மூ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 30
மூ_இரு 1
மூ_இலை 2
மூ_இலையான் 1
மூ_இலையும் 1
மூஉலகில் 1
மூஉலகுக்கு 2
மூஉலகும் 2
மூஎயில் 3
மூஎயிலும் 3
மூஎயிற்கு 1
மூக்கில் 1
மூக்கின் 1
மூக்கீச்சுரத்து 10
மூக்கு 2
மூக்கும் 1
மூகம் 1
மூங்கில் 1
மூச 2
மூசி 1
மூசு 4
மூசும் 1
மூசுவது 1
மூட்டு 1
மூட 3
மூடம் 1
மூடர் 1
மூடரே 4
மூடல் 1
மூடா 1
மூடாவே 1
மூடி 10
மூடிட 1
மூடிய 7
மூடியனே 1
மூடு 7
மூடும் 3
மூத்தபோதின்-கண் 1
மூத்தானை 1
மூதாதை 1
மூதார் 1
மூது 3
மூதுரை 1
மூதூர் 12
மூதூரா 1
மூப்பினால் 1
மூப்பினொடு 1
மூப்பினோடு 2
மூப்பு 3
மூப்பும் 1
மூர்க்கன் 1
மூர்க்கு 1
மூர்த்தி 13
மூர்த்தி-தன் 1
மூர்த்தியாய் 2
மூர்த்தியார் 1
மூர்த்தியும் 1
மூர்த்தியை 4
மூர்த்தியோ 1
மூரல் 3
மூரி 6
மூல 1
மூலம் 2
மூலனை 1
மூவர் 4
மூவர்க்கு 2
மூவர்கட்கு 1
மூவர்தாம் 1
மூவராயினும் 1
மூவரில் 1
மூவரிலும் 1
மூவரும் 2
மூவருள் 1
மூவா 9
மூவாத 2
மூவாதா 1
மூவார் 1
மூழ்க 4
மூழ்கவே 1
மூழ்கி 10
மூழ்கிட 1
மூழ்கிடாதே 1
மூழ்கிய 1
மூழ்கிறீர் 1
மூழ்கு 1
மூழ்கும் 1
மூள 1
மூளும் 1
மூளை 2
மூன்றாய் 2
மூன்றினர் 1
மூன்றினான் 1
மூன்றினையும் 1
மூன்று 72
மூன்றுடன் 1
மூன்றுபுரம் 1
மூன்றும் 57
மூன்றுமாய் 1
மூன்றை 1
மூன்றையும் 5
மூன்றொடு 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மூ (30)

நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை – தேவா-சம்:107/2
அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
அடையாதவர் மூ எயில் சீறும் – தேவா-சம்:399/1
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி – தேவா-சம்:455/3
மூ துவர் ஆடையினாரும் மூசு கடுப்பொடியாரும் – தேவா-சம்:468/1
கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன் – தேவா-சம்:553/1
முடியா படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய – தேவா-சம்:730/2
முடி ஆர் மன்னர் மட மான் விழியார் மூ உலகும் ஏத்தும் – தேவா-சம்:777/1
சூடலன் மூ இலைய சூலம் வலன் ஏந்தி – தேவா-சம்:1133/2
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
ஓங்கிய மூ இலை நல் சூலம் ஒரு கையன் சென்னி – தேவா-சம்:1157/1
கொலை மலி மூ_இலையான் கொடிமாடச்செங்குன்றூர் ஏத்தும் – தேவா-சம்:1162/3
ஒரு தாள் ஈர் அயில் மூ இலை சூலம் – தேவா-சம்:1382/10
முத்தன் மிகு மூ இலை நல் வேலன் விரி நூலன் – தேவா-சம்:1830/1
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும் – தேவா-சம்:1847/3
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/3
நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் – தேவா-சம்:2085/1
விடை அமரும் கொடியாரும் வெண் மழு மூ இலை சூல – தேவா-சம்:2213/3
வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2630/2
கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் – தேவா-சம்:2776/2
வெம் சின மூ இலை சூலத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2891/2
சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் – தேவா-சம்:2895/1
இறையவர் உறைவிடம் இலங்கு மூ எரி – தேவா-சம்:2992/2
அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால் – தேவா-சம்:3440/3
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/4
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3553/2
மா மா யாநீ தான ஆழீ காசா தா வா மூ வாதா – தேவா-சம்:4059/4
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும் – தேவா-சம்:4107/3

