கூ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


கூசி (1)

கொழுநன் கொழும் தாரை நீர் வீச கூசி
செழு முகத்தை தாமரைக்கே சேர்த்தாள் கெழுமிய அ – நள:191/1,2

TOP


கூட்டி (1)

கொங்கை முகத்து அணைய கூட்டி கொடும் கையால் – நள:189/1

TOP


கூட்டில் (1)

ஒரு கூட்டில் வாழ உலகு – நள:26/4

TOP


கூட்டு (1)

கூட்டு மை போல் சிறந்த கூர் இருளை கூன் கோட்டால் – நள:109/1

TOP


கூட (1)

செரு கதிர் வேல் கண்ணியுடன் தேர் வேந்தன் கூட
இருக்க தரியேன் இவரை பிரிக்க – நள:169/1,2

TOP


கூடி (1)

தவறாய் புரண்ட தமையனொடும் கூடி
கவறாய் புரண்டான் கலி – நள:224/3,4

TOP


கூடினான் (1)

நாடும் இடம் எல்லாம் நாடி போய் கூடினான்
போதில் திருநாடும் பொய்கை திருநாடாம் – நள:323/2,3

TOP


கூத்து (1)

கொடி ஆட கண்டான் ஓர் கூத்து – நள:201/4

TOP


கூந்தல் (12)

பைம் கூந்தல் வல்லியர்கள் பற்றி கொடு போந்து – நள:32/3
கூந்தல் மேல் கங்கை கொழுந்து ஓடும் நல் நாடன் – நள:63/3
பழகு கரும் கூந்தல் பாவை மழ களிற்று – நள:79/2
குழை மேலும் கோமான் உயிர் மேலும் கூந்தல்
மழை மேலும் வாள் ஓடி மீள விழை மேலே – நள:175/1,2
கொங்கை முகம் குழைய கூந்தல் மழை குழைய – நள:177/1
வார்க்கின்ற கூந்தல் முகத்தை மதி என்று – நள:189/3
வேரி மழை துளிக்கும் மேக கரும் கூந்தல்
காரிகையும் தானும் போய் கண்ணுற்றான் மூரி – நள:204/1,2
கூந்தல் இளம் குயிலும் கோமானும் கொண்டு அணைத்த – நள:263/1
சாரும் இடம் மற்று தான் இல்லை சோர் கூந்தல்
மாதராய் நாம் இந்த மண்டபத்தே கண் துயில – நள:270/2,3
ஓராது அருகு அணைந்தாள் உண் தேன் அறல் கூந்தல்
போர் ஆர் விழியாள் புலர்ந்து – நள:298/3,4
வண்டு வாழ் கூந்தல் மயில் – நள:317/4
மாரி பொரு கூந்தல் மாதராய் நீ பயந்த – நள:326/1

TOP


கூந்தலாய் (1)

கூந்தலாய் மற்று அ குல பாகன் என்று உரைத்தான் – நள:368/3

TOP


கூந்தலார் (1)

காரேயும் கூந்தலார் காரிகை மேல் காதலித்த – நள:224/1

TOP


கூந்தலாள் (2)

அற்பின் தாழ் கூந்தலாள் வேட்கை அகத்து அடக்கி – நள:89/3
கள்ள வார் கூந்தலாள் கண்டு – நள:319/4

TOP


கூப்பினாள் (1)

தந்தருள்வாய் என்னா தன் தாமரை கை கூப்பினாள்
செம் துவர் வாய் மென் மொழியாள் தேர்ந்து – நள:303/3,4

TOP


கூப்பினான் (1)

கொடியார் என செம் கை கூப்பினான் நெஞ்சம் – நள:50/3

TOP


கூர் (8)

கூட்டு மை போல் சிறந்த கூர் இருளை கூன் கோட்டால் – நள:109/1
கொள்ளிக்கும் விள்ளாத கூர் இருளாய் உள்ளம் – நள:120/2
வடி ஏறு கூர் இலை வேல் மன்னாவோ உன்றன் – நள:235/1
மன் அகற்றும் கூர் இலை வேல் மன் – நள:238/4
குளிப்பான் போல் சென்று அடைந்தான் கூர் இருளால் பாரை – நள:267/3
புன்கண் கூர் யாமத்து பூமி மேல் தான் படுத்து – நள:275/1
கூர் இருள் போவான் குறித்து எழுந்து நேரே – நள:280/2
மேரு வரை தோளான் விரவார் போல் கூர் இருளில் – நள:287/2

TOP


கூர (3)

நேசர் இதம் கூர நில வலயம் தாங்கு நளன் – நள:1/1
நேசர் இதம் கூர நில வலயம் தாங்கு நளன் – நள:2/1
கண் அகல் ஞாலம் களி கூர மண் அரசர் – நள:161/2

TOP


கூரும் (1)

கூரும் தழல் அவித்து கொண்டுபோய் பாரில் – நள:340/2

TOP


கூவினவே (1)

கூவினவே கோழி குலம் – நள:293/4

TOP


கூற்றம் (1)

பொன் நகரி சென்று அடைந்தான் போர் வேட்டு எழும் கூற்றம்
அன்ன கரி ஒன்று உடையான் ஆங்கு – நள:382/3,4

TOP


கூற்று (1)

என் காரணம் என்றான் ஏற்று அமரில் கூற்று அழைக்கும் – நள:345/3

TOP


கூற (3)

மா சரிதம் கூற வரும் துணையாம் ஈசன் – நள:1/2
மா சரிதம் கூற வரும் துணையாம் பேசரிய – நள:2/2
தன் வரவு கூற பணித்து தனி புக்கான் – நள:383/3

TOP


கூறாது (1)

கொம்பர் இளம் குருகே கூறாது இருத்தியால் – நள:352/1

TOP


கூறினாள் (1)

கூறினாள் பெற்ற கொடி – நள:59/4

TOP


கூறு (1)

கூறு இரண்டா கொல் யானை கோ – நள:207/4

TOP


கூன் (4)

கூட்டு மை போல் சிறந்த கூர் இருளை கூன் கோட்டால் – நள:109/1
கூன் இரும்பு தீட்டும் குல கோசல நாடன் – நள:150/3
கூன் சங்கின் பிள்ளை கொடி பவள கோடு இடறி – நள:152/1
கூன் இறால் பாய குவளை தவளை வாய் – நள:347/1

TOP