நோ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோ 1
நோக்க 6
நோக்கத்தான் 1
நோக்கதனில் 1
நோக்கப்படும் 2
நோக்கம் 4
நோக்கல் 3
நோக்கல்தான் 1
நோக்கலால் 1
நோக்கா 2
நோக்காக்கால் 1
நோக்காத 4
நோக்காது 3
நோக்காமை 1
நோக்கார் 5
நோக்கால் 1
நோக்கான் 6
நோக்கி 52
நோக்கிட 1
நோக்கிடார் 1
நோக்கிடின் 2
நோக்கிய 2
நோக்கியிடில் 1
நோக்கியே 1
நோக்கில் 2
நோக்கிலேன் 1
நோக்கின் 5
நோக்கினால் 1
நோக்கினாள் 2
நோக்கினான் 1
நோக்கினீர் 1
நோக்கினும் 1
நோக்கினோம் 1
நோக்கீர் 1
நோக்கு 15
நோக்குண்டாம் 1
நோக்குதல் 2
நோக்குதலே 1
நோக்குதி 1
நோக்குபு 2
நோக்கும் 7
நோக்குவோரை 1
நோக்குறார் 1
நோகாது 1
நோகும் 1
நோதக்க 1
நோதல் 3
நோதலுற்ற 1
நோம் 1
நோம்படி 1
நோமோ 1
நோய் 101
நோய்-தனில் 1
நோய்க்கு 4
நோய்கொண்டான் 1
நோய்கொண்டானே 1
நோய்கொண்டு 1
நோய்கொள் 1
நோய்செய்த 1
நோய்செய்தார் 1
நோய்செய 1
நோய்செயும் 1
நோய்ப்பால 1
நோயர் 1
நோயா 1
நோயாம் 1
நோயின் 1
நோயினர்க்கே 1
நோயினை 1
நோயும் 1
நோயுற்ற 1
நோயுற்று 1
நோயுற்றே 1
நோயை 3
நோயோடு 1
நோலாதவர் 1
நோலாதார் 1
நோவகமாய் 1
நோவது 3
நோவர் 1
நோவல் 2
நோவற்க 1
நோவா 1
நோவார் 1
நோவு 3
நோவு-தனை 1
நோற்க 1
நோற்கிற்பவர் 1
நோற்கிற்பவர்க்கு 1
நோற்பது 2
நோற்பவர் 1
நோற்பவருக்கு 1
நோற்பவரும் 1
நோற்பார் 3
நோற்பாரின் 3
நோற்பாரை 1
நோற்றலின் 1
நோற்றார் 1
நோற்றாரை 1
நோற்றான்-கொல் 2
நோற்று 2
நோன்பால் 1
நோன்பிற்கு 2
நோன்பு 7
நோன்பும் 1
நோன்மை 5
நோன்றல் 1
நோனா 2
நோனாமே 1

நோ (1)

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/3

மேல்

நோக்க (6)

உரிமை வாள்_முகம் நோக்க ஒழிதலால் – நீதிநூல்:12 150/3
ஆடி நோக்க யான் யான்-கொல் மற்றார்-கொல் என்று அயிர்த்து – நீதிநூல்:26 295/3
தேடி நோக்க ஓர் குரூபமே கண்டு உளம் திகைத்தேன் – நீதிநூல்:26 295/4
சந்திரன் எனவே எண்ணி தையலாள் முகத்தை நோக்க
மந்தரகிரிகள் விம்மி வழிமறித்திடுதல் கண்டு – விவேகசிந்தாமணி:1 100/2,3
நோக்க குழையும் விருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:9 90/4
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
பசையினள் பைய நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1098/3,4

மேல்

நோக்கத்தான் (1)

காந்தையர் கண் கவர் நோக்கத்தான் வாய்ந்த – நீதிநெறிவிளக்கம்:1 81/2

மேல்

நோக்கதனில் (1)

நோக்கதனில் பீளை இரு செவிகளிலும் குறும்பி அனம் நுகர் வாய் எச்சில் – நீதிநூல்:29 319/1

மேல்

நோக்கப்படும் (2)

பிறன் போல நோக்கப்படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 105/4
பிறன் போல நோக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1047/4

மேல்

நோக்கம் (4)

பிரியை நோக்கம் பெரு மருந்தாம் அரோ – நீதிநூல்:12 150/4
நோக்கம் இ மூன்றும் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1085/4
உற்ற உலூபி உறு நோக்கம் தேர்ந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/1
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/3

மேல்

நோக்கல் (3)

தவன் ஆட்டி இருவரில் நற்குணமுளார் இலர் என்னும் தன்மை நோக்கல்
நவமணம் செய் முன் அன்றி பின் உன்னில் பயன் உளதோ நாவாய்-தன்னை – நீதிநூல்:12 112/1,2
நோக்கல் நன்று என்றே நுவல் – நீதிவெண்பா:1 52/4
தின்பாரை நோக்கல் – இளையார்-ஆத்திசூடி:1 42/1

மேல்

நோக்கல்தான் (1)

எண்_இரண்டும் ஒன்றும் மதி என் முகத்தாய் நோக்கல்தான்
கண் இரண்டும் ஒன்றையே காண் – நன்னெறி:1 6/3,4

