ஓ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 2
ஓஒ 5
ஓஒதல் 1
ஓகைகொண்டான் 2
ஓகைசெய்து 1
ஓகையாய் 1
ஓகையொடு 1
ஓங்க 2
ஓங்கல் 1
ஓங்கலாம் 1
ஓங்கி 3
ஓங்கிட 1
ஓங்கிநிற்கும் 1
ஓங்கிய 5
ஓங்கினார் 1
ஓங்கு 11
ஓங்குதலில் 1
ஓங்கும் 2
ஓங்குவர் 1
ஓச்சி 3
ஓச்சும் 1
ஓசை 6
ஓட்டல் 2
ஓட்டால் 1
ஓட்டு 1
ஓட்டும் 1
ஓட்டை 1
ஓட 5
ஓடதியை 1
ஓடல் 1
ஓடவும் 1
ஓடா 3
ஓடாக 1
ஓடாது 1
ஓடி 15
ஓடியும் 1
ஓடியே 1
ஓடிவந்தோம் 1
ஓடினர் 1
ஓடினேன் 1
ஓடு 4
ஓடுகின்ற 1
ஓடும் 9
ஓடைகிழார் 1
ஓத்து 1
ஓத்தும் 1
ஓத 4
ஓதல் 4
ஓதலின் 1
ஓதலினால் 1
ஓதலும் 1
ஓதா 3
ஓதாதார்க்கு 1
ஓதாது 1
ஓதாமல் 1
ஓதார் 1
ஓதி 10
ஓதிடாது 1
ஓதிடின் 1
ஓதிடும் 1
ஓதிய 3
ஓதியது 1
ஓதியதும் 1
ஓதியர்க்கு 1
ஓதியும் 2
ஓதில் 5
ஓதின் 2
ஓதினும் 2
ஓது 20
ஓது-மின் 1
ஓதுகின்ற 1
ஓதுங்கால் 1
ஓதுதல் 1
ஓதும் 11
ஓதுமால் 1
ஓதுவது 3
ஓதுவர் 2
ஓதுவாரால் 1
ஓதுவித்த 2
ஓம்பப்படும் 2
ஓம்பல் 16
ஓம்பற்கு 1
ஓம்பா 5
ஓம்பாதார்க்கு 1
ஓம்பாது 2
ஓம்பாமையாம் 1
ஓம்பார் 1
ஓம்பாரேல் 1
ஓம்பி 29
ஓம்பின் 2
ஓம்பினும் 1
ஓம்பு 1
ஓம்புக 5
ஓம்புகின்றாய் 1
ஓம்புதல் 5
ஓம்புதற்கு 1
ஓம்புதற்கே 1
ஓம்பும் 4
ஓம்புவரால் 2
ஓம்புவரோ 1
ஓம்புவான் 4
ஓய்தல் 1
ஓய்ந்திராது 1
ஓய்ந்து 2
ஓய 1
ஓயா 1
ஓயாமல் 2
ஓயின் 1
ஓயுமோ 1
ஓர் 204
ஓர்த்து 2
ஓர்த்துடையனேனும் 1
ஓர்தும் 1
ஓர்ந்த 1
ஓர்ந்தவுடன் 1
ஓர்ந்தார் 1
ஓர்ந்தாள் 1
ஓர்ந்தான் 3
ஓர்ந்து 29
ஓர்ந்தும் 1
ஓர்ந்துவைத்தும் 1
ஓர்ந்தே 3
ஓர்ப்பு 1
ஓர்பால் 3
ஓர்பொழுது 1
ஓர்வதாம் 1
ஓர்வன் 1
ஓரகத்து 1
ஓரத்து 1
ஓரம் 5
ஓரம்சொன்னார் 1
ஓரமே 1
ஓரா 2
ஓராது 1
ஓராய் 1
ஓரார் 3
ஓரி 4
ஓரிடத்தே 1
ஓரியே 1
ஓரில் 2
ஓரின் 1
ஓருங்கால் 2
ஓரும் 5
ஓலை 1
ஓவா 4
ஓவாது 4
ஓவாதே 2
ஓவாமல் 1
ஓவி 1
ஓவிய 1
ஓவியத்தை 1
ஓவியமே 2
ஓவியர் 1
ஓறுத்தார்க்கு 1

ஓ (2)

ஊற்றம் இறந்து உறுதிகொள்ளாக்கால் ஓ கொடிதே – அறநெறிச்சாரம்:1 114/3
ஒரு தரமோ பல தரம் நீ ஓ அக்காள் அக்காள் என்று – நீதிநூல்:12 136/3

மேல்

ஓஒ (5)

ஓஒ கொடிது கொடிது அம்மா நா கொன்று – நீதிநெறிவிளக்கம்:1 67/2
ஒள்_நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/3
ஒள்_நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/3
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1176/3
ஓஒ உளரே அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/4

மேல்

ஓஒதல் (1)

ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:66 653/3

மேல்

ஓகைகொண்டான் (2)

யோசனை கந்தியினை காண்டலும் பேர் ஓகைகொண்டான்
தூசு அணையா சந்தனுத்தான் சோமேசா நேசமுடன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 129/1,2
கோன் ஓகைகொண்டான் குமரேசா ஆன – திருக்குறள்குமரேசவெண்பா:128 1273/2

மேல்

ஓகைசெய்து (1)

உள் இகழ்ந்த வாகனிடம் ஓகைசெய்து கோமுகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 829/1

மேல்

ஓகையாய் (1)

ஓகையாய் அரு விடம் உணவில் இட்டு அவன் – நீதிநூல்:24 278/3

மேல்

ஓகையொடு (1)

ஓகையொடு நாதன்-பால் உள்ளன்பில்லாளோடு – நன்மதிவெண்பா:1 97/1

மேல்

ஓங்க (2)

சீர் அணிந்து நாளும் சிறந்து ஓங்க ஆரம் – ஆத்திசூடிவெண்பா:1 10/2
புற்று ஓங்க ஏனோ பொறி அடங்கி வால்மீகர் – திருக்குறள்குமரேசவெண்பா:13 126/1

மேல்

ஓங்கல் (1)

ஓங்கல் என நன்மதியே ஓது – நன்மதிவெண்பா:1 103/4

மேல்

ஓங்கலாம் (1)

உட்புறத்தினையே திருப்பிடில் ஓங்கலாம் மல காடு சூழ் – நீதிநூல்:29 320/3

மேல்

ஓங்கி (3)

வானுற ஓங்கி வளம் பெற வளரினும் – வெற்றிவேற்கை:1 16/2
சுகம் அறம் மறம் ஓர்ந்து ஆவி தூங்கினும் தூங்காது ஓங்கி
அகலுறும் உன்னை செய்தோன் அவன்-கொல் மற்று எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:47 545/3,4
ஓங்கி வளரல் ஒடிதற்காம் தாழ்மையுறல் – நன்மதிவெண்பா:1 103/3

மேல்

ஓங்கிட (1)

பம்பிய கொம்பு ஓங்கிட பன்னமும் செழிக்குமால் – நீதிநூல்:47 596/2

மேல்

ஓங்கிநிற்கும் (1)

பெரு நிலம் எங்கும் இன்பம் பெருக்கெடுத்து ஓங்கிநிற்கும்
கருணை அம் கடல் ஆடாது கழித்தனை வாழ்நாள் நெஞ்சே – நீதிநூல்:3 28/3,4

மேல்

ஓங்கிய (5)

உறு வலி நல் தவம் ஓங்கிய செல்வம் – அறநெறிச்சாரம்:1 65/2
உவந்து தன் உளத்து ஓங்கிய கற்பு இலா – நீதிநூல்:13 166/1
உன்னுகின்றவன் ஓங்கிய நட்பினோர் – நீதிநூல்:38 382/2
ஓங்கிய அறிவு குன்றும் உலகு எலாம் பழிக்கும்தானே – விவேகசிந்தாமணி:1 21/4
ஓரமே சொல்வார் ஆகில் ஓங்கிய கிளையும் மாண்டு – விவேகசிந்தாமணி:1 69/3

மேல்

ஓங்கினார் (1)

உண்டு என்னும் மாத்திரமே ஓங்கினார் கீசகர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/1

மேல்

ஓங்கு (11)

தாம் ஓங்கு உயர் வரை மேல் சா வீழ்தல் காமம்கொண்டு – அறநெறிச்சாரம்:1 222/2
ஓங்கு காமத்தால் சோம்பினால் உணவினால் ஊங்கு – நீதிநூல்:42 441/1
உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்கொள்ளும் – நன்னெறி:1 8/1
உடற்கு வரும் இடர் நெஞ்சு ஓங்கு பரத்து உற்றோர் – நன்னெறி:1 29/1
ஓங்கு புகழ் வள்ளுவனார் ஓது குறள் மூதுரையா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/3
உலகம் புகழ் பாகை ஓங்கு தொண்டைநாட்டின் – ஆத்திசூடிவெண்பா:0 1/1
உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்கு பனை போல்வரே – நீதிவெண்பா:1 91/1
ஓங்கு குல மணி என்று ஓது – நன்மதிவெண்பா:1 9/4
ஓங்கு அதிகாரத்து வரின் ஊர் குடிகள் தீங்கு இயற்றும் – நன்மதிவெண்பா:1 85/2
உம்பர் உலகு அளவும் ஓங்கு கமலை வெள்ளிஅம்பலவாண – முதுமொழிமேல்வைப்பு:0 1/3
ஓர் நாய் உடைமைக்கும் ஓங்கு புகழ் பத்ரகிரி – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/1

மேல்

ஓங்குதலில் (1)

மிதரா கொள் மகிபன் ஓங்குதலில் செங்கோல் – நன்மதிவெண்பா:1 104/3

மேல்

ஓங்கும் (2)

ஓங்கும் சேய் வாழும் வீயும் உடல் எய்க்கும் பொழுது தம்மை – நீதிநூல்:8 79/2
ஓங்கும் ஔவை சொல் மூதுரை பொருள் பார் பாங்குடைய – ஆத்திசூடிவெண்பா:1 92/2

மேல்

ஓங்குவர் (1)

கணமதில் சேர்ந்தவர் கனம் கொண்டு ஓங்குவர்
குணமிலார் இனம் உறல் குறை உண்டாக்குமே – நீதிநூல்:31 332/3,4

மேல்

ஓச்சி (3)

