கீ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீ (1)

கிள்ளை கண்டு இனைவ போல் கீ என் ஓதையும் – தேம்பா:1 52/2

மேல்


கீடம் (2)

செற்றது என்று அரிந்த கீடம் தீண்டிய கனிகள் அல்லால் – தேம்பா:18 33/2
கேழ்வரும் பதுமம் பெய் தேன் கீடம் உண்டு இமிரும் போல – தேம்பா:29 2/3

மேல்


கீண்டி (3)

வஞ்சினர் உளம் போல் அளக்க அரிது ஆழ்ந்த வாரணத்து-இடை வழி கீண்டி
அஞ்சினர் நனையா கடக்கவே தந்தாய் ஆறு நின்று அதர் விட தந்தாய் – தேம்பா:6 37/1,2
வளி சிறை ஆக பொங்கு அலை கீண்டி மரக்கலம் போயின வழியும் – தேம்பா:6 41/1
ஒளி சிறை ஆக விண் திசை கீண்டி ஓதிமம் பறந்தன வழியும் – தேம்பா:6 41/2

மேல்


கீண்டு (2)

கீண்டு அளாவு அழல் விழிவழி கிளர்ப்ப விட்டு எதிர்ந்தான் – தேம்பா:3 12/4
கீண்டு உண்டாம் இடிக்கு அஞ்சும் பிடியை தாங்கும் கெழும் கரியும் – தேம்பா:30 18/2

மேல்


கீத (2)

கிணை நிலை முரசம் ஆர்ப்ப கீத யாழ் தெளிப்ப வேளில் – தேம்பா:16 1/1
கீத வாயில் எங்கும் கிளைப்பார் என்றாள் – தேம்பா:26 38/4

மேல்


கீதம் (8)

பண்ணே நீ ஓர் முலையாய் கீதம் பாலாய் சுரந்தேன் – தேம்பா:10 49/1
பரு மணி காந்தள் கையால் பயிர் அளி கிளி போல் கீதம்
தரு மணி நரம்பின் மேல் எண் தரும் இசை கிளப்ப வானோர் – தேம்பா:15 182/2,3
சிறந்த திரு புகழ் ஆர் கீதம் கேட்ட செழும் தவத்தோன் – தேம்பா:16 60/1
நா மொழி கீதம் போல் நரல போயினார் – தேம்பா:17 4/4
நரல் வாய் பண் கீதம் எழும் காலிலேய நாடு உளதே – தேம்பா:27 37/4
தோடு அகடு இழி தேன் கீதம் தொகு விரல் உலவி ஆர்க்கும் – தேம்பா:28 15/3
கீதம் பாலாய் சுரந்து என தீ கிளையோ வேலோ நச்சு – தேம்பா:28 31/3
மீட்டு அரக்கு ஒளி போய் வருடம் ஈர் அறு முன் வெயில் என இராவும் ஆய் கீதம்
கேட்டு அரற்று இடையர் அரியது ஓர் காட்சி கிளர் ஒளி கண்டதும் கேட்டேன் – தேம்பா:31 85/3,4

மேல்


கீர்த்தி (1)

மன் அரும் தயையால் பாரில் வழங்கிய கீர்த்தி அல்லால் – தேம்பா:3 37/1

மேல்


கீழ் (28)

