தொ – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்கனவும் 1
தொக்கும் 1
தொக்குழி 1
தொகல் 1
தொகாநிலை 1
தொகுத்தல் 1
தொகுத்தலும் 1
தொகுத்து 1
தொகுத்துரை 1
தொகை 8
தொகைநிலை 1
தொகைவிரி 1
தொடங்கி 1
தொடர் 1
தொடர்ச்சொல் 1
தொடர்ந்த 1
தொடர்ந்து 2
தொடர்ந்தும் 1
தொடர்பினுள் 1
தொடர்மொழி 3
தொடரவும் 1
தொடரின் 1
தொடரினும் 1
தொடரும் 1
தொடுத்தல் 1
தொல் 3
தொல்_நூற்கு_அஞ்சி 1
தொல்லை 1
தொழில் 7
தொழிலின் 2
தொழிலும் 1
தொழிற்பட 1
தொழிற்பெயர் 6
தொழிற்பெயர்க்கு 1
தொழிற்பெயரும் 1
தொழுதல் 1
தொழுது 2

தொக்கனவும் (1)

பண்பை விளக்கும் மொழி தொக்கனவும்
ஒரு பொருட்கு இரு பெயர் வந்தவும் குணத்தொகை – சொல்:3 365/1,2

மேல்

தொக்கும் (1)

உயர்திணை இடத்து விரிந்தும் தொக்கும்
விரவு பெயரின் விரிந்தும் நின்றும் –எழுத்து:5 255/2,3

மேல்

தொக்குழி (1)

தொக்குழி மயங்குந இரண்டு முதல் ஏழ் – சொல்:3 373/1

மேல்

தொகல் (1)

ஐம்_தொகை மொழி மேல் பிற தொகல் அன்மொழி – சொல்:3 369/1

மேல்

தொகாநிலை (1)

ஆறு உருபு இடை உரி அடுக்கு இவை தொகாநிலை – சொல்:3 374/2

மேல்

தொகுத்தல் (1)

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு – பாயிரம்:1 50/1

மேல்

தொகுத்தலும் (1)

விரித்தல் தொகுத்தலும் வரும் செய்யுள் வேண்டுழி –எழுத்து:3 155/2

மேல்

தொகுத்து (1)

தொகுத்து சுட்டல் வகுத்து காட்டல் – பாயிரம்:1 14/2

மேல்

தொகுத்துரை (1)

தொகுத்துரை உதாரணம் வினா விடை விசேடம் – பாயிரம்:1 21/2

மேல்

தொகை (8)

தொகை வகை விரியின் தருக என துன்னார் – பாயிரம்:0 0/11
பிண்டம் தொகை வகை குறியே செய்கை – பாயிரம்:1 20/1
முதல் தொகை குறிப்போடு இன்ன பிறவும் – சொல்:1 269/3
அன்மொழி என அ தொகை ஆறு ஆகும் – சொல்:3 362/2
எனும் நான்கு அளவையுள் உம் இலது அ தொகை – சொல்:3 368/2
ஐம்_தொகை மொழி மேல் பிற தொகல் அன்மொழி – சொல்:3 369/1
எனும் நான்கு இடத்தும் சிறக்கும் தொகை பொருள் – சொல்:3 370/2
நான்கும் தொகை பெறும் உம்மை என்று என ஓடு – சொல்:4 428/2

மேல்

தொகைநிலை (1)

மொழி போல் நடப்பன தொகைநிலை தொடர்ச்சொல் – சொல்:3 361/4

மேல்

தொகைவிரி (1)

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு – பாயிரம்:1 50/1

மேல்

தொடங்கி (1)

இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கி
திரிபு வேறு உடையது புடை_நூல் ஆகும் – பாயிரம்:1 8/1,2

மேல்

தொடர் (1)

சொல் பொருள் விரித்தல் தொடர் சொல் புணர்த்தல் – பாயிரம்:1 14/5

மேல்

தொடர்ச்சொல் (1)

மொழி போல் நடப்பன தொகைநிலை தொடர்ச்சொல் – சொல்:3 361/4

மேல்

தொடர்ந்த (1)

உயர்திணை தொடர்ந்த பொருள் முதல் ஆறும் – சொல்:3 377/1

மேல்

தொடர்ந்து (2)

தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா – சொல்:1 275/2
ஒழிய இரண்டு முதலா தொடர்ந்து ஒரு – சொல்:3 361/3

