ந – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்கி 1
நக்கும் 1
நகர் 7
நகர்-வாய் 1
நகவே 2
நகுவேன் 1
நகை 10
நகைசெய்ய 1
நகையாய் 2
நகையார் 1
நகையீர் 1
நங்கள் 3
நங்காய் 1
நங்கைமீர் 1
நச்சி 1
நச்சிட 1
நச்சு 2
நசை 1
நசையால் 1
நஞ்சம் 1
நஞ்சமே 1
நஞ்சு 11
நஞ்சு-தனை 1
நஞ்சே 1
நஞ்சை 1
நட்டம் 3
நட்டமையால் 1
நடக்கும் 1
நடந்த 1
நடந்தன 1
நடந்தாய் 1
நடந்தேன் 1
நடப்பன 1
நடம் 6
நடம்செய்வான் 1
நடாஅய் 1
நடித்து 2
நடு 5
நடுக்கம் 1
நடுங்குவேன் 1
நடுவு 1
நடுவும் 1
நடுவுள் 3
நடுவே 3
நடை 1
நடையீர் 1
நண் 1
நண்_அரிய 1
நண்ண 1
நண்ணவும் 1
நண்ணி 3
நண்ணிய 1
நண்ணிலேன் 1
நண்ணினும் 1
நண்ணுகில்லா 1
நண்ணுதற்கு 1
நண்ணும்-அது 1
நண்ணுவது 2
நணியானே 1
நணுகும்வண்ணம் 1
நதி 1
நந்தம்பாடியில் 1
நந்தா 1
நம் 22
நம்-தம்மை 5
நம்-பாலதா 1
நம்பன் 1
நம்பனையும் 2
நம்பா 1
நம்பி 3
நம்பும் 1
நம்மவர்-அவரே 1
நம்மில் 1
நம்முள் 1
நம்மை 6
நம்மையும் 2
நம்மோடு 1
நமக்கு 4
நமச்சிவாய 6
நமர் 1
நமை 5
நயந்தாய் 1
நயந்து 5
நயப்புறவு 1
நயம்-தனை 1
நயவாதே 1
நயன 3
நயனங்கள் 1
நயனத்தன் 1
நயனம் 1
நரகத்திடை 1
நரகத்து 1
நரகம் 1
நரகிடை 2
நரகில் 2
நரகொடு 1
நரம்பு 1
நரம்போடு 1
நரி 1
நரிகள் 1
நரியை 2
நல் 35
நல்-பால் 1
நல்_தடம் 1
நல்காது 1
நல்காய் 1
நல்காயே 1
நல்கி 1
நல்கிய 2
நல்கினான் 1
நல்குதலும் 1
நல்குதியே 1
நல்குதியேல் 2
நல்கும் 3
நல்குரவு 2
நல்ல 2
நல்லவர் 1
நல்லாட்கு 1
நல்லார்-அவர்-தம் 1
நல்லாரொடும் 1
நல்லாள் 1
நல்லாளோடு 1
நல்லீர் 5
நல 1
நலக்க 1
நலத்தை 1
நலம் 7
நலம்-தான் 1
நலிய 1
நவம் 1
நவில் 1
நவிற்றி 1
நவின்ற 1
நவின்று 1
நள் 1
நள்ளும் 2
நள்ளேன் 1
நற்று 1
நறவம் 1
நறு 1
நறுமுறு 1
நன் 1
நன்பே 1
நன்மை 2
நன்மையும் 3
நன்றாக 1
நன்றாய் 1
நன்று 6
நன்றே 1
நன்றோ 1
நனவிலும் 1
நனவே 1
நனி 5

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

நக்கி (1)

கடலினுள் நாய் நக்கி ஆங்கு உன் கருணை கடலின் உள்ளம் – திருவா:6 13/1
மேல்


நக்கும் (1)

நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்து நவிற்றி – திருவா:27 8/2
மேல்


நகர் (7)

மதுரை பெரு நல் மா நகர் இருந்து – திருவா:2/44
புகுவது ஆவதும் போதரவு இல்லதும் பொன்_நகர் புக போதற்கு – திருவா:5 36/1
தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன் நகர் புக போகேன் – திருவா:5 40/3
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மா நகர் குறுக – திருவா:5 85/3
தில்லை நகர் புக்கு சிற்றம்பலம் மன்னும் – திருவா:8 5/5
மா ஆர ஏறி மதுரை நகர் புகுந்தருளி – திருவா:13 20/1
செடி ஆர் ஆக்கை திறம் அற வீசி சிவபுர நகர் புக்கு – திருவா:25 9/1
மேல்


நகர்-வாய் (1)

போர் ஏறே நின் பொன்_நகர்-வாய் நீ போந்தருளி இருள் நீக்கி – திருவா:5 53/1
மேல்


நகவே (2)

