கே – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேகயன் 1
கேசமா 1
கேசவன் 1
கேசன் 1
கேசி 1
கேசினி 1
கேட்க 10
கேட்கப்படும் 1
கேட்கின் 1
கேட்கும் 3
கேட்ட 9
கேட்டதன்-கண் 1
கேட்டதனால் 1
கேட்டபடி 1
கேட்டல் 6
கேட்டலும் 1
கேட்டவற்றை 1
கேட்டவிடத்தும் 1
கேட்டவுடன் 2
கேட்டாய் 1
கேட்டார் 2
கேட்டால் 3
கேட்டாள் 2
கேட்டிருந்த 1
கேட்டில் 3
கேட்டிலும் 1
கேட்டினும் 2
கேட்டு 20
கேட்டும் 1
கேட்டே 1
கேட்டேன் 1
கேட்டை 3
கேட்டோர்கள் 1
கேட்ப 1
கேட்பது 1
கேட்பதுவும் 2
கேட்பர் 5
கேட்பவர் 2
கேட்பவர்தாம் 1
கேட்பான் 2
கேட்பிப்ப 1
கேட்பின் 2
கேட்பினும் 9
கேட்பேன் 1
கேட்போர் 1
கேடன் 1
கேடு 61
கேடு_இல் 4
கேடுகெட்ட 1
கேடும் 10
கேடுளார்களே 1
கேடுற்றாள் 1
கேடுற்றான் 1
கேடுறும் 1
கேடொன்றும் 1
கேண்மை 34
கேண்மைகொண்டு 1
கேண்மைகொளல் 1
கேண்மையவர் 3
கேண்மையார் 1
கேண்மையார்க்கு 1
கேண்மையுடன் 1
கேண்மையும் 2
கேண்மோ 1
கேணி 1
கேதமனை 1
கேமசரி 2
கேமதரன் 1
கேமன் 1
கேலிபண்ணாதே 1
கேவல 1
கேவலமாய் 1
கேழ்வரை 1
கேள் 22
கேள்-மின் 3
கேள்வர் 2
கேள்வற்கும் 1
கேள்வன் 2
கேள்வி 9
கேள்விதான் 1
கேள்வியர் 1
கேள்வியவர் 1
கேள்வியால் 2
கேள்வியின் 1
கேள்வியும் 1
கேளா 3
கேளாத 4
கேளாதவர் 1
கேளாது 3
கேளாமை 1
கேளாய் 6
கேளார் 3
கேளாரும் 1
கேளான் 2
கேளான்-கொல் 1
கேளிர் 6
கேளீர் 1
கேளுங்கள் 1
கேளும் 1
கேளேல் 2

கேகயன் (1)

ஏதும் இழுக்காமல் எண்ணி ஏன் கேகயன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 536/1

மேல்

கேசமா (1)

கேசமா மதிப்பர் அ கீழ்நன் சென்னி தம் – நீதிநூல்:21 249/2

மேல்

கேசவன் (1)

கொண்ட மனைவியையும் கோது செய்தான் கேசவன் நாண் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/1

மேல்

கேசன் (1)

பேரழகு வாய்ந்திருந்தும் பெண் வழியில் கேசன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/1

மேல்

கேசி (1)

கேசி ஏன் தேறாமல் கேடு செய்து தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:85 847/1

மேல்

கேசினி (1)

மாசில் உயர் கேசினி முன் மாலை-தனை கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/1

மேல்

கேட்க (10)

கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 42/3
கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்க குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே நிற்க – விவேகசிந்தாமணி:1 77/3
பாவாணர் கவி பாடி பரிசு கேட்க பாவிமகன் படும் துயரம் பார்க்கொணாதே – விவேகசிந்தாமணி:1 77/4
ஆனது அங்கு அது பூசினால் வீங்குவது அமையுமோ என கேட்க
கான வேட்டுவ சேரி விட்டு அகன்றனர் கடி கமழ் விலை வாணர் – விவேகசிந்தாமணி:1 86/3,4
நித்தியத்தை கேட்க போய் நித்திரை என்றே குளறி – ஆத்திசூடிவெண்பா:1 52/1
பரன் அருள் சேய் கேட்க பசும்பொன் மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 168/1
கற்றிலனாயினும் கேட்க அஃது ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:42 414/3
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 416/3
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை – திருக்குறள்குமரேசவெண்பா:59 587/3
விட்டக்கால் கேட்க மறை – திருக்குறள்குமரேசவெண்பா:70 695/4

மேல்

கேட்கப்படும் (1)

திறத்து உள்ளி கேட்கப்படும் – அருங்கலச்செப்பு:1 154/2

மேல்

கேட்கின் (1)

கேட்கின் மேன்மக்கள் சொல் கேள் – ஆத்திசூடிவெண்பா:1 94/4

மேல்

கேட்கும் (3)

கேட்கும் கருத்துடையோரே பிறவியை – அறநெறிச்சாரம்:1 2/3
கரும்பு உண கூலி கேட்கும் கருமம் போல் வறுமையாளர்க்கு – நீதிநூல்:47 565/1
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:65 648/3

