ஏ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 10
ஏகார 2
ஏகாரம் 3
ஏகாரம்மே 1
ஏடே 1
ஏணி-மிசை 1
ஏத்தல் 1
ஏத்தலும் 1
ஏத்தி 2
ஏத்திய 4
ஏத்தினும் 1
ஏதம் 2
ஏதீடு 1
ஏது 5
ஏதுவின் 1
ஏதுவும் 2
ஏந்தல் 2
ஏந்தல்_வண்ணம் 2
ஏந்திய 2
ஏந்து 1
ஏம் 1
ஏம 2
ஏமத்தானும் 1
ஏமம் 3
ஏமுற 1
ஏமுறு 3
ஏய்ப்ப 2
ஏயின் 1
ஏயும் 5
ஏயொடு 2
ஏரும் 1
ஏரோர் 1
ஏவல் 4
ஏழ் 7
ஏழன் 3
ஏழாகுவதே 1
ஏழினும் 1
ஏழு 1
ஏழும் 4
ஏழே 1
ஏழைமை 1
ஏற்கும் 1
ஏற்ப 1
ஏற்பின் 1
ஏற்புடைத்து 1
ஏற்றம் 1
ஏற்றல் 1
ஏற்றல்-கண்ணும் 1
ஏற்றலும் 1
ஏற்றினை 1
ஏற்று 3
ஏற்றை 1
ஏற்றையும் 1
ஏறிய 2
ஏறு 2
ஏறும் 1
ஏன் 1
ஏன 1
ஏனது 1
ஏனம் 1
ஏனவை 3
ஏனை 27
ஏனைய 2
ஏனோர் 6
ஏனோர்க்கு 1
ஏனோர்க்கும் 1
ஏனோரும் 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஏ (10)

ஆ ஈ ஊ ஏ ஐ – எழுத். நூல்:4/1
ஆ ஏ ஓ அ மூன்றும் வினா – எழுத். நூல்:32/1
ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை – எழுத். மொழி:40/1
இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் – எழுத். பிறப்:4/1
ஒத்தது என்ப ஏ என் சாரியை – எழுத். தொகை:22/6
அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் – எழுத். உரு:1/1
ஏ என் இறுதிக்கு எகரம் வருமே – எழுத். உயி.மயங்:75/1
இரு திசை புணரின் ஏ இடை வருமே – எழுத். குற்.புண:26/1
ஈற்று நின்று இசைக்கும் ஏ என் இறுதி – சொல். இடை:38/1
மல்லல் வளனே ஏ பெற்று ஆகும் – சொல். உரி:7/1

TOP


ஏகார (2)

ஏகார இறுதி ஊகார இயற்றே – எழுத். உயி.மயங்:72/1
ஓகார இறுதி ஏகார இயற்றே – எழுத். உயி.மயங்:87/1

TOP


ஏகாரம் (3)

தொழிற்பெயர் ஆயின் ஏகாரம் வருதலும் – சொல். விளி:22/1
தெளி நிலை உடைய ஏகாரம் வரலே – சொல். விளி:34/4
எண் ஏகாரம் இடையிட்டு கொளினும் – சொல். இடை:40/1

TOP


ஏகாரம்மே (1)

ஈற்றசை இ ஐந்து ஏகாரம்மே – சொல். இடை:9/2

TOP


ஏடே (1)

ஏடே இதழே பாளை என்றா – பொருள். மரபி:86/2

TOP


ஏணி-மிசை (1)

மடை அமை ஏணி-மிசை மயக்கமும் கடைஇ – பொருள். புறத்:13/2

TOP


ஏத்தல் (1)

எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல் – பொருள். பொருளி:13/1

TOP


ஏத்தலும் (1)

தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும் – பொருள். கற்:27/1
பல்லாற்றானும் ஊடலின் தகைத்தலும் – 27/2

TOP


ஏத்தி (2)

கொடுப்போர் ஏத்தி கொடாஅர் பழித்தலும் – பொருள். புறத்:35/1
பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி – பொருள். புறத்:36/14
நடை-வயின் தோன்றிய இரு வகை விடையும் – 36/15

TOP


ஏத்திய (4)

வாடா வள்ளி வயவர் ஏத்திய – பொருள். புறத்:5/6
ஓடா கழல் நிலை உளப்பட ஓடா – 5/7
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் – பொருள். புறத்:35/2
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும் – பொருள். புறத்:36/10
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் – பொருள். கற்:5/9

TOP


ஏத்தினும் (1)

