வி – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விசும்பில் 1
விசும்பின் 1
விசும்பு 1
விஞ்ச 1
விஞ்சவே 1
விஞ்சியது 1
விஞ்சைக்கு 1
விட்ட 1
விட்டு 11
விட 3
விடத்தை 1
விடத்தோடு 1
விடா 1
விடாதான் 1
விடாநின்றாள் 1
விடாய் 1
விடிய 1
விடுக 1
விடுத்த 2
விடுத்தான் 1
விடை 2
விடையின் 1
விண் 5
விண்ணவர் 3
விண்ணவரும் 1
விண்ணோடும் 1
விதர்ப்ப 2
விதர்ப்பன் 4
விதர்ப்பன்-தன் 1
விதர்ப்பன்-தான் 1
விதியிலே 1
விதியின் 4
விதியை 1
விதைய 1
விந்தம் 3
விந்தை 1
விம்மினான் 1
வியர் 1
வியர்த்தாள் 1
வியர்வு 1
வியன் 1
விரவார் 1
விரவு 2
விரி 1
விரிகின்ற 2
விரித்த 1
விரித்து 1
விரிய 2
விருந்திட்ட 1
விருந்து 1
விருப்பான 1
விரும்பி 1
விரும்பு 1
விரை 6
விரைந்து 7
விரைய 1
விரோதம் 1
வில் 7
வில்லி 2
வில்லியரும் 1
விலக்கலீர் 1
விலக்காயோ 1
விலக்கினான் 1
விலங்குவன 1
விழ 1
விழி 8
விழிக்கு 2
விழிக்கும் 1
விழித்தாள் 1
விழிப்ப 1
விழியாள் 1
விழு 1
விழுங்கி 2
விழுங்கியதே 1
விழுது 1
விழுந்தது 1
விழுந்தாள் 3
விழுந்தான் 1
விழுந்திருக்கும் 1
விழுந்து 4
விழுவார் 1
விழை 1
விள்ளாத 1
விளக்க 1
விளக்கு 1
விளக்கே 2
விளங்கு 1
விளர்ப்ப 1
விளை 1
விளைக்கும் 4
விளைத்தாள் 1
விளைந்த 1
விளைந்து 1
விளையாட 1
விற்கும் 1
விறல் 1
வினவ 1
வினாவினான் 1
வினை 3
வினையால் 1
வினையின் 1
வினையேன் 2
வினையை 1
வினைவலி 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


விசும்பில் (1)

ஏழ் இசை நூல் சங்கத்து இருந்தானும் நீள் விசும்பில்
நல் தேவர் தூது நடந்தானும் பாரத போர் – நள:144/2,3

TOP


விசும்பின் (1)

அம் கண் விசும்பின் அவிர் மதி மேல் சென்று அடையும் – நள:299/1

TOP


விசும்பு (1)

மீன் பொதிந்து நின்ற விசும்பு என்பது என்-கொலோ – நள:111/3

TOP


விஞ்ச (1)

செம் சுடரின் வந்த கரும் சுடர் போல் விஞ்ச
மதித்த தேர் தானை வய வேந்தன் நெஞ்சத்து – நள:279/2,3

TOP


விஞ்சவே (1)

நெஞ்சு தடவும் நெடும் கண்கள் விஞ்சவே
நீண்டதோ அங்ஙனே இங்ஙனே நீள் மலராள் – நள:90/2,3

TOP


விஞ்சியது (1)

வஞ்சி அனையார் மணி நடையும் விஞ்சியது
காண பிடித்தது காண் என்றான் களி வண்டு – நள:34/2,3

TOP


விஞ்சைக்கு (1)

யாவனோ விஞ்சைக்கு இறைவனோ தேவனோ – நள:92/2

TOP


விட்ட (1)

விட்ட நீர் மேலே விழ – நள:331/4

TOP


விட்டு (11)

