நீ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 65
நீக்கமாட்டேன் 1
நீக்கமும் 1
நீக்கி 5
நீக்கிய 1
நீக்கு 1
நீக்கும் 1
நீங்க 1
நீங்காதான் 1
நீங்காது 1
நீங்கி 1
நீசனேனை 2
நீடு 2
நீண்ட 3
நீதி 3
நீதியே 1
நீந்த 1
நீந்தி 1
நீயும் 4
நீயே 5
நீர் 33
நீர்மை 1
நீர்மையேனை 1
நீராய் 1
நீரிடை 1
நீரில் 3
நீரை 2
நீல 1
நீலமும் 1
நீழல் 1
நீள் 6
நீற்றற்கே 1
நீற்றன் 2
நீற்றனே 1
நீற்று 3
நீற்றொடு 1
நீற்றோன் 1
நீறு 7
நீறுடன் 1
நீறும் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

நீ (65)

நகவே தகும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே – திருவா:5 10/4
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே – திருவா:5 19/4
வீழ்கின்றாய் நீ அவல கடல் ஆய வெள்ளத்தே – திருவா:5 20/4
மாசு_அற்ற மணி குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம்-தானே – திருவா:5 24/4
முற்று_இலா இளம் தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன் – திருவா:5 34/3
போர் ஏறே நின் பொன்_நகர்-வாய் நீ போந்தருளி இருள் நீக்கி – திருவா:5 53/1
நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்றால் அடியேற்கு – திருவா:5 58/3
நெகும் அன்பு இல்லை நினை காண நீ ஆண்டு அருள அடியேனும் – திருவா:5 60/3
போற்றி எ உயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய் – திருவா:5 70/2
ஆண்டுகொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ
பூண்டுகொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும்என்றும் – திருவா:5 74/2,3
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் – திருவா:5 78/1
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் – திருவா:5 91/3
பொய்யில் இங்கு எனை புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே – திருவா:5 92/4
வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ – திருவா:5 95/1
வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா – திருவா:5 95/1,2
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா – திருவா:5 95/2
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி – திருவா:6 6/2
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு – திருவா:6 12/1
தனி துணை நீ நிற்க யான் தருக்கி தலையால் நடந்த – திருவா:6 39/1
பாடிற்றிலேன் பணியேன் மணி நீ ஒளித்தாய்க்கு பச்சூன் – திருவா:6 45/1
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை – திருவா:7 6/1
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில் – திருவா:7 11/6
தேன் பழ சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ
வான் பழித்து இ மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் – திருவா:18 4/1,2
மான் பழித்து ஆண்ட மெல்_நோக்கி_மணாளனை நீ வர கூவாய் – திருவா:18 4/4
வா இங்கே நீ குயில் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி – திருவா:18 8/1
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை நீ வர கூவாய் – திருவா:18 9/4
கொந்து அணவும் பொழில் சோலை கூம் குயிலே இது கேள் நீ
அந்தணன் ஆகிவந்து இங்கே அழகிய சேவடி காட்டி – திருவா:18 10/1,2
உடையாள் உன்-தன் நடுவு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி – திருவா:21 1/1
இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே – திருவா:22 5/4
நின்ற நின் தன்மை நினைப்பு_அற நினைந்தேன் நீ அலால் பிறிது மற்று இன்மை – திருவா:22 7/2
ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற்பாரே – திருவா:22 7/4
யாது நீ போவது ஒர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை_அடி தந்தே – திருவா:22 9/4
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால் – திருவா:22 10/2
ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால் – திருவா:28 1/3
எம்பெருமானே என்னை ஆள்வானே என்னை நீ கூவிக்கொண்டருளே – திருவா:28 2/4
தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 3/2
பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 5/1
பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 6/1
அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த – திருவா:28 6/3
பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 8/1
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 10/1
கணக்கு_இலா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 1/4
காண்_ஒணா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 4/4
காலமே உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 5/4
ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய் – திருவா:30 6/2
காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 6/4
பரிகள் ஆக படைத்து நீ பரிவு ஆக வந்து மெய்க்காட்டிடும் – திருவா:30 9/2
கரிய மால் அயன் தேட நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 9/4
குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே நீ கொண்டால் – திருவா:33 3/3
கூறும் நாவே முதலாக கூறும் கரணம் எல்லாம் நீ
தேறும் வகை நீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ – திருவா:33 5/1,2
தேறும் வகை நீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ – திருவா:33 5/2
தேறும் வகை நீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ – திருவா:33 5/2
தேறும் வகை நீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ
வேறு ஓர் பரிசு இங்கு ஒன்று இல்லை மெய்ம்மை உன்னை விரித்து உரைக்கின் – திருவா:33 5/2,3
வேண்ட தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ – திருவா:33 6/1
வேண்ட தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னை பணிகொண்டாய் – திருவா:33 6/1,2
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னை பணிகொண்டாய் – திருவா:33 6/2
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் – திருவா:33 6/3
புகழே பெரிய பதம் எனக்கு புராண நீ தந்தருளாதே – திருவா:33 10/3
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து நீ பாவியேனுடைய – திருவா:37 9/1
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்ன – திருவா:38 2/3
அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது – திருவா:38 7/3
பேர்த்தே நீ ஆண்ட ஆறு அன்றே எம்பெருமானே – திருவா:38 8/4
காயத்துள் அமுது ஊறஊற நீ கண்டு கொள் என்று காட்டிய – திருவா:42 5/3
காணும்-அது ஒழிந்தேன் நீ இனி வரினும் காணவும் நாணுவனே – திருவா:44 5/4
தாயே என்று உன் தாள் அடைந்தேன் தயா நீ என்-பால் இல்லையே – திருவா:50 5/3
மேல்