மேல்

கேட்ட (9)

காதலித்து கற்றோரும் கேட்ட பேரும் – உலகநீதி:1 13/5
ஏகாந்த வாதிகள் எண் கேட்ட ஆதன் போல் – அறநெறிச்சாரம்:1 223/3
மாயனார்-தம் மக்கள் மா முனியை கேட்ட கெற்பம் – ஆத்திசூடிவெண்பா:1 27/1
ஆசிரியன் சொல் கேட்ட அன்றே தசரதனார் – ஆத்திசூடிவெண்பா:1 94/1
கேட்ட பொழுதே கெடும் – நீதிவெண்பா:1 83/4
அறிவு சால் உரை கேட்ட அன்றே நெறி நின்று – முதுமொழிமேல்வைப்பு:1 114/2
அறை பறை_அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – முதுமொழிமேல்வைப்பு:1 159/3,4
சான்றோன் என கேட்ட தாய் – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/4
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/3,4

மேல்

கேட்டதன்-கண் (1)

கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்-கண்
நிற்றலும் கூட பெறின் – அறநெறிச்சாரம்:1 72/3,4

மேல்

கேட்டதனால் (1)

கேட்டதனால் ஆய பயன் – அறநெறிச்சாரம்:1 11/4

மேல்

கேட்டபடி (1)

இரு நான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம் மொழியை கேட்டபடி ஈந்தாய் ஆயின் – விவேகசிந்தாமணி:1 18/2

மேல்

கேட்டல் (6)

மதனநூலாதி கேட்டல் வாசித்தல் தகாத செய்கை – நீதிநூல்:13 172/3
சற்பனையாய் இருத்தல் பொய்க்கதை கூறல் கேட்டல் எலாம் சலங்கள் ஆமே – நீதிநூல்:16 204/4
ஆர் உரையும் கேட்டல் ஆம் அவ்வாறு கேட்டவற்றை – நன்மதிவெண்பா:1 98/1
மோகத்தை ஈன்று தவம் அழிக்கும் சொல் கேட்டல்
பாவ சுருதி எனல் – அருங்கலச்செப்பு:1 95/1,2
அறவுரை கேட்டல் நினைத்தல் உரைத்தல் – அருங்கலச்செப்பு:1 124/1
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/4

மேல்

கேட்டலும் (1)

கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்-கண் – அறநெறிச்சாரம்:1 72/3

மேல்

கேட்டவற்றை (1)

ஆர் உரையும் கேட்டல் ஆம் அவ்வாறு கேட்டவற்றை
தீர ஆராய்ந்து தெளிந்திடல் ஆம் நேருற்று – நன்மதிவெண்பா:1 98/1,2

மேல்

கேட்டவிடத்தும் (1)

அறவுரை கேட்டவிடத்தும் அனையார் – அறநெறிச்சாரம்:1 32/3

மேல்

கேட்டவுடன் (2)

செங்கமல சீதை சொல்லை சீராமன் கேட்டவுடன் சென்றான் மான் பின் – விவேகசிந்தாமணி:1 117/2
வெள்ளி மொழி கேட்டவுடன் வேல் அசுரர் மேல் விரைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:65 648/1

மேல்

கேட்டாய் (1)

என்னும் மொழி கேட்டாய் இரங்கேசா துன்ன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/2

மேல்

கேட்டார் (2)

சிவகீதை முன் கேட்டார் சென்றுசென்று சென்மித்து – முதுமொழிமேல்வைப்பு:1 68/1
கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:65 643/3

மேல்

கேட்டால் (3)

தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று – மூதுரை-வாக்குண்டாம்:1 28/3,4
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 74/3,4
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 732/3,4

மேல்

கேட்டாள் (2)

கலவிசெய்த மாது என்னை விலை கேட்டாள் உடன் ஒக்க கலந்து காம – நீதிநூல்:44 497/1
கோணாது கேட்டாள் குமரேசா நாணா – திருக்குறள்குமரேசவெண்பா:120 1199/2

மேல்

கேட்டிருந்த (1)

பிள்ளை இறைவர் அருள் பெறலும் கேட்டிருந்த
கள் அவிழ் பூம் கோதையார் காதலால் சொல்லும் – முதுமொழிமேல்வைப்பு:1 123/1,2

மேல்

கேட்டில் (3)

கேட்டில் உறுதி கூட்டும் உடைமை – கொன்றைவேந்தன்:1 21/1
மாறனது கேட்டில் உறுதி என மாணிக்கம் – முதுமொழிமேல்வைப்பு:1 125/1
அன்று அமைந்த கேட்டில் அயாதி ஏன் உண்மை கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:80 796/1

மேல்

கேட்டிலும் (1)

கேட்டிலும் துணிந்து நில் – புதிய-ஆத்திசூடி:1 20/1

மேல்

கேட்டினும் (2)