வண்டு ஓச்சி நின்று உலாம் வாள் ஏர் தடம் கண்ணாள் – அறநெறிச்சாரம்:1 163/3
தண்டு ஓச்சி பின் செல்லும் கூற்று – அறநெறிச்சாரம்:1 163/4
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 562/3

மேல்

ஓச்சும் (1)

எண்ணிய ஈந்தோன் அ தீது எண்ணான்-கொல் செங்கோல் ஓச்சும்
திண்ணியன் தண்டியான்-கொல் தீதிலான் தீதை சீறாது – நீதிநூல்:47 555/2,3

மேல்

ஓசை (6)

வாள் ஏறோடு ஓசை விளைநிலம் இவ் அல்லால் – அறநெறிச்சாரம்:1 127/3
வதிரர் பேராழி ஓசை மாறியது என்னல் போலும் – நீதிநூல்:2 14/2
கொண்டு அறி மூக்கும் ஓசை கொழும் சுவை பரிசம் எல்லாம் – நீதிநூல்:47 530/2
வெண்கலத்தின் ஓசை மிகுமே விரி பசும்பொன் – நீதிவெண்பா:1 35/3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 9/3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/3

மேல்

ஓட்டல் (2)

அயர்வாக அடித்து ஓட்டல் அவைகள் குணத்தால் அன்றோ – நீதிநூல்:34 357/2
கயவனையே வைது அடித்து கான் ஓட்டல் நன்றாமே – நீதிநூல்:34 357/4

மேல்

ஓட்டால் (1)

வசையான மண் உண்டு மாயன் ஆனோம் கையில் வாங்கும் ஓட்டால்
இசை மேவும் ஈசன் ஆனோம் புவியில் நமை ஒப்பார் எவர்தாம் அம்மா – நீதிநூல்:44 486/3,4

மேல்

ஓட்டு (1)

ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:78 775/4

மேல்

ஓட்டும் (1)

கவியம்_இல் புரவி வைத்து ஓட்டும் காட்சியே – நீதிநூல்:9 92/4

மேல்

ஓட்டை (1)

உள்ள செவி இருந்தும் ஓட்டை என ஏனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/1

மேல்

ஓட (5)

ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் – மூதுரை-வாக்குண்டாம்:1 16/3
துன்னுபு தங்க ஓட தொழில் பல இயற்ற தக்க – நீதிநூல்:47 531/3
மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள – விவேகசிந்தாமணி:1 77/2
நாடு ஓடும் போது நடு ஓட வேண்டும் என்று – ஆத்திசூடிவெண்பா:1 66/1
காலனையும் தோற்று ஓட காணுதலால் ஞாலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 121/2

மேல்

ஓடதியை (1)

ஓடதியை உள்ளத்து உவகையொடு நன்மதியே – நன்மதிவெண்பா:1 50/3

மேல்

ஓடல் (1)

உள்ள அங்கணம் கசிந்து ஓடல் போல் ஒரு – நீதிநூல்:22 261/1

மேல்

ஓடவும் (1)

நடக்கவும் ஓடவும் நனி உறுப்புகள் – நீதிநூல்:25 286/2

மேல்

ஓடா (3)

ஊர்ந்தவுடன் ஓடா உழை புரவி நன்மதியே – நன்மதிவெண்பா:1 2/3
கடல் ஓடா கால் வல் நெடும் தேர் கடல் ஓடும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 496/3
நாவாயும் ஓடா நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:50 496/4

மேல்

ஓடாக (1)

ஓடாக உடையின் ஒன்றுக்கு உதவும் வீழ் மரம் கல்லும் உபயோகம்தான் – நீதிநூல்:41 422/2

மேல்

ஓடாது (1)

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது – கொன்றைவேந்தன்:1 73/1

மேல்

ஓடி (15)

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல் உலகில் – மூதுரை-வாக்குண்டாம்:1 10/1,2
கடல் ஓடி மீண்டும் கரையேறினால் என் – நல்வழி:1 6/3
பறை அறைந்தாங்கு ஓடி பரக்கும் கழி முடை – நீதிநெறிவிளக்கம்:1 94/2
கண் ஓடி கண்டதே கண்டு – அறநெறிச்சாரம்:1 41/4
வேட்டு அவாய் கேட்பர் விரைந்து ஓடி ஞாலத்தார் – அறநெறிச்சாரம்:1 111/1
எருத்தம் மிசை தந்தையினை சுமந்து ஓடி ஒருவன் ஒன்னார் இடரை தீர்த்தான் – நீதிநூல்:8 83/2
ஓடி எங்கும் உலரும் பைங்கூழ்களை – நீதிநூல்:39 400/1
சிந்துர கயல் கண் ஓடி செவி-தனக்கு உரைத்தது அம்மா – விவேகசிந்தாமணி:1 100/4
பெற்ற இளம் கன்றை பிரியாமல் பின் ஓடி
சுற்று பசு போல் தொடர்ந்து – நீதிவெண்பா:1 58/3,4
கூடி இன்பு ஆர் தந்தை குமரேசா ஓடி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/2
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
தீவினை செய்யான் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/3,4
கொண்டு ஓடி மாய்ந்தார் குமரேசா மண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 285/2
ஓடி ஒழி-மின் என ஒன்னலர் முன் ஏன் விபுலன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/1
ஓடி வந்தான் குமரேசா கொண்டுவந்த – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/2
வேல் வீச வாள் அரக்கன் மேல் ஓடி ஏன் இளையோன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 775/1

மேல்

ஓடியும் (1)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு – கொன்றைவேந்தன்:1 39/1

மேல்

ஓடியே (1)

கூடினன் ஏன் தத்தன் குமரேசா ஓடியே
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/2,3

மேல்

ஓடிவந்தோம் (1)

தெரியாமல் உயிர்தப்பி ஓடிவந்தோம் அங்கு உறில் எம் சீவன் போமே – நீதிநூல்:44 489/4

மேல்

ஓடினர் (1)

மேவி ஓடினர் சினமுற்று இவர் ஆர் என்றேன் மாமி விரைவாய் வந்து – நீதிநூல்:44 481/2

மேல்

ஓடினேன் (1)

கலவி-தனக்கு அஞ்சி மீண்டு ஓடினேன் அவள் சுதையை கண்டிலேனே – நீதிநூல்:44 504/4

மேல்

ஓடு (4)

ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் – மூதுரை-வாக்குண்டாம்:1 16/3
எளியராய் ஓடு ஒன்று ஏந்தி இங்கு உதித்தவரும் இல்லை – நீதிநூல்:14 183/2
ஓடு மற்ற மருகர்க்கு ஆம் நான்றுகொள் நீ என கயிறு ஒன்று உதவினாளே – நீதிநூல்:44 485/4
தருவான போச கொடை உன் கை ஓடு என் கை தந்தனனே – விவேகசிந்தாமணி:1 131/4

மேல்

ஓடுகின்ற (1)

சுவை உணவுதான் இருக்க மலம் தேடி ஓடுகின்ற சுணங்கன் போலும் – நீதிநூல்:44 484/1

மேல்

ஓடும் (9)

ஓடும் மனனே விடுத்து என்னை விரைந்து நீ – அறநெறிச்சாரம்:1 91/3
ஓத அரு விசையொடும் ஓடும் நாள் என – நீதிநூல்:20 239/1
சுற்றியே ஓடும் கத்தும் துன்புறும் வயிற்றை காலால் – நீதிநூல்:45 519/2
நாடு ஓடும் போது நடு ஓட வேண்டும் என்று – ஆத்திசூடிவெண்பா:1 66/1
ஓடும் என்று நெஞ்சில் உணர் – நன்மதிவெண்பா:1 46/4
உண்ணல் இன்றி கூட்டும் பொன் ஓடும் காண் நன்மதியே – நன்மதிவெண்பா:1 57/3
கூடினர் நீள் வாழ்வை குமரேசா ஓடும்
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க – திருக்குறள்குமரேசவெண்பா:1 6/2,3
கூடினார் என்னே குமரேசா ஓடும்
மனத்துக்-கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 34/2,3
கடல் ஓடா கால் வல் நெடும் தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:50 496/3,4

மேல்

ஓடைகிழார் (1)

பண்டு வறுமை படு துயர் என்று ஓடைகிழார்
கொண்டு உழந்தார் என்னே குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:105 1041/1,2

மேல்

ஓத்து (1)

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:14 134/3

மேல்

ஓத்தும் (1)

ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள் வழி – அறநெறிச்சாரம்:1 76/3

மேல்

ஓத (4)

உண்டவர்-தமை கொலும் ஓத வெவ் விடம் – நீதிநூல்:13 162/1
ஓத அரு விசையொடும் ஓடும் நாள் என – நீதிநூல்:20 239/1
ஓத விடம் உண்ணின் விழியுடையாரும் உண்ணுவரோ உலப்பு_இல் செந்நெல் – நீதிநூல்:32 340/3
உற்று அடைந்தார் சீவகன் சீர் ஓத உவந்தாள் என்னே – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/1

மேல்

ஓதல் (4)

ஓதல் போல் தெய்வம்தான் ஒன்று உளது எனல் தேற்றம் அம்மா – நீதிநூல்:2 11/4
ஒன்று உற தன் துதி ஓதல் ஊர்ந்து தான் – நீதிநூல்:37 370/2
பிச்சைகொண்டெனினும் ஓதல் பெற்றவர் கடனாம் அன்றேல் – நீதிநூல்:47 591/3
ஒள்ளியனாய் வந்து நின்றும் ஓதல் இலா நந்தனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 404/1

மேல்

ஓதலின் (1)

ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் – கொன்றைவேந்தன்:1 11/1

மேல்

ஓதலினால் (1)

மச்சகந்தி-தன் வயிற்றில் வந்து உதித்தும் ஓதலினால்
விச்சை பெற்ற வேத வியாசனை பார் நிச்சயமே – ஆத்திசூடிவெண்பா:1 11/1,2

மேல்

ஓதலும் (1)

ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால் – அறநெறிச்சாரம்:1 87/1

மேல்

ஓதா (3)

காலையும் மாலையும் நான்மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே – வெற்றிவேற்கை:1 65/1,2
ஓதா நாள் ஓது கலை ஒத்து இளைத்தாள் சீதை என்றான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 124/1
மா குரவர்-பால் ஓதா வாயும் இசை மோகமுற – நன்மதிவெண்பா:1 99/2

மேல்

ஓதாதார்க்கு (1)

ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம் – கொன்றைவேந்தன்:1 91/1

மேல்

ஓதாது (1)

செவியின் ஓதாது ஒரு சேயை பார் விடல் – நீதிநூல்:9 92/2

மேல்

ஓதாமல் (1)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் – உலகநீதி:1 1/1

மேல்

ஓதார் (1)

பெண்மை வியவார் பெயரும் எடுத்து ஓதார்
கண்ணொடு நெஞ்சு உறைப்ப நோக்குறார் பண்ணொடு – நீதிநெறிவிளக்கம்:1 84/1,2

மேல்

ஓதி (10)

பகை இன்று பல்லார் பழி எடுத்து ஓதி
நகை ஒன்றே நன்பயனா கொள்வான் பயம் இன்று – நீதிநெறிவிளக்கம்:1 72/1,2
ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால் – அறநெறிச்சாரம்:1 87/1
ஓது-மின் ஓதி அடங்கு-மின் என்னும் சொல் – அறநெறிச்சாரம்:1 111/3
உன் பணிக்கு என்று ஓதி நல்கா செல்வம் உத்தியுற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/1
ஓதி மனம் நொந்தே உழல்கின்றான் வேதன் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 47/2
உண்டு இலை என்று ஆகமங்கள் ஓதி மதபேதத்தால் – முதுமொழிமேல்வைப்பு:1 195/1
ஓதி உயர் வீமன் உய்த்த ஒற்றன் ஏன் மற்றவரை – திருக்குறள்குமரேசவெண்பா:59 584/1
கோது அறு சீர் கொண்டார் குமரேசா ஓதி மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:71 710/2
ஓதி உயர் வீடுமர் ஏன் ஒன்றும் உரையாது இருந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:72 714/1
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா – திருக்குறள்குமரேசவெண்பா:84 834/3

மேல்

ஓதிடாது (1)

ஓதியர்க்கு ஓதிடாது ஒழித்தல் மெய்யினில் – நீதிநூல்:10 100/2

மேல்

ஓதிடின் (1)

திருமந்திரம் சொல்வன் என்று ஓதிடின் திண்மை ஆமோ – நீதிநூல்:7 66/2

மேல்

ஓதிடும் (1)

ஓதிடும் ஒப்பு ஒன்று இல்லான் உரு இலான் இரு விண் தங்கும் – நீதிநூல்:3 17/3

மேல்

ஓதிய (3)

ஓதிய பண்டங்கள் தின்று பெருத்து இறந்து பல செந்துக்கு உணவாய் பஞ்சபூதியமாய் – நீதிநூல்:41 433/3
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 26/1
ஓதிய காலம் அதற்கு – அருங்கலச்செப்பு:1 110/2

மேல்

ஓதியது (1)

ஓதியது மீள போய் ஓதியதும் ஏதமாம் – முதுமொழிமேல்வைப்பு:1 131/2

மேல்

ஓதியதும் (1)

ஓதியது மீள போய் ஓதியதும் ஏதமாம் – முதுமொழிமேல்வைப்பு:1 131/2

மேல்

ஓதியர்க்கு (1)

ஓதியர்க்கு ஓதிடாது ஒழித்தல் மெய்யினில் – நீதிநூல்:10 100/2

மேல்

ஓதியும் (2)

ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்கு சோதி – அறநெறிச்சாரம்:1 217/2
உணர்ந்தும் தாம் பிறர்க்கு ஓதியும் நல்வழி – நீதிநூல்:47 585/1

மேல்

ஓதில் (5)

யாதவரை சேர்ந்தான் இரங்கேசா ஓதில்
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/2,3
ஈது அடையார் செய்யார் இரங்கேசா ஓதில்
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/2,3
ஏதம் அன்றோ மேனாள் இரங்கேசா ஓதில்
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 118/2,3
சோதி வழக்கே புகழ்ந்தார் சோமேசா ஓதில்
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 12/2,3
கோது_இல் இன்பம் கொண்டான் குமரேசா ஓதில்
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:76 754/2,3

மேல்

ஓதின் (2)

சூது_இல் சகுந்தலைதான் சோமேசா ஓதின்
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 118/2,3
தாதா எனில் கல்விதான் அகலும் ஓதின் உடன்வந்தோன் – நீதிவெண்பா:1 61/2

மேல்

ஓதினும் (2)

எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என் செய்யும் – அறநெறிச்சாரம்:1 218/1
வந்தித்து ஆய்ந்து ஓதினும் சொல்லினும் கேட்பினும் – அருங்கலச்செப்பு:1 176/1

மேல்

ஓது (20)

புண்ணிய திருமறை பொருளை ஓது புனிதர் – நீதிநூல்:6 58/3
புகவே நல்வழி ஓது புரை அற்ற புனிதர் பொறை சீலம் அன்பு ஈகை புகழ் வாய்மை விரதம் – நீதிநூல்:47 582/3
ஓது அரிதான இல்லற ஒழுக்கமும் – நீதிநூல்:47 593/2
தீது_இல் ஒரு காமம் செய்பவே ஓது கலை – நன்னெறி:1 6/2
ஓங்கு புகழ் வள்ளுவனார் ஓது குறள் மூதுரையா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/3
ஒண் கயல் கண் பாரதியை ஓது மறை நாவில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/1
ஓதா நாள் ஓது கலை ஒத்து இளைத்தாள் சீதை என்றான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 124/1
மூதுணர்ந்தோர் ஓது சில மூதுரையை பேதையேன் – நீதிவெண்பா:0 1/1
ஓது குயில் ஏது அங்கு உதவியது கர்த்தபம்தான் – நீதிவெண்பா:1 4/3
ஒன்று அமையாதோ கரி கன்று ஓது – நீதிவெண்பா:1 54/4
ஓது பொருள் கண்டோர்க்கு உறும் ஆசை நீதி இலா – நீதிவெண்பா:1 62/1
உரத்து அணிய தையா என்று ஓது – நீதிவெண்பா:1 72/4
உண்டு சமிக்குமோ ஓது – நீதிவெண்பா:1 80/4
ஓர்ந்து அவர் அகற்றுவர் என்று ஓது – நன்மதிவெண்பா:1 2/4
ஓங்கு குல மணி என்று ஓது – நன்மதிவெண்பா:1 9/4
ஊதல் என நன்மதியே ஓது – நன்மதிவெண்பா:1 65/4
ஓங்கல் என நன்மதியே ஓது – நன்மதிவெண்பா:1 103/4
எங்கும் இறை தோய்ந்தாலும் தோய்வு இலன் என்று ஓது தமிழ் – முதுமொழிமேல்வைப்பு:1 57/1
ஓது புகழ் கொள்ளா உலகன் இளவெளிமான் – திருக்குறள்குமரேசவெண்பா:24 237/1
ஓது பொருள் ஒன்றே உயர்ந்தது என மாயை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 751/1

மேல்

ஓது-மின் (1)

ஓது-மின் ஓதி அடங்கு-மின் என்னும் சொல் – அறநெறிச்சாரம்:1 111/3

மேல்

ஓதுகின்ற (1)

ஓதுகின்ற இ நூற்கு உறுதுணையா சோதி மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/2

மேல்

ஓதுங்கால் (1)

ஈதல் அழகு என்றான் இரங்கேசா ஓதுங்கால்
நன்றே தரினும் நடு இகந்து ஆம் ஆக்கத்தை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/2,3

மேல்

ஓதுதல் (1)

சகத்தினில் குருசாமி என்று ஓதுதல்
சுகத்தை நீங்கி துயரம் செறி நரர் – நீதிநூல்:7 71/2,3

மேல்

ஓதும் (11)

நித்தனை கண்ணில் காணா நீர்மையால் இலன் என்று ஓதும்
பித்தரில் பித்தர் பாரில் பேசிட உளரோ அம்மா – நீதிநூல்:2 15/3,4
ஏதம் கெடுத்தான் இரங்கேசா ஓதும்
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 7/2,3
பாவ வித்து என்று ஓதும் பழ மறைகள் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 97/2
வித்தகநூல் ஓதும் விரித்து – நீதிவெண்பா:1 90/4
ஓதும் உறவினர் இல் உற்று அழுங்கேல் ஏதிலர்க்கு உன் – நன்மதிவெண்பா:1 95/2
ஆதிசைவர் மேல் என்றதனை மறுத்து ஓதும்
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் – முதுமொழிமேல்வைப்பு:1 43/2,3
கோது அகல கொண்டாள் குமரேசா ஓதும்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் – திருக்குறள்குமரேசவெண்பா:10 98/2,3
கோது மிக உற்றான் குமரேசா ஓதும்
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை – திருக்குறள்குமரேசவெண்பா:15 142/2,3
கோது கொண்டும் என்னே குமரேசா ஓதும்
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/2,3
கோது இன்றி காத்தார் குமரேசா ஓதும்
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/2,3
நின்றாள் என்னே குமரேசா ஓதும்
உரன் நசைஇ உள்ளம் துணையாக சென்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1263/2,3

மேல்

ஓதுமால் (1)

வேதமே ஓதுமால் விளக்கும் சோதரர் – நீதிநூல்:11 105/3

மேல்

ஓதுவது (3)

ஓதுவது ஒழியேல் – ஆத்திசூடி:1 11/1
ஓதுவது ஒழியேல் – ஆத்திசூடிவெண்பா:1 11/4
தான் ஓதுவது வேதம் – ஆத்திசூடிவெண்பா:1 108/4

மேல்

ஓதுவர் (2)

மெய் மா மறையின் பயன் ஓதுவர் மேன்மையோரே – நீதிநூல்:6 63/4
மனிதர் கோள் மருவுநர்-தமை கொண்டு ஓதுவர்
புனிதம்_இல் இடையின் வீழ் பொரு_இல் வாச தீம் – நீதிநூல்:31 331/1,2

மேல்

ஓதுவாரால் (1)

பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கும் அவர் ஓர் பதி ஆகி விதி ஆகி மதி ஓதுவாரால் – நீதிநூல்:47 582/4

மேல்

ஓதுவித்த (2)

சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி – உலகநீதி:1 11/4
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன் – உலகநீதி:1 13/3

மேல்

ஓம்பப்படும் (2)

உயிரினும் ஓம்பப்படும் – முதுமொழிமேல்வைப்பு:1 28/4
உயிரினும் ஓம்பப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:14 131/4

மேல்

ஓம்பல் (16)