மேல்

நோக்கலால் (1)

திசை முகமும் நோக்கலால் திசைமுகன் ஆனோம் வாயில் தீயாள் இட்ட – நீதிநூல்:44 486/2

மேல்

நோக்கா (2)

முன் இன்று பின் நோக்கா சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:19 184/4
ஏற்றது ஒன்றும் நோக்கா இடும்பன் ஏன் வந்து உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:87 865/1

மேல்

நோக்காக்கால் (1)

யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1094/3,4

மேல்

நோக்காத (4)

அற்றத்தை நோக்காத கண் என்ப யார்-மாட்டும் – அறநெறிச்சாரம்:1 103/3
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/3
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 29/3
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:15 148/3

மேல்

நோக்காது (3)

நிச்சலும் நோக்காது பொய் ஒரீஇ நிச்சலும் – அறநெறிச்சாரம்:1 165/2
தாங்கிடும் தாங்காது என்னும் தன்மை நோக்காது பெற்றோர் – நீதிநூல்:8 79/3
அன்பு ஒரீஇ தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/3

மேல்

நோக்காமை (1)

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1095/3

மேல்

நோக்கார் (5)

மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் – நீதிநெறிவிளக்கம்:1 52/1
முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார்
நிறையும் நெடு நாணும் பேணார் பிறிதும் ஒரு – நீதிநெறிவிளக்கம்:1 83/1,2
வியன் சினை வளைவு நோக்கார் விளைந்த தீம் கனி பறிப்போர் – நீதிநூல்:1 4/2
நயன் கொள்வது அன்றி பாவின் நவையை நோக்கார் மேலோரே – நீதிநூல்:1 4/4
மிகை நினைவு நோக்கார் செயல் – அருங்கலச்செப்பு:1 96/2

மேல்

நோக்கால் (1)

பண்டு பரவை பனி நோக்கால் சுந்தரர் நோய்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/1

மேல்

நோக்கான் (6)

வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/3
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/3,4
தன் துயரம் நோக்கான் தனை விடுத்தோர்க்கே உறுதி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 69/1
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:53 528/3
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 865/3
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:87 865/3,4

மேல்

நோக்கி (52)

தம்மின் மெலியாரை நோக்கி தமது உடைமை – நீதிநெறிவிளக்கம்:1 14/1
கற்றாரை நோக்கி கருத்து அழிக கற்றது எல்லாம் – நீதிநெறிவிளக்கம்:1 14/3
தெவ்வும் திசை நோக்கி கைதொழூஉம் அவ் வினை – நீதிநெறிவிளக்கம்:1 88/2
குரம்பை உடையார் குடி போக்கு நோக்கி
கவர்ந்து உண்ண போந்த கழுகு – அறநெறிச்சாரம்:1 125/3,4
எழுத்து எண்ணே நோக்கி இருமையும் கண்டு ஆங்கு – அறநெறிச்சாரம்:1 145/3
அன்னையே அனைய பார் அருளின் நோக்கி நல் – நீதிநூல்:24 273/2
யாவர் சார்வர் என ஆசையின் நோக்கி ஏன்றமட்டும் நலமே புரிவாரால் – நீதிநூல்:39 393/4
நாடு நீர்த்தடம் நோக்கி இத்தனை நாள் புனல் என்ன நவிலலாம் ஓர் – நீதிநூல்:41 423/2
ஏதிலார் பொருள் நோக்கி இச்சையுறல் கவர்ந்தது ஒப்பாம் எழில் மின்னாரை – நீதிநூல்:43 457/1
செவ்வையுறு பொருள் கவர்ந்த பின்னர் எனை கைவிட்ட தேனை நோக்கி
கொவ்வை வாய் மயிலே இ சினம் ஏது என்றேன் வனச கோயில் மேவும் – நீதிநூல்:44 478/1,2
மண்ணானாள் எனை நோக்கி எனக்கு ஈந்த பொருளை இனி வாங்காநின்ற – நீதிநூல்:44 479/3
தெரிவையின் நட்பு அறிவான் மாண்டு என கிடந்தேம் மாமி வந்த சிலரை நோக்கி
உரிய பாடையில் இவனை எடும் என்றாள் வீண்செலவு ஏன் உலைந்தோன் காலில் – நீதிநூல்:44 489/1,2
சாமி உனை பிரியேன் என்று உரைத்து பின் அகன்ற மின்னாள்-தன்னை நோக்கி
தோம் இலா நின் மாற்றம் திறம்பியது ஏது என்றேன் நீ தொகுப்பால் தந்த – நீதிநூல்:44 490/1,2
இனியாளை நோக்கி அத்தை சக்கிரிக்கு சொக்குத்தூள் இடுவாய் என்ற – நீதிநூல்:44 502/1
நித்தம் மருவிட உள்ளம் உவந்த மின்னை நோக்கி இது நெறியோ என்றேம் – நீதிநூல்:44 505/2
திரு எலாம் கொள்ளைகொண்டாள்-தனை நோக்கி செவ் அதர தேன் ஈ என்றேன் – நீதிநூல்:44 508/1
வண்ண மலர் அமளியின் மேல் இருக்கையில் ஓர் பரபுருடன் வரவு நோக்கி
பண் அமரும் மொழி மின்னாள் விளையாடல் போல் தன் கை பதுமத்தால் என் – நீதிநூல்:44 512/1,2
அம்பிகையை நோக்கி அளகேசன் கண் இழந்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/1
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 118/3
தூக்கு பிள்ளையார் செலவை சோமேசா நோக்கி
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 79/2,3
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 118/3
சந்திரசேனன் வரவு நோக்கி உயிர் தாங்கினளால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 127/1
பிறர் உதவி நோக்கி பிழையேல் செறி செல்வம் – நன்மதிவெண்பா:1 72/2
இவ் ஆறும் நோக்கி வணங்கார் அவிநயம் – அருங்கலச்செப்பு:1 42/1
நோக்கி துடையாது கோடல் மலம் துறத்தல் – அருங்கலச்செப்பு:1 127/1
தானம் செயல் வையா வச்சம் அறம் நோக்கி
மானம்_இல் மாதவர்க்கு நற்கு – அருங்கலச்செப்பு:1 135/1,2
கூறாமை நோக்கி குறிப்பறிவான் எஞ்ஞான்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 112/3
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:10 93/3
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறம் நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:19 189/3
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறம் நோக்கி
புன்சொல் உரைப்பான் பொறை – திருக்குறள்குமரேசவெண்பா:19 189/3,4
பூதவழுதி புகழ் நோக்கி ஏன் பலரும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 528/1
அது நோக்கி வாழ்வார் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 528/4
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/3
கோல் நோக்கி வாழும் குடி – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/4
கோக்குல சீர் கொண்டான் குமரேசா நோக்கி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:60 593/2
செல்லும் வாய் நோக்கி செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 673/4
கூறாமை நோக்கி குறிப்பறிவான் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:71 701/3
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:71 708/3
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
உற்றது உணர்வார் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:71 708/3,4
நோக்கி நின்று கேமசரி நொய்து இறைஞ்ச காதல் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1093/1
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1093/3
பீலிவளை ஏன் வளவன் பின் நோக்கி முன் மெல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:110 1094/1
தான் நோக்கி மெல்ல நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1094/4
காதலுற்றும் ஏதிலள் போல் கங்கை ஏன் நோக்கி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1099/1
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1173/3
நோதலுற்ற தன் கண்ணை நோக்கி இகழ்ந்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1175/1
வான் மதியை நோக்கி வசுமதி ஏன் வாழ்த்தினாள் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1210/1
சேவடியும் மென் தோளும் தேவகி முன் நோக்கி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/1
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/3
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/3
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
அஃது ஆண்டு அவள் செய்தது – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/3,4
சாலி புலந்து ஏனோ தன் நெஞ்சை நோக்கி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:130 1291/1

