வை – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 21
வைக்க 1
வைக்கும் 2
வைக 1
வைகல் 1
வைகலும் 1
வைகறை 3
வைகி 15
வைகிய 5
வைகினார் 2
வைகும் 23
வைத்த 45
வைத்தது 1
வைத்தலும் 1
வைத்தன 5
வைத்தனர்-ஆல் 1
வைத்தனள் 1
வைத்தார் 3
வைத்தான் 1
வைத்திடாது 1
வைத்து 15
வைத்தேன் 1
வைது 1
வைப்ப 1
வைய 3
வையகத்தார் 5
வையகத்தில் 1
வையகத்து 9
வையகம் 3
வையத்தார் 4
வையத்தாரின் 1
வையத்து 5
வையம் 12
வையம்-வாய் 1
வையமும் 1
வையமே 1
வையவே 1
வையின் 2
வையீர் 1
வையோ 1

வை (21)

வை கலந்த நெல் பகட்டினால் தெளித்து வை மறுத்து – தேம்பா:1 15/2
வை கலந்த நெல் பகட்டினால் தெளித்து வை மறுத்து – தேம்பா:1 15/2
வெல் வை வேல் செயும் மிடல் அது உன் மிடல் அடா நானோ – தேம்பா:3 28/1
வை வாய் மணி ஆழி இட்டு பைம் பூ மலர் கிடத்தி – தேம்பா:3 60/3
காய்ந்த போது அழல் முன் வை என உன் முன் காய்ந்து எரியாதது உண்டோ கருணை – தேம்பா:6 40/1
புண் செயும் வை வாள் செய்த புண்-தனை ஆற்றும் தன்மை – தேம்பா:7 68/1
வெம் பொன் மேல் கதிர்ந்த வை வேல் கையில் ஏந்து மிக்கயலும் கபிரியல் ஆம் திரு வல்லோனும் – தேம்பா:8 62/3
உறுக்குவார் சிலர் உறைந்த வை நீக்குவார் சிலரே – தேம்பா:12 54/4
செல் முகத்து உறையின் வை வேல் செரு படை மிடைந்தது என்னோ – தேம்பா:15 48/4
உழி அறிந்து எறிக பாராய் உனது இது என்று எறிந்த வை வேல் – தேம்பா:15 84/1
தண்டு பட படு வாளியும் வாளொடு சாபமும் வை அயிலும் – தேம்பா:15 101/3
வேல் நிகர் வடி வை வாளி வில்-இடை அவன் கோத்து எய்ய – தேம்பா:16 49/1
தீ வை வேல் ஆடா வெருவி ஏங்கி திறம் குழைந்து அ – தேம்பா:16 53/1
மீ வை வாளி தொடுத்து ஒருங்கு மாய்த்தார் வியந்து எவரும் – தேம்பா:16 53/3
மறி பட்டான் மீட்க வேண்டும் மறு உணவு அடைய வை வேல் – தேம்பா:20 107/3
வங்கை இன்புற வன்னி முன் வை என அழல்வாள் – தேம்பா:23 91/4
என்ற வாசகம் எறி வை வேல் என உளம் போழ்ந்து – தேம்பா:25 6/1
கடாவினான் உருவு ஒரு வை வாள் வழி கடிதில் ஈர் உயிர் பட மது – தேம்பா:25 77/3
புரவலர் சூழ்ந்த வை வேல் பொருநரும் அமைச்சர் தாமும் – தேம்பா:27 153/2
ததை ஒளி வை வேல் வல்லோன் தாள் முனர் அழுது வீழ்ந்தாள் – தேம்பா:29 35/3
பெற பகை செகுக்கும் வை வாள் பெற்றியின் விரதம் ஓச்சி – தேம்பா:30 70/3

மேல்


வைக்க (1)

சலம் புரி வலையை வைக்க தளை படின் பிரிதல் ஆற்றா – தேம்பா:28 154/2

மேல்


வைக்கும் (2)