உண் விழைவார்க்கு இல்லை உயிர் ஓம்பல் எப்பொழுதும் – அறநெறிச்சாரம்:1 104/2
ஒன்றாக நல்லது உயிர் ஓம்பல் ஆங்கு அதன் பின் – அறநெறிச்சாரம்:1 180/1
நன்மையா இடர் இன்றி நன்கு ஓம்பல் போல் – நீதிநூல்:12 154/2
உடல் உறுப்புகள் மேல் கீழ் என்று உன்னிடாது ஓம்பல் போலும் – நீதிநூல்:14 181/1
முந்தை இறைக்கு அன்பு பின்பு தன் உயிர் போல் மன் உயிரை முறையின் ஓம்பல்
இந்த இரு விதிகளினுள் வேதம் எலாம் அடங்கும் மனம் இன்பம் மேவ – நீதிநூல்:43 460/1,2
அரிவையர் அவ் அனை தந்தை அனையர் என நினைத்து ஓம்பல் அழகாம் நெஞ்சே – நீதிநூல்:47 587/4
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 65/4
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – முதுமொழிமேல்வைப்பு:1 101/4
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – முதுமொழிமேல்வைப்பு:1 102/4
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:5 43/4
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/3
வினைக்-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை – திருக்குறள்குமரேசவெண்பா:62 612/3
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:65 642/4
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ – திருக்குறள்குமரேசவெண்பா:82 820/3
ஊன் ஓம்பல் கைவிட்டு உயிர் துறந்தான் மானம் எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/1
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1155/3

மேல்

ஓம்பற்கு (1)

தேம்படு தெள் நீர் அமுதமாம் ஓம்பற்கு
ஒளியாம் உயர்ந்தார்-கண் ஞானம் அது போல் – அறநெறிச்சாரம்:1 188/2,3

மேல்

ஓம்பா (5)

கைத்தலத்து ஏந்தி காத்த காதல் தாய் பிதாவை ஓம்பா
பித்தரை அத்தன் கொன்று பெரு நரகு அழல் சேர்ப்பானே – நீதிநூல்:8 77/3,4
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 87/3,4
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை – முதுமொழிமேல்வைப்பு:1 134/3,4
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்-கண் உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:9 89/3,4
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை – திருக்குறள்குமரேசவெண்பா:87 861/3,4

மேல்

ஓம்பாதார்க்கு (1)

மன்பதை ஓம்பாதார்க்கு என் ஆம் வய படை மற்று – நீதிநெறிவிளக்கம்:1 27/3

மேல்

ஓம்பாது (2)

வருந்தி தாம் கற்றன ஓம்பாது மற்றும் – நீதிநெறிவிளக்கம்:1 8/1
அவயவங்கள் குறைந்தாலும் அதை ஓம்பாது எறிவாரோ அவனி மீதே – நீதிநூல்:12 112/4

மேல்

ஓம்பாமையாம் (1)

கறந்து உண்டு அஃது ஓம்பாமையாம் – அறநெறிச்சாரம்:1 155/4

மேல்

ஓம்பார் (1)

கொலை அஞ்சார் பொய் நாணார் மானமும் ஓம்பார்
களவு ஒன்றோ ஏனையவும் செய்வார் பழியோடு – நீதிநெறிவிளக்கம்:1 78/1,2

மேல்

ஓம்பாரேல் (1)

இளமையில் உறும் துன்பங்கட்கு இடைந்து சற்று உனை ஓம்பாரேல்
வளருவாய்-கொல் நீ இன்னே வாழ்வை-கொல் முனிவை-கொல்லோ – நீதிநூல்:47 586/3,4

மேல்

ஓம்பி (29)

விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும் – நீதிநெறிவிளக்கம்:1 17/1
மடி கொன்று பால் கொளலும் மாண்பே குடி ஓம்பி
கொள்ளுமா கொள்வோற்கு காண்டுமே மா நிதியம் – நீதிநெறிவிளக்கம்:1 28/2,3
சொல் ஒன்றின் யாப்பார் பரிந்து ஓம்பி காப்பவே – நீதிநெறிவிளக்கம்:1 54/3
தான் ஓம்பி காத்தல் தலை – நீதிநெறிவிளக்கம்:1 61/4
தீ ஓம்பி வான் வழக்கம் காண்பாரை ஒப்பவே – நீதிநெறிவிளக்கம்:1 96/3
ஊன் ஓம்பி ஊன் தின்பவர் – நீதிநெறிவிளக்கம்:1 96/4
பாவம் பெருக பழி பெருக தன் ஓம்பி
ஆவது ஒன்று இல்லை அறன் அழித்து பாவம் – அறநெறிச்சாரம்:1 27/1,2
ஒவ்வா உயிர் ஓம்பி உள் தூய்மை பெற்றதே – அறநெறிச்சாரம்:1 40/3
மால் கடல் சூழ் வையத்து மை ஆ தாம் காத்து ஓம்பி
பால் கருதி அன்னது உடைத்து என்பர் மேல் வகுத்து – அறநெறிச்சாரம்:1 55/1,2
வினை காத்து வந்த விருந்து ஓம்பி நின்றான் – அறநெறிச்சாரம்:1 158/1
மெல் இயல் நல்லாளும் நல்லள் விருந்து ஓம்பி
சொல் எதிர் சொல்லாள் எனில் – அறநெறிச்சாரம்:1 158/3,4
உறுதிக்குறுதி உயிர் ஓம்பி வாழ்தல் – அறநெறிச்சாரம்:1 192/2
அதி தயையொடு நன்கு ஓம்பி ஆண்டிட கடனாம் மாதோ – நீதிநூல்:14 187/4
நெடுமையாம்காறும் நன்கு ஓம்பி நிற்குமால் – நீதிநூல்:47 588/2
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/3
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 25/3
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 55/3
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/3
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/3,4
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி
மிச்சில் மிசைவான் புலம் – திருக்குறள்குமரேசவெண்பா:9 85/3,4
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:9 86/3
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பார் விருந்தோம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/3
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:14 132/3
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி
தேரினும் அஃதே துணை – திருக்குறள்குமரேசவெண்பா:14 132/3,4
மாசில் சுதத்தர் வசவர் உயிர் ஓம்பி
கூசாது ஏன் நின்றார் குமரேசா நேசமுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/1,2
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/3
உற்ற குடிகளை ஓம்பி ஏன் வச்சந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 549/1
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல் – திருக்குறள்குமரேசவெண்பா:55 549/3
காமர் குணவதி ஏன் கைவிடாது ஓம்பி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1245/1

மேல்

ஓம்பின் (2)

ஓம்பின் மற்று என்னை உறுதிக்-கண் நில்லாக்கால் – அறநெறிச்சாரம்:1 133/3
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1155/3

மேல்

ஓம்பினும் (1)

இன் உயிர் ஓம்பினும் ஓம்புக பின்னர் – நீதிநெறிவிளக்கம்:1 40/2

மேல்

ஓம்பு (1)

அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/3

மேல்

ஓம்புக (5)

இன் உயிர் ஓம்பினும் ஓம்புக பின்னர் – நீதிநெறிவிளக்கம்:1 40/2
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 87/3
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா – முதுமொழிமேல்வைப்பு:1 134/3
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/3
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா – திருக்குறள்குமரேசவெண்பா:87 861/3

மேல்

ஓம்புகின்றாய் (1)

உரிய அறம் புரியாமல் உடலினை நீ ஓம்புகின்றாய் உள்ள பேயே – நீதிநூல்:43 458/4

மேல்

ஓம்புதல் (5)

சிறிய பகை எனினும் ஓம்புதல் தேற்றார் – நீதிநெறிவிளக்கம்:1 53/1
சீவன் சும்மா இருக்க தேகம் உழைத்து ஓம்புதல் போல் – நீதிநூல்:5 53/2
நீடு நாரொடு ஓம்புதல் நீதி என்னின் ஒருவயிற்று – நீதிநூல்:47 598/2
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/3
ஓம்புதல் தேற்றாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/4

மேல்

ஓம்புதற்கு (1)

ஒற்றி உடம்பு ஓம்புதற்கு – அறநெறிச்சாரம்:1 131/4

மேல்

ஓம்புதற்கே (1)

ஊன் உடம்பு என்று புகழுடம்பு ஓம்புதற்கே
தான் உடம்பட்டார்கள் தாம் – நீதிநெறிவிளக்கம்:1 39/3,4

மேல்

ஓம்பும் (4)

ஊன் ஓம்பும் வாழ்வும் உரிமை விற்று உண்பதூஉம் – நீதிநெறிவிளக்கம்:1 61/3
மன் உயிர் ஓம்பும் தகைத்தே காண் நல் ஞானம்-தன்னை – அறநெறிச்சாரம்:1 186/3
தந்தை போல் தாய் போல் எவரையும் ஓம்பும் தன்மையனே இறை அன்றோ – நீதிநூல்:4 37/4
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/3

மேல்

ஓம்புவரால் (2)

ஆதரமோடு ஓம்புவரால் ஆர்வலன்-பால் அன்புடைய – நீதிநூல்:12 145/2
ஒருமையொடு மன்னானை உயர் குடிகள் ஓம்புவரால் – நீதிநூல்:47 580/4

மேல்

ஓம்புவரோ (1)

பொய் குடில் ஓம்புவரோ போதத்தால் தாம் வேய்ந்த – நீதிநெறிவிளக்கம்:1 86/3

மேல்

ஓம்புவான் (4)

வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 9/3
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – முதுமொழிமேல்வைப்பு:1 20/3
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:9 83/3
நல் விருந்து ஓம்புவான் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:9 84/4

மேல்

ஓய்தல் (1)

ஓய்தல் ஒழி – புதிய-ஆத்திசூடி:1 11/1

மேல்

ஓய்ந்திராது (1)

உள்ளம் மடிந்து இல்லை என ஓய்ந்திராது ஏன் காரி – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/1

மேல்

ஓய்ந்து (2)

ஆய்ந்து ஓய்ந்து செய்யாது அவசரத்தின் ஆற்றுதலால் – நன்மதிவெண்பா:1 48/1
வாய்ந்த கருமம் சிதைந்து மாயுமே ஆய்ந்து ஓய்ந்து
செய்யின் சிதைந்ததும் நல் சீர்த்தியுற்று நன்மதியே – நன்மதிவெண்பா:1 48/2,3

மேல்

ஓய (1)

