பெ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெண் 12
பெண்-பால் 1
பெண்டிர் 2
பெண்ணே 2
பெண்ணோடு 1
பெண்மையனே 1
பெம்மாற்கு 1
பெம்மான் 5
பெம்மானே 2
பெய் 8
பெய்_கழல் 3
பெய்_கழல்-கண் 1
பெய்_கழல்கள் 1
பெய்_கழலே 1
பெய்_வளை-தன் 1
பெய்து 1
பெயர் 1
பெயர்க்கும் 1
பெயர்ந்து 1
பெயராத 1
பெரிதும் 4
பெரிய 4
பெரியவர் 1
பெரியாய் 1
பெரியானே 1
பெரியானை 1
பெரியோர் 2
பெரியோன் 6
பெரு 11
பெருக்கம் 1
பெருக்கி 6
பெருக்கும் 1
பெருக 2
பெருகவும் 1
பெருகி 3
பெருகும் 1
பெருந்துறை 31
பெருந்துறைக்கு 1
பெருந்துறையாய் 3
பெருந்துறையான் 22
பெருந்துறையான்-தான் 1
பெருந்துறையில் 6
பெருந்துறையின் 3
பெருந்துறையுள் 1
பெருந்துறையே 1
பெருந்துறையை 3
பெரும் 42
பெரும்பறை 1
பெருமான் 30
பெருமானே 10
பெருமானை 1
பெருமை 11
பெருமையனே 2
பெருமையனை 2
பெருமையினால் 1
பெருமையும் 1
பெருமையை 1
பெற்ற 4
பெற்றது 2
பெற்றவா 1
பெற்றார் 3
பெற்றி 1
பெற்றியன் 1
பெற்றியனே 2
பெற்றியனை 1
பெற்றியோனே 1
பெற்றிருந்தும் 1
பெற்றீர்காள் 1
பெற்று 4
பெற்றேன் 4
பெற 7
பெறல் 1
பெறலாம் 1
பெறலாமே 1
பெறவே 2
பெறவேண்டும் 1
பெறா 1
பெறாஅது 1
பெறில் 1
பெறின் 1
பெறுதற்கு 2
பெறும் 6
பெறுவார் 13
பெறுவான் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

பெண் (12)

பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க – திருவா:3/57
வாள் நுதல் பெண் என ஒளித்தும் சேண்-வயின் – திருவா:3/135
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி – திருவா:4/152
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/3
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒலி சேர் – திருவா:7 18/5
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் – திருவா:8 8/2
பெண் ஆளும் பாகனை பேணு பெருந்துறையில் – திருவா:8 10/4
பெண் பால் உகந்தான் பெரும் பித்தன் காண் ஏடீ – திருவா:12 9/2
பெண் பால் உகந்திலனேல் பேதாய் இரு நிலத்தோர் – திருவா:12 9/3
மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை – திருவா:12 13/1
தேன் புரையும் சிந்தையர் ஆய் தெய்வ பெண் ஏத்து இசைப்ப – திருவா:19 6/3
பெண் அலி ஆண் என நான் என வந்த பிணக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/5
மேல்


பெண்-பால் (1)

பிணி கெட நல்கும் பெருந்துறை எம் பேரருளாளன் பெண்-பால் உகந்து – திருவா:43 3/3
மேல்


பெண்டிர் (2)

பெண்டிர் ஆண் அலி என்று அறி ஒண்கிலை – திருவா:5 42/2
வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும் – திருவா:10 6/1
மேல்


பெண்ணே (2)

ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் – திருவா:5 84/3
பெண்ணே இ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 18/8
மேல்


பெண்ணோடு (1)

பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் – திருவா:2/78
மேல்


பெண்மையனே (1)

பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலி பெற்றியனே – திருவா:6 22/4
மேல்


பெம்மாற்கு (1)

மற்றும் ஓர் தெய்வம்-தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு
அற்றிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 1/3,4
மேல்


பெம்மான் (5)

பேர் ஆயிரம் உடை பெம்மான் போற்றி – திருவா:4/200
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் – திருவா:8 8/2
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான் – திருவா:8 20/1
பினை தான் புகுந்து எல்லே பெருந்துறையில் உறை பெம்மான்
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடையானே – திருவா:34 4/3,4
அம் கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனி வந்த – திருவா:43 10/1
மேல்


பெம்மானே (2)

