தோ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகை 6
தோகைகள் 5
தோகையின் 1
தோகையும் 1
தோகையோடு 1
தோட்டி 2
தோட்டு 1
தோடு 12
தோடுவார் 1
தோண்டி 1
தோண்டு 1
தோம் 5
தோமொடு 1
தோய் 53
தோய்த்த 1
தோய்த்தாள் 1
தோய்த்து 3
தோய்ந்த 15
தோய்ந்தன 2
தோய்ந்தான் 2
தோய்ந்து 7
தோய்ந்தே 1
தோய 3
தோயாது 1
தோயும் 4
தோர்த்த 1
தோர்ப்ப 1
தோரணத்தின் 1
தோரணம் 3
தோரன் 1
தோரையும் 1
தோல் 16
தோல்வி 2
தோலொடு 2
தோழர் 1
தோழர்-கொல்லோ 1
தோழன் 3
தோழனா 1
தோழனாய் 1
தோழனும் 1
தோழியர் 1
தோள் 18
தோளாய் 1
தோளார் 2
தோளான் 4
தோளின் 2
தோளினர் 1
தோளினார் 1
தோளினானும் 1
தோளோடு 1
தோற்ற 1
தோற்றது 1
தோற்றம் 17
தோற்றமும் 1
தோற்றமே 5
தோற்றமோ 1
தோற்றி 3
தோற்றிய 2
தோற்றின 1
தோற்றினார் 1
தோற்றினாள் 1
தோற்று 5
தோற்றும் 1
தோற்றுவாய் 1
தோற்றுவிக்கும் 1
தோற்றுவித்து 3
தோற்றுவிப்ப 1
தோற்றுவிப்பான் 2
தோன்ற 27
தோன்றல் 21
தோன்றலால் 1
தோன்றலில் 1
தோன்றலின் 1
தோன்றலை 6
தோன்றவே 1
தோன்றற்கு 1
தோன்றா 2
தோன்றாது 2
தோன்றி 49
தோன்றிய 18
தோன்றிய-கால் 1
தோன்றியது 4
தோன்றிலது 1
தோன்றிற்று 2
தோன்றிற்றே 3
தோன்றின் 2
தோன்றின 2
தோன்றினரே 1
தோன்றினன் 1
தோன்றினன்-ஆல் 1
தோன்றினார் 5
தோன்றினாரே 1
தோன்றினாள் 1
தோன்றினான் 13
தோன்றினானே 2
தோன்றினேன் 1
தோன்று 8
தோன்றுதலால் 1
தோன்றும் 17
தோன்றும்-காலும் 2
தோன்றுமே 1
தோன்றுமோ 1
தோன்றுவதே 1
தோன்றுவான் 1
தோன்றுழி 1

தோகை (6)

துயில் இனத்தொடு விரித்த தோகை கொள் – தேம்பா:1 25/3
தோகை கொள் மயில் என மாதர் தோன்றலின் – தேம்பா:1 49/1
வீ முயங்கிய பைம் தோகை விரித்த நல் மஞ்ஞை போன்றே – தேம்பா:9 131/1
சூர் முகம் புதைத்தன தோகை நாணியே – தேம்பா:12 32/4
மீன் ஏந்திய தோகை விரித்து உலவி – தேம்பா:22 8/2
புக்கார் பொழில் தோகை மயில் புடையில் – தேம்பா:30 21/3

மேல்


தோகைகள் (5)

ஞறாஞறா என ஒர்-பால் நயந்த தோகைகள்
புறா குறாவுதலொடு புள் பல் ஓதையால் – தேம்பா:1 45/2,3
பொழிலில் தோகைகள் பூவில் வண்டுகள் – தேம்பா:4 9/2
தோய்ந்த கண் நாடி ஒண் மயில்-தம் தோகைகள்
வாய்ந்த கண்ணாடிகள் வனப்பு என்று ஆயிரம் – தேம்பா:12 40/2,3
ஞறாஞறா என தோகைகள் நைந்து அழும் – தேம்பா:13 34/2
களி கொள் தோகைகள் கான்-இடை கண்டனை இலையோ – தேம்பா:26 74/4

மேல்


தோகையின் (1)

தோகையின் எருத்து என துணர் விள் காசை கண்டு – தேம்பா:30 54/1

மேல்


தோகையும் (1)

மயில் அகல் தோகையும் மணியும் வில் செய – தேம்பா:32 57/1

மேல்


தோகையோடு (1)

தோகையோடு ஒழிந்து வீழ்ந்த துணை மயில் என்ன கோயில் – தேம்பா:29 41/3

மேல்


தோட்டி (2)

தாங்கிய தோட்டி அழுத்தி வெல் பாகன் சாய்த்து வீழ்ந்தும் உவா என நாணம் – தேம்பா:20 72/3
உவா என உடலை கைக்கொண்டு ஊக்கம் நல் தோட்டி மாற்றி – தேம்பா:30 71/2

மேல்


தோட்டு (1)

தோட்டு அழகு அலர்ந்த பூம் தொடை தொடுத்து ஒளி – தேம்பா:32 63/1

மேல்


தோடு (12)

தோடு அணி கவினொடு தூங்கும் குண்டலம் – தேம்பா:1 39/1
தோடு இழந்து ஏகுது என்றான் துணை இழந்து உயர்ந்த பாலன் – தேம்பா:4 29/4
மீன் ஆரும் ஓதி மிளிர் தோடு என வேய்குகின்றார் – தேம்பா:5 86/2
தோடு அவிழ்த்த விரை கமலம் மாலை மாற்றி சூடிய தாள் தொழுகின்றார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 52/4
தோடு அணி மகளிர் மன்றல் துடங்கிய உவகை போல – தேம்பா:9 130/1
தோடு உண்ட மணி பைம் பூம் தார் சூசையே நீயும் திங்கள் – தேம்பா:17 14/1
அம் தோடு இனிது அலகோடு அது கவர்வு ஆயின அளவில் – தேம்பா:21 30/2
தோடு அகடு இழி தேன் கீதம் தொகு விரல் உலவி ஆர்க்கும் – தேம்பா:28 15/3
மென் தோடு ஒன்று ஒள் உடல் வீவு உற வேண்டியதேல் இருவர்க்கு – தேம்பா:31 30/2
சுருளில் வீங்கிய தோடு அலர் தாளினான் – தேம்பா:31 67/4
தோடு செய் கொடி நலோன் துலங்க நாயகன் – தேம்பா:34 7/1
துய் அம் தோடு அவிழ் பூம் கொடி சுட்டுபு – தேம்பா:34 32/3

மேல்


தோடுவார் (1)

தோடுவார் வெறி தொங்கல் இட்டு ஓடுவார் – தேம்பா:33 13/3

மேல்


தோண்டி (1)

திரை உடுத்த பார் அகட்டு சேண் படர் தாழ் குழி தோண்டி
கரை உடுத்த கடல் பொங்கி கடந்து எழுவ போல் அலைகொண்டு – தேம்பா:28 79/1,2

மேல்


தோண்டு (1)

காய்ந்து தீந்த குளம் கடி தோண்டு எனா – தேம்பா:9 35/2

மேல்


தோம் (5)

துன் அல் இல் சிறைபடுத்த தோம் இலால் – தேம்பா:1 29/1
தோம் என யாவும் தீர் தவற்கு சொற்றுவான் – தேம்பா:5 39/4
உலக்கம் ஆக வீதி தீதர் ஒழுகல் இன்றி உண்ட தோம்
விலக்கம் ஆக நாதன் ஆகி மெலிய மைந்தன் என்று உளாய் – தேம்பா:7 34/2,3
துன்புற செய்த தோம் துடைத்து ஆசி நீ – தேம்பா:8 29/1
எம் தோம் அந்தோ இ பகை ஈட்டிற்று என ஆர்ப்பார் – தேம்பா:28 113/4

மேல்


தோமொடு (1)

சூர் அடைந்துளி தோமொடு மாற்றுவார் – தேம்பா:23 30/4

மேல்


தோய் (53)

