நோ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


நோக்கான் (1)

நோக்கான் மழை பொழியா நொந்து – நள:244/4

TOP


நோக்கி (16)

முகம் பார்த்து அருள் நோக்கி முன் இரந்து செல்வர் – நள:68/1
மண் நாடு நோக்கி மகிழ்ந்து – நள:80/4
மன்றல் இளம் கோதை முக நோக்கி மா நகர் வாய் – நள:236/1
நின்று உருகு வார் கண்ணி நீர் நோக்கி இன்று இங்கு – நள:236/2
பிறை_நுதலாள் பேதமையை நோக்கி முறுவலியா – நள:238/2
தூய தன் மக்கள் துயர் நோக்கி சூழ்கின்ற – நள:242/1
மாய விதியின் வலி நோக்கி யாதும் – நள:242/2
தந்தை திரு முகத்தை நோக்கி தமை பயந்தாள் – நள:253/1
இந்து முகத்தை எதிர் நோக்கி எம்-தம்மை – நள:253/2
இந்து நுதலி எழில் நோக்கி ஏதோ தன் – நள:308/1
பொன் இனை தாய் நோக்கி புலர்ந்து – நள:333/4
ஆக்கி அருளால் அரவு அரசை நோக்கி
அடைந்தான் அடைதலுமே ஆர் அழலோன் அஞ்சி – நள:338/2,3
பொய் அடையா சிந்தை புரவலனை நோக்கி தன் – நள:360/1
இளவரசை நோக்கி எடுத்து – நள:393/4
நோக்கினான் நோக்கி தெளிந்தான் நுணங்கியதோர் – நள:401/3
செங்கோல் அரசன் முகம் நோக்கி தேர்ச்சி இலா – நள:420/1

TOP


நோக்கின் (1)

ஆக்கையே நோக்கின் அவன் அல்லன் பூ கமழும் – நள:368/2

TOP


நோக்கினான் (2)

நன் முகமே நோக்கினான் நாகம் சிறகு அரிந்த – நள:77/3
நோக்கினான் நோக்கி தெளிந்தான் நுணங்கியதோர் – நள:401/3

TOP


நோக்கு (2)

பொது நோக்கு எதிர் நோக்கும் போது – நள:88/4
செழு நீல நோக்கு எறிப்ப செம் குவளை கொய்வாள் – நள:196/1

TOP


நோக்கும் (3)

மது நோக்கும் தாரானும் வாள்_நுதலும் தம்மில் – நள:88/3
பொது நோக்கு எதிர் நோக்கும் போது – நள:88/4
ஐயுற்று நோக்கும் அகல் பொழில் சென்று எய்தினான் – நள:205/3

TOP


நோய் (2)

கண்டு ஆற்றாது உள்ளம் கலங்கினான் காம நோய்
கொண்டார்க்கு இது அன்றோ குணம் – நள:49/3,4
மன்னன் மனத்து எழுந்த மையல் நோய் அத்தனையும் – நள:56/1

TOP


நோவ (2)

தாள் இரண்டு நோவ தனித்தனியே ஓடிய நாள் – நள:14/3
பைம் தளிரும் நோவ பதைத்து உருகி எந்தாய் – நள:241/2

TOP


நோற்றிருந்த (1)

சிறு விழிக்கு நோற்றிருந்த சேய் – நள:135/4

TOP