தொல்காப்பியம் + சங்க இலக்கியம் பொது/பொதுவல்லாத சொற்களும், சொற்பிரிப்பு விளக்கமும்

  1. தொல்காப்பியம் + சங்க இலக்கியம் பொதுச் சொற்கள்
  2. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் இருந்து சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள்

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = மயிர்_குறை_கருவி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = மயிர், குறை, கருவி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், ஆ_கோள் போன்றன.
சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே
கணக்கிடப்படும். காட்டாக, குறில்_இணை என்ற சொல்லுக்குரிய பிரிசொற்கள் இணை, குறில் ஆகிய இரண்டும்.
எனவே குறில்_இணை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், இணை, குறில், குறில்_இணை என்ற மூன்று
சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

இணை (2)
குறிலே நெடிலே குறில்_இணை குறில்_நெடில் – பொருள். செய்யு:3/1
குறில்_இணை உகரம் அல்வழியான – பொருள். செய்யு:4/3

குறில் (4)
குறிலே நெடிலே குறில்_இணை குறில்_நெடில் – பொருள். செய்யு:3/1
குறிலே நெடிலே குறில்_இணை குறில்_நெடில் – பொருள். செய்யு:3/1
குறில்_இணை உகரம் அல்வழியான – பொருள். செய்யு:4/3
தனி குறில் முதல் அசை மொழி சிதைந்து ஆகாது – பொருள். செய்யு:6/1

குறில்_இணை (2)
குறிலே நெடிலே குறில்_இணை குறில்_நெடில் – பொருள். செய்யு:3/1
குறில்_இணை உகரம் அல்வழியான – பொருள். செய்யு:4/3

2. கட்டுருபன்
கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது.
கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின்
போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும்,
ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

அடி-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், அடி-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும்
உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

அடி-தொறும் (1)
அடி-தொறும் தலை எழுத்து ஒப்பது மோனை – பொருள். செய்யு:88/1

-தொறும் (2)
திணை-தொறும் மரீஇய திணை நிலை பெயரே – பொருள். அகத்:20/2
அடி-தொறும் தலை எழுத்து ஒப்பது மோனை – பொருள். செய்யு:88/1

3. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள்
கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி
முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் அதிகாரம்
(எழுத். (எழுத்து), சொல், பொருள்) கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அதிகாரத்தில்
அச் சொல் இடம்பெறும் இயலின் சுருக்கப்பெயர் கொடுக்கப்படும். அதனை அடுத்து
அந்த இயலில் அச் சொல் இடம்பெறும் நூற்பா எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு நூற்பாவின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

எச்சத்து (3)
சாவ என்னும் செய என் எச்சத்து – எழுத். உயி.மயங்:7/1
இறுதி வகரம் கெடுதலும் உரித்தே – எழுத் 7/2
செய்து என் எச்சத்து இறந்த காலம் – சொல். வினை:42/1
பிரிவின் எச்சத்து புலம்பிய இருவரை – பொருள். கற்:5/37
எச்சத்து என்ற சொல் அடி இறுதியில் வந்துள்ளதால், அடுத்த அடியும் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்க.
கிழவோள் செப்பல் கிளவது என்ப – பொருள். கற்:6/43

இதில் ‘என்ப’ எனும் சொல் அடியின் இறுதிச் சொல்லாயினும், அது அந்த நூற்பாவின் இறுதி அடியாக
இருப்பதால் அடுத்த அடி கொடுக்கப்படவில்லை.

5. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு
உருபினும் (3)
ஆறன் உருபினும் நான்கன் உருபினும் – எழுத். தொகை:19/1
ஆறன் உருபினும் நான்கன் உருபினும் – எழுத். தொகை:19/1
கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை – எழுத் 19/2
உருபினும் பொருளினும் மெய் தடுமாறி – சொல். வேற்.மயங்:18/2