கெ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கெட்டது (2)

விடம் புரை பட்ட காலால் வியன் தரு கெட்டது என்னா – தேம்பா:18 32/2
தக்கும் ஓர் அறிவு இல தரணி கெட்டது என்று – தேம்பா:35 17/3

மேல்


கெட்டன-கால் (1)

கடல் ஒத்து உயிர் கெட்டன-கால் அலை கொள் – தேம்பா:31 53/3

மேல்


கெட்டார் (1)

குணிக்க உம்பரும் மானிடரும் குணியா கெட்டார் என்னா – தேம்பா:9 27/2

மேல்


கெட்டான் (1)

மால் கலந்த அன்பின் தலை மயிர்க்கண் என்றான் மதி கெட்டான் – தேம்பா:17 33/4

மேல்


கெட்டு (8)

மின் ஒளி சாயல் கெட்டு வீழவும் கண்ட யாரும் – தேம்பா:22 14/3
தூவினால் என கெட்டு அதிர் சோகு எலாம் – தேம்பா:24 59/2
மிடைந்த பாசறை பொறாமையில் வீழ்ந்தனள் உயிர் கெட்டு
உடைந்த காலையின் உடல் நிலை விழுவது போன்றே – தேம்பா:26 54/3,4
வானவர் ஆக வான் மேல் வாழ்ந்த நல் உயிர்கள் கெட்டு
தானவர் ஆக செய்த தகுதி மேல் கொடிய பாவம் – தேம்பா:28 74/1,2
மேதை கெட்டு இருண்டு இரு விழி கெட்டு எள்ளிய – தேம்பா:29 92/2
மேதை கெட்டு இருண்டு இரு விழி கெட்டு எள்ளிய – தேம்பா:29 92/2
தீய்ந்த ஓர் கறல் என கருகி சிந்தை கெட்டு
ஆய்ந்த ஓர் நிலை பயன் இதோ என்று ஆர்த்து உணா – தேம்பா:29 128/1,2
வவ்விய தவம் கெட்டு அ மா மரக்கலம் கவிழ்ந்ததே போல் – தேம்பா:30 83/1

மேல்


கெட்டோம் (3)

குன்றாது ஆங்கு உள செல்வம் இழந்தோம் நொந்தோம் குலைகிற்போம் கரை காணா மருண்டோம் கெட்டோம்
பின்றாது ஆர்த்து எரி வேவோம் அந்தோ அந்தோ பேறு இல்லார் குலம் இல்லார் அவரை என்றோம் – தேம்பா:11 51/2,3
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ என்று பின் தாம் நச்சு உயிர் பொன்றாது என்றும் வேவார் – தேம்பா:11 55/4
கெட்டோம் அந்தோ மின் என ஒல்கி கெடும் நன்றி – தேம்பா:28 114/1

மேல்


கெட (50)

