அ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 28
அகத்து 1
அகத்தே 1
அகம் 3
அகல் 2
அகல 1
அகலத்தோடும் 1
அகலம் 1
அகலா 3
அகலும் 1
அகற்றி 2
அகற்றும் 2
அகன்ற 1
அகன்றான் 1
அங்க 1
அங்கண் 1
அங்கி 1
அங்கு 11
அங்கே 1
அங்கை 1
அங்ஙனே 2
அசல 1
அசைந்து 1
அசைப்ப 2
அசைய 1
அஞ்சல் 1
அஞ்சனம் 1
அஞ்சாரோ 1
அஞ்சி 4
அஞ்சினான் 1
அஞ்சினோர்க்கும் 1
அஞ்சும் 1
அடக்கி 1
அடக்கும் 1
அடங்க 2
அடங்கா 1
அடம்பின் 1
அடல் 1
அடற்கு 1
அடி 4
அடிக்கும் 1
அடிகள் 1
அடிசில் 2
அடித்த 1
அடிப்பார் 1
அடியவற்கா 1
அடியில் 3
அடியே 1
அடியேங்கட்கு 1
அடியை 1
அடு 5
அடுத்த 2
அடுத்தடுத்து 1
அடைக்கும் 1
அடைகின்ற 1
அடைத்ததோ 1
அடைத்து 1
அடைதலுமே 1
அடைந்த 1
அடைந்தான் 10
அடைந்து 3
அடைந்தேன் 1
அடைய 2
அடையலரை 1
அடையா 1
அடையாத 1
அடையார் 1
அடையும் 4
அடையேல் 1
அடையேன் 1
அடைவு 1
அண்ணல்-அவற்கும் 1
அணங்கின் 1
அணங்கு 3
அணி 9
அணி_மொழிக்கும் 1
அணிந்த 1
அணிந்து 1
அணியும் 1
அணிவார் 1
அணுகி 1
அணை 2
அணைக்க 1
அணைத்த 1
அணைத்து 1
அணைந்த 1
அணைந்தாள் 1
அணைந்தான் 1
அணைந்து 2
அணைய 3
அணையா 2
அணையும் 1
அணைவன 1
அணைவீர் 1
அத்தனையும் 2
அதனில் 1
அதனை 7
அது 1
அதுவே 1
அந்த 6
அந்தண 1
அந்தணர்கள் 1
அந்தணன் 1
அந்தப்புரமும் 1
அந்தரத்தே 1
அந்தி 4
அந்தோ 2
அந்நாளும் 1
அப்பா 1
அப்பு 1
அப்புறமா 1
அப்போதில் 1
அபயம் 2
அம் 20
அம்பு 2
அம்புயத்தின் 1
அம்மான் 1
அமரர் 2
அமரில் 2
அமரும் 1
அமளி 2
அமளியை 1
அமுத 1
அமுதம் 3
அமை 1
அமைச்சா 1
அமைந்த 2
அயர்ந்து 3
அயர்வான் 1
அயர்வானை 1
அயிர்த்த 1
அயிர்த்தாள் 1
அயிர்த்து 2
அயிர்ப்பார் 1
அயில் 2
அயோத்தி 3
அயோத்தியார் 1
அரங்கில் 3
அரங்கு 1
அரசர் 4
அரசற்கு 3
அரசன் 6
அரசனையும் 1
அரசு 8
அரசும் 2
அரசே 4
அரசை 3
அரண் 2
அரவம் 1
அரவின் 10
அரவு 8
அரற்றி 1
அரற்றினாள் 1
அரற்றும் 1
அரா 1
அரி 4
அரிக்க 1
அரிக்கும் 1
அரிக்கொண்டு 1
அரிச்சந்திரன் 1
அரிதற்கு 1
அரிதா 1
அரிந்த 1
அரிந்தது 1
அரிந்தான் 1
அரிந்திட்டு 1
அரிய 3
அரிவார் 1
அரு 4
அருகாக 1
அருகு 7
அருகை 1
அரும் 6
அரும்ப 4
அரும்பாம் 1
அருமறையோன் 1
அருவி 4
அருள் 6
அருள்க 1
அருள 1
அருளல் 1
அருளால் 1
அருளி 1
அருளின் 1
அருளீரோ 1
அருளுக 2
அருளும் 4
அருளை 1
அருளோ 1
அரை 1
அல் 2
அல்குல் 1
அல்ல 1
அல்லர் 1
அல்லல் 1
அல்லன் 1
அல்லனேல் 1
அல்லனோ 1
அல்லாது 1
அல்லால் 1
அல்லி 1
அலசுவான் 1
அலம்ப 1
அலம்பு 1
அலமந்து 2
அலமரா 1
அலமருவேன் 1
அலர் 1
அலர்த்தும் 1
அலர்ந்த 2
அலர்ந்ததே 1
அலரும் 2
அலரேல் 1
அலவ 1
அலவன் 1
அலை 2
அலைத்து 1
அலைப்பட்ட 1
அலைய 1
அவ்வளவில் 4
அவ்வாறு 1
அவட்கு 1
அவந்தி 1
அவர் 4
அவர்க்கு 1
அவர்கள் 1
அவரை 1
அவள் 4
அவள்-தன் 2
அவளும் 1
அவளே 2
அவளோடு 1
அவற்கு 1
அவன் 12
அவன்-தன் 3
அவனி 1
அவனுக்கு 1
அவனை 1
அவாம் 1
அவாவியவாறு 1
அவாவும் 1
அவித்து 3
அவிர் 1
அவிழ் 4
அவிழ்க்கும் 1
அவிழ்ந்த 1
அவிழ்ந்ததே 1
அவிழ 1
அவை 2
அழகு 5
அழகை 1
அழல் 1
அழலும் 1
அழலை 1
அழலோன் 1
அழன்று 1
அழிக்கும் 4
அழிகின்ற 1
அழிகின்றேன் 1
அழிந்தது 1
அழிந்ததே 1
அழிந்தாள் 2
அழிந்தான் 1
அழிந்திட்டான் 1
அழிந்து 1
அழியல் 1
அழியா 1
அழியாமல் 1
அழியும் 1
அழிவரோ 1
அழிவு 1
அழு 1
அழுகின்றேன் 1
அழுதற்கு 1
அழுதாள் 7
அழுதான் 1
அழுது 6
அழுந்தி 1
அழுவார் 1
அழைக்கும் 2
அழைக்கைக்கும் 1
அழைத்தாள் 1
அழைத்து 1
அழைப்ப 3
அழைப்பன 1
அள்ளி 1
அளக 1
அளந்த 1
அளவில் 1
அளவு 1
அளவும் 2
அளவே 1
அளி 1
அளிக்கின்ற 1
அளிக்கும் 2
அளித்த 1
அளித்தாய் 2
அளித்தான் 2
அளித்து 1
அளிப்பான் 1
அளியான் 1
அளைந்து 1
அளையும் 1
அற்பின் 1
அற்ற 1
அற்றது 1
அற்றை 1
அற்றோரை 1
அற 2
அறத்தின் 1
அறத்தை 1
அறம் 3
அறல் 1
அறவே 1
அறற்றுவன 1
அறாது 1
அறிகிலேன் 1
அறிந்தாள் 1
அறிந்து 3
அறிய 1
அறியவே 1
அறியா 6
அறியாது 1
அறிவாரே 1
அறிவிக்க 1
அறிவித்து 1
அறிவு 1
அறு 2
அறுத்த 1
அறை 1
அறைக 1
அறைந்தால் 1
அறைந்து 2
அறையும் 2
அறைவாய் 1
அறைவித்தான் 1
அன்பர் 1
அன்பால் 2
அன்பின் 1
அன்பு 2
அன்பை 2
அன்றில் 2
அன்றே 4
அன்றொருகால் 1
அன்றோ 6
அன்ன 7
அன்னங்காள் 1
அன்னத்தை 4
அன்னதற்கு 1
அன்னம் 18
அன்னம்-தன்-பால் 1
அன்னம்-தனை 1
அன்னமே 1
அன்னவனை 2
அன்னாள் 1
அன்னான் 2
அன்னை-தனை 1
அனங்கன் 1
அனத்தான் 1
அனத்தை 1
அனமே 2
அனலில் 1
அனைத்தும் 3
அனைத்தே 1
அனைய 1
அனையார் 1
அனையான் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


அ (28)

பிழைத்தேன் யான் என்றான் அ பேர்_ஆழியானை – நள:11/3
வெய்து ஆம் அ காம விடாய் – நள:51/4
கொற்றவன்-தன் ஏவலினால் போய் அ குல கொடி-பால் – நள:70/1
தூது ஆக என்றான் அ தோகையை தன் ஆகத்தால் – நள:83/3
கோது ஆக என்றான் அ கோ – நள:83/4
தேவர் கோனே அ திருநகரில் காவல் – நள:85/2
எங்கு நீ வேண்டினை மற்று அ இடத்தே சங்கை அற – நள:99/2
ஆவியார் போனாலும் அ வழியே பாவியேன் – நள:103/2
அன்னங்காள் நீங்களும் அ ஆதித்தன் தானும் போய் – நள:110/1
பூவையர் கை தீண்டலும் அ பூம் கொம்பு மேவி அவர் – நள:183/2
காத்தாள் அ கை மலரை காந்தள் என பாய்தலுமே – நள:184/3
அ மலரை கொய்யாது அரும் தளிரை கொய்வாளை – நள:185/3
அலர்ந்த மலர் சிந்தி அ மலர் மேல் கொம்பு – நள:188/1
செழு முகத்தை தாமரைக்கே சேர்த்தாள் கெழுமிய அ
கோமகற்கு தான் இனைந்த குற்றங்கள் அத்தனையும் – நள:191/2,3
வேறாக தோற்றான் அ வேந்து – நள:225/4
கொடியானுக்கு அ பார் கொடுத்து – நள:231/4
அ வண்ணம் கண்ட-கால் ஆற்றுவரோ மெய் வண்ணம் – நள:332/2
திரிவான் அ தீ கானில் செம் தீயின் வாய்ப்பட்டு – நள:337/3
மின் இமைக்கும் பூணாள் அ வீங்கு இருள்-வாய் யாங்கு உணர்ந்தால் – நள:355/3
அ மொழியை தூதர் அரசற்கு அறிவிக்க – நள:359/1
கூந்தலாய் மற்று அ குல பாகன் என்று உரைத்தான் – நள:368/3
மொழிந்தார் அ மாற்றம் மொழியாத முன்னே – நள:397/3
புக்கோர் அரு வினை போல் போயிற்றே அ காலம் – நள:404/2
அ இடத்தே நீத்த அவர் என்றே இ இடத்தே – நள:407/2
வார் ஆர் முலையாள் அ மன்னவனை காணாமல் – நள:407/3
அ பலகை ஒன்றின் அருகு இருந்தார் தாம் மதிக்க – நள:422/1
வென்றானை வென்றான் அ வேந்து – நள:422/4
அந்த வள நாடும் அ அரசும் ஆங்கு ஒழிய – நள:423/1

TOP


அகத்து (1)

அற்பின் தாழ் கூந்தலாள் வேட்கை அகத்து அடக்கி – நள:89/3

TOP


அகத்தே (1)

ஆதரித்தார் தம்மோடு அவை அகத்தே சோதி – நள:96/2

TOP


அகம் (3)

அகம் பார்க்கும் அற்றோரை போல மிகும் காதல் – நள:68/2
அடையாத வாயில் அகம் – நள:72/4
கொடாதார் அகம் போல் குறுகிற்றே மெய்ம்மை – நள:344/3

TOP


அகல் (2)

கண் அகல் ஞாலம் களி கூர மண் அரசர் – நள:161/2
ஐயுற்று நோக்கும் அகல் பொழில் சென்று எய்தினான் – நள:205/3

TOP


அகல (1)