ஆரா_அமுதே அளவு_இலா பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே – திருவா:1/67,68
பின் நின்று ஏவல் செய்கின்றேன் பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே
என் என்று அருள் இவர நின்று போந்திடு என்னாவிடில் அடியார் – திருவா:21 2/2,3
மேல்


பெய் (8)

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்-தன் பெய்_கழல்கள் வெல்க – திருவா:1/7
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்_கழல் கீழ் – திருவா:5 18/2
பின்ன எம்பிரான் வருக என் எனை பெய்_கழல்-கண் அன்பாய் என் நாவினால் – திருவா:5 99/3
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்_வளை-தன் – திருவா:7 14/7
துன்னம் பெய் கோவணமா கொள்ளும்-அது என் ஏடீ – திருவா:12 2/2
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ் – திருவா:24 9/1
பேரின்ப வெள்ளத்துள் பெய்_கழலே சென்று பேணுமினே – திருவா:36 3/4
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் பெய்_கழல் அடி காட்டி – திருவா:44 2/3
மேல்


பெய்_கழல் (3)

பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்_கழல் கீழ் – திருவா:5 18/2
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ் – திருவா:24 9/1
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் பெய்_கழல் அடி காட்டி – திருவா:44 2/3
மேல்


பெய்_கழல்-கண் (1)

பின்ன எம்பிரான் வருக என் எனை பெய்_கழல்-கண் அன்பாய் என் நாவினால் – திருவா:5 99/3
மேல்


பெய்_கழல்கள் (1)

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்-தன் பெய்_கழல்கள் வெல்க – திருவா:1/7
மேல்


பெய்_கழலே (1)

பேரின்ப வெள்ளத்துள் பெய்_கழலே சென்று பேணுமினே – திருவா:36 3/4
மேல்


பெய்_வளை-தன் (1)

பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்_வளை-தன்
பாத திறம் பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 14/7,8
மேல்


பெய்து (1)

நீக்கி முன் எனை தன்னொடு நிலாவகை குரம்பையில் புக பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொல் செய்து நுகம் இன்றி விளாக்கைத்து – திருவா:26 8/1,2
மேல்


பெயர் (1)

தேவதேவன் திரு பெயர் ஆகவும் – திருவா:2/122
மேல்


பெயர்க்கும் (1)

கொட்க பெயர்க்கும் குழகன் முழுவதும் – திருவா:3/12
மேல்


பெயர்ந்து (1)

ஆண் என தோன்றி அலி என பெயர்ந்து
வாள் நுதல் பெண் என ஒளித்தும் சேண்-வயின் – திருவா:3/134,135
மேல்


பெயராத (1)

பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே – திருவா:6 25/4
மேல்


பெரிதும் (4)

வீடகத்தே புகுந்திடுவான் மிக பெரிதும் விரைகின்றேன் – திருவா:5 11/2
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான் – திருவா:13 3/2
சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை – திருவா:18 3/3
எனை பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த இணை_இலியை – திருவா:31 2/3
மேல்


பெரிய (4)

பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர் – திருவா:5 96/3
புகழே பெரிய பதம் எனக்கு புராண நீ தந்தருளாதே – திருவா:33 10/3
பிறவி வேரறுத்து என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே – திருவா:37 6/2
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு_அது ஏற்றும் பெருந்துறையாய் – திருவா:50 7/2
மேல்


பெரியவர் (1)

பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி – திருவா:5 66/3
மேல்


பெரியாய் (1)

பெரியாய் போற்றி பிரானே போற்றி – திருவா:4/177
மேல்


பெரியானே (1)

பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்_கழல் கீழ் – திருவா:5 18/2
மேல்


பெரியானை (1)

பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் – திருவா:48 6/3
மேல்


பெரியோர் (2)

பொறுப்பார் அன்றே பெரியோர் சிறு நாய்கள்-தம் பொய்யினையே – திருவா:6 6/4
உலக்கை பல ஓச்சுவார் பெரியோர் உலகம் எலாம் உரல் போதாது என்றே – திருவா:9 6/1
மேல்


பெரியோன் (6)

சிறிய ஆக பெரியோன் தெரியின் – திருவா:3/6
பிரமன் மால் காணா பெரியோன் காண்க – திருவா:3/38
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி – திருவா:3/107
நேர் பாடல் பாடி நினைப்பு_அர்¢ய தனி பெரியோன்
சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 13/3,4
என் ஆகம் துன்னவைத்த பெரியோன் எழில் சுடர் ஆய் – திருவா:13 9/2
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் பெய்_கழல் அடி காட்டி – திருவா:44 2/3
மேல்