நகவே தகும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே – திருவா:5 10/4
நகவே ஞாலத்துள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட – திருவா:45 2/3
மேல்


நகுவேன் (1)

நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன் – திருவா:5 60/2
மேல்


நகை (10)

ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின் – திருவா:3/158
கரும் குழல் செம் வாய் வெள் நகை கார் மயில் – திருவா:4/30
வேனல் வேள் மலர் கணைக்கும் வெள் நகை செம் வாய் கரிய – திருவா:5 19/1
பொங்கு அரா அல்குல் செம் வாய் வெள் நகை கரிய வாள் கண் – திருவா:5 65/2
விரை சேர் முடியாய் விடுதி கண்டாய் வெள் நகை கரும் கண் – திருவா:6 37/2
மாடு நகை வாள் நிலா எறிப்ப வாய் திறந்து அம் பவளம் துடிப்ப – திருவா:9 11/1
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் – திருவா:9 13/1
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம் – திருவா:20 1/2
முத்தா உன்-தன் முக ஒளி நோக்கி முறுவல் நகை காண – திருவா:25 6/3
முகை நகை கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி – திருவா:35 7/3
மேல்


நகைசெய்ய (1)

நாட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடு எய்த – திருவா:8 6/5
மேல்


நகையாய் (2)

முத்து அன்ன வெள் நகையாய் முன் வந்து எதிர் எழுந்து என் – திருவா:7 3/1
ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ – திருவா:7 4/1
மேல்


நகையார் (1)

கொழு மணி ஏர் நகையார் கொங்கை குன்றிடை சென்று குன்றி – திருவா:6 27/1
மேல்


நகையீர் (1)

மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையீர்
தென்னாதென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 9/3,4
மேல்


நங்கள் (3)

ஊழ்ஊழ் ஓங்கிய நங்கள்
இரு வினை மா மரம் வேர் பறித்து எழுந்து – திருவா:3/86,87
நங்கள் பெருமானை பாடி நலம் திகழ – திருவா:7 17/7
நங்கைமீர் எனை நோக்கு-மின் நங்கள் நாதன் நம் பணி கொண்டவன் – திருவா:42 3/1
மேல்


நங்காய் (1)

நங்காய் இது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து – திருவா:12 11/1
மேல்


நங்கைமீர் (1)

நங்கைமீர் எனை நோக்கு-மின் நங்கள் நாதன் நம் பணி கொண்டவன் – திருவா:42 3/1
மேல்


நச்சி (1)

ஞாலமே கரி ஆக நான் உனை நச்சி நச்சிட வந்திடும் – திருவா:30 5/3
மேல்


நச்சிட (1)

ஞாலமே கரி ஆக நான் உனை நச்சி நச்சிட வந்திடும் – திருவா:30 5/3
மேல்


நச்சு (2)

நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி – திருவா:3/106
நச்சு மா மரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே – திருவா:5 96/4
மேல்


நசை (1)

நீர் நசை தரவரும் நெடும் கண் மான் கணம் – திருவா:3/80
மேல்


நசையால் (1)

துடி ஏர் இடுகு இடை தூ மொழியார் தோள் நசையால்
செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் – திருவா:40 2/1,2
மேல்


நஞ்சம் (1)

சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் தின்று நஞ்சம் அஞ்சி – திருவா:5 4/1
மேல்


நஞ்சமே (1)

நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய் – திருவா:35 9/2
மேல்


நஞ்சு (11)

வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி – திருவா:5 69/3
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா – திருவா:6 18/2
கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய் கருணாகரனே – திருவா:6 28/3
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே – திருவா:6 32/4
விழைதருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சு உண் – திருவா:6 46/2
உரி பிச்சன் தோலுடை பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர் சுடுகாட்டு – திருவா:6 49/3
போனகம் ஆக நஞ்சு உண்டல் பாடி பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 17/4
நலம் பாடி நஞ்சு உண்டவா பாடி நாள்-தோறும் – திருவா:11 20/2
நஞ்சு அமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன் – திருவா:16 4/1
ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே அடியேற்கு உன் – திருவா:38 3/3
நஞ்சு ஆய துயர்கூர நடுங்குவேன் நின் அருளால் – திருவா:38 6/2
மேல்


நஞ்சு-தனை (1)

நாணாமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சு-தனை
ஊண் ஆக உண்டருளும் உத்தரகோசமங்கை – திருவா:16 5/3,4
மேல்


நஞ்சே (1)

நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி – திருவா:4/173
மேல்


நஞ்சை (1)

கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி – திருவா:13 10/3
மேல்


நட்டம் (3)

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே – திருவா:1/89
தான் புக்கு நட்டம் பயிலும்-அது என் ஏடீ – திருவா:12 14/2
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம் – திருவா:12 14/3
மேல்


நட்டமையால் (1)