நீக்கமாட்டேன் (1)

செடி சேர் உடலம்-இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா – திருவா:5 83/3
மேல்


நீக்கமும் (1)

மா பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் – திருவா:3/9
மேல்


நீக்கி (5)

போர் ஏறே நின் பொன்_நகர்-வாய் நீ போந்தருளி இருள் நீக்கி
வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள அருள் பெற்ற – திருவா:5 53/1,2
குற்றங்கள் நீக்கி குணம் கொண்டு கோதாட்டி – திருவா:8 20/3
நீக்கி முன் எனை தன்னொடு நிலாவகை குரம்பையில் புக பெய்து – திருவா:26 8/1
போம் ஆறு அமை-மின் பொய் நீக்கி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே – திருவா:45 3/4
செடி சேர் உடலை செல நீக்கி சிவலோகத்தே நமை வைப்பான் – திருவா:45 4/3
மேல்


நீக்கிய (1)

அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே – திருவா:26 10/4
மேல்


நீக்கு (1)

கூடவேண்டும் நான் போற்றி இ புழுக்கூடு நீக்கு எனை போற்றி பொய் எலாம் – திருவா:5 100/3
மேல்


நீக்கும் (1)

தொடர்வு_அரியாய் தமியேன் தனி நீக்கும் தனி துணையே – திருவா:6 38/4
மேல்


நீங்க (1)

சுடர் ஆர் அருளால் இருள் நீங்க சோதி இனி-தான் துணியாயே – திருவா:32 7/4
மேல்


நீங்காதான் (1)

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க – திருவா:1/2
மேல்


நீங்காது (1)

அவ பெரும் தாபம் நீங்காது அசைந்தன – திருவா:3/82
மேல்


நீங்கி (1)

வளர்கின்ற நின் கருணை கையில் வாங்கவும் நீங்கி இ-பால் – திருவா:6 4/1
மேல்


நீசனேனை (2)

நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்கமாட்டேன் கண்டாயே – திருவா:5 51/3
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஒர் நின் அலால் – திருவா:5 78/3
மேல்


நீடு (2)

நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர – திருவா:3/72
கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்கு – திருவா:43 2/3
மேல்


நீண்ட (3)

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் – திருவா:17 5/1
நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை – திருவா:27 3/1
நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை – திருவா:27 3/1
மேல்


நீதி (3)

நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவரொடும் கூடேன் – திருவா:26 2/1
கோது_இல் பரம் கருணை அடியார் குலாவும் நீதி குணம் ஆக நல்கும் – திருவா:43 1/2
தோற்றி மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை நீதி இலேன் – திருவா:44 6/2
மேல்


நீதியே (1)

நீதியே செல்வ திருப்பெருந்துறையில் நிறை மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 1/3
மேல்


நீந்த (1)

பிறவி என்னும் இ கடலை நீந்த தன் பேரருள் தந்தருளினான் – திருவா:42 7/1
மேல்


நீந்தி (1)

நீர் இன்ப வெள்ளத்துள் நீந்தி குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர் – திருவா:36 3/1
மேல்


நீயும் (4)

அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை – திருவா:5 93/3
பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்-தொறும் எழுந்தருளிய பரனே – திருவா:20 8/2
அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய் கருணையும் நீயும்
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 10/3,4
நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும் – திருவா:21 7/3
மேல்


நீயே (5)

ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய – திருவா:5 23/1
உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயே வந்து – திருவா:7 4/7
உடையாய் நீயே அருளிதி என்று உணர்த்தாது ஒழிந்தே கழிந்தொழிந்தேன் – திருவா:32 7/3
ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து – திருவா:33 4/3
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் – திருவா:33 8/1
மேல்


நீர் (33)

நல் நீர் சேவகன் ஆகிய நன்மையும் – திருவா:2/59
நீர் நசை தரவரும் நெடும் கண் மான் கணம் – திருவா:3/80
உருவ அருள்_நீர் ஓட்டா அரு வரை – திருவா:3/88
உவா கடல் நள்ளும் நீர் உள்_அகம் ததும்ப – திருவா:3/169
கழு நீர் மாலை கடவுள் போற்றி – திருவா:4/217
போற்றி நின் கருணை வெள்ள புது மது புவனம் நீர் தீ – திருவா:5 63/3
போற்றி இ புவனம் நீர் தீர் காலொடு வானம் ஆனாய் – திருவா:5 70/1
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுத பெரும் கடலே – திருவா:6 12/4
பெரு நீர் அற சிறு மீன் துவண்டு ஆங்கு நினை பிரிந்த – திருவா:6 26/1
வரும் நீர் மடுவுள் மலை சிறு தோணி வடிவின் வெள்ளை – திருவா:6 26/3
குரு நீர் மதி பொதியும் சடை வான கொழு மணியே – திருவா:6 26/4
ஏத்தி இரும் சுனை நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 12/8
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப – திருவா:7 15/3
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏர் ஓர் எம்பாவாய் – திருவா:7 20/8
உரை ஆட உள்ளொளி ஆட ஒள் மா மலர் கண்களில் நீர்
திரை ஆடுமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 6/3,4
சின வேல் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 10/4
சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 14/4
வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும் – திருவா:11 18/1
நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன் – திருவா:15 5/1
சோலை பசும் கிளியே தூ நீர் பெருந்துறை கோன் – திருவா:19 10/1
நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர்
மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகி – திருவா:21 10/1,2
சிறை பெறா நீர் போல் சிந்தை-வாய் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 5/3
நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே – திருவா:22 6/3
நீர் உறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின் அருள் வெள்ள – திருவா:22 8/2
நிலையனே அலை நீர் விடம் உண்ட நித்தனே அடையார் புரம் எரித்த – திருவா:23 3/3
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர் உரோமம் சிலிர்ப்ப உகந்து அன்பு ஆய் – திருவா:27 6/3
பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய் – திருவா:29 9/2
நீர் இன்ப வெள்ளத்துள் நீந்தி குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர் – திருவா:36 3/1
தொழுத கையினர் ஆகி தூ மலர் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு – திருவா:42 8/3
பத்தர்காள் இங்கே வம்-மின் நீர் உங்கள் பாசம் தீர பணி-மினோ – திருவா:42 10/3
புகவே வேண்டா புலன்களில் நீர் புயங்க பெருமான் பூம் கழல்கள் – திருவா:45 2/1
அரு மால் உற்று பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே – திருவா:45 8/2
நெடியவனும் நான்முகனும் நீர் கான்றும் காண_ஒண்ணா – திருவா:51 11/3
மேல்


