ஐ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 10
ஐ_நூற்று_பத்து 1
ஐ_வாய்_அரவு 1
ஐ_இரு 1
ஐஉணர்வு 1
ஐங்கணை 2
ஐங்கணையோன் 1
ஐஞ்ஞான்கு 1
ஐந்தலை 7
ஐந்தாய் 3
ஐந்திலும் 1
ஐந்தின் 1
ஐந்தினர் 1
ஐந்தினொடு 1
ஐந்து 19
ஐந்து_எழுத்து 1
ஐந்தும் 17
ஐப்பசி 1
ஐம் 2
ஐம்புலன் 2
ஐம்புலன்கள் 2
ஐம்புலனும் 3
ஐம்பூதமாய் 1
ஐய 2
ஐயதே 1
ஐயம் 31
ஐயமாய் 1
ஐயமும் 1
ஐயர் 3
ஐயரே 1
ஐயன் 18
ஐயன்மார் 1
ஐயனார் 2
ஐயனே 13
ஐயனை 2
ஐயா 5
ஐயாற்றினை 2
ஐயாற்று 1
ஐயாற்றுள் 1
ஐயாற்றை 1
ஐயாறு 12
ஐயாறே 40
ஐயானே 1
ஐயில் 1
ஐயுற 1
ஐயுறவு 3
ஐயுறும் 1
ஐயே 4
ஐவகை 1
ஐவர் 2
ஐவரை 1
ஐவாய் 1
ஐவிரல் 1
ஐவேள்வி 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஐ (10)

அங்கம் ஆறோடும் அரு மறைகள் ஐ வேள்வி – தேவா-சம்:1920/3
ஆடல் புரியும் ஐ_வாய்_அரவு ஒன்று அரை சாத்தும் – தேவா-சம்:2117/1
கடி மலர் ஐ கணை வேளை கனல விழித்திலர் போலும் – தேவா-சம்:2175/2
தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய – தேவா-சம்:2197/3
ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம் – தேவா-சம்:2524/2
அம் கையில் ஐ விரல் அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3035/4
ஆதர் சமணரொடும் அடை ஐ துகில் போர்த்து உழலும் – தேவா-சம்:3469/1
ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3566/2
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே – தேவா-சம்:4030/3
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி – தேவா-சம்:4116/1

மேல்


ஐ_நூற்று_பத்து (1)

தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய – தேவா-சம்:2197/3

மேல்


ஐ_வாய்_அரவு (1)

ஆடல் புரியும் ஐ_வாய்_அரவு ஒன்று அரை சாத்தும் – தேவா-சம்:2117/1

மேல்


ஐ_இரு (1)

ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3566/2

மேல்


ஐஉணர்வு (1)

ஆறினார் பொய் அகத்து ஐஉணர்வு எய்தி மெய் – தேவா-சம்:3175/3

மேல்


ஐங்கணை (2)

ஐங்கணை வரி சிலையான் அநங்கனை அழகு அழித்த – தேவா-சம்:1274/3
துளவ மால்மகன் ஐங்கணை காமனை சுட விழித்தவன் நெற்றி – தேவா-சம்:2660/3

மேல்


ஐங்கணையோன் (1)

கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம் – தேவா-சம்:420/1

மேல்


ஐஞ்ஞான்கு (1)

அடி இரண்டு ஓர் உடம்பு ஐஞ்ஞான்கு இருபது தோள் தச – தேவா-சம்:2885/1

மேல்


ஐந்தலை (7)

அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண் கோவணத்தோடு அசைத்து – தேவா-சம்:418/1
தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை – தேவா-சம்:583/1
அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய – தேவா-சம்:687/3
ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான் அணி ஆரூர் – தேவா-சம்:1136/2
நால்கால் மான் மறி ஐந்தலை அரவம் – தேவா-சம்:1382/11
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான் அழல் ஐந்தலை
நாகம் நல்லார் பரவம் நயந்து அங்கு அரை ஆர்த்தவன் – தேவா-சம்:2784/1,2
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த – தேவா-சம்:2839/3

மேல்


ஐந்தாய் (3)

மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறு ஆர் சுவை ஏழ் ஓசையொடு எட்டு திசை தானாய் – தேவா-சம்:109/2,3
புவி முதல் ஐம்பூதமாய் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய் கரணம் நான்காய் – தேவா-சம்:1389/1
புவி முதல் ஐம்பூதமாய் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய் கரணம் நான்காய் – தேவா-சம்:1389/1