பெரு (11)

மதுரை பெரு நல் மா நகர் இருந்து – திருவா:2/44
தவ பெரு வாயிடை பருகி தளர்வொடும் – திருவா:3/81
கட களிறு ஏற்றா தட பெரு மதத்தின் – திருவா:3/155
அதில் பெரு மாயை எனை பல சூழவும் – திருவா:4/58
பெரு நீர் அற சிறு மீன் துவண்டு ஆங்கு நினை பிரிந்த – திருவா:6 26/1
ஒன்றும் பெரு மிகை உந்தீ பற – திருவா:14 2/3
பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடை பிஞ்ஞகனே ஓ – திருவா:23 7/3
பிரிந்து போந்து பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன் என்றுஎன்று – திருவா:27 6/2
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறை பெரு வெள்ளமே – திருவா:30 6/1
பிடித்து முன் நின்று அ பெரு மறை தேடிய அரும் பொருள் அடியேனை – திருவா:41 3/3
பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை – திருவா:41 6/2
மேல்


பெருக்கம் (1)

உறவுசெய்து எனை உய்யக்கொண்ட பிரான்-தன் உண்மை பெருக்கம் ஆம் – திருவா:42 7/3
மேல்


பெருக்கி (6)

பெற்றது கொண்டு பிழையே பெருக்கி சுருக்கும் அன்பின் – திருவா:6 23/1
இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி_நாயேன் – திருவா:32 7/2
பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழு தலை புலையனேன்-தனக்கு – திருவா:37 3/2
ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பு_இலா ஆனந்தம் ஆய – திருவா:37 9/2
இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும் – திருவா:47 11/1
வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று வினை பெருக்கி
கொந்து குழல் கோல் வளையார் குவி முலை மேல் விழுவேனை – திருவா:51 6/1,2
மேல்


பெருக்கும் (1)

ஒருத்தன் பெருக்கும் ஒளி – திருவா:47 7/4
மேல்


பெருக (2)

துணியா உருகா அருள் பெருக தோன்றும் தொண்டரிடை புகுந்து – திருவா:32 8/1
காதல் பெருக கருணை காட்டி தன் கழல் காட்டி கசிந்து உருக – திருவா:43 9/3
மேல்


பெருகவும் (1)

பற்றி அழைத்து பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும் – திருவா:4/49,50
மேல்


பெருகி (3)

கசிவது பெருகி கடல் என மறுகி – திருவா:4/66
உருகி பெருகி உளம் குளிர முகந்துகொண்டு – திருவா:11 15/1
ஊடிஊடி உடையாயொடு கலந்து உள் உருகி பெருகி நெக்கு – திருவா:32 11/3
மேல்


பெருகும் (1)

ஊனே புகுந்த உனை உணர்ந்த உருகி பெருகும் உள்ளத்தை – திருவா:32 10/3
மேல்


பெருந்துறை (31)

சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி – திருவா:1/15
திரு ஆர் பெருந்துறை செல்வன் ஆகி – திருவா:2/54
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி – திருவா:3/68
திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவி – திருவா:11 2/1
பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பு அறுத்த – திருவா:11 16/2
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும் – திருவா:17 3/3,4
பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை – திருவா:18 2/3
மன்னன் பரி மிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய – திருவா:18 7/3
ஏர் ஆர் இளம் கிளியே எங்கள் பெருந்துறை கோன் – திருவா:19 1/1
கிஞ்சுக வாய் அஞ்சுகமே கேடு_இல் பெருந்துறை கோன் – திருவா:19 5/1
கோல்_தேன் மொழி கிள்ளாய் கோது_இல் பெருந்துறை கோன் – திருவா:19 7/1
இன் பால் மொழி கிள்ளாய் எங்கள் பெருந்துறை கோன் – திருவா:19 8/1
சோலை பசும் கிளியே தூ நீர் பெருந்துறை கோன் – திருவா:19 10/1
பிணக்கு இலாத பெருந்துறை பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்கு – திருவா:30 1/1
பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறை பெரும் பித்தனே – திருவா:30 2/1
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவது அறிந்திலேன் – திருவா:30 3/1,2
பேண்_ஒணாத பெருந்துறை பெரும் தோணி பற்றி உகைத்தலும் – திருவா:30 4/3
கோல மேனி வராகமே குணம் ஆம் பெருந்துறை கொண்டலே – திருவா:30 5/1
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறை பெரு வெள்ளமே – திருவா:30 6/1
தேவ_தேவன் மெய் சேவகன் தென் பெருந்துறை நாயகன் – திருவா:42 1/1
சிட்டன் மெய் சிவலோக_நாயகன் தென் பெருந்துறை சேவகன் – திருவா:42 2/2
தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன் நாயகன் – திருவா:42 3/2
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து – திருவா:43 1/3
பிணி கெட நல்கும் பெருந்துறை எம் பேரருளாளன் பெண்-பால் உகந்து – திருவா:43 3/3
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 4/3
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 5/2
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று – திருவா:43 6/3
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி – திருவா:43 7/3
மாது நல்லாள் உமை மங்கை_பங்கன் வன் பொழில் சூழ் தென் பெருந்துறை கோன் – திருவா:43 8/2
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 9/2
சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 10/3
மேல்