நடக்கும் திருவடி என் தலை மேல் நட்டமையால்
கடக்கும் திறல் ஐவர் கண்டகர்-தம் வல் அரட்டை – திருவா:40 8/2,3
மேல்


நடக்கும் (1)

நடக்கும் திருவடி என் தலை மேல் நட்டமையால் – திருவா:40 8/2
மேல்


நடந்த (1)

தனி துணை நீ நிற்க யான் தருக்கி தலையால் நடந்த
வினை துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடைய – திருவா:6 39/1,2
மேல்


நடந்தன (1)

நன்று இது தீது என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே – திருவா:49 2/5
மேல்


நடந்தாய் (1)

அலை கடல் மீமிசை நடந்தாய் போற்றி – திருவா:4/208
மேல்


நடந்தேன் (1)

தலையினால் நடந்தேன் விடை பாகா சங்கரா எண்_இல் வானவர்க்கு எல்லாம் – திருவா:23 3/2
மேல்


நடப்பன (1)

நடப்பன நடாஅய் கிடப்பன கிடாஅய் – திருவா:3/109
மேல்


நடம் (6)

பொலிதரு புலியூர் பொதுவினில் நடம் நவில் – திருவா:2/141
நான் ஆடிஆடி நின்று ஓலம் இட நடம் பயிலும் – திருவா:13 5/3
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 14/4
தேர் ஆர்ந்த வீதி பெருந்துறையான் திரு நடம் செய் – திருவா:13 18/3
தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தை திரு நடம் செய் – திருவா:15 1/3
தேவே தில்லை நடம் ஆடீ திகைத்தேன் இனி-தான் தேற்றாயே – திருவா:50 6/4
மேல்


நடம்செய்வான் (1)

சித்தர் சூழ சிவபிரான் தில்லை மூதூர் நடம்செய்வான்
எத்தன் ஆகி வந்து இல் புகுந்து எமை ஆளுங்கொண்டு எம் பணிகொள்வான் – திருவா:42 4/2,3
மேல்


நடாஅய் (1)

நடப்பன நடாஅய் கிடப்பன கிடாஅய் – திருவா:3/109
மேல்


நடித்து (2)

நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே – திருவா:5 11/1
நடித்து மண்ணிடை பொய்யினை பல செய்து நான் என எனும் மாயம் – திருவா:41 3/1
மேல்


நடு (5)

ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே – திருவா:1/73
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி – திருவா:4/212
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார் – திருவா:20 8/1
நாண்_ஒணாதது ஒர் நாணம் எய்தி நடு கடலுள் அழுந்தி நான் – திருவா:30 4/2
நடு ஆய் நில்லாது ஒழிந்த-கால் நன்றோ எங்கள் நாயகமே – திருவா:50 4/4
மேல்


நடுக்கம் (1)

நன்று இது தீது என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே – திருவா:49 2/5
மேல்


நடுங்குவேன் (1)

நஞ்சு ஆய துயர்கூர நடுங்குவேன் நின் அருளால் – திருவா:38 6/2
மேல்


நடுவு (1)

உடையாள் உன்-தன் நடுவு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி – திருவா:21 1/1
மேல்


நடுவும் (1)

முந்தும் நடுவும் முடிவும் ஆகிய மூவர் அறியா – திருவா:18 5/3
மேல்


நடுவுள் (3)

உடையாள் உன்-தன் நடுவு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி – திருவா:21 1/1
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் – திருவா:21 1/2
அடியார் நடுவுள் இருக்கும் அருளை புரியாய் பொன்னம்பலத்து எம் – திருவா:21 1/3
மேல்


நடுவே (3)

நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிக பெரிதும் விரைகின்றேன் – திருவா:5 11/1,2
ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே – திருவா:22 9/2
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டு அருளே – திருவா:44 1/3,4
மேல்


நடை (1)

மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு_இலி நடை கூடம் – திருவா:25 4/1
மேல்


நடையீர் (1)

போன்று அங்கு அன நடையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 2/6
மேல்


நண் (1)

ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்_அரிய – திருவா:36 5/2
மேல்


நண்_அரிய (1)

ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்_அரிய
ஆலம் உண்டான் எங்கள் பாண்டி பிரான் தன் அடியவர்க்கு – திருவா:36 5/2,3
மேல்


நண்ண (1)

வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா – திருவா:35 8/2
மேல்


நண்ணவும் (1)

விண்ணக தேவரும் நண்ணவும் மாட்டா விழு பொருளே உன தொழுப்பு அடியோங்கள் – திருவா:20 9/1
மேல்


நண்ணி (3)

கற்றை வார் சடை எம் அண்ணல் கண்_நுதல் பாதம் நண்ணி
மற்றும் ஓர் தெய்வம்-தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு – திருவா:35 1/2,3
வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி
துளி உலாம் கண்ணர் ஆகி தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு – திருவா:35 4/2,3
நண்ணி பெருந்துறையை நம் இடர்கள் போய் அகல – திருவா:48 5/1
மேல்


