ஒ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்கும் 3
ஒக்குமதோ 1
ஒசிந்த 1
ஒட்டினேன் 1
ஒட்டும்-கொல் 1
ஒடியா 1
ஒடுங்கினான் 1
ஒடுங்கு 1
ஒண் 5
ஒண்_தொடி 1
ஒண்_தொடியாள் 2
ஒத்த 2
ஒத்ததே 1
ஒத்தார் 1
ஒத்திருக்கும் 1
ஒத்து 1
ஒதுங்கி 2
ஒதுங்கும் 1
ஒப்பரோ 1
ஒப்பவே 1
ஒப்பார் 2
ஒப்பான் 1
ஒப்பு 1
ஒரு 12
ஒருகால் 3
ஒருங்கு 1
ஒருத்தி 2
ஒருபோழ்தும் 1
ஒருவகையால் 1
ஒருவர் 3
ஒருவரோடு 1
ஒருவன் 5
ஒலி 3
ஒலிக்கும் 1
ஒலித்த 1
ஒவ்வாத 1
ஒவ்வாது 1
ஒவ்வார் 1
ஒவ்வாள் 1
ஒழிக்கும் 1
ஒழித்து 1
ஒழிந்தோம் 1
ஒழிய 7
ஒழியாது 1
ஒழிவரோ 1
ஒழுக 1
ஒழுகி 1
ஒழுகு 1
ஒழுகும் 4
ஒளி 5
ஒளிக்கின்றது 1
ஒளிக்கு 1
ஒளிப்ப 1
ஒளிப்பான் 1
ஒளியாது 1
ஒளிர் 1
ஒற்றி 1
ஒற்றை 3
ஒன்றாய் 1
ஒன்றி 1
ஒன்றின் 1
ஒன்று 6
ஒன்றும் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


ஒக்கும் (3)

தந்துவினால் கட்ட சமைவது ஒக்கும் பைம் தொடையில் – நள:6/2
உறையும் இளம் மர கா ஒக்கும் இறை வளை கை – நள:198/2
வெம் விடத்தோடு ஒக்கும் விழி இரண்டும் வீழ் துயில் கொள் – நள:407/1

TOP


ஒக்குமதோ (1)

ஒக்குமதோ என்றாள் உயிர்த்து – நள:199/4

TOP


ஒசிந்த (1)

புலர்ந்து அசைந்து பூ அணை மேல் புல்லி கலந்து ஒசிந்த
புல்லென்ற கோலத்து பூவையரை போன்றதே – நள:188/2,3

TOP


ஒட்டினேன் (1)

ஒட்டினேன் உன் பணையம் ஏது என்ன மட்டு அவிழ் தார் – நள:223/2

TOP


ஒட்டும்-கொல் (1)

உய்ஞ்சு கரை ஏற ஒட்டும்-கொல் ஒண்_தொடியாள் – நள:90/1

TOP


ஒடியா (1)

கரும்பு ஒடியா மள்ளர் கடா அடிக்கும் நாடா – நள:222/3

TOP


ஒடுங்கினான் (1)

உரையாடாது உள்ளம் ஒடுங்கினான் வண்டு – நள:256/3

TOP


ஒடுங்கு (1)

ஒடுங்கு இடையாள்-தன்-பால் உயர்ந்து – நள:46/4

TOP


ஒண் (5)

உய்ஞ்சு கரை ஏற ஒட்டும்-கொல் ஒண்_தொடியாள் – நள:90/1
வெண் தாமரையாய் வெளுத்தவே ஒண் தாரை – நள:162/2
உடுத்த துகில் அரிந்தது ஒண்_தொடியாள் கண்டு – நள:289/1
உள்ளவாறு எல்லாம் உரை என்றாள் ஒண் மலரின் – நள:319/3
ஒண்_தொடி தன்னை உறக்கத்தே நீத்ததுவும் – நள:366/1

TOP


ஒண்_தொடி (1)

ஒண்_தொடி தன்னை உறக்கத்தே நீத்ததுவும் – நள:366/1

TOP


ஒண்_தொடியாள் (2)

உய்ஞ்சு கரை ஏற ஒட்டும்-கொல் ஒண்_தொடியாள்
நெஞ்சு தடவும் நெடும் கண்கள் விஞ்சவே – நள:90/1,2
உடுத்த துகில் அரிந்தது ஒண்_தொடியாள் கண்டு – நள:289/1

TOP


ஒத்த (2)

