தூ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


தூங்கு (1)

தொக்கி இருந்து ஆலித்து உழலும் தூங்கு இருள் வெய்யோற்கு ஒதுங்கி – நள:29/3

TOP


தூண்ட (1)

எழு அடு தோள் மன்னா இலங்கு_இழையோர் தூண்ட
கொழு நுதியில் சாய்ந்த குவளை உழுநர் – நள:38/1,2

TOP


தூண்டில் (1)

தொடக்கு ஒழிய போய் நிமிர்ந்த தூண்டில் மடல் கமுகின் – நள:149/2

TOP


தூணில் (1)

சோதி திரு தூணில் தோன்றினான் வேதத்தின் – நள:3/2

TOP


தூணோடு (1)

தூணோடு சேர்க்கும் துணை ஏதும் இல்லாதே – நள:127/3

TOP


தூதர் (2)

காவலன் தன் தூதர் கடை காவலர்க்கு அறிவித்து – நள:73/1
அ மொழியை தூதர் அரசற்கு அறிவிக்க – நள:359/1

TOP


தூதரை (1)

கொண்டு அணைவீர் என்று குல தூதரை விடுத்தான் – நள:418/3

TOP


தூது (4)

வேந்தர் மேல் தூது ஓட விட்டு – நள:63/4
தூது ஆக என்றான் அ தோகையை தன் ஆகத்தால் – நள:83/3
தூது வந்த காதலனை சொல்லி செல விடுத்த – நள:101/1
நல் தேவர் தூது நடந்தானும் பாரத போர் – நள:144/3

TOP


தூதுவனாய் (1)

ஆண்டகையே தூதுவனாய் சென்று அவனி வேண்ட – நள:8/2

TOP


தூய்மையும் (1)

தூய்மையும் மற்று அவன் தோள் வலியும் பூமான் – நள:168/2

TOP


தூய (2)

தூய தன் மக்கள் துயர் நோக்கி சூழ்கின்ற – நள:242/1
தூய நறு மலர் பூம் சோலை-வாய் ஆய – நள:419/2

TOP


தூரம் (2)

கொடை வேந்தற்கு இ தூரம் தேர் கோலம் கொள்வான் – நள:369/3
ஏனை நெறி தூரம் இனி எத்தனையோ மானே கேள் – நள:415/2

TOP


தூறு (1)

தூறு எலாம் ஆக சுரி குழல் வேல் கண்ணின் நீர் – நள:309/3

TOP

மேல்