மேல்

நோக்கிட (1)

மதியம் நோக்கிட இதழ் வாடி கூம்புமால் – நீதிநூல்:12 125/3

மேல்

நோக்கிடார் (1)

நொய்யர் இவர்கள் என்று நோக்கிடார் அறிவுள்ளோரே – விவேகசிந்தாமணி:1 67/4

மேல்

நோக்கிடின் (2)

கனம் போலும் தேகம் இதை பிரித்து நோக்கிடின் மலம் நீர் கசியும் செந்நீர் – நீதிநூல்:41 421/2
மணல் ஒன்றால் மலை செய்வோனை நோக்கிடின் மா வியப்பாம் – நீதிநூல்:47 536/1

மேல்

நோக்கிய (2)

நோக்கிய சீலரை நோய் என் செய்யுமே – நீதிநூல்:42 438/4
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/3

மேல்

நோக்கியிடில் (1)

தூக்கி அழிந்தான் சூரன் சோமேசா நோக்கியிடில்
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 34/2,3

மேல்

நோக்கியே (1)

ஆண்டு எலாம் பிறர் ஆக்கம் நோக்கியே
மீண்டும்மீண்டும் நெட்டுயிர்ப்பு வீங்கினும் – நீதிநூல்:27 306/1,2

மேல்

நோக்கில் (2)

மண்டலத்தார் உயிர்வாங்க நமன் கொண்ட ஆயுதத்தின் வகுப்பை நோக்கில்
கொண்டல் இடி மின் நீர் கால் அனல் மரம் கல் மண் நோய் மீன் கொடிய புட்கள் – நீதிநூல்:41 428/1,2
ஏக்கமுற்றாள் அன்றோ இரங்கேசா நோக்கில்
பனி அரும்பி பைதல்கொள் மாலை துனி அரும்பி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/2,3

மேல்

நோக்கிலேன் (1)

காண நோக்கிலேன் நினைந்து கழற நெஞ்சு வாய் இலேன் – நீதிநூல்:12 134/2

மேல்

நோக்கின் (5)

கழுவிடாது உற நோக்குதி முகம்-தனை கஞ்சம்-தனில் நோக்கின்
எழு நிலத்திடை உன்னின் மிக்கார் உளர் என அறிவாய் ஈமத்து – நீதிநூல்:29 317/2,3
நோக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் பூ_குழலாய் – நன்னெறி:1 5/2
தூக்கி உபதேசித்தார் சோமேசா நோக்கின்
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/2,3
நடை பெருமையில்லானை நன்மதியே நோக்கின்
நடைப்பிணம் என்று எள்ளி நகும் – நன்மதிவெண்பா:1 43/3,4
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 528/3,4