ஓய பாரில் உறும் தெவ்வர்-தம்மொடும் – நீதிநூல்:13 167/1

மேல்

ஓயா (1)

அலமாய் அறாது ஓயா கவலை பிணி பிடகர் பலர் அருகில் வேண்டும் – நீதிநூல்:40 417/2

மேல்

ஓயாமல் (2)

பொங்கு அலை ஆழி தாண்டி பொருப்புகள் கடந்து ஓயாமல்
அங்குமிங்கும் திரிந்தே அழிந்துபோம் உடலை காப்பாய் – நீதிநூல்:3 31/1,2
தினமும் விரேசனம் கொளினும் ஓயாமல் மலமாரி திரளா பெய்யும் – நீதிநூல்:41 421/1

மேல்

ஓயின் (1)

நண்ணிய கரம் சற்று ஓயின் நழீஇ ஒன்றோடொன்று மோதி – நீதிநூல்:3 21/2

மேல்

ஓயுமோ (1)

துக்கம் ஓயுமோ சொல் என் நெஞ்சமே – நீதிநூல்:27 307/4

மேல்

ஓர் (204)

நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர் – வெற்றிவேற்கை:1 50/2
வழிவழி ஈர்வது ஓர் வாள் ஆகும்மே – வெற்றிவேற்கை:1 75/6
மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம் முற்ற – நீதிநெறிவிளக்கம்:1 12/2
வெற்றுரைக்கு உண்டு ஓர் வலியுடைமை சொற்ற நீர் – நீதிநெறிவிளக்கம்:1 20/2
களைகணா தம் அடைந்தார்க்கு உற்றுழியும் மற்று ஓர்
விளைவு உன்னி வெற்றுடம்பு தாங்கார் தளர் நடையது – நீதிநெறிவிளக்கம்:1 39/1,2
என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின் இல் அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 80/3
அன்பு நீர் பாய்ச்சி அற கதிர் ஈன்றது ஓர்
பைங்கூழ் சிறுகாலை செய் – அறநெறிச்சாரம்:1 16/3,4
அற கருமம் ஆராய்ந்து செய்க பிறப்பிடைக்கு ஓர்
நெஞ்சு ஏமாப்பு இல்லாதான் வாழ்க்கை நிரயத்து – அறநெறிச்சாரம்:1 25/2,3
நோவகமாய் நின்றான் ஓர் கூத்தினை ஊர் வேண்டி – அறநெறிச்சாரம்:1 53/3
அச்சாணி அன்னது ஓர் சொல் – அறநெறிச்சாரம்:1 79/4
தனக்கு தகவல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றால் – அறநெறிச்சாரம்:1 88/1
நாடிக்கொள் மற்று ஓர் இடம் – அறநெறிச்சாரம்:1 91/4
செயிரிடை பாடு எய்துமாம் சீவன் வயிறும் ஓர்
பெற்றியால் ஆர்த்தி பெரும் பயன் கொள்வதே – அறநெறிச்சாரம்:1 135/2,3
அவா பெருகி அற்றம் தருமால் புகாவும் ஓர்
பெற்றியான் ஊட்டி பெரும் பயன் கொள்வதே – அறநெறிச்சாரம்:1 137/2,3
பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 140/1
துறக்கம் திறப்பது ஓர் தாழ் – அறநெறிச்சாரம்:1 143/4
முற்பிறப்பில் தாம் செய்த புண்ணியத்தின் நல்லது ஓர்
இல் பிறந்து இன்புறாநின்றவர் இ பிறப்பே – அறநெறிச்சாரம்:1 154/1,2
உடம்பும் பொருளும் உடையான் ஓர் நன்மை – அறநெறிச்சாரம்:1 169/3
வானகத்து வைப்பது ஓர் வைப்பு – அறநெறிச்சாரம்:1 179/4
உரியது ஓர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி – அறநெறிச்சாரம்:1 187/3
உட்கப்படும் எழுத்து ஓர் இரண்டு ஆவதே – அறநெறிச்சாரம்:1 209/1
முப்பெயர் மூன்றும் உடன் கூட்டி ஓர் இடத்து – அறநெறிச்சாரம்:1 210/1
கோவிலை பழிக்கின் ஓர் எண்_குணனையும் பழித்தது ஒப்பாம் – நீதிநூல்:1 6/1
பேச வாய் அறியுமன்றி பின்னை ஓர் புலன் தேராது – நீதிநூல்:2 12/2
உலகம் ஓர் உடம்பாய் அந்த உடம்பு எலாம் வாயாய் நித்தம் – நீதிநூல்:3 23/3
சாரும் ஓர் துயரும் உண்டோ தாயினும் இனிய ஐயன் – நீதிநூல்:3 27/2
சிந்தனை மற்று ஓர் பொருளினில் செலுத்தான் தீமொழி கனவிலும் புகலான் – நீதிநூல்:4 37/3
மானவர் உய்ய ஓர் வழியும் இல்லையே – நீதிநூல்:5 51/4
சின்ன ஓர் பொருள் தந்தோரை சீவன் உள்ளளவும் உள்ளத்து – நீதிநூல்:8 74/1
ஈங்கு எதிருதவி வெஃகாது எவரும் ஓர் உதவிசெய்யார் – நீதிநூல்:8 79/1
மனையவள் வீயின் வேறு ஓர் மனைவியை கொளலாம் பெற்ற – நீதிநூல்:8 82/1
புனை பொருள் நீங்கின் மற்று ஓர் பொருளையும் பெறலாம் அத்தன் – நீதிநூல்:8 82/3
தாலம் மேல் செல்வமா வளர்த்தல் தங்கட்கு ஓர்
காலனை வளர்க்கின்ற காட்சி போலுமே – நீதிநூல்:9 86/3,4
கலை உணர்ந்து அறியாத ஓர் கன்னியை – நீதிநூல்:10 102/1
ஓர் இழை அறுத்திடல் எளிது ஒன்றாகவே – நீதிநூல்:11 108/1
தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல – நீதிநூல்:12 109/2
புரவிகள் போல் காந்தனும் காந்தையும் அமைந்தார் மனம் ஒத்து ஓர் போக்கை நாடி – நீதிநூல்:12 116/2
ஏந்தலாம் தந்தையை தாய் சகியர் கோயிலை விட்டு ஓர் எளியர் சிற்றில் – நீதிநூல்:12 122/1
தோழி கேள் உனக்கும் ஓர் துணைவன் உண்டு அவன் – நீதிநூல்:12 127/1
கர வாளை உருவி நின்றாய் கற்பினுக்கு ஓர் குறைவு இன்றி – நீதிநூல்:12 138/3
புன் நகையும் நண்பரின் ஓர் புன்னகைக்கு நிகர் ஆமோ – நீதிநூல்:12 140/4
தருமநிலை மூர்த்தி என்றாள் சதி இவட்கு ஓர் குறை உளதோ – நீதிநூல்:12 148/4
பண்டு ஓர் ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மணம் இயற்றி பரன் இரக்கம்கொண்டு – நீதிநூல்:13 157/1
ஒருவரும் அறிகிலார் என ஓர் ஒள்_நுதல் – நீதிநூல்:13 158/1
ஓர் பிழை குருவே செய்யின் ஒன்பது பிழைகள் செய்ய – நீதிநூல்:13 170/1
மக்கள் யாவரும் ஓர் அன்னை வயிற்றிடை உதித்ததால் இ – நீதிநூல்:14 178/1
முன்னம் ஓர் பொய் உரைக்க அ பொய் வெளியாகாமல் மூடும் வண்ணம் – நீதிநூல்:16 195/1
பின்னும் ஓர் பொய் உரைக்க அதையும் நிலைநிறுத்த ஓர் பெரும் பொய் சொல்ல – நீதிநூல்:16 195/2
பின்னும் ஓர் பொய் உரைக்க அதையும் நிலைநிறுத்த ஓர் பெரும் பொய் சொல்ல – நீதிநூல்:16 195/2
பயன் வேண்டி சிறியது ஓர் பொய் சொலினும் பெரும் பழியாம் பார் மேல் கீழாய் – நீதிநூல்:16 202/3
வியன் உலகு எங்கணும் வீற்றிருக்கும் ஓர்
வயம் உளான் முனிவிற்கு அஞ்சாது மாக்கட்கு – நீதிநூல்:16 205/1,2
கண்டெடுத்த ஓர் பொருள் அனுபவித்தலும் களவின் – நீதிநூல்:17 207/1
பறவையை நரர் விலங்கினை படுக்கும் ஓர்
மறவனுக்கு உலகு எலாம் மறலி என்பவே – நீதிநூல்:18 217/3,4
சிவம் உற பொலியினும் சிதைந்து அழிந்த ஓர்
சவம் உயிர் மேவினும் தகை_இல் காதகர் – நீதிநூல்:18 220/2,3
பாவம் ஓர் ஐந்தினும் கொலைசெய் பாவியை – நீதிநூல்:18 223/2
செயிருற நீதியை சிதைத்து ஓர் தீயன் சாண் – நீதிநூல்:21 248/2
பசியினால் எளியன் ஓர் பகல் இரப்பினும் – நீதிநூல்:21 252/1
வசையினை சொல்ல ஓர் வாயும் போதுமோ – நீதிநூல்:21 252/4
தம் செயிரை பிறர் செயிர் போல் தாம் எண்ணி தூறுவர் ஓர்
வஞ்சகனை நம்பி ஒரு மாசிலான் இன்னலொடும் – நீதிநூல்:23 271/2,3
செல்ல ஓர் போக்கு இன்றி செறிந்த நீர் கனல் – நீதிநூல்:24 276/1
சாம்காலை ஓர் பிசினன் பொருள் தானம்செய உன்னி – நீதிநூல்:24 284/1
அற்ற ஓர் சவம்-கொல் மற்று அசரமே-கொலோ – நீதிநூல்:25 285/4
தேடி நோக்க ஓர் குரூபமே கண்டு உளம் திகைத்தேன் – நீதிநூல்:26 295/4
மனையில் ஓர் பெரு மணவிழா வந்து என மகிழ்வார் – நீதிநூல்:26 296/4
கற்று அறியான் ஒன்னாராம் கனலிக்கு ஓர் வையே ஆவன் – நீதிநூல்:26 301/3
பாங்கர் நீர் நிழலை வேறு ஓர் பழம் உணும் குரங்கு என்று எண்ணி – நீதிநூல்:27 303/2
பக்கம் அவர் தினம் படைப்பர் ஓர் நலம் – நீதிநூல்:27 307/2
சுருக்கமாக ஓர் நூலினில் சிறிது அலால் துகள் அற எந்நூலும் – நீதிநூல்:28 312/3
மழையினுமே அசனி உண்டு மதிக்கும் ஓர் மறு உண்டு மலர்க்கு முள்ளாம் – நீதிநூல்:32 337/2
கனை கழையை வேம்பு என்னில் கழைக்கும் ஓர் குறை உண்டோ கல்லில் மோதி – நீதிநூல்:32 339/3
தீது ஒருவர் செய்தனர் என்று அதற்கு எதிராய் நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின் – நீதிநூல்:32 340/1
அரவு சூழ்கின்ற ஓர் தேரை ஆவனே – நீதிநூல்:34 355/4
அயலவர்க்கு அழிவாக ஓர் அந்தரம் – நீதிநூல்:34 356/3
சீரணம் இன்றி உண்ணும் தீனி நோய் செயும் அதற்கு ஓர்
சூரணம் இலை மெய் தன்மைது உணா தன்மை ஏனை – நீதிநூல்:36 364/2,3
பசை உளதோ அ காற்றை பாரில் ஓர் பொருள் என்று எண்ணி – நீதிநூல்:38 377/2
இணங்கி இவ் ஒலிகள் எல்லாம் ஏற்கின்ற செவி ஓர் தீயன் – நீதிநூல்:38 378/3
பங்கம்_இல் குணங்கள் யாவும் வாழும் ஓர் பதி நீ ஆயின் – நீதிநூல்:38 380/3
ஏவல்செய்வோர்க்கு கூலி இடை துகில் உணவாம் யாம் ஓர்
காவலன் எனினும் சோறு கலை அன்றி ஒன்றும் காணோம் – நீதிநூல்:39 385/1,2
ஓர் எதிர்நன்று உண்டோ சமயத்து ஓர் பயனும் வேண்டாது – நீதிநூல்:39 389/3
ஓர் எதிர்நன்று உண்டோ சமயத்து ஓர் பயனும் வேண்டாது – நீதிநூல்:39 389/3
செப்ப அரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய் தீவினைக்கு ஓர் செவிலி ஆய – நீதிநூல்:40 406/3
தரை எலாம் நமது எனினும் இருப்பிடம் ஓர் முழமே நல் தானியங்கள் – நீதிநூல்:40 416/1
பைய ஓர் புள் பிடிக்க ககனம் மிசை வட்டமிடும் பருந்து போல – நீதிநூல்:41 420/3
நாடு நீர்த்தடம் நோக்கி இத்தனை நாள் புனல் என்ன நவிலலாம் ஓர்
வீடுதான் இத்தனை நாள் நிற்கும் என விளம்பலாம் மெய் என்னும் பொய் – நீதிநூல்:41 423/2,3
நெல் அறுக்க ஓர் காலம் மலர் கொய்ய ஓர் காலம் நெடிய பார – நீதிநூல்:41 424/1
நெல் அறுக்க ஓர் காலம் மலர் கொய்ய ஓர் காலம் நெடிய பார – நீதிநூல்:41 424/1
கல் அறுக்க ஓர் காலம் மரம் அறுக்க ஓர் கால கணிதம் உண்டு – நீதிநூல்:41 424/2
கல் அறுக்க ஓர் காலம் மரம் அறுக்க ஓர் கால கணிதம் உண்டு – நீதிநூல்:41 424/2
வற்றிய பின் விளக்கு அவியும் என்ன ஓர் திடம் உண்டு மக்கள் காயம் – நீதிநூல்:41 425/2
ககனம் மிசை பறவை என பறப்போம் ஓர் புகைக்கலத்தால் கடல் கடப்போம் – நீதிநூல்:41 426/2
கொண்டாடும் தேகம் இது வீழ் காலம் அறிவதற்கு ஓர் குறிப்பு இன்று அம்மா – நீதிநூல்:41 427/4
ஒன்றிரண்டு நாள் எனினும் போதும் நூறாண்டு என்று ஓர் உரை உண்டேனும் – நீதிநூல்:41 431/2
என்றோ என்று ஓர் உறுதி இல்லாத ஆயுள் இதற்கு என் செய்வோமே – நீதிநூல்:41 431/4
அமர் உயிர் நீங்கிய பின் ஓர் கணமும் அனை சேயர் இதன் அருகே நில்லார் – நீதிநூல்:41 434/2
பாக்கிய நிலை எனும் பதகர் ஓர் துயர் – நீதிநூல்:42 438/1
வேதையுற கொன்றது ஒப்பாம் இவ்வாறு ஓர் பயன் இன்றி மேவும் பாவம் – நீதிநூல்:43 457/3
ஓர் உயிர் ஈர் உடல் என்ன நட்ட மைந்தர் மாதர் நமது உயிர் நீங்கில் தம் – நீதிநூல்:43 459/1
முன்னம் ஓர் சுடரும் உண்டோ மோக்கத்தின் சுகம் வேறு உண்டோ – நீதிநூல்:43 466/2
பூவை இவட்கு அளித்த நிதி கணக்கிலை ஓர் கடன்காரன் புலி போல் நம்மை – நீதிநூல்:44 474/1
பூவில் வைத்த நிதியை ஓர் கிழ பூதம் காத்து இனிய பூபா உன்னை – நீதிநூல்:44 474/3
காரிகையை நோக்கினோம் மிஞ்சிய ஓர் கோவணத்தை கருதி வந்தேன் – நீதிநூல்:44 475/3