நண்ணிய (1)

நாதம் உடையது ஒர் நல் கமல போதினில் நண்ணிய நல் நுதலார் – திருவா:43 7/1
மேல்


நண்ணிலேன் (1)

நண்ணிலேன் கலை_ஞானிகள்-தம்மொடு நல் வினை நயவாதே – திருவா:26 6/2
மேல்


நண்ணினும் (1)

நாமும் மேல் ஆம் அடியாருடனே செல நண்ணினும் ஆகாதே – திருவா:49 2/6
மேல்


நண்ணுகில்லா (1)

வெம்புகின்றேனை விடுதி கண்டாய் விண்ணர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 20/2,3
மேல்


நண்ணுதற்கு (1)

கமல நான்முகனும் கார் முகில் நிறத்து கண்ணனும் நண்ணுதற்கு அரிய – திருவா:29 4/1
மேல்


நண்ணும்-அது (1)

நம்பனையும் தேவன் என்று நண்ணும்-அது என் ஏடீ – திருவா:12 17/2
மேல்


நண்ணுவது (2)

நல் மணி நாதம் முழங்கி என் உள் உற நண்ணுவது ஆகாதே – திருவா:49 4/3
நாதன் அணி திருநீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே – திருவா:49 4/4
மேல்


நணியானே (1)

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே – திருவா:1/44,45
மேல்


நணுகும்வண்ணம் (1)

நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம் நான் அணுகும் – திருவா:40 6/3
மேல்


நதி (1)

நதி சேர் செம் சடை நம்பா போற்றி – திருவா:4/109
மேல்


நந்தம்பாடியில் (1)

நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய் – திருவா:2/21
மேல்


நந்தா (1)

ஞான கரும்பின் தெளியை பாகை நாடற்கு_அரிய நலத்தை நந்தா
தேனை பழ சுவை ஆயினானை சித்தம் புகுந்து தித்திக்க வல்ல – திருவா:9 15/1,2
மேல்


நம் (22)

சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி – திருவா:1/15
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்திருந்தேயும் – திருவா:5 35/1,2
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை – திருவா:7 3/7
பொங்கும் மடுவில் புக பாய்ந்துபாய்ந்து நம்
சங்கம் சிலம்ப சிலம்பு கலந்து ஆர்ப்ப – திருவா:7 13/5,6
ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே நம் பெருமான் – திருவா:7 15/1
இங்கு நம் இல்லங்கள்-தோறும் எழுந்தருளி – திருவா:7 17/4
அ பொருள் ஆம் நம் சிவனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 12/6
செய்ய வாய் பைம் சிறகின் செல்வீ நம் சிந்தை சேர் – திருவா:19 4/1
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய் – திருவா:35 9/2
தூய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி சுடருமே – திருவா:42 1/4
வட்ட மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 2/4
நங்கைமீர் எனை நோக்கு-மின் நங்கள் நாதன் நம் பணி கொண்டவன் – திருவா:42 3/1
பொங்கு மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி பொலியுமே – திருவா:42 3/4
வைத்த மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 4/4
சேய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 5/4
மத்தன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 6/4
திறமை காட்டிய சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 7/4
வழு_இலா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 8/4
செம்பொன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 9/4
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 10/4
நாட்டில் பரி பாகன் நம் வினையை வீட்டி – திருவா:48 3/2
நண்ணி பெருந்துறையை நம் இடர்கள் போய் அகல – திருவா:48 5/1
மேல்


நம்-தம்மை (5)

என்ன சிலை குலவி நம்-தம்மை ஆள் உடையாள்-தன்னில் – திருவா:7 16/5
கொங்கு உண் கரும் குழலி நம்-தம்மை கோதாட்டி – திருவா:7 17/3
நாய் ஆன நம்-தம்மை ஆட்கொண்ட நாயகனை – திருவா:8 7/4
நாடவர் நம்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப – திருவா:9 7/2
பாடு-மின் நம்-தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்டவண்ணமும் பாடிப்பாடி – திருவா:9 11/2
மேல்


நம்-பாலதா (1)

எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்-பாலதா
கொங்கு உண் கரும் குழலி நம்-தம்மை கோதாட்டி – திருவா:7 17/2,3
மேல்


நம்பன் (1)

நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி – திருவா:3/106
மேல்


நம்பனையும் (2)

நம்பனையும் தேவன் என்று நண்ணும்-அது என் ஏடீ – திருவா:12 17/2
நம்பனையும் ஆமா கேள் நான்மறைகள் தாம் அறியோ – திருவா:12 17/3
மேல்


நம்பா (1)

நதி சேர் செம் சடை நம்பா போற்றி – திருவா:4/109
மேல்


நம்பி (3)