ஒத்த பணையம் உரை என்ன வைத்த நிதி – நள:225/2
ஓய்ந்து நா நீர் போய் உலர்கின்றது ஒத்த தமர் – நள:332/3

TOP


ஒத்ததே (1)

காம நீர் ஓத கடல் கிளர்ந்தால் ஒத்ததே
நாம வேல் வீமன் நகர் – நள:330/3,4

TOP


ஒத்தார் (1)

உடல் போலும் ஒத்தார் உயிர் – நள:325/4

TOP


ஒத்திருக்கும் (1)

ஒத்திருக்கும் உள்ளத்து உரவோனே சித்தம் – நள:12/2

TOP


ஒத்து (1)

ஒருவன் கொண்டு ஏகுவான் ஒத்து அரு மறையோன் – நள:255/2

TOP


ஒதுங்கி (2)

தொக்கி இருந்து ஆலித்து உழலும் தூங்கு இருள் வெய்யோற்கு ஒதுங்கி
புக்கு இருந்தால் அன்ன பொழில் – நள:29/3,4
ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவர் எனும் தோற்றம் இன்றி பொரு வெம் – நள:174/1,2

TOP


ஒதுங்கும் (1)

புன்னை நறு மலரின் பூம் தாது இடை ஒதுங்கும்
கன்னி இளம் மேதி கால் குளம்பு பொன் உரைத்த – நள:213/1,2

TOP


ஒப்பரோ (1)

செம் கண் மால் அல்லனேல் தேர் வேந்தர் ஒப்பரோ
அம் கண் மா ஞாலத்தவற்கு – நள:54/3,4

TOP


ஒப்பவே (1)

ஓடி வளைக்கின்றது ஒப்பவே நீடிய நல் – நள:32/2

TOP


ஒப்பார் (2)

உத்தமரில் மற்று இவனை ஒப்பார் ஒருவர் இலை – நள:408/1
பூ உலகில் ஒப்பார் யார் போதுவார் காவலனே – நள:409/2

TOP


ஒப்பான் (1)

வாக்கினால் மன்னவனை ஒப்பான் மறித்து ஒருகால் – நள:368/1

TOP


ஒப்பு (1)

செப்பு அரிய செல்வ திருநகரும் ஒப்பு அரிய – நள:422/2

TOP


ஒரு (12)

பாண்டவரின் முன்_தோன்றல் பார் முழுதும் தோற்று ஒரு நாள் – நள:8/1
ஒரு கூட்டில் வாழ உலகு – நள:26/4
அன்றில் ஒரு கண் துயின்று ஒரு கண் ஆர்வத்தால் – நள:124/1
அன்றில் ஒரு கண் துயின்று ஒரு கண் ஆர்வத்தால் – நள:124/1
உண்ணா கடு விடத்தை உண்ட ஒரு மூன்று – நள:190/3
போய் ஒரு கால் மீளும் புகுந்து ஒரு கால் மீண்டு ஏகும் – நள:283/1
போய் ஒரு கால் மீளும் புகுந்து ஒரு கால் மீண்டு ஏகும் – நள:283/1
பெம்மான் அமரர் பெருமான் ஒரு மான் கை – நள:335/3
ஒரு துகிலை வாங்கி உடுத்தான் ஒரு துகிலை – நள:403/2
ஒரு துகிலை வாங்கி உடுத்தான் ஒரு துகிலை – நள:403/2
மன்றல் இளம் கோதையொடு மக்களும் தானும் ஒரு
வென்றி மணி நெடும் தேர் மேல் ஏறி சென்று அடைந்தான் – நள:417/1,2
மா விந்தம் என்னும் வள நகரம் சூழ்ந்த ஒரு
பூ விந்தை வாழும் பொழில் – நள:417/3,4

TOP


ஒருகால் (3)

தேவர் பணி தலைமேல் செல்லும் திரிந்து ஒருகால்
மேவும் இளம் கன்னி-பால் மீண்டு ஏகும் பாவில் – நள:84/1,2
பருத்தது ஓர் மால் வரையை பண்டு ஒருகால் செண்டால் – நள:142/3
வாக்கினால் மன்னவனை ஒப்பான் மறித்து ஒருகால்
ஆக்கையே நோக்கின் அவன் அல்லன் பூ கமழும் – நள:368/1,2

TOP


ஒருங்கு (1)

ஒலி ஆழி வையம் ஒருங்கு இழப்ப பண்டு – நள:18/3

TOP


ஒருத்தி (2)