ஓர் உயிர் நம் இருவர்க்கும் நீர் வீயின் நான் இறந்தது ஒக்கும் என்றாள் – நீதிநூல்:44 475/4
புனைய ஓர் அணி இலாது இருந்த இல்லாள் கழுத்தினில் ஓர் பொட்டை கண்டு – நீதிநூல்:44 476/2
புனைய ஓர் அணி இலாது இருந்த இல்லாள் கழுத்தினில் ஓர் பொட்டை கண்டு – நீதிநூல்:44 476/2
இருள் ஒன்றும் நரகம் இன்னும் இவள்-பால் நாம் கொண்டதற்கு ஓர் இலக்கம் உண்டோ – நீதிநூல்:44 482/3
உலைவைக்கும் தன்மையளாய் பாதகம் எலாம் திரண்டு ஓர் உருவாய் வந்த – நீதிநூல்:44 493/3
ஐயன் இறந்திடில் எல்லாம் உனது என்றான் அவன் தூங்கும் சமையம் பார்த்து ஓர்
சையம் எடுத்து அவன் தலை மேல் போடுவாய் போடும் முன் நான் தழுவேன் என்றாள் – நீதிநூல்:44 498/3,4
வந்தவன் நான் ஆயினேன் மூவரில் ஓர் அரி அரியின் மகனை அன்னாள் – நீதிநூல்:44 501/2
ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள் – நீதிநூல்:44 501/4
ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள் – நீதிநூல்:44 501/4
கனை கடல் மணலை எணினும் வேசியர் சேர் ஆடவர்க்கு ஓர் கணிதம் உண்டோ – நீதிநூல்:44 506/1
இரணியன் என் தெய்வம் என்றாள் விட்டுணு ஓர் நரசிம்மம் எனவே வந்தான் – நீதிநூல்:44 509/2
ஆய மிருகங்கட்கு ஓர் அரசு ஆனாள் அவட்கு இரை நாம் ஆயினோமே – நீதிநூல்:44 511/4
வண்ண மலர் அமளியின் மேல் இருக்கையில் ஓர் பரபுருடன் வரவு நோக்கி – நீதிநூல்:44 512/1
மதி புவி என ஓர் கோள வடிவமாம் அஃது காந்தி – நீதிநூல்:47 538/1
சூரியற்கு எதிராய் பின்னும் சுழன்று விண் சென்று ஓர் ஆண்டில் – நீதிநூல்:47 539/2
அனை அனையனை அலாது ஓர் அணுவுமே அசையும்-கொல்லோ – நீதிநூல்:47 558/4
பெருமகன் ஓர் இடர் எய்தின் பிழைக்கும் வகை பிறர்க்கு உண்டோ – நீதிநூல்:47 580/2
பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கும் அவர் ஓர் பதி ஆகி விதி ஆகி மதி ஓதுவாரால் – நீதிநூல்:47 582/4
ஒளியை வால்புறம் போக்கி ஓர் செவ்வுரு – நீதிநூல்:47 584/1
வேல் எனும் விழியர்க்கு ஓர் விகற்பம் கூறுவர் – நீதிநூல்:47 592/2
துறந்து நாளை ஓர் ஏழை இல்கிழத்தியாய் – நீதிநூல்:47 597/2
சிறுவரை போது ஓர் கல்லை சேணிடை நிறுவுவோனை – நீதிநூல்:47 600/1
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/3
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/4
ஈண்டு ஓர் மடந்தை இரங்கேசா நீண்ட புகழ் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 6/2
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 65/3
எய்து வென்றது ஓர் வில் இரங்கேசா வையத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/2
மங்கை உமை ஓர் பங்கு வாங்கி மகிணன்-பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/1
ஓர் சங்கத்தார் கல்வி ஊமைச்சேய்க்கு காட்டி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 72/1
போஒம் அளவும் ஓர் நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/4
ஓர் நாள் அகலியையை வேட்டு இன்றும் உம்பர்_இறை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/1
பெரு நான்கும் அறு_நான்கும் பெறுவாய் பெண்ணே பின்னே ஓர் மொழி புகல வேண்டாம் இன்றே – விவேகசிந்தாமணி:1 18/3
உன்னை ஓர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும் – விவேகசிந்தாமணி:1 23/2
என்னையோ புணருவோர்கள் எனக்கும் ஓர் இன்பம் நல்கி – விவேகசிந்தாமணி:1 23/3
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 26/1
நீதி மன்னர் நெறியனுக்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 26/2
மாதர் கற்பு உடை மங்கையர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 26/3
அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 27/1
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 27/2
புருடனை கொன்ற பூவையர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 27/3
பொங்கு கடலும் உறங்காது பொழுது ஓர் நாளும் விடியாது – விவேகசிந்தாமணி:1 39/2
தரித்திரம் என்னும் ஓர் மருந்தில் தீருமே – விவேகசிந்தாமணி:1 43/4
ஒப்புற கணவனோடே ஓர் லீலை செய்யும் போது – விவேகசிந்தாமணி:1 70/2
பண்புளருக்கு ஓர் பறவை பாவத்திற்கு ஓர் இலக்கம் – விவேகசிந்தாமணி:1 127/1
பண்புளருக்கு ஓர் பறவை பாவத்திற்கு ஓர் இலக்கம் – விவேகசிந்தாமணி:1 127/1
உள்ளது சொல்லி கலந்தான் ஓர் வழியை தெள்ளிமையோய் – ஆத்திசூடிவெண்பா:1 14/2
ஏது பெற்றான் ஓர் மன்னன் இ புவியில் நீதிநெறி – ஆத்திசூடிவெண்பா:1 62/2
சாபாலி ராமன் சபையில் ஓர் சொல் பிழைத்து – ஆத்திசூடிவெண்பா:1 78/1
உள்ள பொழுது ஏதும் உவந்து அளிப்பது அல்லால் ஓர்
எள்ளளவும் ஈய இசையுமோ தெள்ளு தமிழ் – நீதிவெண்பா:1 36/1,2
பொற்பு அறிவு இல்லாத பல புத்திரரை பேறலின் ஓர்
நல் புதல்வனை பெறுதல் நன்றாமே பொன்_கொடியே – நீதிவெண்பா:1 54/1,2
கற்றை குழலார் கவின் எல்லாம் ஓர் மகவை – நீதிவெண்பா:1 83/1
எண் இலா வான்மீன் இலகிடினும் வானகத்து ஓர்
வெண்ணிலா ஆமோ விளம்பு – நீதிவெண்பா:1 98/3,4
இ குணம் ஓர் மூன்றும் பெரியோரிடம் சேரில் – நீதிவெண்பா:1 100/3
வாய் திறந்து ஓர் இன்சொல் வழங்காது மௌனியாய் – நன்மதிவெண்பா:1 5/1
ஒரு நகரிற்கு ஓர் கணக்கன் ஓர் வழக்கு தீர்ப்போன் – நன்மதிவெண்பா:1 22/1
ஒரு நகரிற்கு ஓர் கணக்கன் ஓர் வழக்கு தீர்ப்போன் – நன்மதிவெண்பா:1 22/1
தன் மருமம் ஓர் கணக்கன் சாரா வண்ணம் கணக்கன் – நன்மதிவெண்பா:1 29/3
அளவு_இல் திருவிற்கு உயிர் ஓர் ஆய்_இழை பேரூர்க்கு – நன்மதிவெண்பா:1 82/1
மதியிலி ஓர் தூர்த்தன் வறிதே நிதம் அணுகும் – நன்மதிவெண்பா:1 107/2
இறப்ப பொறை இறப்பு ஓர் ஐந்து – அருங்கலச்செப்பு:1 68/2
வதம் ஐந்தும் சீலம் ஓர் ஏழும் தரித்தான் – அருங்கலச்செப்பு:1 163/1
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை – முதுமொழிமேல்வைப்பு:1 103/3
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை – முதுமொழிமேல்வைப்பு:1 125/3
நீட்டி அளப்பது ஓர் கோல் – முதுமொழிமேல்வைப்பு:1 125/4
பண்டு ஓர் பசும்புல்லும் பாராது இடைக்காடர் – திருக்குறள்குமரேசவெண்பா:2 16/1
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/3
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/4
ஓர் அன்னம் கண்ணற்கு உதவியதால் பாஞ்சாலி – திருக்குறள்குமரேசவெண்பா:9 87/1
தேடிய சீர் சேக்கிழார் செப்பிய ஓர் சொல்லால் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/1
பண்டு ஓர் பசுவுக்கும் பாலனுக்கும் ஏன் தகுதி – திருக்குறள்குமரேசவெண்பா:12 111/1
குன்றினன் ஓர் சொல்லால் குமரேசா என்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 128/2
அன்று ஓர் இழுக்கால் அகலிகையும் கல் ஆகி – திருக்குறள்குமரேசவெண்பா:14 133/1
சொல்லவில்லை என்னே ஓர் தீ சொல்லை ஏசு தன்னை – திருக்குறள்குமரேசவெண்பா:14 139/1
நன்று செய்தான் தீமை நயவான் ஓர் பெண் நயந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/1
வென்றி மிகு காத்தவீரியன் ஓர் ஆவை வெஃகி – திருக்குறள்குமரேசவெண்பா:18 176/1
ஓர் அறமும் செய்யான் உயர்ந்தான் பொய்யாமையால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 297/1
ஓர் நாய் உடைமைக்கும் ஓங்கு புகழ் பத்ரகிரி – திருக்குறள்குமரேசவெண்பா:35 344/1
மண்டு புகழ் சீனக்கன் மாறாது ஏன் ஓர் நிலையாய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 425/1
கொண்டிலன் ஓர் தண்டம் குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:47 464/2
பாத்தி படுப்பது ஓர் ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:47 465/4
ஓர் துணையும் இல்லாமல் ஒன்னலரை வென்று அசன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/1
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:59 588/3,4
ஒற்றி வந்த ஒற்றருக்கு ஏன் ஓர் சிறப்பும் செய்யவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:59 590/1
அற்றேம் அரசு என்று ஓர் அல்லல் இன்றி ஏன் போனான் – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/1
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
எழுபது கோடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/3,4
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:65 645/3
எள்ள நின்ற வாமனரும் இவ் உலகை ஓர் அடியுள் – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/1
உறுப்பு ஓர் அனையரால் வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:71 704/4
சால வளம் கொண்டிருந்தும் தண்டகம் ஓர் வேந்தன் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/1
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை – திருக்குறள்குமரேசவெண்பா:80 796/3
போஒம் அளவும் ஓர் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/4
ஒன்னலரை வென்ற நந்தன் ஓர் புலவனை பகைத்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 872/1
ஓர் மருந்தும் கொள்ளார் உயர் மாளிகையார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/1
ஓர் இழுக்கும் சாராது உயர் தருமதத்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:96 952/1
பண்டு வளவன் அயன் பற்றிய ஓர் குற்றம் எங்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/1
வென்றி பிரதத்தன் மேவிய ஓர் புன்செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:97 965/1
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:106 1053/4
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க – திருக்குறள்குமரேசவெண்பா:110 1098/3
பிரிவு ஓர் இடத்து உண்மையான் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1153/4
கண்டவுடன் ஓர் தவறும் காணாமல் ஏன் எயிற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/1
ஓர் துணையும் இல்லை என உள்ளுடைந்து கிள்ளி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1299/1
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/3
ஓர் தவறும் காணாமல் ஊடி தபதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1321/1