கற்பு_வழிப்பட்டவள் பரத்தைமை ஏத்தினும் – பொருள். பொருளி:39/1
உள்ளத்து ஊடல் உண்டு என மொழிப – 39/2

TOP


ஏதம் (2)

எதிர் பெய்து பரிதல் ஏதம் ஆய்தல் – பொருள். மெய்ப்:22/2
எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே – பொருள். செய்யு:146/1

TOP


ஏதீடு (1)

கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு – பொருள். பொருளி:13/2

TOP


ஏது (5)

இன் ஆன் ஏது ஈங்கு என வரூஉம் – சொல். வேற்.இய:13/7
ஆக்கமொடு புணர்ந்த ஏது கிளவி – சொல். வேற்.மயங்:9/2
ஏது நுதலிய முதுமொழியான – பொருள். செய்யு:165/4
ஏது நுதலிய முதுமொழி என்ப – பொருள். செய்யு:177/4
ஏது நடையினும் எடுத்துக்காட்டினும் – பொருள். மரபி:102/3

TOP


ஏதுவின் (1)

ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும் – பொருள். கற்:27/4

TOP


ஏதுவும் (2)

இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும் – சொல். வேற்.மயங்:10/2
நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் – பொருள். அகத்:43/1

TOP


ஏந்தல் (2)

தூங்கல்_வண்ணம் ஏந்தல்_வண்ணம் – பொருள். செய்யு:213/10
ஏந்தல்_வண்ணம் – பொருள். செய்யு:231/1

TOP


ஏந்தல்_வண்ணம் (2)

தூங்கல்_வண்ணம் ஏந்தல்_வண்ணம் – பொருள். செய்யு:213/10
உருட்டு_வண்ணம் முடுகு_வண்ணம் என்று – 213/11
ஏந்தல்_வண்ணம் – பொருள். செய்யு:231/1
சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும் – 231/2

TOP


ஏந்திய (2)

சூதர் ஏந்திய துயிலிடை நிலையும் – பொருள். புறத்:36/2
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் – பொருள். கற்:5/55

TOP


ஏந்து (1)

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ் – பொருள். புறத்:5/3

TOP


ஏம் (1)

அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும் – சொல். வினை:5/2

TOP


ஏம (2)

ஏம பேரூர் சேரியும் சுரத்தும் – பொருள். அகத்:37/1
ஏம சுற்றம் இன்றி புண்ணோன் – பொருள். புறத்:24/5

TOP


ஏமத்தானும் (1)

பாழி கொள்ளும் ஏமத்தானும் – பொருள். புறத்:17/8
களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் களிற்றொடு – 17/9

TOP


ஏமம் (3)

ஏமம் சாலா இடும்பை எய்தி – பொருள். அகத்:50/2
ஏமம் சான்ற உவகை-கண்ணும் – பொருள். கள:20/34
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி – பொருள். கற்:51/2

TOP


ஏமுற (1)

ஏமுற இரண்டும் உள என மொழிப – பொருள். கள:18/2

TOP


ஏமுறு (3)

ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் – பொருள். கற்:5/9
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் – பொருள். கற்:5/50
ஏமுறு விளையாட்டு இறுதி-கண்ணும் – பொருள். கற்:6/19

TOP


ஏய்ப்ப (2)

அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப – பொருள். உவம:11/2
கடுப்ப ஏய்ப்ப மருள புரைய – பொருள். உவம:15/1

TOP


ஏயின் (1)

ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும் – சொல். இடை:42/3

TOP


ஏயும் (5)

தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும் – சொல். இடை:13/1
ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை – சொல். இடை:24/1
நன்று ஈற்று ஏயும் அன்று ஈற்று ஏயும் – சொல். இடை:34/1
நன்று ஈற்று ஏயும் அன்று ஈற்று ஏயும் – சொல். இடை:34/1
அந்து ஈற்று ஓவும் அன் ஈற்று ஓவும் – 34/2
முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் – சொல். எச்ச:55/1
அ நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே – 55/2

TOP


ஏயொடு (2)

ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் – சொல். விளி:5/1
முறைப்பெயர் கிளவி ஏயொடு வருமே – சொல். விளி:19/1

TOP


ஏரும் (1)

கற்பும் ஏரும் எழிலும் என்றா – பொருள். பொருளி:53/2

TOP


ஏரோர் (1)

ஏரோர் களவழி அன்றி களவழி – பொருள். புறத்:21/3

TOP


ஏவல் (4)

ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவியும் – எழுத். உயி.மயங்:8/4
ஏவல் குறித்த உரை_அசை மியாவும் – எழுத். உயி.மயங்:22/3
ஏவல் மரபின் ஏனோரும் உரியர் – பொருள். அகத்:24/1
ஏவல் முடிவும் வினாவும் செப்பும் – பொருள். கற்:29/2

TOP


ஏழ் (7)

ஏழ் என் கிளவி உருபு இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:93/1
வேற்றுமை-தாமே ஏழ் என மொழிப – சொல். வேற்.இய:1/1
ஆ ஏழ் சொல்லும் அசைநிலை கிளவி – சொல். இடை:31/3
உட்கு வர தோன்றும் ஈர்_ஏழ் துறைத்தே – பொருள். புறத்:1/4
வந்த ஈர்_ஏழ் வகையிற்று ஆகும் – பொருள். புறத்:3/8
ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே – பொருள். செய்யு:37/1
அங்கதம் முதுசொல் அ ஏழ் நிலத்தும் – பொருள். செய்யு:79/2

TOP


ஏழன் (3)

அத்தொடும் சிவணும் ஏழன் உருபே – எழுத். உரு:9/2
அன் என் சாரியை ஏழன் இறுதி – எழுத். உரு:22/1
ஏழன் உருபிற்கு திசை பெயர் முன்னர் – எழுத். உரு:29/1

TOP


ஏழாகுவதே (1)

ஏழாகுவதே – சொல். வேற்.இய:20/1
கண் என பெயரிய வேற்றுமை கிளவி – 20/2

TOP


ஏழினும் (1)

உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை – பொருள். கள:23/4

TOP


ஏழு (1)

அ ஏழு வகைய என்மனார் புலவர் – பொருள். பொருளி:13/4

TOP


ஏழும் (4)

ஓ ஔ என்னும் அ பால் ஏழும் – எழுத். நூல்:4/2
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப – 4/3
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய – எழுத். நூல்:26/3
ஏழும் ஆகும் உறை நிலத்தான – சொல். வேற்.மயங்:15/2
ஏன் அல் என வரூஉம் ஏழும் – சொல். வினை:6/3
தன் வினை உரைக்கும் தன்மை சொல்லே – 6/4

TOP


ஏழே (1)

நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி – எழுத். மொழி:10/1

TOP


ஏழைமை (1)

இன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமை – பொருள். மெய்ப்:26/3

TOP


ஏற்கும் (1)

தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும் – சொல். பெயர்:38/1

TOP


ஏற்ப (1)

நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப – பொருள். மரபி:75/2

TOP


ஏற்பின் (1)

பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல் – பொருள். மரபி:110/16

TOP


ஏற்புடைத்து (1)

ஏற்புடைத்து என்ப எருமை-கண்ணும் – பொருள். மரபி:37/1

TOP


ஏற்றம் (1)

ஈர் எழுத்து ஏற்றம் அ வழியான – பொருள். செய்யு:37/2

TOP


ஏற்றல் (1)

வினை நிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல் – சொல். வேற்.இய:5/2
பண்பு கொள வருதல் பெயர் கொள வருதல் என்று – 5/3

TOP


ஏற்றல்-கண்ணும் (1)

ஏற்றல்-கண்ணும் நிறுத்தல்-கண்ணும் – பொருள். கற்:6/2

TOP


ஏற்றலும் (1)

பிறிது பிறிது ஏற்றலும் உருபு தொக வருதலும் – சொல். வேற்.மயங்:21/1

TOP


ஏற்றினை (1)

குரங்கின் ஏற்றினை கடுவன் என்றலும் – பொருள். மரபி:68/1

TOP


ஏற்று (3)

ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல் – பொருள். மெய்ப்:16/2
ஒத்த நால் எழுத்து ஏற்று அலங்கடையே – பொருள். செய்யு:38/2
சீர் ஏற்று இறூஉம் இயற்கைய என்ப – பொருள். செய்யு:74/2

TOP


ஏற்றை (1)

ஏற்றை கிளவி உரித்து என மொழிப – பொருள். மரபி:49/2

TOP


ஏற்றையும் (1)

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் – பொருள். மரபி:2/1

TOP


ஏறிய (2)

ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம் – பொருள். அகத்:51/1
ஏறிய நிலத்தே குறளடி என்ப – பொருள். செய்யு:36/2

TOP


ஏறு (2)

