல் – முதுமொழிமேல்வைப்பு:1 77/4
பேணி தமரா கொளல் – முதுமொழிமேல்வைப்பு:1 78/4
கொண்டானை பேணி குல மங்கையர்க்கரசி – திருக்குறள்குமரேசவெண்பா:6 56/1
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற – திருக்குறள்குமரேசவெண்பா:6 56/3
வாணிகம் செய் ஏலேலர் மற்றவையும் பேணி அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/1
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தம போல் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/3,4
கொண்டான் பின் பேணி குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 442/2
பெற்றியார் பேணி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 442/4
பேணி தமரா கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 443/4
வென்றி மிகு சோதனன் ஏன் வெல் படையை பேணி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 761/1
பேணி நின்ற துச்சீலன் பேதன் இவர் பின் பிரிவில் – திருக்குறள்குமரேசவெண்பா:84 839/1
பேணி புணர்பவர் தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:92 917/4
பேணி கொள்வேம் என்னும் நோக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:98 976/4
கண்ட பசப்பு ஊர்ந்திருந்தும் காந்திமதி பேணி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/1
பேணாது போன உனை பேணி ஏன் தெய்வானை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1283/1

மேல்

பேணிக்கொளலும் (2)

பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 64/3
பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:64 633/3

மேல்

பேணியார் (1)

பேணியார் பெட்ப செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/4

மேல்

பேணியே (1)

பிறர் புகழினை கைம்மாற்றை பேணியே உதவிசெய்வோர் – நீதிநூல்:39 388/1

மேல்

பேணின் (1)

சினத்தை பேணின் தவத்திற்கு அழகு – கொன்றைவேந்தன்:1 28/1

மேல்

பேணுகின்ற (1)

கோணாதது என்னே குமரேசா பேணுகின்ற
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ் இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/2,3

மேல்

பேணுதல் (1)

குலமகட்கு அழகு தன் கொழுநனை பேணுதல் – வெற்றிவேற்கை:1 12/1

மேல்

பேணுதலால் (1)

பிள்ளையினும் கைத்தொண்டு பேணுதலால் அப்பருக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 25/1

மேல்

பேணுதலும் (1)

பின் அதனை பேணுதலும் துன்பமே அன்னது – நீதிவெண்பா:1 46/2

மேல்

பேணுதற்கே (1)

ஈட்டும் பொருளை எல்லாம் ஏன் விருந்தை பேணுதற்கே
கூட்டினர் அப்பூதி குமரேசா நாட்டில் – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/1,2

மேல்

பேணும் (1)

பேணுவார் நாளும் பெறும் பயனை பேணும்
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை – முதுமொழிமேல்வைப்பு:1 11/2,3

மேல்

பேணுவார் (1)

பேணுவார் நாளும் பெறும் பயனை பேணும் – முதுமொழிமேல்வைப்பு:1 11/2

மேல்

பேத (1)

பெற்றது அவர் சைவத்து பேத சமாதி அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 4/1

மேல்

பேதங்களாம் (1)

பேர் இரவியையே சுற்ற கால பேதங்களாம் இ – நீதிநூல்:47 539/3

மேல்

பேதம் (6)

என் உருவை படத்து எழுதி இது நானே பேதம் இலை – நீதிநூல்:12 144/1
சமம் அலால் பேதம் இல்லை தரித்திரர் அறத்தோர் ஆயின் – நீதிநூல்:14 184/2
பேதம் இன்றி மற்றொன்று நாம் ஊரும் வாகனமாம் பின்னும் ஆதி – நீதிநூல்:40 412/3
இயல் செல்வர் மிடியாளர் நல்லார்கள் அல்லார் என் பேதம் ஓரார் யாவர்க்கும் இனியார் – நீதிநூல்:47 583/3
பேதம் அற கூடி பிரிவது போல் தீது இன்று – முதுமொழிமேல்வைப்பு:1 66/2
பேதையரும் நாவலரும் பேதம் இன்றியே பொருந்த – முதுமொழிமேல்வைப்பு:1 110/1

மேல்

பேதம்செய்து (1)

பேதம்செய்து உழல்கின்றாய் நெஞ்சமே உனை போலும் பித்தர் உண்டோ – நீதிநூல்:40 411/4

மேல்

பேதமதையே (1)

