நொ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


நொடிக்குள் (1)

பகர் ஒரு நொடிக்குள் அண்ட பரப்பு எலாம் உலாவி துன்பம் – நீதிநூல்:47 545/2

மேல்

நொடிக்குள்ளே (1)

புகைவண்டி ஊர்ந்து உலகை நொடிக்குள்ளே சுற்றுவோம் புகைக்கூண்டு ஏறி – நீதிநூல்:41 426/1

மேல்

நொந்தக்கால் (1)

செய் தீவினை இருக்க தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் வையத்து – நல்வழி:1 17/1,2

மேல்

நொந்தது (4)

நொந்தது சாகும் – புதிய-ஆத்திசூடி:1 63/1
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/3
கோடி நொந்தது என்னே குமரேசா வீடாத – திருக்குறள்குமரேசவெண்பா:89 887/2
கொண்டு நொந்தது என்னே குமரேசா கண்டு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1003/2

மேல்

நொந்தவர் (1)

எந்த வேளையினும் நொந்தவர் துயர் கேட்டு இடர் இழைப்பவன் தனது ஏக – நீதிநூல்:4 37/1

மேல்

நொந்தவர்க்கு (1)

அழுது நொந்தவர்க்கு அன்றி மற்றவர்க்கு அறம் அரிதே – நீதிநூல்:42 440/4

மேல்

நொந்தார் (16)

பண்டை நினைவு எண்ணி நொந்தார் பாகம் செய் மாறராம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 22/1
கோனும் ஏன் நொந்தார் குமரேசா ஊனம் இலா – திருக்குறள்குமரேசவெண்பா:2 20/2
குன்ற நொந்தார் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:22 219/2
கூர் இகழ்வால் நொந்தார் குமரேசா பார் உலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/2
கோது உழந்து ஏன் நொந்தார் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/2
கோது அடைந்து நொந்தார் குமரேசா ஏதேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 293/2
கொண்டு நொந்தார் என்னே குமரேசா மண்டி வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 320/2
கூசி மிக நொந்தார் குமரேசா ஆசு அறவே – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/2
கொண்டு நொந்தார் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:44 435/2
கொன்னே பின் நொந்தார் குமரேசா உன்னியே – திருக்குறள்குமரேசவெண்பா:54 535/2
குன்றி மிக நொந்தார் குமரேசா கொன்று இயலும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 552/2
ஏதம் மிக எய்தி ஏன் ஏனாதியார் நொந்தார்
கோது ஆர் பகையால் குமரேசா யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 884/1,2
கோது அடைந்து நொந்தார் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1036/2
கொல்ல நொந்தார் என்னே குமரேசா பொல்லாத – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/2
குன்றி நொந்தார் என்னே குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:107 1070/2
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/3

மேல்

நொந்தாள் (15)

விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றும் தேடி நொந்தாள்
தொக்க உருப்பசி மின் சோமேசா ஒக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 130/1,2
கொண்டு நொந்தாள் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:44 433/2
கோமனையுள் நொந்தாள் குமரேசா ஏமமுற – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/2
கொண்டு நொந்தாள் என்னே குமரேசா மண்டி எழு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/2
கோது உழந்து நொந்தாள் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/2
கூசி நொந்தாள் என்னே குமரேசா மூசி – திருக்குறள்குமரேசவெண்பா:119 1188/2
கோதை நொந்தாள் என்னே குமரேசா ஆதரவாய் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/2
குற்றம் என நொந்தாள் குமரேசா மற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:122 1216/2
கொண்டு அயலை நொந்தாள் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:122 1220/2
கூசி நொந்தாள் என்னே குமரேசா ஆசையுறு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1224/2
கோது உரைத்து நொந்தாள் குமரேசா ஏதேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/2
கொண்டு மிக நொந்தாள் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/2
கூசி நொந்தாள் என்னே குமரேசா பேசி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1232/2
கோது உரைத்து நொந்தாள் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1241/2
காமர் உயர் காளிந்தி கைவளை போய் நொந்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1277/1

மேல்

நொந்தான் (13)

வாழ்வு இழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்கு நொந்தான்
சூழ்ச்சியை முன் பிரிந்து சோமேசா வீழ்வார்கட்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 116/1,2
குற்றமுற்று நொந்தான் குமரேசா முற்றிய – திருக்குறள்குமரேசவெண்பா:44 438/2
கொற்றம் இன்றி நொந்தான் குமரேசா சுற்றி வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 583/2
கோடி நொந்தான் என்னே குமரேசா பீடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/2
குன்றி மிக நொந்தான் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:89 885/2
குன்றி நொந்தான் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 890/2
குற்றத்தால் நொந்தான் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:90 892/2
கோடி உளம் நொந்தான் குமரேசா தேடி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:91 902/2
கூசி நொந்தான் பின்பு ஏன் குமரேசா நேசமுறும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 903/2
கொண்டு நொந்தான் என்னே குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/2
கொற்றவன் ஏன் நொந்தான் குமரேசா பெற்று அமைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/2
கொஞ்சி உள் நொந்தான் குமரேசா அஞ்சி அமர் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/2
கொண்டு நொந்தான் என்னே குமரேசா தண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/2

