தூ – முதல் சொற்கள்,சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 43
தூ_மொழியை 1
தூக்கிய 1
தூங்கானை 1
தூங்கானைமாடம் 10
தூங்கி 1
தூங்கினாயே 1
தூங்கும் 2
தூசு 6
தூசுதான் 1
தூண் 1
தூண்டு 1
தூணி 2
தூதர் 2
தூதரும் 1
தூபம் 4
தூபமும் 3
தூபமொடு 1
தூபமோடு 1
தூம 1
தூமம் 2
தூய் 7
தூய்மை 5
தூய 21
தூயரே 1
தூயவன் 2
தூயன 1
தூயானை 1
தூர்த்தன் 2
தூர்த்தனை 3
தூர்ப்பன 1
தூரமாய் 1
தூரமே 1
தூவ 11
தூவவே 1
தூவி 35
தூவிய 1
தூவியே 1
தூவினார் 1
தூவு 1
தூவு-மின் 1
தூவுதல் 1
தூவும் 1
தூளி 1
தூற்ற 7
தூற்றவே 1
தூற்றிய 1
தூற்றுதல் 1
தூற்றும் 2
தூறு 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


தூ (43)

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி – தேவா-சம்:1/1
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற – தேவா-சம்:98/2
தொடர்வார் அவர் தூ நெறியாரே – தேவா-சம்:360/4
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி – தேவா-சம்:473/1
தூ மாண் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:636/4
தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும் – தேவா-சம்:743/3
தூயவன் தூ மதி சூடி எல்லாம் – தேவா-சம்:1219/2
தோடு அது அணிகுவர் சுந்தர காதினில் தூ சிலம்பர் – தேவா-சம்:1259/2
தூ விளங்கும் பொடி பூண்டது பூசிற்று துத்தி நாகம் – தேவா-சம்:1261/2
தோடு அணி மலர் கொன்றை சேர் சடை தூ மதியம் புனைந்து – தேவா-சம்:1431/1
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர் – தேவா-சம்:1477/3
துணை ஆக ஒர் தூ வள மாதினையும் – தேவா-சம்:1689/1
வளி காயம் என வெளி மன்னிய தூ
ஒளியாய் உனையே தொழுது உன்னுமவர்க்கு – தேவா-சம்:1691/2,3
விடம் நண்ணிய தூ மிடறா விகிர்தா – தேவா-சம்:1692/2
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா – தேவா-சம்:1716/2
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
தோணிபுரம் பூந்தராய் தூ நீர் சிரபுரம் புறவம் காழி – தேவா-சம்:2223/2
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2
தொக்க பொழில் கழுமலம் தூ தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர் – தேவா-சம்:2276/2
தூ நயம் கொள் திரு மேனியில் பொடி பூசி போய் – தேவா-சம்:2284/1
துன்னு தண் துறை முன்னினார் தூ நெறி பெறுவார் என – தேவா-சம்:2317/2
துன்புறும் துயரம் இலா தூ நெறி பெறுவார்களே – தேவா-சம்:2323/4
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார் – தேவா-சம்:2350/2
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூ நீர் – தேவா-சம்:2357/2
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி – தேவா-சம்:2653/1
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் – தேவா-சம்:2805/1
துடி இடை அகல் அல்குல் தூ_மொழியை – தேவா-சம்:2829/3
துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே – தேவா-சம்:2905/4
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே – தேவா-சம்:3097/3
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/3
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார் – தேவா-சம்:3273/2
தூ இலா அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3347/3
தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே – தேவா-சம்:3358/4
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை – தேவா-சம்:3648/3
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் – தேவா-சம்:3770/2
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை – தேவா-சம்:3878/1
துஞ்சு இருள் ஆடுவர் தூ முறுவல் துளங்கும் உடம்பினராய் – தேவா-சம்:3893/1
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ – தேவா-சம்:3912/1
தோணிவண்புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே – தேவா-சம்:3982/2
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:4089/3

மேல்


தூ_மொழியை (1)

துடி இடை அகல் அல்குல் தூ_மொழியை
பொடி அணி மார்புற புல்கினனே – தேவா-சம்:2829/3,4

மேல்


தூக்கிய (1)

தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர் சாக்கியர் – தேவா-சம்:2767/1

மேல்


தூங்கானை (1)

துயர் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானை மாடம் தொழு-மின்களே – தேவா-சம்:638/4

மேல்


தூங்கானைமாடம் (10)

தொடங்கும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:634/4
துணி நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:635/4
தூ மாண் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:636/4
தோன்றும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:637/4
தொல் நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:639/4
துறை சூழ் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:640/4
தொல் சீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:641/4
தோயும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:642/4
துகள் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:643/4
பெண்ணாகடத்து பெரும் கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானைமாடம் மேயான் – தேவா-சம்:644/2

மேல்


தூங்கி (1)

தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி – தேவா-சம்:563/2

மேல்


தூங்கினாயே (1)

துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது என தூங்கினாயே
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/2,3

மேல்


தூங்கும் (2)

கொக்கின் கோட்டு பைம் கனி தூங்கும் குற்றாலம் – தேவா-சம்:1072/2
கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம் – தேவா-சம்:1076/2

மேல்


தூசு (6)

தூசு ஏறிய அல்குல் துடி இடையார் துணை முலையார் – தேவா-சம்:95/3
தூசு போர்த்து உழல்வார் கையில் துற்று உணும் – தேவா-சம்:599/1
தூசு ஆர்ந்த சாக்கியரும் தூய்மை இல்லா சமணரும் – தேவா-சம்:2100/1
மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர் – தேவா-சம்:3168/1
தூசு துகில் நீள் கொடிகள் மேகமொடு தோய்வன பொன் மாட மிசையே – தேவா-சம்:3577/1
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள் – தேவா-சம்:3899/1

மேல்


தூசுதான் (1)

தூசுதான் அரை தோல் உடை கண்ணி அம் சுடர்விடு நறும் கொன்றை – தேவா-சம்:2589/1

மேல்


தூண் (1)

உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம் – தேவா-சம்:138/3

மேல்


தூண்டு (1)

தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனி பவளத்து எழிலார் வந்து – தேவா-சம்:770/2

மேல்


தூணி (2)

தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே – தேவா-சம்:4032/1

மேல்


தூதர் (2)

மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர்
ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே – தேவா-சம்:1986/3,4
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் – தேவா-சம்:2391/3

மேல்


தூதரும் (1)

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் – தேவா-சம்:3323/1

மேல்


தூபம் (4)

விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/4
பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி – தேவா-சம்:858/3
வளம் கெழுவு தீபமொடு தூபம் மலர் தூவி – தேவா-சம்:1821/3
சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம்
தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும் – தேவா-சம்:4070/1,2

மேல்


தூபமும் (3)

தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம் – தேவா-சம்:2519/3
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி – தேவா-சம்:2663/3
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி – தேவா-சம்:3783/1

மேல்


தூபமொடு (1)

வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/2

மேல்


தூபமோடு (1)

பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் – தேவா-சம்:2370/2

மேல்


தூம (1)

காமன் வேவ ஓர் தூம கண்ணினீர் – தேவா-சம்:996/1

மேல்


தூமம் (2)

முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி – தேவா-சம்:2371/3
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி – தேவா-சம்:3705/2

மேல்


தூய் (7)

மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்
தனம் ஆர்தரு சங்க கடல் வங்க திரள் உந்தி – தேவா-சம்:174/1,2
தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய்
மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த – தேவா-சம்:182/2,3
நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும் – தேவா-சம்:801/1
தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1857/1
துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1860/1
சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய்
எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய் – தேவா-சம்:3528/1,2
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய்
கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே – தேவா-சம்:3647/3,4

மேல்


தூய்மை (5)

சொல்லை ஆறி தூய்மை செய்து காமவினை அகற்றி – தேவா-சம்:537/2
துவர் சேர் கலிங்க போர்வையாரும் தூய்மை இலா சமணும் – தேவா-சம்:686/1
பேணார் தூய்மை மாசு கழியார் பேசேல் அவரோடும் – தேவா-சம்:785/2
தூசு ஆர்ந்த சாக்கியரும் தூய்மை இல்லா சமணரும் – தேவா-சம்:2100/1
தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி மிக்கு ஒளி துளங்க – தேவா-சம்:3680/3