நேயர் பற்சர் தீனர் நிதியோர் என சொல் பேதமதையே நினைத்து அநீதிபுரிதல் – நீதிநூல்:21 258/1

மேல்

பேதமையாய் (1)

பின்கொடுத்தல் ஆவணத்தில் பேதமையாய் மின்கனகம் – நன்மதிவெண்பா:1 86/2

மேல்

பேதன் (1)

பேணி நின்ற துச்சீலன் பேதன் இவர் பின் பிரிவில் – திருக்குறள்குமரேசவெண்பா:84 839/1

மேல்

பேதாய் (1)

பெறும் பூரிக்கின்ற முலை பேதாய் பல்கால் – நன்னெறி:1 23/3

மேல்

பேதித்தும் (1)

பெற்ற தாய் ஆக்கம் உற பேதித்தும் கன்னன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:12 113/1

மேல்

பேதுற்று (1)

பெண்டிரை பேதுற்று கொன்றானும் பண்டிதனாய் – அறநெறிச்சாரம்:1 62/2

மேல்

பேதை (26)

பெருமிதம்கொள்ளேம் அறியா பேதை எனும் நம் துணைவி – நீதிநூல்:12 143/2
அழல் போல் நெஞ்சை சுடும் பயத்தோடு அயல் ஆடவரை ஒரு பேதை
தழுவி இன்பமுறல் மதமா தான் உண்டு அகல் வாயிடை ஒழுகும் – நீதிநூல்:13 168/2,3
பெரியார் முன் தன்னை புகழ்ந்து உரைத்த பேதை
தரியாது உயர்வு அகன்று தாழும் தெரியாய்-கொல் – நன்னெறி:1 37/1,2
பேதை பெரும் கெழீ நட்பின் அறிவுடையார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 82/3
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்ற கடை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 84/3,4
பேதை பெரு மழை கண் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/4
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/3,4
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/3
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ – விவேகசிந்தாமணி:1 107/3
பிறனை உன்னும் பேதை ஒரீஇ பீதி இலா கையாள் – நன்மதிவெண்பா:1 74/1
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/3
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த – திருக்குறள்குமரேசவெண்பா:61 603/3
பேதை அசமுகி-தன் பேருறவால் சூரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 816/1
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:82 816/3
பேணாமை பேதை தொழில் – திருக்குறள்குமரேசவெண்பா:84 833/4
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும் – திருக்குறள்குமரேசவெண்பா:84 835/3
பேதை வினை மேற்கொளின் – திருக்குறள்குமரேசவெண்பா:84 836/4
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்றக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/3,4
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 838/3
குழாஅத்து பேதை புகல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 840/4
பேடியினும் பேதை என பேசினார் பெண் விழைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:91 907/1
பைம் தொடி பேதை நுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/4
பேதை பெரு மழை கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1239/4
பேதை என்று ஏன் நெஞ்சை பிரபாவதி இகழ்ந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1242/1
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/4
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/3,4

மேல்

பேதைக்கு (5)

விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு – நல்வழி:1 35/3,4
பேதைக்கு அமர்த்தன கண் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1084/4
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/3,4
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1136/4
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
பெண் நிறைந்த நீர்மை பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:128 1272/3,4

மேல்

பேதைமதி (2)

பேதைமதி உற்றனை என்று எனை இகழும் பெருந்தகை என் – நீதிநூல்:12 142/1
ஆதலின் நான் பேதைமதி ஆயினன் என்பது நிசமால் – நீதிநூல்:12 142/4

மேல்

பேதைமை (19)

பேதைமை அகற்று – ஆத்திசூடி:1 84/1
பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் – கொன்றைவேந்தன்:1 66/1
பின்னை அறிவென் என்றல் பேதைமை தன்னை – அறநெறிச்சாரம்:1 21/2
பிறர்க்கு இன்னா செய்தலின் பேதைமை இல்லை – அறநெறிச்சாரம்:1 83/1
பெருக்கமா உணர்ந்தோர் இலை தருக்குறல் பேதைமை நீர் நெஞ்சே – நீதிநூல்:28 312/4
பித்திகை ஏறி செல்லும் பேதைமை நிகர்க்கும் மாதோ – நீதிநூல்:38 381/4
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/3
உள் பேதைமை அகற்று – ஆத்திசூடிவெண்பா:1 83/4
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – முதுமொழிமேல்வைப்பு:1 138/4
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:15 141/3
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/3
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:42 417/3
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது – திருக்குறள்குமரேசவெண்பா:43 428/3
பேதைமை எல்லாம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 507/4
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க – திருக்குறள்குமரேசவெண்பா:81 805/3
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/3
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/3
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/4
பேதைமை வாழி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1242/4