துகிலில் தோய் உரம் தோய் அணி தோன்றவே – தேம்பா:9 54/1
துகிலில் தோய் உரம் தோய் அணி தோன்றவே – தேம்பா:9 54/1
அகிலில் தோய் துகில் வாடையோடு ஆட விண் – தேம்பா:9 54/2
முகிலில் தோய் வரை மொய் புயம் ஓங்க நான் – தேம்பா:9 54/3
புகலின் தோய் நயத்து ஓர் பொருவு ஒத்ததோ – தேம்பா:9 54/4
நீர் தோய் பொன் ஆர் தன் தலை நீட்ட நிசி நீத்தோன் – தேம்பா:9 62/1
ஏர் தோய் மின் ஆர் பொன் சிறை அம் புள் இனம் எல்லாம் – தேம்பா:9 62/2
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட செயிர் இன்றி – தேம்பா:9 62/3
தார் தோய் தேனோடு ஊண் பல தந்தே தயை செய்வோய் – தேம்பா:9 62/4
மஞ்சு தோய் சிறகு ஆடிய மஞ்ஞை போல் – தேம்பா:10 34/1
நஞ்சு தோய் மன நங்கை நறா அகில் – தேம்பா:10 34/2
மஞ்சு தோய் துகில் ஆடி வதிந்த கால் – தேம்பா:10 34/3
நெஞ்சு தோய் தகவோர் நெறி எய்தினார் – தேம்பா:10 34/4
விண் தோய் மாடத்து ஒதுங்கி வினை அற்று உளம் தூண்டு உணர்வால் – தேம்பா:10 44/1
கண் தோய் புனல் ஆடினள் தன் கசடே கருதும் தன்மைத்து – தேம்பா:10 44/2
மண் தோய் துகள் தீர்ந்தவன் தாய் விடவே மனம் ஓங்கினள்-ஆல் – தேம்பா:10 44/4
தோய் ஒளி மணி நலம் தோன்றுமோ இவர் – தேம்பா:10 77/2
வான் தோய் நயங்கள் பயந்தோய் நீ மண் தோய் துயர் நீத்து அளித்தோய் நீ – தேம்பா:10 139/1
வான் தோய் நயங்கள் பயந்தோய் நீ மண் தோய் துயர் நீத்து அளித்தோய் நீ – தேம்பா:10 139/1
தேன் தோய் இன்பத்து அமைந்தோய் நீ சேண் மேல் புகழப்படுவோய் நீ – தேம்பா:10 139/2
நான் தோய் உணர்வின் உயர்ந்தோய் நீ நரன் என்று ஆக அவதரித்தே – தேம்பா:10 139/3
ஊன் தோய் உடல் கொண்டன அன்பின் உணர்வு இட்டு எனக்கு பணியாயோ – தேம்பா:10 139/4
தேன் தோய் நயம் நாம் உண ஆம் செயிர் தீர் – தேம்பா:11 61/1
வான் தோய் அமுது ஒத்த மருந்து இடவோ – தேம்பா:11 61/2
ஊன் தோய் உடல் நோய் உறு கைப்பு அயில்வாய் – தேம்பா:11 61/3
கான் தோய் மலரே உயிர் செய் கனியே – தேம்பா:11 61/4
கான் தோய் மலர் மேல் தேன் துளியோ கதிர் தோய் வளை மேல் முத்து அணியோ – தேம்பா:12 6/1
கான் தோய் மலர் மேல் தேன் துளியோ கதிர் தோய் வளை மேல் முத்து அணியோ – தேம்பா:12 6/1
தேன் தோய் கமலத்து அன பார்ப்போ சீர் தோய் பொன் மேல் துகிர் செப்போ – தேம்பா:12 6/2
தேன் தோய் கமலத்து அன பார்ப்போ சீர் தோய் பொன் மேல் துகிர் செப்போ – தேம்பா:12 6/2
மீன் தோய் முடி சூழ் தாய் கரத்தில் வேய்ந்தான் முகத்தில் வில் வீசி – தேம்பா:12 6/3
வான் தோய் முகில் தோய் சுடர் அன்ன மனுவின் உடல் தோய்ந்து உதித்த பிரான் – தேம்பா:12 6/4
வான் தோய் முகில் தோய் சுடர் அன்ன மனுவின் உடல் தோய்ந்து உதித்த பிரான் – தேம்பா:12 6/4
நல்கா திரு நல்கிய மலை வான் நண்ணி முகில் தோய் முடி சேர்ந்தான் – தேம்பா:19 34/4
ஊன் தோய் மாக்கள் தம் குணம் இஃதேல் உளைவு என்னோ – தேம்பா:23 28/1
கான் தோய் பைம் பூம் சோலை எசித்தார் கசடுற்று – தேம்பா:23 28/2
வான் தோய் மின் போல் ஒல்குபு நின் தாள் வலி ஏத்த – தேம்பா:23 28/3
நான் தோய் வஞ்சம் சால்பு என சொன்னான் நவை மிக்கான் – தேம்பா:23 28/4
மதியில் தோய்ந்த பதத்தாளும் மறை தோய் மாட்சி மா தவனும் – தேம்பா:26 49/3
துஞ்சு இலா விழி தோய் அழல் தூவலும் – தேம்பா:28 105/3
தேன் நலம் தோய் தயை சேர்த்தி ஆபிராம் – தேம்பா:30 105/1
கான் நலம் தோய் தவத்து ஈன்ற காதலன் – தேம்பா:30 105/2
வான் நலம் தோய் மகிழ்வு உய்த்த மைந்தன் ஆய் – தேம்பா:30 105/3
நால் நலம் தோய் திரு நகுலன் என்பவே – தேம்பா:30 105/4
தேன் தோய் முகை முக செல்வன் புகுதுக – தேம்பா:30 153/1
மீன் தோய் மிளிர் முடி வேய்ந்தாள் புகுதுக – தேம்பா:30 153/2
கான் தோய் கொடி வளர் கையான் புகுதுக – தேம்பா:30 153/3
வான் தோய் மகிழ்வொடு கண்டார் வடு அற – தேம்பா:30 153/4
தேன் தோய் மலர் தீட்டிய சேடு உலவி – தேம்பா:31 48/1
கான் தோய் தடமே களி கூர்ந்து உனை நேர் – தேம்பா:31 48/2
வான் தோய் எழில் தோய் மது மாறு இல பூ – தேம்பா:31 48/3
வான் தோய் எழில் தோய் மது மாறு இல பூ – தேம்பா:31 48/3
தான் தோய் எனது உள் தடம் ஓங்கினதே – தேம்பா:31 48/4

மேல்


தோய்த்த (1)

வெண் நிற தூசு கொள் மாசு அற வெண் மதி கதிருள் தோய்த்த வினை என்ன – தேம்பா:32 43/1

மேல்


தோய்த்தாள் (1)

புணி நிறத்த மலர் பூண் சுனை தோய்த்தாள் – தேம்பா:21 20/4

மேல்


தோய்த்து (3)

வெண் நிற துகில் கொள் மாசு வெண் மதி கதிருள் தோய்த்து
தென் நிறத்து ஒழிக்கல் போல் சூல் சிறை அகன்று உதிக்கும் முன்னர் – தேம்பா:26 100/1,2
நரம்பை என்பின் நிரை பின்னி நல் செம் புனல் தோய்த்து
பரம்பை போர்த்து உள் தசை நிரப்பி படம் மேல் மயிர் பொலிய – தேம்பா:28 20/1,2
தூய் வளர் மலர் பூம் சேக்கையை பரப்பி சூழ் அகில் நறும் புகை தோய்த்து
மீய் வளர் செல்வோர் விளைத்த தம் செயிரின் வினையினால் நரகு உறீஇ அங்கண் – தேம்பா:28 91/1,2

மேல்


தோய்ந்த (15)

தோய்ந்த வாய் எலாம் இனிமை தோய்ந்தன – தேம்பா:1 33/4
இன்பு தோய்ந்த நிலை என தான் இவண் – தேம்பா:4 65/3
தோய்ந்த ஆர்வு உற துறவிய நலம் நிறை அளித்தல் – தேம்பா:6 61/2
தோய்ந்த கண் நாடி ஒண் மயில்-தம் தோகைகள் – தேம்பா:12 40/2
தோய்ந்த தன்மையொடும் அ சுனை நல் நீர் – தேம்பா:21 21/1
தோய்ந்த நீ அணி சூல் கனி தானுமே – தேம்பா:26 36/4
நிதியின் தோய்ந்த அழகு இளையோன் நீர்ப்ப ஆசி ஓதிய பின் – தேம்பா:26 49/1
துதியில் தோய்ந்த உரை எவர்க்கும் சுவையின் கனிந்து கனி கூறி – தேம்பா:26 49/2
மதியில் தோய்ந்த பதத்தாளும் மறை தோய் மாட்சி மா தவனும் – தேம்பா:26 49/3
நுதியில் தோய்ந்த வாள் உயிர் ஈர் நோய் கொண்டு அகன்று போயினர்-ஆல் – தேம்பா:26 49/4
வான் தோய்ந்த மகிழ்வு உளனாய் மன் உயிர்கள் உய்வதற்கே – தேம்பா:26 140/1
ஊன் தோய்ந்த துயர் கொண்ட உம்பர் தொழும் கோமானே – தேம்பா:26 140/2
தோய்ந்த ஓர் அரவு என சுருண்டு விம்மினாள் – தேம்பா:29 128/4
தோய்ந்த கதிர் எறி மணி கொய் சுவேசிய நாடு இனிது ஆள்வார் தொகுதி ஈட்டம் – தேம்பா:32 75/4
ஊன் உகும் உதிரம் தோய்ந்த உதட்டு அலர் வாடல் நோக்கீர் – தேம்பா:35 46/4

மேல்


தோய்ந்தன (2)