மேல்


மூ_இரு (1)

சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் – தேவா-சம்:2895/1

மேல்


மூ_இலை (2)

அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3

மேல்


மூ_இலையான் (1)

கொலை மலி மூ_இலையான் கொடிமாடச்செங்குன்றூர் ஏத்தும் – தேவா-சம்:1162/3

மேல்


மூ_இலையும் (1)

நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் – தேவா-சம்:2085/1

மேல்


மூஉலகில் (1)

முன்னிய கலைப்பொருளும் மூஉலகில் வாழ்வும் – தேவா-சம்:1775/1

மேல்


மூஉலகுக்கு (2)

முனிதனை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை – தேவா-சம்:1614/2
மூத்தானை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியாய் – தேவா-சம்:1615/1

மேல்


மூஉலகும் (2)

பாணி மூஉலகும் புதைய மேல் மிதந்த – தேவா-சம்:1382/28
மொழிவார்கள் மூஉலகும் பெறுவார்களே – தேவா-சம்:1589/4

மேல்


மூஎயில் (3)

விலங்கல் வில் வெம் கனலாலே மூஎயில் வேவ முனிந்தார் – தேவா-சம்:464/2
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் – தேவா-சம்:2627/2
கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல் – தேவா-சம்:3692/2

மேல்


மூஎயிலும் (3)

புரி சடையாய் புண்ணியனே நண்ணலார் மூஎயிலும்
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும் – தேவா-சம்:542/1,2
கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி – தேவா-சம்:1133/3
அந்தர மூஎயிலும் அரணம் எரியூட்டி ஆரூர் – தேவா-சம்:1141/3

மேல்


மூஎயிற்கு (1)

மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூஎயிற்கு
எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே – தேவா-சம்:2533/3,4

மேல்


மூக்கில் (1)

குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில்
முலையார் அணி பொன் முளை வெண் நகையார் மூவா மதியினார் – தேவா-சம்:778/2,3

மேல்


மூக்கின் (1)

வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின்
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே – தேவா-சம்:712/3,4

மேல்


மூக்கீச்சுரத்து (10)

வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மெய்ம்மையே – தேவா-சம்:2769/4
கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே – தேவா-சம்:2770/4
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே – தேவா-சம்:2772/4
அடல்_மன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2773/4
எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே – தேவா-சம்:2774/4
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2775/4
மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யாநின்ற மொய்ம்பு அதே – தேவா-சம்:2776/4
சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே – தேவா-சம்:2777/4
பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே – தேவா-சம்:2778/4
மல்லை ஆர் மும் முடி மன்னர் மூக்கீச்சுரத்து அடிகளை – தேவா-சம்:2779/1

மேல்


மூக்கு (2)

நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2795/2
காலொடும் கனக மூக்கு உடன்வர கயல் வரால் – தேவா-சம்:3177/3

மேல்


மூக்கும் (1)

சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு – தேவா-சம்:4072/1

மேல்


மூகம் (1)

மூகம் அறிவார் கலை முத்தமிழ் நூல் – தேவா-சம்:1653/3

மேல்


மூங்கில் (1)

மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில் – தேவா-சம்:3183/2

மேல்


மூச (2)

நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச
தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1780/3,4

மேல்


மூசி (1)

மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2163/4

மேல்


மூசு (4)

மூ துவர் ஆடையினாரும் மூசு கடுப்பொடியாரும் – தேவா-சம்:468/1
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே – தேவா-சம்:535/3
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல் – தேவா-சம்:2468/3
வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி – தேவா-சம்:2563/3

மேல்


மூசும் (1)

வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3548/4

மேல்


மூசுவது (1)

அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே – தேவா-சம்:4026/2

மேல்


மூட்டு (1)

மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை – தேவா-சம்:3961/2

மேல்


மூட (3)

தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/3
ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட
ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார்தாம் – தேவா-சம்:2577/1,2
பொடி அணி மேனி மூட உரி கொண்டவன் புன்சடையான் – தேவா-சம்:3431/2

மேல்


மூடம் (1)

மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத – தேவா-சம்:2133/3

மேல்


மூடர் (1)

குண்டு அமண் துவர் கூறை மூடர் சொல் – தேவா-சம்:1751/1

மேல்


மூடரே (4)

கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே
கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே – தேவா-சம்:1380/1,2
கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே
கொச்சையள் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே – தேவா-சம்:1380/2,3
கொச்சையள் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே
கொச்சை அண்ணலை கூடகிலார் உள்தல் மூடரே – தேவா-சம்:1380/3,4
கொச்சை அண்ணலை கூடகிலார் உள்தல் மூடரே – தேவா-சம்:1380/4

மேல்


மூடல் (1)

மூடல் சால உடையார் முளி கானிடை – தேவா-சம்:3120/2

மேல்


மூடா (1)

முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய் – தேவா-சம்:1365/2

மேல்


மூடாவே (1)

முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே – தேவா-சம்:2594/4

மேல்


மூடி (10)

கண் ஆர் சலம் மூடி கடல் ஓங்க உயர்ந்தான் ஊர் – தேவா-சம்:92/2
தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவரம் மூடி
பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர் – தேவா-சம்:139/1,2
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி முடி-தன் மேல் – தேவா-சம்:735/1
மூடி ஓங்கி முது வேய் உகுத்த முத்தம் பல கொண்டு – தேவா-சம்:751/2
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல – தேவா-சம்:1123/3
அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனல் ஏந்தி – தேவா-சம்:1934/1
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/2

மேல்


மூடிட (1)

முனிவதுசெய்து உகந்தானை வென்று அ வினை மூடிட
இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2906/2,3

மேல்


மூடிய (7)

கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன் – தேவா-சம்:152/2
மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு – தேவா-சம்:2243/1
மத்த யானையின் ஈர் உரி மூடிய
அத்தனே அணி ஆலவாயாய் பணி – தேவா-சம்:3299/1,2
மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டு அமணர் – தேவா-சம்:3436/1
மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்று இவர்கள் – தேவா-சம்:3447/1
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை – தேவா-சம்:3871/1
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3

மேல்


மூடியனே (1)

கொலை ஆர் கரியின் உரி மூடியனே
மலை ஆர் சிலையா வளைவித்தவனே – தேவா-சம்:1711/1,2

மேல்


மூடு (7)

முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/2
மொட்டை அமண் ஆதர் துகில் மூடு விரி தேரர் – தேவா-சம்:1839/1
மூடு உருவம் உகந்தார் உரை அகற்றும் மூர்த்தி கோயில் – தேவா-சம்:2254/2
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் – தேவா-சம்:2427/1
மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர் – தேவா-சம்:3677/1
பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல் – தேவா-சம்:3699/2
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும் – தேவா-சம்:3993/1

மேல்


மூடும் (3)

ஊடு காண மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே – தேவா-சம்:573/4
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2159/4
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல் – தேவா-சம்:3592/1

மேல்


மூத்தபோதின்-கண் (1)

உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்-கண்
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் – தேவா-சம்:2556/1,2

மேல்


மூத்தானை (1)

மூத்தானை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியாய் – தேவா-சம்:1615/1

மேல்


மூதாதை (1)

குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2550/3

மேல்


மூதார் (1)

மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம் நான்கு அருள் செய்த – தேவா-சம்:738/3

மேல்


மூது (3)

மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே – தேவா-சம்:1507/4
மூது அணி முப்புரத்து எண்ணிலோர்களை – தேவா-சம்:2933/1
மூது எயில் எரி எழ முனிந்த முக்கணன் – தேவா-சம்:3021/2

மேல்


மூதுரை (1)

நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி – தேவா-சம்:862/2

மேல்


மூதூர் (12)

