மொ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


மொட்டை (1)

தெரியில் இவன் கண்டாய் செம் கழு நீர் மொட்டை
அரவின் பசும் தலை என்று அஞ்சி இரவு எல்லாம் – நள:145/1,2

TOP


மொய் (3)

மொய் குழலில் சூட்டுவான் முன் வந்து தையலாள் – நள:186/2
முருகு அடைக்கும் தாமரையின் மொய் மலரை தும்பி – நள:357/3
முன்னை வினையால் முடிந்ததோ மொய் குழலாள் – நள:374/1

TOP


மொழி (8)

அன்னம் மொழிந்த மொழி புகாமுன் புக்கு – நள:37/1
மொழி மேல் செவி வைத்து மோக சுழி மேல் தன் – நள:67/2
மொழிந்ததே அன்ன மொழி கேட்டு அரசற்கு – நள:70/3
பாவையரை செவ்வழி யாழ் பண்ணின் மொழி பின்னு குழல் – நள:227/3
செம் தேன் மொழி பதறா சேர்ந்து – நள:320/4
மொழி வழியே சென்றான் முரண் கலியின் வஞ்ச – நள:336/3
வேத மொழி வாணன் மீண்டும் சுயம்வரத்தை – நள:371/1
மன்னா பருவரலை மாற்றுதி என்று ஆசி மொழி
பன்னா நடந்திட்டான் பண்டு – நள:426/3,4

TOP


மொழிக்கு (2)

தே_மொழிக்கு தீது இலவே என்றான் திருந்தாரை – நள:69/3
செம் மொழியா தேர்ந்து அதனை சிந்தித்தே இ மொழிக்கு
தக்கானை இங்கே தரு-மின் என உரைப்ப – நள:359/2,3

TOP


மொழிக்கும் (1)

அணி_மொழிக்கும் அண்ணல்-அவற்கும் பணி_மொழியார் – நள:172/2

TOP


மொழிதல் (1)

காதல் கவறாடல் கள் உண்டல் பொய் மொழிதல்
ஈதல் மறுத்தல் இவை கண்டாய் போதில் – நள:217/1,2

TOP


மொழிந்த (3)

அன்னம் மொழிந்த மொழி புகாமுன் புக்கு – நள:37/1
வன் மொழியும் தேவர் மனம் மகிழ தான் மொழிந்த
மென் மொழியும் சென்று உரைத்தான் மீண்டு – நள:98/3,4
கணி மொழிந்த நாளில் கடிமணமும் செய்தார் – நள:172/1

TOP


மொழிந்ததே (1)

மொழிந்ததே அன்ன மொழி கேட்டு அரசற்கு – நள:70/3

TOP


மொழிந்தார் (1)

மொழிந்தார் அ மாற்றம் மொழியாத முன்னே – நள:397/3

TOP


மொழிமுறையே (1)

மொழிமுறையே கோத்த முனி – நள:10/4

TOP


மொழியா (1)

செம் மொழியா தேர்ந்து அதனை சிந்தித்தே இ மொழிக்கு – நள:359/2

TOP


மொழியாத (1)

மொழிந்தார் அ மாற்றம் மொழியாத முன்னே – நள:397/3

TOP


மொழியாய் (2)

செம் தேன் மொழியாய் இ சேய் – நள:152/4
சிற்றிடையாய் பேர் அல்குல் தே மொழியாய் மென் முறுவல் – நள:198/3

TOP


மொழியார் (1)

அணி_மொழிக்கும் அண்ணல்-அவற்கும் பணி_மொழியார் – நள:172/2

TOP


மொழியாள் (3)

செம் தேன் மொழியாள் செறி அளக பந்தியின் கீழ் – நள:42/1
தேன் இருந்த பூம் கணையே தீ ஆக தே_மொழியாள் – நள:119/3
செம் துவர் வாய் மென் மொழியாள் தேர்ந்து – நள:303/4

TOP


மொழியின் (1)

மொழியின் சுவையே முதிர்ந்து – நள:7/4

TOP


மொழியினொடு (1)

புள்ளின் மொழியினொடு பூ வாளி தன்னுடைய – நள:55/1

TOP


மொழியும் (2)

வன் மொழியும் தேவர் மனம் மகிழ தான் மொழிந்த – நள:98/3
மென் மொழியும் சென்று உரைத்தான் மீண்டு – நள:98/4

TOP


மொழியே (1)

தன் வாயில் மென் மொழியே தாங்கினான் ஓங்கு நகர் – நள:239/1

TOP


மொழியை (2)

கேள் ஆன தே மொழியை நீக்க கிளர் ஒளி சேர் – நள:281/3
அ மொழியை தூதர் அரசற்கு அறிவிக்க – நள:359/1

TOP