பெருந்துறைக்கு (1)

இடையிலே உனக்கு அன்புசெய்து பெருந்துறைக்கு அன்று இருந்திலேன் – திருவா:30 8/2
மேல்


பெருந்துறையாய் (3)

தென் பெருந்துறையாய் சிவபெருமானே சீர் உடை சிவபுரத்து அரைசே – திருவா:22 2/4
விடையானே விரி பொழில் சூழ் பெருந்துறையாய் அடியேன் நான் – திருவா:39 2/3
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு_அது ஏற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே – திருவா:50 7/2,3
மேல்


பெருந்துறையான் (22)

தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான்
அம் கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும் – திருவா:8 1/4,5
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி – திருவா:8 2/3
சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான்
பந்தம் பறிய பரி மேல்கொண்டான் தந்த – திருவா:8 3/4,5
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி – திருவா:8 5/2
தீட்டு ஆர் மதில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டாதன எல்லாம் காட்டி சிவம் காட்டி – திருவா:8 6/2,3
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் – திருவா:8 8/2,3
துண்ட பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோல மா ஊர்தியான் – திருவா:8 9/1,2
செப்பு_ஆர் முலை_பங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான் – திருவா:8 11/1,2
செம் தார் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 15/5,6
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்ற குதிரையின் மேல் வந்தருளி தன் அடியார் – திருவா:8 20/1,2
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடி செம்பொன் உலக்கை வல கை பற்றி – திருவா:9 9/2,3
பேராசை ஆம் இந்த பிண்டம் அற பெருந்துறையான்
சீர் ஆர் திருவடி என் தலை மேல் வைத்த பிரான் – திருவா:13 10/1,2
தேர் ஆர்ந்த வீதி பெருந்துறையான் திரு நடம் செய் – திருவா:13 18/3
அத்தி உரித்து அது போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவு கொண்டு இ உலகில் பிள்ளையும் ஆய் – திருவா:13 19/1,2
தே ஆர்ந்த கோலம் திகழ பெருந்துறையான்
கோ ஆகி வந்து எம்மை குற்றேவல் கொண்டருளும் – திருவா:13 20/2,3
ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் தையலாய் – திருவா:19 4/2
மேய பெருந்துறையான் மெய் தார் என் தீய வினை – திருவா:19 9/2
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ – திருவா:47 1/3
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் – திருவா:47 6/3
திருத்தன் பெருந்துறையான் என் சிந்தை மேய – திருவா:47 7/3
சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே – திருவா:47 11/3
அருளும் பெருந்துறையான் அம் கமல பாதம் – திருவா:48 3/3
மேல்


பெருந்துறையான்-தான் (1)

ஆனந்த மால் ஏற்றும் அத்தன் பெருந்துறையான்-தான்
என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து – திருவா:47 2/3,4
மேல்


பெருந்துறையில் (6)

பெண் ஆளும் பாகனை பேணு பெருந்துறையில்
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட – திருவா:8 10/4,5
தெளி வந்த தேறலை சீர் ஆர் பெருந்துறையில்
எளிவந்து இருந்து இரங்கி எண்_அரிய இன் அருளால் – திருவா:8 18/3,4
பினை தான் புகுந்து எல்லே பெருந்துறையில் உறை பெம்மான் – திருவா:34 4/3
பெருந்துறையில் மேய பிரான் – திருவா:47 3/4
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன் – திருவா:47 4/3
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் – திருவா:48 6/3
மேல்