மேல்

பேதைமைக்கு (1)

பெற்றிமை பேதைமைக்கு உண்டே பெரும் பாவம் – நீதிநெறிவிளக்கம்:1 83/3

மேல்

பேதைமையா (1)

பேதைமையா கொள்ளை விரும்பேல் – ஆத்திசூடிவெண்பா:1 41/4

மேல்

பேதைமையார் (1)

பெரு மானி ஊக்கம் அற்று பேதைமையார் கீழின் – நன்மதிவெண்பா:1 91/1

மேல்

பேதைமையுள் (1)

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/3

மேல்

பேதையருக்கு (1)

சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும் எனவே சொல்லினாலும் – விவேகசிந்தாமணி:1 88/3

மேல்

பேதையரும் (1)

பேதையரும் நாவலரும் பேதம் இன்றியே பொருந்த – முதுமொழிமேல்வைப்பு:1 110/1

மேல்

பேதையரை (1)

பேதையரை கண்டால் பெரியோர் வழி விலகி – நீதிவெண்பா:1 37/1

மேல்

பேதையாய் (1)

பண்டு நளன் பேதையாய் பார் இழந்தான் புட்கரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/1

மேல்

பேதையார் (8)

ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
கேண்மை ஒரீஇ விடல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 80/3,4
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 84/3
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண் – முதுமொழிமேல்வைப்பு:1 129/3
நின்றாரின் பேதையார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 142/4
பின் நீர பேதையார் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 782/4
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
கேண்மை ஒரீஇ விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:80 797/3,4
பேதையின் பேதையார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 834/4
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:84 839/3

மேல்

பேதையின் (1)

பேதையின் பேதையார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 834/4

மேல்

பேதையும் (3)

பின்பு அவள் பாரா பேதையும் பதரே – வெற்றிவேற்கை:1 69/2
பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே – வெற்றிவேற்கை:1 70/2
பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே – வெற்றிவேற்கை:1 71/2

மேல்

பேதையே (1)

பேசில் அலை சுவறும் பேதையே பெண் பலர் தாம் – நீதிவெண்பா:1 31/3

மேல்

பேதையேன் (1)

மூதுணர்ந்தோர் ஓது சில மூதுரையை பேதையேன்
நீதிவெண்பா ஆக நிகழ்த்துவேன் ஆதி பரன் – நீதிவெண்பா:0 1/1,2

மேல்

பேய் (11)

அறாது பேய் சுரைக்காய் – வெற்றிவேற்கை:1 28/2
பிள்ளை பேய் பித்தன் பிணியாளன் பின்நோக்கி – அறநெறிச்சாரம்:1 5/1
மதமொடுமே அடித்தல் சாரூப சாயுச்சியம் என்றாள் மயல் பேய் கொண்டாள் – நீதிநூல்:12 123/3
வெருட்சியுளோர்க்கு எங்கணும் பேய் உரு தோன்றும் எழில் முகத்தை விகற்பம் ஆக்கி – நீதிநூல்:32 343/1
உண்டி விலங்கு இன்பதுன்பம் பகை அச்சம் ஊர்வன பேய் உலகில் இன்னும் – நீதிநூல்:41 428/3
மலர் வாளி விடுத்தனன் சேர் எனை என்ன நெருங்கி வழிமறித்தாள் அ பேய்
கலவி-தனக்கு அஞ்சி மீண்டு ஓடினேன் அவள் சுதையை கண்டிலேனே – நீதிநூல்:44 504/3,4
தொண்டராம் பேய் சமணர் சோமேசா மிண்டும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 98/2
பேய் வாழும் சுடுகாட்டை பெருக்கி தள்ளி பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடது ஆமோ – விவேகசிந்தாமணி:1 14/2
பேய் பகை பிள்ளைதானும் பெருமை நூல் கல்லாவிட்டால் – விவேகசிந்தாமணி:1 78/3
பேய் கொண்டாலும் கொளலாம் பெண் கொள்ளல் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 85/4
குழந்தை என்று மாயனை பேய் கொல்ல முலைப்பால் ஈந்து – ஆத்திசூடிவெண்பா:1 98/1