வான் மணி மாணிக்கம் வைக்கும் மாடமும் – தேம்பா:2 31/4
வைக்கும் ஓர் அளவில் விஞ்சை மறை நலோன் வகுத்தான் மீண்டே – தேம்பா:28 54/4

மேல்


வைக (1)

உரை உடுத்த நிகர் கடந்த ஊழி_தீ குடி வைக
புரை உடுத்த உருக்கொடு பேய் புதைத்து அலறும் நரகு அன்றோ – தேம்பா:28 79/3,4

மேல்


வைகல் (1)

மாதம் மார்கழி வைகல் ஐ_ஐந்து ஆய் – தேம்பா:10 96/1

மேல்


வைகலும் (1)

அன்பால் அணுகும் தன்மைத்து ஐம் வைகலும் வைகிய பின் – தேம்பா:10 57/3

மேல்


வைகறை (3)

தெள்ளி அம் வைகறை தெளிப்ப வாரணம் – தேம்பா:17 1/2
விண் மேல் எழு வைகறை வெம் கதிரோ – தேம்பா:22 4/1
வைகறை ஒத்து அள் இருளும் ஒளியும் இல் சிவாசிவன் உள் மயங்கி நிற்ப – தேம்பா:27 97/1

மேல்


வைகி (15)

திரு கொண்டு ஆர் ஒளி கொண்ட வானில் வைகி தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர் – தேம்பா:8 47/1
முன் நாளில் செய்த ஓர் மண்டபத்தில் வைகி முன் கொணர்க என்று – தேம்பா:17 36/3
பிறந்த நாள் துயர் ஒக்க பிறந்து பேரா துணை வைகி
சிறந்த நாள் அகலா நூல் திறம் கொண்டு ஆசை அகன்றனரே – தேம்பா:20 25/1,2
மக்கள் தங்கு வடு நீத்தவர் வைகி
சொக்கு அடங்கு சுதனை துதி பாட – தேம்பா:21 15/1,2
தட நடை வளர்ந்த பைம் பூம் தரு-இடை குடியாய் வைகி
பட நடை பொறித்த நச்சு பாந்தளின் உருவில் கான்ற – தேம்பா:22 20/2,3
கெழும் சுனை வரம்பில் வைகி கிளைத்த நோய் அழன்ற நெஞ்சான் – தேம்பா:26 96/3
ஏட்டு-இடை அன்னம் என்ன ஈன்றனள் கரத்தில் வைகி
காட்டு-இடை இருந்த தன்மை காண்கிலன் வையம் நீங்கி – தேம்பா:26 105/2,3
மண்டபத்து ஒரு நாள் வைகி மது நலம் பொழி வாய் கஞ்சம் – தேம்பா:28 1/2
கோன் உறை கோயில் வைகி கோ கணம் என்ன தோன்றின் – தேம்பா:28 65/2
அலை விரவு ஊழல் வைகி அரவின் நஞ்சு அயின்று எஞ்ஞான்றும் – தேம்பா:28 136/1
காய் அணி ஆக வாய்ந்த காவில் மீண்டு ஒரு நாள் வைகி
வாய் அணி ஆக ஓதி வகுத்து நீடு உரைத்தான் மாதோ – தேம்பா:29 1/3,4
சண்பக நிழலின் வைகி தரணி ஆள் இளவல் நல் யாழ் – தேம்பா:30 61/3
நேர் அலர் மறுத்து செம் தீ நிறைகினும் பல கால் வைகி
நேர் அலர் வனத்தில் நாமே நிகழ்ந்து அடி வைத்த பாலால் – தேம்பா:30 62/1,2
பார் நலம் துறந்து இங்கு ஆர்ந்த படிவர் எண் இன்றி வைகி
சேர் நலம் விரும்பி வானோர் சென்று வான் ஒக்கும் கானே – தேம்பா:30 63/3,4
அ பகல் மூன்றும் வைகி அனைவரும் வியப்ப செய்தான் – தேம்பா:31 82/4

