நோ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

நோக்கம் (15)

கூத்தா உன் சேவடி கூடும்வண்ணம் தோள்_நோக்கம் – திருவா:15 1/4
துன்று ஆர் குழலினீர் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 2/4
அருள் பெற்று நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 3/4
சொல்-பாலது ஆனவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 4/4
பல ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 5/4
அத்தன் கருணையினால் தோள்_நோக்கம் ஆ(- திருவா:15 7/4
ஆனந்தம் ஆகி நின்று ஆடாமே தோள்_நோக்கம் – திருவா:15 8/4
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள்_நோக்கம் – திருவா:15 9/4
எங்கும் பரவி நாம் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 10/4
தூய்மைகள் செய்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 11/4
பரம் ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 12/4
தாழை பறித்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 13/4
துரை மாண்டவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 14/4
கணக்கு அற்றவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 15/4
மேல்


நோக்கவும் (1)

பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் போத என்று எனை புரிந்து நோக்கவும்
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் மாண்டிலேன் மலர் கமல பாதனே – திருவா:5 93/1,2
மேல்


நோக்கி (22)

மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு – திருவா:3/92,93
மறை திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் – திருவா:3/130
முனிவு அற நோக்கி நனி வர கௌவி – திருவா:3/133
மான்_நேர்_நோக்கி மணாளா போற்றி – திருவா:4/135
நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் – திருவா:5 23/2
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட – திருவா:5 55/1
நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன் – திருவா:5 60/2
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா மறை ஈறு அறியா மறையானே – திருவா:5 85/1
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 18/4
மான் பழித்து ஆண்ட மெல்_நோக்கி_மணாளனை நீ வர கூவாய் – திருவா:18 4/4
சிவன் உய்ய கொள்கின்ற ஆறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய் திருமால் ஆம் – திருவா:20 10/2
அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே என்று உன் அருள் நோக்கி
இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்தே வேசற்றேன் – திருவா:21 5/1,2
தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம் நோக்கி
ஆஆ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 3/3,4
உடைந்து நைந்து உருகி உள் ஒளி நோக்கி உன் திரு மலர் பாதம் – திருவா:25 4/3
முத்தா உன்-தன் முக ஒளி நோக்கி முறுவல் நகை காண – திருவா:25 6/3
நோக்கி நுண்ணிய நொடியன சொல் செய்து நுகம் இன்றி விளாக்கைத்து – திருவா:26 8/2
தனை ஒப்பாரை இல்லா தனியை நோக்கி தழைத்து தழுத்த கண்டம் – திருவா:27 7/2
செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி சிலிர்சிலிர்த்து – திருவா:27 8/3
கருணையே நோக்கி கசிந்து உளம் உருகி கலந்து நான் வாழும் ஆறு அறியா – திருவா:28 7/3
மருளனேன் மனத்தை மயக்கு_அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த – திருவா:29 9/1
மான் நேர் நோக்கி மணவாளா மன்னே நின் சீர் மறப்பித்து இ – திருவா:33 4/1
என்பு எலாம் உருக நோக்கி அம்பலத்து ஆடுகின்ற – திருவா:35 3/2
மேல்


நோக்கி-தன் (2)

கோனை மான் அன நோக்கி-தன் கூறனை குறுகிலேன் நெடும் காலம் – திருவா:5 38/3
வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க விண்ணோர் பெருமான் – திருவா:24 5/3
மேல்


நோக்கிய (1)

என்-பாலே நோக்கிய ஆறு அன்றே எம்பெருமானே – திருவா:38 7/4
மேல்


நோக்கியர் (3)

மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி – திருவா:5 40/2
வலை-தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு – திருவா:6 40/1
உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் – திருவா:6 46/1
மேல்


நோக்கியும் (1)

ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும்
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே – திருவா:5 91/3,4
மேல்


நோக்கின் (1)

வலை-தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு – திருவா:6 40/1
மேல்


நோக்கினாய் (1)

புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என் இது ஆம் – திருவா:5 71/1,2
மேல்


நோக்கு (1)

நோக்கு_அரிய நோக்கே நுணுக்கு_அரிய நுண் உணர்வே – திருவா:1/76
மேல்


நோக்கு-மின் (1)

நங்கைமீர் எனை நோக்கு-மின் நங்கள் நாதன் நம் பணி கொண்டவன் – திருவா:42 3/1
மேல்


நோக்கு_அரிய (1)

நோக்கு_அரிய நோக்கே நுணுக்கு_அரிய நுண் உணர்வே – திருவா:1/76
மேல்


நோக்கும் (2)

ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து – திருவா:3/128
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்து இறவா பேரின்பம் வந்து – திருவா:47 6/3,4
மேல்


நோக்குவார் (1)

என்னை நோக்குவார் யாரே என் நான் செய்கேன் எம்பெருமான் – திருவா:5 59/3
மேல்


நோக்கே (1)

நோக்கு_அரிய நோக்கே நுணுக்கு_அரிய நுண் உணர்வே – திருவா:1/76
மேல்


நோகேன் (1)

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால் – திருவா:28 1/3
மேல்


நோய் (2)

குழைத்தால் பண்டை கொடு வினை நோய் காவாய் உடையாய் கொடு வினையேன் – திருவா:33 1/1
விடு-மின் வெகுளி வேட்கை நோய் மிகவே காலம் இனி இல்லை – திருவா:45 5/1
மேல்


நோய்க்கு (1)

என் நாயகமே பிற்பட்டு இங்கு இருந்தேன் நோய்க்கு விருந்தாயே – திருவா:50 2/4
மேல்


நோயுற்று (1)

நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து – திருவா:10 10/1
மேல்


நோன்பு (1)

சீலம் இன்றி நோன்பு இன்றி செறிவே இன்றி அறிவு இன்றி – திருவா:50 3/1

மேல்