மி – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 7
மிக்காய் 2
மிக்கார் 1
மிக்கு 2
மிக 10
மிகவே 3
மிகு 2
மிகுத்திடும் 1
மிகுதியும் 1
மிகுந்து 1
மிகும் 1
மிகுவது 1
மிகை 2
மிசை 4
மிடற்றன் 1
மிடற்று 1
மிடைந்த 1
மிடைந்து 1
மிண்டிய 1
மிண்டுகின்றேனை 1
மிதிக்கும் 1
மிலைக்க 1
மிலைச்சி 1
மிலைத்து 2
மிலைந்து 1
மிழற்றும் 1
மிளிர்கின்ற 3
மிளிர 1
மிளிரும் 1
மின் 10
மின்னவனே 1
மின்னி 1
மின்னு 1
மின்னும் 1
மின்னை 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

மிக்க (7)

ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன் – திருவா:5 45/2
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா – திருவா:6 18/2
சச்சையனே மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பு ஆம் – திருவா:6 31/1
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேத மெய்ந்நூல் – திருவா:6 43/2
பரு மிக்க நாத பறை – திருவா:19 8/4
வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே – திருவா:32 4/4
மிகவே நினை-மின் மிக்க எல்லாம் வேண்டா போக விடு-மின்கள் – திருவா:45 2/2
மேல்


மிக்காய் (2)

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய் விளங்கு ஒளியாய் – திருவா:1/23
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற – திருவா:1/79
மேல்


மிக்கார் (1)

வீர என்-தன்னை விடுதி கண்டாய் விடின் என்னை மிக்கார்
ஆர் அடியான் என்னின் உத்தரகோசமங்கைக்கு அரசின் – திருவா:6 48/2,3
மேல்


மிக்கு (2)

மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு_இலி நடை கூடம் – திருவா:25 4/1
காதலின் மிக்கு அணி இழையார் கலவியிலே விழுவேனை – திருவா:51 8/2
மேல்


மிக (10)

வீடகத்தே புகுந்திடுவான் மிக பெரிதும் விரைகின்றேன் – திருவா:5 11/2
கிறி எலாம் மிக கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னை கெடுமாறே – திருவா:5 32/4
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர் திருப்பாதம் – திருவா:5 34/2
உற்று அடியேன் மிக தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே – திருவா:6 23/4
ஞாலம் மிக பரி மேற்கொண்டு நமை ஆண்டான் – திருவா:16 8/3
பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன் பரிகிலேன் பரியா உடல்-தன்னை – திருவா:23 2/3
களிப்பு எலாம் மிக கலங்கிடுகின்றேன் கயிலை மா மலை மேவிய கடலே – திருவா:23 10/4
தெருவு-தொறும் மிக அலறி சிவபெருமான் என்று ஏத்தி – திருவா:38 9/2
கடித்த வாயிலே நின்று முன் வினை மிக கழறியே திரிவேனை – திருவா:41 3/2
சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 2/4
மேல்


மிகவே (3)

மிகவே உயர்த்தி விண்ணோரை பணித்தி அண்ணா அமுதே – திருவா:5 10/3
மிகவே நினை-மின் மிக்க எல்லாம் வேண்டா போக விடு-மின்கள் – திருவா:45 2/2
விடு-மின் வெகுளி வேட்கை நோய் மிகவே காலம் இனி இல்லை – திருவா:45 5/1
மேல்


மிகு (2)

விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி – திருவா:5 29/1
வேடு உரு ஆகி மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்து தன்னை – திருவா:43 4/1
மேல்


மிகுத்திடும் (1)

வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே – திருவா:49 6/4
மேல்


மிகுதியும் (1)

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய – திருவா:3/7,8
மேல்


மிகுந்து (1)

எம்-தம் பிறவியில் கோபம் மிகுந்து
முரசு எறிந்து மா பெரும் கருணையில் முழங்கி – திருவா:3/73,74
மேல்


மிகும் (1)