தோய்ந்த வாய் எலாம் இனிமை தோய்ந்தன – தேம்பா:1 33/4
தோய்ந்தன அமுதில் யாரும் துய்ப்பன வழுவா சீலம் – தேம்பா:27 18/2

மேல்


தோய்ந்தான் (2)

தோய்ந்தான் கடல் தோய்ந்து என உம்பரினும் – தேம்பா:5 111/3
தோய்ந்தான் மலர் தாள் கதிர் கையால் தொழுதான் தொழா மற்றவர் கண்டு – தேம்பா:12 7/3

மேல்


தோய்ந்து (7)

தோய்ந்தான் கடல் தோய்ந்து என உம்பரினும் – தேம்பா:5 111/3
தோய்ந்து உலாம் அருளால் தொழில் செய்து உயிர் – தேம்பா:9 35/3
சுண்ணம் தோய்ந்து உரம் தூங்குபு தோன்றினார் – தேம்பா:9 53/4
வான் தோய் முகில் தோய் சுடர் அன்ன மனுவின் உடல் தோய்ந்து உதித்த பிரான் – தேம்பா:12 6/4
தூய அமை வீட்டு உவகை தோய்ந்து மனு வாழ்தல் – தேம்பா:12 89/3
துறை கெழு நல் காட்சியினோடு இன்ப பவ்வம் தோய்ந்து உவப்ப – தேம்பா:18 17/3
சொரி காய்ந்த கரி அன்ன காம பவ்வம் தோய்ந்து ஆழ்வான் – தேம்பா:26 164/4

மேல்


தோய்ந்தே (1)

தோய்ந்தே எவரும் மகிழ்ந்து ஓயா துதிகள் துவைப்ப நன்று என்றான் – தேம்பா:36 27/2

மேல்


தோய (3)

தோய முழங்கின மேதிகள் தெண் திரை தோய முழங்கு இழையார் – தேம்பா:1 64/4
தோய முழங்கின மேதிகள் தெண் திரை தோய முழங்கு இழையார் – தேம்பா:1 64/4
தூங்கு உயர் கனிகள் தீம் பால் தோய வீழ்ந்து என்றோ வானின் – தேம்பா:26 102/1

மேல்


தோயாது (1)

அலம்பும் திரையில் அடி தோயாது அப்பால் கடந்த மா முனியே – தேம்பா:19 31/4

மேல்


தோயும் (4)

தோயும் அலை நீ ஆகி உனை துறவாது அணுகல் செய் துறவோ – தேம்பா:6 56/3
தோயும் நீ எனையும் நீ ஆள் எனா தொழுது உளான் – தேம்பா:9 12/4
தோயும் ஓகையில் துளங்க வையமே – தேம்பா:10 100/4
தோயும் தன்மை துவண்டு சுருண்டு எனா – தேம்பா:26 81/2

மேல்


தோர்த்த (1)

தோர்த்த பாங்கினர் தொழும்பர் என்று ஆகுவர் என்னா – தேம்பா:3 14/3

மேல்


தோர்ப்ப (1)

துதைத்த அரி தோர்ப்ப எதிர் துள்ளி இரு காலால் – தேம்பா:23 50/2

மேல்


தோரணத்தின் (1)

கான் நலம் பயின்ற மலர்கள் தோரணத்தின் கதிர் மணி தோரணம் தயங்க – தேம்பா:12 64/3

மேல்


தோரணம் (3)

கோர்த்தன தரளம் மேல் கொளுமும் தோரணம்
ஆர்த்தன முகில்-இடை அவிர் வில் மானுமே – தேம்பா:2 20/3,4
வானொடு வழங்கிய மலர் செய் தோரணம்
கானொடு வழிந்த தேன் களித்து மேய்ந்த பின் – தேம்பா:2 21/2,3
கான் நலம் பயின்ற மலர்கள் தோரணத்தின் கதிர் மணி தோரணம் தயங்க – தேம்பா:12 64/3

மேல்


தோரன் (1)

தோரன் யாக்கனன் சுடர் முடி இலேபுவன் எரிக்கோன் – தேம்பா:16 9/2

மேல்


தோரையும் (1)

சூழ் விளை ஏனலும் பரியும் தோரையும்
கூழ் விளை குலுத்தமும் இறுங்கும் கோத்து இரு – தேம்பா:18 3/1,2

மேல்


தோல் (16)

பட நாகம் தோல் உரித்த பான்மையின் கல் ஊடு உரிஞ்சி – தேம்பா:1 60/1
என்பு தோல் உடல் போர்த்தது என்று அன்பு உறை – தேம்பா:4 65/2
தோல் இல்லன வசியோடு உயர் கதை இல்லன சுளி வில் – தேம்பா:14 50/3
தோல் முதல் உடைமை சால் தொகுத்து அங்கு ஓச்சு செங்கோல் – தேம்பா:14 80/1
தோல் பேர் படை ஓர் தொகை இன்றி வரும் – தேம்பா:15 40/2
தோலொடு தோல் பொர மீமிசை துள்ளி எழீஇ – தேம்பா:15 62/1
தோல் அற மீமிசை துள்ளிய வாசி அற – தேம்பா:15 71/3
சூழ் கடல் தீவுகள் என்று கிடந்தன துஞ்சிய தோல் இனமே – தேம்பா:15 102/4
பரி ஏகுக ஏகு இல தோல் படர் வெள்ளம் மட்டோ – தேம்பா:16 21/4
நீர் வென்றன தோல் மத நீர் உகள் என்னில் அ சொல் – தேம்பா:16 23/2
தோல் நிகர் அமலேக்கு ஆகம் துளைத்த கோல் உருவி அப்பால் – தேம்பா:16 49/3
தன் தோல் உரித்த பாம்பு ஒத்த தவத்தின் வாளால் பொறி ஐந்தும் – தேம்பா:19 26/1
நெருக்கு இடை தோல் உரித்த அரவு நேருவார் – தேம்பா:26 122/4
சொரிவன மழை போல் அழல் விட ஒரு-பால் தோல் உரித்து எரிப்பன ஒரு-பால் – தேம்பா:28 93/1
ஊன் உரு கழிந்த நீள் தோல் உடுத்த என்பு ஒழுங்கின் தோன்றி – தேம்பா:29 3/2
பொய் இழந்து புரைகள் இழந்து தோல்
பை இழந்து உறு பாடும் இழந்து அருள் – தேம்பா:34 25/2,3

மேல்


தோல்வி (2)

நாமம் சால் வழங்க தோல்வி நவை பெறா வரம் பெற்று உற்றான் – தேம்பா:17 15/4
நின்று அலர் தொடைகள் ஏந்தி நிகர்த்த பேய் தோல்வி காண்பார் – தேம்பா:24 10/4

மேல்


தோலொடு (2)

தோலொடு தோல் பொர மீமிசை துள்ளி எழீஇ – தேம்பா:15 62/1
துடித்தன குன்றுகள் என்று உயர் தோலொடு துஞ்சுவ தூசிகளே – தேம்பா:15 103/4

மேல்


தோழர் (1)

அழல் கோலினர் கூற்றது தோழர் அலை – தேம்பா:15 39/3

மேல்


தோழர்-கொல்லோ (1)

கூளி திரளோ அடு கூற்றது தோழர்-கொல்லோ
யாளி திரளோ அவிர் கீழ் திசை யாவும் ஆளும் – தேம்பா:16 19/2,3

மேல்


தோழன் (3)

இங்கு எதிர் தோழன் முன் கொணர்ந்த ஈரலை – தேம்பா:27 55/3
சாற்றினான் அரிய தோழன் தழுவினான் அவனும் இ நோய் – தேம்பா:27 67/3
வல் வினை உணர்வின் தோழன் வழங்கு கைம்மாறு ஏது என்றான் – தேம்பா:27 70/4

மேல்


தோழனா (1)

நோக்கமே ஒரு நுசுப்பு அறா தோழனா தயையின் – தேம்பா:26 69/2

மேல்


தோழனாய் (1)

தானமே தோழனாய் அறிவின் தன்மையால் – தேம்பா:6 26/3

மேல்


தோழனும் (1)

ஆருயிர் தோழனும் அலங்கி தோன்றினான் – தேம்பா:9 88/4

மேல்


தோழியர் (1)

நூறு ஒப்பு இல தோழியர் நோக்கினளே – தேம்பா:5 76/4

மேல்


தோள் (18)

