கெ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெட்டு 1
கெட 38
கெடல் 2
கெடில 2
கெடிலம் 2
கெடு 2
கெடுக்க 1
கெடுக்கல் 1
கெடுக்கும் 1
கெடுக 2
கெடுகிட 1
கெடுத்த 2
கெடுத்தலை 1
கெடுத்தவர் 1
கெடுத்தாய் 1
கெடுத்தானே 1
கெடுத்தானை 1
கெடுத்தீர் 2
கெடுத்தீரே 2
கெடுத்து 6
கெடுத்தோன் 1
கெடுதல் 2
கெடுப்பது 1
கெடுப்பவர் 1
கெடுப்பவற்கு 1
கெடுப்பவன் 3
கெடுப்பன 3
கெடுப்பான் 1
கெடும் 14
கெடுமன்றே 1
கெடுமே 25
கெடுவது 1
கெண்டி 9
கெண்டும் 2
கெண்டுற்று 1
கெண்டை 8
கெந்தம் 1
கெழியார் 1
கெழு 29
கெழும் 1
கெழும 2
கெழுமி 1
கெழுமிய 2
கெழுமுதல் 1
கெழுமும் 2
கெழுவி 2
கெழுவினாரவர் 1
கெழுவு 3
கெழுவும் 2
கெழுவுவர் 1
கெளிறு 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கெட்டு (1)

பிணி ஆயின கெட்டு தணிவார் உலகிலே – தேவா-சம்:1007/2

மேல்


கெட (38)

எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே – தேவா-சம்:200/4
சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி – தேவா-சம்:212/3
திகழ் துவர் உடை உடல் பொதிபவர் கெட அடியவர் மிக அருளிய – தேவா-சம்:215/2
பெரு வளியினில் அவிதர வளி கெட வியன் இடை முழுவதும் கெட – தேவா-சம்:234/2
பெரு வளியினில் அவிதர வளி கெட வியன் இடை முழுவதும் கெட
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இன மலர் – தேவா-சம்:234/2,3
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறு அங்கம் – தேவா-சம்:454/1
ஐயன் முதுகுன்றை பொய்கள் கெட நின்று – தேவா-சம்:1005/1
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன் – தேவா-சம்:1065/1
கெட மலி புகழொடு கிளர் ஒளியினரே – தேவா-சம்:1314/4
வடம் கெட நுடங்கு உண இடந்த இடை அல்லி – தேவா-சம்:1794/1
பீடினால் பெரியோர்களும் பேதைமை கெட தீது இலா – தேவா-சம்:2302/1
கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர – தேவா-சம்:2372/3
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/2
முந்தி வானவரோடும் புக வலர் முனை கெட வினையே – தேவா-சம்:2441/4
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார் – தேவா-சம்:2481/1
மிக்க காலனை வீட்டி மெய் கெட காமனை விழித்து – தேவா-சம்:2500/1
வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்தது ஓர் – தேவா-சம்:2546/3
மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று – தேவா-சம்:2574/1
தன் நலம் கெட அடர்த்து அவற்கு அருள்செய்த தலைவனார் கடல்-வாய் அ – தேவா-சம்:2634/2
நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:2680/3
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட
அரு வரையால் அடர்த்து அன்று நல்கி அயன் மால் எனும் – தேவா-சம்:2907/1,2
செல்லல் கெட சிவமுத்தி காட்டுவ – தேவா-சம்:3034/2
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின் – தேவா-சம்:3080/3
வெய்ய வன் பிணி கெட வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3145/4
காமனார் உடல் கெட காய்ந்த எம் கண்நுதல் – தேவா-சம்:3152/3
வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் – தேவா-சம்:3529/2
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான் – தேவா-சம்:3578/3
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர் நணுகு உயர் பதி – தேவா-சம்:3701/3
முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார் – தேவா-சம்:3750/3
வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே – தேவா-சம்:3750/4
உடல் கெட திரு விரல் ஊன்றினார் உறைவிடம் ஒளி கொள் வெள்ளி – தேவா-சம்:3763/2
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன் – தேவா-சம்:3986/1
புலன்கள் கெட உடன் பாடினனே பொறிகள் கெட உடன்பாடினனே – தேவா-சம்:4021/2
புலன்கள் கெட உடன் பாடினனே பொறிகள் கெட உடன்பாடினனே – தேவா-சம்:4021/2
வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/2
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர் கெட நெடிய மாற்கு அருளால் – தேவா-சம்:4115/1