மேல்


வைகிய (5)

மன்றலை முடிதர அங்கண் வைகிய
நன்று அமை முனிவரை கூட்டி நாயகன் – தேம்பா:5 44/2,3
குடி ஒத்து அலர்ந்த இருள் வைகிய கூந்தல் நல்லார் – தேம்பா:5 77/2
அன்பால் அணுகும் தன்மைத்து ஐம் வைகலும் வைகிய பின் – தேம்பா:10 57/3
அலர் வைகிய தேன் அளி பாடுவன – தேம்பா:11 76/2
மலைய முன் சிறை வைகிய மைக்குணன் – தேம்பா:20 87/2

மேல்


வைகினார் (2)

ஒண் பகல் ஒத்து ஒளிர்ந்து உவந்து வைகினார் – தேம்பா:17 8/4
பணி நிறத்து அறம் பற்றினர் வைகினார் – தேம்பா:18 56/4

மேல்


வைகும் (23)

கான் அகத்து ஒதுங்கி வைகும் கடி தவத்தோடும் இன்ன – தேம்பா:3 34/3
பொருள் தகும் நாட்டில் வைகும் பொலம் துறவு அணியும் அன்றோ – தேம்பா:4 42/4
வையகம் வைகும் வாய்ந்த மாதருள் எண்_இல் ஆசி – தேம்பா:7 6/3
வளம் படு என்-வயின் வைகும் நாதனே – தேம்பா:7 95/1
ஆறு எலாம் கடலுள் வைகும் அரிய தூய் அறத்தின் உள்ளும் – தேம்பா:9 123/1
வேறு எல்லா திருவே வைகும் விழு தவத்து இறைவ நாமே – தேம்பா:9 123/2
வாய்மையோர் புகும்-கால் கோவில் வணக்கு உரி பணியில் வைகும்
தூய்மையோர் என உள் கோட்டம் துறந்தனர் அவையின் மூத்தோன் – தேம்பா:12 73/1,2
இன்னியம் ஒலிக்கும் கோயில் இவை இவர்ந்து அங்கண் வைகும்
கன்னிய மாதர்க்கு எல்லாம் கனிந்த கை தாயாய் மீன் செய் – தேம்பா:12 96/1,2
விஞ்சு பதி கொண்ட அமரர் வைகும் கோயில் மேவிய பின் – தேம்பா:13 3/3
நிமிர்தம் பாய்ந்து முகில் பாய்ந்த நேரார் வைகும் நகர் கண்டார் – தேம்பா:15 13/4
மலை மூழ்கும் திண் தோளான் மன்னார் வைகும் அ நகருள் – தேம்பா:17 27/1
கோல் சபையாக மூவர் கொடும் துயர் குடியாய் வைகும்
பேற்சபை என்னும் கானம் பெற்று உளம் தளரா புக்கார் – தேம்பா:19 6/3,4
திரு புகழே புகழ் மறையே திருவே நூலே குடி வைகும்
மரு பொழிலே விரை பணையே வளர் யூதேய நாட்டிலிருந்து – தேம்பா:20 22/1,2
வரை வளர் மாடத்து ஏந்தல் வைகும் மா புரம் கண் ஓடி – தேம்பா:21 3/3
போது அணிந்த வனம் வைகும் அவனை தேர்ந்தேன் பொறி வென்றோய் – தேம்பா:26 158/4
உள்ளே வைகும் இ பகையோடு உடன்பட்டு எ புறமும் – தேம்பா:28 23/1
எள்ளே வைகும் பெரும் பகை சூழ்ந்து இகல் செய் முறை அரிதே – தேம்பா:28 23/2
தெள்ளே வைகும் கவின் காட்டி தீம் பால் கலந்த விடம் – தேம்பா:28 23/3
வள்ளே வைகும் உயிர்க்கு ஊட்டி வதை செய் பகை அதுவே – தேம்பா:28 23/4
பிரதம் கொண்ட தீயவர் வைகும் பெரிது ஊழல் – தேம்பா:28 125/3
குடக்கு நேர் வைகும் குணித்தனர் செப்பம் மாறி – தேம்பா:29 5/1
வாழ் அகத்து எவர் இ குன்றில் வைகும் நீர் என்று கேட்ப – தேம்பா:30 129/2
தேர் ஒரு நன்றி இல்லாமையில் தீவினை தீக்கும் பாலை என வைகும்
பார் ஒரு பூம் குளிர் சோலை என்று ஆக்கலும் பரிவு அற்று உய்வார் நரர் என்றான் – தேம்பா:32 46/3,4