விலங்குவன மெய் நெறியை விட்டு – நள:22/4
தன் ஆடல் விட்டு தனி இடம் சேர்ந்து ஆங்கு அதனை – நள:52/3
வேந்தர் மேல் தூது ஓட விட்டு – நள:63/4
வெள்ள வாள் நீர் சோர விட்டு – நள:92/4
விட்டு ஒளிர் வில் வீசி விளங்கு மணி பூண் ஆரம் – நள:223/1
செம் கால் நகம் சிதைய தேவியை விட்டு ஏகினான் – நள:287/3
என் என்னாது என் என்னும் இ கானின் விட்டு ஏகும் – நள:295/3
விட்டு உரைக்கும் தார் வணிகர் வேந்து – நள:313/4
ஆதி நெடும் தேர் பரி விட்டு அவை ஆற்றி – நள:386/1
விளையாட விட்டு அவன்-தன் மேற்செயல் நாடு என்றாள் – நள:389/3
அன்னை-தனை கான் விட்டு அவன் ஏக இ நகர்க்கே – நள:391/2

TOP


விட (3)

விட கதிர் வேல் காளை இவன் கண்டாய் மீனின் – நள:149/1
விட நாகம் அன்னான் வெகுண்டு – நள:169/4
வெய்ய அரவின் விட வாயின் உட்பட்டேன் – நள:305/1

TOP


விடத்தை (1)

உண்ணா கடு விடத்தை உண்ட ஒரு மூன்று – நள:190/3

TOP


விடத்தோடு (1)

வெம் விடத்தோடு ஒக்கும் விழி இரண்டும் வீழ் துயில் கொள் – நள:407/1

TOP


விடா (1)

வல்லி விடா மெல் இடையாள் மக்களை தன் மார்போடும் – நள:254/3

TOP


விடாதான் (1)

விடாதான் திரு மேனி வெந்து – நள:344/4

TOP


விடாநின்றாள் (1)

புல்லி விடாநின்றாள் புலர்ந்து – நள:254/4

TOP


விடாய் (1)

வெய்து ஆம் அ காம விடாய் – நள:51/4

TOP


விடிய (1)

விடிய மிடுக்கு இன்மையாலோ கொடியன் மேல் – நள:129/2

TOP


விடுக (1)

விடுக என்றான் மற்று அந்த வெம் தழலால் வெம்மை – நள:340/3

TOP


விடுத்த (2)

மன்னன் விடுத்த வடிவில் திகழ்கின்ற – நள:52/1
தூது வந்த காதலனை சொல்லி செல விடுத்த
மாது உவந்து பின் போன வன் நெஞ்சால் யாதும் – நள:101/1,2

TOP


விடுத்தான் (1)

கொண்டு அணைவீர் என்று குல தூதரை விடுத்தான்
தண் தெரியல் தேர் வேந்தன் தான் – நள:418/3,4

TOP


விடை (2)

செல்லும் மழ விடை போல் செம்மாந்து மெல் இயலாள் – நள:163/2
உடையும் உயிர் நாயகனே ஓகோ விடை எனக்கு – நள:303/2

TOP


விடையின் (1)

வெம் கண் சின விடையின் மேல் ஏறி கால் ஏற – நள:214/1

TOP


விண் (5)

மண் இழந்து போந்து வனம் நண்ணி விண் இழந்த – நள:17/2
வீரர் விறல் வேந்தர் விண் நாடு சேர்கின்றார் – நள:77/1
விண் நாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு – நள:80/3
விண் அரசர் எல்லாரும் வெள்கி மனம் சுளிக்க – நள:161/1
விண் அரசர் நிற்க வெறி தேன் மண மாலை – நள:167/1

TOP


விண்ணவர் (3)

காவல் குடை வேந்தை கண்ணுற்று விண்ணவர் கோன் – நள:82/1
விண்ணவர் தம் ஏவலுடன் வீமன் திருமகள்-பால் – நள:98/1
வீமன் திருநகர்க்கே மீள் என்றான் விண்ணவர் முன் – நள:243/3