மேல்

பேய்கள் (1)

பெறும் கதி கண்டும் தேறார் பேய்கள் அறிந்த – முதுமொழிமேல்வைப்பு:1 132/2

மேல்

பேய்களுக்கு (1)

பேய்களுக்கு அஞ்சேல் – புதிய-ஆத்திசூடி:1 72/1

மேல்

பேய்ப்பிறப்பை (1)

பண்டு ஒன்றும் ஈயா பதுமன் பின் பேய்ப்பிறப்பை
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:101 1002/1,2

மேல்

பேயரேனும் (1)

பெண்டுகள் சொல்கேட்கின்ற பேயரேனும் குணம் மூட பேடி லோபர் – விவேகசிந்தாமணி:1 98/1

மேல்

பேயன் (1)

பெரியோர்கள் முன் நின்று மரத்தை போலும் பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும் – விவேகசிந்தாமணி:1 20/3

மேல்

பேயினும் (1)

பேயினும் கொடிய அன்னார் பிழைக்குமாறு எவன்-கொல் அம்மா – நீதிநூல்:45 518/4

மேல்

பேயே (2)

இசிவு கொண்டு சாங்காலத்து எப்படி நீ அறம் புரிவாய் இதய பேயே – நீதிநூல்:43 449/4
உரிய அறம் புரியாமல் உடலினை நீ ஓம்புகின்றாய் உள்ள பேயே – நீதிநூல்:43 458/4

மேல்

பேயை (1)

குட முலையாம் கூற்று உதைத்து தாய்க்கிழவி எனும் பேயை கொன்று அன்னார் வாழ் – நீதிநூல்:44 487/3

மேல்

பேயோ (1)

தான் உறு விலங்கை கொல்வோன் தருமனோ பேயோ அம்மா – நீதிநூல்:45 515/4

மேல்

பேர் (41)

விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கு ஆகாது அளவு இன்றி – மூதுரை-வாக்குண்டாம்:1 11/2,3
பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேர் உலகில் – நல்வழி:1 18/1
அஞ்சு பேர் கூலியை கைக்கொள்ள வேண்டாம் – உலகநீதி:1 11/1
உறுதியும் அல்லவும் நாள் பேர் மர பேர் – அறநெறிச்சாரம்:1 207/3
உறுதியும் அல்லவும் நாள் பேர் மர பேர்
இறுதியில் இன்ப நெறி – அறநெறிச்சாரம்:1 207/3,4
தப்பிய பின்றை தம் பேர் ஒழித்து அப்பால் – அறநெறிச்சாரம்:1 210/2
பேர் இறையான் உண் பெயரில் பின் சிறக்குமோரும் – அறநெறிச்சாரம்:1 226/2
நன்னெறி வழுவா மன்னவன்-தனக்கு நாடு எலாம் பேர் அரண் உலகின் – நீதிநூல்:4 44/2
பெறலரும் பேர் பெற்றும் ஒருவரையொருவர் பேணாரேல் பெருமை என்னோ – நீதிநூல்:12 117/2
உள்ள பேர் அவமானத்தை உரைப்பது என் உளமே – நீதிநூல்:17 211/4
உகந்த பேர் உரிமை ஈங்கு ஒருவர்க்கு இல்லையால் – நீதிநூல்:18 224/4
எனது உனது என ஒரு பொருட்கு இரண்டு பேர்
சினமொடு வாதித்தோர் தீயன்-பால் செலின் – நீதிநூல்:21 251/1,2
குற்றம் மேவிட நிதி கோடி பேர் கையில் – நீதிநூல்:21 253/3
பெட்புற புவியில் செருக்குதல் பெருமை அன்று ஒளிர் பேர் உடல் – நீதிநூல்:29 320/2
புண்ணியம் ஏதும் இல்லான் பூண்ட பேர் எழில் உடம்பே – நீதிநூல்:29 321/4
நாவையே கடித்தது என பல் தகர்க்கும் பேர் உளரோ நடக்கும் வேளை – நீதிநூல்:32 338/1
காவை ஆர் உலகம் எனும் பேர் உடலின் அவயவம் போல் கலந்த சீவர் – நீதிநூல்:32 338/3
உள்ள நீரையும் இழக்கும் உண்மை போல் பேர் அகட்டின் – நீதிநூல்:36 363/2
பேர் இலான் தற்புகழ் பிடித்து இழுத்து அரு – நீதிநூல்:37 371/3
ஆட்டி இத்தனை பேர் பணிகொளும் நாம் அன்பு இலாது இருப்பது தகாது உளமே – நீதிநூல்:39 392/4
எத்தனை பேர் கையில் முன்னம் இ பொருள்தான் இருந்தது அவர் எல்லாம் தத்தம் – நீதிநூல்:40 414/1
சத்தம் இன்றி உனை மோசம்செய்து அனந்தம் பேர் கரத்தில் சாரும் சொன்னேன் – நீதிநூல்:40 414/3
ஒத்த துகில் வேண்டும் என எத்தனை பேர் முயன்றாலும் உறுமோ நெஞ்சே – நீதிநூல்:43 450/4
பேருலகில் உடைந்தது என அழுவது அன்றி நமக்கு இரங்கும் பேர் இங்கு உண்டோ – நீதிநூல்:43 459/3
ஒரு மாது சோதரர் ஐவரை சேர்ந்து கன்னியர் என்று உயர் பேர் கொண்டார் – நீதிநூல்:44 499/2
மதி படைத்து தமனிய பேர் தான் படைத்த விதிக்கு இணை யார் மகிப என்றாள் – நீதிநூல்:44 500/4
பேர் இரவியையே சுற்ற கால பேதங்களாம் இ – நீதிநூல்:47 539/3
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/3
யோசனை கந்தியினை காண்டலும் பேர் ஓகைகொண்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 129/1
காத வழி பேர் இலார் கழுதை என பாரில் உள்ளோர் கருதுவாரே – விவேகசிந்தாமணி:1 93/4
நங்கையர் சொல்கேட்பது எல்லாம் கேடு வரும் பேர் உலகோர் நகைப்பர் தாமே – விவேகசிந்தாமணி:1 117/4
பேர் பரவும் புன்னைவன பேரரசே எவ்வகையால் – ஆத்திசூடிவெண்பா:1 8/3
பேர் ஆரும் தந்தை தாய் பேண் – ஆத்திசூடிவெண்பா:1 20/4
ஈசன் வரமும் சிதைந்தே எய்திய பேர் ஆக்கமும் போய் – ஆத்திசூடிவெண்பா:1 57/1
கழி பேர் இரையான்-கண் நோய் என்று உள முதுநூல் – ஆத்திசூடிவெண்பா:1 90/2
சீர் கொண்ட வெண்பாவில் செப்புவாம் பேர் கொண்ட – நன்மதிவெண்பா:1 1/2
வான் நீர் இலாமையினால் மாதவரும் அத்திரி பேர்
கோனும் ஏன் நொந்தார் குமரேசா ஊனம் இலா – திருக்குறள்குமரேசவெண்பா:2 20/1,2
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/3
பெண் தகையான் பேர் அமர் கட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1083/4
ஊர் உரைத்த பேர் அலர்தான் உற்றவுடன் சங்கரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/1
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/3

மேல்

பேர்-தம் (1)

சூட்டி வைகலும் ஆயிரம் பேர்-தம் துணை இலாது உயிர் உயல் நமக்கு அரிதாம் – நீதிநூல்:39 392/3

மேல்

பேர்கள் (5)

மாயமுற்ற பேர்கள் சொலையே மதித்து அடாத பக்க வாதம் உற்று நீதி தவிர்தல் – நீதிநூல்:21 258/2
வந்த பேர்கள் ஆயினும் மற்று உளோர்கள் ஆயினும் – நீதிநூல்:47 599/3
மதி தனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தை பாரார் – விவேகசிந்தாமணி:1 5/3
நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடை ஆவாரே – விவேகசிந்தாமணி:1 15/4
மன்னராய் இருந்த பேர்கள் வகை கெட்டுப்போவார் ஆகில் – விவேகசிந்தாமணி:1 25/3