மேல்

தொடர்ந்தும் (1)

எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் –எழுத்து:2 128/1

மேல்

தொடர்பினுள் (1)

தொடர்பினுள் உகரம் ஆய் வரின் இயல்பே –எழுத்து:3 173/2

மேல்

தொடர்மொழி (3)

தொடர்மொழி இறுதி வன்மை ஊர் உகரம் –எழுத்து:1 94/2
ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா – சொல்:1 259/1
ஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி
பல பொருளன பொது இருமையும் ஏற்பன – சொல்:1 260/1,2

மேல்

தொடரவும் (1)

அஃகும் பிற மேல் தொடரவும் பெறுமே –எழுத்து:1 94/3

மேல்

தொடரின் (1)

பொதுமொழி தொடரின் அது படலம் ஆகும் – பாயிரம்:1 17/2

மேல்

தொடரினும் (1)

மொழியாய் தொடரினும் முன் அனைத்து எழுத்தே –எழுத்து:1 127/1

மேல்

தொடரும் (1)

எழுத்து ஈறு ஆக தொடரும் என்ப –எழுத்து:2 130/2

மேல்

தொடுத்தல் (1)

வெற்றென தொடுத்தல் மற்றொன்று விரித்தல் – பாயிரம்:1 12/4

மேல்

தொல் (3)

திசை-தொறும் நிறுவிய திறல் உறு தொல் சீர் – பாயிரம்:0 0/14
துயில்வோன் மந்தன் தொல்_நூற்கு_அஞ்சி – பாயிரம்:1 39/3
தொல் முறை உரைப்பன ஆகுபெயரே – சொல்:1 290/4

மேல்

தொல்_நூற்கு_அஞ்சி (1)

துயில்வோன் மந்தன் தொல்_நூற்கு_அஞ்சி
தடுமாறு_உளத்தன் தறுகணன் பாவி – பாயிரம்:1 39/3,4

மேல்

தொல்லை (1)

தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்டு –எழுத்து:1 98/1

மேல்

தொழில் (7)

இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை –எழுத்து:2 142/2
தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி –எழுத்து:3 152/2
தம்மின் ஆகிய தொழில் மொழி வரினே –எழுத்து:5 256/2
தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா – சொல்:1 275/2
குணம் தொழில் கல்வி சிறப்பாம் பெயரோடு – சொல்:3 393/2
உய்த்தல் ஆதி உடல் உயிர் தொழில் குணம் – சொல்:5 453/2
ஈதல் இன்னன இரு பொருள் தொழில் குணம் – சொல்:5 455/3

மேல்

தொழிலின் (2)

மூக்கு உற்று இதழ் நா பல் அண தொழிலின்
வெவ்வேறு எழுத்து ஒலியாய் வரல் பிறப்பே –எழுத்து:1 74/3,4
பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின்
வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதமே –எழுத்து:2 132/1,2

மேல்

தொழிலும் (1)

தொழிலும் காலமும் தோன்றி பால் வினை – சொல்:2 342/1

மேல்

தொழிற்பட (1)

தொழிற்பட கிளத்தலும் வழக்கினுள் உரித்தே – சொல்:3 400/2

மேல்

தொழிற்பெயர் (6)

ஞ ண ந ம ல வ ள ன ஒற்று இறு தொழிற்பெயர்
ஏவல் வினை நனி ய அல் மெய் வரின் –எழுத்து:4 207/1,2
மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய –எழுத்து:4 217/1
கம்மும் உருமும் தொழிற்பெயர் மானும் –எழுத்து:4 223/2
ல ள இறு தொழிற்பெயர் ஈர் இடத்தும் உ உறா –எழுத்து:4 230/1
வல்லே தொழிற்பெயர் அற்று இரு வழியும் –எழுத்து:4 231/1
தெவ் என் மொழியே தொழிற்பெயர் அற்றே –எழுத்து:4 236/1

மேல்

தொழிற்பெயர்க்கு (1)

ந இறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை –எழுத்து:4 208/1

மேல்

தொழிற்பெயரும் (1)

புள்ளும் வள்ளும் தொழிற்பெயரும் மானும் –எழுத்து:4 234/1

மேல்

தொழுதல் (1)

துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல் – சொல்:5 453/1

மேல்

தொழுது (2)

நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே –எழுத்து:1 56/2
அச்சுதன் அடி தொழுது அறைகுவன் சொல்லே – சொல்:1 258/2

மேல்