மங்கை ஒருத்தி மலர் கொய்வாள் வாள் முகத்தை – நள:184/1
உற்ற துயரும் உடையவளாய் மற்று ஒருத்தி
நின்றாளை கண்டேம் நில வேந்தன் பொன் தேவி – நள:316/2,3

TOP


ஒருபோழ்தும் (1)

வரி வளையார் தம் கண் மருங்கே ஒருபோழ்தும்
இல்லாதனவும் இரவே இகழ்ந்து எவரும் – நள:23/2,3

TOP


ஒருவகையால் (1)

உன் தலைவன் தன்னை ஒருவகையால் நாடியே – நள:321/1

TOP


ஒருவர் (3)

ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி – நள:174/1
ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி – நள:174/1
உத்தமரில் மற்று இவனை ஒப்பார் ஒருவர் இலை – நள:408/1

TOP


ஒருவரோடு (1)

ஒருவரோடு அன்பு அழிக்கும் ஒன்று அல்ல சூது – நள:219/3

TOP


ஒருவன் (5)

ஓடாத தானை நளன் என்று உளன் ஒருவன்
பீடு ஆரும் செல்வ பெடை வண்டோடு ஊடா – நள:25/1,2
ஒருவன் கொண்டு ஏகுவான் ஒத்து அரு மறையோன் – நள:255/2
வேத முனி ஒருவன் சாபத்தால் வெம் கானில் – நள:339/1
வாழ்கின்றோம் எங்கள் வள நாடு மற்று ஒருவன்
ஆழ்கின்றான் என்றார் அழுது – நள:391/3,4
உங்கள் அரசு ஒருவன் ஆள நீர் ஓடிப்போந்து – நள:393/1

TOP


ஒலி (3)

ஒலி ஆழி வையம் ஒருங்கு இழப்ப பண்டு – நள:18/3
மடை மிதிப்ப தேன் பாயும் ஆடு ஒலி நீர் நாடன் – நள:38/3
பெடையொடு வண்டு உறங்கும் பேர் ஒலி நீர் நாடன் – நள:72/3

TOP


ஒலிக்கும் (1)

ஊக்கிய சொல்லர் ஒலிக்கும் துடி குரலர் – நள:121/1

TOP


ஒலித்த (1)

ஒலித்த தேர் தானை உயர் வேந்தன் நெஞ்சம் – நள:284/3

TOP


ஒவ்வாத (1)

ஒவ்வாத வார்த்தை உலகத்து உரைப்பட்டது – நள:374/3

TOP


ஒவ்வாது (1)

ஒவ்வாது கொண்ட உரு என்னா எவ்வாயும் – நள:401/2

TOP


ஒவ்வார் (1)

மற்ற எவரும் ஒவ்வார் மகிழ்ந்து – நள:172/4

TOP


ஒவ்வாள் (1)

காரேனும் ஒவ்வாள் கலுழ்ந்து – நள:302/4

TOP


ஒழிக்கும் (1)

ஏம் ஒழிக்கும் வேலான் எடுத்து – நள:69/4

TOP


ஒழித்து (1)

உள்ள கருத்தை ஒழித்து ஏகுதி என்றான் – நள:166/3

TOP


ஒழிந்தோம் (1)

இனி சூது ஒழிந்தோம் இன வண்டு கிண்டி – நள:230/1

TOP


ஒழிய (7)

வார் வெம் சிறை ஒழிய வச்சிரத்தால் மால் வரையை – நள:86/1
தொடக்கு ஒழிய போய் நிமிர்ந்த தூண்டில் மடல் கமுகின் – நள:149/2
பொன் ஒழிய போதும் புறம்பு அணை சூழ் நல் நாடு – நள:214/3
பின் ஒழிய போந்தான் பெயர்ந்து – நள:214/4
சேல் உற்ற வாவி திருநாடு பின் ஒழிய
காலில் போய் தேவியொடும் கண்ணுற்றான் ஞாலம் சேர் – நள:257/1,2
சேர்ந்து அருளி நின்ற தனி செங்கோலாய் இங்கு ஒழிய
போந்து அருளுக என்றாள் புலந்து – நள:266/3,4
அந்த வள நாடும் அ அரசும் ஆங்கு ஒழிய
வந்தபடியே வழிக்கொண்டான் செந்தமிழோர் – நள:423/1,2

TOP


ஒழியாது (1)