மேல்


வைத்த (45)

வான் நிகர் நிறுவும் சென்னி வைத்த பொன் தசும்பின் தோற்றம் – தேம்பா:2 14/3
வான் மேல் வைத்த சுடர் கிடக்கும் வண்ண வடிவு என்பார் – தேம்பா:3 61/1
கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும் என்பார் – தேம்பா:3 61/2
நூல் மேல் வைத்த மறை விளக்கும் நுண் மாண் சுடர் என்பார் – தேம்பா:3 61/3
நால் மேல் வைத்த புகழ் விள்ளார் கொண்ட நயம் விள்ளார் – தேம்பா:3 61/4
ஆவல் ஆகி ஆங்கு வைத்த ஆவி அல்லது இல்லதால் – தேம்பா:11 13/2
தகடு வைத்த பொன் பரப்பின் வாய் முத்து அணி தயங்க – தேம்பா:11 92/1
முகடு வைத்த பைம் மணியொடு குரு மணி முடியாய் – தேம்பா:11 92/2
அகடு வைத்த வால் மணியினால் அழகு எடுத்து அழுத்தி – தேம்பா:11 92/3
மரு மணி தொடை யாழ் ஏந்தி மரகத மணி தாள் வைத்த
பரு மணி காந்தள் கையால் பயிர் அளி கிளி போல் கீதம் – தேம்பா:15 182/1,2
கோள் கடைந்து அழுத்தினால் போல் கொழு மணி அழுத்தி வைத்த
தாள் கடைந்து அழுத்தி பைம்பொன் தவழ் கதிர் பவள தூணில் – தேம்பா:16 3/1,2
மனை அம் கதி அடைய நாட்டி வைத்த மணி தூணே – தேம்பா:16 58/2
மனத்து எழுதி வைத்த மறை மறைய தீமை மல்கியதால் – தேம்பா:18 19/2
கனத்து எழுதி வைத்த மினல் ஒத்த வாழ்க்கை காதலித்து – தேம்பா:18 19/3
புனத்து எழுதி வைத்த பொருள் ஒத்து அ வேதம் புறத்து ஒழிந்தார் – தேம்பா:18 19/4
இருள் மொய்ப்ப மனத்து எழுதி வைத்த நுண்_மாண் எழுத்து உணரா – தேம்பா:18 20/2
எந்தை ஆய்ந்து இரண்டாம் கல் தீட்டி வைத்த ஏழ் விதியே – தேம்பா:18 22/4
பாகு இளம் சுவை பெய் வில் ஆர் பவள வாய் துறையில் வைத்த
நாகு இளம் தரளம் காட்டி நகை தரு மடந்தை போல – தேம்பா:19 15/1,2
வைத்த திரு வீங்கும் எசித்து நாட்டின் வாயில் இதே – தேம்பா:20 14/1
ஓம்பிய விருந்தில் வைத்த ஒளி மணி கலமும் அன்னார் – தேம்பா:20 109/1
பொடி வைத்த வழி புடை சேறு உலவ – தேம்பா:22 7/3