மாண்ட தோள் வியன் வட்டமே பொறுத்து வெம் சுடரை – தேம்பா:3 12/2
சொல் ஆரும் பங்கய கண் பொன் வரை தோள் சுடர் அகலம் தோற்று மேனி – தேம்பா:8 1/3
பொறை பழித்த தோள் திறத்தில் பூண் தவழ செம்_சுடரை – தேம்பா:10 17/2
பொன் தாங்கு பொறை திண் தோள் பொலிந்த உம்பர் தாங்கினர்-ஆல் – தேம்பா:10 20/3
தோள் உற்று உயர் குன்று இயல் குன்றும் சோசுவன் தான் பணித்திட்டான் – தேம்பா:15 17/4
திற துணை வரை தோள் வீங்கி திசை திசை சுளித்து நோக்கி – தேம்பா:17 25/2
கீறுமை உருவம் காட்டி கிளைத்த தோள் இரு_நூறு ஆக்கி – தேம்பா:20 49/2
தோள் கடைந்து அழுத்தி அணி மணி சாயல் துளங்கிய ஆணரன் மாமை – தேம்பா:20 70/1
தராதரம் தரும் தடத்த தோள் உரும் உமிழ் தனு கை – தேம்பா:25 2/2
கல் செய் தோள் இருந்த ஆறும் கண் பொருத்துகின்ற ஆறும் – தேம்பா:28 10/2
நிழல் தர தொடலை கூந்தல் நீர்மையார் தோள் மேல் துஞ்சி – தேம்பா:28 133/2
இட கை தொகு விரலால் எதிர் தோள் இட்ட வளை கவ்வி – தேம்பா:29 52/1
உன் தோள் என் தோள் மரம் ஒன்று உறல் ஆகாதோ என்றான் – தேம்பா:31 30/4
உன் தோள் என் தோள் மரம் ஒன்று உறல் ஆகாதோ என்றான் – தேம்பா:31 30/4
மீன் நலம் கொள் மணி திண் தோள் வீங்கி அரி தேர் ஏறி வேய்ந்து ஆங்கு அன்னார் – தேம்பா:32 83/1
சையம் தோற்றிய தோள் தவழ் தாரினான் – தேம்பா:34 32/2
பொருள் மிக உன் தோள் என் தோள் பொருந்தி ஓர் மரத்தில் தூங்கி – தேம்பா:35 54/3
பொருள் மிக உன் தோள் என் தோள் பொருந்தி ஓர் மரத்தில் தூங்கி – தேம்பா:35 54/3

மேல்


தோளாய் (1)

பொய் தகாது என பொன் மணி வீங்கிய தோளாய்
எய்த ஓர்ந்தவை இழுக்கு என விடுதி என்று உரைத்தான் – தேம்பா:29 108/2,3

மேல்


தோளார் (2)

வாளி திரள் ஓங்கிய தூணி வளர்ந்த தோளார்
கூளி திரளோ அடு கூற்றது தோழர்-கொல்லோ – தேம்பா:16 19/1,2
தொனி பட்டு ஆர்த்து அரிய போரை தொடங்கினார் வயிர தோளார் – தேம்பா:17 20/4

மேல்


தோளான் (4)

மலை மூழ்கும் திண் தோளான் மன்னார் வைகும் அ நகருள் – தேம்பா:17 27/1
சுவா உறீஇ விழுங்கல் கண்டான் துளங்கு பொன் குன்ற தோளான் – தேம்பா:20 34/4
மணி திறத்து எழுந்த தோளான் மயங்கு இவர் துயரம் கண்டு – தேம்பா:20 114/1
விண்டு என வீங்கு தோளான் வினா ஒளித்து உணர்ந்த யாவும் – தேம்பா:29 109/1

மேல்


தோளின் (2)

வான் தான் ஓர் அணி என வெஃகிய கூந்தல் வல தோளின் வயங்கு திங்கள் – தேம்பா:5 33/3
குன்று ஒளித்திடும் திண் தோளின் கோன் இனிது ஈன்ற கோதை – தேம்பா:21 8/2

மேல்


தோளினர் (1)

சுழல் காலினர் கல் திரள் தோளினர் பொன் – தேம்பா:15 39/1

மேல்


தோளினார் (1)

தேசிகத்து இணை சீர் வரை தோளினார்
தேசிகத்து இணை சீர் வரைத்து ஓதும்-ஆர் – தேம்பா:1 77/3,4

மேல்


தோளினானும் (1)

குன்று இணை இயையின் குன்ற குவவிய தோளினானும்
இன்று இணை அடியை சூடி விரும்பிய நிலையின் ஊங்கும் – தேம்பா:25 73/1,2

மேல்


தோளோடு (1)

தோளோடு குரிசில் ஏந்தும் சுடர்ந்த பொன் கிடுகு நீண்ட – தேம்பா:15 88/3

மேல்


தோற்ற (1)

மன்னிய துணிவில் தோற்ற மண்ணைகள் நரகில் வீழ்க – தேம்பா:20 52/3

மேல்


தோற்றது (1)

தோற்றது எனவோ என உள் ஆர்த்து அறைகுவார் சிலரே – தேம்பா:5 154/4

மேல்


தோற்றம் (17)

துள்ளி வீழ் உயர் தூங்கிய அருவியின் தோற்றம் – தேம்பா:1 5/4
எல் தங்கும் அலையை மாறி இகன்று அகல் அகழி தோற்றம் – தேம்பா:2 7/4
கோ உலவு இஞ்சி சூழ்ந்த குவளை நீள் அகழி தோற்றம் – தேம்பா:2 8/4
வேரி ஆர் இதழை பூத்து வெறி எறி அகழி தோற்றம் – தேம்பா:2 9/4
காவலின் கது விடாத கனக மா மதிலின் தோற்றம் – தேம்பா:2 11/4
வான் நிகர் நிறுவும் சென்னி வைத்த பொன் தசும்பின் தோற்றம்
கோன் நிகர் நகரம் சூடும் குளும் சுடர் மகுடம் போன்றே – தேம்பா:2 14/3,4
துணி நிற தெளிந்தோன் கண்ட தோற்றம் ஈங்கு ஆய்ந்த-காலை – தேம்பா:7 61/3
மின் தாங்கு மலை தோற்றம் விளங்கு வடிவு ஒத்து எனவே – தேம்பா:10 20/4
நிலத்து இயல்பால் துளி நல் நீர் திரிந்த தோற்றம் நிகர் என சேர் – தேம்பா:10 73/1
துய்த்து எரிந்தன திங்கள் தேறிய தோற்றம் ஒத்தது இலங்கினாள் – தேம்பா:10 131/4
தான் மறையாது புடைத்து என மாலி தரித்தன தோற்றம் அதே – தேம்பா:15 108/4
நிலை ஒருங்கு சுனை நீரிய தோற்றம் – தேம்பா:21 23/4
உரு எனும் எண்_இல் காலாள் உடைய பேய் படைகள் தோற்றம் – தேம்பா:24 2/4
சொல் வரு தோற்றம் அதே – தேம்பா:28 148/4
துடி கோடி சூழ் முழங்க துணை அறும் ஆங்கு இ மனையின் தோற்றம் அன்றோ – தேம்பா:32 28/4
தூயினான் அடை தோற்றம் இதோ என்பார் – தேம்பா:34 31/4
தம் பொடி மிதித்தல் ஆகும் தகும் ஒளி தெருவின் தோற்றம் – தேம்பா:36 90/4

மேல்


தோற்றமும் (1)

துன்னி ஆர் நறவிய கனிகள் தோற்றமும்
மின்னி ஆர் உடு முடி வேய்ந்த நாயகி – தேம்பா:12 30/2,3

மேல்


தோற்றமே (5)

சோலை ஆர் தரு பூம் பணை தோற்றமே
மாலை ஆர் உடு காட்டிய வான் எனா – தேம்பா:10 24/2,3
முதிர் செய் மாண்பு உடை முழையின் தோற்றமே – தேம்பா:10 103/4
தொழும்-தொறும் தொழும்-தொறும் துளங்குகின்ற தோற்றமே – தேம்பா:11 2/4
சுளகொடு சவரம் வீசும் தோற்றமே போன்று வேழம் – தேம்பா:12 20/1
உறை கிடந்து அன ஒண் பிறை தோற்றமே – தேம்பா:13 29/4

மேல்


தோற்றமோ (1)

மேல் நிரைத்து எழுதிய விசும்பின் தோற்றமோ
கால் நிரைத்து எழும் தளிர் காழகத்து உயர் – தேம்பா:1 40/2,3

மேல்


தோற்றி (3)

உரு வளர் பருதி தோற்றி உடை தொழில் எஞ்ச நாதன் – தேம்பா:9 79/3
கரு தகும் வினைகள் பாவி கை படை பலவும் தோற்றி
செரு தகும் பகையும் தம்மில் திளைத்து உளம் மெலிவார் என்பீர் – தேம்பா:28 68/3,4
சொல் திறத்து ஒரு கணத்து உலகம் தோற்றி முன் – தேம்பா:30 52/1

மேல்


தோற்றிய (2)

உள் முழுது அருள் முகத்து உகள தோற்றிய
விண் முழுது இறைஞ்சு எழில் காண வேட்கையால் – தேம்பா:30 57/1,2
சையம் தோற்றிய தோள் தவழ் தாரினான் – தேம்பா:34 32/2

மேல்


தோற்றின (1)

திரி உரு தோற்றின சினந்த பேய்களே – தேம்பா:24 16/4

மேல்


தோற்றினார் (1)