மேல்


ஐந்திலும் (1)

அறுத்தான் அயன்-தன் சிரம் ஐந்திலும் ஒன்றை – தேவா-சம்:322/3

மேல்


ஐந்தின் (1)

நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/2

மேல்


ஐந்தினர் (1)

மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2

மேல்


ஐந்தினொடு (1)

சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3

மேல்


ஐந்து (19)

இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து
புலம் களை கட்டவர் போற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:41/1,2
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:68/4
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடி பூசி – தேவா-சம்:451/1,2
இன்னிசை ஈர்_ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே – தேவா-சம்:1057/4
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு – தேவா-சம்:1213/1
ஆறு பதமும் ஐந்து அமர் கல்வியும் – தேவா-சம்:1382/39
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3
வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து – தேவா-சம்:1492/3
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார் – தேவா-சம்:1872/3
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து
புல நீர்மை புறம்கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார் – தேவா-சம்:2064/1,2
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே – தேவா-சம்:2284/4
கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து – தேவா-சம்:3035/1
எண்ணினார் ஈர்_ஐந்து மாலையும் இயலுமா – தேவா-சம்:3169/3
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள் – தேவா-சம்:3273/1
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அரு மறைகள் – தேவா-சம்:3792/3
ஆனிடை ஐந்து உகந்தான் அடியே பரவா அடைவோமே – தேவா-சம்:3898/4
ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:3927/3
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4136/4
தா உறாது உனது ஐந்து_எழுத்து உன்னிட – தேவா-சம்:4165/3

மேல்


ஐந்து_எழுத்து (1)

தா உறாது உனது ஐந்து_எழுத்து உன்னிட – தேவா-சம்:4165/3

மேல்


ஐந்தும் (17)

ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி உலகு ஏத்த – தேவா-சம்:141/3
வென்றவன் புலன் ஐந்தும் விளங்க எங்கும் – தேவா-சம்:1226/3
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
ஆனின் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி ஓர் – தேவா-சம்:1573/1
குன்றானை குன்று எடுத்தான் புயம் நால்_ஐந்தும் – தேவா-சம்:1587/1
சொல்லும் மாலை ஈர்_ஐந்தும் வல்லவர்க்கு – தேவா-சம்:1741/3
பொன் தொடி மடந்தையரும் மைந்தர் புலன் ஐந்தும்
செற்றவர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1784/3,4
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
பாடல் ஆய தமிழ் ஈர்_ஐந்தும் மொழிந்து உள்கி – தேவா-சம்:2145/3
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய் – தேவா-சம்:2424/1
ஆனில் அம் கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதுவும் அரவம் – தேவா-சம்:2454/2
மு அழல் நான்மறை ஐந்தும் ஆய முனி கேள்வனும் – தேவா-சம்:2884/2
அற்றம் இல் மாலை ஈர்_ஐந்தும் அஞ்சுஎழுத்து – தேவா-சம்:3041/3
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என – தேவா-சம்:3569/3
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும் – தேவா-சம்:3891/3
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம் போலும் – தேவா-சம்:3904/3
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் – தேவா-சம்:4130/3

மேல்


ஐப்பசி (1)

ஐப்பசி ஓண விழாவும் அரும் தவர்கள் – தேவா-சம்:1972/3

மேல்


ஐம் (2)

புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
அங்கு உள பூதமும் அஞ்ச ஐம் பொழில் – தேவா-சம்:3035/2

மேல்


ஐம்புலன் (2)

ஐம்புலன் நால் ஆம் அந்தக்கரணம் – தேவா-சம்:1382/17
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை – தேவா-சம்:2011/1

மேல்


ஐம்புலன்கள் (2)

பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1
ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுது உணர்ந்து ஐம்புலன்கள் செற்று – தேவா-சம்:1414/3

மேல்


ஐம்புலனும் (3)

சழிந்த சென்னி சைவ வேடம் தான் நினைத்து ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு – தேவா-சம்:575/2,3
அகன் அமர்ந்த அன்பினராய் அறு பகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞான – தேவா-சம்:1421/1
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி – தேவா-சம்:2056/3

மேல்


ஐம்பூதமாய் (1)

புவி முதல் ஐம்பூதமாய் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய் கரணம் நான்காய் – தேவா-சம்:1389/1

மேல்


ஐய (2)

