நு – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகர் 8
நுகர்தரு 1
நுகர்ந்த 1
நுகர்ந்தவன் 1
நுகர்ந்தான் 1
நுகர்பவர் 1
நுகர்பவன் 2
நுகர்வு 1
நுகர்வோர் 1
நுகரா 1
நுகராது 1
நுகரும் 2
நுங்கள் 2
நுடங்கு 3
நுடங்குவ 1
நுண் 32
நுண்_இடை 1
நுண்_இடையாள் 1
நுண்ணிதாய் 1
நுண்ணியர் 1
நுண்ணியான் 1
நுண்பு 1
நுண்பொருள் 1
நுணங்கு 2
நுணங்கும் 1
நுணுகுங்களே 1
நுதல் 39
நுதல்_கண்ணவன் 1
நுதலா 1
நுதலாய் 1
நுதலார் 1
நுதலாரே 1
நுதலாள் 3
நுதலான் 10
நுதலானும் 1
நுதலி 1
நுதலிடை 1
நுதலியொடு 1
நுதலினர் 2
நுதலினார் 2
நுதலினான் 1
நுதலோடு 1
நுதி 1
நுதியால் 2
நுந்தி 4
நுந்தும் 1
நுபுர 1
நும் 15
நும்-தம் 1
நும்-தமை 1
நும்மை 1
நுமக்கு 1
நுரை 8
நுரைகள் 1
நுரைத்து 1
நுழை 5
நுழைதரு 1
நுழைந்து 2
நுழைய 1
நுழையும் 1
நுழைவித்து 1
நுளைச்சியர் 1
நுன் 1
நுனி 1
நுனை 6
நுனைய 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நுகர் (8)

நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி – தேவா-சம்:156/1
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே – தேவா-சம்:210/4
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3
நோயும் பிணியும் அரும் துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:642/1
நோற்றலாரேனும் வேட்டலாரேனும் நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலை – தேவா-சம்:839/1
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் – தேவா-சம்:1272/1
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி – தேவா-சம்:3418/1
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் – தேவா-சம்:3617/2

மேல்


நுகர்தரு (1)

செம் கனி நுகர்தரு சிவபுரமே – தேவா-சம்:1215/4

மேல்


நுகர்ந்த (1)

வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர் – தேவா-சம்:1780/1,2

மேல்


நுகர்ந்தவன் (1)

ஞாலத்தை நுகர்ந்தவன் தானும் – தேவா-சம்:412/1

மேல்


நுகர்ந்தான் (1)

ஆலவிடம் நுகர்ந்தான் அவன்-தன் அடியே பரவி – தேவா-சம்:1172/2

மேல்


நுகர்பவர் (1)

கோசரம் நுகர்பவர் கொழுகிய துவர் அன துகிலினர் – தேவா-சம்:3710/1

மேல்


நுகர்பவன் (2)

கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில் – தேவா-சம்:228/3
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ் – தேவா-சம்:1350/2

மேல்


நுகர்வு (1)

ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும் – தேவா-சம்:3709/2

மேல்


நுகர்வோர் (1)

பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4

மேல்


நுகரா (1)

நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4

மேல்


நுகராது (1)

படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான் – தேவா-சம்:665/2

மேல்


நுகரும் (2)

செடி நுகரும் சமணர்களும் சீவரத்த சாக்கியரும் – தேவா-சம்:665/1
பொடி நுகரும் சிறு தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாக – தேவா-சம்:665/3

மேல்


நுங்கள் (2)

வீடும் நுங்கள் வினைகளே – தேவா-சம்:2682/4
நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4

மேல்


நுடங்கு (3)

வடம் கெட நுடங்கு உண இடந்த இடை அல்லி – தேவா-சம்:1794/1
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் – தேவா-சம்:3530/1
கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3530/4

மேல்


நுடங்குவ (1)

தடம் கடல் தொடர்ந்து உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால் – தேவா-சம்:3530/3

மேல்


நுண் (32)

மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:36/4
நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் – தேவா-சம்:47/2
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற – தேவா-சம்:98/2
மெய்யின் மாசர் விரி நுண் துகில் இலார் – தேவா-சம்:314/1
நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/2
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும் – தேவா-சம்:551/3
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
மின் திரண்டு அன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமா பேணி – தேவா-சம்:831/3
கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம் – தேவா-சம்:1076/2
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும் – தேவா-சம்:1129/1
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால் – தேவா-சம்:1170/1
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/2
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/2
துவர் கொண்டன நுண் துகில் ஆடையரும் – தேவா-சம்:1697/2
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2486/4
பஞ்சி நுண் துகில் அன்ன பைம் கழல் சேவடி உடையார் – தேவா-சம்:2489/1
வஞ்சி நுண்_இடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2489/4
பஞ்சி ஆரும் மெல் அடி பணைத்த கொங்கை நுண் இடை – தேவா-சம்:2564/3
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு – தேவா-சம்:2804/1
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
நுண் இடை பேர் அல்குல் நூபுர மெல் அடி – தேவா-சம்:3075/1
வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம் – தேவா-சம்:3076/1
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு – தேவா-சம்:3275/1
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3362/2
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் – தேவா-சம்:3506/3
கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3522/2
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே – தேவா-சம்:3641/4
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் – தேவா-சம்:3983/1
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே – தேவா-சம்:4024/3

மேல்


நுண்_இடை (1)

வஞ்சி நுண்_இடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2489/4

மேல்


நுண்_இடையாள் (1)

தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1

மேல்


நுண்ணிதாய் (1)

நுண்ணிதாய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில் – தேவா-சம்:2455/1

மேல்


நுண்ணியர் (1)

நொடி ஒர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆம் அவர் நோக்கும் – தேவா-சம்:2488/1

மேல்


நுண்ணியான் (1)

நுண்ணியான் மிக பெரியான் நோய் உளார் வாய் உளான் – தேவா-சம்:661/1

மேல்


நுண்பு (1)

மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ – தேவா-சம்:3522/3

மேல்


நுண்பொருள் (1)

ஓதி ஆரணம் ஆய நுண்பொருள் அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி – தேவா-சம்:2009/1

மேல்


நுணங்கு (2)

நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:487/1
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை – தேவா-சம்:2450/1

மேல்


நுணங்கும் (1)

நுணங்கும் புரி_நூலர்கள் கூடி – தேவா-சம்:410/3

மேல்


நுணுகுங்களே (1)

நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே – தேவா-சம்:2787/4

மேல்


நுதல் (39)

தாள் நுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும் – தேவா-சம்:9/1
வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த – தேவா-சம்:9/3
மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:34/1
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:37/1
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர் – தேவா-சம்:225/3
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல் கண்_நுதல் விண்ணவர் ஏத்தும் – தேவா-சம்:437/3
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்_நுதல் விண்ணவன் ஊர் – தேவா-சம்:692/2
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம் – தேவா-சம்:702/2
நொந்த சுடலை பொடி நீறு அணிவார் நுதல் சேர் கண்ணினார் – தேவா-சம்:758/1
ஒண் நுதல் உமையை ஒர்பாகம் வைத்த – தேவா-சம்:1205/3
கண்_நுதல் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1205/4
ஏ விளங்கும் நுதல் ஆனையும் பாகம் உரித்தனர் இன் – தேவா-சம்:1261/3
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல்
ஏ இயல் கணை பிணை எதிர் விழி உமையவள் – தேவா-சம்:1326/1,2
பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும் – தேவா-சம்:1360/1
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
விழிக்கும் நுதல் மேல் ஒரு வெண் பிறை சூடி – தேவா-சம்:1844/1
ஒண் மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான் உறை கோயில் – தேவா-சம்:1987/2
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1
நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி – தேவா-சம்:2215/3
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் – தேவா-சம்:2540/3
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க – தேவா-சம்:2674/2
கந்தம் நாறும் புனல் காவிரி தென்கரை கண் நுதல்
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2768/1,2
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல்
பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா – தேவா-சம்:2802/1,2
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல்
குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால் – தேவா-சம்:2821/1,2
சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க – தேவா-சம்:3412/2
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/2
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2
வில் பொலி நுதல் கொடி இடை கணிகைமார் கவரும் வேதவனமே – தேவா-சம்:3614/4
ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3631/4
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் – தேவா-சம்:3745/1
காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/4
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர் – தேவா-சம்:4082/2
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1