TOP


விண்ணவரும் (1)

வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலா – நள:277/1

TOP


விண்ணோடும் (1)

காதலவர் மேலே கண்ணோட விண்ணோடும்
ஊதை என நின்று உயிர்ப்பு ஓட யாதும் – நள:256/1,2

TOP


விதர்ப்ப (2)

பொன் நாடு போந்து இருந்தால் போன்றதே போர் விதர்ப்ப
நன் நாடர் கோமான் நகர் – நள:87/3,4
வில் விளக்கே பூக்கும் விதர்ப்ப நாடு ஆளுடையான் – நள:206/3

TOP


விதர்ப்பன் (4)

கொடை விதர்ப்பன் பெற்றது ஓர் கொம்பு – நள:38/4
விண் நாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு – நள:80/3
வெம் கதிரோன்-தானும் விதர்ப்பன் திருமடந்தை – நள:170/1
எம் கோன் விதர்ப்பன் எழில் நகர்க்கே நம் கோல – நள:251/2

TOP


விதர்ப்பன்-தன் (1)

பூ மகளை பொன்னை பொரு வேல் விதர்ப்பன்-தன்
கோமகளை தம் மனத்தே கொண்டு – நள:66/3,4

TOP


விதர்ப்பன்-தான் (1)

விதர்ப்பன்-தான் பெற்ற விளக்கு – நள:307/4

TOP


விதியிலே (1)

விதியிலே போந்தாளை மீண்டு – நள:328/4

TOP


விதியின் (4)

சொன்னவனை சூட்ட அருள் என்றாள் சூழ் விதியின்
மன்னவனை தன் மனத்தே வைத்து – நள:159/3,4
அனைத்தே விதியின் வலி – நள:232/4
மாய விதியின் வலி நோக்கி யாதும் – நள:242/2
பண்டை விதியின் பயனே காண் தண் தரள – நள:366/2

TOP


விதியை (1)

நின்றாள் விதியை நினைந்து – நள:265/4

TOP


விதைய (1)

விதைய கோன் செய்தான் விருந்து – நள:412/4

TOP


விந்தம் (3)

மான கரி வழுக்கும் மா விந்தம் என்பது ஓர் – நள:20/3
விந்தம் எனும் நம் பதி தான் மிக்கு – நள:415/4
மா விந்தம் என்னும் வள நகரம் சூழ்ந்த ஒரு – நள:417/3

TOP


விந்தை (1)

பூ விந்தை வாழும் பொழில் – நள:417/4

TOP


விம்மினான் (1)

மீளும்-கொல் என்று உரையா விம்மினான் மும்மத நின்று – நள:47/3

TOP


வியர் (1)

கொங்கை ஏர் பூட்டி குறு வியர் நீர் அங்கு அடைத்து – நள:203/2

TOP


வியர்த்தாள் (1)

வியர்த்தாள் உரை மறந்தாள் வீழ்ந்து – நள:101/4

TOP


வியர்வு (1)

வெண் தரளம் என்ன வியர்வு அரும்ப கெண்டை – நள:200/2

TOP


வியன் (1)

என்று உரைத்து வேத வியன் முனிவன் நன்றி புனை – நள:426/2

TOP


விரவார் (1)

மேரு வரை தோளான் விரவார் போல் கூர் இருளில் – நள:287/2

TOP


விரவு (2)

தொடை விரவு நாள் மாலை சூட்டினாள்-தன்னை – நள:286/3
மன் விரவு தாரான் மகிழ்ந்து – நள:383/4

TOP


விரி (1)

வெம் வாய் விரி கதிரோன் வெற்பு – நள:104/4

TOP


விரிகின்ற (2)

விரிகின்ற வெண் நிலவால் வேகின்றதேயோ – நள:114/3
விரிகின்ற மெல் அமளி வெண் நிலவின் மீதே – நள:128/1

TOP


விரித்த (1)