விண்ணின் மேல் வைத்த நன்று இழந்த வெம் பழி – தேம்பா:24 48/1
மண்ணின் மேல் வைத்த மன் உயிரின் வைத்த பேய் – தேம்பா:24 48/2
மண்ணின் மேல் வைத்த மன் உயிரின் வைத்த பேய் – தேம்பா:24 48/2
கண்ணின் மேல் வைத்த மாசு என்ன காட்டிய – தேம்பா:24 48/3
எண்ணின் மேல் வைத்த உட்கு இயற்றும் மாயமே – தேம்பா:24 48/4
வைத்த நல் வழி வாய்ப்பு அரிது ஆம் கொடை – தேம்பா:27 29/3
கண் மேல் வைத்த மாசு என ஆசை கவர் உள்ளம் – தேம்பா:28 115/1
விண் மேல் வைத்த வான் திரு எண்ணா வெருள் வீங்கி – தேம்பா:28 115/2
மண் மேல் வைத்த வாழ்வினை ஈட்ட மலிகள் வாய் – தேம்பா:28 115/3
புண் மேல் வைத்த தீ திரள் சேர்த்தோம் புதவு என்பார் – தேம்பா:28 115/4
உலை வைத்த பொறி செம் தீயோடு உடன்ற வேல் உருவி பாய – தேம்பா:28 134/1
மலை வைத்த அருவி கண்ணீர் மலிந்து அழல் இனியது என்றோ – தேம்பா:28 134/2
சிலை வைத்த பகழி சாயல் திரு நுதல் விழியை வெஃகி – தேம்பா:28 134/3
விலை வைத்த மகளிர் வஞ்ச வினை கொடு மருண்டாய் நெஞ்சே – தேம்பா:28 134/4
சிலை வைத்த பகழி மாரி சிந்துபு கடந்த வெம் போர் – தேம்பா:29 37/1
கொலை வைத்த குருதி கோட்டு குஞ்சரத்து அன்னோய் முன் நாள் – தேம்பா:29 37/2
அலை வைத்த உலகம் காத்தாய் அவிர்ந்த பொன் உலகம் காக்க – தேம்பா:29 37/3
கலை வைத்த உணர்வோய் இன்று கருதலே வேண்டும் அன்றோ – தேம்பா:29 37/4
நேர் அலர் வனத்தில் நாமே நிகழ்ந்து அடி வைத்த பாலால் – தேம்பா:30 62/2
விண் மேல் வைத்த நன்று இவறா நாம் வினை செய்ய – தேம்பா:35 60/1
மண் மேல் வைத்த காவல் நினக்கே வரைவு இன்றி – தேம்பா:35 60/2
புண் மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தோம் – தேம்பா:35 60/3
எண் மேல் வைத்த எம் செயிர் ஆர்ஆர் இணை சொல்வார் – தேம்பா:35 60/4
நீயோ நாமோ இ வரி வைத்த நிலை என்போம் – தேம்பா:35 65/2

