மை – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மை 8
மைந்தனோடு 1
மைப்பு 2
மையல் 3
மையலிலே 1
மையலுற 1
மையவனே 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

மை (8)

மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல்-கணே – திருவா:5 73/3
மை இலங்கு நல் கண்ணி பங்கனே வந்து என்னை பணிகொண்ட பின் மழ – திருவா:5 92/1
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா – திருவா:7 11/5
மை பொலியும் கண்ணி கேள் மால் அயனோடு இந்திரனும் – திருவா:8 12/1
மை ஆர் குழல் புரள தேன் பாய வண்டு ஒலிப்ப – திருவா:8 13/2
மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்க கூத்தன்-தன்னை – திருவா:9 12/1
இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மை தடம் கண் – திருவா:24 5/2
மாழை மை பாவிய கண்ணியர் வன் மத்து இட உடைந்து – திருவா:24 6/1
மேல்


மைந்தனோடு (1)

புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய புணர்ந்துநின்றான் – திருவா:15 5/2
மேல்


மைப்பு (2)

மைப்பு உறு கண்ணியர் மானிடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா – திருவா:20 6/2
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி_இணை காட்டி – திருவா:41 7/3
மேல்


மையல் (3)

தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி – திருவா:4/218
உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி – திருவா:6 24/1
மையல் ஆய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு – திருவா:41 1/1
மேல்


மையலிலே (1)

தையலார் மையலிலே தாழ்ந்து விழ கடவேனை – திருவா:51 7/1
மேல்


மையலுற (1)

மையலுற கடவேனை மாளாமே காத்தருளி – திருவா:51 3/2
மேல்


மையவனே (1)

மையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 7/3

மேல்