மேல்


தூய (21)

தொங்கலானே தூய நீற்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:548/4
தூய வெள்ளை நீற்றினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:550/4
தோடு உடையான் ஒரு காதில் தூய குழை தாழ – தேவா-சம்:1112/1
துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை – தேவா-சம்:1115/1
தூயானை தூய ஆயம் மறை ஓதிய – தேவா-சம்:1597/1
தூய வெயில் நின்று உழல்வார் துவர் தோய் ஆடையார் – தேவா-சம்:2122/1
தூய விடை மேல் வருவார் துன்னார் உடைய மதில்கள் – தேவா-சம்:2344/1
துன்ன ஆடை ஒன்று உடுத்து தூய வெண்நீற்றினர் ஆகி – தேவா-சம்:2445/1
தூய மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2690/3
தூயவன் தூய வெண் நீறு மேனி மேல் – தேவா-சம்:2949/1
சுரும்பு அமர் கொன்றையும் தூய மத்தமும் – தேவா-சம்:2982/3
துளக்கம் இல்லாதன தூய தோற்றத்தன – தேவா-சம்:3071/1
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/2
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் – தேவா-சம்:3578/1
தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின் – தேவா-சம்:3589/1
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3672/4
தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே – தேவா-சம்:4024/2
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே – தேவா-சம்:4038/2
துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே – தேவா-சம்:4043/2
துன்று கொன்றை நம் சடையதே தூய கண்டம் நஞ்சு அடையதே – தேவா-சம்:4046/1
தூய மெய் திரள் அகண்டனே தோன்றி நின்ற மணி கண்டனே – தேவா-சம்:4054/3

மேல்


தூயரே (1)

சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/4

மேல்


தூயவன் (2)

தூயவன் தூ மதி சூடி எல்லாம் – தேவா-சம்:1219/2
தூயவன் தூய வெண் நீறு மேனி மேல் – தேவா-சம்:2949/1

மேல்


தூயன (1)

துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண் தோள்கள் – தேவா-சம்:2190/1

மேல்


தூயானை (1)

தூயானை தூய ஆயம் மறை ஓதிய – தேவா-சம்:1597/1

மேல்


தூர்த்தன் (2)

தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை – தேவா-சம்:3229/1
தூர்த்தன் வீரம் தொலைந்து அருள் ஆலவாய் – தேவா-சம்:3346/1

மேல்


தூர்த்தனை (3)

தூர்த்தனை செற்ற தீர்த்தன் அன்னியூர் – தேவா-சம்:1043/1
தூர்த்தனை தொலைவு செய்தீரே – தேவா-சம்:3827/2
தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர் – தேவா-சம்:3827/3

மேல்


தூர்ப்பன (1)

விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4080/4

மேல்


தூரமாய் (1)

சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு – தேவா-சம்:2520/1

மேல்


தூரமே (1)

தொண்டர் மேல் துயர் தூரமே – தேவா-சம்:629/4

மேல்


தூவ (11)

தொண்டர்கள் மா மலர் தூவ தோன்றி நின்றான் அடி சேர்வோம் – தேவா-சம்:435/4
மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரை மலர் தூவ
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:438/3,4
பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே – தேவா-சம்:981/2
நன் பொன் மலர் தூவ இன்பம் ஆகுமே – தேவா-சம்:983/2
கண்டு மலர் தூவ விண்டு வினை போமே – தேவா-சம்:985/2
வாச மலர் தூவ நேசம் ஆகுமே – தேவா-சம்:986/2
செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே – தேவா-சம்:987/2
வாச மலர் தூவ பாச வினை போமே – தேவா-சம்:1006/2
பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே – தேவா-சம்:1555/4
வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ
ஈசன் எம்பெருமானார் இனிது ஆக உறையும் இடம் – தேவா-சம்:1930/1,2
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4

மேல்


தூவவே (1)

நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே
தொல் இருக்கு மறை ஏத்து உகந்து உடன் வாழுமே – தேவா-சம்:2287/3,4