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை – முதுமொழிமேல்வைப்பு:1 125/3
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை – திருக்குறள்குமரேசவெண்பா:80 796/3

மேல்

கேட்டு (20)

அறம் கேட்டு அருள் புரிந்து ஐம்புலன்கள்-மாட்டும் – அறநெறிச்சாரம்:1 4/1
அறவுரை கேட்டு உணர்ந்து அஞ்ஞானம் நீக்கி – அறநெறிச்சாரம்:1 198/3
திடமொடு மூகர் பாட செவிடர் கேட்டு அதிசயிக்க – நீதிநூல்:1 3/2
எந்த வேளையினும் நொந்தவர் துயர் கேட்டு இடர் இழைப்பவன் தனது ஏக – நீதிநூல்:4 37/1
வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் வகைவகை இனிது கேட்டு அமைந்த – நீதிநூல்:4 43/2
தையல் இல்லம் புகும் போது என் சுதன் குரலை கேட்டு ஒதுங்கி தாழ்வாரத்தில் – நீதிநூல்:44 498/1
தொனி கேட்டு சினந்து நான் குயவனோ எனை மயக்க தூளோ என்றேன் – நீதிநூல்:44 502/2
பாகவதம் கேட்டு பரிச்சித்தன் முத்தி பெற்றான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 42/1
துன்னு சகுனி கன்னன் சொல் கேட்டு அரவு_உயர்த்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 46/1
அற்கா அமண் மொழி கேட்டு அல்லலுற்றான் மாறன் இல்லாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/1
சொல்லுவார் வார்த்தை கேட்டு தோழமை இகழ்வார் புல்லர் – விவேகசிந்தாமணி:1 45/1
தன்படியே கேட்டு உலகில் தார்வேந்தா அன்புறல் போல் – ஆத்திசூடிவெண்பா:1 39/2
வன் புறங்கூற்றால் உய்யும் வஞ்சகர் சொல் கேட்டு அரசன் – நன்மதிவெண்பா:1 58/1
எங்கும் புகழ்படைத்தான் என்னும் மொழி கேட்டு உவகை – நன்மதிவெண்பா:1 108/3
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – முதுமொழிமேல்வைப்பு:1 164/3
தேடு புகழ் சம்பந்தர் செம்மொழி கேட்டு ஏன் மகிழ்ந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/1
மன்றாடி நின் மழலை வாசகம் ஏன் கேட்டு உவந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/1
தேர்ந்தாள் முன் கோதமியும் சித்திரகேதும் கேட்டு
கூர்ந்த துன்பு ஏன் தீர்ந்தான் குமரேசா சார்ந்து நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:42 414/1,2
பூத்த புகழேந்தி போதம் கேட்டு ஏன் ஒட்டக்கூத்தரையும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 416/1
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/3

மேல்

கேட்டும் (1)

ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்கு சோதி – அறநெறிச்சாரம்:1 217/2

மேல்

கேட்டே (1)

இருவர்-தம் சொல்லையும் எழு தரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையானாயின் – வெற்றிவேற்கை:1 75/1,2

மேல்

கேட்டேன் (1)

ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய் உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன்
இரு நான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம் மொழியை கேட்டபடி ஈந்தாய் ஆயின் – விவேகசிந்தாமணி:1 18/1,2

மேல்

கேட்டை (3)

கேட்டை கிழத்தியை பாடுங்கால் கோட்டு இல்லா – அறநெறிச்சாரம்:1 111/2
காதலாய் நோக்குதலே கலந்தது ஒப்பாம் பிறர் கேட்டை கருதல் அன்னார் – நீதிநூல்:43 457/2
கேட்டை உறுவான் அதனால் கேண்மையுடன் தேட்டமுறும் – நன்மதிவெண்பா:1 29/2

மேல்

கேட்டோர்கள் (1)

ஒருவன் ஒருவன் குறையை உரைத்திடவே அதனை கேட்டோர்கள்
பெருகு அபத்தம் கலந்து பல பேருக்கு உரைக்க இவ்வாறே – நீதிநூல்:22 265/1,2

மேல்

கேட்ப (1)

கட்டுரை கேட்ப செவி – அறநெறிச்சாரம்:1 197/4

மேல்

கேட்பது (1)

அஞ்சும் அவன் கேட்பது அறிந்து – நீதிவெண்பா:1 8/4

மேல்

கேட்பதுவும் (2)

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லார் – மூதுரை-வாக்குண்டாம்:1 8/2
தீயார் சொல் கேட்பதுவும் தீதே தீயார் – மூதுரை-வாக்குண்டாம்:1 9/2

மேல்

கேட்பர் (5)

கேட்பர் கெழுமியிருந்து – அறநெறிச்சாரம்:1 49/4
வேட்டு அவாய் கேட்பர் விரைந்து ஓடி ஞாலத்தார் – அறநெறிச்சாரம்:1 111/1
உடம்பினும் கூட்டம் அது உவந்து கேட்பர்
கொடுத்து உண்-மின் கொண்டு ஒழுக்கம் காணு-மின் என்பார் சொல் – அறநெறிச்சாரம்:1 224/2,3
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 97/3
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:61 607/3