தெள் வார் உரை முகிலும் கடல் திரையும் கெட முகியா – தேம்பா:2 64/1
சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம்பொன் சூல் முற்றி – தேம்பா:3 53/1
அல் ஆர் இருள் கெட மீ முளைத்த திங்கள் அணி மணி போல் – தேம்பா:3 53/2
பல்லார் உடை மம்மர் கெட தாய் இன்ப பயன் கொண்டாள் – தேம்பா:3 53/4
உள்ளம் கெட உள்குடியாய் உறைந்த குணுங்கு ஓட்டிய பின் – தேம்பா:10 54/1
கள்ளம் கெட மெய்ஞ்ஞானம் காட்டி கடந்து ஏகினும் கான் – தேம்பா:10 54/2
வெள்ளம் கெட மல்கு அருள் சேர் வியன் வான் கிழத்தி நிழலால் – தேம்பா:10 54/3
வள்ளம் கெட உள் வரம் எய்திய அம் மடந்தை ஒசிந்தாள் – தேம்பா:10 54/4
இவ்வாறு எவ்வாறு உள்ளம் கெட எ பொருளோ உதவிற்று – தேம்பா:10 55/1
மருள் சுரந்த வடு கெட மைந்தன் ஆய் – தேம்பா:10 121/3
உருக்கும்-கால் உலகு உயிர் எலாம் கெட
முருக்கும் காலமே முடிந்து போய் அருள் – தேம்பா:14 13/1,2
தீய் வினை செய்த போது எசித்து சீர் கெட
நோய் வினை செய்தனன் நுனித்து அ நாடர் தாம் – தேம்பா:14 77/1,2
கொய்த காய் இடர் கெட குளித்து உள் ஆடினான் – தேம்பா:14 85/4
மறை நெறி நீங்கிய மனிதர் உள் கெட
நிறை நெறி நீங்கிய காம நீர் குளித்து – தேம்பா:14 99/1,2
எரி கெட சினந்த வில் எறிந்த மாரி முன் – தேம்பா:15 140/1
பரி கெட பரி புனை பறந்த தேர் கெட – தேம்பா:15 140/2
பரி கெட பரி புனை பறந்த தேர் கெட
கரி கெட படை எலாம் கலங்கி போர் கெட – தேம்பா:15 140/2,3
கரி கெட படை எலாம் கலங்கி போர் கெட – தேம்பா:15 140/3
கரி கெட படை எலாம் கலங்கி போர் கெட
நரி கெட சினத்து அரி நலத்தின் கோறினான் – தேம்பா:15 140/3,4
நரி கெட சினத்து அரி நலத்தின் கோறினான் – தேம்பா:15 140/4
திதி யாவும் எரிந்து கெட தழல் திக்கு கண்ணான் – தேம்பா:16 17/2
ஆங்கு நான நெய் பூ அளகம் கெட
வீங்கு நோயின் நிலத்தின் விழுந்து அடித்து – தேம்பா:17 44/1,2
நகைத்தன தன்மைத்து ஒளித்தனன் என்று நசை கெட பெரும் பகை வீங்கி – தேம்பா:20 76/1
மன்னன் அன்று மனம் கெட கண்டவை – தேம்பா:20 86/1
சீலமே கெட நசை செகுத்து இலால் என்பார் – தேம்பா:20 127/4
மை வகை திற பேய் மாக்கள் வளம் கெட தெரிந்த சாகி – தேம்பா:22 22/1
கூழ் முக நிலம் கெட பேய் முன் கொண்ட ஏழ் – தேம்பா:22 27/3
செ வழி ஒழிந்த மன் உயிர் கெட ஓர் செயிர் வழி காட்டவோ வேண்டும் – தேம்பா:23 101/2
கெட கலி என்னோ மருட்டு உணர்வு என்னோ கேதம் ஒன்று எசித்து-இடை காணேன் – தேம்பா:23 102/4
விழுந்து விண் தரள் கெட வெறி ஒருங்கும் ஆர்ப்பு – தேம்பா:23 122/3
உள்ளிய சமர் எலாம் ஒழிந்து உளம் கெட
எள்ளிய குணுங்கு இனம் ஏங்கி விம்மவும் – தேம்பா:24 21/1,2
கருவினால் கலங்க தெண் அம் கயம் கெட தெளிவு அற்று அன்ன – தேம்பா:24 23/1
செல் திறத்து ஒலி சீறிய பேய் கெட
வில் திறத்து வியன் தவம் ஏந்தி அம்பின் – தேம்பா:24 56/2,3
அரிந்த நோய் கெட எசித்தனர் ஆற்றிய அறனோ – தேம்பா:26 56/2
ஆழ்ந்த நீர் கடல் அண்டி நலம் கெட
தாழ்ந்த நீர் புனல் தன்மையின் ஆயினார் – தேம்பா:27 34/3,4
காதை வாய் மொழி கண்ணி உளம் கெட
மேதை வாய் மொழி வேதம் அது என்பவோ – தேம்பா:27 82/3,4
உள் நலம் கெட ஒருங்கு உலகு எலாம் கெட – தேம்பா:27 117/2
உள் நலம் கெட ஒருங்கு உலகு எலாம் கெட
பெண் நலம் கொடியது ஓர் பெரு நஞ்சு ஆகி மேல் – தேம்பா:27 117/2,3
பொய்யால் உயிரே கெட மலி பல் புரைகள் மூழ்கி உடல் – தேம்பா:28 22/2
மருண்டு இருண்டு உயிர் கெட மயல் செய் வாள் முகம் – தேம்பா:28 49/2
தூய் வினை வயத்தோன் செய்த தொழில் கெட உணர்ந்த பாவம் – தேம்பா:28 73/2
நல் வினை அரிய என்று நலம் கெட தோன்றும்-காலும் – தேம்பா:28 140/2
நிரைத்தன இருள் கெட வெயிலை ஆக்கிய நிறத்து அணி உரு கொடு அமரர் கோ கணம் – தேம்பா:30 85/2
நீர் வழி முகம் கெட நேடி அஞ்சினார் – தேம்பா:31 16/4
ஒளி பொருள் இன்பம் வெஃகிய வினையால் உயிர் கெட நுழைந்த தீது ஒழிப்ப – தேம்பா:31 91/1
வினை கெட பெரும் வெறுக்கையர் பொழி நிதி குப்பை – தேம்பா:32 16/1
தனை கெட திரு தாள் மிசை நவ மணி கூப்பின் – தேம்பா:32 16/2
நனை கெட கவின் நந்தன சால்பு அதோ என்றான் – தேம்பா:32 16/3
சுனை கெட கலுழ்ந்து ஊற்று அது ஆய் துளித்த கண் சூசை – தேம்பா:32 16/4
தைக்கும் ஓர் அம்பின் பீடை தகை கெட மிகும்-கால் வான் மேல் – தேம்பா:33 9/3