மேல்


தூவி (35)

கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி துதி செய்து – தேவா-சம்:21/3
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கை புனல் தூவி
ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி – தேவா-சம்:23/1,2
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/3
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும் – தேவா-சம்:355/3
விரை கெழு மா மலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம் – தேவா-சம்:427/4
கார் இடு மா மலர் தூவி கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:429/4
இன மலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம் – தேவா-சம்:430/4
தளை அவிழ் மா மலர் தூவி தலைவனது தாள் இணை சார்வோம் – தேவா-சம்:431/4
தட மலர் ஆயின தூவி தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:432/4
சய விரி மா மலர் தூவி தாழ் சடையான் அடி சார்வோம் – தேவா-சம்:433/4
விரி மலர் ஆயின தூவி விகிர்தனது சேவடி சேர்வோம் – தேவா-சம்:434/4
நறை கொண்ட மலர் தூவி விரை அளிப்ப நாள்-தோறும் – தேவா-சம்:656/1
தண்ண மலர் தூவி தாள்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:934/3
நின்று மலர் தூவி இன்று முதுகுன்றை – தேவா-சம்:1003/1
தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு – தேவா-சம்:1764/1
வளம் கெழுவு தீபமொடு தூபம் மலர் தூவி
நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1821/3,4
நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் – தேவா-சம்:1873/1,2
கட்டு அலர்ந்த மலர் தூவி கைதொழு-மின் பொன் இயன்ற – தேவா-சம்:1909/1
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் – தேவா-சம்:2008/1
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி
நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில் – தேவா-சம்:2162/1,2
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே – தேவா-சம்:2207/4
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
தோடு உலாம் மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2682/3
வண்ண மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2684/3
நலம் கொள் மா மலர் தூவி நாள்-தொறும் – தேவா-சம்:2687/3
கந்த மா மலர் தூவி கைதொழும் – தேவா-சம்:2688/3
தூய மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2690/3
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள் – தேவா-சம்:2813/2
தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே – தேவா-சம்:3076/4
தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல – தேவா-சம்:3154/2
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய் – தேவா-சம்:3475/2
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3568/4

மேல்


தூவிய (1)

தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:3925/1

மேல்


தூவியே (1)

கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின் – தேவா-சம்:3190/1

மேல்


தூவினார் (1)

சென்று பூம் புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே – தேவா-சம்:3998/2

மேல்


தூவு (1)

கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு எத்தனையும் – தேவா-சம்:1898/2

மேல்


தூவு-மின் (1)

நிரை ஆர் மலர் தூவு-மின் நின்றே – தேவா-சம்:361/4

மேல்


தூவுதல் (1)

சுமந்தார் மலர் தூவுதல் தொண்டே – தேவா-சம்:369/4

மேல்


தூவும் (1)

நிரக்கும் மலர் தூவும் நினைந்தே – தேவா-சம்:367/4

மேல்


தூளி (1)

தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3

மேல்


தூற்ற (7)

புத்தரும் நின்று அலர் தூற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:43/2
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற
அமைந்தான் உமையோடு உடன் அன்பாய் – தேவா-சம்:369/1,2
அல்லார் அலர் தூற்ற அடியார்க்கு அருள்செய்வான் – தேவா-சம்:913/2
நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை – தேவா-சம்:935/2
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற நின் அடி – தேவா-சம்:2013/1
தொலையாது அங்கு அலர் தூற்ற தோற்றம் காட்டி ஆட்கொண்டீர் – தேவா-சம்:2068/2
மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற மிக்க திறலோன் – தேவா-சம்:3557/1

மேல்


தூற்றவே (1)

துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே
இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2079/2,3

மேல்


தூற்றிய (1)

ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே – தேவா-சம்:1871/4

மேல்


தூற்றுதல் (1)

ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமா – தேவா-சம்:3414/2

மேல்


தூற்றும் (2)

நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் – தேவா-சம்:891/2
அறம் காட்டும் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும்
திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடை-மின் – தேவா-சம்:1915/2,3

மேல்


தூறு (1)

தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர் – தேவா-சம்:3768/1

மேல்