பெருந்துறையின் (3)

சேயானை சேவகனை தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாது இருக்கும் பாதியனை – திருவா:8 7/2,3
பின்னானை பிஞ்ஞகனை பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாது இயலும் பாதியனை – திருவா:8 19/2,3
பெருந்துறையின் மேய பெரும் கருணையாளன் – திருவா:47 10/3
மேல்


பெருந்துறையுள் (1)

பெருந்துறையுள் மேய பெருமான் பிரியாது – திருவா:47 5/3
மேல்


பெருந்துறையே (1)

பெருந்துறையே என்று பிறப்பு அறுத்தேன் நல்ல – திருவா:48 7/3
மேல்


பெருந்துறையை (3)

மருவும் பெருந்துறையை வாழ்த்து-மின்கள் வாழ்த்த – திருவா:48 2/3
சென்று இறைஞ்சி ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை
நன்று இறைஞ்சி ஏத்தும் நமர் – திருவா:48 4/3,4
நண்ணி பெருந்துறையை நம் இடர்கள் போய் அகல – திருவா:48 5/1
மேல்


பெரும் (42)

எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் – திருவா:1/24
பேராது நின்ற பெரும் கருணை பேர் ஆறே – திருவா:1/66
மாதில் கூறு உடை மா பெரும் கருணையன் – திருவா:2/107
எ பெரும் தன்மையும் எவ்வெவர் திறமும் – திருவா:2/125
அளப்பு_அரும் தன்மை வள பெரும் காட்சி – திருவா:3/2
முரசு எறிந்து மா பெரும் கருணையில் முழங்கி – திருவா:3/74
அவ பெரும் தாபம் நீங்காது அசைந்தன – திருவா:3/82
பாய்ந்து எழுந்து இன்பம் பெரும் சுழி கொழித்து – திருவா:3/84
அருள் பெரும் தீயின் அடியோம் அடி குடில் – திருவா:3/160
பித்த உலகர் பெரும் துறை பரப்பினுள் – திருவா:4/36
வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால் அமுத பெரும் கடலே மலையே உன்னை – திருவா:5 26/3
தனியனேன் பெரும் பிறவி பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி – திருவா:5 27/1
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே – திருவா:5 35/3
உடையானே நின்-தனை உள்கி உள்ளம் உருகும் பெரும் காதல் – திருவா:5 56/1
வைச்சு வாங்குவாய் வஞ்சக பெரும் புலையனேனை உன் கோயில் வாயிலில் – திருவா:5 96/2
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் கருணையாளனே போற்றி என்னை நின் – திருவா:5 97/3
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுத பெரும் கடலே – திருவா:6 12/4
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாட கேட்டேயும் வாள் தடம் கண் – திருவா:7 1/1,2
பிலமுகத்தே புக பாய்ந்து பெரும் கேடு ஆம் சாழலோ – திருவா:12 7/4
பெண் பால் உகந்தான் பெரும் பித்தன் காண் ஏடீ – திருவா:12 9/2
கரை மாண்ட காம பெரும் கடலை கடத்தலுமே – திருவா:15 14/2
ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா – திருவா:23 1/3
அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி அச்சம் தீர்த்த நின் அருள் பெரும் கடலில் – திருவா:23 10/1
பெரும் பெருமான் என் பிறவியை வேரறுத்து பெரும் பிச்சு – திருவா:24 3/1
பெரும் பெருமான் என் பிறவியை வேரறுத்து பெரும் பிச்சு – திருவா:24 3/1
பேதாய் பிறவி பிணிக்கு ஓர் மருந்தே பெரும் தேன் பில்க எப்போதும் – திருவா:27 9/2
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை – திருவா:28 8/3
பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறை பெரும் பித்தனே – திருவா:30 2/1
பேண்_ஒணாத பெருந்துறை பெரும் தோணி பற்றி உகைத்தலும் – திருவா:30 4/3
அருள் ஆர் அமுத பெரும் கடல்-வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த – திருவா:32 3/1
ஆய அரும் பெரும் சீர் உடை தன் அருளே அருளும் – திருவா:36 7/3
பழ மலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டி பெரும் பதமே – திருவா:36 8/3
வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஒர் மீனவன்-பால் – திருவா:36 10/2
அருள் உடை சுடரே அளிந்தது ஓர் கனியே பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே – திருவா:37 4/1
பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே உன் பேரருளே – திருவா:38 1/4
பாசம் ஆனவை பற்று அறுத்து உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால் – திருவா:41 8/3
ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும் – திருவா:43 8/3
உடையான் அடிக்கீழ் பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படு-மின் – திருவா:45 5/2
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன் – திருவா:47 4/3
பெருந்துறையின் மேய பெரும் கருணையாளன் – திருவா:47 10/3
உள்ள மலம் மூன்றும் மாய உகு பெரும் தேன்_வெள்ளம் – திருவா:48 2/1
ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருள் ஆம் பெரும் பயனை – திருவா:51 10/3
மேல்