மேல்

கேட்பவர் (2)

எத்திக்கினும் கேட்பவர் காது உளம் இன்பம் மேவி – நீதிநூல்:6 61/3
அமர்செய்து புசிக்கும் அப்போது என் என்று கேட்பவர் ஆர் அறிவு_இல் நெஞ்சே – நீதிநூல்:41 434/4

மேல்

கேட்பவர்தாம் (1)

கேட்பவர்தாம் இலர் என்னில் கிளப்பவர் ஆர் பிறன் பழியை – நீதிநூல்:22 266/2

மேல்

கேட்பான் (2)

உரைப்பவன் கேட்பான் உரைக்கப்படுவது – அறநெறிச்சாரம்:1 3/1
நித்தியத்துவம் கேட்பான் நித்திரை என்றே மயக்கம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 65/1

மேல்

கேட்பிப்ப (1)

அறவுரை கேட்பிப்ப கால் – அறநெறிச்சாரம்:1 203/4

மேல்

கேட்பின் (2)

அருமை சயம் என்பார் தோல்வியடைந்தோன் தந்த நிதி கேட்பின்
வெருவ அவன் மேல் பொய்வழக்கை மெய் போல் கற்பித்து இடர் இழைத்து – நீதிநூல்:21 255/2,3
கோட்புலியார்-தம்மை குமரேசா கேட்பின்
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 5/2,3

மேல்

கேட்பினும் (9)

வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்கு – அறநெறிச்சாரம்:1 31/3
எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என் செய்யும் – அறநெறிச்சாரம்:1 218/1
கரு முகில் என கண்ணால் என் காணினும் கேட்பினும் சூழ் – நீதிநூல்:33 351/2
வந்தித்து ஆய்ந்து ஓதினும் சொல்லினும் கேட்பினும்
வெந்து வினையும் விடும் – அருங்கலச்செப்பு:1 176/1,2
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – முதுமொழிமேல்வைப்பு:1 74/3
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – முதுமொழிமேல்வைப்பு:1 75/3
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால் – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/3
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/3
கேட்பினும் சொல்லா விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:70 697/4

மேல்

கேட்பேன் (1)

உன்னை ஓர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும் – விவேகசிந்தாமணி:1 23/2

மேல்

கேட்போர் (1)

நீதிநூல் படிப்போர் கேட்போர் நித்தமும் வாழ்க மாதோ – நீதிநூல்:46 523/4

மேல்

கேடன் (1)

அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/3

மேல்

கேடு (61)

கண்கூடா பட்டது கேடு எனினும் கீழ்மக்கட்கு – நீதிநெறிவிளக்கம்:1 33/1
யாவர்க்கும் கேடு சூழார் – நீதிநெறிவிளக்கம்:1 82/4
கேடு தம்-பால் மிக கிளைக்கினும் குண – நீதிநூல்:39 402/3
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 4/4
வழுக்கியும் கேடு என்பது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/4
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 22/3
கர்ப்பத்திலே சுகனார் கேடு_இல் பொருளை குறித்தார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/1
கெழுதகைமை கேடு தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/4
மிகல் காணும் கேடு தரற்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/4
உட்பகை உள்ளதாம் கேடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/4
வழுக்கியும் கேடு என்பது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 17/4
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/3
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/4
கெழுதகைமை கேடு தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/4
உட்பகை உள்ளதாம் கேடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 89/4
நங்கையர் சொல்கேட்பது எல்லாம் கேடு வரும் பேர் உலகோர் நகைப்பர் தாமே – விவேகசிந்தாமணி:1 117/4
சகுனி துரியோதனற்கு சற்பனையா கேடு
மிக உரைத்து தன் உயிரும் ஈந்த தகை பார் – ஆத்திசூடிவெண்பா:1 47/1,2
கண்ணான புன்னைவன காராளா மேல் வரும் கேடு
எண்ணா நீ நீர் விளையாடேல் – ஆத்திசூடிவெண்பா:1 68/3,4
கேடு சொல்ல நிந்தை கிடைத்தது பார் நீடு புகழ் – ஆத்திசூடிவெண்பா:1 76/2
கேண்மைகொளல் நன்மதியே கேடு – நன்மதிவெண்பா:1 86/4
புறவுரை பொய்யோலை கேடு – அருங்கலச்செப்பு:1 70/2
மனம்கொள்வு இலார் இணை கேடு – அருங்கலச்செப்பு:1 75/2
கேடு இன்மை சிந்திக்கற்பாற்று – அருங்கலச்செப்பு:1 119/2
யாதொன்றும் விட்டு எறிதல் கேடு – அருங்கலச்செப்பு:1 133/2
புரிவு இன்மை எஞ்சாமை கேடு – அருங்கலச்செப்பு:1 142/2
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – முதுமொழிமேல்வைப்பு:1 10/4
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – முதுமொழிமேல்வைப்பு:1 36/3
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – முதுமொழிமேல்வைப்பு:1 36/4
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 49/3,4
மிகல் காணும் கேடு தரற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 133/4
உற்ற மழை பெய்ய உரோமபதன் கேடு அகன்று – திருக்குறள்குமரேசவெண்பா:2 15/1
கூடினான் கேடு குமரேசா கேடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/2
கூடினான் கேடு குமரேசா கேடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/2
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/4
கூடினான் கேடு ஏன் குமரேசா வாடி – திருக்குறள்குமரேசவெண்பா:12 116/2
கேடு பிறர் செய்யாது ஏன் கேடுற்றாள் காந்தாரி – திருக்குறள்குமரேசவெண்பா:17 165/1
வழுக்கியும் கேடு என்பது – திருக்குறள்குமரேசவெண்பா:17 165/4
கண்டு நகைத்த கனகவன்மன் பின் கேடு
கொண்டான் பழித்து ஏன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:19 182/1,2
வெற்றி விசயனுக்கு ஏன் வெம் மூகன் கேடு எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/1
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/3
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/4
கொண்டான் ஏன் கேடு குமரேசா மண்டுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/2
கொண்டிலன் கேடு என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/2
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 220/3
கொண்டார் ஏன் கேடு குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:31 307/2
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:31 307/3,4
கூடினார் கேடு ஏன் குமரேசா கோடி – திருக்குறள்குமரேசவெண்பா:32 319/2
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 400/3
ஆகு_ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:48 478/3
கொண்டான் கேடு என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/2
கூடினன் கேடு என்னே குமரேசா கோடாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/2
கெழுதகைமை கேடு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/4
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/3
கேடு_இல் கிரவுஞ்சம் கெட்டது நல் மாட்சியிலார் – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/1
கொண்டான் கேடு என்னே குமரேசா கண்டு நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/2
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/3
கேடு_இல் இராமன் உயர் கேண்மை கொண்டு ஏன் வீடணன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/1
கேசி ஏன் தேறாமல் கேடு செய்து தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:85 847/1
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:86 858/4
மிகல் காணும் கேடு தரற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:86 859/4
உட்பகை உள்ளது ஆம் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:89 889/4