மேல்

பேர்கின்றதாகும் (1)

பேர்கின்றதாகும் பிறப்பு – அறநெறிச்சாரம்:1 191/4

மேல்

பேர்த்து (6)

பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளல் ஆகா – அறநெறிச்சாரம்:1 70/1
பேர்த்து ஊன்றலாகா பெரும் துன்பம் கண்டாலும் – அறநெறிச்சாரம்:1 126/3
பெற்றி புணை_அன்னார் பேர்த்து உண்ணா விட்டக்கால் – அறநெறிச்சாரம்:1 174/3
பேர்த்து ஈண்டு வாரா நெறி – அறநெறிச்சாரம்:1 208/4
தடுத்தல் அரிதோ தடம் கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு – நன்னெறி:1 8/3,4
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/4

மேல்

பேர்படைத்த (1)

பேர்படைத்த சேரர் பெருமான் போல் பார் மிசையின் – முதுமொழிமேல்வைப்பு:1 93/2

மேல்

பேர்படைத்தும் (1)

பித்தன் என தமக்கு பேர்படைத்தும் எந்தைபிரான் – முதுமொழிமேல்வைப்பு:1 30/1

மேல்

பேர (1)

மந்தர நிலைகள் பேர மறுகு அயல் வறுமை ஆகும் – விவேகசிந்தாமணி:1 125/2

மேல்

பேரண்டங்களை (1)

பெருமகனை உன்னை என்னை பேரண்டங்களை அமைத்தான் – நீதிநூல்:12 148/3

மேல்

பேரண்டம் (1)

அண்ட பேரண்டம் எல்லாம் அளந்து அறி விழியும் கந்தம் – நீதிநூல்:47 530/1

மேல்

பேரணி (1)

பேரணி உடையமேனும் பிழைக்குமாறு எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:3 27/4

மேல்

பேரரசே (1)

பேர் பரவும் புன்னைவன பேரரசே எவ்வகையால் – ஆத்திசூடிவெண்பா:1 8/3

மேல்

பேரரசை (1)

தள்ள அரிய பேரரசை தாய் தந்தும் ஏன் பரதன் – திருக்குறள்குமரேசவெண்பா:96 954/1

மேல்

பேரருளால் (1)

யார் அவன் என்று எண்ணி அறிந்தார்-கொல் பேரருளால்
பார்வை என மாக்களை முன் பற்றி பிடித்தற்காம் – முதுமொழிமேல்வைப்பு:1 191/2,3

மேல்

பேரழகு (1)

பேரழகு வாய்ந்திருந்தும் பெண் வழியில் கேசன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/1

மேல்

பேரழகுதான் (1)

பேரழகுதான் விரும்பும் பெண் – நீதிவெண்பா:1 81/4

மேல்

பேரழகே (1)

பேரழகே சோமேசா தண்டா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 131/2

மேல்

பேரழகை (1)

தன் அரிவை பேரழகை தன் முன்றில் துன்ன அரிய – நன்மதிவெண்பா:1 50/2

மேல்

பேரறிஞர் (1)

பேரறிஞர் தாக்கும் பிறர் துயரம் தாங்கியே – நன்னெறி:1 31/1

மேல்

பேரறிவாம் (1)

சந்திரனே புன்னைவன தாடாளா பேரறிவாம்
புந்தியினில் வித்தை விரும்பு – ஆத்திசூடிவெண்பா:1 100/3,4

மேல்

பேரறிவாளன் (2)

பேரறிவாளன் திரு – முதுமொழிமேல்வைப்பு:1 37/4
பேரறிவாளன் திரு – திருக்குறள்குமரேசவெண்பா:22 215/4

மேல்

பேரறிவினோடு (1)

சகம்-அதனில் பேரறிவினோடு வாணிபம்செய்யும் சமர்த்தர் உண்டோ – நீதிநூல்:44 496/4

மேல்

பேரன்பு (1)

பாரி கன்னன் ஆதியரை பல்லோரும் பேரன்பு
கூர உரைப்பானேன் குமரேசா பாரில் – திருக்குறள்குமரேசவெண்பா:24 232/1,2

மேல்

பேரா (5)