மேல்

நோக்கினால் (1)

ஏக்கமுற்றார் அன்றோ இரங்கேசா நோக்கினால்
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/2,3

மேல்

நோக்கினாள் (2)

நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/3
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1093/3

மேல்

நோக்கினான் (1)

சார்ந்து மன் நோக்கினான் சாருமதி காய்ந்து முன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/1

மேல்

நோக்கினீர் (1)

யார் உள்ளி நோக்கினீர் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/4

மேல்

நோக்கினும் (1)

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/3

மேல்

நோக்கினோம் (1)

காரிகையை நோக்கினோம் மிஞ்சிய ஓர் கோவணத்தை கருதி வந்தேன் – நீதிநூல்:44 475/3

மேல்

நோக்கீர் (1)

சாக்காடும் எல்லாம் சலம் இலவாய் நோக்கீர்
பருந்துக்கு இரை ஆம் இவ் யாக்கையை பெற்றால் – அறநெறிச்சாரம்:1 118/2,3

மேல்

நோக்கு (15)

நோக்கு இருந்தும் அந்தகரா காது இருந்தும் செவிடரா நோய் இல்லாத – நீதிநூல்:40 407/1
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 110/3
பேணி கொள்வோம் என்னும் நோக்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 98/4
வாய்த்த விடம்கொடுக்கில் வாழுமே நோக்கு அரிய – நீதிவெண்பா:1 18/2
நோன்மை நன்று நன்மதியே நோக்கு – நன்மதிவெண்பா:1 74/4
நோக்கு இன்மை ஐந்து ஆம் இறப்பு – அருங்கலச்செப்பு:1 106/2
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 162/3
பேணி கொள்வேம் என்னும் நோக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:98 976/4
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/3
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/3
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/3,4
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/4
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1099/3
வார்த்தை இன்றி நோக்கு ஒன்றால் வாணன் மதனமஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:110 1100/1
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1100/3

மேல்

நோக்குண்டாம் (1)

நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு – மூதுரை-வாக்குண்டாம்:0 1/2

மேல்

நோக்குதல் (2)

நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/3
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார்-கண்ணே உள – திருக்குறள்குமரேசவெண்பா:110 1099/3,4

மேல்

நோக்குதலே (1)

காதலாய் நோக்குதலே கலந்தது ஒப்பாம் பிறர் கேட்டை கருதல் அன்னார் – நீதிநூல்:43 457/2

மேல்

நோக்குதி (1)

கழுவிடாது உற நோக்குதி முகம்-தனை கஞ்சம்-தனில் நோக்கின் – நீதிநூல்:29 317/2

மேல்

நோக்குபு (2)

மான்_அனையாள் நோக்குபு நோக்குபு வருந்தும் வல் ஏகு என்று – நீதிநூல்:12 146/2
மான்_அனையாள் நோக்குபு நோக்குபு வருந்தும் வல் ஏகு என்று – நீதிநூல்:12 146/2

மேல்

நோக்கும் (7)

கண்ணில் சொலி செவியின் நோக்கும் இறைமாட்சி – நீதிநெறிவிளக்கம்:1 27/1
தலைகீழுற செய்யினும் தீபம் விண்-தன்னை நோக்கும்
கலை தேயினும் தண் கதிர் வீசும் அ கங்குல் திங்கள் – நீதிநூல்:6 60/1,2
மேதை விலோசனமும் மேவும் இணை நோக்கும்
ஏது கலவிக்கு இரங்கேசா ஆதலால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 110/1,2
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/3
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1094/3
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1094/3
செறாஅ சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/3,4

மேல்

நோக்குவோரை (1)

மின்னை போல் இடையினாளை விழியினால் நோக்குவோரை
தின்னல் போல் முனிவு கொள்வோர் அயலவன் தேவி-தன்னை – நீதிநூல்:13 171/2,3

மேல்

நோக்குறார் (1)

கண்ணொடு நெஞ்சு உறைப்ப நோக்குறார் பண்ணொடு – நீதிநெறிவிளக்கம்:1 84/2

மேல்

நோகாது (1)

செப்புமவனும் தானே சிந்தை நோகாது அகன்று – நீதிவெண்பா:1 34/3

மேல்

நோகும் (1)

காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:112 1114/3,4

மேல்

நோதக்க (1)

நோதக்க நட்டார் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 805/4

மேல்

நோதல் (3)

நோதல் இன்றி தாம் நோவா நோன்மை அன்றோ நன்மதியே – நன்மதிவெண்பா:1 18/3
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் – திருக்குறள்குமரேசவெண்பா:35 341/3,4
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/3

மேல்

நோதலுற்ற (1)

நோதலுற்ற தன் கண்ணை நோக்கி இகழ்ந்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1175/1

மேல்

நோம் (1)

