தை – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


தைத்தனனே (1)

பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே
தாது அவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினை அது அரித்தனனே – தேவா-சம்:4014/2,3

மேல்


தைப்பூசம் (2)

தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1975/4
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த – தேவா-சம்:2074/2

மேல்


தையல் (15)

தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும் – தேவா-சம்:278/3
தளிரும் திகழ் மேனி தையல் பாகமாய் – தேவா-சம்:918/3
தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில் – தேவா-சம்:1063/3
தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம் – தேவா-சம்:1083/3
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன் – தேவா-சம்:1241/1
சரி குழல் இலங்கிய தையல் காணும் – தேவா-சம்:1243/1
தையல் பாகம் உடையார் அடையார் புரம் செற்றவர் – தேவா-சம்:1540/2
தாரானை தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய – தேவா-சம்:1605/2
தாரானை தையல் ஓர்பாகம் உடையானை – தேவா-சம்:1616/2
தையல் ஓர்கூறு உடையான் தண் மதி சேர் செம் சடையான் – தேவா-சம்:1950/1
தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர் – தேவா-சம்:2077/2
தையல் ஓர்பாகமா தண் மதி சூடிய – தேவா-சம்:3113/3
தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள் – தேவா-சம்:3370/3
தையல் ஒர்பாகம் அமர்ந்தவனை தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3922/2
தண்டொடு சூலம் தழைய ஏந்தி தையல் ஒருபாகம் – தேவா-சம்:3939/1

மேல்


தையல்-தன் (1)

தனம் அணி தையல்-தன் பாகன்-தன்னை – தேவா-சம்:1246/1

மேல்


தையலார் (3)

சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/3
தையலார் பாட்டு ஓவா சாய்க்காட்டு எம்பெருமானை – தேவா-சம்:1914/3
தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும் – தேவா-சம்:1973/3

மேல்


தையலாள் (3)

தையலாள் ஒரு பாகம் ஆய எம் – தேவா-சம்:296/3
தையலாள் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும் – தேவா-சம்:1929/1
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம் – தேவா-சம்:2814/2

மேல்


தையலாளொடு (1)

தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு – தேவா-சம்:2012/3

மேல்


தையலாளொடும் (1)

தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
ஒக்கவே எம் உரவோன் உறையும் இடம் ஆவது – தேவா-சம்:2796/1,2

மேல்


தையலை (1)

சாந்து அணி மார்பரோ தையலை வாட சதுர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:474/4

மேல்


தையலொடும் (1)

சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கை தையலொடும் தளராத வாய்மை – தேவா-சம்:38/1

மேல்


தையான் (1)

செருக்கு ஆய்ப்பு உள் தையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/4

மேல்