பேரா பெருமூச்செறிந்து – நீதிநெறிவிளக்கம்:1 33/4
வெகுளினும் வாய் வெரீஇ பேரா கவுள் மதத்த – நீதிநெறிவிளக்கம்:1 44/2
பேரா இடும்பை தரும் – முதுமொழிமேல்வைப்பு:1 137/4
பேரா இயற்கை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 370/4
பேரா இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:90 892/4

மேல்

பேராசை (1)

பேராசை தவிர் – இளையார்-ஆத்திசூடி:1 69/1

மேல்

பேராண்மை (7)

பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/3
பாரே அகன்று பட்ட பாரதம் பார் பேராண்மை
வற்றாத புன்னைவன மா கடலே மிக்க செல்வம் – ஆத்திசூடிவெண்பா:1 48/2,3
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 29/3
பிறர்க்கு உண்டோ இல்லை அவர் பேராண்மை குன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 73/1
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:15 148/3
பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/3
பேராண்மை வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/4

மேல்

பேராது (1)

நேர்ந்து புலத்தியனார் நின்ற நிலை பேராது
கூர்ந்து இருந்தார் என்னே குமரேசா ஆர்ந்து போய் – திருக்குறள்குமரேசவெண்பா:99 989/1,2

மேல்

பேராழி (1)

வதிரர் பேராழி ஓசை மாறியது என்னல் போலும் – நீதிநூல்:2 14/2

மேல்

பேராழியிடை (1)

நலம் நீங்கி நரகம் எனும் பேராழியிடை வீழ்ந்து நலிவோம் நெஞ்சே – நீதிநூல்:43 455/4

மேல்

பேரான (2)

பேரான காரியத்தை தவிர்க்க வேண்டாம் – உலகநீதி:1 8/5
பேரான முத்தி பெற விரும்பல் ஆர் அமிர்த – நீதிவெண்பா:1 95/2

மேல்

பேரானந்த (1)

மேவரும் பேரானந்த வெள்ளமதில் தோய்வாயே – நீதிநூல்:47 577/4

மேல்

பேரிகை (1)

தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி இடக்கை – விவேகசிந்தாமணி:1 134/1

மேல்

பேரிட்டு (1)

பிறர்க்கு இன்னாது என்று பேரிட்டு தனக்கு இன்னா – அறநெறிச்சாரம்:1 83/2

மேல்

பேரிடர்கள் (1)

சூழ்ந்த பேரிடர்கள் பாவம் துஞ்சி மண்ணாதல் அள்ளல் – நீதிநூல்:14 186/2

மேல்

பேரிடியை (1)

கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ இது செய்யில் குற்றம் உண்டோ – நீதிநூல்:13 157/4

மேல்

பேரிரையான்-கண் (1)

கழி பேரிரையான்-கண் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:95 946/4

மேல்

பேரின்ப (5)

பேரின்ப மா கடல் ஆடுவார் வீழ்பவோ – நீதிநெறிவிளக்கம்:1 87/3
வைத்த வாஞ்சையை மாற்றவும் பேரின்ப வாழ்வில் – நீதிநூல்:42 443/2
சுற்றி அனுதினம் அலைவாய் நித்திய பேரின்ப சுகம் தோய வேண்டி – நீதிநூல்:43 454/2
முத்தர் பேரின்ப வாழ்வை மொழி மனக்கு அகோசரத்தை – நீதிநூல்:47 549/1
பல வளம் உளவேல் அன்னான் பத்தர்கள் பெறும் பேரின்ப
தல வளம் எற்றோ பாவ சலதியுள் மூழ்குவோர் சார் – நீதிநூல்:47 562/2,3

மேல்

பேரின்பத்துக்கு (1)

பிறை என்ன வளருமோ இயமன் வர அஞ்சுவனோ பேரின்பத்துக்கு
உறையுளோ அவர் கிரகம் இவை எலாம் மனமே நீ உன்னுவாயே – நீதிநூல்:40 408/3,4

மேல்

பேரின்பம் (3)

கூடினர் பேரின்பம் குமரேசா நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:1 3/2
கண்ட மயல் நீங்க கலிங்கபதி பேரின்பம்
கொண்டான் முன் என்னே குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:36 352/1,2
ஊடுதலால் பேரின்பம் உற்றார் ஏன் நீலகண்டர் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1326/1