மேல்

நொந்து (5)

செய்வார் உறு பீழை நினைத்தும் சிந்தை நொந்து
மெய் மா மறையின் பயன் ஓதுவர் மேன்மையோரே – நீதிநூல்:6 63/3,4
நொந்து அறிகுவாளோ நுவல் – நீதிவெண்பா:1 15/4
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/3,4
கொடியர் என கூறல் நொந்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1236/4
கொண்டான் பின் சென்ற நெஞ்சை கோமளம் முன் நொந்து இகழ்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:130 1293/1

மேல்

நொந்தும் (1)

மண்டு பெரும் காமம் மருவி நொந்தும் பத்திரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/1

மேல்

நொந்தே (1)

ஓதி மனம் நொந்தே உழல்கின்றான் வேதன் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 47/2

மேல்

நொய்தாக (1)

எய்தினன் மார்க்கண்டன் இரங்கேசா நொய்தாக
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 62/2,3

மேல்

நொய்தாம் (3)

கணையின் பொலியும் கரும் கண்ணாய் நொய்தாம்
புணையில் புகும் ஒண் பொருள் – நன்னெறி:1 25/3,4
நொய்தாம் திரணத்தின் நொய்து ஆகும் வெண் பஞ்சின் – நீதிவெண்பா:1 8/1
நொய்தாம் இரப்போன் நுவலுங்கால் நொய்ய சிறு – நீதிவெண்பா:1 8/2

மேல்

நொய்தாய் (1)

நுதல் விலைமாது அன்புகொள்ளாள் கொண்டாலும் நொய்தாய்
சிதையும் என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 100/3,4

மேல்

நொய்தின் (2)

தெய்வமே சென்று ஒறுக்கும் செய்தியால் நொய்தின்
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – முதுமொழிமேல்வைப்பு:1 36/2,3
தெய்வம் என தந்தையரும் தேறினார் நொய்தின்
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற – முதுமொழிமேல்வைப்பு:1 111/2,3

மேல்

நொய்து (3)

நோக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் பூ_குழலாய் – நன்னெறி:1 5/2
நொய்தாம் திரணத்தின் நொய்து ஆகும் வெண் பஞ்சின் – நீதிவெண்பா:1 8/1
நோக்கி நின்று கேமசரி நொய்து இறைஞ்ச காதல் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1093/1

மேல்

நொய்ய (7)

நொய்ய உரையேல் – ஆத்திசூடி:1 75/1
நைபவர் எனினும் நொய்ய உரையேல் – கொன்றைவேந்தன்:1 56/1
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும் – நீதிநெறிவிளக்கம்:1 95/3
செய்ய ஒன்று அறியா நொய்ய சிற்றுடல் சேய் வளர்ந்து இங்கு – நீதிநூல்:8 81/2
காரினை கீழ் விழாது ககனத்தில் நிறுவி நொய்ய
மாரியே பெய்யச்செய்து மறித்திடு கரை ஒன்று இன்றி – நீதிநூல்:47 541/2,3
ஏற்றதன் பின் நொய்ய உரையேல் – ஆத்திசூடிவெண்பா:1 74/4
நொய்தாம் இரப்போன் நுவலுங்கால் நொய்ய சிறு – நீதிவெண்பா:1 8/2

மேல்

நொய்யர் (1)

நொய்யர் இவர்கள் என்று நோக்கிடார் அறிவுள்ளோரே – விவேகசிந்தாமணி:1 67/4

மேல்

நொய்யவர் (1)

நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் – கொன்றைவேந்தன்:1 57/1

மேல்

நொய்யவாம் (1)

நூல் உணர்வு நுண் ஒழுக்கம் காட்டுவிக்கும் நொய்யவாம்
சால்பின்மை காட்டும் சவர் செய்கை பால் வகுத்து – அறநெறிச்சாரம்:1 51/1,2

மேல்

நொய்யானை (1)

பஞ்சுதனின் நொய்யானை பற்றாதோ காற்று அணுக – நீதிவெண்பா:1 8/3

மேல்

நொய்யும் (1)

நொய்யும் பயன்படும் – இளையார்-ஆத்திசூடி:1 60/1

மேல்

நொறில் (1)

அற உணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வு அன்று – நீதிநூல்:43 473/2

மேல்

நொறிலே (1)

அற உணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வு அன்று – நீதிநூல்:43 473/2

மேல்

நொறுங்கு (1)

நொறுங்கு பெய்து ஆக்கிய கூழ் ஆர உண்டு – அறநெறிச்சாரம்:1 168/1

மேல்