கல் உயர் மா கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூதூர்
நல் உயர் நான்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:436/1,2
புரக்கும் வேந்தன் சேர்தரு மூதூர் புறவமே – தேவா-சம்:1054/4
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த – தேவா-சம்:1076/3
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/3
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர்
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு – தேவா-சம்:2146/2,3
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோடு அம் தண் தராய் அமரர்_பெருமாற்கு இன்பம் – தேவா-சம்:2224/2,3
தங்கு பொழில் புறவம் கொச்சைவயம் தலை பண்டு ஆண்ட மூதூர்
கங்கை சடைமுடி மேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2225/3,4
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர்
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/2,3
மோடி புறங்காக்கும் ஊர் புறவம் சீர் சிலம்பனூர் காழி மூதூர்
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு – தேவா-சம்:2263/1,2
ஆவ என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2508/3,4
திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி – தேவா-சம்:2509/2,3
ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர்
நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சம்:2512/2,3

மேல்


மூதூரா (1)

முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/3

மேல்


மூப்பினால் (1)

மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ – தேவா-சம்:2545/2

மேல்


மூப்பினொடு (1)

பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார் – தேவா-சம்:3587/1

மேல்


மூப்பினோடு (2)

இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன் – தேவா-சம்:2553/2
ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவை – தேவா-சம்:2557/1

மேல்


மூப்பு (3)

முத்தியர் மூப்பு இலர் ஆப்பின் உள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும் – தேவா-சம்:77/1
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி – தேவா-சம்:781/1
கேடு மூப்பு சாக்காடு கெழுமி வந்து நாள்-தொறும் – தேவா-சம்:2555/1

மேல்


மூப்பும் (1)

முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே – தேவா-சம்:3249/4

மேல்


மூர்க்கன் (1)

மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யாநின்ற மொய்ம்பு அதே – தேவா-சம்:2776/4

மேல்


மூர்க்கு (1)

முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும் – தேவா-சம்:2885/2

மேல்


மூர்த்தி (13)

முறை ஆர் தட கை அடர்த்த மூர்த்தி தன் – தேவா-சம்:246/2
மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய – தேவா-சம்:449/1,2
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி
அன்னம் கன்னி பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே – தேவா-சம்:455/3,4
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே – தேவா-சம்:1772/4
முடையில் ஆர் வெண் தலை கை மூர்த்தி ஆம் திரு உருவன் – தேவா-சம்:1904/2
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியை – தேவா-சம்:1979/2
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும் முது வேய் சூழ்ந்த – தேவா-சம்:2238/2
மூடு உருவம் உகந்தார் உரை அகற்றும் மூர்த்தி கோயில் – தேவா-சம்:2254/2
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது – தேவா-சம்:2543/1
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால் – தேவா-சம்:2718/3
முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே – தேவா-சம்:3249/4
நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே – தேவா-சம்:3359/4
முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/3,4

மேல்


மூர்த்தி-தன் (1)

முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்தி-தன் தாள்களுக்கு – தேவா-சம்:2304/3

மேல்


மூர்த்தியாய் (2)

மூத்தானை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியாய்
காத்தானை கனிந்தவரை கலந்து ஆள் ஆக – தேவா-சம்:1615/1,2
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே – தேவா-சம்:3351/4

மேல்


மூர்த்தியார் (1)

முறிபட வரையிடை அடர்த்த மூர்த்தியார்
கறை படு பொழில் மதி தவழ் கருக்குடி – தேவா-சம்:3027/2,3

மேல்


மூர்த்தியும் (1)

முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும்
கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்-தனுள் – தேவா-சம்:2885/2,3

மேல்


மூர்த்தியை (4)

மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள் – தேவா-சம்:477/2
மூர்த்தியை நாடி காண ஒணாது முயல் விட்டு ஆங்கு – தேவா-சம்:1055/2
முனிதனை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை
நனிதனை நல்லவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1614/2,3
முளை எரி ஆய மூர்த்தியை தீர்த்தம் முக்கண் எம் முதல்வனை முத்தை – தேவா-சம்:4087/2