மேல்

கேடு_இல் (4)

கர்ப்பத்திலே சுகனார் கேடு_இல் பொருளை குறித்தார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/1
கூடினான் கேடு குமரேசா கேடு_இல்
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/2,3
கேடு_இல் கிரவுஞ்சம் கெட்டது நல் மாட்சியிலார் – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/1
கேடு_இல் இராமன் உயர் கேண்மை கொண்டு ஏன் வீடணன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/1

மேல்

கேடுகெட்ட (1)

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டு இங்கு – நல்வழி:1 22/2

மேல்

கேடும் (10)

வீடு மூடும் வாய் நலம் வீடும் கேடும் கூடுமே – நீதிநூல்:47 598/4
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 65/3
பிறர்-கண் வருத்தமும் சாக்காடும் கேடும்
மறந்தும் நினையாமை நன்று – அருங்கலச்செப்பு:1 117/1,2
இரணியனை கொன்று இருக்க எண்ணினவர் கேடும்
அரன் வெகுள பின் நிகழும் ஆற்றால் ஒருவர் – முதுமொழிமேல்வைப்பு:1 51/1,2
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 101/3
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 102/3
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:12 115/3
கேடும் நினைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 169/4
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/3
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – திருக்குறள்குமரேசவெண்பா:65 642/3

மேல்

கேடுளார்களே (1)

கிடக்கும் மெய் சோம்புளோர் கேடுளார்களே – நீதிநூல்:25 286/4

மேல்

கேடுற்றாள் (1)

கேடு பிறர் செய்யாது ஏன் கேடுற்றாள் காந்தாரி – திருக்குறள்குமரேசவெண்பா:17 165/1

மேல்

கேடுற்றான் (1)

கேடுற்றான் முன்னம் கிரீவன் மடி மறவி – திருக்குறள்குமரேசவெண்பா:61 605/1

மேல்

கேடுறும் (1)

கிட்ட அரும் சுடரை மேவி கேடுறும் பதங்கம் போலும் – நீதிநூல்:13 173/3

மேல்

கேடொன்றும் (1)

நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை – கொன்றைவேந்தன்:1 49/1

மேல்

கேண்மை (34)

வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும் – கொன்றைவேந்தன்:1 84/1
ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை
இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே – வெற்றிவேற்கை:1 30/1,2
நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசி போல் வேர்கொள்ளாதே – வெற்றிவேற்கை:1 31/1,2
நல்லார் செய்யும் கேண்மை நாள்-தோறும் நன்று ஆகும் – நன்னெறி:1 38/1
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே நல்லாய் கேள் – நன்னெறி:1 38/2
கேண்மை ஒரீஇ விடல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 80/4
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 82/3,4
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 84/3
வேண்டி அழையா வதுவை வீடு உறல் ஒவ்வா கேண்மை
ஈண்டு இவை ஆகா நன்மதியே – நன்மதிவெண்பா:1 81/3,4
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது – முதுமொழிமேல்வைப்பு:1 127/3,4
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் – முதுமொழிமேல்வைப்பு:1 128/3
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண் – முதுமொழிமேல்வைப்பு:1 129/3
நன்றாம் இராமன் உயர் நல் கேண்மை வானரர்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/1
மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/3
கொண்டு உவந்தான் கேண்மை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/2
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/3,4
கொள்ளல் உற்றான் கேண்மை குமரேசா உள்ள எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:45 445/2
நின்ற திரு நீங்கியதே நீடு குபன் கேண்மை அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:52 519/1
வினைக்-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக – திருக்குறள்குமரேசவெண்பா:52 519/3
கோடாமல் தத்தன் இயக்கோடன் இவர் கேண்மை என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 782/1
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி – திருக்குறள்குமரேசவெண்பா:79 782/3
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை – திருக்குறள்குமரேசவெண்பா:80 792/3
கேண்மை ஒரீஇ விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:80 797/4
கெடும்காலை கைவிடுவார் கேண்மை அடும்காலை – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/3
கேடு_இல் இராமன் உயர் கேண்மை கொண்டு ஏன் வீடணன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/1
மருவுக மாசற்றார் கேண்மை ஒன்று ஈத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/3
ஓர்ந்து பழம் கேண்மை உவந்து விடா வேகனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 809/1
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:81 809/3,4
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:82 811/3,4
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என் – திருக்குறள்குமரேசவெண்பா:82 812/3,4
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/3,4
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:82 818/3,4
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:83 822/3
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:84 839/3

மேல்

கேண்மைகொண்டு (1)

அன்று பகதத்தன் ஆயாமல் கேண்மைகொண்டு
குன்றினான் என்னே குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:80 792/1,2

மேல்

கேண்மைகொளல் (1)

கேண்மைகொளல் நன்மதியே கேடு – நன்மதிவெண்பா:1 86/4

மேல்

கேண்மையவர் (3)

வழிவந்த கேண்மையவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 81/4
வழிவந்த கேண்மையவர் – முதுமொழிமேல்வைப்பு:1 126/4
வழிவந்த கேண்மையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:81 807/4

மேல்

கேண்மையார் (1)

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:81 809/3

மேல்

கேண்மையார்க்கு (1)

கிடைக்க தகுமே நல் கேண்மையார்க்கு எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 193/3

மேல்

கேண்மையுடன் (1)

கேட்டை உறுவான் அதனால் கேண்மையுடன் தேட்டமுறும் – நன்மதிவெண்பா:1 29/2

மேல்

கேண்மையும் (2)

பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார் – நீதிநெறிவிளக்கம்:1 46/1
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின் – திருக்குறள்குமரேசவெண்பா:71 709/3

மேல்

கேண்மோ (1)

கொம்மை சேர் முலையினாளே கூறுவேன் ஒன்று கேண்மோ
செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் சிதற வேண்டி – விவேகசிந்தாமணி:1 24/2,3

மேல்

கேணி (1)

தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/3

மேல்

கேதமனை (1)

கேதமனை தேர்ந்ததனால் கேமதரன் பின்பு இழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:51 508/1

மேல்

கேமசரி (2)

நோக்கி நின்று கேமசரி நொய்து இறைஞ்ச காதல் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1093/1
கூடி நின்று கேமசரி கோது_இல் இன்பம் துய்த்தாள் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1166/1

மேல்

கேமதரன் (1)

கேதமனை தேர்ந்ததனால் கேமதரன் பின்பு இழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:51 508/1

மேல்

கேமன் (1)

குன்றினான் கேமன் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:84 834/2

மேல்

கேலிபண்ணாதே (1)

கேலிபண்ணாதே – இளையார்-ஆத்திசூடி:1 27/1

மேல்

கேவல (1)

கீசகன் பாஞ்சாலியின் மேல் கேவல மால் கொண்டு உயிர் தோற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/1

மேல்

கேவலமாய் (1)

கீழவரால் அவர்தாம் இலரேல் மிகு கேவலமாய் உலகம் – நீதிநூல்:14 174/3

மேல்

கேழ்வரை (1)

கேழ்வரை சேடியர் சொல் கீழ்மைக்கு இயற்படும் சொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/1

மேல்

கேள் (22)