பகை தீர்ந்து சண்பகத்தின் தண் நிழல் கீழ் பள்ளி வர – தேம்பா:1 61/1
பூ முயங்கு புலம் தரு நீழல் கீழ்
பா முயங்க வதிந்தனன் பாடுவான் – தேம்பா:4 23/3,4
நேயம் ஆம் பிரீத்து சாந்து நிழன்ற தண் கவிகை கீழ் நீ – தேம்பா:7 16/1
கீழ் திரை கவிந்த வானம் கேழ் ஒளி சிவந்தது அன்றோ – தேம்பா:7 20/4
காண் அ காலத்து ஆக்கை சிவந்தே கடல் அம் கீழ்
நாண் அ காலத்து ஆழ் முழுகிற்றே நனி வெய்யோன் – தேம்பா:9 70/3,4
தன்னை மறந்தாய் நெஞ்சே தழல தழல் கீழ் உலகு உய்த்து – தேம்பா:10 52/2
ஓர் பகை இவன் கீழ் உள்ள உலவி மேல் பருந்து தானும் – தேம்பா:12 25/1
படை நால் வகையும் குடைய பட மேல் பட கீழ் படவே – தேம்பா:14 65/3
நிரை மேல் கீழ் நின்றன திரைகள் நெறி போய் ஓட மேல் வரு நீர் – தேம்பா:15 11/2
கேடக விளிம்பில் பட்டு கீழ் சரிந்து எருத்தின் மூழ்கி – தேம்பா:15 87/3
கீழ் கடல் மேல் கடல் மேல் முடுகி கிளர் ஓதை கிளைத்தது எனா – தேம்பா:15 102/1
யாளி திரளோ அவிர் கீழ் திசை யாவும் ஆளும் – தேம்பா:16 19/3
வேலை தாளம் என விளக்கு மீன் பூம் பந்தர் கீழ்
பால் ஐ கதிர் மதியம் தீபம் ஏந்த பணி தூண் மேல் – தேம்பா:16 55/2,3
கொம்பர் இன் நிழல் கீழ் உறை கோது இலார் – தேம்பா:18 46/2
நிறை மலர் ஒழுக்க தாள் கீழ் நித்தில பரப்பில் தூய – தேம்பா:19 13/1
கீழ் வினை இலை என கிசலன் கூறினான் – தேம்பா:25 40/4
மணி கலத்து ஏந்து அமுது அன்னோன் மணி குடை கீழ் ஒதுங்கினர் அன்பு – தேம்பா:26 142/3
கீழ் வினை இல மறை விரும்பி கேட்டி-ஆல் – தேம்பா:27 106/4
உள் உற தெளி நூலால் கீழ் உலகமே சுடும் தீ என்றாய் – தேம்பா:28 132/1
பான் இறைவன் செக்கர் வான் பந்தல் கீழ் விளக்கு ஏந்த – தேம்பா:29 75/1
துளித்தன மதுவின் தண் அம் சுள்ளியின் நிழல் கீழ் சாய்ந்து ஆண்டு – தேம்பா:30 130/3
மேக மாலை மிடைந்து அரை கீழ் உறை – தேம்பா:32 1/2
சீத மாலை செறிந்தன கீழ் எலாம் – தேம்பா:32 10/4
முடி கோடி கீழ் பணிய முன் விளக்கு ஓர் கோடி பகல் முற்றி மின்ன – தேம்பா:32 28/3
வந்து கீழ் அணி வரும் மணி முகத்து ஒளி – தேம்பா:32 67/2
இந்து கீழ் இந்து வந்து இரியல் மானுவார் – தேம்பா:32 67/4
எல் என்று ஒளி மேவிய தன் குடை கீழ்
நல் என்று உறை நாடர் விளித்தனன் ஆல் – தேம்பா:36 61/2,3
அடி வினை என்று கீழ் கிடத்தி அஞ்சிய – தேம்பா:36 119/3

மேல்


கீழ்மையே (1)

கீழ்வரே சேர்ந்த மேலோர் கீழ்மையே மாறி தாமும் – தேம்பா:9 78/1

மேல்


கீழ்வரே (1)

கீழ்வரே சேர்ந்த மேலோர் கீழ்மையே மாறி தாமும் – தேம்பா:9 78/1

மேல்


கீழார் (1)

மேலார் கீழார் யாவரும் ஒன்றாய் விளிவாரேல் – தேம்பா:36 76/1

மேல்


கீழும் (1)

கீழும் மேலும் என்று உணர்கிலாது உறுப்பு எலாம் கிளர்ப்ப – தேம்பா:6 59/3

மேல்


கீறி (4)

முடுகியன சாப மழை திரளின் விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க – தேம்பா:11 41/3
அடித்திடுவார் உடல் கீறி ஊன் உண்டு ஆற்றார் அயர்ந்து ஏங்கி தயங்குகிற்பார் துயரின் வெள்ளம் – தேம்பா:11 52/3
கேழ்த்த பூ வயல் கிழிபட சிலர் அவண் கீறி
வீழ்த்த தாமரை மெலிவொடு வரம்பின் மேல் வாடல் – தேம்பா:12 49/1,2
பொறி படர் கொழுந்தின் கனன்ற கூன் இரும்பால் புண்பட உடல் எலாம் கீறி
செறி படர் விரக நோய் மருந்து என்ன சினந்து அணங்கு இயற்றும் ஆம் கடியே – தேம்பா:28 95/3,4

மேல்


கீறிய (6)

கண் படை கீறிய கருத்தின் நொந்து உளான் – தேம்பா:7 77/4
போர் கீறிய வெய் புணரி திரையோ – தேம்பா:15 36/1
நீர் கீறிய நீள் கலமோ சிறகால் – தேம்பா:15 36/2
கார் கீறிய கல் திகிரி குலமோ – தேம்பா:15 36/3
பார் கீறிய கால் படர் தேர் திரளே – தேம்பா:15 36/4
கீறிய புவி விழுங்கி கேடுற அவரை சார்ந்தோர் – தேம்பா:25 60/3

மேல்


கீறின (4)

புண் கீறின வேலினர் சூழ் பொதுள – தேம்பா:36 65/1
மண் கீறின வல் உருள் தேர்கள் திரள் – தேம்பா:36 65/2
விண் கீறின வெண் கொடியும் குடையும் – தேம்பா:36 65/3
கண் கீறின பல் படை கால் ஒளியே – தேம்பா:36 65/4

மேல்


கீறும் (2)

எவர்க்கும் தாய் என எண் இலா கிழிபட கீறும்
அவர்க்கும் தான் உணவு அளித்தலே நோய் செய்வார்க்கு உதவும் – தேம்பா:1 11/2,3
தேசு உலாம் சிந்து கீறும் தேயமே எனக்கு தந்தாய் – தேம்பா:23 56/2

மேல்


கீறுமை (1)

கீறுமை உருவம் காட்டி கிளைத்த தோள் இரு_நூறு ஆக்கி – தேம்பா:20 49/2

மேல்