நெஞ்சு நோம் என்று தலை துமிப்பான் தண்ணளி போல் – நீதிநெறிவிளக்கம்:1 70/3

மேல்

நோம்படி (1)

நோம்படி அவர் குறை நுவலுவார்களோ – நீதிநூல்:22 259/4

மேல்

நோமோ (1)

திருத்தி மண்ணில் செந்நெல் விதைத்து அரிசி ஆக்கி தீம் சோறு அட்டு ஊட்டில் உண்ண செவ் வாய் நோமோ
அருத்தமொடும் இலக்கணங்கள் இலக்கியங்கள் அரிய நூல் பல முன்னோர் அளித்ததாலே – நீதிநூல்:28 314/2,3

மேல்

நோய் (101)

வேங்கை வரி புலி நோய் தீர்த்த விடகாரி – மூதுரை-வாக்குண்டாம்:1 15/1
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரை கொண்டாடும் வீடு – நல்வழி:1 3/3,4
பொல்லா புழு மலி நோய் புன் குரம்பை நல்லார் – நல்வழி:1 7/2
வெங்காரம் வெய்து எனினும் நோய் தீர்க்கும் மெய் பொடிப்ப – நீதிநெறிவிளக்கம்:1 58/3
மெய் நடுங்க உள் நடுங்கும் நோய் – நீதிநெறிவிளக்கம்:1 76/4
நினைத்து ஒழிய நெஞ்சில் நோய் இல் – அறநெறிச்சாரம்:1 80/4
நீக்க அரு நோய் மூப்பு தலைப்பிரிவு நல்குரவு – அறநெறிச்சாரம்:1 119/1
பல் நோய் கவற்ற பரிந்து குறை என்னை – அறநெறிச்சாரம்:1 128/3
எண்ணரு நோய் துன்பம் அவர்க்கு – அறநெறிச்சாரம்:1 153/4
ஆயுள்நாள் சில வெம் காமம் அனந்தர் நோய் சோம்பு கொண்ட – நீதிநூல்:3 30/1
மத்தித்து அருள் பண்டிதர் போல் மற நோய் தவிர்ப்பான் – நீதிநூல்:6 61/2
உவர் ஆழி நடுவில் நன்றன்று என கைவிட தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து – நீதிநூல்:12 112/3
விழி மிசை நல் மருந்து இடாது அழல் பிழம்பை விடில் அ நோய் விலகும்-கொல்லோ – நீதிநூல்:12 113/4
குணம் அறும் குலம் அறும் கொடிய நோய் எலாம் – நீதிநூல்:13 165/2
ஈனம் மெய்மறதி நோய் இழிவு உற பொருள் – நீதிநூல்:19 226/3
செய்யாதவரே நோய் பல உற்று தேய்வாரே – நீதிநூல்:25 290/4
சீரணம் இன்றி உண்ணும் தீனி நோய் செயும் அதற்கு ஓர் – நீதிநூல்:36 364/2
நோக்கு இருந்தும் அந்தகரா காது இருந்தும் செவிடரா நோய் இல்லாத – நீதிநூல்:40 407/1
நிறை செல்வம் உடையாரை நோய் துன்பு அணுகாவோ நினைத்தது எல்லாம் – நீதிநூல்:40 408/1
கொண்டல் இடி மின் நீர் கால் அனல் மரம் கல் மண் நோய் மீன் கொடிய புட்கள் – நீதிநூல்:41 428/2
நோக்கிய சீலரை நோய் என் செய்யுமே – நீதிநூல்:42 438/4
தாங்கொணா தொழில் செயல் முதல் ஏதுவால் சடம் நோய்
ஆங்கு உறும் சடம் செய்தவன் கைப்பிழை அன்றால் – நீதிநூல்:42 441/3,4
வினையவர் மெய் உரோமத்தை எண்ணினும் நோய் திரள் எண்ண விதானம் உண்டோ – நீதிநூல்:44 506/3
ஆனவர் உறு நோய் நீக்க அனந்தமாம் பரிகாரங்கள் – நீதிநூல்:45 515/2
செறி மயிர் பெரும் தோல் செய்து சீத உட்டண நோய் தீர்த்தான் – நீதிநூல்:47 546/2
நலன்கள் யா உறினும் தந்த நாதனை துதிமோ நோய் நாம் – நீதிநூல்:47 552/1
புலவின் நோய் எத்தன்மைத்தோ புந்தியே சிந்தி நீயே – நீதிநூல்:47 562/4
வெம் புல நோய் மா மருந்தாம் மேலோனை நூலோனை – நீதிநூல்:47 578/2
பொய் புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்-பால் அன்றியே – நன்னெறி:1 11/1
பெரியவர் தம் நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம் – நன்னெறி:1 20/1
பெரியவர் தம் நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம் – நன்னெறி:1 20/1
நோய் அளவு இன்றி படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/4
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 125/4
துள்ளு வெப்பு நோய் உழந்தான் சோமேசா எள்ளி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 32/2
நாமம் கெட கெடும் நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 36/4
சொல்கேட்டு நோய் தீர்ந்தான் சோமேசா தற்காக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/2
போஒம் அளவும் ஓர் நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/4
நல்ல திலகவதியார் மொழியை நம்பி வெம் நோய்
சொல்லரசர் தீர்ந்து உய்ந்தார் சோமேசா புல்லிய – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/1,2
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/3
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/3
மாலை மலரும் இ நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 123/4
பைதல் நோய் செய்தார்-கண் இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/4
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரை தேடார் – விவேகசிந்தாமணி:1 2/4
தடுத்து அதை விலக்கினோர்க்கு தக்க நோய் பிணிகள் ஆகி – விவேகசிந்தாமணி:1 66/3
நோய் கொண்டாலும் கொளலாம் நூறு வயது ஆம் அளவும் – விவேகசிந்தாமணி:1 85/3
பசி நோய் இலக்குமணன் பார் வனத்தில் முன்னே – ஆத்திசூடிவெண்பா:1 75/1
கழி பேர் இரையான்-கண் நோய் என்று உள முதுநூல் – ஆத்திசூடிவெண்பா:1 90/2
இடையூறு ஒழிவு_இல் நோய் மூப்பு இவை வந்தால் – அருங்கலச்செப்பு:1 145/1