தரிப்பு ஆய் நாயேன் இருப்பேனோ நம்பி இனி-தான் நல்காயே – திருவா:21 9/4
நான் ஓர் தோளா சுரை ஒத்தால் நம்பி இனி-தான் வாழ்ந்தாயே – திருவா:32 10/2
நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனி-தான் நல்குதியே – திருவா:50 5/2
மேல்


நம்பும் (1)

நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம் நான் அணுகும் – திருவா:40 6/3
மேல்


நம்மவர்-அவரே (1)

ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர்-அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண் மேல் – திருவா:5 4/2,3
மேல்


நம்மில் (1)

நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம் – திருவா:9 5/2
மேல்


நம்முள் (1)

அந்தம்_இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே – திருவா:49 3/3
மேல்


நம்மை (6)

கோலமும் நம்மை ஆட்கொண்டருளி கோதாட்டும் – திருவா:7 5/5
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்_வளை-தன் – திருவா:7 14/7
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை – திருவா:9 8/3
ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் – திருவா:9 12/2
தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம் வந்து நம்மை
உருக்கும் பணி கொள்ளும் என்பது கேட்டு உலகம் எல்லாம் – திருவா:11 3/2,3
முறி செய்து நம்மை முழுது உழற்றும் பழ வினையை – திருவா:13 8/3
மேல்


நம்மையும் (2)

நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து – திருவா:13 3/1
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த – திருவா:51 9/3
மேல்


நம்மோடு (1)

சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே – திருவா:49 8/2
மேல்


நமக்கு (4)

முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன் அருளே – திருவா:7 16/7
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு
தேவ நல் செறி கழல் தாள்_இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 3/2,3
இரங்கும் நமக்கு அம்பல கூத்தன் என்றுஎன்று ஏமாந்திருப்பேனை – திருவா:21 7/1
நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர் – திருவா:21 10/1
மேல்


நமச்சிவாய (6)

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க – திருவா:1/1
போற்றி ஓ நமச்சிவாய புயங்களே மயங்குகின்றேன் – திருவா:5 62/1
போற்றி ஓ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை – திருவா:5 62/2
போற்றி ஓ நமச்சிவாய புறம் எனை போக்கல் கண்டாய் – திருவா:5 62/3
போற்றி ஓ நமச்சிவாய சயசய போற்றி போற்றி – திருவா:5 62/4
நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன் அடி பணியா – திருவா:23 7/2
மேல்


நமர் (1)

நன்று இறைஞ்சி ஏத்தும் நமர் – திருவா:48 4/4
மேல்


நமை (5)

ஞாலம் மிக பரி மேற்கொண்டு நமை ஆண்டான் – திருவா:16 8/3
நாதன் நமை ஆளுடையான் நாடு உரையாய் காதலவர்க்கு – திருவா:19 2/2
தாது ஆடு பூம் சோலை தத்தாய் நமை ஆளும் – திருவா:19 3/1
நகவே ஞாலத்துள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட – திருவா:45 2/3
செடி சேர் உடலை செல நீக்கி சிவலோகத்தே நமை வைப்பான் – திருவா:45 4/3
மேல்


நயந்தாய் (1)

நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி – திருவா:4/173
மேல்


நயந்து (5)

விரை ஆர்ந்த மலர் தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன் – திருவா:5 18/3
நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம் – திருவா:10 10/2
நனவே எனை பிடித்து ஆட்கொண்டவா நயந்து நெஞ்சம் – திருவா:11 10/3
ஞாலம் இந்திரன் நான்முகன் வானோர் நிற்க மற்று எனை நயந்து இனிது ஆண்டாய் – திருவா:23 9/1
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் – திருவா:33 8/1
மேல்


நயப்புறவு (1)

நல்லாளோடு நயப்புறவு எய்தியும் – திருவா:2/12
மேல்


நயம்-தனை (1)

நயம்-தனை பாடிநின்று ஆடிஆடி நாதற்கு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 18/4
மேல்


நயவாதே (1)

நண்ணிலேன் கலை_ஞானிகள்-தம்மொடு நல் வினை நயவாதே
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை – திருவா:26 6/2,3
மேல்


நயன (3)

கூர்த்த நயன கொள்ளையில் பிழைத்தும் – திருவா:4/35
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம் – திருவா:20 2/2
நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர் – திருவா:21 10/1
மேல்


நயனங்கள் (1)

நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால் – திருவா:12 4/3
மேல்


நயனத்தன் (1)

மூன்று அங்கு இலங்கு நயனத்தன் மூவாத – திருவா:16 2/1
மேல்


நயனம் (1)

நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடி கீழ் – திருவா:12 18/3
மேல்


நரகத்திடை (1)