வீரன் அகல செறுவின் மீது ஓடி குங்குமத்தின் – நள:176/1

TOP


அகலத்தோடும் (1)

அல் ஓடும் வேலான் அகலத்தோடும் பொருதாள் – நள:175/3

TOP


அகலம் (1)

அம் கை வேல் மன்னன் அகலம் எனும் செறுவில் – நள:203/1

TOP


அகலா (3)

மன்னும்படி அகலா வல் இரவில் மின்னும் – நள:110/2
பற்று அகலா உள்ளம் பரிந்து – நள:261/4
போய் அகலா முன்னம் புனை_இழையாய் பூம் குயிலை – நள:317/1

TOP


அகலும் (1)

மாலை பெறாது அகலும் வான் நாடர் வேலை – நள:164/2

TOP


அகற்றி (2)

கைதவம் தான் நீக்கி கருத்தில் கறை அகற்றி
செய் தவம் தான் எத்தனையும் செய்தாலும் மை தீர் – நள:245/1,2
இரவு அகற்றி வந்தாய்-கொல் இன்று – நள:356/4

TOP


அகற்றும் (2)

மன் அகற்றும் கூர் இலை வேல் மன் – நள:238/4
அரவு அகற்றும் என் போல ஆர்கலியே மாதை – நள:356/3

TOP


அகன்ற (1)

நினையாது நீத்து அகன்ற போது தனியே நின்று – நள:333/2

TOP


அகன்றான் (1)

அரவு அரசை கொண்டு அகன்றான் ஆரணியம் தன்னில் – நள:341/3

TOP


அங்க (1)

அந்தோ என எடுக்கும் அங்க நாடு ஆளுடையான் – நள:152/3

TOP


அங்கண் (1)

மங்கை வதன மணி அரங்கில் அங்கண்
வடி வாள் மேல் கால் வளைத்து வார் புருவம் என்னும் – நள:201/2,3

TOP


அங்கி (1)

அங்கி அமுதம் நீர் அம் பூ அணி ஆடை – நள:99/1

TOP


அங்கு (11)

அன்னம்-தனை பிடித்து அங்கு ஆய்_இழையார் கொண்டுபோய் – நள:33/1
அங்கு அவர்கள் வேண்டும் வரம் கொடுக்க பெற்றவர்கள் – நள:100/1
அங்கு அணைக்க வாய் நெகிழ்த்த ஆம்பல் பூ கொங்கு அவிழ் தேன் – நள:189/2
கொங்கை ஏர் பூட்டி குறு வியர் நீர் அங்கு அடைத்து – நள:203/2
வெல்லும் கொடி என்றான் வெம் கலியால் அங்கு அவன் மேல் – நள:215/3
அங்கு தான் காணாது அயர்ந்து – நள:288/4
அங்கு அவன்-தன் கண்ணீர் அவள் உடல் மேல் பொங்க – நள:325/2
கங்கை வள நாட்டார்-தம் காவலனை அங்கு
தலைப்பட்டவாறு உண்டோ சாற்று என்றாள் கண்ணீர் – நள:367/2,3
அங்கு ஓர் முரசம் அறைவித்தான் செங்கோலாய் – நள:370/2
செய்க்கு அங்கு பாயும் திருநாடு புக்கு அங்கு – நள:416/2
செய்க்கு அங்கு பாயும் திருநாடு புக்கு அங்கு
இருக்குமா காண்பான் போல் ஏறினான் குன்றில் – நள:416/2,3

TOP


அங்கே (1)

வெம் கானகம் திரியும் வேளைதனில் அங்கே ஓர் – நள:269/2

TOP


அங்கை (1)

அங்கை நெடு வேல் கண் ஆய்_இழையாய் வாவியின்-வாய் – நள:156/1

TOP


அங்ஙனே (2)

நீண்டதோ அங்ஙனே இங்ஙனே நீள் மலராள் – நள:90/3
ஆரும் திரியா அரை இருளில் அங்ஙனே
சோர் குழலை நீத்த துயரோடும் வீரன் – நள:337/1,2

TOP


அசல (1)

பொன் அசல மார்பன் புகைந்து – நள:210/4

TOP


அசைந்து (1)

புலர்ந்து அசைந்து பூ அணை மேல் புல்லி கலந்து ஒசிந்த – நள:188/2

TOP


அசைப்ப (2)

தோற்ற அமளி என தோற்றுமால் காற்று அசைப்ப
உக்க மலரோடு உகுத்த வளை முத்தமே – நள:187/2,3
நினைப்பு என்னும் காற்று அசைப்ப நெஞ்சிடையே மூளும் – நள:351/1

TOP


அசைய (1)

மென் மாலை தோள் அசைய மெல்ல நடந்ததே – நள:106/3

TOP


அஞ்சல் (1)

அஞ்சல் மட அனமே உன்றன் அணி நடையும் – நள:34/1

TOP


அஞ்சனம் (1)

அஞ்சனம் தோய் கண்ணில் அருவி நீர் ஆங்கு அவர்க்கு – நள:254/1

TOP


அஞ்சாரோ (1)

அஞ்சாரோ மன்னர் அடு மடையா எஞ்சாது – நள:394/2

TOP


அஞ்சி (4)

அரவின் பசும் தலை என்று அஞ்சி இரவு எல்லாம் – நள:145/2
அஞ்சி பார் ஈந்த அரசனையும் தேவியையும் – நள:258/3
அருளீரோ என்னா அரற்றினாள் அஞ்சி
இருள் ஈரும் பூணாள் எடுத்து – நள:305/3,4
அடைந்தான் அடைதலுமே ஆர் அழலோன் அஞ்சி
உடைந்தான் போய் புக்கான் உவந்து – நள:338/3,4

TOP


அஞ்சினான் (1)

அஞ்சினான் ஆவி அழிந்தான் அற உயிர்த்து – நள:353/3

TOP


அஞ்சினோர்க்கும் (1)

அடைகின்ற வேந்தர்க்கும் ஆண்டு அஞ்சினோர்க்கும்
இடைநின்ற காலம் போல் இன்று – நள:107/3,4

TOP


அஞ்சும் (1)

அஞ்சும் தொடுத்தான் அவன் – நள:173/4

TOP


அடக்கி (1)

அற்பின் தாழ் கூந்தலாள் வேட்கை அகத்து அடக்கி
கற்பின் தாழ் வீழ்த்த கதவு – நள:89/3,4

TOP


அடக்கும் (1)

அடக்கும் ஆறு உள்ளத்தவன் – நள:85/4

TOP


அடங்க (2)

வாய் அடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நல் நெஞ்சில் – நள:170/3
தீ அடங்க ஏறினான் தேர் – நள:170/4

TOP


அடங்கா (1)

துறை-வாய் அடங்கா துயர் – நள:116/4

TOP


அடம்பின் (1)

கான அடம்பின் கவட்டு இலைகள் மானின் – நள:268/2

TOP


அடல் (1)

அடல் கதிர் வேல் மன்னன் அவன் ஏற்றின் முன் போய் – நள:215/1

TOP


அடற்கு (1)

கடல் தானை முன்னாக கண்டான் அடற்கு அமைந்த – நள:75/2

TOP


அடி (4)

அலம்பு வார் கோதை அடி இணையில் வீழ்ந்து – நள:40/3
அழைக்கைக்கும் முன் செல் அடி – நள:179/4
அல்லி அம் தார் மார்பன் அடி தாமரை அவள்-தன் – நள:296/1
அடி மேல் விழுந்தாள் அழுது – நள:324/4

TOP


அடிக்கும் (1)

கரும்பு ஒடியா மள்ளர் கடா அடிக்கும் நாடா – நள:222/3

TOP


அடிகள் (1)

கண் இமைத்தலால் அடிகள் காசினியில் தோய்தலால் – நள:160/1

TOP


அடிசில் (2)

என் உடையரேனும் உடையரோ இன் அடிசில்
புக்கு அளையும் தாமரை கை பூ நாறும் செய்ய வாய் – நள:246/2,3
கோது இல் அடிசில் குறை முடிப்பான் மேதி – நள:386/2

TOP


அடித்த (1)

இட்ட பசும் குவளை ஏர் அடித்த கட்டி – நள:74/2

TOP


அடிப்பார் (1)

ஏர் அடிப்பார் கோல் எடுப்ப இன் தேன் தொடை பீறி – நள:380/1

TOP


அடியவற்கா (1)

ஆதி தனி கோலம் ஆனான் அடியவற்கா
சோதி திரு தூணில் தோன்றினான் வேதத்தின் – நள:3/1,2

TOP


அடியில் (3)

பொன் அடியில் தாழ்ந்தனவே பூம் குழலாய் காண் என்றான் – நள:183/3
நாராயணாய நம என்று அவன் அடியில்
சேராரை வெம் துயரம் சேர்ந்தான் போல் பாராளும் – நள:211/1,2
மலர்ந்த தார் வேந்தன் மலர் அடியில் வீழ்ந்தாள் – நள:406/3

TOP


அடியே (1)

மிக்கோன் உலகு அளந்த மெய் அடியே சார்வாக – நள:404/1

TOP


அடியேங்கட்கு (1)

அடியேங்கட்கு ஆதரவு தீர கொடி நகரில் – நள:235/2

TOP


அடியை (1)

பொன் அடியை கண்ணீர் புனலால் கழுவினான் – நள:405/3

TOP


அடு (5)

அடு மாற்றம் இல்லா அரசன் சொல் கேட்டு – நள:35/3
எழு அடு தோள் மன்னா இலங்கு_இழையோர் தூண்ட – நள:38/1
ஆயர் கொணர்ந்த அடு பாலின் தோயல் – நள:283/2
அஞ்சாரோ மன்னர் அடு மடையா எஞ்சாது – நள:394/2
அம் கை இரண்டும் அடு புகையால் இங்ஙன் – நள:398/2

TOP


அடுத்த (2)

கார் அடுத்த சோலை கடல் நாடன் தேர் அடுத்த – நள:380/2
கார் அடுத்த சோலை கடல் நாடன் தேர் அடுத்த
மா தொழிலும் இ தொழிலும் மாற்றுதியோ என்று உரைத்தான் – நள:380/2,3

TOP


அடுத்தடுத்து (1)

மடுத்த துயிலான் மறுகி அடுத்தடுத்து
மன்னே என அழைத்தாள் மற்றும் அவனை காணாது – நள:289/2,3

TOP


அடைக்கும் (1)

முருகு அடைக்கும் தாமரையின் மொய் மலரை தும்பி – நள:357/3

TOP


அடைகின்ற (1)

அடைகின்ற வேந்தர்க்கும் ஆண்டு அஞ்சினோர்க்கும் – நள:107/3

TOP


அடைத்ததோ (1)

கோழி குரல் அடைத்ததோ என்னும் ஆழி – நள:115/2

TOP


அடைத்து (1)

கொங்கை ஏர் பூட்டி குறு வியர் நீர் அங்கு அடைத்து
காதல் வரம்பு ஒழுகி காம பயிர் விளைத்தாள் – நள:203/2,3

TOP


அடைதலுமே (1)

அடைந்தான் அடைதலுமே ஆர் அழலோன் அஞ்சி – நள:338/3

TOP


அடைந்த (1)

கந்து அடையும் வேழ கடைத்தலை-வாய் வந்து அடைந்த
பூ வேந்தர்-தங்கள் கிளை பொன் நகரில் ஈண்டிற்றே – நள:65/2,3

TOP


அடைந்தான் (10)