மா மகிழ் மாறன் புகழாம் வண் தமிழ் வேதம் விரித்த
மா மகிழ் மாறன் தாள் மலர் – நள:2/3,4

TOP


விரித்து (1)

மென் மயில் தன் தோகை விரித்து ஆட முன் அதனை – நள:49/2

TOP


விரிய (2)

புண்டரிகம் தீ எரிவ போல் விரிய பூம் புகை மேல் – நள:151/1
ஆவி போல் ஆடையும் ஒன்று ஆனதே பூ விரிய
கள் வேட்டு வண்டு உழலும் கானத்து-இடை கனக – நள:264/2,3

TOP


விருந்திட்ட (1)

வாளால் விருந்திட்ட மன் – நள:68/4

TOP


விருந்து (1)

விதைய கோன் செய்தான் விருந்து – நள:412/4

TOP


விருப்பான (1)

விருப்பான வீமன் திருமடந்தையோடும் – நள:165/3

TOP


விரும்பி (1)

மின் சொரியும் வேலாய் மிக விரும்பி என் சரிதம் – நள:410/2

TOP


விரும்பு (1)

நறும் தாமரை விரும்பு நல்_நுதலே அன்னாள் – நள:160/3

TOP


விரை (6)

வீமன் மடந்தை மணத்தின் விரை தொடுத்த – நள:78/1
வரை செறிந்த தோள் மன்னர் வந்தார் விரை செறிந்த – நள:134/2
விரை கொண்டு எழுந்த பிறை மேகத்திடையே – நள:195/3
விரை ஆடும் தாரான் மெலிந்து – நள:256/4
விரை மலர் பூ மெல் அணையும் மெய் காவல் பூண்ட – நள:273/1
சிந்தையினும் கடுக சென்றதே சந்த விரை
தார் குன்றா மெல்_ஓதி-தன் செயலை தன் மனத்தே – நள:377/2,3

TOP


விரைந்து (7)

மெலிந்த தோள் வேந்தன் விரைந்து – நள:73/4
மின் முக வேல் கையான் விரைந்து – நள:77/4
மின் நெடு வேல் கையான் விரைந்து – நள:183/4
வீமன் நகர்க்கே விரைந்து – நள:255/4
வேறு ஆக்கிற்று என்றான் விரைந்து – நள:346/4
மிக்கானும் சென்றான் விரைந்து – நள:359/4
மின் செய்த வேலான் விரைந்து – நள:371/4

TOP


விரைய (1)

விரைய தேர் ஊர் என்றான் வேந்து – நள:74/4

TOP


விரோதம் (1)

பூண்டு விரோதம் செய்யும் பொய் சூதை மிக்கோர்கள் – நள:218/3

TOP


வில் (7)

வென்றி மத வேடன் வில் எடுப்ப வீதி எலாம் – நள:28/1
வில் விளக்கே பூக்கும் விதர்ப்ப நாடு ஆளுடையான் – நள:206/3
விட்டு ஒளிர் வில் வீசி விளங்கு மணி பூண் ஆரம் – நள:223/1
சொல்லார் மணி தேரும் தோற்றதன் பின் வில் ஆட்கள் – நள:226/2
வெண் தோடன் செம்பங்கி வில் வேடன் கண்டான் – நள:304/2
காம்பின் வாய் வில் வேடன் கண்டு – நள:306/4
வில் தானை முன் செல்ல வேல் வேந்தர் பின் செல்ல – நள:414/1

TOP


வில்லி (2)

வில்லி கணை தெரிந்து மெய் காப்ப முல்லை எனும் – நள:106/2
வில்லி கணை இழப்ப வெண் மதியம் சீர் இழப்ப – நள:133/1

TOP


வில்லியரும் (1)

வில்லியரும் பொன் தாம வீமன் திருமகளாம் – நள:75/3

TOP


விலக்கலீர் (1)