பொருள் என களித்து அரு நரகத்திடை விழ புகுகின்றேனை – திருவா:26 10/2
மேல்


நரகத்து (1)

கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குரு மணியே – திருவா:50 4/3
மேல்


நரகம் (1)

நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் – திருவா:5 2/2
மேல்


நரகிடை (2)

மூ_ஏழ் சுற்றமும் முரணுறு நரகிடை
ஆழாமே அருள் அரசே போற்றி – திருவா:4/118,119
செத்துப்போய் அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை – திருவா:26 4/3
மேல்


நரகில் (2)

அந்தரமே திரிந்து போய் அரு நரகில் வீழ்வேனை – திருவா:31 1/2
ஆதம்_இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில்
ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆஆ என்று – திருவா:38 3/1,2
மேல்


நரகொடு (1)

நரகொடு சுவர்க்கம் நால்_நிலம் புகாமல் – திருவா:4/213
மேல்


நரம்பு (1)

மொய்-பால் நரம்பு கயிறு ஆக மூளை என்பு தோல் போர்த்த – திருவா:25 2/1
மேல்


நரம்போடு (1)

நங்காய் இது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து – திருவா:12 11/1
மேல்


நரி (1)

நரி எலாம் தெரியாவணம் இந்த நாடு எலாம் அறியும்படி – திருவா:30 9/1
மேல்


நரிகள் (1)

ஒருங்கு திரை உலவு சடை உடையானே நரிகள் எல்லாம் – திருவா:38 1/3
மேல்


நரியை (2)

நரியை குதிரை ஆக்கிய நன்மையும் – திருவா:2/36
நரியை குதிரை பரி ஆக்கி ஞாலம் எல்லாம் நிகழ்வித்து – திருவா:50 7/1
மேல்


நல் (35)

அஞ்ஞானம்-தன்னை அகல்விக்கும் நல் அறிவே – திருவா:1/40
விராவு கொங்கை நல்_தடம் படிந்தும் – திருவா:2/16
மதுரை பெரு நல் மா நகர் இருந்து – திருவா:2/44
நல் நீர் சேவகன் ஆகிய நன்மையும் – திருவா:2/59
படியே ஆகி நல் இடை_அறா அன்பின் – திருவா:4/64
முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன் – திருவா:5 37/3
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நல் நெறி காட்டி – திருவா:5 39/2
மை இலங்கு நல் கண்ணி பங்கனே வந்து என்னை பணிகொண்ட பின் மழ – திருவா:5 92/1
இல்லை நின் கழற்கு அன்பு-அது என்-கணே ஏலம் ஏலும் நல் குழலி_பங்கனே – திருவா:5 94/1
பொள்ளல் நல் வேழத்து உரியாய் புலன் நின்-கண் போதல் ஒட்டா – திருவா:6 24/3
தீர்த்தன் நல் தில்லை சிற்றம்பலத்தே தீ ஆடும் – திருவா:7 12/2
முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின் – திருவா:9 1/1
முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின் – திருவா:9 1/1
அந்தரர் கோன் அயன்-தன் பெருமான் ஆழியான் நாதன் நல் வேலன் தாதை – திருவா:9 3/3
கோயில் சுடுகாடு கொல் புலி தோல் நல் ஆடை – திருவா:12 3/1
சலம் உடைய சலந்தரன்-தன் உடல் தடிந்த நல் ஆழி – திருவா:12 18/1
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம் அ நெறியே – திருவா:13 11/3
ஊழி முதல் சிந்தாத நல் மணி வந்து என் பிறவி – திருவா:15 13/3
பாண்டி நல் நாடரால் அன்னே என்னும் – திருவா:17 5/2
பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை – திருவா:17 5/3
நல் பொன் மணி சுவடு ஒத்த நல் பரி மேல் வருவானை – திருவா:18 6/3
நல் பொன் மணி சுவடு ஒத்த நல் பரி மேல் வருவானை – திருவா:18 6/3
பொன்னை அழித்த நல் மேனி புகழின் திகழும் அழகன் – திருவா:18 7/2
தேவ நல் செறி கழல் தாள்_இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 3/3
நண்ணிலேன் கலை_ஞானிகள்-தம்மொடு நல் வினை நயவாதே – திருவா:26 6/2
தங்கள் நாயகனே தக்க நல் காமன்-தனது உடல் தழல் எழ விழித்த – திருவா:29 3/2
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்-மின் தென்னன் நல் நாட்டு – திருவா:36 4/1
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி – திருவா:37 10/3
அறவை என்று அடியார்கள்-தங்கள் அருள்_குழாம் புகவிட்டு நல்
உறவுசெய்து எனை உய்யக்கொண்ட பிரான்-தன் உண்மை பெருக்கம் ஆம் – திருவா:42 7/2,3
ஞாலம்-அதனிடை வந்திழிந்து நல் நெறி காட்டி நலம் திகழும் – திருவா:43 2/2
நாதம் உடையது ஒர் நல் கமல போதினில் நண்ணிய நல் நுதலார் – திருவா:43 7/1
நாதம் உடையது ஒர் நல் கமல போதினில் நண்ணிய நல் நுதலார் – திருவா:43 7/1
பாண்டி நல் நாடு உடையான் படை_ஆட்சிகள் பாடுதும் ஆகாதே – திருவா:49 1/6
நல் மணி நாதம் முழங்கி என் உள் உற நண்ணுவது ஆகாதே – திருவா:49 4/3
வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே – திருவா:49 7/5
மேல்