மேல்


வைத்தது (1)

தனத்து எழுதி வைத்தது என உறுதி ஞான தகுதியின் நான் – தேம்பா:18 19/1

மேல்


வைத்தலும் (1)

சித்தம் முற்றலும் நாள் மலர் கழல் சென்னியின் மிசை வைத்தலும்
இ திறத்திலும் உள் மகிழ்ந்து உறும் இன்பம் எல்லையும் இல்லையே – தேம்பா:10 128/3,4

மேல்


வைத்தன (5)

அடி வைத்தன அன்பினொடு ஆங்கு எவணும் – தேம்பா:22 7/1
கடி வைத்தன பூ மலர் கான்ற மது – தேம்பா:22 7/2
இடி வைத்தன கார் இணை தூறினதே – தேம்பா:22 7/4
புண் நோய்க்கு வைத்தன தீ புழுங்கும் என தாம் கதி நீத்த – தேம்பா:28 76/3
மண் வைத்தன மன் அடியே இது என்பார் – தேம்பா:30 28/4

மேல்


வைத்தனர்-ஆல் (1)

வனையாதவர் ஆங்கு அடி வைத்தனர்-ஆல் – தேம்பா:22 6/4

மேல்


வைத்தனள் (1)

அடர் அற்று அடி வைத்தனள் அண்டிய வாய் – தேம்பா:5 88/1

மேல்


வைத்தார் (3)

பார் ஆழி உடை மூவர் இ மூன்றும் பத மலர் முன் பணிந்து வைத்தார் – தேம்பா:11 113/4
நாம திறல் காட்ட வைத்தார் என்றான் நவி வானோன் – தேம்பா:16 54/4
பன்னினார் விழி குடைந்தார் பல் நாள் கோற சிறை வைத்தார் – தேம்பா:17 35/4

மேல்


வைத்தான் (1)

நடம் புனைந்த அரிவையின் மேல் நவை உற்று எஞ்ச நசை வைத்தான் – தேம்பா:17 30/4

மேல்


வைத்திடாது (1)

மருள் வரும் நசை பிறர் பொருளில் வைத்திடாது
அருள் வரும் முகத்தில் தன் பொருள் அளித்தலே – தேம்பா:35 8/1,2

மேல்


வைத்து (15)

வான் வைத்து அவிழ்ந்த மலர் போல் ஒளிர் மீன்கள் மான – தேம்பா:5 78/1
தேன் வைத்து அவிழ்ந்த சினை நாடு அளி சேர்ந்து விம்ம – தேம்பா:5 78/2
கான் வைத்து அவிழ்ந்த கடி மாலை கனிந்து சூழ – தேம்பா:5 78/3
மீன் வைத்து அவிழ்ந்த விழியார் சிலரே மிடைந்தார் – தேம்பா:5 78/4
வாள் வளர் புண்ணில் செம் தீ வைத்து என துயரும் ஆற்றா – தேம்பா:7 62/3
போக்கிய பலி என்று ஆக போற்றி வைத்து இருவர் நின்றார் – தேம்பா:12 72/4
மணியால் தவழ் சுடர் செய் தூண் மனன் ஆர வைத்து உயர்த்தார் – தேம்பா:16 57/2
வரி காய்ந்த உணர்வோன் தன் தம்பி இல்லாள் வைத்து மதம் – தேம்பா:26 164/3
ஏர் முகத்து இளவல் அன்று அடி வைத்து ஏகினான் – தேம்பா:27 2/4
மரு மணி சோலை-கண் வைத்து வாழ்க என்றான் – தேம்பா:27 109/4
வைத்து அது ஓர் அளவு_இல வாழுமோ என – தேம்பா:27 112/3
வல அகம் கிரி வைத்து நடந்து போய் – தேம்பா:30 97/1
மண் மேல் அடியை வைத்து எந்தை வல கையால் – தேம்பா:31 9/1
வையத்து அடி வைத்து உயர் வான் மன்னன் கையில் சாய – தேம்பா:31 28/1
விரவிற்கு இங்கண் வைத்து உன்னை மேவி அருள் – தேம்பா:31 41/3

மேல்


வைத்தேன் (1)

வான் என விளங்க இ கான் வருந்தி என் அடியை வைத்தேன்
நான் என உணர்ந்து மொய்ப்பார் நல் தவத்து உயர்ந்த நீரார் – தேம்பா:30 75/3,4

மேல்


வைது (1)

மழையின் கனலை வான் பொழிய வைது என்று எரித்த மா முனியே – தேம்பா:19 29/4

மேல்


வைப்ப (1)

சாம்பிய விலையின் பொன்னும் தம்பி-கண் ஒளித்து வைப்ப
காம்பிய அவரும் போகில் களவர் கை பிடி-மின் என்ன – தேம்பா:20 109/2,3

மேல்


வைய (3)