என்று இவை நான்கும் ஏறு எனற்கு உரிய – பொருள். மரபி:38/2
கடல் வாழ் சுறவும் ஏறு எனப்படுமே – பொருள். மரபி:40/1

TOP


ஏறும் (1)

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் – பொருள். மரபி:2/1

TOP


ஏன் (1)

ஏன் அல் என வரூஉம் ஏழும் – சொல். வினை:6/3

TOP


ஏன (1)

முதலா ஏன தம் பெயர் முதலும் – எழுத். மொழி:33/1

TOP


ஏனது (1)

ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது – பொருள். கற்:5/12

TOP


ஏனம் (1)

இருள் நிற பன்றியை ஏனம் என்றலும் – பொருள். மரபி:68/6

TOP


ஏனவை (3)

ஏனவை வரினே மேல் நிலை இயல்பே – எழுத். உயி.மயங்:54/1
ஏனவை புணரின் இயல்பு என மொழிப – எழுத். புள்.மயங்:86/1
இயலசை முதல் இரண்டு ஏனவை உரியசை – பொருள். செய்யு:6/1

TOP


ஏனை (27)

அ இயல் நிலையும் ஏனை மூன்றே – எழுத். நூல்:12/1
ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும் – எழுத். நூல்:17/3
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் – எழுத். பிறப்:19/2
பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை – எழுத். தொகை:30/2
ஒன்று அறி சொல் முன் யாது என் வினா இடை – 30/3
ஏனை வகரம் இன்னொடு சிவணும் – எழுத். உரு:12/1
ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும் – எழுத். உரு:16/5
ஏனை புளி பெயர் மெல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:43/1
வேற்றுமை ஆயின் ஏனை இரண்டும் – எழுத். புள்.மயங்:34/1
ஏனை எகினே அகரம் வருமே – எழுத். புள்.மயங்:42/1
வேற்றுமை ஆயின் ஏனை எகினொடு – எழுத். புள்.மயங்:51/1
ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்றே – எழுத். புள்.மயங்:87/1
ஏனை முன் வரினே தான் நிலை இன்றே – எழுத். குற்.புண:19/1
ஏனை இரண்டும் ஏனை இடத்த – சொல். கிளவி:30/1
ஏனை இரண்டும் ஏனை இடத்த – சொல். கிளவி:30/1
ஏனை உருபும் அன்ன மரபின – சொல். வேற்.மயங்:28/1
ஏனை உயிரே உயர்திணை மருங்கின் – சொல். விளி:7/1
ஏனை புள்ளி ஈறு விளி கொள்ளா – சொல். விளி:12/1
ஏனை பெயரே தம்தம் மரபின – சொல். பெயர்:21/5
ஏனை கிளவி பன்மைக்கு உரித்தே – சொல். பெயர்:36/1
ஏனை எச்சம் வினைமுதலானும் – சொல். வினை:35/1
ஏனை காலமும் மயங்குதல் வரையார் – சொல். வினை:51/1
இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் – சொல். இடை:27/2
உள்ளுறை உவமம் ஏனை உவமம் என – பொருள். அகத்:46/1
ஏனை உவமம் தான் உணர் வகைத்தே – பொருள். அகத்:49/1
இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை – பொருள். செய்யு:13/1
உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர் – 13/2
ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை – பொருள். செய்யு:108/1
வெண்பா நடைத்தே கலி என மொழிப – 108/2
ஏனை ஒன்றே – பொருள். செய்யு:138/1

TOP


ஏனைய (2)

சொல்லிய அல்ல ஏனைய எல்லாம் – எழுத். உரு:30/2
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇ – பொருள். கற்:5/57

TOP


ஏனோர் (6)

ஏனோர் மருங்கினும் எண்ணும்-காலை – பொருள். அகத்:22/1
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே – பொருள். அகத்:27/2
மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய – பொருள். அகத்:28/1
ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே – பொருள். அகத்:32/2
இரு_மூன்று மரபின் ஏனோர் பக்கமும் – பொருள். புறத்:20/3
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் – பொருள். புறத்:28/2

TOP


ஏனோர்க்கு (1)

ஏனோர்க்கு எல்லாம் இடம் வரைவு இன்றே – பொருள். உவம:27/2

TOP


ஏனோர்க்கும் (1)

மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய – பொருள். மரபி:83/3

TOP


ஏனோரும் (1)

ஏவல் மரபின் ஏனோரும் உரியர் – பொருள். அகத்:24/1

TOP