பெரும்பறை (1)

நாத பெரும்பறை நவின்று கறங்கவும் – திருவா:2/108
மேல்


பெருமான் (30)

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த – திருவா:1/48,49
போற்றி போற்றி புயங்க பெருமான்
போற்றி போற்றி புராண_காரண – திருவா:4/223,224
பவன் எம்பிரான் பனி மா மதி கண்ணி விண்ணோர் பெருமான்
சிவன் எம்பிரான் என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமை கண்டும் – திருவா:5 9/1,2
ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என் பிறவி_நாசனே – திருவா:5 51/1
பொரும் பெருமான் வினையேன் மனம் அஞ்சி பொதும்பு உறவே – திருவா:6 35/4
ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே நம் பெருமான்
சீர் ஒரு கால் வாய் ஓவாள் சித்தம் களிகூர – திருவா:7 15/1,2
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள் – திருவா:7 19/3
அந்தரர் கோன் அயன்-தன் பெருமான் ஆழியான் நாதன் நல் வேலன் தாதை – திருவா:9 3/3
என் தாதை தாதைக்கும் எம் அனைக்கும் தம் பெருமான்
குன்றாத செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 8/3,4
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான்
மாய பிறப்பு அறுத்து ஆண்டான் என் வல்வினையின் – திருவா:13 3/2,3
கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவின் பாதாளம் ஏழினுக்கு அப்பால் – திருவா:18 1/1,2
செம் பெருமான் வெள் மலரான் பாற்கடலான் செப்புவ போல் – திருவா:19 1/3
எம் பெருமான் தேவர் பிரான் என்று – திருவா:19 1/4
ஏற்று உயர் கொடி உடை யாய் எனை உடையாய் எம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 1/4
பெரும் பெருமான் என் பிறவியை வேரறுத்து பெரும் பிச்சு – திருவா:24 3/1
தரும் பெருமான் சதுர பெருமான் என் மனத்தின் உள்ளே – திருவா:24 3/2
தரும் பெருமான் சதுர பெருமான் என் மனத்தின் உள்ளே – திருவா:24 3/2
வரும் பெருமான் மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற – திருவா:24 3/3
அரும் பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 3/4
வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க விண்ணோர் பெருமான்
அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 5/3,4
பேர் ஆயிரமும் பரவி திரிந்து எம் பெருமான் என ஏத்த – திருவா:25 7/3
எய்யாது என்-தன் தலை மேல் வைத்து எம் பெருமான் பெருமான் என்று – திருவா:25 8/2
எய்யாது என்-தன் தலை மேல் வைத்து எம் பெருமான் பெருமான் என்று – திருவா:25 8/2
பிணக்கு இலாத பெருந்துறை பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்கு – திருவா:30 1/1
பூ ஆர் சென்னி மன்னன் எம் புயங்க பெருமான் சிறியோமை – திருவா:45 1/1
புகவே வேண்டா புலன்களில் நீர் புயங்க பெருமான் பூம் கழல்கள் – திருவா:45 2/1
பெருமான் பேரானந்தத்து பிரியாது இருக்க பெற்றீர்காள் – திருவா:45 8/1
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியாது – திருவா:47 5/3
என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே – திருவா:49 4/8
என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே – திருவா:49 5/8
மேல்


பெருமானே (10)

எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
அஞ்ஞானம்-தன்னை அகல்விக்கும் நல் அறிவே – திருவா:1/39,40
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார்-தம் கருத்தில் – திருவா:1/74,75
வெள்ளம் தாழ் விரி சடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே என கேட்டு வேட்ட நெஞ்சாய் – திருவா:5 21/1
பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்று என்றே பேசிப்பேசி – திருவா:5 24/1
தொடர்ந்து எனை நலிய துயருறுகின்றேன் சோத்தம் எம் பெருமானே
உடைந்து நைந்து உருகி உள் ஒளி நோக்கி உன் திரு மலர் பாதம் – திருவா:25 4/2,3
செம் பெருமானே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 2/3
பேரானந்தம் பேராமை வைக்கவேண்டும் பெருமானே – திருவா:32 9/4
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு – திருவா:38 4/2
பிரியேன் என்றுஎன்று அருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே – திருவா:44 2/4
பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கு அரியன் பெருமானே – திருவா:45 7/4
மேல்


பெருமானை (1)

நங்கள் பெருமானை பாடி நலம் திகழ – திருவா:7 17/7
மேல்


பெருமை (11)

அந்தம்_இல் பெருமை அழல் உரு கரந்து – திருவா:2/92
அந்தம்_இல் பெருமை அருள் உடை அண்ணல் – திருவா:2/101
அருளிய பெருமை அருள் மலை ஆகவும் – திருவா:2/124
இணைப்பு_அரும் பெருமை ஈசன் காண்க – திருவா:3/46
கருணையின் பெருமை கண்டேன் காண்க – திருவா:3/60
ஒழிவு_அற நிறைந்து மேவிய பெருமை
இன்று எனக்கு எளிவந்து அருளி – திருவா:3/116,117
பேயனேன் இது-தான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லி பேசுகேனே – திருவா:5 23/4
பேர்ந்தும் என் பொய்மை ஆட்கொண்டு அருளும் பெருமை போற்றி – திருவா:5 69/2
கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்த பெருமை
தழி சிறை நீரில் பிறை கலம் சேர்தரு தாரவனே – திருவா:6 47/3,4
தம் பெருமை தான் அறியா தன்மையன் காண் சாழலோ – திருவா:12 19/4
பேதம் கெடுத்து அருள்செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 7/4
மேல்


பெருமையனே (2)

சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே
ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே – திருவா:1/72,73
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே – திருவா:6 25/4
மேல்


பெருமையனை (2)

பேயேனது உள்ள பிழை பொறுக்கும் பெருமையனை
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும் – திருவா:10 12/2,3
பேதங்கள் அனைத்தும் ஆய் பேதம்_இலா பெருமையனை
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை மரகதத்தை – திருவா:31 10/2,3
மேல்


பெருமையினால் (1)

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால்
பொறுப்பவனே அரா பூண்பவனே பொங்கு கங்கை சடை – திருவா:24 2/1,2
மேல்


பெருமையும் (1)

அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே – திருவா:5 34/4
மேல்


பெருமையை (1)

குருபரன் ஆகி அருளிய பெருமையை
சிறுமை என்று இகழாதே திருவடி இணையை – திருவா:4/76,77
மேல்


பெற்ற (4)

வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள அருள் பெற்ற
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேர கண்டும் கண் கெட்ட – திருவா:5 53/2,3
வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 91/2
உன்னை பிரானாக பெற்ற உன் சீர் அடியோம் – திருவா:7 9/3
பெற்றவா பெற்ற பயன்-அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே – திருவா:26 9/3
மேல்


பெற்றது (2)

பெற்றது கொண்டு பிழையே பெருக்கி சுருக்கும் அன்பின் – திருவா:6 23/1
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால் – திருவா:22 10/2
மேல்


பெற்றவா (1)

பெற்றவா பெற்ற பயன்-அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே – திருவா:26 9/3
மேல்


பெற்றார் (3)

மறிவு அறியா செல்வம் வந்து பெற்றார் உன்னை வந்திப்பது ஓர் – திருவா:24 9/2
அடியார் சிலர் உன் அருள் பெற்றார் ஆர்வம் கூர யான் அவமே – திருவா:32 2/1
அறவே பெற்றார் நின் அன்பர் அந்தம்_இன்றி அகம் நெகவும் – திருவா:32 6/1
மேல்


பெற்றி (1)

பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான் – திருவா:8 20/1
மேல்


பெற்றியன் (1)

பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க – திருவா:3/57
மேல்


பெற்றியனே (2)

பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலி பெற்றியனே – திருவா:6 22/4
பின்னை புதுமைக்கும் பேர்த்தும் அ பெற்றியனே
உன்னை பிரானாக பெற்ற உன் சீர் அடியோம் – திருவா:7 9/2,3
மேல்


பெற்றியனை (1)

