நொ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நொங்க (1)

திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே – தேவா-சம்:3528/3

மேல்


நொச்சியே (1)

நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம் – தேவா-சம்:1591/1

மேல்


நொடி (6)

நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி – தேவா-சம்:1118/2
மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே – தேவா-சம்:1408/4
நொடி ஒர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆம் அவர் நோக்கும் – தேவா-சம்:2488/1
ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி
காமனார் உடல் கெட காய்ந்த எம் கண்நுதல் – தேவா-சம்:3152/2,3
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1
அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில் – தேவா-சம்:3727/1

மேல்


நொடிந்த (1)

நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி – தேவா-சம்:862/2

மேல்


நொடிமையினார் (1)

உள்வேர் போல நொடிமையினார் திறம் – தேவா-சம்:582/1

மேல்


நொடிய (1)

வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் – தேவா-சம்:3529/2

மேல்


நொடியில் (1)

நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில்
வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த – தேவா-சம்:3497/2,3

மேல்


நொடியினில் (1)

ஒன்றிய திரிபுரம் ஒரு நொடியினில் எரி – தேவா-சம்:1342/2

மேல்


நொந்த (1)

நொந்த சுடலை பொடி நீறு அணிவார் நுதல் சேர் கண்ணினார் – தேவா-சம்:758/1

மேல்


நொய்ம் (1)

நொய்ம் பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார் – தேவா-சம்:1916/1

மேல்


நொய்யது (1)

நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1

மேல்


நொய்யன் (1)

ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:25/1

மேல்


நொய்யன (1)

நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/2

மேல்