ஐய அரனே பெருமான் அருள் என்று என்று ஆதரிக்க – தேவா-சம்:2248/3
ஐய நன் பொரு புனல் அம்பர் செம்பியர் – தேவா-சம்:2999/3

மேல்


ஐயதே (1)

மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/4

மேல்


ஐயம் (31)

கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பலபல கூறி – தேவா-சம்:426/2
அரை கெழு கோவண ஆடையின் மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து ஐயம்
புரை கெழு வெண் தலை ஏந்தி போர் விடை ஏறி புகழ – தேவா-சம்:427/1,2
ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:428/2
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:432/2
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி – தேவா-சம்:433/2
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/2
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே – தேவா-சம்:678/2
பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே – தேவா-சம்:680/2
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:681/2
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே – தேவா-சம்:682/2
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:683/2
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே – தேவா-சம்:684/2
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:685/2
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:686/3
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே – தேவா-சம்:687/2
சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய் கலை வவ்வுதியே – தேவா-சம்:688/2
ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:791/3
எளிவந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ள – தேவா-சம்:792/2
ஐயம் அகற்றுவான் அணி ஆப்பனூரானை – தேவா-சம்:957/3
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1534/4
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம் – தேவா-சம்:1929/2
ஐயம் ஏற்று உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2012/4
ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி – தேவா-சம்:2192/3
ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2310/3
மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும் – தேவா-சம்:2427/3
அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும் – தேவா-சம்:2531/2
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:2904/2
கூடுவர் உலகிடை ஐயம் கொண்டு ஒலி – தேவா-சம்:3024/2
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் – தேவா-சம்:3640/2
ஐயம் ஏற்பது உரைப்பது வீண் ஐயே ஆலவாய் அரன் கையது வீணையே – தேவா-சம்:4041/4

மேல்


ஐயமாய் (1)

கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயமாய்
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் – தேவா-சம்:1521/1,2

மேல்


ஐயமும் (1)

ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே – தேவா-சம்:1063/4

மேல்


ஐயர் (3)

ஐயர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:296/4
ஐயர் பாதம் அடைவார்க்கு அடையா அரு நோய்களே – தேவா-சம்:1540/4
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3292/4

மேல்


ஐயரே (1)

அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே – தேவா-சம்:259/4

மேல்


ஐயன் (18)

ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:25/1
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:77/2
உய்யல் உறுவீர்காள் ஐயன் ஆரூரை – தேவா-சம்:984/1
வெய்ய வினை தீர ஐயன் அணி ஆரூர் – தேவா-சம்:987/1
ஐயன் முதுகுன்றை பொய்கள் கெட நின்று – தேவா-சம்:1005/1
ஐயன் நன் சேவடி அதனை உள்க – தேவா-சம்:1235/3
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:1578/4
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
ஐயன் மேவிய ஆடானை – தேவா-சம்:2685/2
ஐயன் நல் அதிசயன் அயன் விண்ணோர் தொழும் – தேவா-சம்:3044/1
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் – தேவா-சம்:3190/3
ஐயன் ஆண்டகை அந்தணன் அரு மா மறைப்பொருள் ஆயினான் – தேவா-சம்:3196/2
ஐயன் அந்தணர் போற்ற இருக்கமே – தேவா-சம்:3257/4
ஐயன் சேவடியே அடைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3275/4
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3365/4
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3370/4
ஐயன் அடி சேர்பவரை அஞ்சி அடையா வினைகள் அகலும் மிகவே – தேவா-சம்:3576/4
ஐயன் மா தேவியோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3800/4

மேல்


ஐயன்மார் (1)

ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை – தேவா-சம்:1914/2

மேல்


ஐயனார் (2)

ஐயனார் அடி தொழ அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3113/4
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4094/4

மேல்


ஐயனே (13)

ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1524/4
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1525/4
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1526/4
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1527/4
ஆன் அஞ்சு ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1528/4
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1529/4
ஆதி ஆகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1530/4
அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1531/4
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1532/4
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1534/4
ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர் – தேவா-சம்:1996/3
ஐயனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3339/2
ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே – தேவா-சம்:4041/2

மேல்


ஐயனை (2)

ஐயனை புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2047/3
ஐயனை அடி பணிந்து அரற்று-மின் அடர்தரும் – தேவா-சம்:3145/3

மேல்


ஐயா (5)

ஐயா நின் அடியார்களே – தேவா-சம்:593/4
மொய் ஆர் முதுகுன்றில் ஐயா என வல்லார் – தேவா-சம்:1008/1
ஐயா என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே – தேவா-சம்:1103/4
ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகு ஆமே – தேவா-சம்:2155/4
ஐயா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3386/4