வேரி புனல் நனைப்ப வேய் அடைந்தான் கார் வண்டு – நள:29/2
படைகற்பான் வந்து அடைந்தான் பைம் தொடியாள் பாதம் – நள:44/3
கொற்ற தனி யாழ் குல முனிவன் உற்று அடைந்தான்
தேன் ஆடும் தெய்வ தருவும் திரு மணியும் – நள:76/2,3
செம் வாய அன்றில் துணை இழப்ப சென்று அடைந்தான்
வெம் வாய் விரி கதிரோன் வெற்பு – நள:104/3,4
குளிப்பான் போல் சென்று அடைந்தான் கூர் இருளால் பாரை – நள:267/3
அடைந்தான் அடைதலுமே ஆர் அழலோன் அஞ்சி – நள:338/3
நல் நீர் அயோத்தி நகர் அடைந்தான் பொன் நீர் – நள:357/2
அடைந்தான் அயோத்தி நகர் – நள:364/4
பொன் நகரி சென்று அடைந்தான் போர் வேட்டு எழும் கூற்றம் – நள:382/3
வென்றி மணி நெடும் தேர் மேல் ஏறி சென்று அடைந்தான்
மா விந்தம் என்னும் வள நகரம் சூழ்ந்த ஒரு – நள:417/2,3

TOP


அடைந்து (3)

மன்னராய் மன்னர்-தமை அடைந்து வாழ்வு எய்தி – நள:250/1
தாள் அடைந்து வாழும் தமியேனை தோளால் – நள:300/2
ஆக அயோத்தி நகர் அடைந்து மா கனக – நள:349/2

TOP


அடைந்தேன் (1)

மன்றல் மலர் தாராய் வந்து அடைந்தேன் என்றான் – நள:385/2

TOP


அடைய (2)

அள்ளி கொளலாய் அடைய திரண்டு ஒன்றாய் – நள:120/1
மங்கையர்கள் வாச மலர் கொய்வான் வந்து அடைய
பொங்கி எழுந்த பொறி வண்டு கொங்கோடு – நள:182/1,2

TOP


அடையலரை (1)

ஆறிரண்டு ஆண்டு எல்லை கழித்தான் அடையலரை
கூறு இரண்டா கொல் யானை கோ – நள:207/3,4

TOP


அடையா (1)

பொய் அடையா சிந்தை புரவலனை நோக்கி தன் – நள:360/1

TOP


அடையாத (1)

அடையாத வாயில் அகம் – நள:72/4

TOP


அடையார் (1)

ஆரே துயர் அடையார் ஆங்கு – நள:277/4

TOP


அடையும் (4)

செந்து அடையும் வண்டு உறை தார் செய்யாள் வளர் மார்பன் – நள:65/1
கந்து அடையும் வேழ கடைத்தலை-வாய் வந்து அடைந்த – நள:65/2
அம் கண் விசும்பின் அவிர் மதி மேல் சென்று அடையும்
வெம் கண் அரவு போல் மெல்_இயலை கொங்கைக்கு – நள:299/1,2
அடையும் கடும் கானில் ஆடு அரவின் வாய்ப்பட்டு – நள:303/1

TOP


அடையேல் (1)

கேட்டாரை நீ அடையேல் என்றான் கிளர் மணி பூண் – நள:410/3

TOP


அடையேன் (1)

என் காலத்து உன் சரிதம் கேட்டாரை யான் அடையேன்
மின் கால் அயில் வேலாய் மெய் என்று நன் காவி – நள:411/1,2

TOP


அடைவு (1)

அடைவு என்றான் மற்று அந்த அன்னத்தை முன்னே – நள:43/3

TOP


அண்ணல்-அவற்கும் (1)

அணி_மொழிக்கும் அண்ணல்-அவற்கும் பணி_மொழியார் – நள:172/2

TOP


அணங்கின் (1)

நண்ணு புகழ் நளனும் நன்கு உரைத்த பெண் அணங்கின்
வன் மொழியும் தேவர் மனம் மகிழ தான் மொழிந்த – நள:98/2,3

TOP


அணங்கு (3)

அமை அந்தி என்று ஓர் அணங்கு – நள:36/4
அரும் கேழ் மணி பூண் அணங்கு – நள:136/4
இன்ன பரிசு என்று இயல் அணங்கு முன் நின்று – நள:140/2

TOP


அணி (9)

அணி சேவடி எம் அரண் – நள:5/4
அஞ்சல் மட அனமே உன்றன் அணி நடையும் – நள:34/1
ஆர்க்கும் சிலம்பே அணி முரசா வேல் படையும் – நள:39/2
அங்கி அமுதம் நீர் அம் பூ அணி ஆடை – நள:99/1
அயிர்த்தாள் உயிர்த்தாள் அணி வதனம் எல்லாம் – நள:101/3
ஆசை போகாது என்று அழிந்தாள் அணி யாழின் – நள:103/3
அணி_மொழிக்கும் அண்ணல்-அவற்கும் பணி_மொழியார் – நள:172/2
சந்த கழல் தாமரையும் சதங்கை அணி
பைம் தளிரும் நோவ பதைத்து உருகி எந்தாய் – நள:241/1,2
அணி ஆடை கொள்க என்றான் ஆங்கு – நள:347/4

TOP


அணி_மொழிக்கும் (1)

அணி_மொழிக்கும் அண்ணல்-அவற்கும் பணி_மொழியார் – நள:172/2

TOP


அணிந்த (1)

மன் ஆகத்து உள் அழுந்தி வார் அணிந்த மென் முலையும் – நள:91/1

TOP


அணிந்து (1)

போதுவார் நீறு அணிந்து பொய்யாத ஐந்து_எழுத்தை – நள:335/1

TOP


அணியும் (1)

வார் அணியும் கொங்கை மட வாள் நுடங்கு இடைக்கு – நள:50/1

TOP


அணிவார் (1)

அம் பொன் கயிலைக்கே ஆகத்து அரவு அணிவார்
தம் பொன் படைக்கு தமியனா எம்பியை முன் – நள:13/1,2

TOP


அணுகி (1)

தான் அணுகி மீண்டபடி சாற்றவே தேன் முரலும் – நள:97/2

TOP


அணை (2)

புலர்ந்து அசைந்து பூ அணை மேல் புல்லி கலந்து ஒசிந்த – நள:188/2
பொன் ஒழிய போதும் புறம்பு அணை சூழ் நல் நாடு – நள:214/3

TOP


அணைக்க (1)

அங்கு அணைக்க வாய் நெகிழ்த்த ஆம்பல் பூ கொங்கு அவிழ் தேன் – நள:189/2

TOP


அணைத்த (1)

கூந்தல் இளம் குயிலும் கோமானும் கொண்டு அணைத்த
பூம் துகில் கொண்டு அந்தரத்தே போய் நின்று வேந்தனே – நள:263/1,2

TOP


அணைத்து (1)

கொய்த மலரை கொடும் கையினால் அணைத்து
மொய் குழலில் சூட்டுவான் முன் வந்து தையலாள் – நள:186/1,2

TOP


அணைந்த (1)

கோதை மட மானை கொண்டு அணைந்த மாதர் – நள:137/2

TOP


அணைந்தாள் (1)

ஓராது அருகு அணைந்தாள் உண் தேன் அறல் கூந்தல் – நள:298/3

TOP


அணைந்தான் (1)

கொற்ற வேல் தானை குரு_நாடன்-பால் அணைந்தான்
எற்று நீர் ஞாலத்து இருள் நீங்க முற்றும் – நள:10/1,2

TOP


அணைந்து (2)

கொற்ற தனி தேரும் கொண்டு அணைந்து மற்றும் – நள:399/2
போதல் அரும் குஞ்சியான் புக்கு அணைந்து கோது இலா – நள:405/2

TOP


அணைய (3)

அன்னம் போய் கன்னி அருகு அணைய நல்_நுதலும் – நள:52/2
மன்றல் அம் தார் மன்னர் நடு அணைய வந்திருந்தான் – நள:135/1
கொங்கை முகத்து அணைய கூட்டி கொடும் கையால் – நள:189/1

TOP


அணையா (2)

பாரே அணையா படை-கண் துயின்றாள் மற்று – நள:277/3
புக்கெடுத்து வீர புயத்து அணையா மக்காள் நீர் – நள:390/2

TOP


அணையும் (1)

விரை மலர் பூ மெல் அணையும் மெய் காவல் பூண்ட – நள:273/1

TOP


அணைவன (1)

எதிர் கொண்டு அணைவன போல் ஏங்குவன முத்தின் – நள:182/3

TOP


அணைவீர் (1)

கொண்டு அணைவீர் என்று குல தூதரை விடுத்தான் – நள:418/3

TOP


அத்தனையும் (2)

மன்னன் மனத்து எழுந்த மையல் நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க மனம் இரங்கி முன்னம் – நள:56/1,2
கோமகற்கு தான் இனைந்த குற்றங்கள் அத்தனையும்
பூ மகட்கு சொல்லுவாள் போல் – நள:191/3,4

TOP


அதனில் (1)

பத்து ஆயிரம் கோடி பார் என்ன உய்த்து அதனில்
தேர் நிறுத்தி எண்ணினான் தேவர் சவை நடுவே – நள:379/2,3

TOP


அதனை (7)

மென் மயில் தன் தோகை விரித்து ஆட முன் அதனை
கண்டு ஆற்றாது உள்ளம் கலங்கினான் காம நோய் – நள:49/2,3
தன் ஆடல் விட்டு தனி இடம் சேர்ந்து ஆங்கு அதனை
என் நாடல் சொல் என்றாள் ஈங்கு – நள:52/3,4
வேறுபாடு உண்டு என்றார் வேந்தனுக்கு மற்று அதனை
கூறினாள் பெற்ற கொடி – நள:59/3,4
சிந்தை கெடுத்த அதனை தேடுவான் முந்தி – நள:81/2
மன்னவனும் நேர்ந்தான் மனத்தினால் மற்று அதனை
இன்னது என ஓராது இசைந்து – நள:82/3,4
மோட்டு வயிற்று அரவு முன் தோன்ற மீட்டு அதனை
ஓராது அருகு அணைந்தாள் உண் தேன் அறல் கூந்தல் – நள:298/2,3
செம் மொழியா தேர்ந்து அதனை சிந்தித்தே இ மொழிக்கு – நள:359/2

TOP


அது (1)

ஆங்கு அவன் தான் அவ்வாறு உரைப்ப அது கேட்டு – நள:343/1

TOP


அதுவே (1)

ஆவது உரைத்தாய் அதுவே தலை நின்றேன் – நள:85/1

TOP


அந்த (6)

அடைவு என்றான் மற்று அந்த அன்னத்தை முன்னே – நள:43/3
அந்த நெடும் சுரத்தின் மீது ஏக ஆங்கு அழலும் – நள:267/1
காரிகை-தன் வெம் துயரம் காணாமல் நீத்து அந்த
கூர் இருள் போவான் குறித்து எழுந்து நேரே – நள:280/1,2
விடுக என்றான் மற்று அந்த வெம் தழலால் வெம்மை – நள:340/3
சாற்றினான் அந்த உரை தார் வேந்தன் தன் செவியில் – நள:365/3
அந்த வள நாடும் அ அரசும் ஆங்கு ஒழிய – நள:423/1

TOP


அந்தண (1)

பூண்டாள் என்று அந்தண நீ போய் உரைத்தால் நீண்ட – நள:369/2

TOP


அந்தணர்கள் (1)

வாழி அரு மறைகள் வாழி நல் அந்தணர்கள்
வாழி நளன் காதை வழுத்துவோர் வாழிய – நள:427/1,2

TOP


அந்தணன் (1)

அந்நாளும் நாளை அளவு என்றான் அந்தணன் போய் – நள:370/3

TOP


அந்தப்புரமும் (1)

கோயிலும் அந்தப்புரமும் கொடி நுடங்கும் – நள:329/1

TOP


அந்தரத்தே (1)

பூம் துகில் கொண்டு அந்தரத்தே போய் நின்று வேந்தனே – நள:263/2

TOP


அந்தி (4)

அமை அந்தி என்று ஓர் அணங்கு – நள:36/4
புன் மாலை அந்தி பொழுது – நள:106/4
புற்கு என்றார் அந்தி புனை மலர் கண் நீர் அரும்ப – நள:107/1
அந்தி முறுவலித்ததாம் என்ன வந்ததால் – நள:108/2