நல்-பால் (1)

நல்-பால் படுத்து என்னை நாடு அறிய தான் இங்ஙன் – திருவா:15 4/3
மேல்


நல்_தடம் (1)

விராவு கொங்கை நல்_தடம் படிந்தும் – திருவா:2/16
மேல்


நல்காது (1)

நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர் – திருவா:21 10/1
மேல்


நல்காய் (1)

நான் பாவியன் ஆனால் உனை நல்காய் எனல் ஆமே – திருவா:34 10/4
மேல்


நல்காயே (1)

தரிப்பு ஆய் நாயேன் இருப்பேனோ நம்பி இனி-தான் நல்காயே – திருவா:21 9/4
மேல்


நல்கி (1)

நலம்-தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம்-தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காஅட்டி – திருவா:1/58,59
மேல்


நல்கிய (2)

ஞானம்-தன்னை நல்கிய நன்மையும் – திருவா:2/74
மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அ – திருவா:11 8/3
மேல்


நல்கினான் (1)

மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடா வகை நல்கினான்
வேய தோள் உமை பங்கன் எங்கள் திருப்பெருந்துறை மேவினான் – திருவா:42 5/1,2
மேல்


நல்குதலும் (1)

நவம் ஆய செம் சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து – திருவா:11 4/3
மேல்


நல்குதியே (1)

நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனி-தான் நல்குதியே
தாயே என்று உன் தாள் அடைந்தேன் தயா நீ என்-பால் இல்லையே – திருவா:50 5/2,3
மேல்


நல்குதியேல் (2)

இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 9/7,8
இங்கு இ பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 19/7,8
மேல்


நல்கும் (3)

கோது_இல் பரம் கருணை அடியார் குலாவும் நீதி குணம் ஆக நல்கும்
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து – திருவா:43 1/2,3
பிணி கெட நல்கும் பெருந்துறை எம் பேரருளாளன் பெண்-பால் உகந்து – திருவா:43 3/3
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 5/2
மேல்


நல்குரவு (2)

நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும் – திருவா:4/40
செல்வம் நல்குரவு இன்றி விண்ணோர் புழு – திருவா:5 48/1
மேல்


நல்ல (2)

நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை – திருவா:14 18/1
பெருந்துறையே என்று பிறப்பு அறுத்தேன் நல்ல
மருந்தின் அடி என் மனத்தே வைத்து – திருவா:48 7/3,4
மேல்


நல்லவர் (1)

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்-மின் தென்னன் நல் நாட்டு – திருவா:36 4/1
மேல்


நல்லாட்கு (1)

கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்கு
சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 2/3,4
மேல்


நல்லார்-அவர்-தம் (1)

அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்-அவர்-தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும் – திருவா:6 38/1,2
மேல்


நல்லாரொடும் (1)

சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி – திருவா:41 2/2
மேல்


நல்லாள் (1)

மாது நல்லாள் உமை மங்கை_பங்கன் வன் பொழில் சூழ் தென் பெருந்துறை கோன் – திருவா:43 8/2
மேல்


நல்லாளோடு (1)

நல்லாளோடு நயப்புறவு எய்தியும் – திருவா:2/12
மேல்


நல்லீர் (5)

வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப வண் கொங்கை பொங்க – திருவா:9 8/1
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 12/4
பொன்னுடை பூண் முலை மங்கை நல்லீர் பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 13/4
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 15/4
மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர்
வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் – திருவா:15 8/1,2
மேல்


நல (1)

இருந்து நல மலர் புனையேன் ஏத்தேன் நா தழும்பு ஏற – திருவா:5 13/2
மேல்


நலக்க (1)

நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாள்_மலர் பாதங்கள் சூட தந்த – திருவா:9 6/3
மேல்


நலத்தை (1)

ஞான கரும்பின் தெளியை பாகை நாடற்கு_அரிய நலத்தை நந்தா – திருவா:9 15/1
மேல்


நலம் (7)