நாமம் கெட கெடும் நோய் – அருங்கலச்செப்பு:1 178/2
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 77/3
தெண்ணரு நோய் தீர்க்கும் எழில் வேளூர் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 142/2
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 142/3
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 142/3
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது – முதுமொழிமேல்வைப்பு:1 171/3,4
சோம்பல் ஒரு நோய் – இளையார்-ஆத்திசூடி:1 39/1
நோய் தீயொழுக்கம் – இளையார்-ஆத்திசூடி:1 61/1
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/3
பூதி பவணன் புறத்து உயிர் நோய் போற்றி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/1
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/3,4
தம் நோய் போல் போற்றாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/4
வண்டுகட்கு நோய்செய்த மாண்டவியர் பின் கொடு நோய்
கொண்டு நொந்தார் என்னே குமரேசா மண்டி வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/1,2
நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/3
நோய் இன்மை வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/4
கூர் நோய் ஏன் கொண்டார் குமரேசா தேரின் – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/2
சண்டேசர் தாள் எறிந்தும் சார்தரு நோய் சாராமல் – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/1
சார்தரா சார்தரும் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/4
உற்ற நோய் ஒன்றும் உறாது ஏன் சுதீக்கண்ணர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 360/1
நாமம் கெட கெடும் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:36 360/4
கொள்ளவில்லை நோய் ஏன் குமரேசா உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/2
அதிர வருவதோர் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/4
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:45 442/3
பண்டு பகை பசி நோய் பாண்டி நல் நாட்டு இன்றி இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/1
மன்ற நோய் செய்தும் மணிமேகலை பழைமை – திருக்குறள்குமரேசவெண்பா:81 810/1
போஒம் அளவும் ஓர் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/4
பண்பு இன்மை பாரிக்கும் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:86 851/4
பண்டு இழிந்த வாணன் பரத்தையர்-பால் ஆழ்ந்து நோய்
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/1,2
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் – திருக்குறள்குமரேசவெண்பா:95 941/3
கழி பேரிரையான்-கண் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:95 946/4
கொண்டான் நோய் என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/2
நோய் அளவு இன்றி படும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/4
தேர்ந்து நோய் நாடி திலகவதியார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/1
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/3
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/3
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/4
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/4
நீர் ஆக நீளும் இ நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/4
தொடின் சுடின் அல்லது காம நோய் போல – திருக்குறள்குமரேசவெண்பா:116 1159/3
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:116 1160/3
கொண்டு உழந்தாள் நோய் ஏன் குமரேசா தண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/2
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/3
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது – திருக்குறள்குமரேசவெண்பா:118 1171/3,4
உய்வு_இல் நோய் என் கண் நிறுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/4
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/3
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை – திருக்குறள்குமரேசவெண்பா:120 1200/3
மாசில் உயர் காஞ்சனை முன் மாலை நோய் செய்தது என – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/1
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/3
மாலை மலரும் இ நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/4
பைதல் நோய் செய்தார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/4
பைதல் நோய் எல்லாம் கெட – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/4
அல்லல் நோய் காண்கம் சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1301/4
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:131 1303/3

