சே – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


சேடி (1)

காவலரை தன் சேடி காட்ட கண்டு ஈர் இருவர் – நள:157/1

TOP


சேதி (3)

சேதி நகர்க்கே திருவை செலவிட்டு அப்போதில் – நள:315/1
சேதி திருநாடு சென்று – நள:323/4
சேதி கோன் தேவி திகைத்து – நள:327/4

TOP


சேதியர் (1)

பதியிலே போக்கினான் சேதியர் கோன் பண்டை – நள:328/3

TOP


சேம (2)

சேம வேல் மன்னனுக்கு செப்புவான் செம் தனி கோல் – நள:18/1
வாம நெடும் புயத்தே வைகுவிப்பேன் சேம
நெடும் குடையாய் என்று உரைத்து நீங்கியதே அன்னம் – நள:46/2,3

TOP


சேமம் (1)

சேமம் களிறு புக தீம் பாலின் செவ்வழி யாழ் – நள:122/1

TOP


சேய் (11)

தீது ஓவ பார் காத்த சேய் – நள:15/4
பாய் இருள் என்னும் படாம் வாங்கி சேய் நின்று – நள:105/2
சிறு விழிக்கு நோற்றிருந்த சேய் – நள:135/4
திரித்த கோ இங்கு இருந்த சேய் – நள:142/4
செற்றானும் கண்டாய் இ சேய் – நள:144/4
தேன் இருந்த சொல்லாய் இ சேய் – நள:150/4
தேர் வேந்தன் கண்டாய் இ சேய் – நள:151/4
செம் தேன் மொழியாய் இ சேய் – நள:152/4
செரு வாளை பார்த்து உவக்கும் சேய் – நள:192/4
தீம் தேறல் வாக்கும் தார் சேய் – நள:376/4
தெளியாது முன் போந்த சேய் – நள:385/4

TOP


சேர் (6)

தேம் குழல் சேர் வண்டு சிறை வெதும்ப ஓங்கு உயிர்ப்பின் – நள:118/2
சூட்டினார் சூட்டி துடி சேர் இடையாளை – நள:171/3
காலில் போய் தேவியொடும் கண்ணுற்றான் ஞாலம் சேர்
கள்ளி வேகத்து அரவின் கண்மணிகள் தாம் பொடியாய் – நள:257/2,3
கேள் ஆன தே மொழியை நீக்க கிளர் ஒளி சேர்
வாளாய் மருங்கு இருந்தான் வந்து – நள:281/3,4
தாமம் சேர் ஓதி தமயந்தி நின்றாளை – நள:324/1
சீத களப தனம் சேர் மாசும் போத – நள:406/2

TOP


சேர்க்கும் (2)

தூணோடு சேர்க்கும் துணை ஏதும் இல்லாதே – நள:127/3
அறத்தை வேர் கல்லும் அரு நரகில் சேர்க்கும்
திறத்தையே கொண்டு அருளை தேய்க்கும் மறத்தையே – நள:218/1,2

TOP


சேர்கின்றார் (1)

வீரர் விறல் வேந்தர் விண் நாடு சேர்கின்றார்
ஆரும் இலரால் என்று ஐயுற்று நாரதனார் – நள:77/1,2

TOP


சேர்த்தாள் (1)

செழு முகத்தை தாமரைக்கே சேர்த்தாள் கெழுமிய அ – நள:191/2

TOP


சேர்தற்கு (1)

சேர்வு அரிய வெம் கானம் சேர்தற்கு காரணம் தான் – நள:15/2

TOP


சேர்ந்தார் (1)

கனற்கு ஏயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
புனற்கே புனல் கலந்தால் போன்று – நள:174/3,4

TOP


சேர்ந்தாள் (1)

சிறியானை சேர்ந்தாள் திரு – நள:228/4

TOP


சேர்ந்தான் (3)

வளை பூசல் ஆட மடந்தையுடன் சேர்ந்தான்
விளை பூசல் கொல் யானை வேந்து – நள:177/3,4
சேராரை வெம் துயரம் சேர்ந்தான் போல் பாராளும் – நள:211/2
கற்றவனை சேர்ந்தான் கலி – நள:211/4

TOP


சேர்ந்து (4)

தன் ஆடல் விட்டு தனி இடம் சேர்ந்து ஆங்கு அதனை – நள:52/3
சேர்ந்து அருளி நின்ற தனி செங்கோலாய் இங்கு ஒழிய – நள:266/3
செம் தேன் மொழி பதறா சேர்ந்து – நள:320/4
தென் ஆளும் தாரானை சேர்ந்து – நள:370/4

TOP


சேர்வாய்-கொல் (1)

சென்றார் புகு நரகம் சேர்வாய்-கொல் என்று அழியா – நள:265/3

TOP


சேர்வு (1)

சேர்வு அரிய வெம் கானம் சேர்தற்கு காரணம் தான் – நள:15/2

TOP


சேர (1)

செழியனையும் சென்னியையும் சேர திறை கொள் – நள:7/3

TOP


சேராரை (1)

சேராரை வெம் துயரம் சேர்ந்தான் போல் பாராளும் – நள:211/2

TOP


சேல் (3)

சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல் – நள:154/3
திரை ஏற மென் கிடங்கில் சேல் ஏற வாளை – நள:204/3
சேல் உற்ற வாவி திருநாடு பின் ஒழிய – நள:257/1

TOP


சேவடி (1)

அணி சேவடி எம் அரண் – நள:5/4

TOP


சேவல் (1)

சேவல் குயில் பெடைக்கு பேசும் சிறு குரல் கேட்டு – நள:48/1

TOP


சேற்றால் (1)

சீத களப செழும் சேற்றால் வீதி வாய் – நள:20/2

TOP


சேனை (1)

சேனை புடை சூழ தேர் ஏறி ஆன புகழ் – நள:424/2

TOP