மெய்யகத்தே இன்பம் மிகும் – திருவா:47 9/4
மேல்


மிகுவது (1)

மிகுவது ஆவதும் இன்று எனின் மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே – திருவா:5 36/4
மேல்


மிகை (2)

எச்சனுக்கு மிகை தலை மற்று அருளினன் காண் சாழலோ – திருவா:12 5/4
ஒன்றும் பெரு மிகை உந்தீ பற – திருவா:14 2/3
மேல்


மிசை (4)

குதிரையை கொண்டு குடநாடு-அதன் மிசை
சதிர்பட சாத்தாய் தான் எழுந்தருளியும் – திருவா:2/27,28
பரிமாவின் மிசை பயின்ற வண்ணமும் – திருவா:2/116
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள்_நோக்கம் – திருவா:15 9/4
மன்னன் பரி மிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய – திருவா:18 7/3
மேல்


மிடற்றன் (1)

கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமே தான் எனக்கு – திருவா:10 9/1,2
மேல்


மிடற்று (1)

மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண் மிடற்று
மையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 7/2,3
மேல்


மிடைந்த (1)

விதலை செய்வேனை விடுதி கண்டாய் விடக்கு ஊன் மிடைந்த
சிதலை செய் காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ – திருவா:6 41/2,3
மேல்


மிடைந்து (1)

மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு_இலி நடை கூடம் – திருவா:25 4/1
மேல்


மிண்டிய (1)

மிண்டிய மாயா_வாதம் என்னும் – திருவா:4/54
மேல்


மிண்டுகின்றேனை (1)

மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர் தாள் – திருவா:6 33/2
மேல்


மிதிக்கும் (1)

மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப – திருவா:40 7/2
மேல்


மிலைக்க (1)

ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு – திருவா:5 87/3
மேல்


மிலைச்சி (1)

வித்து உறுவேனை விடுதி கண்டாய் வெண் தலை மிலைச்சி
கொத்து உறு போது மிலைந்து குடர் நெடு மாலை சுற்றி – திருவா:6 30/2,3
மேல்


மிலைத்து (2)

ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு – திருவா:5 87/3
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெண் மதியின் ஒற்றை – திருவா:6 40/2
மேல்


மிலைந்து (1)

கொத்து உறு போது மிலைந்து குடர் நெடு மாலை சுற்றி – திருவா:6 30/3
மேல்


மிழற்றும் (1)

கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி_நாதனை கூவாய் – திருவா:18 6/4
மேல்


மிளிர்கின்ற (3)

மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய் சுடரே – திருவா:1/38
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் வெண் மதி கொழுந்து ஒன்று – திருவா:6 4/2
இரவு நின்று எரி ஆடிய எம் இறை எரி சடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 5/3,4
மேல்


மிளிர (1)

நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர
எம்-தம் பிறவியில் கோபம் மிகுந்து – திருவா:3/72,73
மேல்


மிளிரும் (1)

ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு – திருவா:6 22/1,2
மேல்


மின் (10)

திருத்தகு மின் ஒளி திசைதிசை விரிய – திருவா:3/69
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ – திருவா:3/125
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி – திருவா:4/96
மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு – திருவா:5 88/2
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் – திருவா:9 13/1
மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையீர் – திருவா:11 9/3
மின் ஏறும் மாட வியன் மாளிகை பாடி – திருவா:16 3/5
மின் கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டு – திருவா:24 7/1
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே – திருவா:49 6/3
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார் வியன் உலகம் – திருவா:50 1/1
மேல்


மின்னவனே (1)

மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேத மெய்ந்நூல் – திருவா:6 43/2
மேல்


மின்னி (1)

மின்னி பொலிந்து எம்பிராட்டி திருவடி மேல் – திருவா:7 16/3
மேல்


மின்னு (1)

விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை – திருவா:6 29/2
மேல்


மின்னும் (1)

தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்ற செழும் சுடரே – திருவா:6 4/4
மேல்


மின்னை (1)

மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே – திருவா:6 16/2

மேல்