மேல்

ஓர்த்து (2)

ஓர்த்து ஊன்றி நில்லாது உலகு – அறநெறிச்சாரம்:1 126/4
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/3

மேல்

ஓர்த்துடையனேனும் (1)

ஒழுக்கமிலன் ஆகி ஓர்த்துடையனேனும்
புழு பொதிந்த புண்ணில் கொடிதாம் கழுக்கு இரையை – அறநெறிச்சாரம்:1 133/1,2

மேல்

ஓர்தும் (1)

ஒற்றின் தெரியா சிறைப்புறத்து ஓர்தும் என – நீதிநெறிவிளக்கம்:1 31/1

மேல்

ஓர்ந்த (1)

ஓர்ந்த சுநந்தை உடல் பசந்தாள் பின் துணையை – திருக்குறள்குமரேசவெண்பா:119 1189/1

மேல்

ஓர்ந்தவுடன் (1)

உற்ற வினை ஒல்லும் என ஓர்ந்தவுடன் ஏன் மிஞிலி – திருக்குறள்குமரேசவெண்பா:68 673/1

மேல்

ஓர்ந்தார் (1)

குன்றாது ஏன் ஓர்ந்தார் குமரேசா நின்றவர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:65 646/2

மேல்

ஓர்ந்தாள் (1)

கொற்றவனை ஓர்ந்தாள் குமரேசா பற்று அமைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1179/2

மேல்

ஓர்ந்தான் (3)

குன்றாமல் ஓர்ந்தான் குமரேசா நின்று முன்னே – திருக்குறள்குமரேசவெண்பா:65 643/2
உற்றறிந்து துச்சயன் பின் ஓர்ந்தான் பரத்தை நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/1
கோது இலது என்று ஓர்ந்தான் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1096/2

மேல்

ஓர்ந்து (29)

மற்றுடம்பு கொள்ளும் பொழுது ஓர்ந்து தம் உடைமை – அறநெறிச்சாரம்:1 182/3
சுகம் அறம் மறம் ஓர்ந்து ஆவி தூங்கினும் தூங்காது ஓங்கி – நீதிநூல்:47 545/3
உற்ற மதி ஆவதனை ஓர்ந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 3/4
மேல் இது ஓர்ந்து உடன் யார்-கொலோ விலக்குவர் வேந்தே – விவேகசிந்தாமணி:1 121/4
ஓர்ந்து அவர் அகற்றுவர் என்று ஓது – நன்மதிவெண்பா:1 2/4
நன்மதியே ஓர்ந்து நவில் – நன்மதிவெண்பா:1 79/4
ஊணொடு பானம் முறை சுருக்கி ஓர்ந்து உணர்ந்து – அருங்கலச்செப்பு:1 150/1
உடம்பினை உள்ளவாறு ஓர்ந்து உணர்ந்து காமம் – அருங்கலச்செப்பு:1 168/1
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார்மாட்டும் – முதுமொழிமேல்வைப்பு:1 88/3
உற்றவர் வாய் சொல் எல்லாம் ஓர்ந்து ஏன் உருத்திரர் மெய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/1
கூர்ந்தார் சீர் என்னே குமரேசா ஓர்ந்து
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/2,3
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:55 541/3
ஓர்ந்து உரைக்க வல்ல உயர் அனுமான் தூதருள்ளே – திருக்குறள்குமரேசவெண்பா:69 687/1
ஓர்ந்து குறிப்பறிந்த ஒண் கூடலாரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:71 703/1
ஓர்ந்து வசிட்டர் உறுதியுற ஆராய்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:72 711/1
ஓர்ந்து ததீசி உரைத்த எலாம் தக்கன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/1
கூர்ந்து உணர்ந்து செய்தான் குமரேசா ஓர்ந்து
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல் – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/2,3
தேர்ந்த சுதஞ்சணன் ஏன் சீவகன் துன்பு ஓர்ந்து உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:79 788/1
ஓர்ந்து இடிக்க வல்ல உயர் மருசி நட்பினை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/1
ஓர்ந்து விதுரன் ஏன் உற்றவர்-பால் நட்பு ஒழித்து – திருக்குறள்குமரேசவெண்பா:80 797/1
ஓர்ந்து பழம் கேண்மை உவந்து விடா வேகனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 809/1
கூர்ந்து கொல்ல நின்றான் குமரேசா ஓர்ந்து
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர் – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/2,3
ஓர்ந்து அமையா விக்கிரமன் உற்றான் பகைக்கு எளிதாய் – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/1
கூர்ந்து இருந்த எல்லாம் குமரேசா ஓர்ந்து
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய – திருக்குறள்குமரேசவெண்பா:101 1005/2,3
ஓர்ந்து நாண் இல்லா உதிதன் உயிர் வாழ்ந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/1
கூர்ந்து மகிழ்ந்தான் குமரேசா ஓர்ந்து உள் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/2
கூர்ந்து உளைந்தாள் என்னே குமரேசா ஓர்ந்து
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1203/2,3
ஓர்ந்து விசாலை தன் உள் மறைத்தும் காமம் மீக்கூர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:126 1253/1
உள்ளி உடையும் என ஓர்ந்து ஏனோ கிள்ளி முனம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/1