எல் இயல் பட சுடர் இரவில் தோற்றினார்
பல்லியம் கடல் ஒலி பட முழக்கினார் – தேம்பா:13 19/1,2

மேல்


தோற்றினாள் (1)

சுவை எலாம் மலிய ஓர் விருந்து தோற்றினாள் – தேம்பா:26 130/4

மேல்


தோற்று (5)

பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய – தேம்பா:2 43/3
சொல் ஆரும் பங்கய கண் பொன் வரை தோள் சுடர் அகலம் தோற்று மேனி – தேம்பா:8 1/3
உதித்தனர் என்ன ஆயிரம் கதிரோன் உவமையில் தோற்று என ஒளித்து – தேம்பா:12 68/1
நரகம் கொள் தீயின் நிகர் தோற்று மாரி நனியாக விட்ட இவனே – தேம்பா:14 137/2
எல் எழுந்து இணை தோற்று என நாணலின் – தேம்பா:36 15/2

மேல்


தோற்றும் (1)

துன் அவை இளவல் தன் ஆண்மை தோற்றும் என்று – தேம்பா:14 128/3

மேல்


தோற்றுவாய் (1)

துலங்கின அகத்து உன் ஏவல் தொடர் நெறி தோற்றுவாய் என்று – தேம்பா:7 8/3

மேல்


தோற்றுவிக்கும் (1)

நீது ஒருங்கும் தோற்றுவிக்கும் நெறி வழுவா அற பதத்தான் – தேம்பா:34 42/3

மேல்


தோற்றுவித்து (3)

மண் எழுந்த நாளில் அருமறை நா போல் தோற்றுவித்து வழங்கல் செய்தான் – தேம்பா:11 104/4
உன்ன வாய் ஆகி வந்த நாள் உளதேல் தோற்றுவித்து இயற்றினோன் உளது ஆம் – தேம்பா:27 159/2
துயர் தந்தால் அரிய ஓர் தொடர்பை தோற்றுவித்து
உயிர் தந்தான் அவற்கு நான் உயிர் தந்தால் எனோ – தேம்பா:30 110/2,3

மேல்


தோற்றுவிப்ப (1)

பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில் தோற்றுவிப்ப புகழ் உற்று ஆய்ந்த – தேம்பா:11 103/3

மேல்


தோற்றுவிப்பான் (2)

முன் செய்கை அருள் செய்கை இக்கால் ஆய் பின் முனி செய்கை உலகு அஞ்ச தோற்றுவிப்பான் – தேம்பா:11 35/4
நன்று எழுந்த வினை பயத்தால் விளக்கு இட்டு அன்ன நவை எல்லாம் எல்லார்க்கும் தோற்றுவிப்பான் – தேம்பா:11 46/4

மேல்


தோன்ற (27)

வள் உலாம் கரு மத கரி இனம் என தோன்ற – தேம்பா:1 1/4
ஈரும் வாள் எயிற்றின் கூன் வெண் இளம் பிறை தோன்ற ஊனை – தேம்பா:2 10/1
கூன் நெடும் பிறை குழைந்த வாய் நிரைநிரை தோன்ற
ஊன் நெடும் திரை ஒழுக ஆங்கு அனைவரும் கூச – தேம்பா:3 31/1,2
ஏவிய ஆறு இவள் பிரியா அன்னார் இ நாள் எழில் முகத்தில் வான் முகத்தை தோன்ற தோன்றி – தேம்பா:8 49/1
செம்பொன் மேல் பசும்பொன்னால் எழுதினால் போல் திண் கவச மேல் அணிகள் தியங்கி தோன்ற
பைம்பொன் மேல் பயிற்றிய மா மணியால் எல்லை பாய் மகுடம் புனைந்து அலகை முனைந்து வென்ற – தேம்பா:8 62/1,2
கூடு அணி பரமன் தோன்ற குணித்த நாள் குறுகிற்று அம்மா – தேம்பா:9 130/4
துகில் கலாபம் உள் தோன்ற விளிம்பு எடுத்து – தேம்பா:10 31/1
உரி மாலை காண்டல் இலா எளிமை போர்த்த உரு தோன்ற
திரி மாலை கண்டவர் தாம் செய்த நிந்தை செப்பல் உற்றாம் – தேம்பா:10 59/3,4
அன்று இன்னான் இரு வினைக்கும் பயன் உய்த்து எய்தற்கு அரசு ஒக்கும் வடிவு ஒக்க பொலிந்து தோன்ற
இன்று அன்னான் நீதி முறை பிறழா நேர் சென்று இருபற்று அற்று ஒழுகும் நெறி எவர்க்கும் காட்ட – தேம்பா:11 56/1,2
தெளி முகத்து எவர்க்கும் தோன்ற தெளிக்குவாய் என்ன கேட்டு – தேம்பா:15 55/3
நூறு நூறு கலம் நூறி நூறுமொடு நூறு நூறு சுடர் தோன்ற நூறு – தேம்பா:16 32/2
தேர் எழு சுடர் வெம் போர் செம் கொடி உயர் தோன்ற
பார் எழு களம் எங்கும் பறவைகள் முரசு ஆர்ப்ப – தேம்பா:19 1/2,3
சீறு நெய் எயிற்று நீள் கூன் திங்களே தோன்ற நின்றாள் – தேம்பா:20 49/4
கொல் வினை அலகை போய் தன் கொள்கையில் கானம் தோன்ற
புல் வினை அறுப்ப நோற்றான் பொலிந்த நீபகன் என்பானே – தேம்பா:20 53/1,2
கார் முகத்து அகன்ற திங்கள் கதிர்செய் போல் தோன்றல் தோன்ற
போர் முகத்து அளிகள் ஆர்க்கும் பொழில் அகன்று இருவர் போகில் – தேம்பா:21 1/1,2
உருவாய் தோன்ற உள வயத்தால் உரு ஆங்கு எடுத்த கடிக்கு அரசன் – தேம்பா:23 5/2
சாம்பு உளம் கருதும் தீமை தன்னையே சாரா தோன்ற
கூம்பு உளம் கடுத்த வஞ்சம் குணம் என சொல்வார் தேடி – தேம்பா:25 15/2,3
ஆர் அற தொகையோன் மைமைக்கு அரியது ஓர் புதல்வன் தோன்ற
ஈர் அற படலை கண்ணி ஏந்தும் இவர்க்கு இறைவன் அ நாள் – தேம்பா:26 5/2,3
மாண் தகை அறத்தின் பாலான் மைந்தனே நினக்கு தோன்ற
காண் தகை உரிய பண்பால் கருணையன் அவனை என்பாய் – தேம்பா:26 7/1,2
தூ புரி முத்து அணி தோன்ற சூழ் முகை – தேம்பா:26 23/2
தொக்கு அடங்கிய தாய் இவண் தோன்ற வந்து – தேம்பா:26 34/3
துளி கொள் கார் முகில் தோன்ற ஈங்கு அகவி வாழ்ந்து ஆடும் – தேம்பா:26 74/3
தொகை தீர்ந்த வரத்தோன் வாய் தோன்ற யாரும் துதைந்து அஞ்ச – தேம்பா:26 170/2
சீர் நலம் பொலி மூதூரில் சிவாசிவன் விளங்கி தோன்ற
கூர் நலம் தெளிந்த காட்சி கொளீஇ சிலர் குளிர்ப்ப தேறி – தேம்பா:27 145/2,3
பொருள் தவழ்கிலதேல் தோன்ற பொருட்டு என்னோ சொல்-மின் என்றாள் – தேம்பா:29 9/4
மழை இடை குளித்த மின் என தோன்ற மழை ஒத்தார் அதை கொணர்ந்து உய்த்தார் – தேம்பா:30 140/4
வாய் இரக்கமும் அற்று ஆய வடு அடித்து என்பும் தோன்ற
பாய் இரத்தமும் ஆறு ஓட பழி உரு உடலை நோக்கீர் – தேம்பா:35 47/3,4

மேல்


தோன்றல் (21)