மேன்மக்கள் சொல் கேள் – ஆத்திசூடி:1 95/1
நயனுடை இன்சொல்லான் கேள் எனினும் மாதர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 81/3
தோழி கேள் உனக்கும் ஓர் துணைவன் உண்டு அவன் – நீதிநூல்:12 127/1
எந்தவாறு சென்றது என்ன எனை வினவு சிலதி கேள்
பந்த ஊர்தி ஏறியே படர்ந்தனன் படர்ந்த நாள் – நீதிநூல்:12 132/2,3
கிளர்வு அறு சினம் மீக்கொள்ளும் பாவி கேள் அவர் உன்னால் உன் – நீதிநூல்:47 586/2
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே நல்லாய் கேள்
காய் முற்றின் தின் தீம் கனி ஆம் இளம் தளிர் நாள் – நன்னெறி:1 38/2,3
ஆரம் பூண்ட மணி மார்பா அயோத்திக்கு அரசே அண்ணா கேள்
ஈரம் இருக்க மரம் இருக்க இலைகள் உதிர்ந்தவாறு ஏது – விவேகசிந்தாமணி:1 94/1,2
போற்றும் தமிழ் பாகை புன்னைவன பூபா கேள்
ஏற்று எண் எழுத்து இகழேல் – ஆத்திசூடிவெண்பா:1 7/3,4
மா திலகா புன்னைவன மன்னா கேள் பூமியதில் – ஆத்திசூடிவெண்பா:1 23/3
கேட்கின் மேன்மக்கள் சொல் கேள் – ஆத்திசூடிவெண்பா:1 94/4
கிட்டார்கள் மேதினியோர் கேள் – நன்மதிவெண்பா:1 31/4
சிங்கம் நடந்த வழி சித்தாந்தம் அங்கு அது கேள்
பற்றுக பற்று அற்றான் பற்றினை அ பற்றை – முதுமொழிமேல்வைப்பு:1 57/2,3
அருகர் பிறர்க்கு ஆகாது என்னும் உரை கேள்
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 59/2,3
கற்றவர் போல் மெய்ப்பொருளை கண்டார்-கொல் உற்றது கேள்
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 61/2,3
வந்த திருவள்ளுவர்-தம் வாய்மொழி கேள் இந்த நிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 89/2
அன்னவர் முன் தோன்றலர் ஆதலினால் சொன்னது கேள்
ஊமன் கண் போல ஒளியும் மிக இருளே – முதுமொழிமேல்வைப்பு:1 188/2,3
பெரிதினும் பெரிது கேள் – புதிய-ஆத்திசூடி:1 71/1
குன்றி பின்பு ஏன் குமரேசா ஒன்றிய கேள்
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/2,3
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:81 808/3
வென்றி சதவிந்து ஏன் மெய்மை இலா சாலுவன் கேள்
குன்ற விடுத்தான் குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:82 811/1,2
கேள் போல் பகைவர் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:89 882/4
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1222/3

மேல்

கேள்-மின் (3)

மரியாதை காணும் மகிதலத்தீர் கேள்-மின்
தரியாது காணும் தனம் – நல்வழி:1 8/3,4
சாற்றுவது ஒன்றை போற்றி கேள்-மின் – வெற்றிவேற்கை:1 72/2
பரப்பு அமைந்த கேள்-மின் இது பால் கலன் மேல் பூஞை – முதுமொழிமேல்வைப்பு:1 190/3

மேல்

கேள்வர் (2)

மிடியுளார் கேள்வர் என்று உரைத்த மின்_அனாய் – நீதிநூல்:12 126/1
கேள்வர் இலாவிடத்து ஒர் பிழைசெயின் அறியார் என கிளக்கும் – நீதிநூல்:12 147/1

மேல்

கேள்வற்கும் (1)

கேள்வற்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தம் கிளைஞர் – நீதிநெறிவிளக்கம்:1 82/3

மேல்

கேள்வன் (2)

முளரி புனல் நீங்கின் முளரி மலர் கேள்வன்
ஒளிர் கரத்தால் தீய்ந்து இறுதல் ஒப்ப தளர்வு அணுகி – நன்மதிவெண்பா:1 28/1,2
பூவுலகோடு எங்கும் ஏன் பூண்டது உமை_கேள்வன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 1/1

மேல்

கேள்வி (9)

கேள்வி முயல் – ஆத்திசூடி:1 39/1
மறம் கேள்வி மாற்றியவர் – அறநெறிச்சாரம்:1 10/4
சகலமும் நல்கும் கேள்வி தனத்தினை நல்கி ஆதி – நீதிநூல்:6 54/2
வளமுறு கேள்வி நூல் மாண்பு நற்குணம் – நீதிநூல்:9 85/3
கேள்வியின் அறிவார் கற்ற கேள்வியும் கேள்வி அன்றோ – நீதிநூல்:47 528/2
கெற்பத்தால் மங்கையருக்கு அழகு குன்றும் கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம் – விவேகசிந்தாமணி:1 16/1
மூதறிவோர் கேள்வி முயல் – ஆத்திசூடிவெண்பா:1 39/4
திண் தோள் சனமேயன் தேர்ந்து உயர்ந்தான் கேள்வி ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/1
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின் – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/3

மேல்

கேள்விதான் (1)

ஐயம்_இல் கேள்விதான் அளவு இல ஆருயிர் – நீதிநூல்:20 238/2

மேல்

கேள்வியர் (1)

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய – திருக்குறள்குமரேசவெண்பா:42 419/3

மேல்

கேள்வியவர் (1)