பிறியும் மனத்தார் பிறிவு_அரிய பெற்றியனை
செறியும் கருத்தில் உருத்து அமுது ஆம் சிவபதத்தை – திருவா:40 4/2,3
மேல்


பெற்றியோனே (1)

பிரமன் மால் அறியா பெற்றியோனே – திருவா:3/182
மேல்


பெற்றிருந்தும் (1)

பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி பிண நெஞ்சே – திருவா:5 32/3
மேல்


பெற்றீர்காள் (1)

பெருமான் பேரானந்தத்து பிரியாது இருக்க பெற்றீர்காள்
அரு மால் உற்று பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே – திருவா:45 8/1,2
மேல்


பெற்று (4)

பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையை போக்க பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி – திருவா:6 10/1,2
வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு உன் அருள் பெற்று துன்பத்தின்றும் – திருவா:6 14/1
அருள் பெற்று நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 3/4
பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு என் எம்பெருமான் – திருவா:47 8/3
மேல்


பெற்றேன் (4)

பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் – திருவா:5 86/2
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால் – திருவா:22 10/2
நானேயோ தவம் செய்தேன் சிவாயநம என பெற்றேன்
தேன் ஆய் இன் அமுதமும் ஆய் தித்திக்கும் சிவபெருமான் – திருவா:38 10/1,2
நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன்
உய்ஞ்சேன் நான் உடையானே அடியேனை வருக என்று – திருவா:51 5/2,3
மேல்


பெற (7)

எண்_இல் பல் குணம் எழில் பெற விளங்கி – திருவா:2/3
தண்ணீர் பந்தர் சயம் பெற வைத்து – திருவா:2/58
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து – திருவா:2/79
கடம்பூர்-தன்னில் இடம் பெற இருந்தும் – திருவா:2/83
ஏல்வு உடைத்து ஆக எழில் பெற அணிந்தும் – திருவா:2/114
யாவரும் பெற உறும் ஈசன் காண்க – திருவா:3/55
வெருளாவண்ணம் மெய் அன்பை உடையாய் பெற நான் வேண்டுமே – திருவா:32 3/4
மேல்


பெறல் (1)

அண்டத்து அரும்_பெறல் மேகன் வாழ்க – திருவா:3/95
மேல்


பெறலாம் (1)

இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம் – திருவா:5 6/2
மேல்


பெறலாமே (1)

ஆனால் வினையேன் அழுதால் உன்னை பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் – திருவா:5 90/2,3
மேல்


பெறவே (2)

பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் – திருவா:5 86/2
பெறவே வேண்டும் மெய் அன்பு பேரா ஒழியாய் பிரிவு இல்லா – திருவா:32 6/3
மேல்


பெறவேண்டும் (1)

பார் உரு ஆய பிறப்பு அறவேண்டும் பத்திமையும் பெறவேண்டும்
சீர் உரு ஆய சிவபெருமானே செங்கமல மலர் போல் – திருவா:44 1/1,2
மேல்


பெறா (1)

சிறை பெறா நீர் போல் சிந்தை-வாய் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 5/3
மேல்


பெறாஅது (1)

ஈண்டு கனகம் இசைய பெறாஅது
ஆண்டான் அங்கு ஓர் அருள்வழி இருப்ப – திருவா:2/39,40
மேல்


பெறில் (1)

வானேயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் – திருவா:5 12/2
மேல்


பெறின் (1)

ஆனந்த கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வணமே – திருவா:15 8/3
மேல்


பெறுதற்கு (2)

பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய் இலா – திருவா:5 52/2
பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கு அரியன் பெருமானே – திருவா:45 7/4
மேல்


பெறும் (6)

அன்று உடன்சென்ற அருள் பெறும் அடியவர் – திருவா:2/130
எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன் – திருவா:2/140
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் – திருவா:5 5/3
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே – திருவா:5 12/4
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய் இலா – திருவா:5 52/2
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே – திருவா:6 25/4
மேல்


பெறுவார் (13)

அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே – திருவா:45 10/4
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 1/4
அறியும்வண்ணம் அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 2/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 3/4
அண்ணல் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 4/4
அஞ்சேல் என்று அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 5/4
அந்தம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 6/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 7/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 8/4
அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 9/4
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 10/4
அடிகள் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 11/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 12/4
மேல்


பெறுவான் (1)

அருளை பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 1/4

மேல்