விலக்கலீர் நீர் என்றான் வரால் ஏற மேதி – நள:221/3

TOP


விலக்காயோ (1)

விலக்காயோ என்று அழுதாள் வெம் அரவின் வாய்க்கு இங்கு – நள:300/3

TOP


விலக்கினான் (1)

விலக்கினான் நெஞ்சத்தை வேறு ஆக்கி நின்று – நள:278/3

TOP


விலங்குவன (1)

விலங்குவன மெய் நெறியை விட்டு – நள:22/4

TOP


விழ (1)

விட்ட நீர் மேலே விழ – நள:331/4

TOP


விழி (8)

வழி மேல் விழி வைத்து வாள் நுதலாள் நாம – நள:67/1
மன்னர் விழி தாமரை பூத்த மண்டபத்தே – நள:138/1
வேறு ஆக போக்குதிரோ என்றார் விழி வழியே – நள:253/3
வேந்தனே என்னா விழுந்தாள் விழி வேலை – நள:296/3
வேடன் அழைப்ப விழி பதைத்து வெய்துயிரா – நள:309/1
மங்கை விழி நீர் மறையோன் கழல் கழுவ – நள:325/1
வீமன் மடந்தை விழி முடிய கண்டு அறியா – நள:344/1
வெம் விடத்தோடு ஒக்கும் விழி இரண்டும் வீழ் துயில் கொள் – நள:407/1

TOP


விழிக்கு (2)

குறு விழிக்கு நேர் நாடன் கோதை பெரும் கண் – நள:135/3
சிறு விழிக்கு நோற்றிருந்த சேய் – நள:135/4

TOP


விழிக்கும் (1)

கடைவாயில் கார் நீலம் கண் விழிக்கும் நாடன் – நள:386/3

TOP


விழித்தாள் (1)

சீறா விழித்தாள் சிலை வேடன் அவ்வளவில் – நள:310/3

TOP


விழிப்ப (1)

காசினியும் தாமரையும் கண் விழிப்ப வாசம் – நள:132/2

TOP


விழியாள் (1)

போர் ஆர் விழியாள் புலர்ந்து – நள:298/4

TOP


விழு (1)

கேடு இல் விழு செல்வம் கேடு எய்து சூதாடல் – நள:16/1

TOP


விழுங்கி (2)

வெம் கதிரோன் தன்னை விழுங்கி புழுங்கியோ – நள:114/1
வேட்ட கரியை விழுங்கி பெரும் பசியால் – நள:298/1

TOP


விழுங்கியதே (1)

மேல் எல்லாம் தோன்ற விழுங்கியதே வெம் கானின் – நள:299/3

TOP


விழுது (1)

விழுது பட திணிந்த வீங்கு இருள் வாய்ப்பட்டு – நள:131/1

TOP


விழுந்தது (1)

முன்னே விழுந்தது காண் முன் நாளில் அன்னதற்கு – நள:373/2

TOP


விழுந்தாள் (3)

வேந்தனே என்னா விழுந்தாள் விழி வேலை – நள:296/3
அடி மேல் விழுந்தாள் அழுது – நள:324/4
அழிந்தாள் விழுந்தாள் அழுது – நள:397/4

TOP


விழுந்தான் (1)

நீறாய் விழுந்தான் நிலத்து – நள:310/4

TOP


விழுந்திருக்கும் (1)

விழுந்திருக்கும் தன் உடம்பை மீள செழும் தரள – நள:127/2

TOP


விழுந்து (4)

வெடியாதால் என்றான் விழுந்து – நள:275/4
கொடி மேல் விழுந்து அழுதான் கொம்பும் அவன் செம்பொன் – நள:324/3
போவாய் வருவாய் புரண்டு விழுந்து இரங்கி – நள:356/1
மின் இடையாளோடும் விழுந்து – நள:405/4

TOP


விழுவார் (1)

அழுவார் விழுவார் அயிர்ப்பார் உயிர்ப்பார் – நள:330/1

TOP


விழை (1)