மேல்


கெடல் (2)

இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிதே – தேவா-சம்:1304/4
உறு வினை கெடல் அணுகுதல் குணமே – தேவா-சம்:1313/4

மேல்


கெடில (2)

கெண்டை பிறழ் தெண் நீர் கெடில வடபக்கம் – தேவா-சம்:493/2
கீதம் உமை பாட கெடில வடபக்கம் – தேவா-சம்:499/3

மேல்


கெடிலம் (2)

சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம்
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3629/3,4
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல் – தேவா-சம்:3634/1

மேல்


கெடு (2)

இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
நரை திரை கெடு தகை அது அருளினன் எழில் – தேவா-சம்:1331/3

மேல்


கெடுக்க (1)

கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே – தேவா-சம்:2712/4

மேல்


கெடுக்கல் (1)

கிழியிலார் கேண்மையை கெடுக்கல் ஆகுமே – தேவா-சம்:2947/4

மேல்


கெடுக்கும் (1)

தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே – தேவா-சம்:2249/4

மேல்


கெடுக (2)

புக்கவர் துயர் கெடுக என பூசு வெண்பொடி மேவிய – தேவா-சம்:2314/3
அடர்தரும் பிணி கெடுக என அருளுவார் அரவு அரையினார் – தேவா-சம்:2320/2

மேல்


கெடுகிட (1)

வெம் துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று வீடு எளிது ஆமே – தேவா-சம்:830/4

மேல்


கெடுத்த (2)

புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல் – தேவா-சம்:3653/3
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4117/2

மேல்


கெடுத்தலை (1)

கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை – தேவா-சம்:3621/3

மேல்


கெடுத்தவர் (1)

ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரி பொழில் மிகு திரு ஆலில் – தேவா-சம்:815/2

மேல்


கெடுத்தாய் (1)

திண் பலம் கெடுத்தாய் திகழ்கின்ற திரு களருள் – தேவா-சம்:2021/2

மேல்


கெடுத்தானே (1)

கெடுத்தானே கேழ் கிளரும் திரு காறாயில் – தேவா-சம்:1630/3

மேல்


கெடுத்தானை (1)

கெடுத்தானை கேடு இலா செம்மை உடையானை – தேவா-சம்:1641/2

மேல்


கெடுத்தீர் (2)

சாக்கிய சமண் கெடுத்தீர் உமை சார்வது – தேவா-சம்:3840/3
இலங்கை மன் இடர் கெடுத்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3860/3

மேல்


கெடுத்தீரே (2)

சாக்கிய சமண் கெடுத்தீரே
சாக்கிய சமண் கெடுத்தீர் உமை சார்வது – தேவா-சம்:3840/2,3
இலங்கை மன் இடர் கெடுத்தீரே
இலங்கை மன் இடர் கெடுத்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3860/2,3

மேல்


கெடுத்து (6)

உரை கெடுத்து அவன் ஒல்கிட – தேவா-சம்:597/2
விறல் கெடுத்து அருளினை புறவம் புரிந்தனை – தேவா-சம்:1382/33
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி – தேவா-சம்:1567/2
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து உமையொடும் – தேவா-சம்:3164/3
கெடுத்து அருள்செய்ய வல்லான் கிளர் கீதம் ஓர் நான்மறையான் – தேவா-சம்:3462/2
கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ – தேவா-சம்:3677/2

மேல்


கெடுத்தோன் (1)

சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே – தேவா-சம்:2273/4

மேல்


கெடுதல் (2)

சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/4
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4

மேல்


கெடுப்பது (1)

ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2182/3

மேல்


கெடுப்பவர் (1)

பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால் – தேவா-சம்:3801/1

மேல்


கெடுப்பவற்கு (1)

எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2511/2

மேல்


கெடுப்பவன் (3)

உரம் கெடுப்பவன் உம்பர்கள் ஆயவர்-தங்களை – தேவா-சம்:1560/1
பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன்-தனை – தேவா-சம்:1560/2
முரண் கெடுப்பவன் முப்புரம் தீ எழ செற்று முன் – தேவா-சம்:1560/3

மேல்


கெடுப்பன (3)

ஆன கெடுப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3033/4
அல்லல் கெடுப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3034/4
பீடை கெடுப்பன பின்னை நாள்-தொறும் – தேவா-சம்:3037/2

மேல்


கெடுப்பான் (1)

உன்ன வினை கெடுப்பான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1150/4

மேல்


கெடும் (14)

பரவிட கெடும் பாவமே – தேவா-சம்:597/4
கறை ஆர் மிடற்றானை கருத கெடும் வினையே – தேவா-சம்:966/4
இடர் கெடும் உயர் கதி பெறுவது திடனே – தேவா-சம்:1349/4
சொல் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:1600/4
பரவ கெடும் வல்வினை பாரிடம் சூழ – தேவா-சம்:1841/1
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை – தேவா-சம்:2542/1
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ கெடும் இடர் வினைதானே – தேவா-சம்:2628/4
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே – தேவா-சம்:2641/4
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே – தேவா-சம்:2702/4
சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2724/4
செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2888/4
வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3183/4
அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே – தேவா-சம்:3788/2
அரும் தமிழ் மாலைகள் பாடி ஆட கெடும் அருவினையே – தேவா-சம்:3798/4

மேல்


கெடுமன்றே (1)

பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே – தேவா-சம்:2599/4

மேல்


கெடுமே (25)

இலை நலி வினை இருமையும் இடர் கெடுமே – தேவா-சம்:1348/4
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடம் கெடுமே – தேவா-சம்:1427/4
திருந்து பைம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1428/4
திண்ண மாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1429/4
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1430/4
சேடர் சேர் கலி கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1431/4
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1432/4
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1433/4
கண்டவன் கலி கச்சி ஏகம்பம் காண இடர் கெடுமே – தேவா-சம்:1435/4
இணை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1689/4
இறை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1693/4
எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே – தேவா-சம்:1916/4
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே – தேவா-சம்:2207/4
நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே – தேவா-சம்:3995/2
சேரும் ஈசனை சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே – தேவா-சம்:3996/2
வெள்ளை கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4079/4
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4080/4
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4081/4
வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4082/4
வீசு மாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4083/4
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4084/4
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4085/4
விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4086/4
விளை கதிர் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4087/4
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4088/4

மேல்


கெடுவது (1)

தொழ அல்லல் கெடுவது துணிவே – தேவா-சம்:3816/4

மேல்


கெண்டி (9)

மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டி திசை எங்கும் – தேவா-சம்:110/3
வண்டு கெண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே – தேவா-சம்:539/4
பண் புனை குரல் வழி வண்டு கெண்டி
செண்பகம் அலர் பொழில் சிவபுரமே – தேவா-சம்:1210/3,4
நாறு நன் குர விரி வண்டு கெண்டி
தேறல் உண்டு எழுதரு சிவபுரமே – தேவா-சம்:1211/3,4
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1545/3
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய – தேவா-சம்:2019/1
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/4
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் – தேவா-சம்:3630/3

மேல்


கெண்டும் (2)

கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2925/3
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3941/4

மேல்


கெண்டுற்று (1)

வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே – தேவா-சம்:2748/4

மேல்


கெண்டை (8)