எல் ஆர் முகத்து இலங்கி பிறந்த தோன்றல் எழில் கண்டு – தேம்பா:3 53/3
சொல்லின் முகத்து இறையோன் தாளை தாழ்ந்து இ தோன்றல் அறத்து – தேம்பா:3 56/3
நிதி பழித்து ஒளிர்ந்த தோன்றல் நீய் பயந்து அவற்கு இயேசு – தேம்பா:7 10/3
சூர் விளைந்த பிணி இன்றி சூல் கன்னி பெறும் தேவ தோன்றல் தானே – தேம்பா:8 4/3
மின்னை வீறிய தோன்றல் விளம்பினான் – தேம்பா:10 111/3
குடத்தியர்க்கு அமைத்த பற்றல் கூர்ந்து தோன்றல் தாள் மிசை – தேம்பா:11 9/2
திரு கிளர் இன்ன தோன்றல் சிலர்க்கு உயிர் சிலர்க்கு கேடாய் – தேம்பா:12 93/1
சூரியன் நவி என தோன்றல் தோன்றினான் – தேம்பா:13 11/4
சொல்லிய மிக்கயேல் தோன்றல் தூய் அடி – தேம்பா:14 84/3
வல் அரி குழவி போன்றே வய தொடு பிறந்த தோன்றல்
செல் அரிது அடலோடு ஓங்கி சிறுவன் ஆய் சிறுமை இன்றி – தேம்பா:17 16/1,2
சூர் அற நிற்பார் இ தரு போன்று இ தோன்றல் செய் உறுதியால் என்றான் – தேம்பா:18 40/4
சூழ் அகத்து இருண்ட கா தோன்றல் தோன்றி அன்பு – தேம்பா:20 7/3
மருள் ஒன்றும் புலம்பல் தானும் மகிழ்வும் உள் தோன்றல் இன்றி – தேம்பா:20 100/3
பெஞ்சமின் என்னும் தோன்றல் பெயர்ந்து போய் பவள குப்பை – தேம்பா:20 108/2
கார் முகத்து அகன்ற திங்கள் கதிர்செய் போல் தோன்றல் தோன்ற – தேம்பா:21 1/1
தொடுத்த தன் அணிகள் பெய்து என் தோன்றல் என்று அரசி கொண்டாள் – தேம்பா:21 9/4
நலம் கெழு கருவில் தோன்றல் நவி வளர்ந்து ஆறாம் திங்கள் – தேம்பா:26 10/2
துடைத்த ஆசு அற சூல் உறை தோன்றல் ஆங்கு – தேம்பா:26 30/1
திங்கள் குழவி கோட்டு உருவின் சிறந்து அ தோன்றல் தோன்றினன்-ஆல் – தேம்பா:26 45/4
உளி அழ அழவே தோன்றல் உம்பர் மெய் எடுத்து போனார் – தேம்பா:26 93/4
நல் வினை விளைவு கண்ட நகர் எலாம் நயப்ப தோன்றல்
பல் வினை வழியில் ஆய பயன் எலாம் பணிப்ப தாதை – தேம்பா:27 70/1,2

மேல்


தோன்றலால் (1)

புலத்தின் தன்மையால் புறத்து அவை தோன்றலால் அன்பின் – தேம்பா:29 106/2

மேல்


தோன்றலில் (1)

சூசை வரு நாதன் ஒளி தோன்றலில் அடங்கா – தேம்பா:35 32/2

மேல்


தோன்றலின் (1)

தோகை கொள் மயில் என மாதர் தோன்றலின்
வாகை கொண்டார் என மயில் ஒடுங்கலால் – தேம்பா:1 49/1,2

மேல்


தோன்றலை (6)

சொக்கு அளாவு உரு தோன்றிய தோன்றலை
மிக்கயேலொடு காபிரியேல் விழைந்து – தேம்பா:10 109/1,2
முந்தை தோன்றலை தந்து முன் ஏற்றினார் – தேம்பா:10 112/4
ஏதம் இன்றி மாலி ஈன்ற காந்தி என்று தோன்றலை
கோது அகன்று உயிர்த்த கோதை தாள் முன் அன்ன கோவலர் – தேம்பா:11 10/1,2
தூயின மணியின் சாயல் தோன்றலை வளர்த்திட்டாளே – தேம்பா:21 11/4
சொரிந்த பூ முக தோன்றலை வேண்டினான் – தேம்பா:24 60/4
தூற்று_அரும் குண தோன்றலை நோக்கலால் – தேம்பா:26 32/3

மேல்


தோன்றவே (1)

துகிலில் தோய் உரம் தோய் அணி தோன்றவே
அகிலில் தோய் துகில் வாடையோடு ஆட விண் – தேம்பா:9 54/1,2

மேல்


தோன்றற்கு (1)

ஐ எடுத்து ஒளிர் அ தோன்றற்கு அன்பு எடுத்து உயிரை காக்க – தேம்பா:21 13/1

மேல்


தோன்றா (2)

தேர் வளர் உருளும் செல்லா தெரு வளர் அரவும் தோன்றா
ஊர் வளர் அசைவும் இல்லா உறங்கிய சாமத்து ஏகி – தேம்பா:13 20/2,3
கரப்பு அற கற்ற போரும் கடிது உனக்கு இவையே தோன்றா
துரப்பு அறசர் உளம் மூழ்கி ஊன் நுகர்ந்து ஒளி கால் வேலோய் – தேம்பா:28 13/3,4

மேல்


தோன்றாது (2)

மீண்டு ஓர் பசி தோன்றாது உயர் குன்றின் மிசை சென்றான் – தேம்பா:9 65/4
பயம் மிக பகை தோன்றாது பசு வரி புலியின் மேலும் – தேம்பா:14 115/1

மேல்


தோன்றி (49)