மேல்


மூர்த்தியோ (1)

முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான் – தேவா-சம்:1241/2

மேல்


மூரல் (3)

மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒருபாகம் – தேவா-சம்:190/1
மூரல் வெண் மதி சூடும் முடி உடை – தேவா-சம்:619/1
மூரல் வெண் முறுவல் நகு மொய் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1481/3

மேல்


மூரி (6)

முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த – தேவா-சம்:424/3
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி – தேவா-சம்:474/2
மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:572/4
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே – தேவா-சம்:1406/4
படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள் – தேவா-சம்:2979/3
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே மூரி ஆமை அணிந்த முதல்வரே – தேவா-சம்:4027/1

மேல்


மூல (1)

மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:577/4

மேல்


மூலம் (2)

மூலம் ஆய முதலவன்தானே – தேவா-சம்:2846/4
மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான் – தேவா-சம்:3457/3

மேல்


மூலனை (1)

மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய – தேவா-சம்:2036/3

மேல்


மூவர் (4)

மூவர் ஆய முதல்வர் முறையாலே – தேவா-சம்:284/1
மூவர் ஆய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:570/4
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே – தேவா-சம்:1769/4
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ – தேவா-சம்:3639/1

மேல்


மூவர்க்கு (2)

மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் – தேவா-சம்:743/2
அடையார் புரம் வேவ மூவர்க்கு அருள்செய்த – தேவா-சம்:4157/3

மேல்


மூவர்கட்கு (1)

புரத்தார் பொடிபட தன் அடி பணி மூவர்கட்கு ஓவா – தேவா-சம்:114/2

மேல்


மூவர்தாம் (1)

முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்தி-தன் தாள்களுக்கு – தேவா-சம்:2304/3

மேல்


மூவராயினும் (1)

மூவராயினும் முக்கண்ண நின் அருள் – தேவா-சம்:4165/1

மேல்


மூவரில் (1)

முத்தியாய் மூவரில் முதல்வனாய் நின்றவன் – தேவா-சம்:3099/2

மேல்


மூவரிலும் (1)

மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள் – தேவா-சம்:477/2

மேல்


மூவரும் (2)

மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி – தேவா-சம்:449/1
மூவரும் இவர் என்னவும் முதல்வரும் இவர் என்னவும் – தேவா-சம்:2318/3

மேல்


மூவருள் (1)

முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான் – தேவா-சம்:3046/1

மேல்


மூவா (9)

மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/3
முடி கொள் சடையர் முளை வெண் மதியர் மூவா மேனி மேல் – தேவா-சம்:767/1
முலையார் அணி பொன் முளை வெண் நகையார் மூவா மதியினார் – தேவா-சம்:778/3
மூவா வண்ணர் முளை வெண் பிறையர் முறுவல் செய்து இங்கே – தேவா-சம்:793/1
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/3
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை மூவா
பழங்கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியா கொண்டு – தேவா-சம்:1415/1,2
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2157/4
முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து – தேவா-சம்:2815/1
தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா – தேவா-சம்:4059/3

மேல்


மூவாத (2)

மூவாத பல் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:124/4
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே – தேவா-சம்:1413/4

மேல்


மூவாதா (1)

மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா – தேவா-சம்:4059/2,3

மேல்


மூவார் (1)

மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் – தேவா-சம்:743/2

மேல்


மூழ்க (4)

கடை நெடு மாட கடி அரண் மூன்றும் கனல் மூழ்க
தொடை நவில்கின்ற வில்லினன் அந்தி சுடுகானில் – தேவா-சம்:1085/1,2
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்க
கணை துரந்து அடு திறல் காலன் செற்ற – தேவா-சம்:1188/2,3
எரித்தவன் முப்புரம் எரியில் மூழ்க
தரித்தவன் கங்கையை தாழ் சடை மேல் – தேவா-சம்:1218/1,2
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார் – தேவா-சம்:2673/1,2

மேல்


மூழ்கவே (1)