நீர்மை (1)

நிகழ பணிகொண்டு என்னை ஆட்கொண்டு ஆஆ என்ற நீர்மை எல்லாம் – திருவா:27 5/3
மேல்


நீர்மையேனை (1)

வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி – திருவா:6 26/2
மேல்


நீராய் (1)

நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே – திருவா:1/69
மேல்


நீரிடை (1)

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி – திருவா:4/138
மேல்


நீரில் (3)

நீரில் இன் சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட – திருவா:3/25
மதி நெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே – திருவா:6 42/4
தழி சிறை நீரில் பிறை கலம் சேர்தரு தாரவனே – திருவா:6 47/4
மேல்


நீரை (2)

நினைய பிறருக்கு அரிய நெருப்பை நீரை காலை நிலனை விசும்பை – திருவா:27 7/1
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறை – திருவா:30 3/1
மேல்


நீல (1)

நீல உருவின் குயிலே நீள் மணி மாடம் நிலாவும் – திருவா:18 3/1
மேல்


நீலமும் (1)

சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 9/4
மேல்


நீழல் (1)

அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி – திருவா:13 13/1
மேல்


நீள் (6)

நிலம்-தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காஅட்டி – திருவா:1/59
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி – திருவா:4/202
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 4/3
நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன் – திருவா:15 5/1
நீல உருவின் குயிலே நீள் மணி மாடம் நிலாவும் – திருவா:18 3/1
நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்கு – திருவா:35 10/2
மேல்


நீற்றற்கே (1)

சுண்ண பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 4/4
மேல்


நீற்றன் (2)

எம் தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றன் ஆய் – திருவா:8 3/3
தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல்_பதம் கடந்த அப்பன் – திருவா:35 6/2
மேல்


நீற்றனே (1)

நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றி_கண்ணனே விண் உளார் பிரானே – திருவா:29 2/1
மேல்


நீற்று (3)

நீற்று கோடி நிமிர்ந்து காட்டியும் – திருவா:2/104
நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே உனை யானே – திருவா:34 8/4
ஆன நீற்று கவசம் அடைய புகு-மின்கள் – திருவா:46 1/3
மேல்


நீற்றொடு (1)

நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நால் திசை – திருவா:3/108
மேல்


நீற்றோன் (1)

நீற்றோன் காண்க நினை-தொறும் நினை-தொறும் – திருவா:3/33
மேல்


நீறு (7)

நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இ காயம் – திருவா:5 33/3
கட்டு அறுத்து எனை ஆண்டு கண் ஆர நீறு
இட்ட அன்பரொடு யாவரும் காணவே – திருவா:5 49/1,2
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே – திருவா:6 11/4
சுந்தர நீறு அணிந்து மெழுகி தூய பொன் சிந்தி நிதி நிரப்பி – திருவா:9 3/1
தன் நீறு எனக்கு அருளி தன் கருணை வெள்ளத்து – திருவா:16 3/3
வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி – திருவா:35 4/2
தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான் சோதி மயேந்திரநாதன் வந்து – திருவா:43 9/1
மேல்


நீறுடன் (1)

தத்துறு நீறுடன் ஆர செம் சாந்து அணி சச்சையனே – திருவா:6 30/4
மேல்


நீறும் (1)

பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைம் கிளியும் – திருவா:10 18/2

மேல்