கோடா வரத்து ஆசி செய் வான் மேல் ஓர் குரல் தோன்றி
ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பா அணி ஆவான் – தேம்பா:3 57/2,3
துறவினால் உடல் துறந்தன உயிர் என தோன்றி
நறவினால் நறை நறும் துணர் விள் அலர் போல் இல்லற – தேம்பா:6 58/1,2
செல் ஆரும் உலகு இமைக்கும் செம் கதிரோன் உரு தோன்றி தேவ வல்லோன் – தேம்பா:8 1/1
விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து உளத்து உருவம் வேய தோன்றி
மண் புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த மது சொல் கொண்டான் – தேம்பா:8 2/3,4
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள் – தேம்பா:8 44/4
விண் கதிர் கால் உரு தோன்றி விண்ணில் நின்றாள் விரத நிலை இதோ என்ன வளர்ந்து தேயும் – தேம்பா:8 46/1
ஏவிய ஆறு இவள் பிரியா அன்னார் இ நாள் எழில் முகத்தில் வான் முகத்தை தோன்ற தோன்றி
பூவிய ஆறு அரக்கு ஒளி பெய் துகில் உடுத்து பொழி மது வாடாத மலர் சுடிகை சூடி – தேம்பா:8 49/1,2
ஏர் இறகு ஆறு ஓர் ஒருவர் கொண்டு தோன்றி ஏழ் எழு ஆய் பத்து அணியாய் நின்ற வானோர் – தேம்பா:8 61/1
உரு வழி தோன்றி மாக்கள் உறவு உற மகன் ஆனானே – தேம்பா:9 81/4
மண் தலம் அகத்து தோன்றி மனு_மகன் பிறப்ப நாள் ஆய் – தேம்பா:10 7/2
நல் செய்கை தளிர்ப்பதற்கே முன்னர் தோன்றி நயன் தருவான் மீண்டு அரிய திறத்து நீதி – தேம்பா:11 35/2
விண் கனிய கவின் பூண்ட வடிவம் சூட்டி விழைவு இயற்றும் குழவி என இங்கண் தோன்றி
புண் கனிய குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான் புலவர் எலாம் வருந்தினும் தம் புகழின் மிக்கோன் – தேம்பா:11 36/3,4
இ காலம் தயை காலம் என்று தோன்றி எளியன் என திரிந்து இனியது எவர்க்கும் கூறி – தேம்பா:11 39/1
துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கி சுடர் தவழும் தூய் முகிலில் பொலிந்து தோன்றி
முடி உண்ட அரசர் அரசு என மேல் நிற்பான் முருகு முகை முகத்து இங்கண் நிற்கும் இன்னான் – தேம்பா:11 45/3,4
முன் செய்கை அனைத்தும் அவண் தோன்றி தீமை முயன்றதும் உள் விரும்பியதும் உரைத்த சொல்லும் – தேம்பா:11 47/1
பேர் அணிக்கு இரு தலைவரின் பெற்றியின் தோன்றி
தேர் அணிக்கு இரும் செம்_சுடர் அழகு உற தீட்டும் – தேம்பா:11 91/2,3
ஊன் நிலை குழவி தோன்றி உலகு எலாம் அளிக்கும் அன்பின் – தேம்பா:12 19/1
கால் நிலை தோன்றி அ கார் கடல் நிலை பயத்தது என்று – தேம்பா:12 19/3
நாக நீல் நெற்றி தோன்றி நயன் தரு மறையின் சிந்தும் – தேம்பா:12 21/3
கன்னிய புரிசை சூழ் தர தோன்றி கசடுறும் எரோதன் என்ற அரசன் – தேம்பா:12 58/2
துகிலொடும் ஏந்தும் குழவி அம் முகிலுள் தோன்றிய மதி என தோன்றி
இகல் அடும் இன்பத்து எவரும் உள் குளிர இளம் கதிர் பரப்பியே போனார் – தேம்பா:12 63/3,4
பம்பிய காட்சி தோன்றி பறந்து என அன்று வந்தான் – தேம்பா:12 76/4
துஞ்சிய நிலத்தில் உயிர் தோன்றி வினை நீக்கி – தேம்பா:14 10/2
உடல் வண்ணத்து இளவல் என இங்கண் தோன்றி உதித்த பிரான் – தேம்பா:14 92/1
சுளி முகத்து அழலை தும்மும் துரக மேல் இருவர் தோன்றி
தெளி முகத்து எரிந்த மின் போல் தீ எரி இரு வாள் வீசி – தேம்பா:15 86/2,3
அல் இருள் தோன்றி அடுத்தன காலை அடங்கலும் ஒன்னலரை – தேம்பா:15 105/1
தேன் முகம் செறித்த பைம் பூம் திரு முகை முகத்தில் தோன்றி
தான் முகம் செறித்த அன்பின் தகவு உகும் இவன் தான் என்றான் – தேம்பா:15 179/3,4
சூழ் அகத்து இருண்ட கா தோன்றல் தோன்றி அன்பு – தேம்பா:20 7/3
புன் வல தொழிலோன் என்றும் பொருத்தலின் தோன்றும் தோன்றி
மன் வல தொழிலோன் உன்னால் வரிசை பெற்று உய்வான் என்றான் – தேம்பா:23 65/3,4
தொக்கு அணி வேட முனிவரன் என நான் தோன்றி ஆங்கு எவரையும் வெல்வேன் – தேம்பா:23 105/4
உருவினால் கலங்க தோன்றி உடன்ற பேய் உளத்தில் அன்னார் – தேம்பா:24 23/3
அரி சுமந்து எழுந்த பைம்பொன் ஆசனத்து இருந்து தோன்றி
வரி சுமந்து அடும் வெம் வேங்கை மறத்தொடு பொலிய நின்றான் – தேம்பா:25 16/3,4
துஞ்சினார் என ஆங்கு அவர் தோன்றி வாழ் – தேம்பா:25 94/3
கதிர் செயும் உருவில் தோன்றி கனிவொடு சூழ்ந்த விண்ணோர் – தேம்பா:26 91/1
நால் வழி அனைத்தும் தோன்றி நவை அற தொபீயன் காண – தேம்பா:27 68/3
உரு கொடு தோன்றி நானே உரு இலா வானோன் இன்ப – தேம்பா:27 74/1
கற்ற நூல் எளிய தோன்றி கற்கும் முன் அரியது அன்றோ – தேம்பா:28 9/1
ஊன் உரு கழிந்த நீள் தோல் உடுத்த என்பு ஒழுங்கின் தோன்றி
மீன் உரு கழிந்த கண் புண் மெலி முக சுரமி என்பாள் – தேம்பா:29 3/2,3
இடம் புனைந்து உணர்ந்த யாவும் எழுதிய நினைவில் தோன்றி
கடம் புனைந்து அதிர் கைம்மாவும் காகமும் கண்ட பின்பு – தேம்பா:29 11/2,3
துஞ்சிய கனவில் தெய்வம் துயர் முதிர்ந்து எஞ்சி தோன்றி
அஞ்சிய என்னை நோக்கி அனைவரும் தன்னை நீத்து – தேம்பா:29 44/1,2
தொக்கன எவரும் ஓட சூழ் இரு வானோர் தோன்றி
நக்கன கதத்து அன்னானை நண்ணி மத்திகையால் பெய்தார் – தேம்பா:29 86/3,4
நீர் ஆழி அகன்று இரவி தோன்றி மூவர் நீங்கினர் என்று – தேம்பா:30 11/2
கோள் அரி உழுவை மற்ற கொடிய மா உருவில் தோன்றி
நீள் அரிது யுத்தத்து எஞ்சா நெடிய அம் மலை-கண் நோன்பின் – தேம்பா:30 66/2,3
மின் வளர் உருவின் தோன்றி விளி நலம் விரும்பல் வேண்டா – தேம்பா:30 134/4
ஒல்லிய தன்மைத்து எளியனாய் தோன்றி ஒரு மரத்து இறப்பது அ வேதத்து – தேம்பா:31 88/3
விண் கடந்து எவரும் வீட்டை மேவுதற்கு உருவாய் தோன்றி
மண் கடந்து அரசு ஆம் ஆறு வகுத்தலே கேள்மோ என்றான் – தேம்பா:32 33/3,4
மை இலா மலர்ந்த கொம்போ வரைந்த நல் படமோ தோன்றி
நை இலா துயில் கொண்டு என்ன நளி ஒளி வீசிற்று அம்மா – தேம்பா:34 20/3,4
மையம் தோன்றி இ வாய் உரை போக்கினான் – தேம்பா:34 32/4
துன் உயிரை ஓம்பும் அருள் தோன்றி எனை ஆளும் – தேம்பா:35 33/1

மேல்


தோன்றிய (18)

துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவ தோன்றிய ஏணியை போன்றே – தேம்பா:2 42/4
தூக்கி பார்த்தனன் தோன்றிய தீது எலாம் – தேம்பா:4 59/2
சூழ் திரை உடுத்த பாரில் தோன்றிய நவத்தை காண்டற்கு – தேம்பா:7 20/1
வண்டு ஆயிரம் செம்_சுடர் தோன்றிய முன் வந்தே கமல – தேம்பா:9 23/1
சூல் நெறி நர_தேவு ஆகி தோன்றிய பின்னர் எந்தை – தேம்பா:9 74/2
சொக்கு அளாவு உரு தோன்றிய தோன்றலை – தேம்பா:10 109/1
தூவும் பாலால் ஒளி பகலில் துளங்கு மீன் தோன்றிய ஆறும் – தேம்பா:10 150/2
துகிலொடும் ஏந்தும் குழவி அம் முகிலுள் தோன்றிய மதி என தோன்றி – தேம்பா:12 63/3
தொல் உடை சுருதி மாண்பு இயல் காட்ட தோன்றிய தரு இது ஆம்-மன்னோ – தேம்பா:18 34/4
தொல்லின் தம் மனத்து ஆசு அற தோன்றிய
எல்லின் ஒண் மறை இற்று ஒழிந்தார் என – தேம்பா:18 48/1,2
சடம் புரையின் தோன்றிய வான் தளமோ தேறல் சால்பு அரிதே – தேம்பா:20 18/4
எள் உற தோன்றிய இடுக்கண் ஏது என்பீர் – தேம்பா:26 127/4
துஞ்சிய-காலை மெய் போல் தோன்றிய கனவும் ஒன்று ஆம் – தேம்பா:29 15/3
துன்னிய காலை துன்னா தோன்றிய அரிது ஒன்று உண்டோ – தேம்பா:30 133/2
கூடும் ஓர் பயன் இதோ என நக்கான் குழவியாய் தோன்றிய நாதன் – தேம்பா:30 141/2
வாழ் யாவரும் வளம் பெற தோன்றிய நாதன் – தேம்பா:31 1/2
வான் உகும் வாமையில் தோன்றிய வானவர் மகிழ்ந்து யாவும் மனத்து உள்ளி – தேம்பா:32 47/1
சுருதியே வடிவாய் தோன்றிய தாயின் தொடர்பு அருள் உதவி சார்பு எய்த – தேம்பா:36 35/3

மேல்


தோன்றிய-கால் (1)

பார் முகத்து முதல் உடல் புக்கு எம் உயிர்கள் தோன்றிய-கால் பரிவு அற்று எல்லா – தேம்பா:27 95/1

மேல்


தோன்றியது (4)

அஞ்சுக புவி அனைத்துமே தோன்றியது ஆம்-ஆல் – தேம்பா:5 6/4
மன்னிய வளம் கொள் எருசலேம் என்னும் மா நகர் தோன்றியது அன்றே – தேம்பா:12 58/4
சூர் எழும் சிறை தோன்றியது ஆம் அரோ – தேம்பா:20 83/4
தடம் மாறு இல வண் கர வீரரொடும் சலராசியின் தோன்றியது ஓர் படையே – தேம்பா:24 24/4

மேல்


தோன்றிலது (1)

சொல்லும் நீர்மையின் துறும் பகை தோன்றிலது என்னில் – தேம்பா:25 33/3

மேல்


தோன்றிற்று (2)

தொடுத்த உவப்பில் இன்பு ஒழியா தோன்றிற்று அன்று ஓர் விழா அணியே – தேம்பா:12 9/4
முனி வரும் நரக பூதம் முழங்கி மேல் தோன்றிற்று அன்றோ – தேம்பா:32 91/4

மேல்


தோன்றிற்றே (3)

நாக நெற்றியின் நன் மதி தோன்றிற்றே – தேம்பா:13 28/4
அழ எழும் துயர் ஆற்று இல தோன்றிற்றே – தேம்பா:13 38/4
அன்னாள் உற்ற சினம் தூண்ட அங்கண் தோன்றிற்றே – தேம்பா:29 23/4

மேல்


தோன்றின் (2)

சொற்று உறும் எனது சூழ்ச்சி துணிவு இழிவாக தோன்றின்
முற்று உறும் மொழியை கேட்டு முனிதியே முருகு வேலோய் – தேம்பா:25 59/3,4
கோன் உறை கோயில் வைகி கோ கணம் என்ன தோன்றின்
கான் உறை உலகில் நாம் கொள் கசடு அற வரம் தந்து ஓம்ப – தேம்பா:28 65/2,3