TOP


அந்தோ (2)

நிற்கின்றது அந்தோ நிலம் காப்பான் முன் கொண்டு – நள:107/2
அந்தோ என எடுக்கும் அங்க நாடு ஆளுடையான் – நள:152/3

TOP


அந்நாளும் (1)

அந்நாளும் நாளை அளவு என்றான் அந்தணன் போய் – நள:370/3

TOP


அப்பா (1)

யாதோ அப்பா என்றான் என்றும் தன் வெண்குடை கீழ் – நள:15/3

TOP


அப்பு (1)

முன் அப்பு உள் தோன்றும் முளரி தலை வைகும் – நள:30/3

TOP


அப்புறமா (1)

இந்த மலை கடந்து ஏழு மலைக்கு அப்புறமா
விந்தம் எனும் நம் பதி தான் மிக்கு – நள:415/3,4

TOP


அப்போதில் (1)

சேதி நகர்க்கே திருவை செலவிட்டு அப்போதில்
கொடை வணிகன் போயினான் நீதி – நள:315/1,2

TOP


அபயம் (2)

ஐயன்மீர் உங்கட்கு அபயம் யான் உய்ய – நள:305/2
மன்னா உனக்கு அபயம் என்னா வன தீயில் – நள:336/1

TOP


அம் (20)

அம் பொன் கயிலைக்கே ஆகத்து அரவு அணிவார் – நள:13/1
அம் சிலம்பே வாய்விட்டு அறற்றுவன கஞ்சம் – நள:22/2
அறு கால் சிறு பறவை அம் சிறகால் வீசும் – நள:41/3
அம் கண் மா ஞாலத்தவற்கு – நள:54/4
பூம் தார் அம் மெல் ஓதி பொன் – நள:61/4
அங்கி அமுதம் நீர் அம் பூ அணி ஆடை – நள:99/1
மன்றல் அம் தார் மன்னர் நடு அணைய வந்திருந்தான் – நள:135/1
அம் சாயல் மானே இவன் கண்டாய் ஆலை-வாய் – நள:147/1
அன்னம் துயில் எழுப்ப அம் தாமரை வயலில் – நள:150/1
அம் கை வரி வளையாய் ஆழி திரை கொணர்ந்த – நள:154/1
செம் கயல் கண் ஓடி செவி தடவ அம் கை – நள:177/2
அம் கை வேல் மன்னன் அகலம் எனும் செறுவில் – நள:203/1
காவி போல் கண்ணிக்கும் கண்ணி அம் தோள் காளைக்கும் – நள:264/1
கேட்டவா என்று அழுதாள் கெண்டை அம் கண் நீர் சோர – நள:271/3
அல்லி அம் தார் மார்பன் அடி தாமரை அவள்-தன் – நள:296/1
அம் கண் விசும்பின் அவிர் மதி மேல் சென்று அடையும் – நள:299/1
அம் தாமரையில் அவளே என்று ஐயுற்று – நள:319/1
அம் கை இரண்டும் அடு புகையால் இங்ஙன் – நள:398/2
அரவு அரசன் தான் கொடுத்த அம் பூ துகிலின் – நள:403/1
வெம் கோல் அரசன் வினாவினான் அம் கோல – நள:420/2

TOP


அம்பு (2)

ஆழி வடி அம்பு அலம்ப நின்றானும் அன்றொருகால் – நள:144/1
அழல் வெம் சிலை வேடன் அம்பு உருவ ஆற்றாது – நள:291/1

TOP


அம்புயத்தின் (1)

அம்புயத்தின் போதை அறு காலால் தும்பி – நள:352/2

TOP


அம்மான் (1)

அம்மான் நின்று ஆடும் அரங்கு – நள:335/4

TOP


அமரர் (2)

நீண்ட முகில் தடுத்து நின்றாற்கு மீண்டு அமரர்
தாள் இரண்டு நோவ தனித்தனியே ஓடிய நாள் – நள:14/2,3
பெம்மான் அமரர் பெருமான் ஒரு மான் கை – நள:335/3

TOP


அமரில் (2)

சுணங்கு அவிழ்ந்த பூண் முலையாய் சூழ் அமரில் துன்னார் – நள:141/3
என் காரணம் என்றான் ஏற்று அமரில் கூற்று அழைக்கும் – நள:345/3

TOP


அமரும் (1)

பொன் அமரும் தாராய் பொறுக்க என்று பின்னை தான் – நள:413/2

TOP


அமளி (2)

விரிகின்ற மெல் அமளி வெண் நிலவின் மீதே – நள:128/1
தோற்ற அமளி என தோற்றுமால் காற்று அசைப்ப – நள:187/2

TOP


அமளியை (1)

வெய்ய தரை என்னும் மெல் அமளியை தடவி – நள:290/1

TOP


அமுத (1)

பொன்னி அமுத புது கொழுந்து பூம் கமுகின் – நள:141/1

TOP


அமுதம் (3)

அங்கி அமுதம் நீர் அம் பூ அணி ஆடை – நள:99/1
வேலை பெறா அமுதம் வீமன் திருமடந்தை – நள:164/1
இன் அமுதம் தேக்கி இருப்பரேல் சொன்ன – நள:250/2

TOP


அமை (1)

அமை அந்தி என்று ஓர் அணங்கு – நள:36/4

TOP


அமைச்சா (1)

நால் குணமும் நால் படையா ஐம்புலனும் நல் அமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணி முரசா வேல் படையும் – நள:39/1,2

TOP


அமைந்த (2)

கடல் தானை முன்னாக கண்டான் அடற்கு அமைந்த
வில்லியரும் பொன் தாம வீமன் திருமகளாம் – நள:75/2,3
பெய்வான் அமைந்த பிறை – நள:108/4

TOP


அயர்ந்து (3)

அங்கு தான் காணாது அயர்ந்து – நள:288/4
மன் என்னா வாடும் அயர்ந்து – நள:295/4
ஆணியாய் நின்றாள் அயர்ந்து – நள:326/4

TOP


அயர்வான் (1)

நெஞ்சு ஓட வைத்து அயர்வான் கண்டான் நெடு வானில் – நள:67/3

TOP


அயர்வானை (1)

காணாது அயர்வானை காண் – நள:193/4

TOP


அயிர்த்த (1)

கொடை தொழிலான் என்று அயிர்த்த கோமான் மடை தொழில்கள் – நள:388/2

TOP


அயிர்த்தாள் (1)

அயிர்த்தாள் உயிர்த்தாள் அணி வதனம் எல்லாம் – நள:101/3

TOP


அயிர்த்து (2)

பூணாள் திரு முகத்தை புண்டரிகம் என்று அயிர்த்து
காணாது அயர்வானை காண் – நள:193/3,4
முழு நீலம் என்று அயிர்த்து முன்னர் கழுநீரை – நள:196/2

TOP


அயிர்ப்பார் (1)

அழுவார் விழுவார் அயிர்ப்பார் உயிர்ப்பார் – நள:330/1

TOP


அயில் (2)

மின் கால் அயில் முக வேல் வேந்து – நள:345/4
மின் கால் அயில் வேலாய் மெய் என்று நன் காவி – நள:411/2

TOP


அயோத்தி (3)

ஆக அயோத்தி நகர் அடைந்து மா கனக – நள:349/2
நல் நீர் அயோத்தி நகர் அடைந்தான் பொன் நீர் – நள:357/2
அடைந்தான் அயோத்தி நகர் – நள:364/4

TOP


அயோத்தியார் (1)

மால் நீர் அயோத்தியார் மன் – நள:413/4

TOP


அரங்கில் (3)

மா இரு ஞாலத்து உயிர் காண வான் அரங்கில்
பாய் இருள் என்னும் படாம் வாங்கி சேய் நின்று – நள:105/1,2
மங்கை வதன மணி அரங்கில் அங்கண் – நள:201/2
மா துரங்கம் பூணும் மணி தேரான் சூது அரங்கில்
பாவையரை செவ்வழி யாழ் பண்ணின் மொழி பின்னு குழல் – நள:227/2,3

TOP


அரங்கு (1)

அம்மான் நின்று ஆடும் அரங்கு – நள:335/4

TOP


அரசர் (4)

மண மாலை வேட்டிடு தோள் வாள் அரசர் முன்னே – நள:133/3
விண் அரசர் எல்லாரும் வெள்கி மனம் சுளிக்க – நள:161/1
கண் அகல் ஞாலம் களி கூர மண் அரசர்
வன்மாலை தம் மனத்தே சூட வய வேந்தை – நள:161/2,3
விண் அரசர் நிற்க வெறி தேன் மண மாலை – நள:167/1

TOP


அரசற்கு (3)

மொழிந்ததே அன்ன மொழி கேட்டு அரசற்கு
அழிந்ததே உள்ள அறிவு – நள:70/3,4
மண் அரசற்கு ஈந்த மட மாதின் எண்ணம் – நள:167/2
அ மொழியை தூதர் அரசற்கு அறிவிக்க – நள:359/1

TOP


அரசன் (6)

அடு மாற்றம் இல்லா அரசன் சொல் கேட்டு – நள:35/3
ஆங்கு அவளும் ஏக அரசன் பெருந்தேவி – நள:318/1
ஆதி அரசன் அருகாக போத – நள:389/2
அரவு அரசன் தான் கொடுத்த அம் பூ துகிலின் – நள:403/1
செங்கோல் அரசன் முகம் நோக்கி தேர்ச்சி இலா – நள:420/1
வெம் கோல் அரசன் வினாவினான் அம் கோல – நள:420/2

TOP


அரசனையும் (1)

அஞ்சி பார் ஈந்த அரசனையும் தேவியையும் – நள:258/3

TOP


அரசு (8)

அழைத்து ஏவல்கொண்ட அரசு – நள:11/4
ஆளுமே பெண்மை அரசு – நள:39/4
ஆளும் கொல் யானை அரசு – நள:47/4
தன் அரசு வாங்கி தருகின்றேன் மன்னவனே – நள:212/2
அரசு அறியா வேந்தன் அழன்று – நள:237/4
அழியல் நீ என்றான் அரசு – நள:272/4
அருகு உடைக்கும் நல் நாட்டு அரசு – நள:357/4
உங்கள் அரசு ஒருவன் ஆள நீர் ஓடிப்போந்து – நள:393/1

TOP


அரசும் (2)

பேர் அரசும் எங்கள் பெரும் திருவும் கைவிட்டு – நள:15/1
அந்த வள நாடும் அ அரசும் ஆங்கு ஒழிய – நள:423/1

TOP


அரசே (4)

அன்ன குலத்தின் அரசே அழிகின்ற – நள:69/1
பரிசனமும் பள்ளி அறையும் அரசே நான் – நள:273/2
ஆற்றல் அரவு அரசே ஆங்கு என் உருவத்தை – நள:345/1
வள அரசே என்று உரைத்தான் மா தவத்தால் பெற்ற – நள:393/3

TOP


அரசை (3)

ஆக்கி அருளால் அரவு அரசை நோக்கி – நள:338/2
அரவு அரசை கொண்டு அகன்றான் ஆரணியம் தன்னில் – நள:341/3
இரவு அரசை வென்றான் எடுத்து – நள:341/4

TOP


அரண் (2)

அணி சேவடி எம் அரண் – நள:5/4
ஆர் உயிர்க்கும் உண்டோ அரண் – நள:131/4

TOP


அரவம் (1)

அறையும் பறை அரவம் கேட்டு அழிந்து நையும் – நள:238/1

TOP


அரவின் (10)