பார்த்ததுவும் அரணம் படர் எரி மூழ்கவே – தேவா-சம்:2295/4

மேல்


மூழ்கி (10)

துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி தொடர்ந்த சிந்தை – தேவா-சம்:85/3
துறை பல சுனை மூழ்கி மலர் சுமந்து ஓடி – தேவா-சம்:1275/1
குளம் அணல் உற மூழ்கி வழிபடல் குணமே – தேவா-சம்:1310/4
செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி – தேவா-சம்:1822/2,3
கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே – தேவா-சம்:2143/3,4
தொண்டர் தண் கயம் மூழ்கி துணையலும் சாந்தமும் புகையும் – தேவா-சம்:2466/1
முந்தி வந்து புரோதயம் மூழ்கி முனிகள் பலர் – தேவா-சம்:2705/1
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும் – தேவா-சம்:3074/2
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3

மேல்


மூழ்கிட (1)

முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை – தேவா-சம்:2581/3

மேல்


மூழ்கிடாதே (1)

முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2331/3,4

மேல்


மூழ்கிய (1)

முலை தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம் – தேவா-சம்:1251/1

மேல்


மூழ்கிறீர் (1)

இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ – தேவா-சம்:2543/2

மேல்


மூழ்கு (1)

நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர் – தேவா-சம்:788/1

மேல்


மூழ்கும் (1)

முளி வெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய் – தேவா-சம்:792/1

மேல்


மூள (1)

முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1

மேல்


மூளும் (1)

காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே – தேவா-சம்:3526/4

மேல்


மூளை (2)

மூளை தலை கொண்டு அடியார் ஏத்த பொடியா மதிள் எய்தார் – தேவா-சம்:727/2
மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம் – தேவா-சம்:3550/2

மேல்


மூன்றாய் (2)

ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய்
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் – தேவா-சம்:109/1,2
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி காலமாய் குணங்கள் மூன்றாய்
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/1,2

மேல்


மூன்றினர் (1)

எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர் – தேவா-சம்:855/1

மேல்


மூன்றினான் (1)

அண்ணல் கண் ஓர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ – தேவா-சம்:3364/3

மேல்


மூன்றினையும் (1)

சிலை மலி வெம் கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும்
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3433/2,3

மேல்


மூன்று (72)

வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான் – தேவா-சம்:91/2
மேவார் புரம் மூன்று அட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:250/3
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே – தேவா-சம்:254/4
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:284/4
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:289/4
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே – தேவா-சம்:509/2
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய் – தேவா-சம்:509/3
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:509/4
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/3
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மா மலையான்மடந்தை – தேவா-சம்:691/1
குல வெம் சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல் – தேவா-சம்:726/1
தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால் – தேவா-சம்:739/1
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/3
எய்யா வென்றி தானவர் ஊர் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1047/1
அரவு ஆர் அரையா அவுணர் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:1102/3
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த – தேவா-சம்:1131/3
போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான் – தேவா-சம்:1165/2
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை – தேவா-சம்:1169/3
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/2
கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம் – தேவா-சம்:1252/3
எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
மூன்று காலமும் தோன்ற நின்றனை – தேவா-சம்:1382/41
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் – தேவா-சம்:1415/3
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
வரம் திகழும் அவுணர் மா நகர் மூன்று உடன் மாய்ந்து அவிய – தேவா-சம்:1428/1
செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர் – தேவா-சம்:1515/1
முன்னு மாடம் மதில் மூன்று உடனே எரியாய் விழ – தேவா-சம்:1553/1
தெரிந்தவன் புரம் மூன்று உடன் மாட்டிய சேவகன் – தேவா-சம்:1563/1
விண்டார்கள்-தம் புரம் மூன்று உடனே வேவ – தேவா-சம்:1606/2
சொல்லானை சுடு கணையால் புரம் மூன்று எய்த – தேவா-சம்:1607/1
அயில் ஆரும் அம்பதனால் புரம் மூன்று எய்து – தேவா-சம்:1634/1
மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய – தேவா-சம்:1669/3
சிறவார் புரம் மூன்று எரிய சிலையில் – தேவா-சம்:1721/1
முன்னம் இரு_மூன்று சமயங்கள் அவை ஆகி – தேவா-சம்:1779/1
சிலை அதுவே சிலை ஆக திரிபுரம் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1901/1
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவிய – தேவா-சம்:1953/3
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் – தேவா-சம்:2054/1
சிலை உய்த்த வெம் கணையால் புரம் மூன்று எரித்தீர் திறல் அரக்கன் – தேவா-சம்:2077/1
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/3
தண் முத்து அரும்ப தடம் மூன்று உடையான்-தனை உன்னி – தேவா-சம்:2126/1
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2136/4
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2144/4
புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியும் மானும் – தேவா-சம்:2250/2
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் – தேவா-சம்:2401/3
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் – தேவா-சம்:2431/2
கண்கள் மூன்று உடைய எம் கருத்தர் காழி சேர்-மினே – தேவா-சம்:2522/4
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து – தேவா-சம்:2698/1
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால் – தேவா-சம்:2718/3
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான் – தேவா-சம்:2726/1
கொண்ட கையான் புரம் மூன்று எரித்த குழகன் இடம் – தேவா-சம்:2736/2
விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான் – தேவா-சம்:2775/3
முன்னம் தாவி அடி மூன்று அளந்தவன் நான்முகன் – தேவா-சம்:2788/3
திரியும் மூன்று புரமும் எரித்து திகழ் வானவர்க்கு – தேவா-சம்:2794/1
தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் – தேவா-சம்:2808/3
விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய் – தேவா-சம்:2911/1
வேதனை விரவலர் அரணம் மூன்று எய்த – தேவா-சம்:3009/3
அரும் திறல் அவுணர்-தம் அரணம் மூன்று எய்த – தேவா-சம்:3013/3
பெரிய புரம் மூன்று எரிசெய்தானே – தேவா-சம்:3239/2
கண்ணும் மூன்று உடையார் கடல் காழியுள் – தேவா-சம்:3260/3
கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3278/1
நாட்டம் மூன்று உடையாய் உரைசெய்வன் நான் – தேவா-சம்:3298/2
மலையினான் மருவார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3312/2
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய் – தேவா-சம்:3343/1
காணும் கண்ணு மூன்று உடை கறை கொள் மிடறன் அல்லனே – தேவா-சம்:3366/4
போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா – தேவா-சம்:3453/3
சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான் – தேவா-சம்:3466/2
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும் – தேவா-சம்:3698/3
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும் – தேவா-சம்:4119/3
அடையலர் தொல் நகர் மூன்று எரித்து அன்ன – தேவா-சம்:4133/1

மேல்


மூன்றுடன் (1)

மறத்தால் மதில் மூன்றுடன் மாண்பு அழித்த – தேவா-சம்:1666/2

மேல்


மூன்றுபுரம் (1)

முனம் ஒரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்க சரம் முன் தெரிந்த அவுணர் – தேவா-சம்:2405/3

மேல்


மூன்றும் (57)

