வே – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


வே (1)

நட வா மடி சீ விடு கூ வே வை –எழுத்து:2 137/1

மேல்

வேங்கடம் (1)

குண_கடல் குமரி குடகம் வேங்கடம்
எனும் நான்கு எல்லையின் இரும் தமிழ் கடலுள் – பாயிரம்:0 0/8,9

மேல்

வேண்டும் (3)

பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி – பாயிரம்:1 7/2
வேறு அவற்று எண்ணும் ஓர் பொதுவினை வேண்டும் – சொல்:3 389/2
வினைப்படுத்து உரைப்பின் உம்மை வேண்டும் – சொல்:3 399/2

மேல்

வேண்டுழி (1)

விரித்தல் தொகுத்தலும் வரும் செய்யுள் வேண்டுழி –எழுத்து:3 155/2

மேல்

வேள் (1)

விடலை கோ வேள் குரிசில் தோன்றல் – சொல்:1 276/11

மேல்

வேற்றுமை (20)

தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமை
பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள் –எழுத்து:3 151/2,3
வேற்றுமை ஐ முதல் ஆறு ஆம் அல்வழி –எழுத்து:3 152/1
வர பெறுனவும் உள வேற்றுமை வழியே –எழுத்து:3 166/2
மிகா நெடில் உயிர்த்தொடர் முன் மிகா வேற்றுமை –எழுத்து:3 182/2
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே –எழுத்து:3 183/2
வேற்றுமை ஆயின் ஐகான் இறு மொழி –எழுத்து:3 202/1
அட்டு உறின் ஐ கெட்டு அ நீள்வும் ஆம் வேற்றுமை –எழுத்து:3 203/3
ந இறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை –எழுத்து:4 208/1
அடைவும் ஆகும் வேற்றுமை பொருட்கே –எழுத்து:4 212/2
மீன் றவ்வொடு பொரூஉம் வேற்றுமை வழியே –எழுத்து:4 213/1
வேற்றுமை ம போய் வலி மெலி உறழ்வும் –எழுத்து:4 220/1
இயல்பும் மிகலும் ஆகும் வேற்றுமை
மிகலும் இனத்தோடு உறழ்தலும் விதி மேல் –எழுத்து:4 224/2,3
ஒக்கும் மன் அ பெயர் வேற்றுமை புணர்ப்பே –எழுத்து:5 242/2
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை – சொல்:1 291/2
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை – சொல்:1 291/2
பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும் – சொல்:1 317/2
பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
முதலிய பொருளின் அவற்றின் உருபு இடை – சொல்:3 361/1,2
வேற்றுமை வினை பண்பு உவமை உம்மை – சொல்:3 362/1
வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள் – சொல்:4 420/1
வேற்றுமை நயத்தின் வேறே உடல் உயிர் – சொல்:5 451/2

மேல்

வேற்றுமைக்-கண்ணும் (1)

குயின் ஊன் வேற்றுமைக்-கண்ணும் இயல்பே –எழுத்து:4 216/1

மேல்

வேற்றுமைக்கு (5)

இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு அல்வழிக்கு –எழுத்து:4 209/2
இயல்பாம் வேற்றுமைக்கு உணவு எண் சாண் பிற –எழுத்து:4 211/2
முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறுமே –எழுத்து:4 223/3
பலகை நாய் வரினும் வேற்றுமைக்கு அவ்வுமாம் –எழுத்து:4 231/2
வேற்றுமைக்கு இடனாய் திணை பால் இடத்து ஒன்று – சொல்:1 275/3

மேல்

வேற்றுமைக்கே (1)

தமிழ் அவ் உறவும் பெறும் வேற்றுமைக்கே
தாழும் கோல் வந்து உறுமேல் அற்றே –எழுத்து:4 225/1,2

மேல்

வேற்றுமைத்தொகையே (1)

வெளிப்படல் இல்லது வேற்றுமைத்தொகையே – சொல்:3 363/2

மேல்

வேற்றுமையில் (2)

மென்தொடர் மொழியுள் சில வேற்றுமையில்
தம் இன வன்தொடர் ஆகா மன்னே –எழுத்து:3 184/1,2
ல ள வேற்றுமையில் ற டவும் அல்வழி –எழுத்து:4 227/1

மேல்

வேறு (10)

திரிபு வேறு உடையது புடை_நூல் ஆகும் – பாயிரம்:1 8/2
வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும் – பாயிரம்:1 9/3
விளம்பிய பகுதி வேறு ஆதலும் விதியே –எழுத்து:2 139/1
முதல் இவை சினை இவை என வேறு உள இல – சொல்:1 316/1
தன்மை முன்னிலை வியங்கோள் வேறு இலை – சொல்:2 330/1
வேறு இல்லை உண்டு ஐம்பால் மூ இடத்தன – சொல்:2 339/1
உருபு பல அடுக்கினும் வினை வேறு அடுக்கினும் – சொல்:3 355/1
வேறு வினை பல் பொருள் தழுவிய பொதுச்சொலும் – சொல்:3 389/1
வேறு அவற்று எண்ணும் ஓர் பொதுவினை வேண்டும் – சொல்:3 389/2
வேறு நிரல் நிறீஇ முறையினும் எதிரினும் – சொல்:3 414/2

மேல்

வேறும் (1)

வினா சுட்டு உடனும் வேறும் ஆம் பொருள் – சொல்:1 279/1

மேல்

வேறே (2)

கடை மிகலே அவற்றின் குறியாம் வேறே –எழுத்து:1 92/3
வேற்றுமை நயத்தின் வேறே உடல் உயிர் – சொல்:5 451/2

மேல்