கொள்ளை போகின்றது உயிர் என்னும் கோள் அரவின்
முள் எயிறோ மூரி நிலா என்னும் உள்ளம் – நள:113/1,2
அரவின் பசும் தலை என்று அஞ்சி இரவு எல்லாம் – நள:145/2
கள்ளி வேகத்து அரவின் கண்மணிகள் தாம் பொடியாய் – நள:257/3
வாள் அரவின் வாய்ப்பட்டு மாயா முன் மன்னவ நின் – நள:300/1
விலக்காயோ என்று அழுதாள் வெம் அரவின் வாய்க்கு இங்கு – நள:300/3
வென்றி சின அரவின் வெம் வாய் இடைப்பட்டு – நள:301/1
அடையும் கடும் கானில் ஆடு அரவின் வாய்ப்பட்டு – நள:303/1
கழுகு வாழ் கானகத்து கார் அரவின் வாயில் – நள:304/3
வெய்ய அரவின் விட வாயின் உட்பட்டேன் – நள:305/1
பேர் அரவின் வாயில் பிழைப்பித்தாய் தேரில் – நள:307/2

TOP


அரவு (8)

அம் பொன் கயிலைக்கே ஆகத்து அரவு அணிவார் – நள:13/1
மோட்டு வயிற்று அரவு முன் தோன்ற மீட்டு அதனை – நள:298/2
வெம் கண் அரவு போல் மெல்_இயலை கொங்கைக்கு – நள:299/2
ஆக்கி அருளால் அரவு அரசை நோக்கி – நள:338/2
அரவு அரசை கொண்டு அகன்றான் ஆரணியம் தன்னில் – நள:341/3
ஆற்றல் அரவு அரசே ஆங்கு என் உருவத்தை – நள:345/1
அரவு அகற்றும் என் போல ஆர்கலியே மாதை – நள:356/3
அரவு அரசன் தான் கொடுத்த அம் பூ துகிலின் – நள:403/1

TOP


அரற்றி (1)

தவிர்ந்ததே போல் அரற்றி சாம்புகின்ற-போதே – நள:124/3

TOP


அரற்றினாள் (1)

அருளீரோ என்னா அரற்றினாள் அஞ்சி – நள:305/3

TOP


அரற்றும் (1)

காந்தாரம் பாடி களி வண்டு நின்று அரற்றும்
பூம் தார் அம் மெல் ஓதி பொன் – நள:61/3,4

TOP


அரா (1)

வஞ்ச கலி வலியான் மாகத்து அரா வளைக்கும் – நள:279/1

TOP


அரி (4)

உள்ளும் புறமும் இனிது உறைந்தார் தெள் அரி கண் – நள:66/2
போது அரி கண் மாதராள் பொன் மாலை சூட்டத்தான் – நள:96/1
சூர் வாய் மதர் அரி கண் தோகாய் கேள் பார்-வாய் – நள:142/2
சில் அரி கிண்கிணி மெல் தெய்வ மலர் சீறடியை – நள:202/1

TOP


அரிக்க (1)

உள் அரிக்க சோர்ந்தாள் உயிர் – நள:102/4

TOP


அரிக்கும் (1)

புள் அரிக்கும் நாடன் திருமடந்தை பூ வாளி – நள:102/3

TOP


அரிக்கொண்டு (1)

கை அரிக்கொண்டு எ இடத்தும் காணாமல் ஐயகோ – நள:290/2

TOP


அரிச்சந்திரன் (1)

தாமத்து அரிச்சந்திரன் சுவர்க்கி நாமத்தார் – நள:64/2

TOP


அரிதற்கு (1)

அரிதற்கு அவன் நினைந்தான் ஆங்கு – நள:280/4

TOP


அரிதா (1)

தெரிவு அரிதா நின்றான் திகைத்து – நள:400/4

TOP


அரிந்த (1)

நன் முகமே நோக்கினான் நாகம் சிறகு அரிந்த
மின் முக வேல் கையான் விரைந்து – நள:77/3,4

TOP


அரிந்தது (1)

உடுத்த துகில் அரிந்தது ஒண்_தொடியாள் கண்டு – நள:289/1

TOP


அரிந்தான் (1)

அரிந்தான் அரிந்திட்டு அவள் நிலைமை நெஞ்சில் – நள:282/3

TOP


அரிந்திட்டு (1)

அரிந்தான் அரிந்திட்டு அவள் நிலைமை நெஞ்சில் – நள:282/3

TOP


அரிய (3)

சேர்வு அரிய வெம் கானம் சேர்தற்கு காரணம் தான் – நள:15/2
செப்பு அரிய செல்வ திருநகரும் ஒப்பு அரிய – நள:422/2
செப்பு அரிய செல்வ திருநகரும் ஒப்பு அரிய
வன் தானையோடும் வள நாடும் வஞ்சனையால் – நள:422/2,3

TOP


அரிவார் (1)

செந்நெல் அரிவார் சினை யாமை வன் முதுகில் – நள:150/2

TOP


அரு (4)

அறத்தை வேர் கல்லும் அரு நரகில் சேர்க்கும் – நள:218/1
ஒருவன் கொண்டு ஏகுவான் ஒத்து அரு மறையோன் – நள:255/2
புக்கோர் அரு வினை போல் போயிற்றே அ காலம் – நள:404/2
வாழி அரு மறைகள் வாழி நல் அந்தணர்கள் – நள:427/1

TOP


அருகாக (1)

ஆதி அரசன் அருகாக போத – நள:389/2

TOP


அருகு (7)

அருகு உடையான் வெண்குடையான் ஆங்கு – நள:25/4
அருகு ஊட்டும் பைங்கிளியும் ஆடல் பருந்தும் – நள:26/3
அன்னம் போய் கன்னி அருகு அணைய நல்_நுதலும் – நள:52/2
ஓராது அருகு அணைந்தாள் உண் தேன் அறல் கூந்தல் – நள:298/3
அருகு உடைக்கும் நல் நாட்டு அரசு – நள:357/4
தே நீர் அளித்து அருகு செந்நெல் கதிர் விளைக்கும் – நள:414/3
அ பலகை ஒன்றின் அருகு இருந்தார் தாம் மதிக்க – நள:422/1

TOP


அருகை (1)

ஆடி வரி வண்டு அருகை பறக்கவே – நள:116/1

TOP


அரும் (6)

அரும் கேழ் மணி பூண் அணங்கு – நள:136/4
அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும் – நள:148/3
அரும் கொற்ற வச்சிரத்தான் ஆங்கு – நள:168/4
அ மலரை கொய்யாது அரும் தளிரை கொய்வாளை – நள:185/3
அரும் பேடை மானே அவர் – நள:250/4
போதல் அரும் குஞ்சியான் புக்கு அணைந்து கோது இலா – நள:405/2

TOP


அரும்ப (4)

நீர் அரும்ப தன் பேதை நின்றாளை பாரா – நள:62/2
புற்கு என்றார் அந்தி புனை மலர் கண் நீர் அரும்ப
நிற்கின்றது அந்தோ நிலம் காப்பான் முன் கொண்டு – நள:107/1,2
வெண் தரளம் என்ன வியர்வு அரும்ப கெண்டை – நள:200/2
தாதையை முன் காண்டலுமே தாமரை கண் நீர் அரும்ப
போதல் அரும் குஞ்சியான் புக்கு அணைந்து கோது இலா – நள:405/1,2

TOP


அரும்பாம் (1)

அரும்பாம் பணை முலையாய் ஆம் – நள:194/4

TOP


அருமறையோன் (1)

ஆம் என்று அறியா அருமறையோன் வீமன் – நள:324/2

TOP


அருவி (4)

மையிட்ட கண் அருவி வார வளை சோர – நள:119/1
குன்று அருவி பாயும் குட நாடன் நின்ற புகழ் – நள:143/2
பொய்கையும் வாச பொழிலும் எழில் அருவி
செய் குன்றும் ஆறும் திரிந்து ஆடி தையலுடன் – நள:207/1,2
அஞ்சனம் தோய் கண்ணில் அருவி நீர் ஆங்கு அவர்க்கு – நள:254/1

TOP


அருள் (6)

அறம் கிடந்த நெஞ்சும் அருள் ஒழுகு கண்ணும் – நள:54/1
முகம் பார்த்து அருள் நோக்கி முன் இரந்து செல்வர் – நள:68/1
சொன்னவனை சூட்ட அருள் என்றாள் சூழ் விதியின் – நள:159/3
காதலரை போக்கி அருள் என்றாள் காதலருக்கு – நள:251/3
அறம் பிழைத்தார் பொய்த்தார் அருள் சிதைத்தார் மான – நள:265/1
கன்னி பெடை உண்ண காத்திருக்கும் இன் அருள் கண்டு – நள:353/2

TOP


அருள்க (1)

இன்று இருந்து நாளை எழுந்து அருள்க என்று உரைத்தார் – நள:235/3

TOP


அருள (1)

மறை முதல்வன் நீ இங்கே வந்து அருள பெற்றேன் – நள:11/1

TOP


அருளல் (1)

முனிந்து அருளல் என்று முடி சாய்த்து நின்றான் – நள:396/3

TOP


அருளால் (1)

ஆக்கி அருளால் அரவு அரசை நோக்கி – நள:338/2

TOP


அருளி (1)

சேர்ந்து அருளி நின்ற தனி செங்கோலாய் இங்கு ஒழிய – நள:266/3

TOP


அருளின் (1)

பேர் அருளின் கண்ணே பெருமானே பாரிடத்தை – நள:233/2

TOP


அருளீரோ (1)

அருளீரோ என்னா அரற்றினாள் அஞ்சி – நள:305/3

TOP


அருளுக (2)

எம் பதிக்கே போந்து அருளுக என்றாள் எழில் கமல – நள:248/3
போந்து அருளுக என்றாள் புலந்து – நள:266/4

TOP


அருளும் (4)

வையம் உடையான் மகர யாழ் கேட்டு அருளும்
தெய்வ செவி கொதுகின் சில் பாடல் இ இரவில் – நள:271/1,2
ஏந்தும் இள முலையாள் இன் உயிரும் தன் அருளும்
பூம் துகிலும் வேறாக போயினான் தீம் தேன் – நள:286/1,2
முந்து அருளும் வேத முதலே என அழைப்ப – நள:334/3
வந்து அருளும் செந்தாமரை – நள:334/4

TOP


அருளை (1)

திறத்தையே கொண்டு அருளை தேய்க்கும் மறத்தையே – நள:218/2

TOP


அருளோ (1)

மா காதல் வைத்ததோ மன்னவர்-தம் இன் அருளோ
ஏகாதது என்னோ இரா – நள:129/3,4

TOP


அரை (1)

ஆரும் திரியா அரை இருளில் அங்ஙனே – நள:337/1

TOP


அல் (2)

அல் ஓடும் வேலான் அகலத்தோடும் பொருதாள் – நள:175/3
அல் என்ற சோலை அழகு – நள:188/4

TOP


அல்குல் (1)

சிற்றிடையாய் பேர் அல்குல் தே மொழியாய் மென் முறுவல் – நள:198/3

TOP


அல்ல (1)

ஒருவரோடு அன்பு அழிக்கும் ஒன்று அல்ல சூது – நள:219/3

TOP


அல்லர் (1)

பிடித்தாரின் வேறு அல்லர் என்று உரைப்பது அன்றே – நள:220/3

TOP


அல்லல் (1)

ஆயம் பிடித்தாரும் அல்லல் பொதுமகளிர் – நள:220/1

TOP


அல்லன் (1)

ஆக்கையே நோக்கின் அவன் அல்லன் பூ கமழும் – நள:368/2

TOP


அல்லனேல் (1)

செம் கண் மால் அல்லனேல் தேர் வேந்தர் ஒப்பரோ – நள:54/3

TOP


அல்லனோ (1)

இரவு அளித்தான் அல்லனோ இன்று – நள:117/4

TOP


அல்லாது (1)

நெஞ்சால் இ மாற்றம் நினைந்து உரைக்க நீ அல்லாது
அஞ்சாரோ மன்னர் அடு மடையா எஞ்சாது – நள:394/1,2

TOP


அல்லால் (1)