மேல்


கெடக்கெட (1)

கெடக்கெட தந்து வான் மேல் கேழ் முடி சூடி நிற்பார் – தேம்பா:32 95/4

மேல்


கெடவும் (1)

மீளவும் கரு வித்து அழியவும் அழியா வெண்ணெயின் திரண்ட பின் கெடவும்
நீளவும் கெடாது பிறந்து மாய்ந்திடவும் நின்று நல் கலை துறையுறும்-கால் – தேம்பா:23 111/1,2

மேல்


கெடாது (1)

நீளவும் கெடாது பிறந்து மாய்ந்திடவும் நின்று நல் கலை துறையுறும்-கால் – தேம்பா:23 111/2

மேல்


கெடின் (2)

தண் அம் வேர் கெடின் தரு எலாம் சாய்தலும் அரிதோ – தேம்பா:23 96/4
மை திறத்து உளம் கெடின் வழங்கும் வெற்றி என்று – தேம்பா:23 119/2

மேல்


கெடுக்க (1)

இல்லது இலதேல் வினையே இகல் செய்து அவரை கெடுக்க
வல்லது இலதே என்பார் வரையா தொழுது மகிழ்வார் – தேம்பா:14 72/3,4

மேல்


கெடுத்தவன் (1)

அறம் கெடுத்தவன் அவற்றினும் வலியனோ என்றான் – தேம்பா:3 23/4

மேல்


கெடுதியே (1)

கெடுதியே என பேய் கோவும் கேடுற நன்று ஈது என்றான் – தேம்பா:25 13/4

மேல்


கெடுப்பு (1)

கெடுப்பு_அரும் மாட்சி பூத்த கேழ் கொடி துணையும் தாயும் – தேம்பா:12 99/2

மேல்


கெடுப்பு_அரும் (1)

கெடுப்பு_அரும் மாட்சி பூத்த கேழ் கொடி துணையும் தாயும் – தேம்பா:12 99/2

மேல்


கெடும் (7)