மழை மேலும் வாள் ஓடி மீள விழை மேலே – நள:175/2

TOP


விள்ளாத (1)

கொள்ளிக்கும் விள்ளாத கூர் இருளாய் உள்ளம் – நள:120/2

TOP


விளக்க (1)

சந்தி செய தாள் விளக்க தாளின் மறு தான் கண்டு – நள:210/1

TOP


விளக்கு (1)

விதர்ப்பன்-தான் பெற்ற விளக்கு – நள:307/4

TOP


விளக்கே (2)

வில் விளக்கே பூக்கும் விதர்ப்ப நாடு ஆளுடையான் – நள:206/3
நல் விளக்கே எங்கள் நகர் – நள:206/4

TOP


விளங்கு (1)

விட்டு ஒளிர் வில் வீசி விளங்கு மணி பூண் ஆரம் – நள:223/1

TOP


விளர்ப்ப (1)

கோல நிறம் விளர்ப்ப கொங்கை முகம் கருக – நள:208/1

TOP


விளை (1)

விளை பூசல் கொல் யானை வேந்து – நள:177/4

TOP


விளைக்கும் (4)

சடை செந்நெல் பொன் விளைக்கும் தன் நாடு பின்னா – நள:75/1
பூ சிந்தும் நாள் தேறல் பொன் விளைக்கும் தண் பணை சூழ் – நள:156/3
செந்நெல் விளைக்கும் திருநாடர் மன்ன – நள:361/2
தே நீர் அளித்து அருகு செந்நெல் கதிர் விளைக்கும்
மா நீர் நிடதத்தார் மன் – நள:414/3,4

TOP


விளைத்தாள் (1)

காதல் வரம்பு ஒழுகி காம பயிர் விளைத்தாள்
கோதையரின் மேலான கொம்பு – நள:203/3,4

TOP


விளைந்த (1)

கலியால் விளைந்த கதை – நள:18/4

TOP


விளைந்து (1)

வெம் சாறு பாய விளைந்து எழுந்த செம் சாலி – நள:147/2

TOP


விளையாட (1)

விளையாட விட்டு அவன்-தன் மேற்செயல் நாடு என்றாள் – நள:389/3

TOP


விற்கும் (1)

விற்கும் மகளிர்-பால் மீண்டான் போல் நிற்கும் – நள:228/2

TOP


விறல் (1)

வீரர் விறல் வேந்தர் விண் நாடு சேர்கின்றார் – நள:77/1

TOP


வினவ (1)

ஈங்கு வரவு என் என்று இமையவர்-தம் கோன் வினவ
தீங்கு தரும் கலியும் செப்பினான் நீங்கள் – நள:165/1,2

TOP


வினாவினான் (1)

வெம் கோல் அரசன் வினாவினான் அம் கோல – நள:420/2

TOP


வினை (3)

பண்டை வினை பயனை பாரிடத்தில் ஆர் கடப்பார் – நள:272/1
முந்தை வினை குறுக மூவா மயல் கொண்டான் – நள:377/1
புக்கோர் அரு வினை போல் போயிற்றே அ காலம் – நள:404/2

TOP


வினையால் (1)

முன்னை வினையால் முடிந்ததோ மொய் குழலாள் – நள:374/1

TOP


வினையின் (1)

முன்னை வினையின் வலியால் முடி மன்னன் – நள:314/1

TOP


வினையேன் (2)

மல் தொடுத்த தோள் பிரிந்து மாயாத வல் வினையேன்
பெற்றெடுத்த மக்காள் பிரிந்து ஏகும் கொற்றவனை – நள:302/1,2
இவ்வளவு தீ வினையேன் என்பாள்-தன் மெய் வடிவை – நள:312/2

TOP


வினையை (1)

கடப்பார் எவரே கடு வினையை வீமன் – நள:232/1

TOP


வினைவலி (1)

வினைவலி காண் என்றாள் மெலிந்து – நள:318/4

TOP