குறையாத கற்பினாள் கொண்டானுக்கு அல்லால்
இறவாத ஏந்து_இழையாள் இன்று பறி பீறி – நள:372/1,2

TOP


அல்லி (1)

அல்லி அம் தார் மார்பன் அடி தாமரை அவள்-தன் – நள:296/1

TOP


அலசுவான் (1)

அன்னம் உரைத்த குயிலுக்கு அலசுவான்
மென் மயில் தன் தோகை விரித்து ஆட முன் அதனை – நள:49/1,2

TOP


அலம்ப (1)

ஆழி வடி அம்பு அலம்ப நின்றானும் அன்றொருகால் – நள:144/1

TOP


அலம்பு (1)

அலம்பு வார் கோதை அடி இணையில் வீழ்ந்து – நள:40/3

TOP


அலமந்து (2)

ஆக்கை தளர அலமந்து போக்கற்று – நள:310/2
சிந்தை கலங்கி திகைத்து அலமந்து எந்தாய் யான் – நள:331/2

TOP


அலமரா (1)

ஆடல் மயில் போல் அலமரா ஓடினாள் – நள:309/2

TOP


அலமருவேன் (1)

அன்னவனை காணாது அலமருவேன் இ நகர்க்கே – நள:320/2

TOP


அலர் (1)

அன்னம் மிதிப்ப அலர் வழியும் தேறல் போய் – நள:361/1

TOP


அலர்த்தும் (1)

அலர்த்தும் கொடி மாடத்து ஆய்_இழையார் ஐம்பால் – நள:21/3

TOP


அலர்ந்த (2)

அலர்ந்த தேம் கோதையாள் ஆழ் துயரத்தோடு – நள:132/3
அலர்ந்த மலர் சிந்தி அ மலர் மேல் கொம்பு – நள:188/1

TOP


அலர்ந்ததே (1)

அலர்ந்ததே கண்ணீர் அவற்கு – நள:406/4

TOP


அலரும் (2)

தளவு ஏனல் மீது அலரும் தாழ் வரை சூழ் நாடற்கு – நள:28/3
போது அலரும் கண்ணியான் போர் வேந்தர் சூழ போய் – நள:400/1

TOP


அலரேல் (1)

பெரும் பேடிகள் அலரேல் பித்தரே அன்றோ – நள:250/3

TOP


அலவ (1)

அளிக்கின்ற ஆழி-வாய் ஆங்கு அலவ ஓடி – நள:354/3

TOP


அலவன் (1)

ஆமை முதுகில் அலவன் துயில்கொள்ளும் – நள:382/1

TOP


அலை (2)

இலங்கு அலை நூல் மார்பன் எடுத்து – நள:16/4
கலக்கு அலை நீர் நாடன் கனன்று – நள:221/4

TOP


அலைத்து (1)

கையால் வயிறு அலைத்து கார் இருள்-வாய் வெய்யோனை – நள:293/2

TOP


அலைப்பட்ட (1)

அலைப்பட்ட ஆகத்தாள் ஆங்கு – நள:367/4

TOP


அலைய (1)

பொன் உடைய வாச பொகுட்டு மலர் அலைய
தன்னுடனே மூழ்கி தனித்து எழுந்த மின் உடைய – நள:193/1,2

TOP


அவ்வளவில் (4)

சீறா விழித்தாள் சிலை வேடன் அவ்வளவில்
நீறாய் விழுந்தான் நிலத்து – நள:310/3,4
அவ்வளவில் ஆதி பெரு வழியில் ஆய் வணிகன் – நள:312/1
என்று உரைத்த அவ்வளவில் ஏழு உலகும் சூழ் கடலும் – நள:341/1
மேல் ஆடை வீழ்ந்தது எடு என்றான் அவ்வளவில்
நால்_ஆறு காதம் நடந்ததே தோலாமை – நள:378/1,2

TOP


அவ்வாறு (1)

ஆங்கு அவன் தான் அவ்வாறு உரைப்ப அது கேட்டு – நள:343/1

TOP


அவட்கு (1)

அவிழ்ந்ததே கண்ணீர் அவட்கு – நள:124/4

TOP


அவந்தி (1)

அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும் – நள:148/3

TOP


அவர் (4)

பூவையர் கை தீண்டலும் அ பூம் கொம்பு மேவி அவர்
பொன் அடியில் தாழ்ந்தனவே பூம் குழலாய் காண் என்றான் – நள:183/2,3
அரும் பேடை மானே அவர் – நள:250/4
ஆங்கு அவர் சொன்ன உரை கேட்டு அழிவு எய்தி – நள:392/1
அ இடத்தே நீத்த அவர் என்றே இ இடத்தே – நள:407/2

TOP


அவர்க்கு (1)

அஞ்சனம் தோய் கண்ணில் அருவி நீர் ஆங்கு அவர்க்கு
மஞ்சன நீர் ஆக வழிந்து ஓட நெஞ்சு உருகி – நள:254/1,2

TOP


அவர்கள் (1)

அங்கு அவர்கள் வேண்டும் வரம் கொடுக்க பெற்றவர்கள் – நள:100/1

TOP


அவரை (1)

மாசு இலா பூம் குழலாள் மற்று அவரை காணா நின்று – நள:157/3

TOP


அவள் (4)

பூ மனை வாய் வாழ்கின்ற புல் குடங்கள் யாம் அவள் தன் – நள:44/1
உற்றதுவும் ஆங்கு அவள் தான் உற்றதுவும் முற்றும் – நள:70/2
அரிந்தான் அரிந்திட்டு அவள் நிலைமை நெஞ்சில் – நள:282/3
அங்கு அவன்-தன் கண்ணீர் அவள் உடல் மேல் பொங்க – நள:325/2

TOP


அவள்-தன் (2)

கெடுக்கின்றேன் மற்று அவள்-தன் கேள்வனுக்கும் கீழ்மை – நள:167/3
அல்லி அம் தார் மார்பன் அடி தாமரை அவள்-தன்
நல் உயிரும் ஆசையும் போல் நாறுதலும் மல் உறு தோள் – நள:296/1,2

TOP


அவளும் (1)

ஆங்கு அவளும் ஏக அரசன் பெருந்தேவி – நள:318/1

TOP


அவளே (2)

வீமன் குலத்துக்கு ஓர் மெய் தீபம் மற்று அவளே
காமன் திருவுக்கு ஓர் காப்பு – நள:79/3,4
அம் தாமரையில் அவளே என்று ஐயுற்று – நள:319/1

TOP


அவளோடு (1)

உன்னவே சோரும் உனக்கு அவளோடு என்ன – நள:43/2

TOP


அவற்கு (1)

அலர்ந்ததே கண்ணீர் அவற்கு – நள:406/4

TOP


அவன் (12)

தூய்மையும் மற்று அவன் தோள் வலியும் பூமான் – நள:168/2
அஞ்சும் தொடுத்தான் அவன் – நள:173/4
நாராயணாய நம என்று அவன் அடியில் – நள:211/1
அடல் கதிர் வேல் மன்னன் அவன் ஏற்றின் முன் போய் – நள:215/1
வெல்லும் கொடி என்றான் வெம் கலியால் அங்கு அவன் மேல் – நள:215/3
கல் நிறத்த சிந்தை கலியும் அவன் முன்பாக – நள:258/1
அரிதற்கு அவன் நினைந்தான் ஆங்கு – நள:280/4
கொடி மேல் விழுந்து அழுதான் கொம்பும் அவன் செம்பொன் – நள:324/3
ஆங்கு அவன் தான் அவ்வாறு உரைப்ப அது கேட்டு – நள:343/1
ஆக்கையே நோக்கின் அவன் அல்லன் பூ கமழும் – நள:368/2
அன்னை-தனை கான் விட்டு அவன் ஏக இ நகர்க்கே – நள:391/2
மற்று அவன் தான் ஆங்கு உரைத்த வாசகத்தை முற்றும் – நள:397/2

TOP


அவன்-தன் (3)

அங்கு அவன்-தன் கண்ணீர் அவள் உடல் மேல் பொங்க – நள:325/2
காவலனுக்கு ஏவல் கடன் பூண்டேன் மற்று அவன்-தன்
ஏவல் முடிப்பேன் இனி என்று மாவை – நள:375/1,2
விளையாட விட்டு அவன்-தன் மேற்செயல் நாடு என்றாள் – நள:389/3

TOP


அவனி (1)

ஆண்டகையே தூதுவனாய் சென்று அவனி வேண்ட – நள:8/2

TOP


அவனுக்கு (1)

மற்று அவனுக்கு என் வரவு சொல்லி மறு சூதுக்கு – நள:418/1

TOP


அவனை (1)

மன்னே என அழைத்தாள் மற்றும் அவனை காணாது – நள:289/3

TOP


அவாம் (1)

திருந்தி அவாம் மெய் தவத்தோன் தேர்ந்து – நள:12/4

TOP


அவாவியவாறு (1)

எய்தற்கு அவாவியவாறு என் – நள:384/4

TOP


அவாவும் (1)

நெய்தற்கு அவாவும் நெடு நாட நீ என்-பால் – நள:384/3

TOP


அவித்து (3)

நீரால் அவித்து கொடுநின்று வாராத – நள:93/2
செல்லு மடந்தை சிலம்பு அவித்து மெல்ல போய் – நள:185/2
கூரும் தழல் அவித்து கொண்டுபோய் பாரில் – நள:340/2

TOP


அவிர் (1)

அம் கண் விசும்பின் அவிர் மதி மேல் சென்று அடையும் – நள:299/1

TOP


அவிழ் (4)

ஏடு அவிழ் தார் மன்னர்க்கு இயல்பே காண் வாடி – நள:16/2
தாது அவிழ் பூ தாரான் தனி காத்தான் மாதர் – நள:26/2
அங்கு அணைக்க வாய் நெகிழ்த்த ஆம்பல் பூ கொங்கு அவிழ் தேன் – நள:189/2
ஒட்டினேன் உன் பணையம் ஏது என்ன மட்டு அவிழ் தார் – நள:223/2

TOP


அவிழ்க்கும் (1)

பூம் போது அவிழ்க்கும் புனல் நாடன் பொன் மகளே – நள:230/3

TOP


அவிழ்ந்த (1)

சுணங்கு அவிழ்ந்த பூண் முலையாய் சூழ் அமரில் துன்னார் – நள:141/3

TOP


அவிழ்ந்ததே (1)

அவிழ்ந்ததே கண்ணீர் அவட்கு – நள:124/4

TOP


அவிழ (1)

தாமரையின் செம் தேன் தளை அவிழ பூ மடந்தை – நள:19/2

TOP


அவை (2)

ஆதரித்தார் தம்மோடு அவை அகத்தே சோதி – நள:96/2
ஆதி நெடும் தேர் பரி விட்டு அவை ஆற்றி – நள:386/1

TOP


அழகு (5)

பேர் அழகு சோர்கின்றது என்ன பிறை நுதல் மேல் – நள:62/1
அழகு சுமந்து இளைத்த ஆகத்தாள் வண்டு – நள:79/1
ஆண்ட தோள் மன்னன் அழகு – நள:90/4
பூணுக்கு அழகு அளிக்கும் பொன் தொடியை கண்ட-கால் – நள:158/1
அல் என்ற சோலை அழகு – நள:188/4

TOP


அழகை (1)

பொன் அழகை தாமே புதைப்பார் போல் மென் மலரும் – நள:171/2

TOP


அழல் (1)

அழல் வெம் சிலை வேடன் அம்பு உருவ ஆற்றாது – நள:291/1

TOP


அழலும் (1)

அந்த நெடும் சுரத்தின் மீது ஏக ஆங்கு அழலும்
வெம் தழலை ஆற்றுவான் மேல் கடற்கே எந்தை – நள:267/1,2

TOP


அழலை (1)

மை ஆர் வேல் கண்ணாள் வன முலை மேல் ஆர் அழலை
பெய்வான் அமைந்த பிறை – நள:108/3,4

TOP


அழலோன் (1)