நீரின் மல்கு சடையன் விடையன் அடையார் தம் அரண் மூன்றும்
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய – தேவா-சம்:15/1,2
பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும்
எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/1,2
மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும்
விண்ணும் முழுது ஆனான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:111/3,4
மலையதனார் உடைய மதில் மூன்றும்
சிலை-அதனால் எரித்தார் திருப்புன்கூர் – தேவா-சம்:290/1,2
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன் – தேவா-சம்:317/1
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் – தேவா-சம்:349/2
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த – தேவா-சம்:449/3
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார் – தேவா-சம்:488/2
கண்ணு மூன்றும் உடையது அன்றி கையினில் வெண் மழுவும் – தேவா-சம்:509/1
கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெம் கணையால் – தேவா-சம்:565/1
அடையார்-தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த – தேவா-சம்:701/1
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர் – தேவா-சம்:702/1
ஆறு ஆர் சடையார் அயில் வெம் கணையால் அவுணர் புரம் மூன்றும்
சீறா எரி செய் தேவர் பெருமான் செம் கண் அடல் வெள்ளை – தேவா-சம்:759/2,3
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில் – தேவா-சம்:882/2
அடையார் புரம் மூன்றும் அனல்-வாய் விழ எய்து – தேவா-சம்:893/1
பாரோர் தொழ விண்ணோர் பணிய மதில் மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க்கு அருள் செய்தான் – தேவா-சம்:906/1,2
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழ எய்த – தேவா-சம்:915/3
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான் – தேவா-சம்:952/2
நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த – தேவா-சம்:960/2
கொலை வரையாத கொள்கையர்-தங்கள் மதில் மூன்றும்
சிலை வரை ஆக செற்றனரேனும் சிராப்பள்ளி – தேவா-சம்:1062/1,2
கடை நெடு மாட கடி அரண் மூன்றும் கனல் மூழ்க – தேவா-சம்:1085/1
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண – தேவா-சம்:1115/3
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ – தேவா-சம்:1124/1
வெள்ளம் அது சடை மேல் கரந்தான் விரவார் புரங்கள் மூன்றும்
கொள்ள எரி மடுத்தான் குறைவு இன்றி உறை கோயில் – தேவா-சம்:1125/1,2
பற்றலர் திரிபுரம் மூன்றும் வேவ – தேவா-சம்:1183/3
உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1192/3,4
காட்டினை நாட்டம் மூன்றும் ஆக கோட்டினை – தேவா-சம்:1382/8
போர் இசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில் – தேவா-சம்:1386/2
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி – தேவா-சம்:1418/1
விண்டவர் புரம் மூன்றும் வெம் கணை ஒன்றினால் அவிய – தேவா-சம்:1435/3
கடையே போய் மூன்றும் கொண்டான் கலி கச்சியுள் – தேவா-சம்:1594/2
ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள் – தேவா-சம்:1838/3
விண்டார் புரம் மூன்றும் எரித்த விமலன் – தேவா-சம்:1842/1
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில் – தேவா-சம்:1876/2
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும்
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே – தேவா-சம்:1886/3,4
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ண – தேவா-சம்:1913/1
வேதித்தார் புரம் மூன்றும் வெம் கணையால் வெந்து அவிய – தேவா-சம்:1936/1
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர் விடை ஆர் கொடியினீர் – தேவா-சம்:2073/2
சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர் – தேவா-சம்:2082/3
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2290/1
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து – தேவா-சம்:2493/1
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழ சரம் அது துரந்து – தேவா-சம்:2501/2
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும்
இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள – தேவா-சம்:2642/1,2
பொருந்தலர்-தம் புரம் மூன்றும் எய்து புனவாயிலில் – தேவா-சம்:2916/3
வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே – தேவா-சம்:3206/4
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் – தேவா-சம்:3486/2
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய – தேவா-சம்:3496/3
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/2
ஏ ஆரும் வெம் சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த – தேவா-சம்:3508/3
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும்
ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே – தேவா-சம்:3891/3,4
அரவு ஒலி வில் ஒலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும்
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/1,2
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/2
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும்
கொலையிடை செம் தீ வெந்து அற கண்ட குழகனார் கோயிலது என்பர் – தேவா-சம்:4074/1,2
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/3

மேல்


மூன்றுமாய் (1)

மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய்
நாவில் நாலர் உடல் அஞ்சினர் ஆறர் ஏழோசையர் – தேவா-சம்:1538/1,2

மேல்


மூன்றை (1)

வென்றாய் புரம் மூன்றை வெண் நாவலுளே – தேவா-சம்:1715/3

மேல்


மூன்றையும் (5)

கறுத்தான் கனலால் மதில் மூன்றையும் வேவ – தேவா-சம்:322/1
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்க – தேவா-சம்:1188/2
புதைத்தவன் நெடு நகர் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3045/3,4
திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார் – தேவா-சம்:3773/2
திரியும் புரம் மூன்றையும் செம் தழல் உண்ண – தேவா-சம்:4152/1

மேல்


மூன்றொடு (1)

ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய் – தேவா-சம்:2424/1

மேல்