வைய நாயகன் வையத்தார் எலாம் – தேம்பா:7 53/1
வான் திறத்து இன்புறீஇ வைய நாதன் என்று – தேம்பா:19 36/2
வடம் புனைந்த மார்பு அணியோ மணியோ வைய வனப்பு அவிக்கும் – தேம்பா:27 38/2

மேல்


வையகத்தார் (5)

சேய் ஆக மனு_குலத்தில் சேர்ந்து உதித்து வையகத்தார் சிதைவை நீக்க – தேம்பா:5 27/1
காரணமாய் ஏது அறியா வையகத்தார் இனிது உளத்தில் களித்து மூழ்கி – தேம்பா:5 28/1
வையகத்தார் வானகத்தார் வணங்குகின்ற வான் இறையோன் – தேம்பா:6 8/1
வையகத்தார் வடு தீர்ப்ப இவட்கு ஓர் மைந்தன் வந்த பிரான் அருள் புரிந்து வஞ்சம் மிக்கோர் – தேம்பா:8 60/1
வழுது ஆர்ந்த வையகத்தார் உய்தற்கு ஈவான் மணி கலத்து ஊடு அமுது ஏந்தும் அருள் மொய் மார்போன் – தேம்பா:11 37/4

மேல்


வையகத்தில் (1)

மருள் ஈன்ற அவா ஒழிப்ப வையகத்தில் நான் உதித்து மறை என்று ஓதும் – தேம்பா:32 24/2

மேல்


வையகத்து (9)

வையகத்து உள்ளோர் ஏறவும் விரும்பி வானவர் இழியவும் வழி என்று – தேம்பா:2 42/1
வையகத்து உறும் துயர் மடிய நாயகன் – தேம்பா:9 99/2
மை வகை சமரில் நிற்பர் வையகத்து எவரோ என்பார் – தேம்பா:24 6/4
வையகத்து ஒருவனாய் வாய்ந்த மு தொழில் – தேம்பா:25 43/1
வரு கைம்மாறு முன் வையகத்து ஆண்டகை – தேம்பா:27 36/2
வரம் தரும் தன்மைத்து எல்லா வையகத்து ஒன்று ஆம் நாதன் – தேம்பா:28 66/1
மை திறத்து இகன்ற யாரும் வையகத்து உய்யார் காளாய் – தேம்பா:29 88/3
மணி கலத்து அமிர்தம் ஏந்திய நெஞ்சான் வையகத்து இயற்றிய யாவும் – தேம்பா:34 50/1
வையகத்து அரசர் கோன் வெற்றி வாகையாம் – தேம்பா:36 122/1

மேல்


வையகம் (3)

வையகம் வைகும் வாய்ந்த மாதருள் எண்_இல் ஆசி – தேம்பா:7 6/3
மருள் தொடும் திசை வையகம் இனிது அயர்வு உயிர்ப்ப – தேம்பா:11 94/3
மன்னன் உட்பட வையகம் வாழ்வுற – தேம்பா:20 89/1

மேல்


வையத்தார் (4)

வைய நாயகன் வையத்தார் எலாம் – தேம்பா:7 53/1
வையத்தார் வானகத்தார் வணங்குகின்ற வரம் பெற்ற மதி வல்லோனே – தேம்பா:8 3/1
வையத்தார் திரு விரும்பி மறு உற்றார் என்று எளிமை வடிவம் பூண்டு – தேம்பா:11 103/1
வையத்தார் கசடு அழித்து வழு இன்றி மன் உயிர்கள் – தேம்பா:34 33/1

மேல்


வையத்தாரின் (1)

மை கடல் மருவிய வையத்தாரின் உள் – தேம்பா:8 41/1

மேல்


வையத்து (5)