மேல்


ஐயாற்றினை (2)

அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக – தேவா-சம்:1303/2,3
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை
கலி கடிந்த கையான் கடல் காழியர் காவலன் – தேவா-சம்:1535/1,2

மேல்


ஐயாற்று (1)

அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி – தேவா-சம்:1404/1

மேல்


ஐயாற்றுள் (1)

வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள்
ஈசனை எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞான – தேவா-சம்:1818/1,2

மேல்


ஐயாற்றை (1)

அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றை
சொலும் மாலை வல்லார் துயர் வீடே – தேவா-சம்:392/3,4

மேல்


ஐயாறு (12)

ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1524/4
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1525/4
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1526/4
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1527/4
ஆன் அஞ்சு ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1528/4
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1529/4
ஆதி ஆகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1530/4
அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1531/4
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1532/4
ஆல நீழல் உளானும் ஐயாறு உடை ஐயானே – தேவா-சம்:1533/4
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1534/4
ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணி ஆர் பெருவேளூர் விளமர் தெங்கூர் – தேவா-சம்:1888/1

மேல்


ஐயாறே (40)

அலை ஆர் புனல் சேரும் ஐயாறே – தேவா-சம்:382/4
மதியம் பயில்கின்ற ஐயாறே – தேவா-சம்:383/4
அக்கின் அரையாரது ஐயாறே – தேவா-சம்:384/4
அறையும் ஒலி சேரும் ஐயாறே – தேவா-சம்:385/4
அமையா வரும் அம் தண் ஐயாறே – தேவா-சம்:386/4
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே – தேவா-சம்:387/4
அரவம் கொடு சேரும் ஐயாறே – தேவா-சம்:388/4
திரை-தன்னொடு சேரும் ஐயாறே – தேவா-சம்:389/4
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே – தேவா-சம்:390/4
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே – தேவா-சம்:391/4
அணிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1293/4
ஆர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1294/4
அரிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1295/4
ஆய்ந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1296/4
ஆனவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1297/4
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1298/4
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1299/4
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1300/4
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1301/4
அருள் உடை அடிகள்-தம் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1302/4
சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1394/4
திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1395/4
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/4
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/4
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே – தேவா-சம்:1400/4
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
மரு திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1808/4
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1809/4
வட்ட மதிலுள் திகழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1810/4
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1811/4
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1812/4
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1813/4
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1814/4
வர கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1815/4
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1816/4
மாக்கமுற நீடு பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1817/4

மேல்


ஐயானே (1)

ஆல நீழல் உளானும் ஐயாறு உடை ஐயானே – தேவா-சம்:1533/4

மேல்


ஐயில் (1)

படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2

மேல்


ஐயுற (1)

ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் – தேவா-சம்:1983/2

மேல்


ஐயுறவு (3)

ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகு ஆமே – தேவா-சம்:2155/4
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே – தேவா-சம்:2452/4
ஐயுறவு இல்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே – தேவா-சம்:3922/4

மேல்


ஐயுறும் (1)

ஐயுறும் அமணரும் அறுவகை தேரரும் – தேவா-சம்:1382/36

மேல்


ஐயே (4)

நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/3
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே
வென்றி சேர் மழுக்கொண்டு முன்காலையே வீட வெட்டிட கண்டு முன்காலையே – தேவா-சம்:4039/1,2
ஐயம் ஏற்பது உரைப்பது வீண் ஐயே ஆலவாய் அரன் கையது வீணையே – தேவா-சம்:4041/4
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே
அங்கியை திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனாரது இட கையே – தேவா-சம்:4043/3,4

மேல்


ஐவகை (1)

நான்மறை ஓதி ஐவகை வேள்வி – தேவா-சம்:1382/21

மேல்


ஐவர் (2)

ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார் – தேவா-சம்:543/3
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2

மேல்


ஐவரை (1)

ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே – தேவா-சம்:3924/4

மேல்


ஐவாய் (1)

பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம் – தேவா-சம்:45/3

மேல்


ஐவிரல் (1)

ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை – தேவா-சம்:475/2

மேல்


ஐவேள்வி (2)

அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அரு மறை நான்கும் – தேவா-சம்:460/1
வாய் அடைந்த நான்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வி
தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:519/3,4

மேல்