யூ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

யூக (1)

வருடல் என யூக இரு புடையில் உள யாவும் அற வய விருதர் வீழ்ந்த பினர் மீள – தேம்பா:15 121/1

மேல்


யூகங்கள் (1)

கனி வளர் சினை-தொறும் கரிய யூகங்கள்
நனி வளர் ஆரிய நடம் செய்து ஏகினார் – தேம்பா:20 10/3,4

மேல்


யூகம் (3)

விண் பக பாய்ந்த கொம்பர் விட்டு கண்டு உலவ யூகம்
ஒண் பகல் தகைத்த மேகத்து உறை மருட்டிடும் வீழ் தேனே – தேம்பா:12 14/3,4
இயலினொடு நால் வகையும் உவணம் எனும் யூகம் உறி இரணம் முறியாது உறுதி நிற்ப – தேம்பா:15 119/3
யூகம் ஒத்து அணி அணி உலவி ஏகுவார் – தேம்பா:32 61/4

மேல்


யூதர் (30)

சிறை நீத்து யூதர் அமுது ஒழுகும் திரு நாடு அமைத்தி அருள் செய்தான் – தேம்பா:12 2/4
வீர யோகத்து யூதர் விலக்கி மிக்கு அல்லல் செய்தான் – தேம்பா:14 22/4
பட்ட நோய் ஒன்றும் இன்றி பரிவு அற யூதர் வாழ்ந்தே – தேம்பா:14 34/4
வான் முகம் புதைத்த முகில் முழக்கு எஞ்ச மயங்கி ஆர்த்து அலற மற்று யூதர்
தேன் முகம் புதைத்த மலர் என அங்கு ஓர் சிதைவு இல வாழ்தலை கண்டே – தேம்பா:14 39/2,3
வெற்றியால் யூதர் தம் சிறை தீர்த்து மிடைந்தன தெரிவையர் இளைஞர் – தேம்பா:14 43/2
இ படை தொடர புணரி முன் நெருங்க இடை வரும் யூதர் உள் வெருவ – தேம்பா:14 46/1
சோர்தான் என்னும் இ நதியை துன்னி யூதர் எய்தினரே – தேம்பா:15 9/4
கரை மேல் திரண்ட யூதர் கொணர் கதி நூல் பேழை சேர்ந்தன-கால் – தேம்பா:15 11/1
புரை மேல் களித்த யூதர் எல்லாம் போய் அ கரை சேர்ந்து எய்தினரே – தேம்பா:15 11/4
வல்லே வளர் வேல் யூதர் எலாம் மகிழ கண்டு ஆர்த்து அம்பு விசை – தேம்பா:15 14/3
பார்த்தார் ஒன்னார் பதைத்து அஞ்ச பாய்ந்தார் யூதர் வாள் பசியை – தேம்பா:15 18/3
மின் பொதுளும் புயல் ஆர்ப்பு மெலிந்திட வீங்கு ஒலி யூதர் எழீஇ – தேம்பா:15 99/2
இடித்தன ஏறு என ஆர்ப்பு எழ இன்னணமே எதிர் யூதர் பொர – தேம்பா:15 103/1
அகல அவர் யூதர் எதிர் அகலம் உற வந்து அரிகர் அகலம் உலவ சுருதி வாய்மை – தேம்பா:15 130/1
மூ_ஐயாயிரரும் ஓட யூதர் முடுகி அவர் – தேம்பா:16 53/2
நேர் கெழு யூதர் தம் நிரைத்த சேனைகள் – தேம்பா:18 11/3
வசை சேர் மண் பதியோர் நாமே யூதர் மண்டிலத்தின் – தேம்பா:20 13/2
எல் கொண்ட கனய நாட்டில் யூதர் நாம் யாக்கோபு என்பான் – தேம்பா:20 105/1
நூல் நெறி வழுவா யூதர் நொந்து எசித்து உறைந்த-காலை – தேம்பா:21 4/1
மாட்சியால் உயர் அ நாட்டில் வந்து இரு யூதர் கண்ட – தேம்பா:23 18/2
அழன்ற கான் உறி யூதர் அறைந்த தீ – தேம்பா:23 32/2
புராதனம் தரும் புகழ் மறை யூதர் நாடு அளித்து – தேம்பா:25 2/1
இ கணம் காட்டிய யூதர் மன்னவன் – தேம்பா:25 45/2
அசும்பு-இடை ஒளித்த செம் தீ அறல் என எடுத்தார் யூதர்
தசும்பு-இடை எடுத்த நீரை சமிதை மேல் தெளித்து வாரி – தேம்பா:28 152/1,2
எள்ளா வில் தலைவன் யூதர் நாட்டில் இருந்தேன் நான் – தேம்பா:29 54/2
மெய் திறத்து யூதர் சீர் விளைந்த நாட்டு உறீஇ – தேம்பா:29 63/3
நெஞ்சு இவர் செருக்கின் கோட நீண்ட நாட்டு எங்கும் யூதர்
விஞ்சு இவர் இறைவன் தாழ்தல் வினை மிக விலக்கினானே – தேம்பா:29 77/3,4
கார் தங்கும் இடியின் காய்ந்தோன் கடுகி அ யூதர் தம்மை – தேம்பா:29 79/3
போல்வரும் இன்றி யூதர் போற்றிய கடவுள் மாண்பும் – தேம்பா:29 82/3
தகை அணிந்த முகம் தரும் யூதர் தம் – தேம்பா:30 99/3

மேல்


யூதர்-தம் (2)

மேல் நிமிர் நாயகன் விளிப்ப யூதர்-தம்
கோல் நிமிர் மோயிசன் குவட்டில் ஏறினான் – தேம்பா:18 12/3,4
கார் விளை இடி மொழி கதத்தில் யூதர்-தம்
சீர் விளை மறை நலம் செகுத்து வந்து தன் – தேம்பா:29 65/1,2

மேல்


யூதர்க்கு (1)

அடைக்கலத்து அடைந்த யூதர்க்கு அடிமை என்று இயற்றும் பீழை – தேம்பா:14 23/2

மேல்


யூதர்கள் (4)

வெப்பு அடை அரசன் உளத்து உடன்று உலம்ப விருப்புடன் யூதர்கள் போனார் – தேம்பா:14 46/4
சண்டத்து உயர் கரை யூதர்கள் தனி உற்றனர் ஒருங்கே – தேம்பா:14 63/4
இழிந்த மாரியின் இரும் திரு யூதர்கள் பின் நாள் – தேம்பா:16 11/2
இ திறத்து ஆங்கு உறை இரண்டு யூதர்கள்
மை திறத்து உளம் கெடின் வழங்கும் வெற்றி என்று – தேம்பா:23 119/1,2

மேல்


யூதர்கள்-தம் (1)

நிறை நீத்து எசித்தார் பகை முற்றி நெடு நாள் சிறை செய்து யூதர்கள்-தம்
மிறை நீத்து உயர்ந்த குலம் எல்லாம் விடைத்தார் என்னா விடைத்து இறையோன் – தேம்பா:12 2/1,2

மேல்


யூதரை (1)

அறம் கொடு புக்க யூதரை தடுப்ப ஐ என தானையும் தானும் – தேம்பா:14 47/2

மேல்


யூதேய (1)

மரு பொழிலே விரை பணையே வளர் யூதேய நாட்டிலிருந்து – தேம்பா:20 22/2

மேல்