விலகு எல்லா நஞ்சினுக்கு ஓர் மருந்து ஆகும் தையல் இவள் விரிந்த வையத்து
அலகு இல்லாள் பொருவு இல்லாள் அமரர் தொழும் அடி நல்லாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 17/3,4
வையத்து அடி வைத்து உயர் வான் மன்னன் கையில் சாய – தேம்பா:31 28/1
வான் நலம் நான் தர தந்தன நூல் மறை வையத்து எங்கும் வகுத்து ஓத – தேம்பா:32 40/3
நன்று இல்லா வையத்து இ நன்றி செய்வான் யாரே – தேம்பா:32 48/2
மை அறும் ஓர் விளக்கு என்ன வந்து இவண் நான் மனத்து இரங்கி வையத்து ஓதும் – தேம்பா:32 89/2

மேல்


வையம் (12)

மா முறை நலமும் வானொடு வையம் மருள நல் அற நெறி வழங்கும் – தேம்பா:2 49/2
வையம் பொருவா மடவாள் வர அம்பு – தேம்பா:5 89/1
மடை உடைந்த கடல் உடைத்த மயக்கு அடைந்து நெருங்கிற்றே வையம் எல்லாம் – தேம்பா:11 108/4
வான் மறையாது வழங்கி மலர்ந்து அகல் வையம் அறிந்து அதனை – தேம்பா:15 108/2
இகலவரின் நால் வகைகள் சிவையொடு அற ஈர்ந்த அளவு எதிர் அமரின் நால் அரசர் வையம்
நகல மடிவு ஆய பழி அழல உளம் முந்து இரதம் நடவி அதுனீசதன் எதிர்ந்தான் – தேம்பா:15 130/3,4
ஆண்டு எழுந்து வையம் எலாம் அழகு உறி கேழ்த்தது கண்டோம் – தேம்பா:23 72/4
வையம் மீட்பதன் பொருட்டு எம்மால் மலிந்தன வஞ்ச – தேம்பா:23 80/2
வாட்டமும் வெருவும் ஆய் வையம் ஆட உள் – தேம்பா:24 17/2
காட்டு-இடை இருந்த தன்மை காண்கிலன் வையம் நீங்கி – தேம்பா:26 105/3
மறந்தான்-கொல்லோ மறவா அன்போன் கடல் சூழ் வையம்
துறந்தான்-கொல்லோ உன்னை என்னை துறந்தோன் இதுவே – தேம்பா:31 25/2,3
மருளில் வீங்கிய வையம் விட்டு ஏறினான் – தேம்பா:36 12/4
மண்டி குமுறும் அலைகள் தவழ் வையம் அளித்த அருள் பயத்தால் – தேம்பா:36 17/3

மேல்


வையம்-வாய் (1)

வறுமையால் உயர்ந்த உம்மை வையம்-வாய் தெரிந்தேன் என்றான் – தேம்பா:9 127/4

மேல்


வையமும் (1)

வரி இனம் பூட்டிய இரத வையமும்
பரி இனம் பூட்டிய திகிரி பான்மையும் – தேம்பா:32 55/2,3

மேல்


வையமே (1)

தோயும் ஓகையில் துளங்க வையமே – தேம்பா:10 100/4

மேல்


வையவே (1)

வையவே ஊழ்த்து வீழ்தல் மருவிய குறி இரண்டும் – தேம்பா:23 60/2

மேல்


வையின் (2)

பேர் அற கன்னி வையின் பிறக்கும் முன் தனக்கு தூது என்று – தேம்பா:26 5/1
அலை வளர் உலகில ஒவ்வா அதிசயத்து என் தாய் வையின்
மலை வளர் வெள்ளம் என்ன வர தொகை உவப்ப கொண்டேன் – தேம்பா:26 101/3,4

மேல்


வையீர் (1)

தன் அல்லால் சாட்சி வையீர் திரு நாள் ஆட தவிர்கில்லீர் – தேம்பா:18 21/3

மேல்


வையோ (1)

சினவி திளை தீ முன் வையோ திளைப்ப உவரில் பெய் உறையோ – தேம்பா:6 48/2

மேல்