மேல்

நோய்-தனில் (1)

ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ அகத்தினள் நோய்-தனில் வருந்த அடிமை சாவ – விவேகசிந்தாமணி:1 77/1

மேல்

நோய்க்கு (4)

நோய்க்கு இடம்கொடேல் – ஆத்திசூடி:1 76/1
எந்நாளும் நோய்க்கு இடம்கொடேல் – ஆத்திசூடிவெண்பா:1 75/4
மாறு அகன்ற கந்தியே மையல் நோய்க்கு உய்தி என – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/1
தன் நோய்க்கு தானே மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/4

மேல்

நோய்கொண்டான் (1)

குன்றி நோய்கொண்டான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 946/2

மேல்

நோய்கொண்டானே (1)

கொண்ட உணவு குறைந்திட நோய்கொண்டானே
குண்டோதரன் ஏன் குமரேசா உண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:95 941/1,2

மேல்

நோய்கொண்டு (1)

பண்டு பரவை பனி நோக்கால் சுந்தரர் நோய்கொண்டு
உவந்தார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/1,2

மேல்

நோய்கொள் (1)

வாய் மகிபன் தன்மை வழுத்துங்கால் நோய்கொள்
செவி கேளான் கண் விழியான் தேர் நன்மதியே – நன்மதிவெண்பா:1 5/2,3

மேல்

நோய்செய்த (1)

வண்டுகட்கு நோய்செய்த மாண்டவியர் பின் கொடு நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/1

மேல்

நோய்செய்தார் (1)

நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/3

மேல்

நோய்செய (1)

பற்றி நோய்செய பின்பற்றும் பதகரை வெரீஇ விலங்கு – நீதிநூல்:45 519/1

மேல்

நோய்செயும் (1)

உம்மை நோய்செயும் வலியரை வெகுண்டிடாது ஒளிப்பீர் – நீதிநூல்:26 293/2

மேல்

நோய்ப்பால (1)

தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல் வேண்டாதான் – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/3,4

மேல்

நோயர் (1)

கைத்தனம் நாம் இழந்த பின் கூன் முடவர் அந்தகர் நோயர் கடைக்குலத்தர் – நீதிநூல்:44 505/1

மேல்

நோயா (1)

கூர்ந்து நின்றான் நோயா குமரேசா சார்ந்தவர் தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/2

மேல்

நோயாம் (1)

மாலை துயில் நோயாம் வகையறிந்து ஞாலமதில் – ஆத்திசூடிவெண்பா:1 31/2

மேல்

நோயின் (1)

மனமுளார்க்கு உவப்பாய் நோயின் வருந்துவோர்க்கு அரு மருந்தாய் – நீதிநூல்:39 383/2

மேல்

நோயினர்க்கே (1)

வாய் கைக்கும் நோயினர்க்கே மா மதுவும் கைப்பு ஆகும் – நீதிநூல்:23 270/1

மேல்

நோயினை (1)

சார்ந்த மருந்து இருந்தும் சட்டமுனி நோயினை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/1

மேல்

நோயும் (1)

நோயும் பசலையும் தந்து – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/4

மேல்

நோயுற்ற (1)

அழல்வதினால் துன்பம் மிகும் அல்லாது பயன் உளதோ அரும் நோயுற்ற
விழி மிசை நல் மருந்து இடாது அழல் பிழம்பை விடில் அ நோய் விலகும்-கொல்லோ – நீதிநூல்:12 113/3,4

மேல்

நோயுற்று (1)

நிரந்தரம் பல நோயுற்று நெடிது அயரினும் கையேந்தி – நீதிநூல்:17 213/1

மேல்

நோயுற்றே (1)

பதவி எலாம் ஈன்றோர்-பால் இருக்க நண்பனொடு மெலிந்தாள் பசி நோயுற்றே – நீதிநூல்:12 123/4

மேல்

நோயை (3)

நேர்ந்து நின்ற நோயை நிறை மறைத்தும் பாமதி-பால் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1161/1
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1161/3
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1162/3

மேல்

நோயோடு (1)

குறுவாழ்க்கை நோயோடு நல்குரவு கூட – அருங்கலச்செப்பு:1 52/1

மேல்

நோலாதவர் (1)

சிலர் பலர் நோலாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:27 270/4

மேல்

நோலாதார் (1)

முற்பகல் நோலாதார் நோற்றாரை பின்செல்லல் – நீதிநெறிவிளக்கம்:1 11/3

மேல்

நோவகமாய் (1)

நோவகமாய் நின்றான் ஓர் கூத்தினை ஊர் வேண்டி – அறநெறிச்சாரம்:1 53/3

மேல்

நோவது (3)

ஏதிலரை நோவது எவன் – நீதிநெறிவிளக்கம்:1 24/4
இகழ்வாரை நோவது எவன் – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/4
காதலவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1242/3,4

மேல்

நோவர் (1)

நனவினான் நல்காரை நோவர் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1219/3

மேல்

நோவல் (2)

தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக்குறுதி உயிர் ஓம்பி வாழ்தல் – அறநெறிச்சாரம்:1 192/1,2
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை – திருக்குறள்குமரேசவெண்பா:124 1236/3

மேல்

நோவற்க (1)

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/3

மேல்

நோவா (1)

நோதல் இன்றி தாம் நோவா நோன்மை அன்றோ நன்மதியே – நன்மதிவெண்பா:1 18/3

மேல்

நோவார் (1)

புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/3

மேல்

நோவு (3)

என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே – நல்வழி:1 11/3
கண்_நுதலோன் கண் நோவு கண்ட அளவில் கண்ணப்பன் – முதுமொழிமேல்வைப்பு:1 19/1
வாடி அன்னை நோவு கண்டும் மாண்பு உடைய சித்திரனார் – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/1

மேல்

நோவு-தனை (1)

மகா நோவு-தனை தீர்த்த மருத்துவன்-தன் கூலி – உலகநீதி:1 11/6

மேல்

நோற்க (1)

வல்லாரேல் நோற்க வருவானேன் எல்லாரும் – முதுமொழிமேல்வைப்பு:1 13/2

மேல்

நோற்கிற்பவர் (1)