மேல்


நுதல்_கண்ணவன் (1)

காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4

மேல்


நுதலா (1)

விண் நுதலா தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி – தேவா-சம்:1899/3

மேல்


நுதலாய் (1)

கண் ஆரும் நுதலாய் கதிர் சூழ் ஒளி மேனியின்-மேல் – தேவா-சம்:3388/1

மேல்


நுதலார் (1)

கண் கொள் நுதலார் கறை கொள் மிடற்றார் கரியின் உரி தோலார் – தேவா-சம்:756/1

மேல்


நுதலாரே (1)

வசை விளங்கும் வடி சேர் நுதலாரே – தேவா-சம்:276/4

மேல்


நுதலாள் (3)

ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன் – தேவா-சம்:2206/3
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த – தேவா-சம்:2247/1
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1

மேல்


நுதலான் (10)

கண்ணியான் கண்_நுதலான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:661/4
கண்_நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை – தேவா-சம்:1121/1
கண்_நுதலான் வெண்நீற்றான் கமழ் சடையான் விடை_ஏறி – தேவா-சம்:1899/1
கண்_நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை – தேவா-சம்:1959/2
கண் ஆர் நுதலான் கனல் ஆடு இடம் ஆக – தேவா-சம்:1965/1
கா விரி கொன்றை கலந்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2204/3
கரு வரை காலில் அடர்த்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2208/3
காடு அதனில் நடம் ஆடும் கண்_நுதலான் கடம்பூரே – தேவா-சம்:2209/4
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே – தேவா-சம்:2227/4
கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே – தேவா-சம்:2231/4

மேல்


நுதலானும் (1)

கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் – தேவா-சம்:1982/1

மேல்


நுதலி (1)

அளக திரு நன்_நுதலி பங்கா அரனே என்று – தேவா-சம்:1104/3

மேல்


நுதலிடை (1)

பெண் அமர்ந்து ஒருபாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடை
கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2037/3,4

மேல்


நுதலியொடு (1)

இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3822/1

மேல்


நுதலினர் (2)

விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர்
எண்ணார் வந்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:603/1,2
கண் உறு நுதலினர் கடியது ஒர் விடையினர் கனலினர் – தேவா-சம்:3713/3

மேல்


நுதலினார் (2)

கண் ஓர்பாகம் கலந்த நுதலினார்
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய – தேவா-சம்:301/2,3
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார்
மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு – தேவா-சம்:736/2,3

மேல்


நுதலினான் (1)

கண் ஆர் நுதலினான் கயிலை கருத்தினால் – தேவா-சம்:922/2

மேல்


நுதலோடு (1)

ஒளி தரு வெண் பிறை சூடி ஒண்_நுதலோடு உடன் ஆகி – தேவா-சம்:2202/3

மேல்


நுதி (1)

மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2

மேல்


நுதியால் (2)

விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும் – தேவா-சம்:783/2
உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் – தேவா-சம்:3795/2

மேல்


நுந்தி (4)

ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி
கோல மா மிளகொடு கொழும் கனி கொன்றையும் கொண்டு கோட்டாறு – தேவா-சம்:3757/1,2
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3780/1,2
கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3781/1,2
காடு உடை பீலியும் கடறு உடை பண்டமும் கலந்து நுந்தி
ஓடு உடை காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3782/2,3

மேல்


நுந்தும் (1)

பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும்
அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3806/3,4

மேல்


நுபுர (1)

விண்டு அலர் பொழில் அணிவு ஏண் நுபுர தரன் – தேவா-சம்:1371/1

மேல்


நும் (15)