மேல்

பேருக்கு (1)

பெருகு அபத்தம் கலந்து பல பேருக்கு உரைக்க இவ்வாறே – நீதிநூல்:22 265/2

மேல்

பேருண்டி (1)

கனிவொடும் அழைக்கும் தூதாம் கழிய பேருண்டி மாதோ – நீதிநூல்:36 362/4

மேல்

பேரும் (6)

பேரும் புகழும் பெருவாழ்வும் ஊரும் – நல்வழி:1 21/2
காதலித்து கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்-தோறும் களிப்பினோடு – உலகநீதி:1 13/5,6
பெரு வெம் பிணியாளன் மற்றோர் பிணி பேரும் வண்ணம் – நீதிநூல்:7 66/1
தாக்கற்கு பேரும் தகைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 49/4
பேரும் என்று நன்மதியே பேசு – நன்மதிவெண்பா:1 37/4
தாக்கற்கு பேரும் தகைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:49 486/4

மேல்

பேருலகில் (1)

பேருலகில் உடைந்தது என அழுவது அன்றி நமக்கு இரங்கும் பேர் இங்கு உண்டோ – நீதிநூல்:43 459/3

மேல்

பேருவகை (1)

வள்ளல் இராமன் திருவால் வையம் எல்லாம் பேருவகை
கொள்ள நின்றது என்னே குமரேசா எள்ளல் இலா – திருக்குறள்குமரேசவெண்பா:22 215/1,2

மேல்

பேருறவால் (1)

பேதை அசமுகி-தன் பேருறவால் சூரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 816/1

மேல்

பேரூர்க்கு (1)

அளவு_இல் திருவிற்கு உயிர் ஓர் ஆய்_இழை பேரூர்க்கு
வள வணிகன் இன் உயிராம் வாய்த்த களமத்தின் – நன்மதிவெண்பா:1 82/1,2

மேல்

பேரை (2)

இன்சொலுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் தானே – உலகநீதி:1 11/7,8
தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்த பேரை
மீளவே கொடுக்கினாலே வெய்துற கொட்டலே போல் – விவேகசிந்தாமணி:1 63/1,2

மேல்

பேரையும் (1)

அத்தனை பேரையும் அடுதல் போலுமே – நீதிநூல்:18 221/4

மேல்

பேழை (1)

வெறும் பேழை தாழ்க்கொளீஇ அற்று – அறநெறிச்சாரம்:1 168/4

மேல்

பேற்றின் (1)

விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 162/3

மேல்

பேறலின் (1)

பொற்பு அறிவு இல்லாத பல புத்திரரை பேறலின் ஓர் – நீதிவெண்பா:1 54/1

மேல்

பேறா (2)

தோளினில் தூக்கிவைத்து சுமந்து பேறா வளர்த்த – விவேகசிந்தாமணி:1 84/2
பெற்றாள் அநசூயை பேறா அழுக்காறாம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 162/1

மேல்

பேறாம் (1)

பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் பிறர்க்கு உதவி – நன்னெறி:1 4/2

மேல்

பேறு (6)

பேறு அழிவு சாவு பிறப்பு இன்பம் துன்பம் என்று – அறநெறிச்சாரம்:1 150/1
பிணியினார்க்கு எக்களிப்பாம் பேறு இலார்க்கு அன்னதாம் உள் – நீதிநூல்:43 468/2
அழுது இரத்தலின் பேறு இல்லை ஆதலின் மௌனம் நன்றால் – நீதிநூல்:47 526/4
பின் செயலும் ஈதலுற பேறு பெற்றான் தன் செயல் பொன் – ஆத்திசூடிவெண்பா:1 55/2
நன் கலம் நன் மக்கள் பேறு – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/4
மக்கள் பேறு அல்ல பிற – திருக்குறள்குமரேசவெண்பா:7 61/4

மேல்

பேறே (1)

தீயகம் போம் மெய் துறும் காண் தேவர் பெறும் பேறே – நீதிநூல்:47 576/4

மேல்

பேன் (1)

மூக்கதனில் சளி தலையில் பேன் வெயர்வை மலசலங்கள் மூளும் நாற்றம் – நீதிநூல்:29 319/2

மேல்