இன்னா சொல் நோற்கிற்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:16 159/4

மேல்

நோற்கிற்பவர்க்கு (1)

சுடச்சுட நோற்கிற்பவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:27 267/4

மேல்

நோற்பது (2)

மறவாமே நோற்பது ஒன்று உண்டு பிறர்பிறர் – நீதிநெறிவிளக்கம்:1 19/2
நோற்பது கைவிடேல் – புதிய-ஆத்திசூடி:1 64/1

மேல்

நோற்பவர் (1)

நோற்பவர் இல்லவர்க்கு சார்வாகி இல்லவரும் – அறநெறிச்சாரம்:1 15/1

மேல்

நோற்பவருக்கு (1)

நோற்பவருக்கு சார்வாய் அறம் பெருக்கி யாப்புடை – அறநெறிச்சாரம்:1 15/2

மேல்

நோற்பவரும் (1)

நூல்களும் பொய்யே அ நூல் விதியின் நோற்பவரும்
மால்கள் என உணரற்பாற்று – அறநெறிச்சாரம்:1 47/3,4

மேல்

நோற்பார் (3)

தாழாமே நோற்பார் தவம் – நீதிநெறிவிளக்கம்:1 90/4
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் – திருக்குறள்குமரேசவெண்பா:16 160/3
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:27 270/3,4

மேல்

நோற்பாரின் (3)

நோற்பாரின் நோன்மை உடைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 13/4
நோற்பாரின் நோன்மை உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:5 48/4
இன்னா சொல் நோற்பாரின் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:16 160/4

மேல்

நோற்பாரை (1)

பொச்சாவா போற்றித்தாம் நோற்பாரை மெச்சாது – அறநெறிச்சாரம்:1 122/2

மேல்

நோற்றலின் (1)

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:27 269/3,4

மேல்

நோற்றார் (1)

கோசிகரும் நோற்றார் குமரேசா கூசாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:27 264/2

மேல்

நோற்றாரை (1)

முற்பகல் நோலாதார் நோற்றாரை பின்செல்லல் – நீதிநெறிவிளக்கம்:1 11/3

மேல்

நோற்றான்-கொல் (2)

நல்ல இராமன் புரிந்தான் நல் தாதை என் நோற்றான்-கொல்
எனும் சொல் என்னே குமரேசா செல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/1,2
என் நோற்றான்-கொல் எனும் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/4

மேல்

நோற்று (2)

இளையம் முது தவம் ஆற்றுதும் நோற்று என்று – நீதிநெறிவிளக்கம்:1 90/1
மனை துறந்து மாதவர் தாள் அடைந்து நோற்று
வினை அறுப்பான் உத்திட்டனாம் – அருங்கலச்செப்பு:1 172/1,2

மேல்

நோன்பால் (1)

சினையாய் எண் மதியில் இறந்தேன் இகத்தும் உனை புணர செய்த நோன்பால்
முனை அல்கும் இரு மாதம் நிறைந்து உடன் இ மகவு ஈன்றேன் முதல்வ என்றாள் – நீதிநூல்:44 503/3,4

மேல்

நோன்பிற்கு (2)

இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 35/3
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/3

மேல்

நோன்பு (7)

நேரா நோன்பு சீராகாது – கொன்றைவேந்தன்:1 55/1
நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை – கொன்றைவேந்தன்:1 58/1
வேற்றூர் புகுதல் விழா காண்டல் நோன்பு இடுதல் – அறநெறிச்சாரம்:1 162/3
மண்ணினில் அன்னை தந்தை மறம் அறம் செயினும் நோன்பு
பண்ணினும் உடல் வருந்த பணிபுரியினும் மருந்து ஒன்று – நீதிநூல்:8 80/1,2
பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல் – நன்னெறி:1 23/1
ஒரு திங்கள் நால் வகை பவ்வமே நோன்பு
புரிபவன் போசனாம் – அருங்கலச்செப்பு:1 165/1,2
பண்டு பலர் நோன்பு இழந்தார் பாண்டியனும் பாவலரை – திருக்குறள்குமரேசவெண்பா:2 19/1

மேல்

நோன்பும் (1)

மறு அறு சீலமும் நோன்பும் இல்லாரை – அறநெறிச்சாரம்:1 54/3

மேல்

நோன்மை (5)

நோதல் இன்றி தாம் நோவா நோன்மை அன்றோ நன்மதியே – நன்மதிவெண்பா:1 18/3
நோன்மை நன்று நன்மதியே நோக்கு – நன்மதிவெண்பா:1 74/4
நோற்பாரின் நோன்மை உடைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 13/4
நோற்பாரின் நோன்மை உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:5 48/4
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை – திருக்குறள்குமரேசவெண்பா:99 984/3

மேல்

நோன்றல் (1)

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/3

மேல்

நோனா (2)

நோனா உடம்பும் உயிரும் மடலேறும் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1132/3
நோனா உடம்பின் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/4

மேல்

நோனாமே (1)

நல்லவை செய்ய தொடங்கினும் நோனாமே
அல்லன அல்லவற்றில் கொண்டு உய்க்கும் எல்லி – நீதிநெறிவிளக்கம்:1 91/1,2

மேல்