மேல்


தோன்றின (2)

தரு வளர்வொடு புதி தன்மை தோன்றின
வெரு வளர் முறையில் தான் விளிந்த வேலையே – தேம்பா:27 6/3,4
மை மணி கரும் குடை மயங்கி தோன்றின – தேம்பா:32 56/4

மேல்


தோன்றினரே (1)

பல் பேர் உரு இ மூவர் அலால் பலரும் காணா தோன்றினரே – தேம்பா:12 12/4

மேல்


தோன்றினன் (1)

மணி உயிர்க்கு நாண் வடிவில் தோன்றினன்
பிணி உயிர்க்கும் மால் அவா செய் பீழையால் – தேம்பா:14 15/1,2

மேல்


தோன்றினன்-ஆல் (1)

திங்கள் குழவி கோட்டு உருவின் சிறந்து அ தோன்றல் தோன்றினன்-ஆல் – தேம்பா:26 45/4

மேல்


தோன்றினார் (5)

சுண்ணம் தோய்ந்து உரம் தூங்குபு தோன்றினார் – தேம்பா:9 53/4
துறவினால் இரவலர் ஆகி தோன்றினார்
உறவினாரினும் உறவு எனினும் ஓர்வரோ – தேம்பா:10 78/1,2
பரு சுடர் பாய்ந்து உற பணிந்து தோன்றினார் – தேம்பா:13 18/4
வான் முகத்து இரு சுடர் மருள தோன்றினார் – தேம்பா:29 126/4
துய் மணி குறட்டினை சுமந்து தோன்றினார் – தேம்பா:36 121/4

மேல்


தோன்றினாரே (1)

அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு ஆங்கு உலாம் பேர் அணிகள் இரு தலைவர் என தோன்றினாரே – தேம்பா:8 62/4

மேல்


தோன்றினாள் (1)

துயர் வினை அடைந்து உளத்து அரற்றி தோன்றினாள் – தேம்பா:7 79/4

மேல்


தோன்றினான் (13)

சூர் முகத்து உடைந்து உளம் கரைந்து தோன்றினான் – தேம்பா:7 78/4
ஆருயிர் தோழனும் அலங்கி தோன்றினான் – தேம்பா:9 88/4
விண் குடி தகைமையால் விளங்கி தோன்றினான் – தேம்பா:9 90/4
துன்னிய புய மலை துளங்க தோன்றினான் – தேம்பா:9 92/4
ஆய் படா வயத்து அமலன் தோன்றினான் – தேம்பா:10 95/4
தாபதத்து எழீஇ தரையில் தோன்றினான் – தேம்பா:10 97/4
தோன்றினான் என நசை உள் தூண்டினால் – தேம்பா:10 98/1
சூரியன் நவி என தோன்றல் தோன்றினான் – தேம்பா:13 11/4
தொழும் தனது இரு கரம் குவித்து தோன்றினான் – தேம்பா:26 136/4
மின்ன மு முடியினோன் வேய்ந்து தோன்றினான் – தேம்பா:27 4/4
தான் உலகு அளித்து உறி தரித்து தோன்றினான் – தேம்பா:27 5/4
வாமம் சால் நில மன்னவன் தோன்றினான் புறத்தே – தேம்பா:31 4/4
சொக்கு அடைந்த உரு கொடு தோன்றினான்
இக்கு அடைந்த இளம் துணர் வாகையான் – தேம்பா:34 28/3,4

மேல்


தோன்றினானே (2)

சீர் வளர் வண்ணத்து அங்கண் சிதைவு இலான் தோன்றினானே – தேம்பா:20 99/4
மீன் நலம் அணிந்த நாகு விது என தோன்றினானே – தேம்பா:21 10/4

மேல்


தோன்றினேன் (1)

ஊன் அருந்திய உடலொடு தோன்றினேன் மிடி நோய் – தேம்பா:32 20/3

மேல்


தோன்று (8)

தூய மா கன்னிக்கு ஏதம் தோன்று இலா சுடரின் ஊங்கு – தேம்பா:7 16/3
துலங்கு ஒளி படம் உயர் தோன்று இல் ஆயதே – தேம்பா:9 113/4
தூம தீ எழ தோன்று இருள் போன்று கண் – தேம்பா:10 33/3
துயர் இயல் தோன்று இடம் விலங்கு துன் இடம் – தேம்பா:10 83/3
சூர் எழு வெம் காரணமும் தோன்று இலது உட்கு உற்றனமே – தேம்பா:23 71/4
சொன்ன முன் கதிகள் கடை தோன்று இலா – தேம்பா:27 91/1
பகை பட கலந்த வண்ணம் பழுது இல் ஓவியம் தோன்று ஆறும் – தேம்பா:28 16/1
தூது உற உயிர் போய் மீண்டு தோன்று அளவு உடலை பூவே – தேம்பா:34 22/1

மேல்


தோன்றுதலால் (1)

துணிக்க அரிது ஆம் விழைவு ஆதல் இளமையின்-கண் தோன்றுதலால்
கணிக்க அரிது ஆம் அருள் புரிந்த கடவுள் ஒன்றே மனம் சேர – தேம்பா:6 14/2,3

மேல்


தோன்றும் (17)

களி சிறை செயும் கதம் கொடு வெரு உற தோன்றும் – தேம்பா:3 11/4
பாரின்-பால் தோன்றும் பாலால் இருவர்-பால் பயந்த சேய் போல் – தேம்பா:9 126/3
குன்று எழுந்த செம்_சுடர் போல் முகில் மேல் தோன்றும் குண தொகையோன் வலத்து இறைஞ்சி உயர வானோர் – தேம்பா:11 46/1
மல் செய்கை உறுதியினால் இமிழில் இக்கால் மறைய அவை துடையாதால் தோன்றும் அன்றே – தேம்பா:11 47/4
நல் நிறத்து ஆரம் பூண்டு நாடி வந்து அணியின் தோன்றும்
செல் நிற குடையில் கொன்ற செழித்த செம் கதிரின் வெப்பத்து – தேம்பா:19 14/2,3
மின்னும் உருவோடு இ உலகில் விளங்க தோன்றும் மா முனியே – தேம்பா:19 33/4
குடம் புரையின் தோன்றும் மதி கொழித்த கற்றை தெளித்து மணி – தேம்பா:20 18/1
வடம் புரையின் சித்திரங்கள் வரைந்து தோன்றும் வடிவம் அதோ – தேம்பா:20 18/2
புன் வல தொழிலோன் என்றும் பொருத்தலின் தோன்றும் தோன்றி – தேம்பா:23 65/3
தான் விளை ஆகுல காலம் தான் இது என தோன்றும் அய்யா – தேம்பா:23 70/4
தேம்பு உளம் கூச தோன்றும் திரு விளக்கு அவித்து மீண்டும் – தேம்பா:25 15/1
மீய் முகத்து உடையில் தோன்றும் விசும்பு சூழ் வரையில் தூங்கி – தேம்பா:28 57/1
கண் மறைத்து இருட்டும் மாயை கட்டு என தோன்றும் என்றாள் – தேம்பா:29 7/2
சுளித்த நெஞ்சு உளைந்த பின் தோன்றும் சூட்சியால் – தேம்பா:29 30/3
சொல் மலை பழித்து எழீஇ தோன்றும் மங்கையர் – தேம்பா:32 68/3
சொல் தாறு கடந்த சினம் சூட்டு ஆளி ஏந்தி அவண் தோன்றும் மன்னர் – தேம்பா:32 78/3
ஐயம் தோன்றும் மனத்து அயர்வு அற்றிட – தேம்பா:34 32/1

மேல்


தோன்றும்-காலும் (2)

தொல் வினை இனிய என்று துகளுற தோன்றும்-காலும்
நல் வினை அரிய என்று நலம் கெட தோன்றும்-காலும் – தேம்பா:28 140/1,2
நல் வினை அரிய என்று நலம் கெட தோன்றும்-காலும்
கொல் வினை நிரைய செம் தீ குளிப்ப நல் உணர்வில் தாழ்ந்து – தேம்பா:28 140/2,3

மேல்


தோன்றுமே (1)

தூவி கண் அரும் கண் துயர் தோன்றுமே – தேம்பா:28 104/4

மேல்


தோன்றுமோ (1)

தோய் ஒளி மணி நலம் தோன்றுமோ இவர் – தேம்பா:10 77/2

மேல்


தோன்றுவதே (1)

எள்ளும் ஆறு இயற்றும் தீவினை செய்யும் இரும் பகை அன்று தோன்றுவதே – தேம்பா:28 96/4

மேல்


தோன்றுவான் (1)

தூவிய முகில் என தோன்றுவான் என்றார் – தேம்பா:14 82/3

மேல்


தோன்றுழி (1)

தூண்டும் ஓர் சினம் தோன்றுழி அ பகை – தேம்பா:11 27/3

மேல்