அடைந்தான் அடைதலுமே ஆர் அழலோன் அஞ்சி – நள:338/3

TOP


அழன்று (1)

அரசு அறியா வேந்தன் அழன்று – நள:237/4

TOP


அழிக்கும் (4)

உரு அழிக்கும் உண்மை உயர்வு அழிக்கும் வண்மை – நள:219/1
உரு அழிக்கும் உண்மை உயர்வு அழிக்கும் வண்மை – நள:219/1
திரு அழிக்கும் மானம் சிதைக்கும் மருவும் – நள:219/2
ஒருவரோடு அன்பு அழிக்கும் ஒன்று அல்ல சூது – நள:219/3

TOP


அழிகின்ற (1)

அன்ன குலத்தின் அரசே அழிகின்ற
என் உயிரை மீள எனக்கு அளித்தாய் முன் உரைத்த – நள:69/1,2

TOP


அழிகின்றேன் (1)

ஆதபத்தின் வாய்ப்பட்டு அழிகின்றேன் காதலால் – நள:339/2

TOP


அழிந்தது (1)

அற்றது மானம் அழிந்தது நாண் மற்று இனி உன் – நள:45/2

TOP


அழிந்ததே (1)

அழிந்ததே உள்ள அறிவு – நள:70/4

TOP


அழிந்தாள் (2)

ஆசை போகாது என்று அழிந்தாள் அணி யாழின் – நள:103/3
அழிந்தாள் விழுந்தாள் அழுது – நள:397/4

TOP


அழிந்தான் (1)

அஞ்சினான் ஆவி அழிந்தான் அற உயிர்த்து – நள:353/3

TOP


அழிந்திட்டான் (1)

ஆவி உருகி அழிந்திட்டான் பூவின் – நள:48/2

TOP


அழிந்து (1)

அறையும் பறை அரவம் கேட்டு அழிந்து நையும் – நள:238/1

TOP


அழியல் (1)

அழியல் நீ என்றான் அரசு – நள:272/4

TOP


அழியா (1)

சென்றார் புகு நரகம் சேர்வாய்-கொல் என்று அழியா
நின்றாள் விதியை நினைந்து – நள:265/3,4

TOP


அழியாமல் (1)

ஆர் உயிரும் நானும் அழியாமல் ஐயா இ – நள:307/1

TOP


அழியும் (1)

நாணோடு நின்று அழியும் நைந்து – நள:127/4

TOP


அழிவரோ (1)

அழிவரோ செங்கோலவர் – நள:234/4

TOP


அழிவு (1)

ஆங்கு அவர் சொன்ன உரை கேட்டு அழிவு எய்தி – நள:392/1

TOP


அழு (1)

உண்டு ஓர் அழு குரல் என்று ஒற்றி வருகின்ற – நள:304/1

TOP


அழுகின்றேன் (1)

காணாது அழுகின்றேன் என்றாள் கதிர் இமைக்கும் – நள:314/3

TOP


அழுதற்கு (1)

நெக்குருகி நீ அழுதற்கு என் நிமித்தம் மை குழலாய் – நள:313/2

TOP


அழுதாள் (7)

கேட்டவா என்று அழுதாள் கெண்டை அம் கண் நீர் சோர – நள:271/3
கை புகுந்தது என்னுடைய கால் புகுந்தது என்று அழுதாள்
மை புகுந்த கண்ணீர் வர – நள:276/3,4
விலக்காயோ என்று அழுதாள் வெம் அரவின் வாய்க்கு இங்கு – நள:300/3
நீரேனும் காண்குதிரோ என்று அழுதாள் நீள் குழற்கு – நள:302/3
வாழ்வு எல்லாம் தான் நினைந்து மற்று அழுதாள் மன் இழைத்த – நள:311/3
பூம் கழலின் மீதே புரண்டு அழுதாள் தாங்கும் – நள:318/2
கருகியவோ என்று அழுதாள் காதலனை முன் நாள் – நள:398/3

TOP


அழுதான் (1)

கொடி மேல் விழுந்து அழுதான் கொம்பும் அவன் செம்பொன் – நள:324/3

TOP


அழுது (6)

ஆறாக கண்ணீர் அழுது – நள:253/4
ஆறு எலாம் ஆக அழுது – நள:309/4
அடி மேல் விழுந்தாள் அழுது – நள:324/4
பொன் வடிவின் மேல் அழுது போய் வீழ்ந்தாள் மென் மலரை – நள:327/2
ஆழ்கின்றான் என்றார் அழுது – நள:391/4
அழிந்தாள் விழுந்தாள் அழுது – நள:397/4

TOP


அழுந்தி (1)

மன் ஆகத்து உள் அழுந்தி வார் அணிந்த மென் முலையும் – நள:91/1

TOP


அழுவார் (1)

அழுவார் விழுவார் அயிர்ப்பார் உயிர்ப்பார் – நள:330/1

TOP


அழைக்கும் (2)

செய்த பிழை ஏது என்னும் தேர் வேந்தே என்று அழைக்கும்
எய்து துயர் கரை காணேன் என்னும் பையவே – நள:295/1,2
என் காரணம் என்றான் ஏற்று அமரில் கூற்று அழைக்கும்
மின் கால் அயில் முக வேல் வேந்து – நள:345/3,4

TOP


அழைக்கைக்கும் (1)

அழைக்கைக்கும் முன் செல் அடி – நள:179/4

TOP


அழைத்தாள் (1)

மன்னே என அழைத்தாள் மற்றும் அவனை காணாது – நள:289/3

TOP


அழைத்து (1)

அழைத்து ஏவல்கொண்ட அரசு – நள:11/4

TOP


அழைப்ப (3)

முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப
என் என்றான் எங்கட்கு இறை – நள:3/3,4
வேடன் அழைப்ப விழி பதைத்து வெய்துயிரா – நள:309/1
முந்து அருளும் வேத முதலே என அழைப்ப
வந்து அருளும் செந்தாமரை – நள:334/3,4

TOP


அழைப்பன (1)

வாவு பரி தேர் ஏறி வா என்று அழைப்பன போல் – நள:293/3

TOP


அள்ளி (1)

அள்ளி கொளலாய் அடைய திரண்டு ஒன்றாய் – நள:120/1

TOP


அளக (1)

செம் தேன் மொழியாள் செறி அளக பந்தியின் கீழ் – நள:42/1

TOP


அளந்த (1)

மிக்கோன் உலகு அளந்த மெய் அடியே சார்வாக – நள:404/1

TOP


அளவில் (1)

தீண்டும் அளவில் திறந்ததே பூண்டது ஓர் – நள:89/2

TOP


அளவு (1)

அந்நாளும் நாளை அளவு என்றான் அந்தணன் போய் – நள:370/3

TOP


அளவும் (2)

ஆண்டு இரண்டாறு எல்லை அளவும் திரிந்தேயும் – நள:209/1
தந்துவிடும் அளவும் தாழ் குழலாய் என்றனுடன் – நள:321/2

TOP


அளவே (1)

நீலம் அளவே நெகிழ நிரை முத்தின் – நள:288/1

TOP


அளி (1)

போந்து ஏறுக என்று உரைத்தான் பொம்மென்று அளி முரலும் – நள:376/3

TOP


அளிக்கின்ற (1)

அளிக்கின்ற ஆழி-வாய் ஆங்கு அலவ ஓடி – நள:354/3

TOP


அளிக்கும் (2)

பூணுக்கு அழகு அளிக்கும் பொன் தொடியை கண்ட-கால் – நள:158/1
போர்த்தான் பொரு கலியின் வஞ்சனையால் பூண்டு அளிக்கும்
கோ தாயம் முன் இழந்த கோ – நள:403/3,4

TOP


அளித்த (1)

தாமம் எனக்கு அளித்த தையலாள் யாமத்து – நள:277/2

TOP


அளித்தாய் (2)

ஆவி உவந்து அளித்தாய் ஆதியால் காவின்-இடை – நள:57/2
என் உயிரை மீள எனக்கு அளித்தாய் முன் உரைத்த – நள:69/2

TOP


அளித்தான் (2)

பொர அளித்தான் கண்ணி உனக்கு புலரா – நள:117/3
இரவு அளித்தான் அல்லனோ இன்று – நள:117/4

TOP


அளித்து (1)

தே நீர் அளித்து அருகு செந்நெல் கதிர் விளைக்கும் – நள:414/3

TOP


அளிப்பான் (1)

முற்று அன்பால் பார் அளிப்பான் முன் – நள:409/4

TOP


அளியான் (1)

செம் மனத்தான் தண் அளியான் செங்கோலான் மங்கையர்கள் – நள:53/1

TOP


அளைந்து (1)

கொங்கை அளைந்து குழல் திருத்தி கோலம் செய் – நள:398/1

TOP


அளையும் (1)

புக்கு அளையும் தாமரை கை பூ நாறும் செய்ய வாய் – நள:246/3

TOP


அற்பின் (1)

அற்பின் தாழ் கூந்தலாள் வேட்கை அகத்து அடக்கி – நள:89/3

TOP


அற்ற (1)

அற்ற துகிலும் அறாது ஒழுகும் கண்ணீரும் – நள:316/1

TOP


அற்றது (1)

அற்றது மானம் அழிந்தது நாண் மற்று இனி உன் – நள:45/2

TOP


அற்றை (1)

புலர்ந்ததே அற்றை பொழுது – நள:132/4

TOP


அற்றோரை (1)

அகம் பார்க்கும் அற்றோரை போல மிகும் காதல் – நள:68/2

TOP


அற (2)

எங்கு நீ வேண்டினை மற்று அ இடத்தே சங்கை அற
பெற்றாய் என வருணன் ஆகண்டலன் தருமன் – நள:99/2,3
அஞ்சினான் ஆவி அழிந்தான் அற உயிர்த்து – நள:353/3

TOP


அறத்தின் (1)

ஆர் உயிரின் தாயே அறத்தின் பெரும் தவமே – நள:233/1

TOP


அறத்தை (1)

அறத்தை வேர் கல்லும் அரு நரகில் சேர்க்கும் – நள:218/1

TOP


அறம் (3)

சீத மதி குடை கீழ் செம்மை அறம் கிடப்ப – நள:26/1
அறம் கிடந்த நெஞ்சும் அருள் ஒழுகு கண்ணும் – நள:54/1
அறம் பிழைத்தார் பொய்த்தார் அருள் சிதைத்தார் மான – நள:265/1

TOP


அறல் (1)

ஓராது அருகு அணைந்தாள் உண் தேன் அறல் கூந்தல் – நள:298/3

TOP


அறவே (1)

பிறவி பெரும் துயரம் எல்லாம் அறவே
பிழைத்தேன் யான் என்றான் அ பேர்_ஆழியானை – நள:11/2,3

TOP


அறற்றுவன (1)

அம் சிலம்பே வாய்விட்டு அறற்றுவன கஞ்சம் – நள:22/2

TOP


அறாது (1)

அற்ற துகிலும் அறாது ஒழுகும் கண்ணீரும் – நள:316/1

TOP


அறிகிலேன் (1)

ஆழ் துயரம் ஏது என்று அறிகிலேன் பாழி – நள:125/2

TOP


அறிந்தாள் (1)

அறிந்தாள் நளன் தன்னை ஆங்கு – நள:160/4

TOP


அறிந்து (3)

ஆதாரம் இன்மை அறிந்து – நள:186/4
கண்ணியதை அறிந்து காய் கலியும் பண்ணினுக்கு – நள:281/2
சென்று அறிந்து வா என்றாள் தேர்ந்து – நள:363/4

TOP


அறிய (1)

போற்று அறிய செல்வம் புனல் நாட்டொடும் போக – நள:248/1

TOP


அறியவே (1)

ஆய மயிலை அறியவே நீ ஏகி – நள:317/2

TOP


அறியா (6)