கெண்டை பிறழ் தெண் நீர் கெடில வடபக்கம் – தேவா-சம்:493/2
தடம் மண்டு துறை கெண்டை தாமரையின் பூ மறைய – தேவா-சம்:1985/3
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய் – தேவா-சம்:2562/3
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர – தேவா-சம்:2701/3
கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே – தேவா-சம்:2703/4
கெண்டை பாய மடுவில் உயர் கேதகை மாதவி – தேவா-சம்:2793/3
துறை கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய் – தேவா-சம்:3476/2
கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர் – தேவா-சம்:3556/3

மேல்


கெந்தம் (1)

கெந்தம் நாற கிளரும் சடை எந்தை கேதாரமே – தேவா-சம்:2705/4

மேல்


கெழியார் (1)

கெழியார் இமையோரொடு கேடு இலரே – தேவா-சம்:1698/4

மேல்


கெழு (29)

மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:60/2
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:60/3
அரை கெழு கோவண ஆடையின் மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து ஐயம் – தேவா-சம்:427/1
புரை கெழு வெண் தலை ஏந்தி போர் விடை ஏறி புகழ – தேவா-சம்:427/2
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:427/3
விரை கெழு மா மலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம் – தேவா-சம்:427/4
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/3
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/2
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் – தேவா-சம்:863/3
சீர் கெழு சிறப்பு ஓவா செய் தவ நெறி வேண்டில் – தேவா-சம்:1276/1
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1276/2
கார் கெழு நறும் கொன்றை கடவுளது இடம் வகையால் – தேவா-சம்:1276/3
பார் கெழு புகழ் ஓவா பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1276/4
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:1314/1
கெழு வாளோர் இமையார் உச்சி உமையாள் கங்கை – தேவா-சம்:1595/2
வளம் கெழு கடும் புனலொடும் சடை ஒடுங்க – தேவா-சம்:1789/1
உலம் கெழு தட கைகள் அடர்த்திடலும் அஞ்சி – தேவா-சம்:1793/2
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2206/1
கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில் – தேவா-சம்:2206/2
தமிழ் கெழு பாடல் பத்து இவை – தேவா-சம்:2997/3
தமிழ் கெழு விரகினன் தமிழ் செய் மாலையே – தேவா-சம்:3008/4
நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும் நன்கு அளித்த – தேவா-சம்:3445/3
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/4
ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு
பூமகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே – தேவா-சம்:3705/3,4
வேதியர்_அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:3711/2
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ் – தேவா-சம்:3775/3
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர் – தேவா-சம்:4121/2
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி – தேவா-சம்:4121/3

மேல்


கெழும் (1)

இன் குரல் இசை கெழும் யாழ் முரல – தேவா-சம்:1207/1

மேல்


கெழும (2)

முலை யாழ் கெழும மொந்தை கொட்ட முன் கடை மாட்டு அயலே – தேவா-சம்:684/1
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே – தேவா-சம்:731/4

மேல்


கெழுமி (1)

கேடு மூப்பு சாக்காடு கெழுமி வந்து நாள்-தொறும் – தேவா-சம்:2555/1

மேல்


கெழுமிய (2)

கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:200/2
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை – தேவா-சம்:201/3

மேல்


கெழுமுதல் (1)

கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/4

மேல்


கெழுமும் (2)

கீதத்து ஒலியும் கெழுமும் முழவோடு – தேவா-சம்:4154/3
கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர் – தேவா-சம்:4157/2

மேல்


கெழுவி (2)

நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1821/4
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/4

மேல்


கெழுவினாரவர் (1)

கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே – தேவா-சம்:2312/4

மேல்


கெழுவு (3)

வளம் கெழுவு தீபமொடு தூபம் மலர் தூவி – தேவா-சம்:1821/3
முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை – தேவா-சம்:3525/2
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி – தேவா-சம்:3623/1

மேல்


கெழுவும் (2)

விம்மும் பொழில் கெழுவும் வயல் விரி நீர் வியலூரே – தேவா-சம்:132/4
கிளர் கங்கையொடு இள வெண் மதி கெழுவும் சடை தன் மேல் – தேவா-சம்:143/3

மேல்


கெழுவுவர் (1)

கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/4

மேல்


கெளிறு (1)

கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர் – தேவா-சம்:3556/3

மேல்