மோகத்தால் உண்ட மனம் முதிர் பல் செல்வம் முரிந்து கெடும்
போகத்தால் விளை நசை தீ பொறாது தண் கா புக்கனம் என்று – தேம்பா:20 23/2,3
வேல் இயல் பகை இலானும் வேரொடு கெடும் உன் வாழ்க்கை – தேம்பா:25 58/4
கொடை தரும் பயனே இஃதேல் குளித்த-கால் கெடும் என்று ஈந்து – தேம்பா:27 79/1
விண் நலம் கெடும் கனி விழுங்கினான் என்றான் – தேம்பா:27 117/4
கதி தள்ளி கெடும் கடவுளர் இறைஞ்சினம் இன்னே – தேம்பா:27 168/3
கெட்டோம் அந்தோ மின் என ஒல்கி கெடும் நன்றி – தேம்பா:28 114/1
நோயொடு மெலிந்த உடல் கெடும் எல்வை நொந்தவர்க்கு உதவ நீ ஒளியின் – தேம்பா:36 39/3

மேல்


கெலி (1)

கெலி பட கனி எந்தை கிளைத்த சொல் – தேம்பா:24 65/1

மேல்


கெழு (28)

துறை கெழு நூல் வழி அனைத்தும் அடையா ஞான துறை அன்னாள் மாசு அறு நல் உணர்வின் நீர்த்து – தேம்பா:8 53/1
மறை கெழு நூல் வழி வழுவா கடவுள் நல் தாள் மாறு இல மெய்ஞ்ஞான நலம் அமைந்ததற்கே – தேம்பா:8 53/2
முறை கெழு நூல் வழி அன்ன வெய்யோன் வானின் முடுகு வழி விடா திரியும் இரவி காந்தம் – தேம்பா:8 53/3
அறை கெழு நூல் வழி தொடை போல் தொடையல் ஆக்கி அருச்சனை செய்து அடி அணிந்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 53/4
புலம் கெழு மிடை மனு புழங்கலாமையும் – தேம்பா:10 85/2
தேன் நலம் பயின்று நறா மழை துளித்து சீர் கெழு தூங்கு இசை திருத்தி – தேம்பா:12 64/1
சீய்மையோன் என்னும் வாய்ந்த சீர் கெழு முனியும் வந்தான் – தேம்பா:12 73/4
ஏர் கெழு மணி வளர் எசித்து நீக்கலின் – தேம்பா:18 11/1
கார் கெழு குவட்டு வான் கலந்த இ வரை – தேம்பா:18 11/2
நேர் கெழு யூதர் தம் நிரைத்த சேனைகள் – தேம்பா:18 11/3
பார் கெழு அணி என பரப்பி நின்றவே – தேம்பா:18 11/4
முறை கெழு நல் கேள்வியின் நூல் புலமை மிக்க மோயிசன் ஆங்கு – தேம்பா:18 17/1
உறை கெழு நல் கனத்து உலகம் கடந்து நிற்ப ஒளி அணி வான் – தேம்பா:18 17/2
துறை கெழு நல் காட்சியினோடு இன்ப பவ்வம் தோய்ந்து உவப்ப – தேம்பா:18 17/3
மறை கெழு நல் பயன் உரைத்த இறைவன் இ சொல் வழங்கினன்-ஆல் – தேம்பா:18 17/4
பார் கெழு மடந்தை ஈன்ற படர்தரு கை தாய் ஆம் வான் – தேம்பா:18 26/1
கார் கெழு முலை தழீஇய கரம் என சினைகள் நீட்டி – தேம்பா:18 26/2
நீர் கெழு பால் உண்டு அப்பால் நிழன்று தன் தாயை காக்க – தேம்பா:18 26/3
ஏர் கெழு கை தாய் நோக இகன்று ஒளி ஒளிக்கும் காவே – தேம்பா:18 26/4
கேழ் அக உடு கண் மின்னின் கெழு நுசுப்பு அணி தூசு ஏந்தி – தேம்பா:20 40/3
கெழு வாய் வழி பாய் பரி வாய் வழியும் கிழிபட்ட கனத்து இடி ஒத்து எரி தீ – தேம்பா:24 25/3
நலம் கெழு கருவில் தோன்றல் நவி வளர்ந்து ஆறாம் திங்கள் – தேம்பா:26 10/2
வலம் கெழு கன்னி-தன்-வாய் மைந்தனே தானும் ஆனான் – தேம்பா:26 10/4
நிரை செய் சீர் கெழு நிமலனை நேடல் கற்று உயர்வாய் – தேம்பா:26 72/4
முறை கெழு வழுவா நீதி முகைத்த நூல் மொழிந்தான்-மன்னோ – தேம்பா:28 8/4
உடுத்து அன உடல் கொடு உலகு காத்து அருள் ஒளி கெழு நிலத்தினர் தொழுத பார்த்திப – தேம்பா:30 88/1
பொலித்தன விழி தழை விரிய நோக்கிய பொறி கெழு மயில் திரள் அரிய கூத்து எழ – தேம்பா:30 90/3
பொன்னும் கெழு மணி பொலிவும் கிளை கடல் – தேம்பா:30 156/3