ஈண்டிய கேள்வியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:42 417/4

மேல்

கேள்வியால் (2)

அறம் கேள்வியால் ஆம் பயன் என்று உரைப்பார் – அறநெறிச்சாரம்:1 10/3
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/3,4

மேல்

கேள்வியின் (1)

கேள்வியின் அறிவார் கற்ற கேள்வியும் கேள்வி அன்றோ – நீதிநூல்:47 528/2

மேல்

கேள்வியும் (1)

கேள்வியின் அறிவார் கற்ற கேள்வியும் கேள்வி அன்றோ – நீதிநூல்:47 528/2

மேல்

கேளா (3)

இரப்பவர்க்கு ஈயா கைகள் இனிய சொல் கேளா காது – விவேகசிந்தாமணி:1 28/2
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால் – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/3
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:81 808/3

மேல்

கேளாத (4)

ஏன்றிருந்தும் கேளாத ஏழை என இவர்கட்கு – அறநெறிச்சாரம்:1 7/3
புறங்கூற்று கேளாத என்பர் பிறன் தாரத்து – அறநெறிச்சாரம்:1 103/2
தாய் வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான் – விவேகசிந்தாமணி:1 14/3
அன்னம் என கேளாத அன்ன வாய் பின்னோர் – நன்மதிவெண்பா:1 12/2

மேல்

கேளாதவர் (1)

மழலை சொல் கேளாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:7 66/4

மேல்

கேளாது (3)

உற்று ஒன்றும் கேளாது ஒடுங்கி மதிதயன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:70 695/1
கேளாது நட்டார் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 804/4
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/3

மேல்

கேளாமை (1)

முறையிடினும் கேளாமை அன்று – நீதிநெறிவிளக்கம்:1 31/4

மேல்

கேளாய் (6)

அது ஏது இங்கு என்னில் சொல்ல கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்-தன் கூலி – உலகநீதி:1 11/2,3
கேளாய் உடன் வருவது இல் – அறநெறிச்சாரம்:1 127/4
என் பொருள் என் பொருள் என்று சீவன்விடும் மனமே ஒன்று இயம்ப கேளாய்
உன் பொருளானால் அதன் மேல் உன் நாமம் வரைந்துளதோ உன்றனோடு – நீதிநூல்:40 405/1,2
ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய் உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன் – விவேகசிந்தாமணி:1 18/1
அம்புவி மாதே கேளாய் அரசனை அகலவிட்டு – விவேகசிந்தாமணி:1 35/3
கேளாய் அக்கம் சுருக்கேல் – ஆத்திசூடிவெண்பா:1 13/4

மேல்

கேளார் (3)

காந்தனுக்கு அடங்கி களத்திரம் நடவாள் காதலர் தந்தை சொல் கேளார்
மாந்தர் வேளாண்மை முதல் தமக்கு உரிய வளமை கூர் தொழில்களின் முயலார் – நீதிநூல்:5 47/2,3
அறநெறி அலாத செய்கை ஆண்டகை சொல்லின் கேளார்
புறமுற அவன் குற்றத்தை புகன்றிடார் பொய் கரத்தல் – நீதிநூல்:15 192/1,2
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார் நன்மை செய்ய தீமை உடன் நயந்து செய்வார் – விவேகசிந்தாமணி:1 16/3

மேல்

கேளாரும் (1)

கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:65 643/3,4

மேல்

கேளான் (2)

பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்
கள்ளின் நல் குழலாள் மூத்தால் கணவனை கருதி பாராள் – விவேகசிந்தாமணி:1 2/1,2
செவி கேளான் கண் விழியான் தேர் நன்மதியே – நன்மதிவெண்பா:1 5/3

மேல்

கேளான்-கொல் (1)

கண் இணை செவிகள் ஈந்தோன் காணான்-கொல் கேளான்-கொல் நெஞ்சு – நீதிநூல்:47 555/1

மேல்

கேளிர் (6)

பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 19/3
பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 19/3
தருணம் உதவா கேளிர் தாள் வணங்குவோர்க்கு – நன்மதிவெண்பா:1 2/1
பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – திருக்குறள்குமரேசவெண்பா:19 187/3
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – திருக்குறள்குமரேசவெண்பா:62 615/3,4
கண் அன்ன கேளிர் வரின் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1267/4

மேல்

கேளீர் (1)

இரவலர்-தம்மை எள்ளும் ஏழைகாள் இயம்ப கேளீர்
நரகை மோக்கத்தை விற்க நண்ணிய வணிகர் அன்னார் – நீதிநூல்:39 387/1,2

மேல்

கேளுங்கள் (1)

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டு இங்கு – நல்வழி:1 22/2

மேல்

கேளும் (1)

கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை – வெற்றிவேற்கை:1 48/1

மேல்

கேளேல் (2)

தையல் சொல் கேளேல் – ஆத்திசூடி:1 63/1
ஏதெனினும் தையல் சொல் கேளேல் – ஆத்திசூடிவெண்பா:1 62/4

மேல்