வேதியனை தொழ நும் வினை ஆன வீடுமே – தேவா-சம்:1161/4
பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே – தேவா-சம்:1491/4
இருந்தானை ஏத்து-மின் நும் வினை ஏகவே – தேவா-சம்:1582/4
பதியானை பாடு-மின் நும் வினை பாறவே – தேவா-சம்:1584/4
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/4
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/4
ஏற்றானை ஏத்து-மின் நும் இடர் ஏகவே – தேவா-சம்:1601/4
நாதனை ஏத்து-மின் நும் வினை நையவே – தேவா-சம்:1603/4
ஊரானை ஏத்து-மின் நும் இடர் ஒல்கவே – தேவா-சம்:1605/4
நல்லானை ஏத்து-மின் நும் இடர் நையவே – தேவா-சம்:1607/4
சிந்தி-மின் நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே – தேவா-சம்:2300/4
ஆள் அதுவாக அடைந்து உய்ம்-மின் நும் வினை – தேவா-சம்:2853/3
மாலைகொண்டு ஏத்தி வாழும் நும்
பந்தம் ஆர் வினை பாறிடுமே – தேவா-சம்:2855/3,4
தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே – தேவா-சம்:3311/4
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4

மேல்


நும்-தம் (1)

நும்-தம் மேல்வினை ஓட வீடுசெய் – தேவா-சம்:2849/3

மேல்


நும்-தமை (1)

பக்கம் நும்-தமை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் – தேவா-சம்:1495/1

மேல்


நும்மை (1)

உண்கிலாமை செய்து நும்மை உய்த்து அழிப்பதன் முனம் – தேவா-சம்:2522/2

மேல்


நுமக்கு (1)

சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு
ஏறு சுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2520/1,2

மேல்


நுரை (8)

நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி – தேவா-சம்:156/1
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் – தேவா-சம்:236/3
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர் – தேவா-சம்:1197/3
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ் – தேவா-சம்:1350/2
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
தண்ணிது ஆய வெள் அருவி சலசல நுரை மணி ததும்ப – தேவா-சம்:2455/3
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரை வாரி – தேவா-சம்:2668/2
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3

மேல்


நுரைகள் (1)

பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி – தேவா-சம்:3758/1

மேல்


நுரைத்து (1)

காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3

மேல்


நுழை (5)

மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை – தேவா-சம்:1305/1
கழை நுழை புனல் பெய்த கமழ் சடைமுடியன் – தேவா-சம்:1305/2
குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வது ஒர் – தேவா-சம்:1305/3
இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1305/4
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4

மேல்


நுழைதரு (1)

நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் – தேவா-சம்:4125/3

மேல்


நுழைந்து (2)

கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி – தேவா-சம்:1396/3
துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து – தேவா-சம்:3789/3

மேல்


நுழைய (1)

கிளர் இளம் உழை நுழைய கிழிதரு பொழில் புகலூரில் – தேவா-சம்:2469/2

மேல்


நுழையும் (1)

போழ்நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2817/4

மேல்


நுழைவித்து (1)

தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து
வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர் – தேவா-சம்:3935/2,3

மேல்


நுளைச்சியர் (1)

மாழை ஒண் கண் வளை கை நுளைச்சியர் வண் பூம் – தேவா-சம்:1877/3

மேல்


நுன் (1)

நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு – தேவா-சம்:515/1

மேல்


நுனி (1)

பவழ நுனி விரலால் பைய ஊன்றி பரிந்தாரும் – தேவா-சம்:489/2

மேல்


நுனை (6)

வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் – தேவா-சம்:712/3
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் – தேவா-சம்:1901/2
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை
அடைகிலாத வண்ணம் அருளாய் உன் அடியவர்க்கே – தேவா-சம்:2035/3,4
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4
இலை நுனை வேல் படை எம் இறையை – தேவா-சம்:2844/2
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1

மேல்


நுனைய (1)

இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3

மேல்