உற்றது அறியா உளம் நடுங்கி பொற்றொடிக்கு – நள:59/2
போர் வேந்தர் கண்டு அறியா பொன் ஆவம் பின் உடைய – நள:151/3
அரசு அறியா வேந்தன் அழன்று – நள:237/4
ஆம் என்று அறியா அருமறையோன் வீமன் – நள:324/2
தன் மகள் ஆவது அறியா தடுமாறா – நள:327/1
வீமன் மடந்தை விழி முடிய கண்டு அறியா
வாம நெடும் தோள் வறியோருக்கு ஏமம் – நள:344/1,2

TOP


அறியாது (1)

உன்னை அறியாது உரை செய்த என்னை – நள:396/2

TOP


அறிவாரே (1)

மன்னர் பெருமை மடையர் அறிவாரே
உன்னை அறியாது உரை செய்த என்னை – நள:396/1,2

TOP


அறிவிக்க (1)

அ மொழியை தூதர் அரசற்கு அறிவிக்க
செம் மொழியா தேர்ந்து அதனை சிந்தித்தே இ மொழிக்கு – நள:359/1,2

TOP


அறிவித்து (1)

காவலன் தன் தூதர் கடை காவலர்க்கு அறிவித்து
ஏவலில் போய் ஈது என்று இயம்புதலும் மாவில் – நள:73/1,2

TOP


அறிவு (1)

அழிந்ததே உள்ள அறிவு – நள:70/4

TOP


அறு (2)

அறு கால் சிறு பறவை அம் சிறகால் வீசும் – நள:41/3
அம்புயத்தின் போதை அறு காலால் தும்பி – நள:352/2

TOP


அறுத்த (1)

போர் வெம் சிறகு அறுத்த பொன் தோளான் யாரும் உனை – நள:86/2

TOP


அறை (1)

குற்றேவல் செய்ய கொழும் பொன் அறை புக்கார் – நள:172/3

TOP


அறைக (1)

எங்கும் அறைக என்று இயம்பினான் பைம் கமுகின் – நள:63/2

TOP


அறைந்தால் (1)

என்று அறைந்தால் நேர் நின்று எதிர்மாற்றம் தந்தாரை – நள:363/3

TOP


அறைந்து (2)

அறைந்து ஆரணம் பாட ஆடி போய் வெய்யோன் – நள:105/3
கொற்றவன்-பால் செல்வாரை கொல்வான் முரசு அறைந்து
வெற்றியொடு புட்கரனும் வீற்றிருப்ப முற்றும் – நள:240/1,2

TOP


அறையும் (2)

அறையும் பறை அரவம் கேட்டு அழிந்து நையும் – நள:238/1
பரிசனமும் பள்ளி அறையும் அரசே நான் – நள:273/2

TOP


அறைவாய் (1)

முரசு அறைவாய் ஆங்கு என்றான் முன்னே முனிந்து ஆங்கு – நள:237/3

TOP


அறைவித்தான் (1)

அங்கு ஓர் முரசம் அறைவித்தான் செங்கோலாய் – நள:370/2

TOP


அன்பர் (1)

வெள்ளத்தான் வெள்ளி நெடும் கிரியான் மெய் அன்பர்
உள்ளத்தான் எங்கட்கு உளன் – நள:180/3,4

TOP


அன்பால் (2)

பொருந்த அன்பால் ஓதி மலர் பூம் கணைகள் பாய – நள:58/3
முற்று அன்பால் பார் அளிப்பான் முன் – நள:409/4

TOP


அன்பின் (1)

பேதை பிரிய பிரியாத பேர் அன்பின்
காதலரை கொண்டுபோய் காதலி-தன் தாதைக்கு – நள:252/1,2

TOP


அன்பு (2)

ஒருவரோடு அன்பு அழிக்கும் ஒன்று அல்ல சூது – நள:219/3
காதல் அன்பு மிக்காளை கார் இருளில் கைவிட்டு இன்று – நள:285/3

TOP


அன்பை (2)

எடுத்த பேர் அன்பை இடையே புகுந்து – நள:91/3
முற்றும் தன் அன்பை முதலோடும் பற்றி – நள:282/2

TOP


அன்றில் (2)

செம் வாய அன்றில் துணை இழப்ப சென்று அடைந்தான் – நள:104/3
அன்றில் ஒரு கண் துயின்று ஒரு கண் ஆர்வத்தால் – நள:124/1

TOP


அன்றே (4)

பிடித்தாரின் வேறு அல்லர் என்று உரைப்பது அன்றே
வடித்தாரின் நூலோர் வழக்கு – நள:220/3,4
மனைக்கு உரியார் அன்றே வரும் துயரம் தீர்ப்பார் – நள:229/1
பொடி ஆட தேவியொடும் போயினான் அன்றே
கொடியானுக்கு அ பார் கொடுத்து – நள:231/3,4
இளைக்குமா போல இருந்தது கண்டு அன்றே
வளைக்கும் ஆறு எண்ணினான் மன் – நள:260/3,4

TOP


அன்றொருகால் (1)

ஆழி வடி அம்பு அலம்ப நின்றானும் அன்றொருகால்
ஏழ் இசை நூல் சங்கத்து இருந்தானும் நீள் விசும்பில் – நள:144/1,2

TOP


அன்றோ (6)

தோள் இரண்டும் அன்றோ துணை – நள:14/4
கொண்டார்க்கு இது அன்றோ குணம் – நள:49/4
பெரும் பேடிகள் அலரேல் பித்தரே அன்றோ
அரும் பேடை மானே அவர் – நள:250/3,4
சோர் துயிலின் நீத்தல் துணிவு அன்றோ தேர் வேந்தற்கு – நள:363/2
காரணம் தான் ஈது அன்றோ என்றான் கடாம் சொரியும் – நள:373/3
இங்கண் உறைதல் இழுக்கு அன்றோ செம் கை – நள:393/2

TOP


அன்ன (7)

வழிய வார்த்தால் அன்ன மா நீற்றார் நாகம் – நள:4/3
புக்கு இருந்தால் அன்ன பொழில் – நள:29/4
அன்ன புள் தோன்றிற்றே ஆங்கு – நள:30/4
அன்ன குலத்தின் அரசே அழிகின்ற – நள:69/1
மொழிந்ததே அன்ன மொழி கேட்டு அரசற்கு – நள:70/3
திசை முகந்தால் அன்ன தெருவும் வசை இறந்த – நள:87/2
அன்ன கரி ஒன்று உடையான் ஆங்கு – நள:382/4

TOP


அன்னங்காள் (1)

அன்னங்காள் நீங்களும் அ ஆதித்தன் தானும் போய் – நள:110/1

TOP


அன்னத்தை (4)

நாடி மட அன்னத்தை நல்ல மயில் குழாம் – நள:32/1
அன்னமே நீ உரைத்த அன்னத்தை என் ஆவி – நள:43/1
அடைவு என்றான் மற்று அந்த அன்னத்தை முன்னே – நள:43/3
கேளா இருந்திட்டான் அன்னத்தை கேளாரை – நள:68/3

TOP


அன்னதற்கு (1)

முன்னே விழுந்தது காண் முன் நாளில் அன்னதற்கு
காரணம் தான் ஈது அன்றோ என்றான் கடாம் சொரியும் – நள:373/2,3

TOP


அன்னம் (18)

பேதை மட அன்னம் தன்னை பிழையாமல் – நள:31/1
மன்னன் திரு முன்னர் வைத்தலுமே அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான் கிளையை தேடி – நள:33/2,3
தையல் பிடித்த தனி அன்னம் வெய்ய – நள:35/2
அன்னம் மொழிந்த மொழி புகாமுன் புக்கு – நள:37/1
நெடும் குடையாய் என்று உரைத்து நீங்கியதே அன்னம்
ஒடுங்கு இடையாள்-தன்-பால் உயர்ந்து – நள:46/3,4
இடை அன்னம் செம் கால் இள அன்னம் சொன்ன – நள:48/3
இடை அன்னம் செம் கால் இள அன்னம் சொன்ன – நள:48/3
அன்னம் உரைத்த குயிலுக்கு அலசுவான் – நள:49/1
அன்னம் போய் கன்னி அருகு அணைய நல்_நுதலும் – நள:52/2
அன்னம் உரைக்க மனம் இரங்கி முன்னம் – நள:56/2
என்ன முயங்குவிப்பேன் என்று அன்னம் பின்னும் – நள:58/2
மஞ்சு ஓட அன்னம் வர – நள:67/4
செய்ய தாள் வெள்ளை சிறை அன்னம் செம் கமல – நள:138/3
அன்னம் துயில் எழுப்ப அம் தாமரை வயலில் – நள:150/1
தான் ஏகும் அன்னம் தனி கயிற்றில் போம் நீள் – நள:155/2
கன்னி யான் ஆகில் கடி மாலை அன்னம் தான் – நள:159/2
மென் கால் சிறை அன்னம் வீற்றிருந்த மென் மலரை – நள:231/1
அன்னம் மிதிப்ப அலர் வழியும் தேறல் போய் – நள:361/1

TOP


அன்னம்-தன்-பால் (1)

நடை அன்னம்-தன்-பால் நயந்து – நள:48/4

TOP


அன்னம்-தனை (1)

அன்னம்-தனை பிடித்து அங்கு ஆய்_இழையார் கொண்டுபோய் – நள:33/1

TOP


அன்னமே (1)

அன்னமே நீ உரைத்த அன்னத்தை என் ஆவி – நள:43/1

TOP


அன்னவனை (2)

என்னை பிரிய இரும் கானில் அன்னவனை
காணாது அழுகின்றேன் என்றாள் கதிர் இமைக்கும் – நள:314/2,3
அன்னவனை காணாது அலமருவேன் இ நகர்க்கே – நள:320/2

TOP


அன்னாள் (1)

நறும் தாமரை விரும்பு நல்_நுதலே அன்னாள்
அறிந்தாள் நளன் தன்னை ஆங்கு – நள:160/3,4

TOP


அன்னான் (2)

விட நாகம் அன்னான் வெகுண்டு – நள:169/4
வாரணம் தான் அன்னான் மதித்து – நள:373/4

TOP


அன்னை-தனை (1)

அன்னை-தனை கான் விட்டு அவன் ஏக இ நகர்க்கே – நள:391/2

TOP


அனங்கன் (1)

ஆர் மடந்தை என்றான் அனங்கன் சிலை வளைப்ப – நள:37/3

TOP


அனத்தான் (1)

கரியான் அனத்தான் கருது புகழ் பூண்ட – நள:1/3

TOP


அனத்தை (1)

தம் அனத்தை வாங்கும் தடம் தோளான் மெய்ம்மை – நள:53/2

TOP


அனமே (2)

அஞ்சல் மட அனமே உன்றன் அணி நடையும் – நள:34/1
வாவி உறையும் மட அனமே என்னுடைய – நள:57/1

TOP


அனலில் (1)

கொங்கை அனலில் கொளுந்தியோ திங்கள் – நள:114/2

TOP


அனைத்தும் (3)

சொன்ன கலையின் துறை அனைத்தும் தோய்ந்தாலும் – நள:247/1
திண் நாகம் ஓர் எட்டும் தாங்கும் திசை அனைத்தும்
எண் ஆக வேந்தன் எழுந்து – நள:350/3,4
ஆதி மறை நூல் அனைத்தும் தெரிந்து உணர்ந்த – நள:387/1

TOP


அனைத்தே (1)

அனைத்தே விதியின் வலி – நள:232/4

TOP


அனைய (1)

நஞ்சும் தொடுத்து அனைய நாம மலர் வாளி – நள:173/3

TOP


அனையார் (1)

வஞ்சி அனையார் மணி நடையும் விஞ்சியது – நள:34/2

TOP


அனையான் (1)

மை ஆழியில் துயிலும் மால் அனையான் வண்மை புனை – நள:421/3

TOP