மேல்


கெழும் (13)

நலம் கெழும் இறையவன் பிறப்ப நாடினான் – தேம்பா:10 85/4
கேழ் கிளர் பொறித்த மாமை கெழும் சிறை வகிர்ந்து பேணி – தேம்பா:12 23/2
பூம் கெழும் கொடியோன் சொல்லி புரை அற உணர்ந்ததேனும் – தேம்பா:14 21/2
கிளைகள் ஆர் நிழல் கெழும் பலா கனி எலாம் தீம் தேன் – தேம்பா:25 32/2
கேட்ட வாசகம் கெழும் குணம் என பலர் வாழ்த்த – தேம்பா:25 34/1
கெழும் சுனை வரம்பில் வைகி கிளைத்த நோய் அழன்ற நெஞ்சான் – தேம்பா:26 96/3
துறை கெழும் அரு நூல் கேள்வி சுருதியின் வடிவோன் கேட்டு – தேம்பா:28 8/1
நறை கெழும் அலங்கல் மார்பன் நயப்புற முகமன் நோக்கி – தேம்பா:28 8/2
நிறை கெழும் அரிய காட்சி நிலைமையால் உளமும் கண்டு – தேம்பா:28 8/3
கடவுளர் தேவர் என்னும் களி கெழும் குலமே தானோ – தேம்பா:28 63/1
கேழ் வரு முடியும் பெற்று கெழும் விளக்கு எவர்க்கும் ஆனான் – தேம்பா:29 84/4
கீண்டு உண்டாம் இடிக்கு அஞ்சும் பிடியை தாங்கும் கெழும் கரியும் – தேம்பா:30 18/2
கேட்பது அரும் வினை கேட்டீர் கெழும் தவரே என்றான் பின் – தேம்பா:34 39/3

மேல்


கெழுமி (1)

கிளியோடு அன்னம் அழ குயில்கள் கெழுமி அழ – தேம்பா:31 45/1

மேல்


கெழுமிய (2)

கேடு உடை காமம் மூட கெழுமிய தேவர் காம – தேம்பா:23 66/2
கேள்வியின் புலமை மூத்தோன் கெழுமிய முறையில் தூம – தேம்பா:26 6/1

மேல்


கெழுமுமோ (1)

கேதமே தீர மேல் சூடவும் கெழுமுமோ – தேம்பா:9 4/4

மேல்


கெழுவ (1)

கேழ் இசைத்து ஒளிறு தாள் கெழுவ வம்பு அலர் நறா மழையை வாரி – தேம்பா:19 21/3

மேல்


கெழுவிய (1)

கோலம் முற்றிய குணத்து இவர் கெழுவிய கருணை – தேம்பா:6 72/2

மேல்