மேல்

ஓர்ந்தும் (1)

ஊறு உயிர்க்கும் நேரும் என ஓர்ந்தும் விறல் வாகு – திருக்குறள்குமரேசவெண்பா:69 690/1

மேல்

ஓர்ந்துவைத்தும் (1)

ஓர்ந்துவைத்தும் உற்று உதவா உத்தரனை பின் மிலைச்சன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/1

மேல்

ஓர்ந்தே (3)

கூர்ந்து நடந்தார் குமரேசா ஓர்ந்தே
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:32 317/2,3
கூர்ந்து ஒழுகி நின்றார் குமரேசா ஓர்ந்தே
அகலாது அணுகாது தீ காய்வார் போல்க – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/2,3
கூர்ந்து சொன்னார் என்னே குமரேசா ஓர்ந்தே
உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன் – திருக்குறள்குமரேசவெண்பா:72 718/2,3

மேல்

ஓர்ப்பு (1)

உற வருவது ஓர்வதாம் ஓர்ப்பு – அறநெறிச்சாரம்:1 108/4

மேல்

ஓர்பால் (3)

சுணங்கன் ஓர்பால் குரைக்கும் சூழ் கரம் கத்தும் ஓர்பால் – நீதிநூல்:38 378/1
சுணங்கன் ஓர்பால் குரைக்கும் சூழ் கரம் கத்தும் ஓர்பால்
பிணங்கியே புள் ஒலிக்கும் பெரும் பறை ஓர்பால் ஆர்க்கும் – நீதிநூல்:38 378/1,2
பிணங்கியே புள் ஒலிக்கும் பெரும் பறை ஓர்பால் ஆர்க்கும் – நீதிநூல்:38 378/2

மேல்

ஓர்பொழுது (1)

ஆவி_அனையாளை ஓர்பொழுது பிரிந்து அவள் இல்லம் அணுகுங்காலை – நீதிநூல்:44 477/1

மேல்

ஓர்வதாம் (1)

உற வருவது ஓர்வதாம் ஓர்ப்பு – அறநெறிச்சாரம்:1 108/4

மேல்

ஓர்வன் (1)

ஆதரம் உளோன் அ பொன்னை அனுதினம் ஓர்வன் ஈசன் – நீதிநூல்:47 551/2

மேல்

ஓரகத்து (1)

ஒருவனை பற்றி ஓரகத்து இரு – கொன்றைவேந்தன்:1 10/1

மேல்

ஓரத்து (1)

மலையின் ஓரத்து வைப்பதுவும் மானுமே – நீதிநூல்:9 89/4

மேல்

ஓரம் (5)

ஓரம் சொல்லேல் – ஆத்திசூடி:1 109/1
மண்ணில் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம் – உலகநீதி:1 9/1
ஓரம் சொன்ன குடியது போல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே – விவேகசிந்தாமணி:1 94/4
உண்டதை ஒழிக்கும் வாசல் ஓரம் நீர் ஒழித்து மேலே – விவேகசிந்தாமணி:1 104/1
ஓரம் போ தெருவில் – இளையார்-ஆத்திசூடி:1 11/1

மேல்

ஓரம்சொன்னார் (1)

மன்று ஓரம்சொன்னார் மனை – நல்வழி:1 23/4

மேல்

ஓரமே (1)

ஓரமே சொல்வார் ஆகில் ஓங்கிய கிளையும் மாண்டு – விவேகசிந்தாமணி:1 69/3

மேல்

ஓரா (2)

எண் பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/3
உள்ள நலம் இல்லை என்றான் ஓரா குசலன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/1

மேல்

ஓராது (1)

ஊர் அலரை தாய் உரையை ஓராது ஏன் மாயை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/1

மேல்

ஓராய் (1)

தரமொடு வீற்றிருக்கும் தன்மை எள்ளளவும் ஓராய்
பரன் இலா இடம் ஒன்று உண்டேல் பவம் அவண் செய் நீ நெஞ்சே – நீதிநூல்:3 36/3,4

மேல்

ஓரார் (3)

பயன்கொள்வோர் அதனை நல்கும் பசு உரு இலது என்று ஓரார்
வியன் சினை வளைவு நோக்கார் விளைந்த தீம் கனி பறிப்போர் – நீதிநூல்:1 4/1,2
இயல் செல்வர் மிடியாளர் நல்லார்கள் அல்லார் என் பேதம் ஓரார் யாவர்க்கும் இனியார் – நீதிநூல்:47 583/3
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை – திருக்குறள்குமரேசவெண்பா:70 695/3

மேல்

ஓரி (4)

நாய் ஓரி கரடி என கத்தி மகிழ்விப்பர்கள் நாம் நலிந்த பின் அ – நீதிநூல்:44 511/2
என்றும் சிபி சந்தன் எவ்வி நள்ளி ஓரி புகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 233/1
உள்ளம் உயர் நந்திமான் ஓரி போல் ஈதல் இன்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/1
மாரி நின்றது என்ன மறுகினார் ஓரி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/1

மேல்

ஓரிடத்தே (1)

சற்றும் உடல் வருந்தல் இன்றி அலைதல் இன்றி ஓரிடத்தே தங்கி மூளும் – நீதிநூல்:43 454/3

மேல்

ஓரியே (1)

ஓரியே மீன் உவந்து ஊன் இழந்தையோ – விவேகசிந்தாமணி:1 34/1

மேல்

ஓரில் (2)

சோர்வு_இல் அடையால் தெளிந்தோம் சோமேசா ஓரில்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/2,3
தூர நெறி நின்று அயர்ந்தார் சோமேசா ஓரில்
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 27/2,3

மேல்

ஓரின் (1)

சூரம் தொலைந்தானே சோமேசா ஓரின்
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 44/2,3

மேல்

ஓருங்கால் (2)

சோர்வு இழந்து உய்ந்தார் அரசர் சோமேசா ஓருங்கால்
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 36/2,3
சோர்வு நலம் தேர்ந்தனரே சோமேசா ஓருங்கால்
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 72/2,3

மேல்

ஓரும் (5)

கூடா நட்பாலே குறை வரலால் ஓரும்
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் – முதுமொழிமேல்வைப்பு:1 128/2,3
செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:4 40/3
உயற்பாலது ஓரும் பழி – திருக்குறள்குமரேசவெண்பா:4 40/4
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை – திருக்குறள்குமரேசவெண்பா:37 366/3
வஞ்சிப்பது ஓரும் அவா – திருக்குறள்குமரேசவெண்பா:37 366/4

மேல்

ஓலை (1)

உத்தங்கன் ஓலை ஒளித்த நாக குலங்கள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 29/1

மேல்

ஓவா (4)

எம் நெஞ்சத்து ஓவா வரல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/4
எம் நெஞ்சத்து ஓவா வரல் – முதுமொழிமேல்வைப்பு:1 174/4
உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/3
எம் நெஞ்சத்து ஓவா வரல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1205/4

மேல்

ஓவாது (4)

ஐந்து பூதங்கள் ஏனை யாவும் ஓவாது எஞ்ஞான்றும் – நீதிநூல்:43 465/2
பாதம் மீது அன்பு உளேமேல் பகல் இரவினும் ஓவாது
நாதனை உன்னேம் கொன்னே நாள் கழித்திடல் என் நெஞ்சே – நீதிநூல்:47 551/3,4
ஓவாது செய்க உவந்து – அருங்கலச்செப்பு:1 143/2
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம் – திருக்குறள்குமரேசவெண்பா:94 933/3

மேல்

ஓவாதே (2)

ஆவதன்-கண் ஒன்றானும் நிற்க ஒட்டாய் ஓவாதே
கட்டு அழித்து காம கடற்கு என்னை ஈர்ப்பாயே – அறநெறிச்சாரம்:1 90/2,3
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:4 33/3,4

மேல்

ஓவாமல் (1)

சாவாரை யாரே தவிர்ப்பவர் ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் – நல்வழி:1 13/2,3

மேல்

ஓவி (1)

ஓவி யாரும் ஒழிக உறுவல்கள் – நீதிநூல்:12 152/1

மேல்

ஓவிய (1)

உண்டென மதுவை உண்ண ஓவிய பூவில் வீழ்ந்த – விவேகசிந்தாமணி:1 53/3

மேல்

ஓவியத்தை (1)

ஓவியர் நீள் சுவர் எழுதும் ஓவியத்தை கண்ணுறுவான் – நீதிநூல்:12 135/1

மேல்

ஓவியமே (2)

ஏ அனைய கண்ணார் இள முலையும் ஓவியமே
மென் சீத காலத்து வெம்மை தரும் வெம்மை-தனில் – நீதிவெண்பா:1 43/2,3
மேவு சிவன் அன்பர்-பால் மேவாதே ஓவியமே
நாயின் பால் அத்தனையும் நாய்-தனக்கு ஆம் அன்றியே – நீதிவெண்பா:1 63/2,3

மேல்

ஓவியர் (1)

ஓவியர் நீள் சுவர் எழுதும் ஓவியத்தை கண்ணுறுவான் – நீதிநூல்:12 135/1

மேல்

ஓறுத்தார்க்கு (1)

ஓறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 16/3

மேல்