நாயினேனை நலம் மலி தில்லையுள் – திருவா:2/127
நங்கள் பெருமானை பாடி நலம் திகழ – திருவா:7 17/7
நலம் பாடி நஞ்சு உண்டவா பாடி நாள்-தோறும் – திருவா:11 20/2
நலம் உடைய நாரணற்கு அன்று அருளிய ஆறு என் ஏடீ – திருவா:12 18/2
நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடி கீழ் – திருவா:12 18/3
ஞாலம்-அதனிடை வந்திழிந்து நல் நெறி காட்டி நலம் திகழும் – திருவா:43 2/2
செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை – திருவா:51 9/1
மேல்


நலம்-தான் (1)

நலம்-தான் இலாத சிறியேற்கு நல்கி – திருவா:1/58
மேல்


நலிய (1)

தொடர்ந்து எனை நலிய துயருறுகின்றேன் சோத்தம் எம் பெருமானே – திருவா:25 4/2
மேல்


நவம் (1)

நவம் ஆய செம் சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து – திருவா:11 4/3
மேல்


நவில் (1)

பொலிதரு புலியூர் பொதுவினில் நடம் நவில்
கனி தரு செம் வாய் உமையொடு காளிக்கு – திருவா:2/141,142
மேல்


நவிற்றி (1)

நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்து நவிற்றி
செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி சிலிர்சிலிர்த்து – திருவா:27 8/2,3
மேல்


நவின்ற (1)

கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ – திருவா:12 13/4
மேல்


நவின்று (1)

நாத பெரும்பறை நவின்று கறங்கவும் – திருவா:2/108
மேல்


நள் (1)

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே – திருவா:1/89
மேல்


நள்ளும் (2)

உவா கடல் நள்ளும் நீர் உள்_அகம் ததும்ப – திருவா:3/169
நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும் – திருவா:5 46/3
மேல்


நள்ளேன் (1)

நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் – திருவா:5 2/2
மேல்


நற்று (1)

நற்று ஆம் கதி அடைவோம் எனின் கெடுவீர் ஓடி வம்-மின் – திருவா:34 5/2
மேல்


நறவம் (1)

வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை ஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு – திருவா:6 36/2,3
மேல்


நறு (1)

உற்ற ஆக்கையின் உறு பொருள் நறு மலர் எழுதரு நாற்றம் போல் – திருவா:26 9/1
மேல்


நறுமுறு (1)

நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம் – திருவா:9 5/2
மேல்


நன் (1)

நன் புலன் ஒன்றி நாத என்று அரற்றி – திருவா:4/82
மேல்


நன்பே (1)

நன்பே அருளாய் என் உயிர் நாதா நின் அருள் நாணாமே – திருவா:44 3/4
மேல்


நன்மை (2)

தீது_இலா நன்மை திருவருள்_குன்றே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 9/3
தேறும் வகை நீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ – திருவா:33 5/2
மேல்


நன்மையும் (3)

நரியை குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி – திருவா:2/36,37
நல் நீர் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு-அதனில் – திருவா:2/59,60
ஞானம்-தன்னை நல்கிய நன்மையும்
இடைமருது-அதனில் ஈண்ட இருந்து – திருவா:2/74,75
மேல்


நன்றாக (1)

நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை – திருவா:12 16/1
மேல்


நன்றாய் (1)

நாய் மேல் தவிசு இட்டு நன்றாய் பொருட்படுத்த – திருவா:10 20/3
மேல்


நன்று (6)

நன்று ஆக வைத்து என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த – திருவா:10 8/2
நன்று ஆக வானவர் மா முனிவர் நாள்-தோறும் – திருவா:13 13/2
நன்று இறைஞ்சி ஏத்தும் நமர் – திருவா:48 4/4
நன்று இது தீது என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே – திருவா:49 2/5
அங்கு இது நன்று இது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே – திருவா:49 8/3
அங்கு இது நன்று இது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே – திருவா:49 8/3
மேல்


நன்றே (1)

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே – திருவா:33 7/4
மேல்


நன்றோ (1)

நடு ஆய் நில்லாது ஒழிந்த-கால் நன்றோ எங்கள் நாயகமே – திருவா:50 4/4
மேல்


நனவிலும் (1)

நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி – திருவா:4/144
மேல்


நனவே (1)

நனவே எனை பிடித்து ஆட்கொண்டவா நயந்து நெஞ்சம் – திருவா:11 10/3
மேல்


நனி (5)

அருள் நனி சுரக்கும் அமுதே காண்க – திருவா:3/59
முனிவு அற நோக்கி நனி வர கௌவி – திருவா:3/133
தாயில் ஆகிய இன் அருள் புரிந்த என் தலைவனை நனி காணேன் – திருவா:5 39/3
பல மா முனிவர் நனி வாட பாவியேனை பணிகொண்டாய் – திருவா:5 54/2
முத்திக்கு உழன்று முனிவர் குழாம் நனி வாட – திருவா:11 12/1

மேல்