ஒழியாது உறைந்தார் உவந்து – நள:197/4

TOP


ஒழிவரோ (1)

ஒழிவரோ செம்மை உரை திறம்பா செய்கை – நள:234/3

TOP


ஒழுக (1)

நறை ஒழுக வண்டு உறையும் நல் நகர்-வாய் நாங்கள் – நள:198/1

TOP


ஒழுகி (1)

காதல் வரம்பு ஒழுகி காம பயிர் விளைத்தாள் – நள:203/3

TOP


ஒழுகு (1)

அறம் கிடந்த நெஞ்சும் அருள் ஒழுகு கண்ணும் – நள:54/1

TOP


ஒழுகும் (4)

பச்சை தாள் மேதி கடை வாயில் பால் ஒழுகும்
மச்சத்தார் கோமான் மகன் – நள:147/3,4
உக்கது என சடை மேல் உம்பர் நீர் மிக்கு ஒழுகும்
வெள்ளத்தான் வெள்ளி நெடும் கிரியான் மெய் அன்பர் – நள:180/2,3
அற்ற துகிலும் அறாது ஒழுகும் கண்ணீரும் – நள:316/1
புதைய தேன் பாய்ந்து ஒழுகும் பூம் சோலை வேலி – நள:412/3

TOP


ஒளி (5)

உள்ளம் கவர ஒளி இழந்த வெள்ளை – நள:55/2
வையம் பகல் இழப்ப வானம் ஒளி இழப்ப – நள:104/1
கேள் ஆன தே மொழியை நீக்க கிளர் ஒளி சேர் – நள:281/3
ஓடும் புரவி தேர் வெய்யோன் ஒளி சென்று – நள:323/1
ஒளி ஆர் வேல் கண்ணாள் மேல் உள்ளம் துரப்ப – நள:385/3

TOP


ஒளிக்கின்றது (1)

ஒளிக்கின்றது என்னா உரை – நள:354/4

TOP


ஒளிக்கு (1)

ஒளிக்கு நாள் நீங்கும் உரு – நள:348/4

TOP


ஒளிப்ப (1)

பொன் நாணும் புக்கு ஒளிப்ப புல்லுவன் என்று உன்னா – நள:91/2

TOP


ஒளிப்பான் (1)

ஒளிப்பான் போல் பொன் தேருடன் – நள:267/4

TOP


ஒளியாது (1)

ஒளியாது காட்டு உன் உரு – நள:402/4

TOP


ஒளிர் (1)

விட்டு ஒளிர் வில் வீசி விளங்கு மணி பூண் ஆரம் – நள:223/1

TOP


ஒற்றி (1)

உண்டு ஓர் அழு குரல் என்று ஒற்றி வருகின்ற – நள:304/1

TOP


ஒற்றை (3)

ஒற்றை துகிலால் உடை புனைந்து மற்று இந்த – நள:261/2
ஒற்றை துகிலும் உயிரும் இரண்டு ஆக – நள:282/1
ஒற்றை தனி ஆழி தேர் என்ன ஓடுவது ஓர் – நள:376/1

TOP


ஒன்றாய் (1)

அள்ளி கொளலாய் அடைய திரண்டு ஒன்றாய்
கொள்ளிக்கும் விள்ளாத கூர் இருளாய் உள்ளம் – நள:120/1,2

TOP


ஒன்றி (1)

நின்று கவிகை நிழல் வேந்தே ஒன்றி
அறு கால் சிறு பறவை அம் சிறகால் வீசும் – நள:41/2,3

TOP


ஒன்றின் (1)

அ பலகை ஒன்றின் அருகு இருந்தார் தாம் மதிக்க – நள:422/1

TOP


ஒன்று (6)

ஒருவரோடு அன்பு அழிக்கும் ஒன்று அல்ல சூது – நள:219/3
ஆவி போல் ஆடையும் ஒன்று ஆனதே பூ விரிய – நள:264/2
மண்ணின் மீது என்றனை நின் வன் தாளால் ஒன்று முதல் – நள:342/1
சீற்றம் ஒன்று இன்றி சின எயிற்றால் மாற்றுதற்கு இன்று – நள:345/2
உறக்கத்தே நீத்தேனுக்கு ஒன்று – நள:352/4
அன்ன கரி ஒன்று உடையான் ஆங்கு – நள:382/4

TOP


ஒன்றும் (1)

உன்னை யான் ஒன்றும் உணராது உரைத்த எலாம் – நள:413/1

TOP